Kalmunai Daily

  • Home
  • Kalmunai Daily

Kalmunai Daily Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kalmunai Daily, Media/News Company, .

கல்முனை நகர் ஒரு வழிப்பாதை இரு வழிப்பாதையாக நாளை திறப்புகல்முனை நகர் வர்த்தகர்கள் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எ...
22/05/2024

கல்முனை நகர் ஒரு வழிப்பாதை இரு வழிப்பாதையாக நாளை திறப்பு

கல்முனை நகர் வர்த்தகர்கள் திகாமடுல்ல பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கலமுனை நகர் பிரதேசத்தில் உள்ள ஒரு வழிப் பாதை இரு வழிப் பாதையாக நாளை திறக்கப்படவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர பகுதிகள் உட்பட ஏனைய இடங்களின் பொதுப் போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான விசேட கலந்துரையாடல் இன்று தனியார் விடுதியில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ரம்சீன் பக்கீர் தலைமையில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி.எம். எல். புத்திக நெறிப்படுத்தலில் ஆரம்பமானதுடன் அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.எச்.எம்.என் ஜயபத்ம பிரதம அதிதியாக கலந்து கொண்டு பல்வேறு விளக்கங்களை வழங்கினார்.அத்துடன் கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபை பகுதியில் ஒரு வழி பாதையாக காணப்பட்ட வீதியினை இரு வழி பாதையாக மாற்றுவதற்கான நடவடிக்கையும் ஏகமனதாக இக்கலந்துரையாடலில் கலந்து கொண்ட துறைசார் அதிகாரிகளின் ஆலோசனையுடன் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கமைய நாளை (23) காலை முதல் குறித்த ஒரு வழிப் பாதை ( டமாஸ் ஜூவலரி சந்தியில் இருந்து கொமர்சியல் வங்கி வரையான ஒரு வழிப்பாதை) இரு வழியாக மாற்றப்பட்டு பொதுப்போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்படவுள்ளது. இரு வழியாக மாற்றப்படவுள்ள வீதியின் இரு மருங்கிலும் உள்ள சட்ட விரோத தரிப்பிடங்கள் உள்ளிட்ட ஏனைய விடங்களும் ஆராயப்பட்டன.மேலும் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சேதமடைந்து காணப்படும் வீதிகள் உள்ளக வீதிகள் பாலங்களை திருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இக்கலந்துரையாடலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் விபத்துக்களை குறைப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பினை பெரிதும் எதிர்பார்ப்பதாகவும் வீதி போக்குவரத்து தடைகள் மற்றும் சட்டவிரோத வாகன தரிப்பிடங்கள் பாதசாரிகளுக்கு இடையூறாக உள்ள இடங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு அவற்றை அகற்றுவதற்கும் நிவர்த்தி செய்வதற்கும் சம்பந்தப்பட்ட துறை சார் தரப்பினரை அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கேட்டுக்கொண்டார்.

இது தவிர போக்குவரத்து துறையில் காணப்படும் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் செயற்திறனின்மையால் பேருந்து சாரதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவு சாய்ந்தமருது பெரியநீலாவணை பொலிஸ் பிரிவில் உள்ளடங்குகின்ற பிரதான வீதிகள் உள்ளக வீதிகளின் திருத்த வேலைகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டு விபத்துக்களை குறைப்பதற்கான செயற்பாடுகளும் அக்கலந்துரையாடலில ஆராயப்பட்டன.

மேலும் ஆண்டு தோறும் ஏற்படுகின்ற விபத்தின் தன்மைகள் உயிரிழப்புகள் காயமடைதல் தொடர்பிலும் ஆராயப்பட்டு சட்டவிரோதமாக பொதுப் போக்குவரத்தை சீர்குலைத்து உயிர் சேதத்தை ஏற்படுத்தும் செயலில் ஈடுபடும் நபர்களை இனங்கண்டு கைது செய்ய பொலிஸார் உடனடியான நடவடிக்கை எடுப்பது தொடர்பிலும் இங்கு கருத்து தெரிவிக்கப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.எல்.அஸ்மி, கல்முனை பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜௌபர், அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி தேசப்பிரிய பத்ரன, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித்தலைவரும்,திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸின் பிரத்தியேக செயலாளர் நௌபர் ஏ.பாவா, பாராளுமன்ற உறுப்பினரின் ஆலோசகர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பிரதான பொறியியலாளர், இலங்கை மின்சார சபை ,இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், நீர் வழங்கல் வடிகால் அமைப்பு சபை உத்தியோகத்தர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், அம்பாறை மாவட்டத்தின் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

29/04/2024

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் அல்ல, அது ஒரு உப பிரதேச செயலகம் மட்டுமே அரசாங்க அதிபர் தெளிவுபடுத்துகிறார்.

காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனை வலயக்கல்வி அலுவலகம் மூன்று மில்லியனுக்கு மேல் நிதி உதவி(நூருல் ஹுதா உமர்) கல்முனை வலய...
22/04/2024

காஸா சிறுவர் நிதியத்துக்கு கல்முனை வலயக்கல்வி அலுவலகம் மூன்று மில்லியனுக்கு மேல் நிதி உதவி

(நூருல் ஹுதா உமர்)

கல்முனை வலயக் கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் ஆகியோரின் வழிகாட்டலில் காஸா சிறுவர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி நிதியத்திற்கு கல்முனை வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்வி சாரா ஊழியர்களின் நிதிப்பங்களிப்பில் ரூபா 3,128,500/- நிதியினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று (22) கல்முனை வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்றது.

வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் அவர்கள் குறித்த தொகைக்கான ஆவணத்தை கணக்காளர் வை.ஹபீபுள்ளாஹ் அவர்களிடம் பிரதி கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்), உதவிக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் முன்னிலையில் கையளித்தார்.

இந்நிகழ்வில் பிரதி கல்விப் பணிப்பாளர் (நிருவாகம்) எம்.எச். ஜாபீர், உதவிக்கல்வி பணிப்பாளர்களான யூ.எல். றியால், எஸ். சஞ்சீவன்,எம்.எல்.எம். முத்தர்ரிஸ் கல்முனை வலய பாடசாலை அதிபர்கள், பிரதி, உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் இப்தார் நிகழ்வுகல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புனித இப்தா...
04/04/2024

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் இப்தார் நிகழ்வு

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் புனித இப்தார் நிகழ்வு நேற்று (03) பணிமனையின் கேட்போர்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வை சகல பிரிவுத்தலைவர்களும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததுடன் பணிமனையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

கல்முனையில் டியூசன் வகுப்புகளை இடைநிறுத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தல்.!(அஸ்லம் எஸ்.மெளலானா)கல்முனை மாநகர சபை ஆட்புல எல்ல...
03/04/2024

கல்முனையில் டியூசன் வகுப்புகளை
இடைநிறுத்துமாறு மாநகர சபை அறிவுறுத்தல்.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்முனை மாநகர சபை ஆட்புல எல்லையினுள் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களில் தரம்-01 தொடக்கம் தரம்-10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் நாளை வியாழக்கிழமை ஏப்ரல்-04 முதல் 15 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கல்முனை மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்கள் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

முஸ்லிம்களின் புனித நோன்பு மற்றும் தமிழ், சிங்கள புது வருடப் பிறப்பு போன்ற பல முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளினைக் கொண்ட இம்மாதமானது அதிக உஷ்ணம் நிறைந்ததாக காணப்படுகின்றது.

இருந்த போதிலும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பொருத்தமற்ற நேரங்களில் தொடர்ச்சியான வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருவதானது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பொதுமக்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கும் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துவதாக மத அமைப்புக்கள் மற்றும் பொது மக்களிடம் இருந்து எமக்கு தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்று வருகின்றன.

இவற்றைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களிலும் தரம்-01 தொடக்கம் தரம்-10 வரையான மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் 2024.04.04 ஆம் திகதி தொடக்கம் 2024.04.15 ஆம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்தி ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்வதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதத்தின் பிரதிகள் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர், கல்முனை, சாய்ந்தமருது மற்றும் பெரிய நீலாவணை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கல்முனை மாநகர சபையின் முக்கிய அறிவித்தல்.!பிஸ்கால் காணி என்று அழைக்கப்படும் கல்முனை மாநகர சபைக்கு பாராதீனப்படுத்தப்பட்டு...
19/02/2024

கல்முனை மாநகர சபையின் முக்கிய அறிவித்தல்.!

பிஸ்கால் காணி என்று அழைக்கப்படும் கல்முனை மாநகர சபைக்கு பாராதீனப்படுத்தப்பட்டுள்ள அரச காணியானது சபையின் நிதி மூலமும் இயந்திராதிகள் மற்றும் ஆளணிகள் மூலமும் செப்பனிடப்பட்டு, மாநகர சபைக்கு சொந்தமான அரச வாகனங்களையும் பொது மக்களின் வாகனங்களையும் தரித்து வைப்பதற்கான தளமாக இன்று 2024.02.19 திங்கட்கிழமை முதல் பயன்படுத்தப்படுகிறது என்பதை அறியத்தருகின்றோம்

கல்முனை நகருக்கு வருகை தருகின்ற
பொது மக்கள் இந்த வாகனத் தரிப்பிடத்தை கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ள முடியும்.

மேலும், நீர்வழங்கல், தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் நிதியுதவியுடனும் கல்முனை மாநகர சபையின் நிதிப்பங்களிப்புடனும் கல்முனை பொது பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மலசல கூடத் தொகுதியானது எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மக்கள் பாவனைக்கு விடப்படவுள்ளது.

இதனை பஸ் நிலையத்திற்கு வருகின்ற பயணிகள் ஒரு தடவைக்கு 20 ரூபா கட்டணம் செலுத்தி பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் விசேட தேவையுடையோர் இச்சேவையினை இலவசமாக பெற்றுக் கொள்ள முடியும்.

அத்துடன் கல்முனை மாநகர சபையின் சேவைகளை ஒரே கூரையின் கீழ் (Onestop Service) வழங்கும் முகப்பு அலுவலகத்தின் நிதிச் சேகரிப்பு நடவடிக்கைகளை Online (நிகழ்நிலை) மூலமாக செலுத்துவதற்கான வேலைத் திட்டமும் முடிவுறும் தறுவாயில் உள்ளது.

எதிர்வரும் மார்ச் 01 ஆம் திகதி முதல் பொது மக்கள் தமது ஆதன வரிகள் உள்ளிட்ட சேவைக் கட்டணங்களை Online மூலமாக அலுவலகத்துக்கு வருகை தராமலேயே இலகுவாக செலுத்திக் கொள்ள முடியும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஏ.எல்.எம்.அஸ்மி
மாநகர ஆணையாளர்
கல்முனை மாநகர சபை

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 3D மாடலிங், ரோபோட்டிக் ஆய்வகம்(நூருல் ஹுதா உமர்)தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்பபீடத்...
12/12/2023

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் 3D மாடலிங், ரோபோட்டிக் ஆய்வகம்

(நூருல் ஹுதா உமர்)

தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழிநுட்பபீடத்தில் 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக் ஆய்வகம் துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு (TIKA) நிறுவன நிதியுதவியில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழிநுட்பபீடத்தின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்துறையானது அதிநவீன 3D மாடலிங் மற்றும் ரோபோட்டிக்ஸ் ஆய்வகத்தை நிறுவுவதற்குத்தேவையான அதிநவீன 3D பிரிண்டர், ரோபோடிக் கை உட்பட பல ரோபோடிக் உபகரணங்களை துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு (Turkish Cooperation and Coordination Agency -TIKA) நிறுவனத்திடமிருந்து வைபவ ரீதியாகப் பெற்றுக்கொண்டது.

இந்தக்கையளிப்பு நிகழ்வில், பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், தொழிநுட்பபீட பீடாதிபதி கலாநிதி யூ.எல்.மஜீத், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிநுட்பத்துறைத்தலைவர் ஆர்.கே.றிபாய் காரியப்பர், சிரேஷ்ட விரிவுரையாளரும் முன்னாள் துறைத்தலைவருமான கே.எம்.றிப்தி உட்பட பீடாதிபதிகள், திணைக்களத்தலைவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் TIKA இன் பிரதிநிதிகளான செவ்கி மெர்ட் பாரிஸ், ஜெய்னெப் பைராக் மற்றும் ஓயா துதுன்சு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு மேம்பட்ட தொழிநுட்பத்தின் பௌதீக பரிமாற்றத்தைக்குறித்தது மட்டுமன்றி, கல்வி மற்றும் தொழிநுட்ப முன்னேற்றத்துறையில் இரு நாடுகளுக்கிடையிலான கூட்டு முயற்சிகளை வலுப்படுத்துவதை அடையாளப்படுத்துவதாக உபவேந்தர் தனதுரையில் குறிப்பிட்டார்.

மேலும், இந்த நன்கொடையானது பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மற்றும் கல்வித் துறைகளில் மாற்றியமைக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் வலியுறுத்தினார்.

அத்தோடு, பல்கலைக்கழக வளாகத்தில் புதுப்பிக்கத்தக்க கதிரவ அமைப்பினை (Solar System) நிறுவுவதில் TIKA வின் ஆதரவைக்கோரினார், அக்கோரிக்கைக்குப் பதிலளித்த TIKA நிர்வாகிகள், தம்மாலான முழு ஒத்துழைப்புகளையும் வழங்குவோம் என உறுதி பகர்ந்தனர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கும் TIKA நிறுவனத்திற்குமிடையேயான இல்கூட்டு முயற்சி, இலங்கையில் அறிவியல், தொழிநுட்பக்கல்வியை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.

இவ்வுபகரணங்கள் ஆய்வாளர்களுக்கும் மாணவர்களுக்கும் நவீன தொழிநுட்பங்களுடன் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குவதோடு, புதுமையான தீர்வுகளை உருவாக்கவும் சவால்களைத் தீர்க்கவும் உதவும்.

இக்கூட்டு முயற்சியின் வெற்றி, இரு நாடுகளுக்குமிடையேயான உறவை மேம்படுத்தவும் இலங்கையில் அறிவியல், தொழிநுட்பத்தின் எதிர்காலத்தை பிரகாசமாக்கவும் உதவுமென்பதில் மாற்றுக்கருத்தில்லை என இங்கு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

கல்முனையில் மூத்த ஆலிம்கள் கௌரவிப்பு(எம்.என்.எம். அப்ராஸ்)அம்பாரை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் உள்ள மூத்த ஆலிம்களுக்கான...
09/12/2023

கல்முனையில் மூத்த ஆலிம்கள் கௌரவிப்பு

(எம்.என்.எம். அப்ராஸ்)

அம்பாரை மாவட்டம் கல்முனை பிரதேசத்தில் உள்ள மூத்த ஆலிம்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளைக் காரியாலயத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் அஷ்-ஷெய்க் அல்-ஆலிம் அல்முப்தி.ஏ.எல்.எம்.முர்ஷித்
(ஸஃதி,நஜ்மி) தலைமையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்முனை கிளைக் காரியாலயத்தில் நேற்று (08)இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக வெலிகம பாரி அரபுக் கல்லூரி அதிபர் அஷ்-ஷெய்க் அல்-ஆலிம். ஏ.ஆர்.அப்துர் ரஹ்மான் (மழாஹிரி)கலந்து கொண்டார்.

இதன் போது நீண்ட காலமாக ஆலிம்களாக கடமையாற்றிய மூத்த ஆலிம்களான,
அஷ்ஷெய்க்.எம்.எல்.முஹம்மத் சுல்தான்(கபூரி),
அஷ்-ஷெய்க்.இஸட்.முஹம்மத் நதீர் (ஷர்க்கி),அஷ்-ஷெய்க்.எம்.ஐ.முஹம்மத் ரபீக்,அஷ்-ஷெய்க் எஸ்.எம்.முஹம்மத் ஆரிப் (நத்வி),அஷ்-ஷெய்க்.எம்.எம்.உதுமாலெப்பை (நூரி),அஷ்-ஷெய்க்.யூ.எல்.சாகுல் ஹமீத் (ஹாமி),அஷ்-ஷெய்க்.ஏ.எம்.முபாறக் அப்துல் மஜீட் (கபூரி,மதனி),அஷ்-ஷெய்க்.யூ.எல்.எம்.இக்பால் (ஹாமி),அஷ்-ஷெய்க்.எஸ்.எச்.குதுபுத்தீன் (ஹாமி),அஷ்-ஷெய்க்.கே.எம்.ஹாறூன் (சலபி),அஷ்-ஷெய்க்.பி.எம்.நிஸாம்(ஹாஷிமி),அஷ்-ஷெய்க்.எம்.சி.அப்துஸ் ஸமட் (தப்லீகி),அஷ்-ஷெய்க்.ரி.ரிபானுத்தீன் (பலாஹி),அஷ்-ஷெய்க்.ஐ.எல்.வலியுல்லாஹ் (ஹாமி),அஷ்-ஷெய்க்.ஐ.எல்.நசீர் அஹமட் (நிழாமி)ஆகியோர் நினைவு சின்னம் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டனர்.

சாய்ந்தமருதில் காத்தான்குடி மாணவனுக்கு நடந்த அநீதியை நாம் கண்டிக்கிறோம்.கவலையை தெரிவிக்கிறோம்.சாய்ந்தமருது ஜம் இய்யத்துல...
07/12/2023

சாய்ந்தமருதில் காத்தான்குடி மாணவனுக்கு நடந்த அநீதியை நாம் கண்டிக்கிறோம்.

கவலையை தெரிவிக்கிறோம்.

சாய்ந்தமருது ஜம் இய்யத்துல் உலமா காத்தான்குடி வருகை தந்து காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சம்மேளனத்திடம் தெரிவிப்பு.

மாணவனுக்கு நீதி கிடைக்க முடியுமான அத்தனை உதவிகளையும சாய்ந்தமருது சார்பில் செய்ய ஆயத்தமாக இருப்பதாக வரும் தெரிவிப்பு

சாய்ந்தமருது ஜம் இய்யத்துல் உலமா சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரிச் சங்கம் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் காத்தான்குடி ஜம் இய்யத்துல் உலமா சபை பிரதிநிதிகள் காத்தான்குடி பள்ளி வாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று மாலை நடைபெற்ற போதே இதனை தெரிவித்தனர்.

(எம்.எஸ்.எம். நூர்டீன்)

புனித அல்-குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு.!!கல்முனை கிறீன்பீல்ட் முஹ்யித்தீன் மஸ்ஜிதினால் நடாத்தப்பட்டு வருகின்ற கிறீன்பீல்ட...
08/11/2023

புனித அல்-குர்ஆன் பிரதிகள் அன்பளிப்பு.!!

கல்முனை கிறீன்பீல்ட் முஹ்யித்தீன் மஸ்ஜிதினால் நடாத்தப்பட்டு வருகின்ற கிறீன்பீல்ட் “முஹையித்தீன் மஸ்ஜித் காதிரிய்யா” குர்ஆன் மத்ரஸாவில் ஓதும் மாணவர்களின் நலன்கருதி பள்ளிவாசல் நிருவாகிகளான நாங்கள் மாணவர்களுக்கான குர்ஆன் வசதிகளைப் பெற்றுத்தருமாறு ரஹ்மத் பவுண்டேசனிடம் கோரிக்கை விடுத்திருந்தோம்

எம்மால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக Y.W.M.A பேரவையின் ஒருங்கிணைப்பில்; கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும், ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களினால் குறித்த 70 மாணவர்களுக்கான புனித அல்-குர்ஆன் பிரதிகள் மாணவர்களுக்கு இன்று வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது முஹ்யித்தீன் மஸ்ஜிதினுடைய நிருவாகிகளான தலைவர் ரீ.ஏ.மஜீத், செயலாளர் எம்.எச்.ஏ.கரீம் (BA), பொருலாளர் ஏ.எம்.றியாஸ், நிருவாக உறுப்பினரான எம்.இஸ்மாயில் உட்பட ஏனைய நிருவாக உறுப்பினர்கள், உஸ்தாத்மார்களான கண்ணியத்திற்குரிய பைசால் மெளலவி மற்றும் முபாறக் மெளலவி, கண்ணியத்திற்குரிய உலமாக்கள், மாணவர்கள், எம்.சீ.எம்.இஸ்மாயில் (இளயம்பி காக்கா), பவுண்டேசன் உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள், மஹல்லாவாசிகள், ஊர்பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

வைத்தியசலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி(நூருல் ஹுதா உமர்)பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி...
07/11/2023

வைத்தியசலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி

(நூருல் ஹுதா உமர்)

பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறும் விடுதி (Paying Ward) அமைப்பதற்கான இடங்களையும் அங்கு இடம்பெற்று வரும் கட்டிட நிர்மாணப்பணிகள் உள்ளிட்ட சகல அபிவிருத்திப்பணிகளையும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையிலான குழுவினர் நேற்று (06) பார்வையிட்டனர்.

இதன் போது, பிராந்திய திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிர், பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் எம்.ஐ.எம்.றஹீம், பொறியியலாளர்கள், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.

சீன அரசின் நிதியுதவில் சகல வசதிகளையும் கொண்ட மூன்று மாடிக்கட்டிடம் மற்றும் அவச சிகிச்சை பிரிவு நிருவாகப் பிரிவு வசதிகளைக் கொண்ட கட்டிட தொகுதி என பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூரின் முயற்சியினால் பாகிஸ்தான் தூதுவவரினால் தையல் இயந்திரங்கள் வழங்கி வ...
06/11/2023

கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூரின் முயற்சியினால் பாகிஸ்தான் தூதுவவரினால் தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு ..!

(எம்.என்.எம்.அப்ராஸ்)

பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாறூக் புர்கி மற்றும் அவரது ஆலோசகரான பைசல் அலி கான் ஆகியோர் கல்முனை மாநகர முன்னாள் பிரதிமுதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூரின் அழைப்பின் பேரில் இரண்டாவது தடவையாக இன்று (06) கல்முனைக்கு விஜயம் மேற்கொண்டு பொது மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முகமாக தேவையுடைய தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு ஒரு தொகுதி தையல் இயந்திரங்களை வழங்கி வைத்தார்.

குறித்த இந்நிகழ்வானது கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தேவையுடைய பொது மக்களின் வாழ்வாதார உதவியின் அங்கமாக குறித்த தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார
வசிப்பிடங்களை பார்வையிட்டு அவர்களது தேவைப்பாடுகளையும் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.

தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய உயர்ஸ்தானிகர்,

அம்பாறை மாவட்டத்துக்கு நான் இன்று விஜயம் மேற்கொள்வது இரண்டாவது தடவையாகும் அம்பாறை மாவட்டத்துக்கு நான் முதன்முதலாக மூன்று மாதங்களுக்கு முன்னர் ரஹ்மத் மன்சூர் அவர்களின் அழைப்பின் பெயரில் வருகை தந்து பொது மக்களை பார்வையிட்டு ரஹ்மத் மன்சூரின் சேவையில் தான் மிகவும் சந்தோஷமும், திருப்தியும் அடைந்ததாகவும், அதன் பிரகாரமே இன்று (06) இரண்டாவது விஜயம் மேற்கொண்டதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் எதிர்காலத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மூலம் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் அடையாளப்படுத்துகின்ற பயனாளர்களுக்கு தேவையான அனைத்துவித உதவிகளையும் அமைப்பின் ஸ்தாபகரும், முன்னாள் பிரதிமுதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் வழிகாட்டலில் செய்யவிருப்பதாகவும் இதன் போது நம்பிக்கை தெரிவித்தார்.

2.5 மில்லியன் பெறுதியான நீர்வசதிகள் அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் மூலம் உயர்ஸதானிகரினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

மேலும் இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள், பயனாளர்கள், நலன்விரும்பிகள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனையில் ஆர்ப்பாட்டம்!(எம். என். எம். அப்ராஸ்)பலஸ்தீன் மக்களுக்காக ஆதரவு தெரிவித...
03/11/2023

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கல்முனையில் ஆர்ப்பாட்டம்!

(எம். என். எம். அப்ராஸ்)

பலஸ்தீன் மக்களுக்காக ஆதரவு தெரிவித்து இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம், பேரணி கல்முனையில் இன்று (03) இடம்பெற்றது.

ஜும்ஆத் தொழுகையைத்தொடர்ந்து
கல்முனை முகைதீன் ஜும்மாபள்ளிவாசல் அருகில் உலமாக்கள், கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்களின் நிருவாகிகள், கல்முனை பொது அமைப்புக்கள், பெருமளவிலான பொது மக்கள் சமூக செயற்பாட்டாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு இஸ்ரேலின் கொடூரத்தாக்குதலைக் கண்டித்து பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை வெளியிட்டதுடன், மேலும் கண்டன பேருரை மற்றும் பலஸ்தீன மக்களுக்காக தூஆ பிராத்த்னையும் இதன் போது இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபைக்கு KDMC அமைப்பினால் முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு.!(அஸ்லம் எஸ்.மெளலானா)கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்...
01/11/2023

கல்முனை மாநகர சபைக்கு KDMC அமைப்பினால் முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு.!

(அஸ்லம் எஸ்.மெளலானா)

கல்முனை மாநகர சபையின் 2024ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு "கல்முனை அபிவிருத்திக்கும் முகாமைத்துவத்திற்குமான சபை" (KDMC) பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.

அமைப்பின் தலைவர் சட்டத்தரணி யூ.எம். நிசார் தலைமையில் செயலாளர் ஏ.எல்.அப்துல் மஜீட் (ADP) உள்ளிட்ட குழுவினர் இன்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி அவர்களை சந்தித்து, இதனைக் கையளித்துள்ளனர்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டுக்கு சமூக நலன்புரி மேம்பாட்டு அமைப்பினால் முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு.!கல்முனை மாநகர சபையி...
01/11/2023

கல்முனை மாநகர சபையின் பட்ஜெட்டுக்கு சமூக நலன்புரி மேம்பாட்டு அமைப்பினால் முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு.!

கல்முனை மாநகர சபையின் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்டத்திற்கு கல்முனை சமூக நலன்புரி மேம்பாட்டு அமைப்பு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய
முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளது.

அமைப்பின் தலைவர் ஹமீட் எஸ். லெப்வை தலைமையிலான குழுவினர்,
மாநகர சபையின் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம் மற்றும் பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி ஆகியோரிடம் இதனைக் கையளித்துள்ளனர்.

இறக்குமதி செய்ததாக கூறப்படும் தடுப்பூசி தொடர்பில் அதிர்ச்சி தகவல்!இலங்கைக்கு தனியார் நிறுவனமொன்றினால் தரமற்ற ஹியூமன் இம்...
01/11/2023

இறக்குமதி செய்ததாக கூறப்படும் தடுப்பூசி தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

இலங்கைக்கு தனியார் நிறுவனமொன்றினால் தரமற்ற ஹியூமன் இம்யூனோகுளோபுலின் மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டு போலி ஆவணங்களை தயாரித்து அரச வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படுவதாக சிவில் அமைப்புகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அண்மையில் முறைப்பாடு செய்திருந்தன.

குறித்த நிறுவனம், 22,500 குப்பிகள் அடங்கிய நோய் எதிர்ப்பு தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதுடன், 130 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுப் திணைக்களம், அண்மையில் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் அறிக்கை செய்ததையடுத்து, சந்தேகநபர்களைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் பணிப்பாளர் என கூறப்படும் 57 வயதான சுதத் ஜானக பெர்னாண்டோ நேற்று (31) பிற்பகல் கொம்பனித்தெரு பிரதேசத்தில் குற்றப்புலனாய்வுப் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டனர்.

ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர் இன்று பிற்பகல் 1.00 மணியளவில் மாளிகாகந்த நீதவான் திருமதி லோச்சனா அபேவிக்ரம முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம், தடுப்பூசிகளை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தின் பிரகாரம், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், சீதுவ, ரத்தொலுவ பிரதேசத்தில் அமைந்துள்ள தொழிற்சாலையொன்றில் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக அறிவித்துள்ளது.

விநியோகஸ்தரால் 14 முறை மருத்துவ வழங்கல் பிரிவுக்கு 3,985 டோஸ் தடுப்பூசிகளை விநியோகத்துள்ளதாகவும் அதற்காக அவருக்கு மூன்று கோடியே அறுபத்து மூன்று லட்சத்து எண்பத்து மூவாயிரத்துக்கும் மேல் பணம் கொடுத்துள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

பயன்பாட்டிற்கு தடுப்பூசிகளை வெளியிடும் போது மருந்து ஒழுங்கப்படுத்தல் அதிகாரசபை தர சோதனையை கூட மேற்கொள்ளவில்லை எனவும், சுமார் 80% தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒவ்வாமை ஏற்பட்டமை பதிவானதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனைத்து சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதவான், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரே எனவும், இதில் தொடர்புடைய முக்கிய பொறுப்பாளர்கள் அரச பணியாளர்களாக இருக்கலாம் எனவும் திறந்த நீதிமன்றில் தெரிவித்தார்.

எனவே இந்த விசாரணைகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று உடனடியாக சந்தேக நபர்கள் அனைவரையும் தரம் பாராமல் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

இன்று (01) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரதான சந்தேகநபரின் பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். (அத தெரண)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கட்டிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!(எம்.என்.எம்.அப்ராஸ்)கல்முனை தெற்கு சு...
30/10/2023

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக கட்டிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பு!

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை பொது மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம்.அஸ்மி தலைமையில் இன்று (30) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகக் கட்டிடத்தை கையளித்தார்.

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு நிரந்தக் கட்டிட வசதிகள் இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்த நிலையில் சுகாதார அமைச்சினூடாக கல்முனை கிரீன்பீல்ட் வீட்டுத்திட்ட பகுதியில் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் உலக வங்கி நிதி உதவித்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட வேலைத்திட்டங்கள் 12 மில்லியன் ரூபாய் செலவில் பூர்த்தி செய்யப்பட்டு தற்போது புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மென்டலின் கொஸ்டா, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஐ.எல்.எம்.றிபாஸ்,திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர்.எம்.சீ.எம்.மாஹிர்,
தாய்,சேய் பொறுப்பு வைத்திய அதிகாரியும் கல்முனை தெற்கு சுகாதார முன்னாள் வைத்திய அதிகாரியுமான வைத்தியர் எம்.எச்.றிஸ்பின்,பொதுச் சுகாதார வைத்திய அதிகாரிகள்,சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள்,ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கல்முனைக் கிளையினால் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ நேரங்களில் கடையை மூடுமாறு சிகையலங்கரிப்பு நில...
30/10/2023

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கல்முனைக் கிளையினால் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ நேரங்களில் கடையை மூடுமாறு சிகையலங்கரிப்பு நிலையங்களின் (சலூன் கடை) சங்கத்திற்கு (04.10.2023) திகதி கடிதம் அனுப்பப்பட்டது.

இவ் வேண்டுதலை ஏற்று இனிவரும் காலங்களில் மு.ப 11:30 - பி.ப 02:00 மணி வரைக்கும் சலூன் கடைகளை மூடுவதாக அச்சங்கத்தினர் கடிதம் மூலம் அறிவித்துள்ளார்கள்.

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கல்முனை மக்கள் இன்று நடாத்திய போராட்டம்! பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை  மக்களின் போராட்டம...
27/10/2023

பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக
கல்முனை மக்கள் இன்று நடாத்திய போராட்டம்!

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனை மக்களின் போராட்டம் மற்றும் (துஆ) பிராத்தனையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று (27) கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில் இடம் பெற்றது.

பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் பல நாட்களாக தொடர்ந்து இடம் பெற்று வருகின்ற நிலையில் யுத்தத்தினால் இதுவரையில் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் மக்கள் உயிரிழந்துள்ளனர்.

பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக கல்முனையில் ஜும்ஆத் தொழுகையின் பின்னர் ஒன்று கூடிய பொது மக்கள் கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் அருகில் பல்வேறு சுலோகங்களை ஏந்தி அமைதியான முறையில் போராட்டம் செய்ததுடன் (துஆ) பிராத்தனையில் ஈடுபட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர்.

அத்துடன் கல்முனை முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசல் வளாகத்தில் இலங்கை மற்றும் பலஸ்தீன் கொடிகளையும் பொதுமக்கள் பறக்கவிட்டிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு எதிராக கல்முனை முஸ்லிம் மக்களில் சிலர் தமது உணர்வலைகளை இப்படியும் வெளிக்காட்டியிருந்தனர்.பொலிஸா...
27/10/2023

ஆக்கிரமிப்பு இஸ்ரேலுக்கு எதிராக கல்முனை முஸ்லிம் மக்களில் சிலர் தமது உணர்வலைகளை இப்படியும் வெளிக்காட்டியிருந்தனர்.

பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு வருகைதந்து இஸ்ரேல் கொடியை தம் வசம் எடுத்துக் கொண்டனர்.

கல்முனையில் மாபெரும் கண்டனப் பேரணி!பலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் கொடூரமான கொலைகளை கண்டித்து கல...
26/10/2023

கல்முனையில் மாபெரும் கண்டனப் பேரணி!

பலஸ்தீன் மக்களுக்கு எதிராக இஸ்ரேலினால் மேற்கொள்ளப்படும் கொடூரமான கொலைகளை கண்டித்து கல்முனை சிவில் அமைப்பு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை ( 27.10.2023 ) அதாவது வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகையை தொடர்ந்து கல்முனை முகைதீன் ஜும்மா பெரிய பள்ளிவாசல் முன்பாக கண்டன பேரணி ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை ஜும்ஆ மஸ்ஜித்களின் குத்பா விபரங்கள் | திகதி : 27/10/2023🕋 கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் :-🎤அஷ்ஷைக்...
26/10/2023

கல்முனை ஜும்ஆ மஸ்ஜித்களின் குத்பா விபரங்கள் | திகதி : 27/10/2023

🕋 கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் :-
🎤அஷ்ஷைக் அல்ஆலிம்,
MAM.ஜப்ரான் கௌஃஸி

🕋 கல்முனை நகர் ஜாமிஆ ஜும்ஆ பள்ளிவாசல் :-
🎤அஷ்ஷைக் அல்ஆலிம்,
MM.அஷ்பாக் அஹ்மத் ஸஃதி

🕋 முஹம்மதிய்யாஹ் ஜும்ஆ பள்ளிவாசல் :-
🎤அஷ்ஷைக் அல்ஆலிம்,
AC.தஸ்தீக் ஹாமி, மதனி

🕋 றஹ்மான் ஜும்ஆ பள்ளிவாசல்
🎤அஷ்ஷைக் அல்ஆலிம்,
முப்தி ALM.முர்ஷித் ஸஃதி,நஜ்மி

🕋 ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல்
🎤 அஷ்ஷைக் அல்ஆலிம்,
M.அப்துல் கனி ஹாமி

🕋 மஸ்ஜிதுல் ஹாமி பள்ளிவாசல் :-
🎤அஷ்ஷைக் அல்ஆலிம்,
MFM.றஹ்மதுல்லாஹ் ஸஃதி

🕋 நூராணிய்யாஹ் ஜூம்ஆ பள்ளிவாசல்
🎤 அஷ்ஷைக் அல்ஆலிம்,
MRM.முஆதிர் முஸ்தபி

🕋 இஸ்லாமபாத் அக்பர் ஜும்ஆ பள்ளிவாசல் :-
🎤அஷ்ஷைக் அல்ஆலிம்,
M.அன்வர் குதுபி

- ஊடக பிரிவு -
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா,
கல்முனை கிளை

இனவாதத்தின் குறிகாட்டியே தறிக்கப்பட்ட மரம் காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் கண்டனம் இ...
17/10/2023

இனவாதத்தின் குறிகாட்டியே தறிக்கப்பட்ட மரம்

காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் கண்டனம்

இன்று 16/10/2023 அன்று மட்டக்களப்பு ஜாமியுஸ் ஸ்லாம் பள்ளிவாயலுக்குக் ஒதுக்கப்பட்ட காணியில் கம்பீரமாக நெஞ்சை நிமிர்த்தி நின்ற பாரம்பரிய 400 வருடங்கள் பழமையான மரம் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் பள்ளிவாயலின் நிர்வாகிகளின் சம்மதமின்றி ஒரவஞ்சனையாக தறிக்கப்பட்டமைக்கு
காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கின்றது.

மரத்தின் குறித்த ஒரு சிறு பகுதி சிதைவடைந்த நிலையில் சிதைவடைந்த பகுதியை மட்டும் அகற்றுவயற்கு பள்ளிவாயல் நிர்வாகம் சம்மதித்த நிலையில் அதற்கு மாற்றமாக இம் மரத்தை முழுமையாக அகற்றுவதற்கு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளரும் மட்டக்களப்பு மாநகர சபையின் ஆணையாளரும் ஒருதலைப் பட்சமாக நடவடிக்கை எடுத்தமையையிட்டு மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் சமூகம் ஆழ்ந்த கவலை கொள்கிறது.

மட்டக்களப்பு ஜாமியஸ் ஸ்லாம் பள்ளிவாயலுக்கு ஒதுக்கப்பட்ட காணியை கபடத்தனமாக அபகரிக்கும் நீண்ட நாள் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இம்மரத் தறிப்பு நடந்தேறி இருப்பது ஈண்டு கவனிக்கத் தக்கது.

கடந்த வியாழக்கிழமை 12/10/2023 அன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இது கொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் இம்மரத்தை முழுமையாக தறிக்கும் வகையில் பிரதேச செயலாளரால் முன்வைக்கப்பட்ட கருத்திற்கு
தமது பலமான எதிர்ப்பை பள்ளிவாயல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட ம்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் இம் மரத்தை முழுமையாக தறிப்பதற்கான எந்த தேவையும் இல்லை என்பதை தெளிவுபடுத்தியதுடன் சிதைவடைந்த பகுதியை மாத்திரம் அகற்றி மரத்தை பாதுகாக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

அனர்த்தத்திற்கு பொறுப்பான இந்த உயர் அதிகாரியின் நிபுணத்துவம் வாய்ந்த கருத்தை ஏற்றுக் கொள்ளாத பிரதேச செயலாளர் உள்ளிட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட சிலர் அவ்வதிகாரியோடு கடுமையாக முரண்பட்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட பள்ளிவாயல் நிர்வாகம்.அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் மற்றும் இன்னும் சிலர் இம் மரத்தை முழுமையாக தறிக்க தேவையில்லை என்று உறுதியாக கூறிய போதும்

இவ் விடயம் தொடர்பில் அரச மரம் கூட்டுத் தாபனத்திற்கு அக்கூட்டத்தில் பின் அனுப்பிய கடிதத்தில் மரத்தை தறிக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பொய் கூறி பிரதேச செயலாளர் மரத்தை தறிக்குமாறு கோரியள்ளார்.

இது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு இரண்டு தடவைகள் முறைப்பாடளிக்க பள்ளிவாயல் சென்ற போதும் முறைப்பாடளிக்கத் தேவையில்லை தாம் இவ்விடயத்தை சுமுகமாக முடித்துத் தருவதாக பொலிஸ் கூறியுள்ளது.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில்,பாராளுமன்ற உறுப்பனர் அலிசாகிர் மெளலானாவோடும் பள்ளிவாயல் நிர்வாகம் தொடர்பு கொண்டு மரத்தை பாதுகாக்குமாறு கோரிய போது அவர்கள் பொலிஸ் உள்ளிட்ட தரப்புகளோடு பேசி மரம் தறிக்கப்படாது என தமக்கு உத்தரவாதம் வழங்கியதாக பள்ளி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இருந்த போதும் இன்று மரம் பள்ளிவாயல் நிர்வாகிகளுக்கு முன்பாக அடாத்தாக தறிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு அரசியல்வாதி ஒருவரின் சண்டியர்களின் பக்க பலத்துடன் இக் கைங்கரியம் நடந்தேறியுள்ளது.

பொலிசார் மரம் தறிக்கும் போது லேடனுக்கு பார்த்துக் கொண்டு இருந்ததாக பள்ளிவாயல் நிர்வாகாகள் மேலும் தெரிவித்தனர்.

இம் மரம் தறிப்பிற்குப் பின்னால் இனவாத நிகழ்ச்சி நிரல் உள்ளதாக முஸ்லிம் மக்கள் கருதுகின்றனர். பள்ளிவாயலுக்கு முன்பாக உள்ள நிலத்தை அபகரிப்பதே இவர்களின் நோக்கம் என சந்தேகம் உள்ளது.

சில வருடங்களுக்கு முன்பு மட்டக்களப்பு கள்ளியங் காட்டில் அமைந்திருந்த பள்ளிவாயல் உடைகப்பட்டு பிரம்ம குமாரிகள் தியான மண்டபம் கட்டப்பட்டதைப் போன்ற அச்சம் முஸ்லிம் மக்களுக்கு உள்ளது.

1942 ம் ஆண்டு பிடிக்கப்பட்ட ஒரு புகைப் படத்தின் பிரகாரம் இன்று தறிக்கப்பட்ட மரத்தித்திற்கு நேராக வின்சன்ட் பாடசாலைக்கு முன்பாக இதே மாதிரி மரம் ஒன்று நின்றுள்ளது. அதனை தறித்து அந் நிலம் பாடசாலைக்கு தேவையான முறையில் மயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வீதி விஸ்தரிப்புக்கென மூன்று தடவைகள் பள்ளிவாயலின் காணி மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கப்பட்டதாக பள்ளிவாயல் தெரிவிப்பதுடன் இறுதியாக வழங்கப்பட்ட போது அது தொடர்பில் லத்தி அபிவிருத்தி அதிகார சபையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு வந்ததாகவும் அவ்வொப்பந்த பிரதி ஒன்றை தமக்கு வழங்குவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை லாக்களித்த போதும் இதுவரை அவ் ஒப்பந்த பிரதி வழங்கப்படவில்லை என தெரிய வருகிறது.

மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக பள்ளிக்கு முன்பான வீதி அபிவிருத்தி தொடர்பில் கொழும்பு தலைமையக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் திட்டமிடலுக்கு மாற்றமாக பள்ளியின் முன்னாள் உள்ள வீதி அபிவிருத்தி திட்டம் மட்டக்களப்பு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அதாவது முன்பிருந்த சுற்று வட்டத்தை மாற்றி பாடசாலைக்கு போக்குவரத்து நெருக்கடி எற்படும் விதத்தில் அதனை அமைத்து பள்ளிவியலுக்கு நெருக்கடி கொடுத்து பள்ளிக்கு முன்பாக உள்ள காணியை கையகப்படுத்தும் வகையில் அத் நிறைவேற்றப்பட்டதாக பள்ளிவாயல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிகழ்ச்சி நிரலின் அடுத்த நகர்வே இம் மரம் முழுமையாக அகற்றப்பட்டதன் நோக்கமென எமது தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம் கருதுகிறது.

மேலும் மரம் தறிக்கப்பட்டதன் பின்னால் பள்ளிவாயலின் தலைவரிடம் மரம் தறிக்கப்பட்டமைக்கான சம்மதத்தை வழங்குமாறு வற்புறுத்தி மட்டக்களப்பு பொலிசார் கையொப்பத்தை பெற்றுக் கொண்டதாகவும் தான் உயிர் அச்சுறுத்தலுக்கும் பயந்து விருப்பமின்றி கையொப்பத்தை வைத்துல் கொடுத்தாக தங்களுக்கு பள்ளிவாயலின் தலைவர் தெரியப்படுத்தியதாக நிர்வாகிகள் கூறியதோடு எங்கள் யாருக்கும் தெரியாமல் தலைவர் தன்னிச்சையாக செயற்பட்டமைக்கு தமது பலமான எதிர்ப்பையும் தெரிவித்தனர்.

தற்போதைய மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளரே ஆரயம்பதி பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய போது முஸ்லிம் மக்களின் பாரம்பரிய காணிகளை தேடி தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வழக்குத் தாக்கல் செய்து அந்த ஏழை முஸ்லிம் மக்களை இன்றுவரை நீதிமன்ற படிகளில் ஏறி இறங்க அலைய விட்டவர் என்பதை இவ்விடத்தில் ஞாபக மூட்டுவதோடு இவ் அடாத்தான செயலை வண்மையாகக் கண்டிக்கின்றோம்.

இவ்வண்ணம்
தலைவர், செயலாளர்
காத்தான்குடி தொழில்வாண்மையாளர் மற்றும் சிவில் அமைப்புகளின் ஒன்றியம்

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Kalmunai Daily posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share