இம்மையும் மறுமையும்

  • Home
  • இம்மையும் மறுமையும்

இம்மையும் மறுமையும் proud to be a mulim

06/12/2023
03/12/2023

*நாளும் ஒரு நபி மொழி*

*சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை, தொழுகையின் திறவுகோல் உளூ'' என்று ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*

*முஸ்னத். அஹ்மத்*

29/11/2023

*நாளும் ஒரு நபி மொழி*

*நீங்கள் அல்லாஹ்வின் மீது முறையாக (தவக்குல்) பரஞ்சாட்டுவீர்களாயின் பறவைகளுடைய (ரிஸ்க்) தேவைகள் நிறைவேற்றப்படுவது போல், உங்களுடைய தேவைகளும் நிறைவேற்றப்படும். அப்பறவைகள் அதிகாலையில் பசித்த நிலையில் வெளியேறுகின்றன. மாலையில் வயிறு நிரம்பிய நிலையில் திரும்புகின்றன’’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*

*திர்மிதீ*

28/11/2023

*நாளும் ஒரு நபி மொழி*

*எனக்காக ஆறு காரியங்களுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டால், நீங்கள் சொர்க்கம் செல்ல நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, அவை யாவை''? என ஸஹாபாக்கள் கேட்டனர்*

*1. உங்களில் ஒருவர் பேசினால் பொய் சொல்ல வேண்டாம்.*

*2. வாக்குறுதி கொடுத்தால் வாக்குறுதியை மீற வேண்டாம்.*

*3. ஒருவரிடம் அமானிதம் வைக்கப்பட்டால் அதில் அவர் மோசடி செய்ய வேண்டாம்.*

*4. உங்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் (பார்க்கத்தகாதவற்றின் மேல் பார்வை செலுத்தக்கூடாது).*

*5. உங்களது கரங்களை (அநியாயமாகப் பிறரை அடிப்பது போன்றவைகளை விட்டு)த் தடுத்து வையுங்கள்.*

*6. உங்களது மர்மஸ்தானத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள்''.*

*(அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)*

28/11/2023

*நாளும் ஒரு நபி மொழி*

*இஸ்லாத்தின் அஸ்திவாரம் ஐந்து தூண்களின் மீது நிர்மாணிக்கப் பட்டுள்ளது, லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹி என்று சாட்சி சொல்வது, (வணங்கப்படுவதற்கும் அடிமைப்பட்டுப் பணிந்து நடப்பதற்கும் தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. மேலும், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும், தூதரும் ஆவார்கள் என்ற உண்மை நிலையைச் சாட்சி சொல்வது) தொழுகையை நிலைநாட்டுவது, ஜகாத்தை நிறைவேற்றுவது, ஹஜ்ஜி செய்வது, ரமலான் நோன்பு நோற்பது'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*

*புகாரி*

28/11/2023

*நாளும் ஒரு நபி மொழி*

*சொர்க்கத்தின் திறவுகோல் தொழுகை, தொழுகையின் திறவுகோல் உளூ'' என்று ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜாபிரிப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*

*(முஸ்னத். அஹ்மத்)*

28/11/2023

*நாளும் ஒரு நபி மொழி*

*“நான் ஒரு கலிமாவை அறிவேன். ஒருவர் தன் மரணவேளையில் அக்கலிமாவைக் கூறினால். அவரது உயிர் உடலை விட்டுப் பிரியும் போது இக்கலிமாவின் பரக்கத்தால் உயிர் நிம்மதி பெறும். மேலும் கியாமத் நாளில் அக்கலிமா, அவருக்கு ஒளியாகிவிடும்’’ (அது “லா இலாஹ இல்லல்லாஹ்’ என்னும் கலிமாவாகும்) என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*

*(அபூயஃலா, மஜ்மஉஸ்ஸவாயித்)*

28/11/2023

*நாளும் ஒரு நபி மொழி*

*கியாமத் நாளில் பரிந்து பேச எனக்கு அனுமதி வழங்கப்படும். “இரட்சகனே! எவருடைய உள்ளத்தில் கடுகளவேனும் ஈமான் உள்ளதோ அவரைச் சுவனத்தில் நுழைய வைப்பாயாக!’ என்று நான் வேண்டுவேன். அல்லாஹ் என் பரிந்துரையை ஏற்றுக் கொள்வான். அவர்கள் சுவனம் செல்வார்கள். பிறகு நான் “எவருடைய உள்ளத்தில் அணுவளவேனும் ஈமான் உள்ளதோ அவரையும் சுவனத்தில் சேர்ப்பாயாக!’’ என்று வேண்டுவேன் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*

*புகாரி*

28/11/2023

*நாளும் ஒரு நபி மொழி*

*ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், “ஈமான் என்றால் என்ன?’’ என்று வினவினார். “உமது நற்செயல்கள் உம்மை மகிழ்ச்சியடையச் செய்து, உமது தீய செயல்கள் உமக்கு கவலையை உண்டாக்குமேயானால் நீர் முஃமின்!” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*

*ஹாகிம்*

28/11/2023

*நாளும் ஒரு நபி மொழி*

*நான் எனது சகோதரர்களைச் சந்திக்க ஆசைப்படுகிறேன்’’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, “நாங்கள் தங்களின் சகோதரர்கள் இல்லையா?’’ என்று ஸஹாபாக்கள் கேட்டனர். “நீங்கள் என்னுடைய தோழர்கள். எனது சகோதரர்கள் யாரென்றால், என்னைப் பார்க்காமலேயே என் மீது ஈமான் கொள்பவர்கள்’’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*

*(முஸ்னத் அஹ்மத்)*

08/11/2023

*நாளும் ஒரு நபி மொழி*

*உங்களில் ஒருவர் தீமையைக் கண்டால் அதை அவர் தமது கையால் மாற்றிவிடவும் (கையால் மாற்றும்) சக்தி இல்லையெனில், நாவால் அதை மாற்றிவிடவும். அதற்கும் சக்தியில்லையென்றால், உள்ளத்தால் அது தீயதென அறிந்துகொள்ளவும். (உள்ளத்தில் அத்தீமையைப் பற்றி கவலை கொள்ளவும்) இது ஈமானுடைய மிகப் பலவீனமான தரமாகும்''. என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாகத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.*

08/11/2023

*நாளும் ஒரு நபி மொழி*

*என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, அவசியம் நீங்கள் நன்மையை ஏவித் தீமையைத் தடுத்துக் கொண்டே இருங்கள், இல்லையென்றால் விரைவில் அல்லாஹுதஆலா உங்கள் மீது தனது வேதனையை இறக்கிவிடுவான். பிறகு நீங்கள் துஆச் செய்தால் அல்லாஹுதஆலா உங்களது துஆவை ஏற்றுக்கொள்ளமாட்டான்'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹுதைபத்துப்னு யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*

*திர்மிதீ*

08/11/2023

*நாளும் ஒரு நபி மொழி*

*ஹஜ்ரத் ஸைனப் பின்து ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், நான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் யாரஸூலல்லாஹ், எங்களில் நல்லோர்கள் இருக்கும் நிலையிலும் நாங்கள் நாசமாகி விடுவோமா?'' என்று வினவினேன், ஆம்!'' தீமைகள் மிகைத்துவிட்டால்'' என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் சொன்னார்கள்.*

*புகாரி*

20/04/2023

*நாளும் ஒரு நபி மொழி*

*عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ ؓ أَنَّهُ سَمِعَ رَسُولُ اللهِ ﷺ يَقُولُ: مَامِنْ عَبْدٍ يَسْجُدُ لِلّهِ سَجْدَةً إِلاَّ كَتَبَ اللهُ لَهُ بِهَا حَسَنَةً وَمَحَا عَنْهُ بِهَا سَيِّئَةً، وَرَفَعَ لَهُ بِهَا دَرَجَةً، فَاسْتَكْثِرُوا مِنَ السُّجُودِ.*

*رواه ابن ماجه باب ماجاء في كثرة السجود رقم:١٤٢٤*

*யாரேனும் ஓர் அடியான் அல்லாஹ்வுக்காக ஸஜ்தாச் செய்தால், அதன் காரணமாக அல்லாஹ் ஒரு நன்மையை நிச்சயமாக எழுதுகிறான். ஒரு பாவத்தை மன்னிக்கிறான். ஒரு பதவியை உயர்த்துகிறான். ஆகவே, மிக அதிகமாக ஸஜ்தாச் செய்யுங்கள். (தொழுது வாருங்கள்)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் உபாதத்திப்னுஸ் ஸாமித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*

*(இப்னுமாஜா)*

18/04/2023

நகைக்குரிய ஸக்காத்

18/04/2023

இத்தாஹ்
.காத்திருப்பு
காலம் ...

15/04/2023

பிள்ளைகளாக மாற்றுங்கள்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when இம்மையும் மறுமையும் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share