Anbumani Brothers

  • Home
  • Anbumani Brothers

Anbumani Brothers பாட்டாளிகளாக இணைந்திடுவோம் வென்றிடுவோம்
(8)

விக்கிரவாண்டியில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 33 பேர் கொண்ட குழு விக்கிரவாண்டி தொகுதியில் தேசிய...
16/06/2024

விக்கிரவாண்டியில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 33 பேர் கொண்ட குழு

விக்கிரவாண்டி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியை ஆதரித்து பிரச்சாரம் செய்ய முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய 33 பேர் கொண்ட குழுவினை அமைத்தார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

TTV Dhinakaran Anbumani Ramadoss

திமுக பொட்டிக்கொடுத்த கணக்கும், பொட்டி வாங்கிய கணக்கும் இங்க இருக்குபாமக பொட்டி வாங்கியதாக சொல்லும் பொறம்போக்குக்கு பொறந...
15/06/2024

திமுக பொட்டிக்கொடுத்த கணக்கும், பொட்டி வாங்கிய கணக்கும் இங்க இருக்கு

பாமக பொட்டி வாங்கியதாக சொல்லும் பொறம்போக்குக்கு பொறந்த பயலுங்க

பாமகவிற்கு எவன் பொட்டிக் கொடுத்தான் என ஆதாரத்தோட சொல்லனும்.. இல்லனா அவன் பொறப்பை தான் சந்தேகப்படனும்..

திமுகவினர் ஒருபக்கம் கதறிக்கொண்டே இருக்க பாமக வேட்பாளர் அன்புமணி அவர்கள் வேகவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் கூட்டணிக்...
15/06/2024

திமுகவினர் ஒருபக்கம் கதறிக்கொண்டே இருக்க

பாமக வேட்பாளர் அன்புமணி அவர்கள் வேகவேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார்

கூட்டணிக் கட்சியான பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து வாழ்த்து பெற்றார்!

அண்ணன் அண்ணியிடம் வாழ்த்துப்பெற்ற விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி!
15/06/2024

அண்ணன் அண்ணியிடம் வாழ்த்துப்பெற்ற விக்கிரவாண்டி தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி!

விக்கிரவாண்டி பாமக வேட்பாளர் அன்புமணி அவர்கள் பாமக தலைவர் அண்ணன் அன்புமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது!
15/06/2024

விக்கிரவாண்டி பாமக வேட்பாளர் அன்புமணி அவர்கள் பாமக தலைவர் அண்ணன் அன்புமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்ற போது!

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிச்சயமாக பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும்! பாட்டாளி மக்கள் கட்சியின் ஆறாவது சட்டமன்ற உற...
15/06/2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நிச்சயமாக பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெறும்!

பாட்டாளி மக்கள் கட்சியின் ஆறாவது சட்டமன்ற உறுப்பினராக அண்ணன் சி.அன்புமணி அவர்கள் சட்டமன்றம் செல்வார்.

இப்படித்தான் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும். நம்பிக்கையோடு உழைக்க வேண்டும். வெற்றிக்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் விக்கிரவாண்டியில் இருக்கிறது.

மாறாக நம் பலத்தைக் காட்டியே தீர வேண்டும், அதற்கு அதிமுகவை வீழ்த்தி இரண்டாவது இடத்தினைப் பெற வேண்டும் என்ற எண்ணங்களை விட்டொழியுங்கள், எத்தனை வருடத்திற்கு தான் நாம் பென்னாகரம் இடைத்தேர்தலையே உதாரணமாக சொல்வது?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும் திமுக அல்லாத, எதிர்க்கட்சி அதிமுக அல்லாத ஒரு கட்சி பாட்டாளி மக்கள் கட்சி வென்றாதாக வரலாறு சொல்ல வேண்டும்.

வன்னியர்களின் வாக்குகளில் வாழ்ந்து வரும் திமுக விக்கிரவாண்டிக்கு வந்தால் மட்டுமே வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்குவோம் என அறிவிப்பார்கள்.

2019 அக்டோபர் மாதம் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் அறிவித்த ஸ்டாலின், ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்களாச்சே! நமக்கு புதியதாக வாங்கி கொடுக்க வேண்டாம், நாம் கடினப்பட்டு வாங்கிய இட ஒதுக்கீட்டை தக்கவைத்தாவது கொடுத்தாரா?

உச்சநீதிமன்றம் சொல்லிய தரவுகளை திரட்ட, ஒரு ஆணையம் அமைத்தாரே அதனிடம் விரைவாக அறிக்கை கொடுங்கள் என்று தான் கேட்டாரா?

வேறு எங்கேயும் வன்னியர் இட ஒதுக்கீடு பற்றி பேசாத ஸ்டாலின் விக்கிரவாண்டியில் மட்டும் பேசக்காரணம் என்ன?

விக்கிரவாண்டி என்பது தியாகிகள் நிறைந்த மண், போராட்டக்குணம், போர்க்குணம் கொண்ட மக்கள் நிறைந்து வாழும் மண், அத்தகைய மண்ணில் வன்னியர்களைப் பற்றி பேசினால் தான் வாக்கு கிடைக்கும் என்பது அவர்களுக்கு தெரியாதா?

ஆளுங்கட்சி வாக்குக்கு 5000 வரைக் கொடுப்பார்கள், அவர்கள் தான் வெற்றிப் பெறுவார்கள் என்ற பொதுப்புத்தியைக் கைவிடுங்கள். விலைபோகாத தன்மானம் மிக்க சிங்கங்கள் 42000 பேர் அங்கே வாழ்கிறார்கள் என்பது நாம் 2016 இலே பார்த்திருக்கிறோம்!

யார் எவ்வளவு பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ளுங்கள், வாக்குகளை மட்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழம் சின்னத்தில் செலுத்திவிடுங்கள்!

ஏனெனில் ஒட்டுமொத்த வன்னியர்களின் வாழ்க்கையே விக்கிரவாண்டி தொகுதி மக்களின் கையில் தான் இருக்கிறது.

விக்கிரவாண்டியில் திமுக, அதிமுக அடையும் தோல்வி என்பது, இனியும் வன்னியர்களை ஏமாற்றி அரசியல் செய்ய முடியாது என்பதற்கான சவுக்கடியாக இருக்க வேண்டும்.

வன்னியர்கள் ஒற்றுமையாகி விட்டார்கள், இனி அவர்களை ஏமாற்றவே முடியாது என 2026 சட்டமன்ற தேர்தலுக்குள் நமக்கான இட ஒதுக்கீட்டை அவர்கள் வழங்கியே ஆக வேண்டும்.

வெற்றிக்கு கூடுதலாக நமக்கு தற்போது கூட்டணி பலம் இருக்கிறது. அதன்மூலம் 5000 வாக்குகள் கூடுதலாக கிடைக்கும் என்றால் மேலும் நம் நம்பிக்கை பெருகும்.

கூடவே இளம் தலைமுறையினர் மாற்றம், புரட்சி தடம் மாறி பயணித்து வருகின்றனர், அதெல்லாம் நவீன திராவிடத்தின் சதி என்பதனை புரிய வையுங்கள். வாக்குகளை சிதற விடமால் கொண்டு வாருங்கள்!

வெற்றிக்கும் நமக்குமான வித்தியாசம் பார்க்க 20000 என்பது போலத் தோன்றும், கூடுதலாக 20 ஆயிரம் வாங்கினால் தான் வெல்வோம் என கணக்கு போடாதீர்கள், திமுகவிற்கு செல்லும் 10000 வாக்குகளை நாம் வாங்க வேண்டும் என கணக்கு போடுங்கள், வெற்றி நமக்கு மிக அருகில் உள்ளது.

இட ஒதுக்கீடு போராட்டக் காலத்தில் பட்டியலின மற்றும் இதர சகோதர சமுதாயங்கள் நமக்கு ஆதரவளித்தன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பல பட்டியலின மக்கள் மாம்பழத்திற்கு வாக்களித்தார்கள். ஆக எவரையும் பகைக்காமல், ஒதுக்காமல் நம்பிக்கையோடு செல்லுங்கள், நமக்கு ஆதரவு கிடைக்கும்.

வன்னியர்களின் இரத்ததில், வன்னியர்களால் வளர்க்கப்பட்ட உங்கள் கட்சிக்கு உங்கள் வாக்குகளை செலுத்துவீர்களா? வன்னியர்களின் இரத்தத்தை உறிஞ்சி வயிறு வளர்க்கும் திமுகவிற்கு உங்கள் வாக்குகளை அளிப்பீர்களா?

விக்கிரவாண்டி தொகுதி பாட்டாளிகளே! உங்ளுக்காக ஒட்டுமொத்த தமிழக பாட்டாளிகளுமே வருகிறோம்! வன்னியர்களின் வளர்ச்சிக்காக நீங்கள் ஒன்றாக வாருங்கள்!

தேசிய ஜனநாயக கட்சிகளின் கூட்டணியில் விக்கிரவாண்டி பாட்டாளி மக்கள் கட்சி வசமாகட்டும்! - Rajesh Krishnamoorthy

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளராக சி.அன்புமணி அவர்கள் போட்டி என மருத்துவர் அய்யா அவர்கள் அறிவிப்பு! 2016 ஆம் ...
15/06/2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளராக சி.அன்புமணி அவர்கள் போட்டி என மருத்துவர் அய்யா அவர்கள் அறிவிப்பு!

2016 ஆம் ஆண்டு பாமக தனித்து போட்டியிட்ட போதே 42000 வாக்குகளை பெற்றவர்

14/06/2024

அண்ணன் அன்புமணி அவர்களுடன் பல பிரபலங்கள் கலைக்கட்டிய நடிகர் தம்பி இராமையா நடிகர் அர்ஜுன் இல்ல திருமண நிகழ்ச்சி!

ஒரே இடத்தில் பல தலைவர்களுடன், சினிமா பிரபலங்களுடன் பாமக தலைவர் அண்ணன் அன்புமணி மற்றும் அண்ணி சௌமியா அன்புமணி அவர்கள்!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் அண்ணன் அன்புமணி அவர்களும் TTV தினகரன் அவர்களும் சந்திப்பு! 2026 க்கா...
14/06/2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடக்கவிருக்கும் வேளையில் அண்ணன் அன்புமணி அவர்களும் TTV தினகரன் அவர்களும் சந்திப்பு!

2026 க்கான கூட்டணியை பலப்படுத்துவதில் அண்ணன் அன்புமணி அவர்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்

நடிகர் தம்பி இராமையா நடிகர் அர்ஜூன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாமக தலைவர் அண்ணன் அன்புமணி மற்றும் அண்ணி சௌமிய...
14/06/2024

நடிகர் தம்பி இராமையா நடிகர் அர்ஜூன் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாமக தலைவர் அண்ணன் அன்புமணி மற்றும் அண்ணி சௌமியா அன்புமணி அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது!

Sowmiya Anbumani Anbumani Ramadoss

விக்கிரவாண்டி என்பது சாதாரண மண் இல்லை, போராட்டக்குணம் போர்க்குணம் நிறைந்த மக்கள் வாழும் மண்1987 போராட்டத்தில் உயிர்நீத்த...
14/06/2024

விக்கிரவாண்டி என்பது சாதாரண மண் இல்லை, போராட்டக்குணம் போர்க்குணம் நிறைந்த மக்கள் வாழும் மண்

1987 போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளின் குடும்பத்தினர் அவர்களின் சொந்தம் பந்தங்கள் நிறைந்து வாழும் மண்

அன்று நாம் உரிமைக்காக போராடினோம், ஓரளவு வெற்றியும் பெற்றோம், அதன் பலனாக இன்று ஒவ்வொரு ஊரிலும் படித்தவர்கள், பணியில் இருப்பவர்கள் அதிகரித்துள்ளோம் என்பதை மறுக்க முடியாது.

அதே சமயம் நம்முடைய முழு உரிமை இன்றும் நமக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து போராடிக் கொண்டே இருக்கிறோம்.

ஆனால் தற்போது அதனை விட மிக மோசமான காலத்தில் இருக்கிறோம். வன்னியர் மீதான வெறுப்பு புரையோடி போய்கிடக்கிறது. இந்த வெறுப்பில் இருந்து நாம் விடுபட வேண்டிய நெருக்கடியில் இருக்கிறோம்.

வன்னியர்கள் என்றாலே, பாமகவினர் என்றாலே ஏதோ தீண்டத்தகாதவர்கள் போலவும், வன்முறையாளர்கள் போலவும், வன்னியர்களின் வாழ்வியல், மரபு, பண்பாடு என எதையும் அறியாதவர்கள், ஏன் ஒருவன் அவன் வாழ்நாளில் ஒரு வன்னியனைக் கூட பார்த்திராதவன் கூட, விமர்சனம் என்று வன்மத்தைக் கக்குகிறான்.

வன்னியர்கள் எவரது வாழ்வைக் கெடுத்தார்கள்? யார் உண்ணும் உணவில் மண்ணை அள்ளிப் போட்டார்கள்? இரத்தம் சிந்தி, உயிரை இழந்து அனைத்து சமுதாயத்திற்கும் இட ஒதுக்கீடு வாங்கிக் கொடுத்த சமுதாயம் வன்னியர் சமுதாயம் என்பதை எல்லோருமே மறந்துவிட்டார்கள்.

வன்னியர்களை விமர்சனம் செய்பவர்கள் யார் எனப்பார்த்தால், அவர்கள் வன்னியர்கள் வாங்கி கொடுத்த இட ஒதுக்கீட்டில் படித்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களில் வன்னியர்களும் இணைந்து கொள்கிறார்கள் என்பது தான் வேதனை.

தற்போது விஷயத்திற்கு வருவோம், வன்னியர்கள் தங்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. அதற்கு அருமையான வாய்ப்பாக விக்கிரவாண்டி தேர்தல் களம் அமைந்துள்ளது.

அதே சமயம் நமது ஒற்றுமையை வளர்க்க பிறர் சமூகத்தின் மீது பகையை வளர்க்க வேண்டாம். அன்று இட ஒதுக்கீடு போராட்டக் காலத்தில் இதர சமுதாயங்கள் நமக்கு ஆதரவளித்தனர். அந்த ஆதரவு தொடர வேண்டும். நமக்கு வாக்களிக்காதவர்கள் எல்லாம் விரோதிகள் இல்லை.

ஒவ்வொரு ஊரிலும் வன்னியர்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளை எடுத்துச் சொல்லுங்கள், கட்சிகளைக் கடந்து வன்னியர்களை ஒன்றிணையுங்கள், நிச்சயமாக அது விக்கிரவாண்டியில் முடியும். இதர சகோதர சமுதாயங்களை அரவணைத்து பேசிப்பாருங்கள்.

விக்கிரவாண்டியில் பாமக வெல்ல வேண்டும் அப்போது தான் வன்னியர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமான உரிமையையும் பெற்றுத்தர முடியும்.

வன்னியர்களை விரோதிகளாக காட்டித்தான் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் இதர சமுதாயங்களின் முழு வாக்குகளையும் பெறுகின்றனர்.

அப்படிப்பட்ட திமுக தான் வன்னியர்களின் பாதுகாவலர்கள் நாங்கள் என வருவார்கள். சமுதாயங்களை பிரித்து வாக்குகளை அள்ளும் திமுகவின் முகத்திரையை இந்தத் தேர்தலில் கிழிக்க வேண்டும்.

புதியதாக உருவெடுத்திருக்கும் நவீன திராவிடக் கட்சி தான் நாம் தமிழர். திமுக வெல்ல வேண்டும் என்பதற்காக திமுக எதிர்ப்பு ஓட்டுகளை ஓரே இடத்தில் சேராத வண்ணம், அதனை பிரிப்பதற்காகவே நடத்தப்படும் ஒரு கட்சி என்றால் அது நாம் தமிழர் தான். அதில் வன்னியர்கள் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் நமக்கு உள்ளது.

அடுத்தவர்களை குறைச் சொல்லி ஓட்டுக் கேட்கும் முன், நாம் உங்களுக்கானவர் என்ற நம்பிக்கையை விதையுங்கள், வன்னியர்கள் வாழ்வு மட்டுமல்ல, தமிழர்களின் வாழ்வும் மேம்படும்!

பருப்பும் பாமாயிலும் கொடுக்கவே துப்பில்லை இதுல பாராட்டு விழா ஒன்னு தான் குறைச்சல்!
14/06/2024

பருப்பும் பாமாயிலும் கொடுக்கவே துப்பில்லை இதுல பாராட்டு விழா ஒன்னு தான் குறைச்சல்!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக பாமக போட்டியிடுகிறது. பாமகவின் வெற்றிக்கு பாஜக கூட்டணி உழைக்கும...
14/06/2024

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக பாமக போட்டியிடுகிறது.

பாமகவின் வெற்றிக்கு பாஜக கூட்டணி உழைக்கும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிக்கை

கடலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் அவர்கள் வாக்களித்த மக்களுக்கு நன்றி க...
14/06/2024

கடலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் அவர்கள் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறி வருகிறார்!

மூன்று மாதமாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை, திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி அ...
14/06/2024

மூன்று மாதமாக ரேஷன் கடைகளில் பருப்பு, பாமாயில் வழங்கப்படவில்லை, திமுக அரசு தோல்வி அடைந்துவிட்டதாக பாமக தலைவர் அன்புமணி அவர்கள் குற்றச்சாட்டு!

Anbumani Ramadoss

எங்களுக்கே டுவிஸ்ட் கொடுக்குறிங்களா? இருங்கயா உங்களுக்கு கொடுக்குறேன் டுவிஸ்ட்!  அன்புமணி அவர்கள் செய்த தரமான சம்பவம்! ந...
13/06/2024

எங்களுக்கே டுவிஸ்ட் கொடுக்குறிங்களா? இருங்கயா உங்களுக்கு கொடுக்குறேன் டுவிஸ்ட்! அன்புமணி அவர்கள் செய்த தரமான சம்பவம்!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாமக தலைவர் அன்புமணி அவர்கள் முயற்சியில், திமுக, அதிமுக அல்லாத அணி உருவாக்கப்பட்டு, வெற்றி இல்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை பெற்று அனைவரது கவனத்தயும் ஈர்த்தது.

இந்த நேரத்தில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அவசர அவசரமாக அறிவித்து தேர்தல் வேலைகளை துவங்கிவிட்டது திமுக.

கூடவே எதிரணியில் குழப்பத்தை உண்டாக்கும் வேலைகளை தன் சகுனி புத்தியைக் கொண்டு செய்தது. அதாவது பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக, அமமுக கட்சிகள் போட்டியிட விரும்புவதால் கூட்டணியில் குழப்பம் என நல்லா இருந்த குளத்தில் கல்லெரிந்து பார்த்தது.

விக்கிரவாண்டி தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக அடுத்து சமபலம் கொண்ட கட்சி என்றால் அது பாமக மட்டுமே. அதனால் பிற கூட்டணி கட்சிகளை எல்லாம் கண்டுக்காமல் பாமக தன்னிச்சையாக அறிவிக்கும் என திமுக எதிர்பார்த்தது.

ஆனால் அன்புமணி அவர்களோ மக்களவைத் தேர்தல் கூட்டணியே நாங்கள் 2026 தேர்தலை மனதில் வைத்து தான் அமைத்தோம், இந்த இடைத்தேர்தலில் விட்டுவிடுவோமா என்ன? என்பது போல கூட்டணிக் கட்சிகளை கலந்து ஆலோசித்து தெரிவிக்கிறோம் என சொல்லிவிட்டார்.

தெளிவான குளமாக இருக்கிறார்களே, அதை குழப்பிவிட்டால் எப்படி மீன் பிடிப்பார்கள் என வேடிக்கை பார்க்கலாம் என நினைத்த திமுகவிற்கு, நீங்கள் எறிந்த கல் பட்டு கலங்கிப்போக நாங்கள் குளம் இல்லை, தெளிவான கடல் என பதில் சொல்லியிருக்கிறார்.

அன்புமணி அவர்கள் பாதையை மிகத் தெளிவாக வரையறுத்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். மாற்றத்திற்கான விதையை ஆழமாகவே விதைக்கிறார். - #ஆர்கே

13/06/2024

விக்கிரவாண்டியில் பாமகவின் நிலைப்பாடு என்ன?

பாமக தலைவர் அண்ணன் அன்புமணி அவர்கள் பேட்டி!

Anbumani Ramadoss

முதல்வர் ஸ்டாலின் மீது பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு! "பெயருக்கு `கஞ்சா 1.0, 2.0, 3.0’ என்று மூன்றாயிரம், நான்காயிர...
12/06/2024

முதல்வர் ஸ்டாலின் மீது பாமக தலைவர் அன்புமணி குற்றச்சாட்டு!

"பெயருக்கு `கஞ்சா 1.0, 2.0, 3.0’ என்று மூன்றாயிரம், நான்காயிரம் பேரை கைது செய்கிறார்கள். 15 நாள்களில் அவர்கள் வெளியே வந்துவிடுகிறார்கள்.

போதைப் பொருள்கள் எங்கே இருந்து வருகிறது, யார் விற்பனைச் செய்கிறார்கள்? அவர்களை பிடித்ததே கிடையாது. தெருவில் விற்பவர்களைத்தான் பிடிக்கிறார்கள்.

மது மிகப்பெரிய பிரச்சனை. அதைவிட பலமடங்கு பிரச்சனையை ஏற்படுத்தியிருப்பது போதைப் பொருள்கள். போதைப்பொருள் விவகாரத்தில் முதலமைச்சர் கவனம் செலுத்துவதுபோல எனக்குத் தெரியவில்லை’’

Anbumani Ramadoss M. K. Stalin |

12/06/2024

மருத்துவர் அய்யா அவர்களும் மாவீரன் காடுவெட்டியார் அவர்களும் ஒரே மேஜையில் உணவு உண்ணும் பலரும் காணாத காட்சி!

நேற்று 15 லட்சம் இளைஞர்களுக்காக குரல் கொடுத்த அதே ஒற்றைக்குரல் தான் இன்று பத்து மாவட்ட விவசாயிகளுக்காகவும் குரல் கொடுக்க...
12/06/2024

நேற்று 15 லட்சம் இளைஞர்களுக்காக குரல் கொடுத்த அதே ஒற்றைக்குரல் தான்

இன்று பத்து மாவட்ட விவசாயிகளுக்காகவும் குரல் கொடுக்கிறது

ஒவ்வொரு சாமானியனுக்காகவும் பேசுபவரைத்தான் சாதிப்பேசும் தலைவன் என தவறான நினைத்துக் கொண்டிருக்கிறோம்

12/06/2024

முதலமைச்சரிடம் உருப்படியான செயல்பாடுகள் எதையும் பார்க்க முடியவில்லை - தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் முதன்முறையாக செய்தியாளர்களை சந்தித்த பாமக தலைவர் அன்புமணியின் சரவெடி பதில்கள்!

நம்ம கட்சிக்கொடி எல்லாம் கட்டி கல்யாணம் பண்றாங்கப்பா.. இப்படியே போறோம், நாம போகலனா எப்படி, விடுப்பா வண்டியை, என மணமக்களு...
11/06/2024

நம்ம கட்சிக்கொடி எல்லாம் கட்டி கல்யாணம் பண்றாங்கப்பா..

இப்படியே போறோம், நாம போகலனா எப்படி, விடுப்பா வண்டியை, என மணமக்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்திருக்கிறார் முனைவர் Sowmiya Anbumani

இன்று சென்னையில் நடைப்பெற்ற பல்வேறு சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிறப்பித்த பின்னர் செல்லும் வழியில், தாம்பரம் வழியாக சென்றபோது, பாமக கட்சி கொடிகளும், பதாகைகளும் வைத்திருப்பதைக் கண்டவுடன் தான் அழையா விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார் முனைவர் சௌமியா அன்புமணி!

அங்கு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வன்னியர் சங்கத்தின் மாவட்ட இளைஞர் சங்கத் தலைவர் சிவ.பாலாஜி - ம.சுபத்ரா இணையரை வாழ்த்தி மகிழ்ந்தார். திடீர் வருகையை கண்டு மணமக்கள் மட்டுமல்ல உறவினர்களும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார்கள்!

சென்னை மதுரவாயலில் நடைப்பெற்ற பாட்டாளி சொந்தம் Govindaraju Vaithilingam அவர்களின் இல்ல மணவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்தி...
11/06/2024

சென்னை மதுரவாயலில் நடைப்பெற்ற பாட்டாளி சொந்தம் Govindaraju Vaithilingam அவர்களின் இல்ல மணவிழாவில் கலந்து கொண்டு வாழ்த்திய பசுமைத்தாயகம் தலைவர் முனைவர் Sowmiya Anbumani அவர்கள்!

பாமகவின் தனித்தன்மை என்றுமே மாறாது!தமிழகத்தில் திமுக, அதிமுக அடுத்து எத்தனையோக் கட்சிகள் வரலாம், போகலாம். ஆனால் பாமக அளவ...
08/06/2024

பாமகவின் தனித்தன்மை என்றுமே மாறாது!

தமிழகத்தில் திமுக, அதிமுக அடுத்து எத்தனையோக் கட்சிகள் வரலாம், போகலாம்.

ஆனால் பாமக அளவிற்கு தனித்து வெல்லக்கூடிய வல்லமை, அதனைத் தொடர்ந்து தக்கவைக்கக்கூடிய கட்டமைப்பு இருக்கிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியை விட எதிர்க்கட்சிகள் கூட்டணி 13 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளனர்.

இதில் 8 அதிமுக, 3 பாமக, 2 தேமுதிக என இருக்கிறது.

அதிமுக முன்னிலை பெற்ற 8 தொகுதிகளுமே பாமக வலுவாக உள்ள தொகுதிகள் தான்.

குறிப்பாக ஜெயங்கொண்டம், அரியலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய தொகுதிகளில் பாமகவினர் அதிமுகவிற்கு மாறி வாக்களித்ததால் 8 ஆக இருக்கிறது.

இல்லையெனில் அதிமுகவும் திருக்கோயிலூர், உளுந்தூர்பேட்டை, குமாரபாளையம், பரமத்தி வேலூர் என 4 மட்டுமே முன்னிலை பெற்று இருக்கும்..

பாமக பென்னாகரம், தருமபுரி, பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. முன்னிலை பெற வேண்டிய மேட்டூரை குறைவான வித்தியாசத்தில் இழந்துவிட்டது.

இதுபோன்று ஒரு தொகுதியில் வெற்றிப் பெறக்கூடிய அளவுக்கு திமுக, அதிமுக அடுத்து, பாமகவிற்கு மட்டுமே தமிழகத்தில் செல்வாக்கு உள்ளது.

உங்களது தலைமையில் இந்தியா நிச்சயம் உலக சாதனைகளை படைக்கும் - பாமக தலைவர் அண்ணன் அன்புமணி!   Anbumani Ramadoss Narendra Mo...
07/06/2024

உங்களது தலைமையில் இந்தியா நிச்சயம் உலக சாதனைகளை படைக்கும் - பாமக தலைவர் அண்ணன் அன்புமணி!

Anbumani Ramadoss Narendra Modi

நாம் வெற்றியை இழந்திருக்கலாம், ஆனால், களத்தை இழக்கவில்லை. களம் இன்னும் நமக்கு சாதகமாகவே இருக்கிறது. வெற்றி பெற முடியவில்...
06/06/2024

நாம் வெற்றியை இழந்திருக்கலாம், ஆனால், களத்தை இழக்கவில்லை. களம் இன்னும் நமக்கு சாதகமாகவே இருக்கிறது. வெற்றி பெற முடியவில்லை என்பது வருத்தம் அளித்தாலும், இதில் ஏமாற்றமோ, கவலையோ அடைவதற்கு எதுவுமில்லை.

அனைத்து தொகுதிகளிலும் சளைக்காமல் களப்பணியாற்றிய உங்களுக்கு எனது நன்றிகளும், பாராட்டுகளும்! உங்களின் உழைப்புக்கு ஈடு இணை இல்லை. இப்போது பலன் கிடைக்கவில்லை என்றாலும் இரு ஆண்டுகளில் நிச்சயம் பலன் கிடைக்கும்.

நமது இலக்கு 2026 சட்டப்பேரவைத் தேர்தல் தான் என்பதை கூறியிருந்தோம், அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. வலுவான அணியை கட்டமைத்து போட்டியிடுவதும், வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதும் தான் நமது இலக்கு. அந்த இலக்கை நோக்கித் தான் நாம் வீறுநடை போட வேண்டும்.

Anbumani Ramadoss

06/06/2024

இதற்கு பின் என்ன செய்யப் போகிறேன் என்பது குறித்து, தேர்தல் தோல்விக்கு பின்னர் முதன்முறையாக மனம் திறந்த திரைப்பட இயக்குனர் தங்கர் பச்சான் அவர்கள்!

| | |

அதிகாரபூர்வமாக இரண்டாவது சுற்று முடிவில் பாமக முன்னிலை! தருமபுரி பாமக வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் 15000 வா...
04/06/2024

அதிகாரபூர்வமாக இரண்டாவது சுற்று முடிவில் பாமக முன்னிலை!

தருமபுரி பாமக வேட்பாளர் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள் 15000 வாக்குகள் அளவில் முன்னிலை

தருமபுரியில் நிர்வாகிகளை சந்தித்து வரும் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்! நாளை நமதே வெற்றியும் நமதே என நம்பிக்கையோடு இரு...
03/06/2024

தருமபுரியில் நிர்வாகிகளை சந்தித்து வரும் முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள்!

நாளை நமதே வெற்றியும் நமதே என நம்பிக்கையோடு இருப்போம்!

Sowmiya Anbumani

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Anbumani Brothers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share