Flint Publications - ஃபிளின்ட் பதிப்பகம்

  • Home
  • Flint Publications - ஃபிளின்ட் பதிப்பகம்

Flint Publications - ஃபிளின்ட் பதிப்பகம் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Flint Publications - ஃபிளின்ட் பதிப்பகம், Media/News Company, .

04/05/2024
01/05/2024

இசையமைப்பாளர் #ஸ்ரீகாந்தேவா இசையில் எனது வரிகளில் ஜெர்மனியில் வாழும் இலங்கைப் பாடகர் #முல்லைசசி குரலில்
ஸ்ரீதர்மாஸ்டர் மற்றும் காயத்ரிசான் நடிப்பில் வெளியாகியுள்ள #முட்டக்கண்ணி ஆல்பம் பாடல் இதோ...

பாடல் இணைப்பு:

https://youtu.be/IKeW3epjo60?si=6wwEr5tHn9zbibk4


@பாடலாசிரியர் அஸ்மின்

20/04/2024

தமிழர்கள் வாழும் 25 நாடுகளில் உள்ள 200 நட்சத்திரங்களால் வெளியிடப்படவுள்ள #முட்டக்கண்ணி பாடல்.

ஸ்ரீகாந்தேவா இசையில் நான் எழுதிய #முட்டக்கண்ணி பாடல் எதிர்வரும் மேமாதம் முதலாம் திகதி மாலை 7.00மணிக்கு வெளியாகவுள்ளது.

ஜேர்மனியை சேர்ந்த பிரபல பாடகர் #முல்லைசசி பாடலைப் பாடியுள்ளார்.

அதிரடியாக அனைவரையும் ஆடவைக்கும் இப்பாடலில் பிரபல தமிழ் சினிமா நடன இயக்குனர்
ஸ்ரீதர்மாஸ்டர் மற்றும் நடிகை காயத்ரிசான், நடிகர் ஸ்ரீதர்,ஸ்ரீகாந்தேவா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பாடலை உலகமெங்கும் 200 திரை நட்சத்திரங்கள்,பிரபலங்கள்,அமைச்சர்கள்,
பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சமூக வலைத்தளங்களில் ஒரே நேரத்தில் வெளியிட்டு வைக்கின்றனர்.

பாடலாசிரியர் அஸ்மின்
Srikanth deva official
Gayathri Shan

#முட்டக்கண்ணி

02/04/2024

Srikanth deva official ஸ்ரீகாந்த் தேவா இசையில் எனது வரிகளில் ஜெர்மனியில் வாழும் ஈழத்துப்பாடகர் #முல்லைசசி குரலில் அதிரடியான ஆடவைக்கும் பாடல் விரைவில் ...






#முட்டக்கண்ணி

பாடலாசிரியர் அஸ்மின்

27/03/2024
24/02/2024
16/02/2024

தமிழ் FM இன் வாழ்த்துகள்👏
| |

16/02/2024

🤩Unveiling the First look Poster of new age Album Song 🎶

🎙️ sung by Thenisai thendral Deva

✍️Lyrics penned by Sri Lankan poet

🎹composed by National Award-winning

Produced by Dr. Mala Kumar under his label Mala Kumar Padaippagam

Full song Releasing Soon..


13/02/2024
18/01/2024

"தாயம்மா குடும்பத்தார்"

ராடான் மீடியா ராதிகா சரத்குமார் தயாரிப்பிலும் நடிப்பிலும் உருவாகியுள்ள "தாயம்மா குடும்பத்தார் நெடுந்தொடர்.
நாளை இரவு 8.30 மணிமுதல் பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

இத்தொடரின் தலைப்பு பாடலினை (Tittle Song) பிரபல இசையமைப்பாளர் C.சத்யா இசையில் நான் எழுதியுள்ளேன். பாடலினை புகழ்பெற்ற பின்னணிப் பாடகி சைந்தவி பாடியுள்ளார்.

என்பாடல் பணியில் மைல்கல்லாய் இப்பாடல் இருக்கும் என நம்புகின்றேன்.

ராடன் நிறுவன மேலாளர் சுபா வெங்கட்,இசையமைப்பாளர் C.சத்யா, இயக்குனர் அனீஸ்,தொடர் இயக்குனர் விக்ரம ஆதித்தன் ஆகியோருக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.

பாடலாசிரியர் அஸ்மின்

Radikaa Sarathkumar C. Sathya Saindhavi

07/01/2024

#பொங்கலோ_பொங்கல்


இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி அலைவரிசை TV Derana
பிரதித் தலைவர் லக்சிரி விக்ரமகே வழிகாட்டலில், தெரண தொலைக்காட்சி தயாரிப்பில், உழவர் திருநாளை முன்னிட்டு தைப்பொங்கல் சிறப்பு காணொளிப்பாடல் தயாராகிவருகிறது.

சிங்கள இசையுலகில் பிரபலமான இசையமைப்பாளர் சத்துரங்கன டி சில்வா இசையில் பாடலினை நான் எழுதியுள்ளேன்.

"மொட்டுவிட்ட பூங்கொடி","நிலவா நட நடந்து" ஆகிய பாடல்களின் பின் சத்துரங்கன இசையில் பணிபுரியும் மூன்றாவது பாடல் "பொங்கலோ பொங்கல்" ஆகும்.

பாடலினை சக்திFm சூப்பஸ்டார் நிகழ்ச்சியில் மகுடம் சூடிய பாடகர் கந்தப்பு ஜெயரூபன் பாடியுள்ளார்.
இவர் ஏலவே என் எழுத்தில் பாடிய "பச்ச முத்தம் நச்சுன்னுதான் தாடி புள்ள" பாடல் சிறந்த கிராமிய பாடலுக்கான இலங்கை அரசின் தேசிய விருதினை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இப்பாடலும் சிறப்பாக வந்துள்ளது.
காணொளிப்பாடலினை எதிர்வரும் பொங்கல் தினத்தன்று தெரண தொலைக்காட்சி அலைவரிசையில் ரசிகர் கண்டு களிக்கலாம்.

பாடகரை பரிந்துரை செய்த Dr.UK.மாலாகுமார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்.

பாடலாசிரியர் அஸ்மின்
Kandappu Jeyaroopan
Chathurangana De Silva

கவிஞர் அஸ்மின்
Asmin Uthumalebbe

21/11/2023

#கலாம்

நாய்கள் உன்னை குரைக்கலாம்
நரிகள் குழியை பறிக்கலாம்
பேய்கள் வந்து மிரட்டலாம்-உன்
பெயரை சிதைக்கலாம்..

எறும்பும் உன்னை மிதிக்கலாம்-நீ
கரும்பைக் கடித்தால் கசக்கலாம்
எதுவும் இங்கே நடக்கலாம்..
வா துணிந்தே கடக்கலாம்....

வாழ்வில் வந்த தடைக்கலாம் துவண்டு போனாரா கலாம்?
நீ உன்னை நம்பு நாளை நீயும்
அவர் போலாகலாம்..

கல்லும் முள்ளும் கரடும் முரடும் உன்னை தடுக்கலாம்..
கவலை விடுவாய் ஒருநாள் உந்தன் கனவு ஜெயிக்கலாம்..

உந்தன் வானம் கறுக்கலாம்
உலகே உன்னை வெறுக்கலாம்
வாடா நண்பா வாழ்வை நாங்கள் ஒருகை பார்க்கலாம்.

பாடலாசிரியர் அஸ்மின்
Asmin Uthumalebbe
கவிஞர் அஸ்மின்

20/09/2023



ஓ மீரா இனி வாழ்வே கண்ணீரா...!!

என்னுயிரே நீதானே
இனிதான மகளே
என்னுயிரை தொலைத்தேனே
அறிவாயோ மகளே..?

கண்ணின் ஒளி நீதானே
கனிவான மகளே..
கண்களெல்லாம் கடல்பொங்கி
வழியுதடி மகளே....

ஓ.. மீரா ஓ...மீரா
இனிவாழ்வே கண்ணீரா...
ஓ.. மீரா ஓ...மீரா
உன்னாலே பகலும் ரா....

மண்ணில் நீயும் நடந்தாலே தவிப்பேனே மகளே
மண்ணில் உன்னை புதைப்பதற்கு தாங்குதில்லை மகளே..

அன்னை முகம் மறந்தாயே
அன்பான மகளே
தங்கை உன்னை கேட்டால் நாம்
என்ன சொல்வோம் மகளே..?

ஓ மீரா ஓ...மீரா
இனிவாழ்வே கண்ணீரா...
ஓ.. மீரா ஓ...மீரா
உன்னாலே பகலும் ரா....

எம்முயிரை நீயெடுத்து
கண்டதென்ன மகளே
கண்ணெதிரே நரகமதை
கண்டுகொண்டோம் மகளே..

உன்னினைவில் நாமிங்கே உருகிநின்றோம் மகளே......
பொன்கதிரே பொற்குடமே..
போய்வா எம் மகளே..

போய்வா எம் மகளே..
போய்வா எம் மகளே..
போய்வா எம் மகளே..

ஓ மீரா ஓ...மீரா
இனிவாழ்வே கண்ணீரா...
ஓ.. மீரா ஓ...மீரா
உன்னாலே பகலும் ரா....

Vijay Antony
பாடலாசிரியர் அஸ்மின்
கவிஞர் அஸ்மின்
Asmin Uthumalebbe
Behindwoods
Behindwoods Air News

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Flint Publications - ஃபிளின்ட் பதிப்பகம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share