Cuddalore Seithigal - கடலூர் செய்திகள்

  • Home
  • Cuddalore Seithigal - கடலூர் செய்திகள்

Cuddalore Seithigal -  கடலூர் செய்திகள் CuddaloreSeithigal

Available at All School Shoes & ChappalsPadukaa Comfort StepsCall Now : +91 77082 56789Follow Us : Maghalakshmi Plaazaa ...
20/05/2024

Available at All School Shoes & Chappals
Padukaa Comfort Steps
Call Now : +91 77082 56789
Follow Us :
Maghalakshmi Plaazaa 716, PJN Road, Viluppuram.

Sri Jayeandra Saraswathy School 12th Standard Public Examinations Results 2023-2024DISTRICT TOPPERSJayeandrians Secures ...
06/05/2024

Sri Jayeandra Saraswathy School
12th Standard Public Examinations Results 2023-2024
DISTRICT TOPPERS
Jayeandrians Secures Villupuram District’s First 3 Ranks
S.BHAVYA SHREE 596/600 - District 1st Rank
R.PRADEEPA 594/600 - District 2nd Rank
J.SARANYA 594/600 - District 3rd Rank
Students Appeared:165
Students Passed:165
All the Students Scored above 500+
100% RESULTS IN 12 th PUBLIC EXAMINATIONS CONTINUOUSLY FOR THE PAST 17 YEARS
Admissions Open 2024-2025 - Pre.Kg to 12th Standard
For More Contact : 9944759759
SRI JAYEANDRA SARASWATHY VIDYAALAYAA D.J.MAT.HR.SEC.SCHOOL
Gingee Road, villupuram


The most excited   is set to grace the screens on Mar 15th. Get ready to witness an interesting content in Big Screens  ...
02/03/2024

The most excited is set to grace the screens on Mar 15th. Get ready to witness an interesting content in Big Screens



Dir by N.A. Rajendra Chakravarthi

.prabhuthilaak

150 டிராக்டர்மெகா சர்வீஸ் கேம்ப்விழுப்புரம் | கடலூர் | செஞ்சிஉங்கள் டிராக்டர், எங்கள் பராமரிப்பு» ரூ. 10000/- மதிப்பு உள...
25/12/2023

150 டிராக்டர்
மெகா சர்வீஸ் கேம்ப்
விழுப்புரம் | கடலூர் | செஞ்சி
உங்கள் டிராக்டர், எங்கள் பராமரிப்பு
» ரூ. 10000/- மதிப்பு உள்ள டிராக்டர் சேல்ஸ் கூப்பன் வழங்கப்படும்.
» ரூ.400 மதிப்பு ஃபில்டர் கிட் இலவசம்.
» ரூ.500/- மதிப்பு லேபர் இலவசம்.
» ஜெனரல் செக் அப் இலவசம்.
» கிஃப்ட் ஒன்று வழங்கப்படும்.
» ரூ.2000/- மதிப்புள்ள, அடுத்து வரும் முதல் மேஜர் சர்வீஸ் லேபர் தள்ளுபடி கூப்பன் வழங்கப்படும்.
மதிய உணவு உண்டு
ஸ்ரீ மஹாலஷ்மி டிராக்டர்
* சேல்ஸ் * சர்வீஸ் * ஸ்பேர்ஸ்
விழுப்புரம் | கடலூர் | செஞ்சி
விழுப்புரம் : 93459 45150
கடலூர் : 93459 45065

#மஹாலக்ஷ்மி #டிராக்டர் #மஹாலக்ஷ்மிடிராக்டர் #விழுப்புரம் #கடலூர் #செஞ்சி

விளைச்சல் பெருக்கட்டும் மகிழ்ச்சி பொங்கட்டும்தேசிய விவசாய தினத்தை முன்னிட்டுMF டிராக்டர்வாங்கும் அனைத்து விவசாய பெருமக்க...
21/12/2023

விளைச்சல் பெருக்கட்டும் மகிழ்ச்சி பொங்கட்டும்
தேசிய விவசாய தினத்தை முன்னிட்டு
MF டிராக்டர்
வாங்கும் அனைத்து விவசாய பெருமக்களுக்கும்
100 gms கிராம் வெள்ளி நாணயங்கள் இலவசம்
இச்சலுகை டிசம்பர் 22 மற்றும் 23 தேதிகளில் மட்டுமே
ஸ்ரீ மஹாலக்ஷ்மி டிராக்டர்
• சேல்ஸ் •சர்வீஸ் • ஸ்பேர்ஸ்
விழுப்புரம் | கடலூர் | செஞ்சி
விழுப்புரம் : 93459 45150 கடலூர் : 93459 45065


#மஹாலக்ஷ்மி #டிராக்டர் #மஹாலக்ஷ்மிடிராக்டர் #விழுப்புரம் #கடலூர் #செஞ்சி

தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.பசும்பொன் முத்துராமலிங்க தேவரி...
30/10/2023

தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116-வது ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. தேவர் ஜெயந்தி விழாவையொட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரைக்கு வருகை தந்துள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவரின் முழு உருவ சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதையடுத்து மதுரையில் அமையவுள்ள இரண்டு உயர்மட்ட மேம்பால கட்டுமான பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பின்னர் மதுரை தெப்பக்குளம் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்த நிலையில் பசும்பொன் சென்றுள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தேவர் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பெரியகருப்பன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.தேவர் ஜெயந்தியையொட்டி பசும்பொன்னில் 12 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.",
#பசும்பொன் #முத்துராமலிங்கதேவர் #முதல்அமைச்சர்

news from Dailythanthi

கேரளாவில் மதவழிபாட்டு கூட்டரங்கில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன.கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் உள்ள...
30/10/2023

கேரளாவில் மதவழிபாட்டு கூட்டரங்கில் அடுத்தடுத்து 3 குண்டுகள் வெடித்தன.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரியில் உள்ள ஜம்ரா என்கிற சர்வதேச மாநாட்டு மையத்தில் நேற்று காலை யெகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கு நடைபெற்றது. இந்த கூட்டரங்கில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.கூட்டரங்கில் காலை 9.45 மணியளவில் பிரார்த்தனை நடைபெற்றுக்கொண்டிருந்தது. அப்போது அரங்கின் மையப்பகுதியில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதை சற்றும் எதிர்பாராத மக்கள் அலறியடித்து நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது சில வினாடிகளில் அரங்கின் பக்கவாட்டு பகுதிகளில் இருந்து மேலும் 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தன. இதனால் கூட்டரங்கில் தீ பற்றி எரிந்தது. இந்த தொடர் குண்டுவெடிப்பில் சம்பவ இடத்திலேயே லிபினா என்ற பெண் உடல்கருகி உயிரிழந்தார். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் குமாரி என்ற பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.இந்நிலையில், தொடர் குண்டுவெடிப்பில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 12 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் மூலம் கேரளா தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது.இந்த குண்டுவெடிப்பில் படுகாயமடைந்த 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, இந்த குண்டுவெடிப்பு தாக்குதலை நடத்தியதாக திரிச்சூர் மாவட்ட போலீஸ் நிலையத்தில் டொமினிக் மார்டின் என்ற நபர் சரணடைந்துள்ளார். யெகோவாவின் சாட்சிகள் அமைப்பின் செயல்பாடுகள் நாட்டுக்கு ஆபத்தானது மற்றும் இளைய தலைமுறையினர் மனதில் நஞ்சை விதைக்கும் வகையில் உள்ளதால் இந்த தாக்குதல் நடத்தியதாக டொமினிக் மார்டின் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட மார்டினிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.",
#திருவனந்தபுரம் #கேரள #எர்ணாகுளம் #குண்டு
News From Dailythanthi

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தது.ஆந்திர மாநிலம் விசாகப...
30/10/2023

ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இருந்து பாலசாவுக்கு நேற்று இரவு பயணிகள் ரெயில் சென்றுகொண்டிருந்தது.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று இரவு பயணிகள் ரெயில் பாலசாவுக்கு சென்றுகொண்டிருந்தது. அந்த ரெயில் அலமந்தா - கன்கடப்பள்ளி இடையேயான தண்டவாளத்தில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்தது.அப்போது, அதே தண்டவாளத்தில் விசாகப்பட்டினத்தில் இருந்து ஒடிசாவின் ராயகடா நோக்கி மற்றொரு பயணிகள் ரெயில் வேகமாக வந்தது. இரு ரெயில்களும் ஒரே தண்டவாளத்தில் பயணித்த நிலையில் வேகமாக வந்த விசாகப்பட்டினம்-ராயகடா பயணிகள் ரெயில் சிக்னலுக்காக நின்றுகொண்டிருந்த விசாகப்பட்டினம் - பாலசாவு பயணிகள் ரெயில் மீது பின்புறத்தில் இருந்து மோதியது. இந்த கோர விபத்தில் 2 ரெயில்களின் பெட்டிகள் தடம்புரண்டன.இந்நிலையில், இந்த ரெயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 39 பேர் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மனித தவறே இந்த விபத்துக்கு காரணம் என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. ",
#அமராவதி #ஆந்திரா #ரெயில்
News from Dailythanthi.

ஹமூன் புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று...
24/10/2023

ஹமூன் புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 2 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 12 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும்.புயலாக வலுப்பெற்று வடக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து நாளை (25-ந்தேதி) அதிகாலை வங்காளதேசம் டிங்கோனா தீவு-சந்திவிப் இடையே கரையை கடக்கும். இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் வரும் 27-ந்தேதி வரை 5 நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.மேலும் தென் கிழக்கு, மத்திய கிழக்கு வங்க கடல், ஒடிசா, மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று தெரிவித்தது.இந்த சூழலில், ஹமூன் புயல் அதிதீவிர சூறாவளி புயலாக வலுப்பெற்று உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று தெரிவித்து உள்ளது. இந்த புயல் ஒடிசாவிற்கு கிழக்கு, தென்கிழக்கே 210 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளது. நாளை நண்பகலில் ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தில் கெபுரா - சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன் ஆகிய 9 துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ",
#ஹமூன் #சென்னை #புயல் #வானிலைஆய்வுமையம்
FROM Dailythanthi

அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. சென்னை,இன...
24/10/2023

அனைத்து ஆம்னி பேருந்துகளும் வழக்கம்போல் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
சென்னை,இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் வேலை நிறுத்தம் என தென்மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர் கூட்டமைப்பு அறிவித்திருந்த நிலையில்,தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க செயலாளர் மாறன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:- தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் திரும்ப வசதியாக ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும். ஆம்னி பேருந்துகள் இயங்கும். மக்கள் பீதியடைய வேண்டாம். 90 சதவீத பேருந்துகள் எங்கள் சங்கத்தில் உள்ளன. எங்கள் சங்கத்தில் 1.500 பேருந்துகள் உள்ளன. அவை அனைத்தும் இயங்கும். வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களே சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.
#சென்னை #வேலைநிறுத்தம் #ஆம்னி #பேருந்து

news from Dailythanthi

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.86 அடியாக உயர்ந்துள்ளது.மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-...
24/10/2023

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.86 அடியாக உயர்ந்துள்ளது.
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 103 அடியாக இருந்தது. இந்த நிலையில் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை சரிவர பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து அணையின் நீர்மட்டம் குறைந்தது.இதையடுத்து கடந்த 10-ந் தேதி காலை 6 மணியுடன் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. ஆனாலும் தொடர்ந்து குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 வாரமாக பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 10-ந் தேதி அணையின் நீர்மட்டம் 30 அடியாக இருந்த நிலையில் நீர்வரத்தின் காரணமாக இன்று காலை 48.86 அடியாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்தது. கடந்த 2 வாரத்தில் மட்டும் அணையின் நீர்மட்டம் 18 அடி உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 138 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.",
#மேட்டூர் #டெல்டா #மேட்டூர்அணை
News from Dailythanthi

ஆண்களுக்கான  உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.ஹாங்சோ, பாரா ஆசிய விளைய...
23/10/2023

ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஹாங்சோ, பாரா ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைப்பெற்று வருகிறது. இந்த போட்டி தொடரில் இன்று நடைப்பெற்ற ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர்கள் சைலேஷ் குமார் தங்கப்பதக்கம், மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினர். மேலும், மகளிருக்கான படகுப்போட்டியில் இந்திய வீராங்கனை பிராச்சி யாதவ் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். தற்போது வரை இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் வென்று 7 பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. ",
#வெள்ளிப்பதக்கம் #ஆசியவிளையாட்டுபோட்டி
News from Dailythanthi

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது....
23/10/2023

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெற்றிப்பாதைக்கு திரும்பும் உத்வேகத்துடன் பாகிஸ்தான் அணி இன்று ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 22-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் அணி, மற்றொரு ஆசிய அணியான ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் இதுவரை 4 ஆட்டங்களில் ஆடி 2-ல் வெற்றியும் (நெதர்லாந்து, இலங்கைக்கு எதிராக), 2-ல் தோல்வியும் (இந்தியா, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக) சந்தித்துள்ளது. இதில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 367 ரன்களை வாரி வழங்கிய பாகிஸ்தான், அந்த இலக்கை நோக்கி ஆடிய போது 305 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்தும் மிடில் வரிசை பேட்ஸ்மேன்கள் நிலைக்காததால் இலக்கை நெருங்க முடியவில்லை. குறிப்பாக உலகின் 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேனான கேப்டன் பாபர் அசாம் தடுமாறுவது அந்த அணிக்கு பின்னடைவாக இருக்கிறது. அவர் 4 இன்னிங்சில் வெறும் 83 ரன்களே எடுத்துள்ளார். அவர் பார்முக்கு திரும்ப வேண்டியது அவசியமாகும். முகமது ரிஸ்வான் (ஒரு சதம் உள்பட 294 ரன்) மட்டுமே அந்த அணியில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். 'புதிய பாகிஸ்தான் அணி'இதே போல் வேகப்பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி (9 விக்கெட்) வலு சேர்க்கிறார். அதே சமயம் சுழற்பந்து வீச்சில் பலவீனம் தெரிகிறது. கடந்த ஆட்டத்தில் ஷதப் கானுக்கு பதிலாக இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளர் உஸ்மா மிர் 9 ஓவரில் 82 ரன்களை விட்டுக்கொடுத்து வள்ளலாக மாறினார். முகமது நவாசும் (2 விக்கெட்) சொதப்புகிறார். சென்னை ஆடுகளம் வேகம் குறைந்தது. சுழற்பந்துவீச்சுக்கு அனுகூலமானது. எனவே சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டியது முக்கியம். அத்துடன் அரைஇறுதி வாய்ப்பில் சிக்கலின்றி நீடிக்க பாகிஸ்தான் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும்.நேற்று நிருபர்களை சந்தித்த பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் கூறுகையில், 'நாங்கள் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 2-2 என்று இருக்கிறோம். கடைசி இரு ஆட்டங்களில் நாங்கள் நன்றாக ஆடவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். குறிப்பிட்ட நாளில் நீங்கள் எப்படி விளையாடுகிறீர்கள் என்பதே முக்கியம். அது குறித்து நிறைய பேசியுள்ளோம். நாளை (இன்று) புதிய பாகிஸ்தான் அணியை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். ஆப்கானிஸ்தான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது. அதை சமாளிக்கக்கூடிய திறமை எங்களிடம் உண்டு. அண்மையில் ஒரு நாள் தொடரில் அவர்களை 3-0 என்ற கணக்கில் நாங்கள் வீழ்த்தியதை மறந்து விடக்கூடாது. சென்னையில் இருந்து கிளம்பும் போது 4-2 என்று (சென்னையில் நடக்கும் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக வெற்றி பெறும் பட்சத்தில்) இருப்போம் என்று நம்புகிறேன்' என்றார். ஆப்கானிஸ்தான் எப்படி?ஆப்கானிஸ்தான் அணி 4 ஆட்டங்களில் விளையாடி ஒன்றில் வெற்றியும் (இங்கிலாந்துக்கு எதிராக), 3-ல் தோல்வியும் (வங்காளதேசம், இந்தியா, நியூசிலாந்துக்கு எதிராக) தழுவியுள்ளது. கடந்த ஆட்டத்தில் இதே மைதானத்தில் நியூசிலாந்துக்கு எதிராக 139 ரன்னில் சுருண்ட ஆப்கானிஸ்தான் சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் உள்ளது. ஏதுவான இந்த ஆடுகளத்தில் முகமது நபி, முஜீப் ரகுமான், ரஷித்கான் ஆகியோர் சுழல் ஜாலத்தில் மிரட்டினால், இங்கிலாந்தை போன்று பாகிஸ்தானுக்கும் அதிர்ச்சி வைத்தியம் அளிக்கலாம். இது தான் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கப்போகிறது.ஆப்கானிஸ்தான் பயிற்சியாளர் ஜோனதன் டிராட் நிருபர்களிடம் கூறுகையில், 'பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் என்றாலே தற்போது கடும்போட்டி நிலவுவதால் இது விறுவிறுப்பு நிறைந்ததாக இருக்கும். சில மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுடன் ஆடிய ஒரு நாள் தொடரில் ஒன்றிரண்டு ஆட்டங்களில் வென்றிருக்க வேண்டியது. நெருங்கி வந்து தோற்றோம். இந்த முறை அவர்களின் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவோம் என்று நம்புகிறேன்' என்றார்.சர்வதேச ஒரு நாள் போட்டியில் இவ்விரு அணிகள் இதுவரை 7 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. 7 ஆட்டத்திலும் பாகிஸ்தானே வென்று இருக்கிறது.பிற்பகல் 2 மணிக்கு...போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-பாகிஸ்தான்: இமாம் உல்-ஹக், அப்துல்லா ஷபிக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, முகமது நவாஸ், ஷதப் கான் அல்லது உஸ்மான் மிர், ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, ஹாரிஸ் ரவுப்.ஆப்கானிஸ்தான்: ரமனுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜட்ரன், ரமத் ஷா, ஹஸ்மத்துல்லா ஷகிடி (கேப்டன்), அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், இக்ரம் அலிகில், முகமது நபி, ரஷித்கான், முஜீப் ரகுமான் அல்லது நூர் அகமது, நவீன் உல்-ஹக், பசல்ஹக் பரூக்கி.பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.",
#உலகக்கோப்பை #கிரிக்கெட் #சென்னை #பாகிஸ்தான்

நாகையில் இருந்து இலங்கைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இதனை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொ...
14/10/2023

நாகையில் இருந்து இலங்கைக்கு இன்று முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இதனை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்து உள்ளார்.
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது என பிரதமர் மோடி-இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.இதனைத்தொடர்ந்து நாகை துறைமுகத்தில் இருந்து கப்பல் போக்குவரத்துக்கான அனைத்து பணிகளும் தொடங்கி முடிவடைந்து விட்டது. கடந்த 8-ந்தேதி நாகை-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சோதனை ஓட்டமும் நடந்து முடிவடைந்து விட்டது.150 பேர் பயணம் செய்யும் இந்த கப்பலில் நாகையில் இருந்து இலங்கைக்கு செல்வதற்காக 30 பேரும், இலங்கையில் இருந்து நாகைக்கு வருவதற்காக 26 பேரும் டிக்கெட் புக்கிங் செய்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், கடந்த 10-ந்தேதி தொடங்க இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து திடீரென ரத்து செய்யப்பட்டு 12-ந் தேதிக்கு மாற்றப்பட்டது.இதன்பின்னர் நிர்வாக காரணத்துக்காக மீண்டும் 14-ந்தேதிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 2 முறை கப்பல் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.இந்நிலையில், இன்று காலை 7 மணி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசந்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து காணொலிக்காட்சி மூலம் புதுடெல்லியில் இருந்தபடி இன்று காலை பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.
#நாகை #இலங்கை #கப்பல் #போக்குவரத்து
News from Dailythanthi

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆமதாபாத்,13-வது உலகக...
14/10/2023

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் ஆமதாபாத்தில் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆமதாபாத்,13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி அவசியமாகும்.இந்த நிலையில் நடப்பு உலகக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று (சனிக்கிழமை) அரங்கேறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் ஊதித்தள்ளிய உற்சாகத்தோடு ஆமதாபாத்துக்கு வந்திருக்கிறது. முதல் இரு ஆட்டங்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோரின் பேட்டிங் அபாரமாக இருந்தது. பந்துவீச்சில் பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் கலக்கினர். இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறிவைத்து இருக்கிறார்கள். ஆனால் முந்தைய இரு ஆட்டம் போன்று இது எளிதாக இருக்காது.டெங்கு காய்ச்சலால் முதல் இரு ஆட்டங்களை தவற விட்ட தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் குணமாகி விட்டார். அவர் 99 சதவீதம் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இதன் மூலம் கில் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவரது வருகை இந்தியாவின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும்.பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. இதில் இலங்கைக்கு எதிராக 345 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான் சதத்தோடு 10 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. உலகக் கோப்பையில் துரத்திப்பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு இது தான். இந்த வெற்றியால் பாகிஸ்தான் வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் களம் காணுவார்கள்.அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட 30-ஐ தாண்டவில்லை. முக்கியமான இந்த ஆட்டத்தில் ரன்மழை பொழியும் வேட்கையில் உள்ளார். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, ஷதப் கான் வலு சேர்க்கிறார்கள். 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியாவிடம் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் அந்த நீண்ட சோகத்துக்கு எப்படியாவது முட்டுக்கட்டை போட்டுவிட வேண்டும் என்ற துடிப்புடன் காத்திருக்கிறது.ஆமதாபாத் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 283 ரன் இலக்கை நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது. இரவில் பனிப்பொழிவில் பேட் செய்வது எளிது என்பதால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும். வானிலையை பொறுத்தவரை மாலைவேளையில் லேசாக மழை குறுக்கிடலாம்.போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் அல்லது இஷான் கிஷன், விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி.",
#உலகக்கோப்பை #கிரிக்கெட் #இந்தியா #பாகிஸ்தான் #கிரிக்கெட்போட்டி
news from Dailythanthi

சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயிலில் அக்டோபர் 2-ந்தேதி வரை முன்பதிவு முடிந்தது.நெல்லை - சென்னை இடையிலான வந்தே பார...
25/09/2023

சென்னை-நெல்லை இடையிலான வந்தே பாரத் ரெயிலில் அக்டோபர் 2-ந்தேதி வரை முன்பதிவு முடிந்தது.
நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி நேற்று நெல்லையில் காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார். தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் அமல்படுத்தப்பட்ட வந்தே பாரத் ரெயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
புதிய ரெயில் சேவை நேற்று தொடங்கப்பட்டதால் பயணிகள் இல்லாமல் ரெயில் இயக்கிப் பார்க்கப்பட்டது. நேற்று மதியம் 12.30 மணிக்கு நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திலிருந்து புறப்பட்டு இரவு 10.30 மணியளவில் எழும்பூர் ரெயில் நிலையம் வந்தடைந்தது.
இதைத்தொடர்ந்து, இன்று வழக்கம்போல் பயணிகள் ரெயில் சேவை தொடங்குகிறது. முதல் பயணிகள் சேவையாக சென்னை எழும்பூரிலிருந்து இன்று மதியம் 2.50 மணிக்கு வந்தே பாரத் ரெயில் புறப்பட்டு இரவு 10.40 மணிக்கு நெல்லை சென்றடையும். அந்த வகையில், ரெயில் டிக்கெட் முன்பதிவு நேற்று முன்தினம் தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய நிலையில் எழும்பூரில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் போட்டிப் போட்டுக் கொண்டு முன்பதிவு செய்தனர். இதனால், வரும் அக்டோபர் மாதம் 2-ந்தேதி வரையில் சாதாரண ஏ.சி. சேர் கார் மற்றும் எக்சிகியூடிவ் சேர் கார் இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். நாளை செவ்வாய்க்கிழமை இந்த ரெயில் சேவை கிடையாது என்பதால் மறுமார்க்கமாக 27-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணிக்கு ரெயில் சேவை தொடங்கப்படும்.
#சென்னை #நெல்லை #பாரத் #பாரத்ரெயில் #பிரதமர்

தீபாவளி ADS / OFFERS வரவேற்கப்படுகிறதுTAMILNADUதீபாவளி ஆஃபர் GET 50% OFFERஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் குறைந்த செலவ...
21/09/2023

தீபாவளி ADS / OFFERS வரவேற்கப்படுகிறது
TAMILNADU
தீபாவளி ஆஃபர் GET 50% OFFER
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் குறைந்த செலவில் விளம்பர செய்ய
CALL NOW : 8012626555

#விளம்பரம்

'நிபா' வைரசுக்கு 2 பேர் பலி எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்புகேரளாவில் ‘நிபா’ வைரசுக்கு 2 பேர் பலியான நி...
14/09/2023

'நிபா' வைரசுக்கு 2 பேர் பலி எதிரொலி: தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு
கேரளாவில் ‘நிபா’ வைரசுக்கு 2 பேர் பலியான நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். இதனையடுத்து தமிழக - கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். ஊட்டி, கொரோனாவின் கோரத்தாண்டவத்தில் இருந்து மக்கள் மீண்டு வந்து விட்டனர். ஆனால் அவ்வப்போது புதுப்புது வைரஸ் நோய்கள் மக்களை அச்சுறுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் தற்போது 'நிபா' வைரஸ் பரவத்தொடங்கி உள்ளது.
2 பேர் பலி கோழிக்கோடு மாவட்டத்தில் 49, 40 வயது மதிக்கத்தக்க 2 பேர் 'நிபா' வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 4 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. நோய் பரவல் கேரள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கோழிக்கோடு மாவட்டத்தில் 7 ஊராட்சிகளில் 43 வார்டுகள் நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளாகவும், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
முககவசம் கட்டாயம் இந்த பகுதிகளில் பொதுமக்கள் உள்ளே செல்லவும், வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இங்கு போலீசார் தடுப்புகள் வைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய உணவு பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகிறது. ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள் 24 மணி நேரமும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
உள்ளாட்சித்துறை அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவலகங்கள் மட்டும் குறைந்த ஊழியர்களுடன் ஆன்லைன் மூலம் செயல்படும். தனியார் மற்றும் பொது வங்கிகள், பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இந்த வழியாக செல்லும் பஸ்கள் நிபா வைரஸ் அறிகுறி தென்பட்ட இடங்களில் நிறுத்த அனுமதி இல்லை. கோழிக்கோடு மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் முககவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. நடமாடும் பரிசோதனை குழு மேலும் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும் மக்கள் உடனடியாக கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அங்கு வைரஸ் நோய் தொடர்பான ஆய்வகத்தில் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அங்கு தனி வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. நேற்று கோழிக்கோடு அரசு மருத்துவமனைக்கு 3 பேர் காய்ச்சல் அறிகுறியுடன் வந்தனர். அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியானது. இந்தநிலையில் கேரளாவில் 'நிபா' வைரஸ் பரவலை தடுக்கவும், தடுப்பு பணிகளை கண்காணிக்கவும் மத்திய சுகாதார குழு கோழிக்கோட்டுக்கு சென்றது, மேலும் புனேயில் உள்ள வைரலாஜி ஆய்வகத்தில் இருந்து நடமாடும் (மொபைல்) பரிசோதனை குழு கோழிக்கோட்டுக்கு விரைந்து உள்ளது. இந்த குழுவினர் மாநில சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட உள்ளனர். எல்லையில் கண்காணிப்பு தமிழகத்திற்குள் 'நிபா' வைரஸ் பரவாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி கேரள மாநிலத்தையொட்டிய பகுதிகளான நீலகிரி, தென்காசி, தேனி, குமரி மாவட்டங்களில் உள்ள தமிழக-கேரள எல்லை சோதனை சாவடிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனை நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள சோதனை சாவடியிலும், தென்காசி மாவட்டம் புளியரை சோதனை சாவடியிலும் கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் நிறுத்தி பரிசோதனை செய்து அனுமதிக்கிறார்கள். கோவை-கேரள எல்லையில் வாளையாறு உள்ளிட்ட 11 சோதனை சாவடிகளில் மருத்துவ குழுவினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இவர்கள் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வருபவர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்த பின்னரே கோவைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். பரிசோதனையில் காய்ச்சல் இருப்பது தெரியவந்தால் அவர்களை மீண்டும் கேரளாவிற்கு திருப்பி அனுப்பிவைக்கப்படுகிறார்கள். புளியரை புளியரை சோதனை சாவடியில் இந்த பணிகளை தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கேரளாவில் இருந்து வந்த அம்மாநில அரசு பஸ்சில் கலெக்டர் ஏறி, பயணிகளிடம் 'நிபா' வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. தனிமைப்படுத்த உத்தரவு இதேபோல் குமரி மாவட்டத்தில் உள்ள கேரள எல்லையிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதுதவிர 'நிபா' வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் முககவசம் அணிய வேண்டும், கேரளாவில் இருந்து வருபவர்களை அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தவும் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டு உள்ளார். அமைச்சர் பேட்டி இதற்கிடையே நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் 'நிபா' வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. கேரளாவில் 'நிபா' வைரஸ் பாதிப்பு எதிரொலியாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின் பேரில், தமிழக-கேரள எல்லைகளில் சோதனை மற்றும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதேபோல் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தென்காசி உள்பட 6 மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
#நிபாவைரஸ் #தமிழகம் #கேரளம் #தீவிரகண்காணிப்பு #கோழிக்கோடு #சுகாதாரத்துறைஅதிகாரிகள் #அரசுமருத்துவகல்லூரி #பொதுமக்கள் #வங்கிகள் #பள்ளி #கல்லூரிகள்
News From Dailythanthi

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்:பெண்கள் இரட்டையர் பிரிவில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.கோலூன், ஹாங...
14/09/2023

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்:பெண்கள் இரட்டையர் பிரிவில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
கோலூன், ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள கோலூன் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் பிரியன்ஷூ ரஜாவத் 13-21, 14-21 என்ற நேர்செட்டில் ஜப்பானின் கன்டா சுனியமாவிடம் தோல்வி கண்டு வெளியேறினார். மற்றொரு ஆட்டத்தில் சீன தைபேயின் சு லி யங்கை எதிர்த்து களம் இறங்க இருந்த இந்திய வீரர் லக்ஷயா சென் கடைசி நேரத்தில் விலகினார்.
பெண்கள் பிரிவில் இந்திய வீராங்கனை மாள்விகா பன்சோத் 14-21, 12-21 என்ற நேர்செட்டில் சீனாவின் ஜாங் யி மானிடம் பணிந்தார். மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 18-21, 10-21 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் யோனி லியிடம் வீழ்ந்தார். இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
அதே சமயம் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி ஜோடி 21-19, 21-19 என்ற நேர்செட்டில் சீனதைபேயின் லீ சியா ஹின்-டெங் சுன் சன் இணையை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
#ஹாங்காங் #ஓபன்பேட்மிண்டன் #பெண்கள்இரட்டையர் #சீனா #இந்தியஅணி
News From Dailythanthi

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ராஜேந்திரா பள்ளிக்கூட அணி முதல் இடம்மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ராஜேந்தி...
11/09/2023

மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ராஜேந்திரா பள்ளிக்கூட அணி முதல் இடம்
மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ராஜேந்திரா பள்ளிக்கூட அணி முதல் இடம் பிடித்தது. ஈரோடு ஈரோட்டில் நடந்த பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில் ராஜேந்திரா பள்ளிக்கூட அணி முதல் இடத்தை பிடித்தது.
கூடைப்பந்து போட்டிஈரோடு மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில், பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டி ஈரோடு திண்டல்மேட்டில் உள்ள இஷான் ஹைலேண்ட் அரினா மைதானத்தில் நடந்தது. தொடக்க நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட கூடைப்பந்து கழக தலைவரும், சுதா மருத்துவமனை நிர்வாக இயக்குனருமான டாக்டர் சுதாகர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
14 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிக்கூடங்களை சேர்ந்த அணியினர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். முடிவில் 14 வயதுக்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில், வடுகபட்டி ராஜேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கூட அணி முதல் இடத்தையும், ஈரோடு சி.எஸ். அகாடமி பள்ளிக்கூட அணி 2 -ம் இடத்தையும், ஈரோடு டிப்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளிக்கூட அணி 3-ம் இடத்தையும் பிடித்தது.
பரிசளிப்பு விழா இதேபோல் 14 வயதுக்குட்பட்டோர் மாணவர்கள் பிரிவில் ஈரோடு சி.எஸ். அகாடமி அணி முதல் இடத்தையும், ஈரோடு கார்மல் மெட்ரிக் பள்ளிக்கூட அணி 2-ம் இடத்தையும், கோபி சாரதா மெட்ரிக் மேல்நிலை பள்ளிக்கூட அணி 3-ம் இடத்தையும் தட்டிச்சென்றனர். மேலும் 19 வயதுக்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் வடுகப்பட்டி ராஜேந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கூட அணி முதல் இடத்தையும், டிப்ஸ் சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூட அணி 2-ம் இடத்தையும், டிப்ஸ் இன்டர்நேஷனல் பள்ளிக்கூட அணி 3-ம் இடத்தையும் பிடித்தனர். 19 வயதுக்குட்பட்டோர் மாணவர் பிரிவில் ஈரோடு பி.வி.பி. பள்ளிக்கூட அணி முதல் இடத்தையும், வடுகப்பட்டி ராஜேந்திரா பள்ளிக்கூட அணி 2 -ம் இடத்தையும், ஈரோடு டிப்ஸ் சி.பி.எஸ்.சி. பள்ளிக்கூட அணி 3-ம் இடத்தையும் தட்டிச் சென்றனர்.
அதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற அணிகளுக்கு, சிக்மா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தர்மராஜ், ராஜேந்திரா பள்ளிக்கூட தாளாளர் செந்தில் ஆகியோர் கோப்பை மற்றும் பரிசுகளையும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளையும் வழங்கினர். விழாவில் ஈரோடு மாவட்ட கூடைப்பந்து கழக செயலாளர் எஸ்.கோபிநாத், பொருளாளர் பி.எஸ்.வருண்குமார் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
#மாவட்டஅளவிலான #கூடைப்பந்து #போட்டி #ராஜேந்திரா #பள்ளிக்கூடஅணி #ஈரோடு #சிக்மா

News From Dailythanthi

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Cuddalore Seithigal - கடலூர் செய்திகள் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share