11/02/2024
படூர் ஊராட்சியில் ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற வடிகால்வாய் மற்றும் புதிய 21 சாலை அமைக்க ரூபாய் 3 கோடியே 27 லட்சத்து 23 ஆயிரம் மதிப்பீட்டில் பூமி பூஜை போடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் படூர் ஊராட்சியில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டி தீர்த்த மழையால் படூர் ஊராட்சி வேம்புலியம்மன் கோயில் தெருவில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடியதால் சாலை கால்வாய் போல் காட்சியளித்து.
இந்நிலையில் அப்பொழுது அந்த பகுதியை மழைநீரில் இருந்து காப்பாற்ற ஊராட்சி மன்ற தலைவர் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று சாலையை கால்வாய்யாக மாற்றினர்.
சாலையை கால்வாயாக மாற்றியதால் அப்பகுதி மக்கள் சாலை இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் kas தாரா சுதாகர் மாவட்ட ஆட்சியரரிடம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
கடந்த 20 வருட காலமாக 22 சாலைகளும் போடப்படாத நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் kas தாரா சுதாகரின் கோரிக்கையை ஏற்று பெரியஹர்பன் - LPA திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி 6 அடி அகலம், 7 அடி ஆழத்திற்கு வடிகால்வாய் அமைத்து சிமெண்ட் சாலை போட ரூபாய் 97.24 லட்சம் மதிப்பீட்டில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் #எஸ்_எஸ்_பாலாஜி மற்றும் திருப்போரூர் ஒன்றிய சேர்மன் ்மன் ஆகியோர் பூமி பூஜை போட்டு பணியை துவக்கி வைத்தனர்.
இதேபோல் படூர் ஊராட்சியில் பெரியார் தெரு, கம்பர் தெரு, வள்ளலார் தெரு, பாரதிதாசன் தெரு, காந்தி தெரு, எம்.ஜி.ஆர்.தெரு உள்ளிட்ட மொத்தம் ுதிய_சாலைகள் அமைக்க ஒட்டுமொத்தமாக ரூபாய் ோடியே_27_லட்சத்த_23_ஆயிரம் மதிப்பீட்டில் நிதி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை போடப்பட்டுள்ளது.
உடன் படூர் ஊராட்சி மன்ற தலைவர் #திருமதி_KAS_தாரா_சுதாகர்
மாற்றத்தை நோக்கி அறக்கட்டளை மற்றும் படூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் தலைவர் #திரு_KAS_சுதாகர்
துணைத் தலைவர் திருமதி சே.வனிதா சேட்டு
ஒன்றிய கவுன்சிலர் திருமதி ப.நந்தினி பஞ்சா
வார்டு உறுப்பினர் சை.முஹம்மது கபீர்கான், ர.உமாமஹேஸ்வரி ரமேஷ், சே.ரேகாசேகர் , ர.கௌதம், கோ.மோகன், செ.மலர் செல்வம், த.ஜெயந்திதசரதன், ப.சுரேஷ் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.