D. Febilin Rajan

  • Home
  • D. Febilin Rajan

D. Febilin Rajan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from D. Febilin Rajan, Media, .

24/07/2024

பெற்ற தாயை உண்மையாக நேசிக்கும் எல்லா ஆண்மகனும் தாலி கட்டின பொண்டாட்டியிடம் திட்டு வாங்கியே ஆகணும் இது தாங்க 100 % அப்பட்டமான உண்மை √

😄😄😄😄😄😄😄பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒருவன் முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வ...
21/01/2022

😄😄😄😄😄😄😄
பைத்தியக்கார கோடீஸ்வரன் ஒருவன் முதலைப் பண்ணைக்கு பார்வையாளராக போயிருந்தான். திடீரென ஒரு முட்டாள்தனமான அறிவிப்பை வெளியிட்டான். அதாவது இந்த முதலைகள் நிறைந்த குளத்தை உயிருடன் நீந்தி கடப்பவருக்கு ரூபாய் பத்து லட்சம் தருவதாக கூறினான்.
அப்படி நீந்தும் போது முதலைகள் தாக்கி இறந்து போனால் அவரது மனைவிக்கோ அல்லது உறவினருக்கோ ஐந்து லட்சம் ரூபாய் தந்து விடுவதாகவும் கூறினான்.
எல்லோரும் திகைத்து போய் வெகுநேரம் அந்த குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
திடீரென்று ஒருவன் குளத்தில் விழுந்து நீந்த தொடங்கினான். முதலைகள் அவனை விரட்ட தொடங்கின. அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு வேகமாக நீந்தி அக்கரையை அடைந்து விட்டான்.
அந்த பணக்காரனும் பேசியபடியே பத்து லட்சம் ரூபாயை உடனே தந்து விட்டான்.
வாயெல்லாம் பல்லாக தானிருந்த இடத்துக்கு திரும்பி வந்த அந்த நபர் தன் மனைவியிடம் மெதுவாக கேட்டான்,
"இப்படி வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கும் போது திடீர்னு தள்ளி விட்டுட்டியே. நான் செத்திருந்தா?"
மனைவி அமைதியாக சொன்னாள்,
"அப்போதும் எனக்கு ஐந்து லட்சம் ரூபாய் கிடைத்திருக்கும்".

நீதி: ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாலும் கண்டிப்பாக ஒரு பெண் இருப்பாள்...!

Just for fun only. Don't take it serious

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை,1. ஆண் பனை2. பெண் பனை3. கூந்தப்பனை4. தாளிப்பனை5. குமுதிப்பனை6.சாற்றுப்பனை7....
21/01/2022

பனை மரத்தில் மொத்தம் 34 வகை இருக்கின்றன. அவை,
1. ஆண் பனை
2. பெண் பனை
3. கூந்தப்பனை
4. தாளிப்பனை
5. குமுதிப்பனை
6.சாற்றுப்பனை
7. ஈச்சம்பனை
8. ஈழப்பனை
9. சீமைப்பனை
10. ஆதம்பனை
11. திப்பிலிப்பனை
12. உடலற்பனை
13. கிச்சிலிப்பனை
14. குடைப்பனை
15. இளம்பனை
16. கூறைப்பனை
17. இடுக்குப்பனை
18. தாதம்பனை
19. காந்தம்பனை
20. பாக்குப்பனை
21. ஈரம்பனை
22. சீனப்பனை
23. குண்டுப்பனை
24. அலாம்பனை
25. கொண்டைப்பனை
26. ஏரிலைப்பனை
27. ஏசறுப்பனை
28. காட்டுப்பனை
29. கதலிப்பனை
30. வலியப்பனை
31. வாதப்பனை
32. அலகுப்பனை
33. நிலப்பனை
34. சனம்பனை

பனையிலிருந்து பெறப்படும் பயன்கள் :
பனை உணவு பொருட்கள் :
🌴நுங்கு
🌴பனம் பழம்
🌴பூரான்
🌴பனாட்டு
🌴பாணிப்பனாட்டு
🌴பனங்காய்
🌴பனங்கள்ளு
🌴பனஞ்சாராயம்
🌴வினாகிரி
🌴பதநீர்
🌴பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுக் கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சீனி
🌴பனங்கிழங்கு
🌴ஒடியல்
🌴ஒடியல் புட்டு
🌴ஒடியல் கூழ்
🌴 புழுக்கொடியல்
🌴முதிர்ந்த ஓலை
🌴 பனை குருத்து
உணவுப்பொருள் அல்லாதவை :
🌴பனை ஓலைச் சுவடிகள்
🌴பனை ஓலைத் தொப்பி
🌴குருத்தோலை
வீட்டுப்பயன்பாட்டுப் பொருட்கள் :
🌴பனையோலை
🌴நீற்றுப் பெட்டி
🌴கடகம்
🌴பனைப்பாய்
🌴கூரை வேய்தல்
🌴வேலியடைத்தல்
🌴பனைப்பாய்
🌴பாயின் பின்னல்
🌴பனையோலைப் பெட்டி

விவசாயப் பயன்பாட்டுப் பொருட்கள் :
🌴கிணற்றுப் பட்டை
🌴எரு
🌴துலா
அலங்காரப் பொருட்கள் :
🌴பனம் மட்டை
🌴வேலியடைத்தல்
🌴நார்ப் பொருட்கள்
🌴தட்டிகள் பின்னல்

வேறு பயன்பாடுகள் :
🌴கங்குமட்டை
🌴தும்புப் பொருட்கள்
🌴விறகு
🌴மரம்
கட்டிடப்பொருட்கள் :
🌴தளபாடங்கள்
🌴பனம் விதை
🌴எரிபொருள்
இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் பனை உணவுப் பொருட்கள்
🌴 பனங்கருப்பட்டி
🌴பனைவெல்லம்
🌴சில்லுகருப்பட்டி
🌴சுக்கு கருப்பட்டி
🌴பனங்கற்கண்டு
🌴பனஞ்சக்கரை
🌴 பனங்கிழங்கு மாவு
🌴 பனங்கிழங்கு சத்துமாவு
🌴பதநீர்
🌴பனம்பழம் ஜுஸ்
🌴பனை விதை
🌴பனங்கன்று
🌴பனங்கிழங்கு
🌴பனைப்பாய்
🌴புழுக்கொடியல்
🌴ஓடியல்

சுவசா குடோரி மாத்திரை என்று நாட்டு மருந்து கடையில் கேட்டு வாங்கவும், காலைல சாப்பாட்டுக்கு பிறகு 2 , இரவு சாப்பாட்டுக்கு ...
18/01/2022

சுவசா குடோரி மாத்திரை என்று நாட்டு மருந்து கடையில் கேட்டு வாங்கவும், காலைல சாப்பாட்டுக்கு பிறகு 2 , இரவு சாப்பாட்டுக்கு பிறகு இரண்டு என்று மென்று சாப்பிட்டு, அரைமணிநேரம் கழித்து தண்ணீர் அருந்தலாம், இது 18 வகை காய்ச்சலை போக்கும், நமது முகநூல் நண்பர்களுக்கு இது நன்கு தெரிந்த ஒன்று தான்

இந்த மாத்திரையால் என்ன வெல்லாம் குணமாகும்

1) எந்த வகை காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும்
2) நீண்ட நாள் சளி, சைனஸ், மூச்சுத்திணறல் , ஆஸ்துமா , பலருக்கு முற்றிலும் குணமாகி உள்ளது, சிலருக்கு பாதியாக குறைந்துள்ளது
3) கரு தங்கி சில மாதங்கலில் கரு சிதைந்து குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது, ஆண்களுக்கு sprem count அதிகரித்துள்ளது
4) வெரிகோஸ்வெயின் குணமாகியுள்ளது
5) டெங்குவால் ப்ளட்லேடீஸ் எண்ணிக்கை குறையும் போது இந்த மாத்திரை சாப்பிடலாம், இது தான் எல்லா காய்ச்சலுக்கும் கேட்குமே
6) உடல் சோர்வு, நடந்தால் மூச்சு வாங்குதல், படியேறினால் தினருத்தல் குணமாகும் , மந்த புத்தி விலகும்

தமிழகம் மற்றும் உலகம் முழுக்க மக்கள் ஆரோக்யமாக இருக்க வேண்டும் என்று இதை கடந்த வருடம் பதிவு இட்டேன், atleast என்னோட லிஸ்ட்ல இருக்கும் 10 ஆயிரம் பேருக்கு பயன்படட்டும் என்று நினைத்தேன், ஒரு விதத்தில் எனக்கு வந்த feedback வைத்து பார்த்ததில் 10 லட்சம் பேருக்கு இது சென்று சேர்ந்து பயனடைந்து உள்ளார்கள் என்று அறிந்தேன், குறிப்பாக வெளிநாட்டு மக்கள் தான் அதிகம் ,

இப்ப எதுக்கு சொல்லுறேன் என்றால், தங்களுக்கு தெரியாதது ஒன்றுமில்லை, தாங்களே புரிந்துகொண்டு, கேள்வி எதுவும் கேட்காமல், வாங்கி உபயோகிக்கவும், மேலும் சந்தேகங்களுக்கு அரசு சித்தா பிரிவில் இதை பற்றி விசாரிக்கவும்

நாகர்கோயில் மணிக்கூண்டு கோபுரமும் கடிகாரமும்.!!கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் ஆட்சியின...
16/01/2022

நாகர்கோயில் மணிக்கூண்டு கோபுரமும் கடிகாரமும்.!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாள் ஆட்சியின்போது அமைக்கப்பட்ட ஒரே காலக்கட்டத்தை சார்ந்த, சில வருட இடைவெளி கொண்டு, தமது பழமையை இன்றும் பறைசாற்றி நிற்கும் மிக குறிப்பிட தகுந்த சிறந்த கட்டுமானங்களில் மூன்று இவைகள்.....

1) சுசீந்திரம் கோயில் கோபுரம் (பொ.ஆ.1888)
2) நாகர்கோயில் மணிக்கூண்டு கோபுரம் (பொ.ஆ.1893)
3) பேச்சிபாறை அணைக்கட்டு (பொ.ஆ. 1906)

சுசீந்திரம் கோயில் கோபுரம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்ட ஐந்து ஆண்டுகளில் நாகர்கோயில் மணிக்கூண்டு கட்டி முடிக்கப்பட்டது. பேச்சிபாறை அணைக்கட்டு பொ.ஆ. 1852ல் திட்டமிடப்பட்டு, பொ.ஆ.1894ல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு 1906ல் கட்டி முடிக்கப்பட்டது. ஐரோப்பிய பொறியாளர்கள் கேப்டன் ஹார்ஸ்லி(Horsely) மற்றும் ஹோஜிஅர்ஃப்(Hogeorff) ஆகியோர் நாகர்கோயில் மணிக்கூண்டு கோபுரம் வடிவமைப்பை திட்டமிட்டவர்கள். இவர்கள் பேச்சிபாறை அணைக்கட்டு பணிகளிலும் ஈடுப்பட்ட பொறியாளர்கள். பேச்சிபாறை அணையின் திட்டம் ஹார்ஸ்லியால் வடிவமைக்கப்பட்டு அது பலமுறை தள்ளிப்போடப்பட்டும் அவரின் கருத்துருப்படியே பின்னர் கட்டி முடிக்கப்பட்டது.!!

பொ.ஆ.1893ல் நாகர்கோயிலுக்கு வருகை தரும் திருவாங்கூர் மன்னர் ஸ்ரீமூலம் திருநாளுக்கு சிறந்த வரவேற்பு அளித்து நாகர்கோயில் நினைவுச்சின்னம் எழுப்பிட நாகர்கோயில் பெருமக்கள் இட்ட திட்டமே இந்த மணிக்கூண்டு கோபுரம். கோபுர அமைப்பு குழு மிஷனரியை சார்ந்த ஜேம்ஸ் டதி, திருவாங்கூர் அரசுபொறியாளர்கள் ஹார்ஸ்லி(Horsely), ஹோஜிஅர்ஃப்(Hogeorff), திருவாங்கூர் அரசுஅதிகாரிகள் ஆர். கிருஷ்ண அய்யர், இரத்தினசுவாமி அய்யர் ஆகியோர் கொண்டு அமைக்கப்பட்டது. டாக்டர் ஜேம்ஸ் டதியின் மனைவி டதி நாகர்கோயிலில் துவக்கிய மிஷனரி பள்ளிக்கு என்று வாங்கப்பட்ட கடிகாரம், ஸ்ரீமூலம் திருநாள் மன்னரின் வேண்டுகோளுக்கு இணங்க பொதுமக்களுக்காக மணிக்கூண்டு கோபுரத்தில் வைக்கப்பட்டது. மணிக்கூண்டு கோபுரத்திற்கு கடிகாரம் வழங்க டதி ஒரு நிபந்தனை மட்டும் தெரிவித்தார். அது கடிகாரம் நாகர்கோயில் ஹோம் சர்ச்சை பார்த்து இருக்க வேண்டும் என்பது. அது தேவாலயத்துக்கு வழிபட வருவோர்க்கு பார்க்க இயலும். அன்று பெரிய கட்டிடங்கள் ஏதும் ஹோம் சர்ச்க்கும் மணிக்கூண்டு கோபுரத்திற்கும் இடையில் இல்லை. கடிகாரத்தின் மணியோசை அன்று 3 கிமீ சுற்றளவிற்கு கேட்கும். கே கே குருவிலாவின் மேற்பார்வையில் மணிக்கூண்டு கோபுரமும் கடிகாராமும் அமைக்கப்பட்டது. அதன் பணிகள் பொ.ஆ. 1891 ஜூலையில் துவங்கி பொ.ஆ.1893 பெப்ருவரி 15 தியதி ஸ்ரீமூலம் திருநாளால் திறக்கப்பட்டது. அன்று மொத்த செலவு ரூபாய் 3258 சக்கரம் 9 காசு 12 ஆகும். அதற்கு மன்னர் 1117 ரூபாயும் டதி 164 ரூபாயும் பொதுமக்களிடம் நன்கொடையாக மீதபணமும் பெறப்பட்டது. மணிக்கூண்டு கோபுரத்தில் RV என்னும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டன, அது திருவாங்கூர் ஆட்சியாளர்களை இராமவர்மா என்று குறிப்பிடப்படுவதின் சுருக்கம்.!!

மணிக்கூண்டு கோபுரத்தில் பொருத்தப்பட்ட கடிகாரம் லண்டனில் இருந்த டர்பி -- ஜான் ஸ்மித் அண்ட் சன்ஸ் கம்பெனியால் செய்யப்பட்டது. அந்த கடிகார ஊசல் 60 அடி நீள சங்கிலி, கப்பியில் பொருத்தப்பட்டு பளு கொண்டு கடிகாரத்தின் பல் சக்கரங்களை நகர்த்த புவியீர்ப்பு விசையை பயன்படுத்தும் விதமான இயங்கு தன்மை கொண்டு அமைக்கப்பட்டது.!!

பொ.ஆ 1893ல் மணிக்கூண்டு கோபுரத்தை சுற்றி எந்த சாலையும் கிடையாது. மணிக்கூண்டின் மேற்குபகுதியில் ஆண்டியப்பன் குண்டு என்ற குளம் இருந்தது. அக்கோபுரத்தின் வடமேற்கு பகுதியும் குளம் இருந்த பகுதியும் இணைந்து அனந்த சமுத்திரம் கிராமம் என்று அழைக்கப்பட்டது. பொ.ஆ 1920ல் குளம் மண் கொண்டு நிரப்பப்பட்டது. அப்பகுதியில் பொ.ஆ 1930ல் கோல்டன் தியேட்டர் எனும் சினிமா திரையரங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அப்பகுதில் சர்க்கஸ் நிகழ்ச்சிகளும் அவ்வப்போது நிகழ்த்தப்பட்டன. மணிக்கூண்டு கோபுரத்தின் கிழக்கு பகுதி குடியிருப்பு பகுதி. தென்கிழக்கு பகுதில் அஞ்சல் அலுவலகம் தொடங்கப்பட்டது. இப்போது அது டவுண் தபால் நிலையமாக உள்ளது. அதன் அருகில் குதிரை ஜட்கா நிலையமும் அமைந்திருந்தது. ஜட்கா நிலையம் பொ.ஆ 1955 வரை இயங்கியது. அதன் அருகில் பேருந்து நிலையம் பொ.ஆ 1913லிருந்து இயங்கியது. அங்கு திருநெல்வேலி செல்லும் கணபதி, பயோனியர் என்ற தனியார் பேருந்து நிறுவன சேவைகள் நடைப்பெற்றன. மணிக்கூண்டு கோபுரத்தை சுற்றி தொழில் ஸ்தாபனங்கள் வளரத் தொடங்கின. கோட்டாறு விட இப்பகுதி முக்கியத்துவம் பெருக ஆரம்பித்தது. நாகர்கோயில் நகரமாக பரிணமித்தது. பொ.ஆ. 1900களில் இப்பகுதியில் அறுபதிற்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியிருந்தன. அப்பகுதி கோடை காலத்திலும் குளிர்ச்சியாக இருந்தது. எனவே ஐரோப்பியர்கள் இப்பகுதியை ஒட்டி கல்விச்சாலைகள், தேவாலயங்கள் எழுப்பினர் அவர்களின் குடியிருப்பையும் அமைத்தனர். திருவாங்கூர் அரசு நீதிமன்றத்தையும் அமைத்தது. திருவாங்கூர் அரசால் இராமவர்மபுரம் கோடைகால மாளிகை அமைக்கப்பட்டது.!!

14-7-1972ல் மணிக்கூண்டு கோபுரத்தின் அருகில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் சிலை நிறுவப்பட்டது. 127 வருடங்களுக்கு மேலாக இந்த மணிக்கூண்டு நாகர்கோயில் நகரின் பெருமையை பறைசாற்றி வருகிறது. நாகர்கோயில் மாநகரச் சின்னமாகவும் இக்கோபுரம் உள்ளது.!!

நன்றி
Welcomekumari

14/01/2022

நமக்கு மரியாதை இல்லாத இடத்தில் ஒரு நிமிடம் கூட செலவளிக்காதீர்கள்.

ஒரு தந்தை தனது இறுதி காலத்தில் மகனை அழைத்து சொன்னார், "மகனே, இது உனது பூட்டனின் கைக்கடிகாரம், 200 வருடங்கள் பழைமை வாய்ந்தது, நான் இதனை உனக்கு தருவதற்கு முன்னால் நீ கடைவீதிக்கு சென்று கைக்கடிகார கடையில் நான் இதனை விற்கப் போகிறேன் எவ்வளவு விலை மதிப்பீர்கள் என்று கேட்டுப் பார் என்றார்.
அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், இது பழையது என்பதால் 5 டாலர்கள் மட்டுமே தர முடியும் என்கின்றனர், என்றான்.

தந்தை பழைய பொருட்கள் விற்கும் Antique கடைக்குப் போய் கேட்டுப் பார் என்றார்.
அவன் போய் கேட்டு விட்டு, தந்தையிடம் இதற்கு 5000 டாலர்கள் டாலர்கள் தர முடியும் என்கின்றனர் என்றான்.

தந்தை இதனை Museum கொண்டு சென்று விலையை கேட்டுப்பார் என்றார்...
அவன் போய் கேட்டு விட்டு தந்தையிடம், நான் அங்கு போன போது, அவர்கள் அதனை பரிசோதனைக்குட்படுத்த ஒருவரை வரவழைத்து, பரிசோதித்துவிட்டு, என்னிடம் இதற்கான பெறுமதி ஒரு மில்லியன் டாலர்கள் என்கின்றனர் என்றான்...
தந்தை மகனை பார்த்து, மகனே! சரியான இடம் தான், உனது அந்தஸ்தை சரியாக மதிப்பிடும். எனவே, பிழையான இடத்தில் நீ உன்னை நிறுத்திவிட்டு, உன்னை மதிக்கவில்லை என்று நீ கோபப்படுவதில் அர்த்தம் இல்லை என்றார்...
" உன்னுடைய மரியாதையை அறிந்தவனே உன்னை கண்ணியப்படுத்துவான்...."
" உனக்கு தகுதி இல்லாத இடத்தில் நீ இருக்காதே... "
இதனை வாழ்க்கையின் பாடமாக எடுத்துக்கொள்...

நமக்கு_மரியாதை_இல்லாத_இடத்தில்_ஒரு__நிமிடம்_கூட_செலவளிக்காதீர்கள்

12/01/2022

Duck or Eagle
It's upto you.

நண்பர் வெளியூர் செல்ல Call Taxi
ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அவர் கவனித்தது காரின் பின்னால் ஓட்டியிருந்த ஆங்கில வாக்கியம்.

Duck or Eagle
You decide.

அடுத்து அவர் கவனத்தை
கவர்ந்தது Clean and shiny கார்.

டிரைவர் நல்ல வெள்ளையுடை அணிந்து பளிச்சென்று புன்னகையுடன் இருந்தார்.

அவரே வந்து கார் கதவை திறந்து
நண்பரை அன்போடு அமர சொன்னாராம்.

அழகான டிரைவிங். கேட்டதற்கு
மட்டும் தெளிவான பதில்.

நண்பர் மிகவும் impress ஆகி விட்டார்.

பொதுவாக Call Taxi டிரைவர்கள் சற்று இறுக்கமாகவே இருப்பார்கள். பயணம் முடிந்தவுடன் அவர் யாரோ? நாம் யாரோ? என்ற கண்ணோட்ட்த்தோடு.

இந்த டிரைவர் மிகவும் வித்தியாசமாக கண்ணியமாக நட்போடு இருந்தார்.
பட்டதாரியும் கூட.

அவரிடம் எப்போதுமே நீங்கள் இப்படித்தானா? என்று நண்பர் கேட்டிருக்கிறார்.

இல்லை சார். நானும் மற்ற டிரைவர்ஸ்
போல்தான் இருந்தேன். சத்தம் போட்டு கொண்டு.குறை கூறி கொண்டு "என்றார்.

எப்படி உங்களை நீங்களே மாற்றி கொண்டீர்கள்? என்று நண்பர் கேட்டிருக்கிறார்.

ஒரு Client seminar ஒன்றிற்கு சென்றார் . சும்மா டாக்ஸியில் அமர்ந்திருப்பதற்கு கேட்கலாமே, என்று உள்ளே நுழைந்தேன். அந்த seminar என்னை மாற்றி விட்டது" என்றார்.

என்ன Seminar?

Who you are Makes a difference ?
அதில் ஒரு கருத்தை ஆங்கிலத்தில் சொன்னார்கள்.

If you get up in the morning
expecting a bad day,you will.

Don't be a Duck
Be an Eagle.

The ducks only make noise and complaints.
The eagles soar above the group.

அந்த அறிவுரை என்னை
மிகவும் கவர்ந்தது.

என்னை நானே சுய பரிசோதனை
செய்து கொண்டேன்.

நான் Duck போல இருப்பதை உணர்ந்தேன். ஏன் Eagle போல இருக்க கூடாது என்று எண்ணினேன். என்னை நானே மாற்றி கொண்டேன் என்றார்.

எல்லா Customer இடமும் அன்போடு பணிவாக நடந்து கொள்ள ஆரம்பித்தேன்.

மன அமைதி மட்டுமல்ல. என் வருமானமும் பெருகியது. Always my taxi busy.ஒரு முறை பயணம் செய்தவர்கள், என்னையே அழைக்க ஆரம்பித்தார்கள்" என்றார்.

நண்பர் சொன்னபோது எனக்கே
அவரை பார்க்க வேண்டும் போல்
இருந்தது.

அவர் சொன்னது உண்மைதான்.

எந்த வேலையாக இருந்தாலும்,Office staff, maintenance, teacher, executive, employee, professional,or taxi driver,

நாம் நடந்து கொள்ளும் விதமே, behaviour, நம்மை உயர்த்தும். உயர உயர வாழ்வில்
Eagle போல பறக்க வைக்கும்.

இப்பொழுது நம் முன்னால்
இருக்கும் ஒரே கேள்வி :

Are you want to become Duck or Eagle ?

The Decision is Yours.

நல்ல நண்பனாக, நல்ல சகோதரனாக,
நல்ல அப்பாவாக, நல்ல கணவனாக,
நல்ல அம்மாவாக, நல்ல மனைவியாக, குறிப்பாக நல்ல குடிமகனாக மாறுவது
எல்லாமே நம் கையில்தான்.

நமது எண்ணங்களை
சரியான பாதையில்
பயணிக்க வைக்க வேண்டும்.

பயணிக்க போவது சிறிது காலமே. அனைவரிடமும் அன்பை செலுத்துவோம். அன்பை பெறுவோம். நம்மை நாமே
உயர் சிந்தனையால் Eagle போல
வானத்தை நம் நல்லெண்ண
சிறகுகளால் அளப்போம்.

10/01/2022

#காதலி_வராததன்_காரணம்

இரவில் காதலிக்காகக் காத்திருந்து அவள் வராமல் போகவே வீடு திரும்பிய காதலன் மறுநாள் காரணம் கேட்டான் .

காரணத்தை மறைமுகமாக அவள்
கூறினாள் .

"வெட்டினதால் தப்பி விட்டேன் வெட்டாவிட்டால் செத்திருப்பேன்

செத்ததனால் தப்பி விட்டேன்
சாகாவிட்டால் செத்திருப்பேன்

வந்ததனால் வரவில்லை
வராவிட்டால் வந்திருப்பேன்"

என்று அவள் கூறியதை காதலன்
பின்னா் முயன்று தொிந்து கொண்ட பொருள் இது :

இரவில் அவளைச் சந்திக்க
அவள் வந்தாள் .

இருட்டில் வழி புலனாகவில்லை .
தவறாகக் கிணற்றருகே சென்று
விட்டாள் .

அப்போது மின்னல் வெட்டியது .
மின்னல் ஔியில் கிணற்றில்
விழாமல் தப்பித்துக் கொண்டாள் .

தப்பி வேறு வழியாகச் செல்லும்போது வழியில் கிடந்த பாம்பினை மிதித்து விட்டாள் .

ஆனால் , ஏற்கெனவே
செத்திருந்ததால் , அவளைக் கடிக்கவில்லை .

அதைக் கடந்து மேலும் செல்லும்போது அவளுக்குப் பூப்பு (மாதவிடாய்) வந்து விட்டது .

எனவே காதலனைச் சந்திக்கும்
திட்டத்தைக் கைவிட்டு விட்டு அவள்
வீடு திரும்பி விட்டாள் .

Address


Telephone

+919965008528

Website

Alerts

Be the first to know and let us send you an email when D. Febilin Rajan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to D. Febilin Rajan:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share