Lyca news

Lyca news news

யாழில் புடவைக்கடைகளை எரியூட்டியோர் கைது. யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள பஆடை விற்பனை நிலையங்கள், கார் மற்றும் வீடுகளை எரி...
20/01/2024

யாழில் புடவைக்கடைகளை எரியூட்டியோர் கைது.

யாழ்ப்பாணம் நகரப்பகுதியிலுள்ள பஆடை விற்பனை நிலையங்கள், கார் மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் 3 பேரை யாழ்ப்பாண பொலிசார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாண நகரப்பகுதியில் உள்ள இரண்டு கடைகள் அண்மையில் எரிந்து பெறுமதியான சொத்துக்கள் அழிந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் கார் ஒன்றும் எரித்து அழிக்கப்பட்டது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் 3 பிரதான சந்தேகநபர்களை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வாள் என்பன மீட்கப்பட்டன.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட் விசாரணையில், சந்தேகநபர் ஒருவரின் பெரியம்மா பெல்ஜியத்தில் வாழ்ந்து வருவதும், அவருக்கு தெரிந்தவர் ஒருவரின் தேவைக்கு அமைய, கூலிப்படையாக யாழ்ப்பாண இளைஞர்கள் செயற்பட்டமை தெரியவந்தது.

கடைகளை எரிப்பதற்கு ரூ.12 இலட்சமும், வாகனங்களை எரிப்பதற்கு ரூ.7 இலட்சமும் வழங்கலாம் என பெல்ஜியம் நபர் ஒப்பந்தம் பேசியுள்ளார். முதற்கட்டமாக ரூ.1.5 இலட்சம் பணம் வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபரின் வங்கிக் கணக்குக்கு இந்த பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.

இந்த குற்றச்செயலில் சூத்திரதாரியான பெல்ஜயம் வாழ் நபரை, இன்டர்போலின் உதவியுடன் கைது செய்ய பொலிசார் நடவடிக்கையெடுத்துள்ளனர்.

தமிழகத்தில் வாழும் இலங்கையர்களுக்கு வரலாற்றில் கிடைத்த முதல் அங்கீகாரம்தமிழகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சம் ப...
19/01/2024

தமிழகத்தில் வாழும் இலங்கையர்களுக்கு வரலாற்றில் கிடைத்த முதல் அங்கீகாரம்

தமிழகத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக தஞ்சம் புகுந்து அகதிவாழ்க்கை வாழ்ந்துவரும் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச கடவுச்சீட்டு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் கீழ் தமிழகத்தில் வாழும் வடக்கு - கிழக்கைச் சேர்ந்த அகதிகளுக்கு, சர்வதேச கடவுச்சீட்டு இன்று (19.01.2024) சென்னையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காலகட்டங்களில் இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண யுத்த சூழ்நிலைகளின் போது இந்தியாவிற்கு தஞ்சம் புகுந்தவர்கள் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவின் பல்வேறு முகாம்களில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்கள் இலங்கைக்குத் திரும்புவதாயினும் வெளிச்செல்லும் அனுமதி அட்டைகள் மாத்திரமே வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையினை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டுசென்றதாகவும், அவரது வழிகாட்டுதலின்கீழ், இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு உடன் நடைமுறைக்கு வரும்வகையில் இலங்கை அரசின் வரலாற்றில் முதல்தடவையாக சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டுகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன எனவும் கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“உலகில் வேறெங்கிலும் இதற்குமுன்னர் இலங்கை அரசால் இவ்வாறானதொரு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதுடன், சர்வதேச அங்கிகாரம்பெற்ற இலங்கைக் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதனூடாக உலகின் எப்பகுதிக்கும் செல்லும் தகுதியை இந்தியவாழ் இலங்கை அகதிகள் இன்றுமுதல் பெற்றுக்கொள்கின்றனர்.
இதற்கமைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இக்கடவுச் சீட்டுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஈடிணையற்ற தமது ஒத்துழைப்புகளை வழங்கிய ஜனாதிபதி செயலக அதிகாரிகள், பிரதம மந்திரி செயலக அதிகாரிகள், வெளியுறவுத்துறைச் செயலக அதிகாரிகள், இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஷேனுக செனவிரட்ன, சென்னைக்கான இலங்கை உதவி உயர்ஸ்தானிகர் வெங்கடேஸ்வரன் ஆகியோருக்கு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.
மேலும் இக்கோரிக்கையை நிறைவேற்ற பவ வருடகாலமாக அவ்வப்போதைய அரசாங்கத்திடம் எம்மால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் அவை சாத்தியப்படாதிருந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதியுடன் இவ்வகதிகளுக்கு அங்கிகாரம் கிடைத்திருப்பதானது சுமார் ஒரு இலட்சம் அகதிகளுக்கும் கிடைத்துள்ள மிகப்பெரிய வரப்பிரசாதமாகும்.

40 வருடங்களாக தாய் நாட்டை விட்டு வெளியேறியவர்களுக்கு அடைக்கலம் வழங்க உதவிய இந்திய அரசுக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதுடன், மேலும், தமிழகத்திலுள்ள அனைத்து நலன்புரித் திட்டங்களுக்குள் உள்வாங்கி அகதிமுகாம் என்ற சொல்லை மாற்றி மறுவாழ்வு நிலையம் என உருவாக்கிய தமிழக முதல்வருக்கும், அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கும் இவ்விடத்தில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கின்றோம்.
இதற்கமைய இந்திய அகதி முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்குமாறு இரண்டுமுறை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட ப.ஜ.க தமிழகத் தலைவர் அண்ணாமலையிடம் கோரிக்கை முன்வைத்ததைத் தொடர்ந்து, இந்திய உள்துறை அமைச்சர் அமத்ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரால் அவ்விடயம் தொடர்பான வேலைத் திட்டங்களுக்கான கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என தெரிவித்துள்ளார்.

யாழில் இளைஞனை பலி கொண்ட டெங்கு.யாழ் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த செல்வராசா சிந்துசன் (வயது 31  ) என்ற இளைஞன் டெங்கு காய்ச...
19/01/2024

யாழில் இளைஞனை பலி கொண்ட டெங்கு.

யாழ் அரியாலைப் பகுதியைச் சேர்ந்த செல்வராசா சிந்துசன் (வயது 31 ) என்ற இளைஞன் டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆணைக்கோட்டையில் 9 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது.ஆணைக்கோட்டை  பகுதியில் 9 லீற்றர் கசிப்புடன் 54 வயது மதிக்கத்தக்க நபர் ஒ...
19/01/2024

ஆணைக்கோட்டையில் 9 லீற்றர் கசிப்புடன் ஒருவர் கைது.

ஆணைக்கோட்டை பகுதியில் 9 லீற்றர் கசிப்புடன் 54 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மாவட்ட பொலிஸ் அத்தியாட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து குறித்த முற்றுகை இடம்பெற்றுள்ளது.

நயினாதீவு அருள் மிகு ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய எண்ணைக்காப்பு நிகழ்வு எதிர்வரும்  22.01.2024- 23.01.2024 திகதிகளில் இடம்பெ...
19/01/2024

நயினாதீவு அருள் மிகு ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய எண்ணைக்காப்பு நிகழ்வு எதிர்வரும் 22.01.2024- 23.01.2024 திகதிகளில்
இடம்பெறவுள்ளது.
அதற்கான ஒழுங்கு முறைகள் வரைபடம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
எண்ணெய் சாத்தும் நேரம் -காலை 07:00_மாலை 05:00 வரை

நெடுந்தீவு பிரதேசெயலகப் பிரிவில் பாவனையில் உள்ள வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை செய்யும் நடமாடும்சேவை இன்றையதினம்  (19/01...
19/01/2024

நெடுந்தீவு பிரதேசெயலகப் பிரிவில் பாவனையில் உள்ள வாகனங்களுக்கான புகைப் பரிசோதனை செய்யும் நடமாடும்சேவை இன்றையதினம் (19/01) நெடுந்தீவு பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்று வருகின்றது.
வருடாந்த வாகன வரி அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்ளும் வகையில் இன்று ஆரம்பிக்கப்பட்ட இந் நடமாடும் சேவை நாளைய தினமும் (20/01) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

நாட்டு நிலவரம்...😁😇😪
19/01/2024

நாட்டு நிலவரம்...😁😇😪

விழாக்கோலம் பூண்டுள்ள நயினை நாகபூசணி அன்னை ஆலயம்.
19/01/2024

விழாக்கோலம் பூண்டுள்ள நயினை நாகபூசணி அன்னை ஆலயம்.

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது  # navy
19/01/2024

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மின்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

# navy

18/01/2024
கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி.ம...
18/01/2024

கிளிநொச்சி அறிவியல் நகர் பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி.
முறிகண்டி பகுதியை சேர்ந்த கிருபா என அழைக்கப்படும் ரிப்பர் சாரதியே இவ்வாறு உயிரித்துள்ளார்.

18.01.2024இன்று முதல்  #யாழ்ராணி special புகையிரதமாக S13 ரக புகையிரதம் காங்கேசன்துறை அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபடும்.க...
18/01/2024

18.01.2024
இன்று முதல் #யாழ்ராணி special புகையிரதமாக S13 ரக புகையிரதம் காங்கேசன்துறை அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபடும்.
காங்கேசன்துறை - 14.40
அநுராதபுரம் - 08.20

முதலாம் வகுப்பு
இரண்டாம் வகுப்பு
மூன்றாம் வகுப்பு

நேர அட்டவணை கீழே பார்க்கவும்✅ Raani

கோட்டாபயவின் அறைக்குள் சிக்கிய பெருந்தொகைப் பணம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம். முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் உத்த...
18/01/2024

கோட்டாபயவின் அறைக்குள் சிக்கிய பெருந்தொகைப் பணம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் உத்தியோகபூர்வ அறைக்குள்ளிருந்து சிக்கிய பெருந்தொகைப் பணம் குறித்து வழக்குத் தொடர்வதில்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பதவியிலிருந்து துரத்தியடிக்கப்பட்ட 2022ம் ஆண்டின் ஜூலை மாதம் 09ம் திகதி , அவரது உத்தியோகபூர்வ அறைக்குள் இருந்து பெருந்தொகைப் பணம் ஆர்ப்பாட்டக்காரர்களினால் கைப்பற்றப்பட்டது.

ஒருகோடி எழுபத்தி எட்டு லட்சத்து ஐம்பதினாயிரம் ரூபா அவ்வாறு கைப்பற்றப்பட்டதாக தெரிவித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தனர். பின்னர் நீதிமன்றத் தலையீட்டின் காரணமாக நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த பணம் எங்கிருந்து வந்தது? சட்டவிரோதமான வழிகளில் பெற்ற பணமா என்பது குறித்து விசாரணைகள் நடத்தவோ, வழக்குத் தொடரவோ உத்தேசம் இல்லை என்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நேற்றையதினம் கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் அறிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தனது தீர்மானத்தை நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது பணம் கைப்பற்றப்பட்ட விடயத்தில் சந்தேகத்திற்கிடமான தடயங்கள் எதுவும் இல்லை என்றும் வெறும் சம்பவத்தின் அடிப்படையில் வழக்குத் தொடர முடியாது என்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதே போன்று குறித்த பணத்தை நீதிமன்றத்திடம் ஒப்படைக்காமல் குறுக்கு வழியில் கோட்டாபயவிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்திய பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான முறைப்பாட்டையும் போலி முறைப்பாடு என்பதாக நீதிமன்றத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு அவர் மிரட்டியதற்கான சாட்சியங்கள் இல்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலி விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சுருபம் மன்னார் மறைமாவட்டத்திலு...
17/01/2024

மன்னார் மடு அன்னையின் முடிசூட்டு நூற்றாண்டு யூபிலி விழாவை முன்னிட்டு மடு அன்னையின் திருச்சுருபம் மன்னார் மறைமாவட்டத்திலுள்ள பங்குகளுக்கு பவனியாக எடுத்துச்சொல்லப்பட்டதை தொடர்ந்து யாழ். மறைமாவட்டத்திற்கும் எடுத்துவர ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி மருதமடு அன்னையின் திருச்சுருபம் யாழ். மறைமாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டு புனித மரியன்னை பேராலயத்தில் வைக்கப்பட்டு அங்கிருந்து மறைக்கோட்ட பங்குகள் ரீதியாக திருயாத்திரையாக கொண்டு செல்ல ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இச்சிறப்பு நிகழ்வை முன்னெடுக்க யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் வழிகாட்டலில் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான கலந்துரையாடல் 11ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை ஆயர் தலைமையில் நடைபெற்ற குருக்கள் மன்றில் இடம்பெற்றதுடன் இந்நிகழ்வை சிறப்பான முறையில் முன்னெடுக்க ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி தொடக்கம் 30ஆம் திகதி வரை யாழ். மறைமாவட்டத்தின் ஆறு மறைக்கோட்டங்களிலும் உள்ள பங்குகளுக்கு யாழ்ப்பாணம், தீவகம், இளவாலை, பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு எனும் ஒழுங்கில் திருச்சொருபம் பவனியாக எடுத்துச்செல்லப்பட்டு சிறப்பு திருப்பலிகளும் பக்தி முயற்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் அதற்கான ஆயத்தங்கள் இடம்பெற்று வருவதாகவும் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அவர்கள் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு ...
17/01/2024

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான துமிந்த சில்வாவிற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு சட்டபூர்வமானதல்ல என உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர் குழாம் இன்று(17) ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா திகதியில் மாற்றம். முன்னதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது ...
17/01/2024

யாழ். பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா திகதியில் மாற்றம்.

முன்னதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி 06, 07 மற்றும் 08 ஆம் திகதிகளில் நடைபெற தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா நடைபெறும் திகதிகள் பிற்போடப்பட்டுள்ளது.
இவ்வாறு பட்டமளிப்பு விழா பிற்போடப்பட காரணம் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படுவதில் உள்ள தாமதமே என அறிய முடிகிறது.
எனவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா மார்ச் மாதம் 14,15,16 ஆம் திகதிகளில் நடாத்த பல்கலைக்கழக நிர்வாகத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நயினை நாகபூசணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான  பிரதிஷ்டா கிரியைகள் இன்றையதினம் (17/01) பக்திபூர்வமாக ஆரம்பமானது.
17/01/2024

நயினை நாகபூசணி அம்பாளின் கும்பாபிஷேக பெருவிழாவிற்கான பிரதிஷ்டா கிரியைகள் இன்றையதினம் (17/01) பக்திபூர்வமாக ஆரம்பமானது.

17.01.2024 புதன்கிழமை பகல் 1.00 மணிவடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 19.01.2024 வரை இடையிடையே ...
17/01/2024

17.01.2024 புதன்கிழமை பகல் 1.00 மணி

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் இன்று முதல் எதிர்வரும் 19.01.2024 வரை இடையிடையே பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

-நாகமுத்து பிரதீபராஜா-

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான  முன்னாயத்த பணிகள் குறித்து ஆய்வுசெய்...
17/01/2024

கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான முன்னாயத்த பணிகள் குறித்து ஆய்வுசெய்யும் விஜயமொன்று இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டது.

இவ்விஜயத்தில் நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன் அடிகளார் , யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்(காணி), நெடுந்தீவு பிரதேச செயலர் எப்.சி. சத்தியசோதி, யாழ் மாவட்ட செயலக பிரதம கணக்காளர், மற்றும் கடற்படை உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.
குறிகாட்டுவான் துறைமுகத்தில் இருந்து கடற்படை படகு மூலம் கச்சதீவு சென்ற குழுவினர் அங்கு திருவிழாவிற்கு வரும் பக்தர்களது தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் எடுக்கவுள்ள விடயங்களை ஆய்வு செய்து சென்றமை குறிப்பிடத்தக்தாகும்.

14 வது சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை யாழ் முற்றவெளி மண்ணில் நடைபெறவுள்ளது. 202...
16/01/2024

14 வது சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை யாழ் முற்றவெளி மண்ணில் நடைபெறவுள்ளது.

2024 ஆம் ஆண்டுக்கான யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

வடமாகாணத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக அபிவிருத்தியை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் அதேவேளை அதனை மாற்றியமைக்கும் வருடாந்த நிகழ்வாக இந்த கண்காட்சி இடம்பெறுகிறது.

இந்த கண்காட்சி எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

'வடக்கிற்கான உங்கள் நுழைவாயில்' என்ற தொனிப்பொருளில் இந்த வர்த்தக கண்காட்சி இந்த முறை நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வல்வெட்டித்துறையில் பறந்த தமிழரின் விமானங்கள் முதலாமிடம் பிடித்த பட்டம் வாழ்த்துகள் ....
15/01/2024

வல்வெட்டித்துறையில் பறந்த தமிழரின் விமானங்கள் முதலாமிடம் பிடித்த பட்டம் வாழ்த்துகள் ....

15/01/2024

வல்வெட்டித்துறை
வானில் பறந்த செயற்கை கோள் 2024 |

🚨வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் ராட்சத ‘ விசித்திர பட்டத்திருவிழா இன்று (15) வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் சிறப்பாக இடம்பெற்றது.
பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதை பறக்க விட்டனர்.







15/01/2024

VALVETTITHURAI ஊரில் வானில் பறந்த பருந்து 2024 | Valvettithurai | Padda Poddi







15/01/2024

தலைவரின் ஊரில் பட்ட போட்டி 2024 | Valvettithurai | Padda Poddi







அனைத்து நண்பர்களுக்கும் உழவர் திருநாளாம் தைத்திருநாள் வாழ்த்துக்கள் ❤
15/01/2024

அனைத்து நண்பர்களுக்கும் உழவர் திருநாளாம் தைத்திருநாள் வாழ்த்துக்கள் ❤

கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்பாள்
14/01/2024

கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை நயினாதீவு ஶ்ரீ நாகபூசணி அம்பாள்

Mannar fort,Sri Lanka 😍🦚🌊 🇱🇰
10/01/2024

Mannar fort,Sri Lanka 😍🦚🌊 🇱🇰


ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்
09/01/2024

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்

09.01.2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணிஇலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் க...
09/01/2024

09.01.2024 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணி

இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 11.01.2024 வரை தொடரும் வாய்ப்புள்ளது.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் நாளை வரை மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்க தொடங்கியுள்ளதால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள ஆபத்து தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.

2023/2024 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வடகீழ் பருவத்தின் இறுதிச் சுற்று மழை இதனோடு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஜனவரி இறுதிவரை அவ்வப்போது மிதமான மழை கிடைக்க கூடும்.

தற்போதைய மழை குறைவடைந்ததும் பனி தொடங்கும் என்பதனால் சற்று குளிரான வானிலை தொடரக்கூடும்.

(இதுவரை பல்வேறு வானிலை எதிர்வுகூறல் பதிவுகளை மேற்கொண்டுள்ளேன். ஆனாலும் இப்பதிவு மேற்கொள்ளும் இடம், மற்றும் நிலைமை, காரணமாக இது தனித்துவமாகின்றது)

-நாகமுத்து பிரதீபராஜா-

ஜனவரி மாதம் முதல் 5,000 ரூபா: அமைச்சரவை அனுமதி
09/01/2024

ஜனவரி மாதம் முதல் 5,000 ரூபா: அமைச்சரவை அனுமதி

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Lyca news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share