09/08/2017
ஊட்டியில் முகநூல் நண்பர்கள் சந்திப்பு -முக்கிய அறிவிப்பு
நட்பின் சங்கமம் உதயம்
வருகின்ற 30 .9 .2017 சனி 1 .10 .2017ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நட்பின் சங்கமம் என்ற பெயரில் முகநூல் நண்பர்கள் சந்திப்பு நடைபெற உள்ளது.முதல் சந்திப்பு ஊட்டியில் நடைபெற இருக்கிறது.அடுத்த சந்திப்புகள்
பாண்டிச்சேரி-கொடைக்கானல்-கேரளா ஆகிய இடங்களில் ஆண்டுக்கு இருமுறை நடைபெற இருக்கிறது.சாதி-மதம்-இனம்-மொழி -நிறம் -அரசியல் என்ற அனைத்து எல்லைகளையும் கடந்து நண்பர்கள் சங்கமித்து ஒருவருக்கொருவர் பரஸ்பர நட்பை வளர்த்துக் கொள்ளும் வகையில் இந்த நட்பின் சங்கமம் நடைபெற உள்ளது.
ஊட்டியில் செப்டம்பர் 30 ,அக்டோபர் 1 சனி-ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த சந்திப்பில் நண்பர்களின் கலந்துரையாடல்,கிராமிய கலை நிகழ்ச்சி,ஒவ்வொருவரின் வாழ்க்கை சம்பவங்களை விளக்கும் நிகழ்ச்சிகள்,முகநூல் நட்பின் அனுபவங்கள்,அறுசுவை உணவு,இவற்றுடன் இயற்கை அழகு கொஞ்சும் ஊட்டியில் நட்பின் சங்கமம் தொடங்கப்பட இருக்கிறது.இந்த சந்திப்பில் சாதி,மத,அரசியல் கண்டிப்பாக இருக்காது.100 நண்பர்கள் தனியாகவும் குழுவாகவும் தங்கவும்,உணவு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் செய்யவும் திருவண்ணாமலை நண்பர் விஜய் ஆனந்த் அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
நட்பின் சங்கமத்தின் மூலம் பரஸ்பர நட்பு,முகம் அறியாத அனைவரையும் அகம் மகிழ செய்யும் அன்பின் வெளிப்பாடு என நம்மை
ஒருங்கிணைக்கும் இந்த முதல் சந்திப்பில் முன்பதிவு நடைபெற்று வருகிறது.இந்த முகநூலில் வாட்ஸ் ஆப் எண்ணை பதிவு செய்த ஒவ்வொருவருக்கும்,நண்பர் விஜய் ஆனந்த் தலைமையிலான குழு தொடர்பு கொண்டு நட்பின் சங்கமத்தின் முழு விவரத்தை தெரிவிப்பார்கள்.
மேலும் நட்பின் சங்கமம் என்ற பெயரில் வாட்ஸ் ஆப் குழு தொடங்கப்பட்டு உள்ளது.அந்த குழுவில் இங்கே பதிவு செய்த எண்களை இணைத்து ஊட்டி நிகழ்ச்சி குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும்..
ஊட்டியில் உருவாகும் ''நட்பின் சங்கமம்''என்ற நண்பர்கள் சந்திப்புக்கான
கூட்டத்தில் முன்பதிவு செய்து கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் அழைப்பிதழ் மற்றும் அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும்.
அழைப்பிதழ் மற்றும் அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டுமே இந்த சந்திப்பில் பங்கேற்பார்கள்.
எனவே முகநூல் நண்பர்கள் அனைவரும் ஊட்டி நண்பர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள விரும்பினால் இம்மாதம் 20 .8 .2017 க்குள் உங்களின் வாட்ஸ் ஆப் எண்ணுடன் இங்கே பதிவு செய்யலாம்.
இப்படிக்கு
நட்பின் சங்கமம்.
ஊட்டி நண்பர்கள் சந்திப்பு குழு