Dharisanam

Dharisanam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dharisanam, Magazine, .

காரடையான் நோன்பு கடைபிடிக்க முடியாத பெண்களுக்கு வழிபாடுஎல்லா சுமங்கலி பெண்களும் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய விரதம் தான் ...
14/03/2024

காரடையான் நோன்பு கடைபிடிக்க முடியாத பெண்களுக்கு வழிபாடு

எல்லா சுமங்கலி பெண்களும் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய விரதம் தான் இந்த காரடையான் நோன்பு. சிலருக்கு இந்த வழிபாட்டை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். நீங்கள் திருமணமான சுமங்கலி பெண்களாக இருந்து, உங்களுடைய வீட்டில் இந்த வழிபாட்ட மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்லை கவலைப்படாதீங்க. பின் சொல்லக் கூடிய வழிபாட்டு முறையை இன்று மாலை செய்யுங்கள்.
நிச்சயமாக காரடையான் நோன்பு விரதம் இருந்து அம்பாளை வழிபாடு செய்த பலன் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் உங்களுடைய கணவரின் ஆயிலும் நீடிக்கும். உங்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியமும் கிடைக்கும். இன்றைய தினம் காரடையான் நோன்பை எடுத்து வீட்டில் வழிபாடு செய்திருந்தாலும் சரி, நீங்களும் பின் சொல்ல கூடிய இந்த வழிபாட்டினை செய்யலாம் தவறு ஒன்றும் கிடையாது.

எல்லா சுமங்கலி பெண்களும் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய விரதம் தான் இந்த காரடையான் நோன்பு. சிலருக்கு இந்த வழிபாட்டை செய்ய முடியாத சூழ்நிலை இருக்கும். நீங்கள் திருமணமான சுமங்கலி பெண்களாக இருந்து, உங்களுடைய வீட்டில் இந்த வழிபாட்ட மேற்கொள்ள முடியவில்லை என்றாலும் பரவாயில்லை கவலைப்படாதீங்க. பின் சொல்லக் கூடிய வழிபாட்டு முறையை இன்று மாலை செய்யுங்கள்.
நிச்சயமாக காரடையான் நோன்பு விரதம் இருந்து அம்பாளை வழிபாடு செய்த பலன் கிடைக்கும். அது மட்டும் இல்லாமல் உங்களுடைய கணவரின் ஆயிலும் நீடிக்கும். உங்களுக்கு தீர்க்க சுமங்கலி பாக்கியமும் கிடைக்கும். இன்றைய தினம் காரடையான் நோன்பை எடுத்து வீட்டில் வழிபாடு செய்திருந்தாலும் சரி, நீங்களும் பின் சொல்ல கூடிய இந்த வழிபாட்டினை செய்யலாம் தவறு ஒன்றும் கிடையாது.

15/01/2024
17/12/2023
Vastu for wealthy life.
17/12/2023

Vastu for wealthy life.

16/12/2023

மகத்துவம் நிறைந்த மார்கழி

தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக மார்கழி கருதப்படுகிறது. மார்கழி மாதம் என்பது இந்து மதத்திலும், தமிழ் கலாச்சாரத்திலும் மகத்துவம் வாய்ந்தது. இந்த மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இந்துக்களின் மிகவும் முக்கியமான பண்டிகையாகும். தமிழில் பன்னிரண்டு மாதங்கள் இருக்க மார்கழி மாதத்திற்கு மட்டும் ஏன் இத்தனை சிறப்புகள்?

ஏனெனில், பகவத்கீதையில் “உலகின் அனைத்தும் நான்தான்’’ என்று கூறியிருக்கும் பகவான் கிருஷ்ணர், தமிழ் மாதங்களில் நான் `மார்கழியாக’ இருக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், இந்த மாதங்களில் பிறப்பதும், இறப்பதும் புண்ணியம் என நம்பப்படுகிறது. மார்கழியின் மாதம் கடவுள் வழிபாட்டுக்கென அர்ப்பணிக்கப்பட்டது. இது டிசம்பர் மாதத்தில் தொடங்கி ஜனவரி மாதத்தில் முடிவடைகிறது.

16/12/2023

பஜனை

மார்கழி மாதத்தின் 30 நாளும் காலையில் ஓசோன் படலம் சூரியன் உதிக்கும் முன்னர் அதிகாலையில் பூமிக்கு மிக அருகில் இருக்கும். அதிகாலையில் இந்த காற்றை சுவாசிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால்தான் மார்கழி மாதத்தில் அதிகாலையில் ஆண்கள் பஜனை பாடவும், பெண்கள் கோலம் போடவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த நேரத்தில் கோயிலுக்கு செல்வது உங்கள் உடலுக்கும், மனதிற்கும் மிகவும் நல்லது. நமது சடங்குகளும், கலாச்சாரங்களும் எப்போதும் நமது ஆரோக்கியத்தை மையப்படுத்தியே வடிவமைக்கப்பட்டதாகும்.

சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கோள்களும் ஒளியை விண்மீன் மண்டலத்தின் மையத்திற்கும், பூமிக்கும் எதிரொளிக்கிறது. இந்த கிரகங்களில் பூமிக்கு அதிக ஒளி கொடுக்கும் கிரகம் குரு ஆகும். குருபகவான்தான், நம் வாழ்வில் உள்ள இருளை போக்கும் சக்தி படைத்தவராவார். எனவே இந்த மாதம் தெய்வீகமான குரு மாதமாக
கருதப்படுகிறது.

16/12/2023

வைகுண்ட ஏகாதசி

ஏகாதசி அன்று விரதம் இருப்பவர்கள், அன்று முழுவதும் சாதம் செய்து சாப்பிடக்கூடாது. நாள் முழுவதும் விஷ்ணுவின் பெயரை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும். இரவு முழுவதும் தூங்காமல் இருந்து, காலை நேரத்தில் கோயிலுக்கு சென்று விஷ்ணுவின் அருளை பெறவேண்டும். அந்த நேரத்தில் சொர்க்கம் அல்லது வைகுண்டத்தின் வாசல் திறந் திருக்கும் என்பது நம்பிக்கையாகும்.

16/12/2023

சிவ வழிபாடு

மார்கழி மாதத்தின் பவுர்ணமி நாள், திருவாதிரையாக சிவபெருமான் கோயில்களில் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, சிதம்பரத்தில் இது மிகப் பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், களி என்னும் பிரசாதம் செய்யப்பட்டு சிவபெருமானுக்கு படைக்கப்படுகிறது. மாணிக்கவாசகர் இயற்றிய திருவெம்பாவை கொண்டு சிவபெருமான் பூஜிக்கப்படுகிறார். திருவாதிரை மட்டுமின்றி மார்கழி மாதம் முழுவதுமே சிவபெருமானை வழிபடுவது உங்கள் வாழ்வின் இருளை போக்கி செல்வத்தையும், ஆரோக்கியத்தையும் வழங்கும்.

ஒரு ஒளி நம் வழியில்   உள்ள வலிகளை கலைந்து வாழ்வில் இன்பம் தனை பெருக்கும். அதுவே தீப ஒளியாய் மிளிரும்.  அனைவருக்கும்  தீப...
12/11/2023

ஒரு ஒளி நம் வழியில் உள்ள வலிகளை கலைந்து வாழ்வில் இன்பம் தனை பெருக்கும். அதுவே தீப ஒளியாய் மிளிரும்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்😊

02/10/2023

இன்று மஹாபரணி, சங்கடஹர சதுர்த்தி விரதம்; வீட்டில் தீபம் ஏற்றி.. விநாயகரை வழிபட நினைத்தது நடக்கும்.

#மஹாபரணி #சங்கடஹரசதுர்த்தி

கருங்காலி மாலை.!!!!!கருங்காலி மாலைக்கு ஈர்ப்பு சக்தி உண்டு. நேர்மறை ஆற்றலை தரக்கூடியது. எனவே மனக்குழப்பம், மன நிம்மதி இல...
15/09/2023

கருங்காலி மாலை.!!!!!

கருங்காலி மாலைக்கு ஈர்ப்பு சக்தி உண்டு. நேர்மறை ஆற்றலை தரக்கூடியது. எனவே மனக்குழப்பம், மன நிம்மதி இல்லாதவர்கள், எதிர்மறை எண்ணங்கள் பெறுவதற்காக கருங்காலி மாலை அணிகிறார்கள்.

கருங்காலி மாலை யார் அணியலாம் என்பதினை தெரிந்து கொள்வதற்கு முன், யார் அணிய கூடாது என்பதினை பற்றி தெரிந்து கொள்ளலாம்.!!!!!

கருங்காலி மாலை என்பது செவ்வாய் + சனி தொடர்புடையது. எனவே, செவ்வாய், சனி, ராகு திசாபுத்தி நடப்பவர்கள் அணிவதை தவிர்க்க வேண்டும்.

கெட்ட வார்த்தை பேசுபவர்கள், அசைவம் சாப்பிடுபவர்கள் கருங்காலி மாலை அணிவதை தவிர்க்கலாம்.

கருங்காலி மாலை பற்றி இருவேறு கருத்துக்கள் உள்ளன. சிலர் கருங்காலி மாலை அணிவது நல்லது என்றும், சிலர் கருங்காலி மாலை அணிந்தால் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்றும் இருவேறு கருத்துக்களை முன் வைக்கிறார்கள். கருங்காலி மாலை நல்லது என சொல்லும் ஜோதிடர்கள் யார் என்று பார்த்தால், " கருங்காலி மாலை விற்பனை" செய்யும் ஜோதிடர்களாகதான் இருக்கிறார்கள்.

மேலும் கருங்காலி மாலையில் பல வகைகள் உள்ளன. மேலும் பல போலி கருங்காலி மாலைகளும் வரத்தில் உள்ளன.

கருங்காலி மாலை அணிந்தால்தான் சாதனையாளராக வலம் வரும் என்றில்லை. இப்போ கொஞ்ச நாளாகதான் கருங்காலி மாலை ட்ரென்ட் ஆகி வருகிறேதே தவிர, இதற்கு முன்னாடி சாதித்தவர்கள் எல்லாரும் கருங்காலி மாலை அணிந்தவர்கள் என்றில்லை.....

கருங்காலி மாலை அணிந்ததால்தான் தனுசு சாதிச்சார் என எண்ணுபவர்கள், தற்போது சினிமா துறையில் தனுசுக்கு ரெட் கார்ட் கொடுத்து இருப்பதையும் கணக்கில் கொள்ள வேண்டும்.

இறுதியாக கருங்காலி மாலை அணியலாமா வேணாமா என்று கேட்டால், இருவேறு கருத்துக்கள் வலம் வரும் வேளையில் எதையும் யோசித்துதான் செய்ய வேண்டும். என்னைக்கேட்டால் கருங்காலி மாலை அணியாமல் இருப்பதே நலம்.!!!!

பிள்ளையாருக்குப் பிடித்தவை! 🙏அருகம்புல் பிள்ளையாருக்கு உகந்தது என்பது நமக்குத் தெரியும். இதேபோல், மாசிப்பச்சை, நதுங்கை, ...
05/09/2023

பிள்ளையாருக்குப் பிடித்தவை! 🙏

அருகம்புல் பிள்ளையாருக்கு உகந்தது என்பது நமக்குத் தெரியும். இதேபோல், மாசிப்பச்சை, நதுங்கை, ஆந்தகரை, வில்வம், ஊமத்தை, நொச்சி, நாயுருவி, கத்தரி, வன்னி, அலரி, காட்டாத்தி, எருக்கு, மருது, மால்பேரி, அம்புகாந்தி, மாதுளை, தேவதாரு, நெல்லி, செண்பகம், கெந்தளி, பாதிரி ஆகியனவும் விநாயக பூஜைக்கு உகந்த இலைகள் - பூக்கள் ஆகும்.

09/02/2023

*நாளை தை நிறைவு வெள்ளிக்கிழமையில் குங்கும அர்ச்சனை செய்யுங்கள் உங்கள் குங்குமத்தைக் காப்பாள் அன்னை.*
🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
தை மாத நிறைவு வெள்ளிக்கிழமை நாளில், அம்பாளை தரிசனம் செய்ய மறக்காதீர்கள். இந்த நாளில் அம்பாளுக்கு பூக்கள் சூட்டி, தீபமேற்றி வழிபட்டால், இன்னும் இன்னும் உங்களை வளமாக வாழச் செய்வாள் தேவி.
🔱
அருகில் உள்ள அம்மன் கோயிலுக்குச் செல்லுங்கள். அம்பாளை மனமுருகப் பிரார்த்தனை செய்யுங்கள். உங்கள் வீட்டில் கடன் பிரச்சினையாக இருந்தாலும் கல்வியில் குழந்தைகள் மந்தமாக இருந்தாலும் சரி, நல்ல உத்தியோகம் கணவருக்கு அமைய வேண்டும் என்றாலும் சரி, உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தாலும் சரி...
சகல பிரச்சினைகளையும் அம்மனுக்கு முன்னே எடுத்துவையுங்கள். அனைத்தையும் சீராக்கித் தந்தருள்வாள் அன்னை.
🔱
தை நிறைவு வெள்ளி நாளில், அம்பாளுக்கு எலுமிச்சை தீபமேற்றுங்கள், செவ்வரளி மாலை சார்த்துங்கள். உங்கள் குடும்பத்தில் எத்தனை பேர் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கைக்குத் தக்கபடி, தாமரை மலர்கள் சூட்டி, அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்ளுங்கள்.
🔱
அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்து வழிபடுங்கள். உங்கள் குங்குமத்தைக் காத்தருள்வாள் தேவி. மாங்கல்ய பலம் தந்து, மனை யோகமெல்லாம் தந்தருள்வாள் அம்பிகை.

நினைத்ததை நடத்தி வைக்கும் தைப்பூச விரதம்! முருக பெருமானை வழிபடுவது எப்படி?Lord Muruganதமிழ் கடவுளும், பத்மாசுரனை கொன்று ...
31/01/2023

நினைத்ததை நடத்தி வைக்கும் தைப்பூச விரதம்! முருக பெருமானை வழிபடுவது எப்படி?
Lord Murugan
தமிழ் கடவுளும், பத்மாசுரனை கொன்று தேவர்களை காத்தவருமாகிய முருக பெருமானுக்கு உகந்த நாளான தைப்பூசத்தில் முருகனுக்கு விரதமிருப்பதால் பல நன்மைகள் கிட்டும்.

தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பௌர்ணமியும் கூடி வரும் அற்புதமான தினம் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. மேலும் தைப்பூசம் சிவன் – பார்வதி தேவியின் ஒன்று சேர்ந்த ஆற்றலையும் குறிக்கிறது. இந்த தைப்பூச தினத்தில்தான் அசுரர்களை அழிக்க பார்வதி தேவி தனது இளைய குமாரன் முருக பெருமானுக்கு வேல் வழங்கினார்.

அந்த வேல் கொண்டு அசுரர்களை அழித்து தேவர்களை காத்த முருகபெருமான் திருச்செந்தூரில் கோவில் கொண்டார். அதனால் தைப்பூச திருநாள் முருகனுக்கு உகந்த நாளாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் முருக பெருமானை மனமுறுகி விரதமிருந்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும்.

31/07/2022

ஆடிப்பூரம்
01.08.2022
திங்கட்கிழமை
அனைத்து உலகத்தையும் படைத்தும் காத்தும் கரந்தும் விளையாடும் அகிலாண்ட கோடி அன்னைக்கு மஞ்சள் காப்பு, சந்தனக் காப்பு, குங்குமக்காப்பு, நடத்துவார்கள்.
அந்த அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகிக்கு வளை காப்பு நடக்கும் நாள் தான் ஆடிப்பூரம். அன்னை உளம் மகிழ்ந்து மாந்தர்கள் அனைவருக் கும் தன் அருளை வழங்கும் நாள்.
பல்வேறு விதங்களில் அன்னையைக் கொண்டா டும் நாள் திருவாடிப்பூரம். சைவத்தலங்களில் உற்சவ அம்மனின் திருநாமம் பெரும்பாலான இடங்களில் சுக்கிரவார அம்மனாக தனக்கு உகந்த வெள்ளிக்கிழமையின் பெயரைக் கொண்டு அருள் பாலிக்கும் அம்மன் அதற்கு அடுத்து ஆடிப்பூர அம்மனாக அதிகமாக எழுந்தருளி யுள்ளாள். இதிலிருந்தே ஆடிப்பூரத்தின் சிறப்பை அறிந்து கொள்ளலாம்.
உத்தராயணக்காலம் சிவபெருமானை வழிபட உகந்தது என்றால் தக்ஷிணாயனம் அவரது வாம பாகத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு உரிய காலம் ஆகும். அம்மனுக்கு உகந்த ஆடி மாதம், நவராத்திரி ஆகிய பண்டிகைகள் வரும் காலம்.
இவ்வாறு இது வரை பகல் காலம் அதிகமாக வெப்பமாக இருந்த நிலை மாறி இரவு அதிகமாகவும், வெப்பம் குறையும் காலம் ஆரம்பிப்பதால்தான் ஆடி மாதங்களில் எளிய உணவான கூழ் சாப்பிட்டால் உடம்பிற்கு நல்லது என்று ஜகன் மாதாவிற்கு கூழ் வார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்தினர் நமது முன்னோர்கள்.
இந்த ஆடி மாதத்தில் வெள்ளி, செவ்வாய் , ஞாயிறுகளில் அன்னையை வழிபட எல்லா நலன்களும் தந்து அருளுவாள் அந்த தயாபரி. இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆடி மாதத்தில் வரும் பூர நாள் அம்பிகைக்கு மிகவும் உகந்த நாள்.
தாய்மை என்பது பெண்களுக்கே உரித்தான ஒரு தனி சிறப்பு. உள்ளே உயிர் வளர்த்து உதிரத்தால் பால் கொடுக்க ஒரு தாயால் தான் முடியும். நம்முடைய மானிட வழக்க மான சூல் கொண்ட பெண்ணுக்கு வளை காப்பு நடத்துவது போல படைக்கும் அன்னை யாய் இருந்தும் கன்னி என்று மறைகள் பேசும் அம்பிகைக்கு நாம் வளைகாப்பு நடத்தி கண்டு களித்திடும் நாள்.
மாலை நேரங்களில் அன்னைக்கு வளையல் களால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்டு அந்த வளையள்கள் பெண்மணிகளுக்கு பிரசாதமாக வழங்கப்படுகின்றன🙏💐🙏

🔥 நரஸிம்மர் அதர்வண வேதம் ரொம்ப அழகாகச் சொல்கிறது - நரசிம்ஹ அவதாரத்தை 'எலக்ட்ரிசிடி' என்கிறது. அது ஒரு கரண்ட். வித்யுத் ச...
08/04/2022

🔥 நரஸிம்மர்

அதர்வண வேதம் ரொம்ப அழகாகச் சொல்கிறது - நரசிம்ஹ அவதாரத்தை 'எலக்ட்ரிசிடி' என்கிறது. அது ஒரு கரண்ட். வித்யுத் சக்தி. கரண்டைத் தொட்டோமானால் கெட்டியாகப் பிடித்துக் கொண்டுவிடும் நம்மை! நரசிம்ஹனுக்கும் அடித்த கை பிடித்த பெருமாள் என்று பெயர்.

தன்னை அடித்த ஹிரண்யனின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு விட்டான் எம்பெருமான். மற்றொரு கையால் சிரஸை – சிகையைக் – கெட்டியாகப் பிடித்துக் கொண்டானாம்.

ஏன் அவ்வாறு கெட்டியாகப் பிடித்துக் கொண்டான் என்று கேட்டால், அந்தப் பிடி மூலமாகவே தன் பலத்தைக் காட்டினானாம் பரமாத்மா. ‘’இந்த முட்டாள் நம்மோடு சண்டை போடுகிறானே! இந்த ஒரு பிடியே ம்ருத்யு பிடியாக இருக்கிறதே என்று விழுந்து சரணாகதி பண்ணுகிறானா பார்ப்போம்’ என்ற எண்ணத்துடன் ஹிரண்யகசிபுவின் சிரஸைப் பிடித்தானாம். ‘சரணாகதி பண்ணினால் இவனை மன்னித்து விட்டு விடுவோம்’ என்று நினைத்தானாம்.

பகவானுக்கு எவ்வளவு காருண்யம் பாருங்கள்!

இவ்வளவு உக்கிரமாகத் தோன்றியவனுக்கே இத்தனை காருண்யம் என்றால், சாந்தமாகத் தோன்றுகிறவனிட்த்திலே எவ்வளவு காருண்யத்தை நாம் பார்க்கலாம்!

அவ்வளவு உக்கிரமாக வருகிறான் பரமாத்மா!

அவன் வரக் கூடிய வேகத்தைச் சொல்லும்போது ‘மேகம் எப்படிப் போகிறதோ அப்படி வேகமாகச் செயல்பட்டான்’ என்று வர்ணிக்கப்பட்டிருக்கிறது.
அப்படி வேகமாகப் பாய்ந்து வந்தவன் ஹிரண்யனை ஒரு பிடி பிடித்து விட்டான்.

அப்போதாவது வழிக்கு வருகிறானா என்று பார்ப்பதற்கு. அப்புறம் தான் அவனை முடித்தான்.

அளந்து இட்ட தூணை அவன் தட்ட, ஆங்கே வளர்ந்திட்டு வால் உகிர்ச் சிங்க உருவாய் உளந்தொட்டு, இரணியன் ஒண்மார்வு அகலம்
பிளந்திட்ட கைகளால் சப்பாணி
பேய் முலை உண்டானே சப்பாணி
என்கிறார் பெரியாழ்வார்.

அளந்திட்ட தூண்! அவனே – ஹிரண்யனே – அளந்து இட்ட தூணாம். அது வேறு இடத்தைச் சொன்னால், ஏற்கனவே வந்து புகுந்து கொண்டு உட்கார்ந்திருப்பான் என்று, தானே பக்கத்திலிருந்து தேர்ந்தெடுத்தானாம்
தூணை. தானே கட்டிய தூணைத் தேர்ந்தெடுத்தானாம்.

எப்பேர்ப்பட்ட தூண் அது…? தங்கச் செங்கல் வைத்துக் கட்டிய தூண். அந்தத் தூணைத் தட்டியதும் தோன்றினான் நரசிம்ஹன்.

ஹிரண்யனோடு சண்டை போட்டான். பலத்தைக் காட்டினான். அப்புறம் மடியிலே படுக்க வைத்துக் கொண்டு அவனை உளந் தொட்டான்.

அதாவது ஹ்ருதயத்தையும் தொட்டுப் பார்த்தான் பரமாத்மா! இத்தனை நாள் நம்மோடு சண்டை போட்டது, நம்மை வைது(திட்டி), நம்மைத் தூற்றியதெல்லாம் ஹ்ருதயத்தளவிலா இல்லாவிட்டால் வாயளவிலா? வாயளவிலானால் விட்டுவிடுவோம். ஹ்ருதயத்தளவில் இருந்தால் அவனை முடிப்போம். அப்போதும் பரீட்சை பண்ணிப் பார்க்கிறான் பகவான்.

ஹ்ருதயத்தளவில் எதிர்ப்பு இருந்ததால் தான் ஹிரண்யனை அவன் முடித்தான்.
எத்தனை காருண்யம் அவனுக்கு! இறுதி வரைக்கும் அவனிடத்தில் சரணாகதி பண்ண நமக்குச் சந்தர்ப்பம் தருகிறான்.

அந்தச் சரணாகதியையும் ரொம்ப சுலபமாக்கித் தந்திருக்கிறான்!

16/11/2021

17.11.2021 புதன்கிழமை பஞ்சாங்கம், ராசிபலன்கள், இன்று பிலவ வருடம் கார்த்திகை மாதம் 1ம் தேதி, நவம்பர் மாதம் 17ம் தேதி, காலை வரை திரையோதசி பின் சதுர்த்தசி திதி, அசுவினி நட்சத்திரம்
நல்ல நேரம் : 9.00 - 10.30
ராகு காலம் : 12.00 - 1.30
குளிகை : 10.30 - 12.00
எமகண்டம் : 7.30 - 9.00
சந்திராஷ்டமம் : உத்திரம், அஸ்தம்
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
கன்னி ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும். மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் மேஷம், ரிஷபம், விருச்சிகம்.
மிதுனம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும்

28/09/2021

29.9.2021 புதன்கிழமை பஞ்சாங்கம், ராசிபலன்கள், இன்று பிலவ வருடம் புரட்டாசி மாதம் 13ம் தேதி, செப்டம்பர் மாதம் 29ம் தேதி, அஷ்டமி திதி, திருவாதிரை நட்சத்திரம்
நல்ல நேரம் : 9.00 - 10.30
ராகு காலம் : 12.00 - 1.30
குளிகை : 10.30 - 12.00
எமகண்டம் : 7.30 - 9.00
யோகம் : சித்த யோகம்
சந்திராஷ்டமம் : அனுஷம்,கேட்டை
சூலம் : வடக்கு
பரிகாரம் : பால்
விருச்சிகம் ராசிக்கு சந்திராஷ்டமம் வீண் கவலை, விரையம், சஞ்சலம் ஏற்படும். மேலும் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் மிதுனம், கடகம், மகரம்.
மேஷம், ரிஷபம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் ராசியினருக்கு சாதகமான பலன்கள் அதிகம் நடைபெறும்.
இன்று பெருமாள் வழிபாடு சிறப்பு

28/09/2021

நாளைய தினம் புதன்கிழமை புதாஷ்டமியாகவும் புரட்டாசி மாத தேய்பிறை அஷ்டமி சம்புகாஷ்டமியாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
12 ராசிகளையும் தன் உடலில் அங்கங்களாகக் கொண்டவர் காலபைரவர். தேவ, அசுர, மானிடர்களும் அஞ்சும் கிரகம் சனி பகவான். அந்த சனி பகவானுக்கே வரம் தந்து, கடமையைச் சரியாக செய்ய வைத்தவர் பைரவர்.தன் தமையன் எமன், பைரவரிடம் அதீத சக்திக்கு வரம் பெற்றதைக் கண்ட அவன் தம்பி சனீஸ்வரன், பைரவரை நோக்கி கடுமையான தவம் இருந்தான். தவ வலிமையால் பைரவர் அவன் முன் தோன்றி, மும்மூர்த்திகள் உள்பட அனைவருக்கும் நல்லது தீயது செய்யும் சக்தி அருளினார்.
அப்போது சனீஸ்வரனிடம் ஒரு சத்தியப் பிரமாணம் பெற்றுக்கொண்டார். சனீஸ்வரனின் சஞ்சாரத்தால் எவர் ஒருவருக்கு கஷ்டம் கொடுக்க வேண்டியிருந்தாலும், அவர்கள் பைரவரை வழிபட்டு சரணடைந்தால் அவரகளுக்கு சனீஸ்வரன் நன்மையையே செய்ய வேண்டும் என பைரவபெருமானிடம் விரும்பினார். அதனால் தான் ஏழரை நாட்டுச்சனி, அஷ்டமச்சனி, ஜென்மச்சனியால் அவதிப்படுவோர் பைரவ வழிபாடு பண்ணுவதன் மூலம் அத்தொல்லைகளிலிருந்து விடுபட முடியும். சனியின் குரு ஸ்ரீ பைரவரே ஆவார். சனியின் வாத நோயை நீக்கிய வரும் பைரவர்தான்.
சம்புகாஷ்டமி நாளில் பைரவரை வணங்க சனி தோஷங்கள் நீங்கும்

11.8.21 - ஆடிப்பூரம்ஆண்டாள் நாச்சியார் அவதரித்த நட்சத்திரம் பூரம். அதுவும் ஆடிமாதத்தின் அன்னை அவதரித்ததால் இது திருவாடிப...
09/08/2021

11.8.21 - ஆடிப்பூரம்

ஆண்டாள் நாச்சியார் அவதரித்த நட்சத்திரம் பூரம். அதுவும் ஆடிமாதத்தின் அன்னை அவதரித்ததால் இது திருவாடிப்பூரம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிறது. இந்த நாளில் அன்னை ஆண்டாள் சந்நிதி இருக்கும் ஆலயத்துக்குச் சென்று வழிபாடு செய்வது விசேஷம். குறிப்பாக திருப்பாவை 30 பாடல்களையும் இந்த நாளில் பாடி வழிபட்டால் அனைத்து நன்மைகளும் சூழும் என்பது நம்பிக்கை.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Dharisanam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share