03/09/2022
உயிருக்காகப் போராடும்
ஏழையின் இருண்ட வாழ்வில்
ஒளியேற்றுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
-ஏ.ஷபாஅத் அஹமட்-
நிந்தவூர் 17ம் பிரிவில் வசித்துவரும் 34 வயது நிரம்பிய முகம்மது அனிபா
தில்ஷாத் அக்றம் என அழைக்கப்படும் சகோதரர் தனது இரண்டு சிறுநீரகங்களும்
பழுதடைந்த நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.
அன்றாட தினக்கூலிக்கு தொழில் செய்துவந்த இவர் வேதனைகளுக்கு மத்தியில்
வாழ்வா,சாவா என போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார்.
இவரைப் பரிசோதனை செய்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் இவருக்கு உடனடியாக சிறுநீரக சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டுமென்று பரிந்துரை செய்துள்ளார்.
நிரந்தர வருமானமோ அன்றி பொருளாதார வசதிகள் இல்லாத நிலையில் வாழ்க்கையுடன் போராடும் இவருக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்வதற்கு சுமார் எழுபத்தியைந்து இலட்சம் ரூபாய் தேவைப்படுமென மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வளவு பெரிய தொகையை எப்படிப் பெறுவது எனத் தெரியாத நிலையில் திகைத்துப்போன நிலையில் இவரும்,இவரது குடும்பத்தினரும் மலைத்துப்போயிருக்கிறார்கள்.
நமது முகநூல் உறவுகள் கடந்த காலங்களில் இவ்வாறானவர்களுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்கள். முகநூலில் இவ்வாறான செய்திகளை ஏனையவர்களுக்கும் தெரியப்படுத்துவதற்காக தங்களது முகநூல்களில் பகிர்ந்துகொண்டுமிருக்கிறார்கள்.இதனால் பலர் நிவாரணமும் பெற்றிருக்கிறார்கள்.
எனவே,நல்மனம் படைத்த பரோபகாரிகள் இந்த ஏழையின் வாழ்வில் ஒளியேற்றுங்கள்.
தங்களாலான உதவியைச் செய்யுங்கள். இத்தகவலை உங்களது முகநூலிலும் பகிருங்கள்.ஒரு நன்மையான காரியத்திற்கு உங்கள் பகிர்வுகள் உதவட்டும்.
இவரது நிலபற்றி அறிந்துகொள்ள பின்வரும் தொலைபேசி எண்களை அழுத்துங்கள்.
077 2320 701
076 7788701
077990 1962
உங்கள் பங்களிப்புக்களை சேர்க்கவேண்டிய வங்கிக் கணக்கு விபரங்கள்-
1. M.A.T.Akram
A/C No. 118552507638
Sampath Bank, Nintavur.
2. A.R.Ramsani
A/C No.72779778
Bank of Ceylon,Nintavur.
சகோதரன் தில்ஷாத் அக்றம் பூரண குணம்பெற நிந்தவூர் -எனது மண் பிராரத்திக்கிறது.