திருச்சிராப்பள்ளி, தமிழ் நாட்டில் மக்கள் வாழ்ந்த மிகப் பழமையான நகரங்களில் ஒன்று. இந்நகரத்தின் வரலாறு கிமு இரண்டாம் ஆயிரமாண்டு காலத்துக்கு முந்தையது.முற்கால சோழர்களின் தலைநகராகக் கிமு 3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி 3 ஆம் நூற்றாண்டு வரை விளங்கிய உறையூர்[4] தற்போதைய திருச்சிராப்பள்ளியின் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது. கரிகால் சோழன் கட்டிய உலகின் பழைய அணையான கல்லணை உறையூர
ில் (உறையூருக்கு கோழியூர் என்ற பெயரும் உண்டு) இருந்து 20 கிமீ தொலைவில் உள்ளது.
5ம் நூற்றாண்டில் இந்நகரம் பல்லவர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. 6ம் நூற்றாண்டில் தென் இந்தியாவை ஆண்ட முதலாம் மகேந்திரவர்மன் மலைக்கோட்டையில் பல குடைவரை கோவில்களைக் கட்டினான் . பல்லவர்களின் வீழ்ச்சிக்குப்பிறகு பிற்கால சோழர்கள் இந்நகரை 13ம் நூற்றாண்டு வரை ஆட்சி புரிந்தார்கள்.சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின் இந்நகரம் பாண்டியர்களின் ஆளுகைக்கு கீழ் வந்தது. 1216 முதல் 1311 வரை அவர்கள் ஆண்டார்கள். 1311ல் மாலிக் காபூர் பாண்டியர்களைத் தோற்கடித்து இந்நகரை கைப்பற்றினார்.மாலிக் காபூரின் டில்லி சுல்தானின் படை பல விலைமதிக்க முடியாத பொருட்களைக் கைப்பற்றினார்கள். இவர்கள் இரங்கநாதன் கோவிலைக் களங்கப்படுத்தினதால் அக்கோயில் 60 ஆண்டுகளுக்கு மூடப்பட்டு இருந்தது. வீதி உலாவிற்கு எடுத்துச்செல்லப்படும் அரங்கன் திருவுருவம் மாலிக் காபூரின் படையெடுப்பின் காரணமாகத் திருமலையில் பாதுகாக்கப்பட்டது. முசுலிம்களின் ஆட்சிக்குப்பிறகு இந்நகரம் விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. பின்பு அவரின் இப்பகுதியின் ஆளுநர் மதுரை நாயக்கர்களின் கீழ் 1736 வரை இருந்தது
இப்பக்கத்தின் நோக்கம்
இது வரை நீங்கள் வாழ்ந்த திருச்சியின் அறிந்திராத அறியாத நிகழ்வுகளை சுவாரசியமாக பதிவு செய்வோம்