'Chennai Metro' Daily Evening Newspaper

  • Home
  • 'Chennai Metro' Daily Evening Newspaper

'Chennai Metro' Daily Evening Newspaper This is the official page of Chennai 'METRO' Daily Evening Newspaper

24/12/2021
27/10/2021
23/10/2021
15/09/2021

"You Are Protected" from Virus
By using



# # # # # # # # # # # # # # # # # #
×Mobile Ultraviolet light (UV-C) unit significantly reduces aerobic colony counts and C. difficile spores on contaminated Surfaces

×Effective in the mitigation against virus
ie: COVID-19, TUBERCULOSIS, MRSA, H1N1 & other airborne cross contamination.

×Eradicating dust mites, bedbugs and prevention against bacteria, mold organisms & pathogens

- Recommended by medical experts.

& Locations where to be implemented
# # # # # # # # # # # # # # # # # #

-Clinical environments such as Clinics, Hospitals, Dental surgery, Hospital Reception area, wards, operation theatre, X-ray rooms, CT scan rooms, Dialysis centres,Testing laboratories, Diagnostic centres.

-Food processing plants & food storage places. Small & Big Offices, Bank, Beauty saloon, House kitchen, Hall, Hotels & Hotel rooms, Restaurant, Malls, Cinema theatre. Schools,Colleges, Classrooms,

-Bus, Car, Ambulance and any closed vehicles

06/08/2019

வீடியோ தொகுப்பு:-
ஆம் ஆத்மி வசீகரன் செய்தியாளர் சந்திப்பு -

தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய ஒப்பந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஆம்ஆத்மிகட்சியின் தமிழக தலைவர் திரு.வசீகரன் தலைமையில் SVS-AAP தொழிற்சங்க நிர்வாகிகளுடன் தமிழக போக்குவரத்து முதன்மை செயலாளர் இராதாகிருஷ்ணனை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் வசீகரன்..

போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பில் எந்த நாடு முழுமை பெறுகிறதோ அந்த நாடு தான் வளர்ந்த நாடாகும் என்றும்
ஆனால் போக்குவரத்து துறை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும்
நேற்று தஞ்சையில் 10மணிக்கு முன்னதாகவே அரசு பேருந்துகள் நிறுத்திவைக்கப்பட்டதாகவும்
ஆம்னி பேருந்துகள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக சதி நடைப்பெற்று வருகிறது என்றும் குற்றம்சாட்டினார்

மேலும் பணிமனையை முறையாக பராமரிப்பது இல்லை என்று தெரிவித்த அவர் அதனால் தான் வடபழனியில் இருவர் உயிரிழந்தனர் என்றும் கூறினார்.

14வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்றும்
3 வருடங்களுக்கு முன் இந்த பேச்சுவார்த்தை நடத்தவே ஒன்றரை ஆண்டுகள் ஆனதாகவும்,
வருகின்ற 1ம் தேதி முதல் பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே போக்குவரத்து செயலாளரை சந்தித்தாகவும் அவர் தெரிவித்தார்.

அரசு பட்ஜெட்டில் போக்குவரத்திற்கு தனித்தொகை ஒதுக்கீடு செய்து இழப்பீட்டு தொகையை சரி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும்
, 5000 தொழிலாளர்கள் வேலை செய்யாமலேயே சம்பளம் வாங்கி வருகின்றனர் அதற்கு ஆதாரம் இருப்பதாகவும்,
ஓய்வு பெற்றவர்களுக்கு பணி பலன்கள் அளிப்பதில்லை என்றும் ,
தனியார் ஆம்னி பேருந்துகளை தான் காப்பாற்ற நினைகின்றனர் எனபவும் இதை தமிழக அரசு கவனிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பேட்டி : வசீகரன்
( ஆம் ஆத்மி கட்சி தலைவர் )

https://wetransfer.com/downloads/86f6943ff899592a6e6dfc7a1dbcf4dc20190805063024/232c706e56ff2c0a818eea33a12bc16b20190805063024/a4bba1

SVS -AAP மாநில அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்கம்
சார்பாக போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்தகோரிக்கை மனுவை 05-08-2019 அன்று ஆம் ஆத்மி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் திரு. வசீகரன் அவர்கள் தலைமையில் SVS -AAP மாநில அரசு
போக்குவரத்து கழக தொழிலாளர் சங்க நிர்வாகிகள் திரு. சுவாமி. R.M மாநில
தலைவர் திரு க.அன்பழகன் மாநில செயலாளர் திரு. பழனிசாமி மாநில
பொருளார், மாநில, மண்டல பொறுப்பாளர்கள் மற்றும்
சங்கத்தின் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் திரு. பரமேஷ்வரன் அவர்களுடன்
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் 14 வது ஊதிய ஒப்பந்த கோரிக்கை மனுவை தமிழ்நாடு போக்குவரத்து துறை செயலர் திரு. ராதா கிருஷ்ணன் இ.ஆ.ப
அவர்களிடம் தலைமை செயலகத்தில்
வழங்கப்பட்டது..
-செய்தி SVS-ஆம்ஆத்மி போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கம்

31/01/2019

தமிழகத்தில் மொத்தம் வாக்காளர்கள்
5 கோடியே 91 லட்சம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹு அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யாபிரதா சாஹு இன்று அறிவித்துள்ளார்.

இதில் தமிழகத்தில் 18 - 19 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை - 898979 உள்ளனர்

இந்த அறிவிப்பின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5 கோடியே 91 லட்சம் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவித்தார். இதில், 2.92 கோடி ஆண் வாக்காளர்களும், 2.98 கோடி பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 5,472 பேர் உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும், அவர் விவரித்த தகவலின் படி,

தமிழகத்தில் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி – சென்னை துறைமுகம் – 1,66,511

தமிழகத்தில் அதிக வாக்காளர்கள் கொண்ட தொகுதி – சோழிங்கநல்லூர் – 6,18,695

மாவட்ட அளவில் சென்னை முதலிடத்தில் உள்ளது – 38,18,999

18-19 வயதுடைய இளம் வாக்காளர்கள் அதிகம் கொண்ட தொகுதி – திருப்பரங்குன்றம்

தமிழகத்தில் 18 – 19 வயதுடைய வாக்காளர்கள் எண்ணிக்கை – 898979

மேலும், முழு வாக்காளர்கள் பட்டியல் குறித்த விவரங்களை தலைமை தேர்தல் அதிகாரி வலைத்தளமான //elections.tn.gov.in காணலாம்

31/01/2019

IT raids at more than 70 places in TN including Saravana Stores, Lotus Group on complaint of Tax evasion and uun accounted money

Jan 29
CHENNAI: The Income Tax department is conducted raids at more than 70 locations in Tamil Nadu on Tuesday. The raids were conducted following complaints of tax evasion and unaccounted money.

The searches began on Tuesday morning at 72 locations in Chennai and two in Coimbatore.

The tax sleuths are at the premises of Saravana stores retail chains and real estate firms GSquare/Lotus Group, sources told to media

Tamil Nadu: I-T department conducting raids at 70 locations in Chennai; Visuals from at Saravana Stores at T-Nagar

Earlier this year, the I-T Department conducted raids at popular cafe and restaurant chains, including Grand Sweets, Hot Breads, Saravana Bhavan and Anjappar group, across Chennai.

Residences and offices of the directors of these food-joint chains were also raided by a team of over 100 I-T sleuths.

Tax sleuths added that the department is looking into allegations of under-reporting and suppressing their income through several means and hence decided to conduct searches and obtain further evidence.-CMA

30/01/2019

Lok Sabha Elections 2019: AIADMK Launches Hunt For Candidates, Seeks
Rs 25,000 Fee

CHENNAI: The ruling AIADMK in Tamil Nadu has sought applications from aspiring candidates who would like to contest in the upcoming Lok Sabha elections. The party will accept the applications from February 4 to 10. A press release from the party stated that interested candidates will have to pay a fee of Rs 25,000 towards filing the application.
This will be the first major electoral contest faced by the AIADMK after party chief Jayalalithaa's death in December 2016. AIADMK had won 37 of the 39 seats across Tamil Nadu in the 2014 parliamentary polls.

Things, however, may not be as easy for the ruling party this time round. In 2017, the AIADMK lost the RK Nagar assembly constituency - represented twice by Jayalalithaa herself - to ousted party general secretary TTV Dhinakaran in a crucial by-election.

The party is now divided. Mr Dhinakaran and his jailed aunt, former party chief V Sasikala, will be fighting the upcoming elections under the Amma Makkal Munnetra Kazhagam banner. The AIADMK will also face a resurgent DMK, led by MK Stalin, and actor-turned-politician Kamal Haasan's Makkal Needhi Maiam. With Sasikala claiming her ouster is illegal, the Election Commission is yet to decide who represents the real AIADMK. The party is currently led by Chief Minister EK Palaniswami and Deputy Chief Minister O Panneerselvam, who fulfil the roles of coordinator and joint coordinator respectively.

Poll analysts believe that the BJP is trying to take advantage of the AIADMK's weak standing to forge an electoral alliance that will help expand its footprint in the state. However, a section of party leaders - including Lok Sabha Deputy Speaker M Thambidurai - do not want to tie up with the party. The party is yet to take a call on the alliance. It has constituted two committees for manifesto preparation and seat sharing.

The ruling party also faces allegations of corruption, with Income Tax officials and the CBI having raided several prominent members in cases such as the Gutkha scam and alleged bribery of voters ahead of the RK Nagar bypolls, among others.

Recently, even Mr Palaniswami was accused of orchestrating a break-in at Jayalalithaa's Kodanad estate. Questions were also raised over the mysterious killing of five people, including a security guard and a driver connected to the estate.
Courtesy: J Sam Daniel Stalin

30/01/2019

Delhi state govt announced MSP for wheat and paddy crops, It benefits 20,000 Delhi farmer families!

NEW DELHI: In the welfare of farmers in Delhi, the Arvind Kejriwal-led Aam Aadmi Party (AAP) government in Delhi on Tuesday announced its own minimum support price (MSP) for wheat and paddy crops factoring in the recommendation of the MS Swaminathan Commission.

This announcement is expected to benefit 20,000 farmer families of the national capital Delhi.

"The proposed MSP with 50 per cent margin at the cost of production, is Rs 2,616 per quintal and Rs 2,667 quintal for wheat and paddy respectively.
The proposed MSP structure is higher than the government of India MSP by Rs 776 per quintal for wheat and Rs 897 per quintal for paddy," said Gopal Rai, state's development minister after presiding over an Agricultural Conference organised by Delhi government to deliberate on implementing the recommendations of MS Swaminathan Committee Report on Farmers' Welfare" in Delhi.

Delhi AAP government re-calculated the cost of production of wheat at Rs 1,744 per quintal and paddy at Rs 1,778 per quintal. The proposal, which has to cleared by the Delhi Cabinet, is likely to incur an additional liability of Rs 96.38 Crore, when implemented.

"In order to save farmers, a realistic MSP mechanism as per the recommendations and the requirements of the local farming environments, was needed effectively introduced," Gopal Rai said. -CMA

23/08/2018

மூத்த பத்திரிகையாளர்
குல்தீப் நய்யார் மறைவுக்கு
"மீடியா கில்டு அகாடமி" சார்பில் ஆழ்ந்த இரங்கல்

Protest by AamAadmiParty at Pallawaram today on condemning the petrol price hike
26/05/2018

Protest by AamAadmiParty at Pallawaram today on condemning the petrol price hike

10/06/2017
05/06/2017

Barely six months after demonetisation, India's Gross Domestic Product or GDP growth rate has slumped down to 6.1 per cent in the January-March period, lowest in more than two years. This growth rate was unexpected as the Central Statistics Office earlier in January had estimated 7.1 per cent growth...

01/06/2017

’2வது நாளாக பற்றி எரிகிறது’: சென்னை சில்க்ஸ் அருகேயுள்ள குடியிருப்புவாசிகள் வெளியேற்றம்
-June 1, 2017

சென்னை சிலக்ஸ் கட்டடத்தின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வெளியேறி வருகின்றனர். சென்னை தியாகராய நகர் உஸ்மான் சாலையிலுள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் புதன்கிழமை (நேற்று) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து 24 மணி நேரத்துக்கும் மேலாக, தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்து வருகின்றனர். இந்நிலையில் கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. தீ விபத்தால், கட்டடம் முழுவதும் கடுமையாக சேதமடைந்தது.

இந்நிலையில் வியாழக்கிழமை (இன்று) காலை மீண்டும் கட்டடத்தின் முன் பகுதியில் தீ பிடித்தது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, சுமார் 30 நிமிடங்களுக்கு பின்பு இந்தத் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். தற்போது கட்டடத்தின் உட்பகுதி எரிந்து வருகிறது.

கட்டடத்தின் அபாயநிலையைக் கருதி, இதன் அருகே வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் வெளியேறி வருகின்றனர். இந்தத் தீ விபத்து சம்பவம் தொடர்பாக மாம்பலம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Courtesy: Ippodhu

31/05/2017

வெங்கட்பிரபுவின் புதிய படம் ஆர்.கே.நகர்
May 30, 2017

வெங்கட்பிரபு தனது பிளாக் டிக்கெட் நிறுவனம் தயாரிக்கும் அரசியல் நையாண்டிப் படத்துக்கு ஆர்.கே.நகர் என்று பெயர் வைத்துள்ளார்.

வெங்கட்பிரபு பிளாக் டிக்கெட் என்ற நிறுவனத்தை தொடங்கி சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரித்து இயக்கினார். பிளாக் டிக்கெட்டின் இரண்டாவது தயாரிப்பை அவர் வித்தியாசமான முறையில் அறிமுகப்படுத்தினார். அணை நீர் ஆவியாகாமல் இருக்க அணை மீது தெர்மோக்கோல் போர்த்திய அமைச்சர் செல்லுnர் ராஜுவின் செயலை நையாண்டி செய்யும்விதமாக, தெர்மோக்கோலில், வேட்பாளர்கள் அறிமுகம் என்று டிஸைன் செய்து விளம்பரப்படுத்தினார். இந்தப் படத்தின் தயாரிப்பு மட்டும் வெங்கட்பிரபு. இயக்கம், வடகறி படத்தை இயக்கிய சரவண ராஜன்.

வைபவ் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் சானா அல்தாப் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். வில்லனாக சம்பத். இந்த அரசியல் நையாண்டிப் படத்துக்கு ஆர்.கே.நகர் என்று பெயர் வைத்துள்ளனர்.

ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அவர் வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்ததும், வெங்கட்பிரபுவின் தந்தை கங்கை அமரன் பாஜக சார்பில் அங்கு வேட்பாளாராக நிறுத்தப்பட்டதும், பணப்பட்டுவாடாவை காரணம் காட்டி ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்தானதும், இரட்டை இலை சின்னம் கிடைக்க லஞ்சம் கொடுத்ததாக டிடிவி தினகரன் ஜெயிலில் அடைக்கப்பட்டதும் தமிழக வரலாறு. ஆர்.கே.நகர் படம் இந்த நிகழ்வுகளை விமர்சிக்குமா இல்லை பெயர் மட்டும் ஆர்.கே. நகரா?
அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம் வெங்கி.
Courtesy: Ippothu

31/05/2017

சட்டப்பேரவையின் புதிய செயலாளராக பூபதி நியமனம்
May 31, 2017

தமிழக சட்டப்பேரவையின் புதிய செயலாளராக பூபதி நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவைச் செயலாளராக இருந்த ஜமாலுதீன் கடந்த 2012ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் தேதியோடு ஓய்வு பெற்றார். ஆனாலும் இவரது பதவிக்காலத்தை, தமிழக அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டித்தது. அதன்படி இன்றுடன் (மே 31) அவரது பதவி காலம் முடிவடைவதை அடுத்து புதிய செயலாளராக பூபதி நியமிக்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து, சபாநாயகரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற பின்னர் பூபதி சட்டப்பேரவைச் செயலாளராக பொறுப்பேற்று கொண்டார்.
Courtesy: Ippodhu

30/05/2017

சென்னை ஐஐடி.யில் மாட்டிறைச்சி விருந்து நடத்திய மாணவர் மீது வலதுசாரி அமைப்பினர் கொடூர தாக்குதல்
May 30, 2017

சென்னை ஐஐடி.யில் மாட்டிறைச்சி விருந்து நடத்திய மாணவர் மீது வலதுசாரி அமைப்புகள் ஆதரவு பெற்ற மாணவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காளைகள், பசு மாடுகள், எருமை மாடுகள், கன்றுடன் கூடிய பசு மாடு, கன்று, ஒட்டகம் போன்ற கால்நடைகளைச் சந்தைகளில் இறைச்சிக்காக வாங்கவோ, விற்கவோ கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரளாவில், இந்திய மாணவர் கூட்டமைப்பு மாநிலம் முழுவதும், மத்திய அரசுக்கு எதிராக மாட்டிறைச்சி விருந்து நடத்தியுள்ளனர்.

சென்னை ஐஐடி.யில் ஞாயிற்றுக்கிழமை இரவு (மே-28) 80 மாணவர்கள் மாணவர்கள் ஒன்று சேர்ந்து மாட்டிறைச்சி விருந்து நடத்தினர். இம்மாணவர்கள், ஐஐடி நிர்வாகத்தின் அனுமதிபெற்று இந்த நிகழ்ச்சியினை நடத்தியுள்ளனர். இதற்கு பாரதிய ஜனதா கட்சி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் ஐஐடி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், மாட்டிறைச்சி விருந்துக்கு ஏற்பாடு செய்த சுராஜ் என்னும் மாணவரை, வலதுசாரி அமைப்புகள் ஆதரவு பெற்ற மாணவர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் அவரது கண்ணில் படுகாயம் ஏற்பட்டது. சுராஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Courtesy: Ippodhu

30/05/2017

ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிர்ப்பு: நாடு முழுவதும் 8 லட்சம் மருந்துகடைகள் மூடல்
May 30, 2017

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்கக் கோரி, நாடு முழுவதும், முழு கடையடைப்புப் போராட்டம் செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தால் நாடு முழுவதும் சுமார் எட்டு லட்சம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

அனுமதியின்றி சில நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆன்லைனில் மருந்து விற்பனையை அனுமதிக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், நாடு முழுவதும் முழு கடையடைப்புப் போராட்டத்தில் மருந்து வணிகர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்துக்கடைகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. சென்னை, மதுரை மற்றும் கரூர் ஆகிய மாவட்ட மருந்து விற்பனையாளர்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.
Courtesy:Ippothu

30/05/2017

பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் பங்குகள் 2.5% சரிவு
May 30, 2017

இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை (இன்று) ஏற்றத்துடன் காணப்படுகின்றன. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டெண் சென்செக்ஸ் 40.96 புள்ளிகள் உயர்ந்து 31,150.24 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 0.70 புள்ளிகள் உயர்ந்து 9,605.60 புள்ளிகளுடனும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 64.65ஆக உள்ளது.

பாரத் பெட்ரோலிய (Bharat Petroleum Corporation Limited – BPCL) நிறுவனத்தின் பங்குகள் 2.ர் சதவிகிதம் சரிந்து காணப்படுகிறது. முந்தைய வர்த்தக நாளான திங்கட்கிழமையன்று BPCL நிறுவனத்தின் பங்கொன்றின் விலை 754.85 ரூபாயாக இருந்தது. தற்போது அதன் விலையில் 18.85 ரூபாய் சரிந்து 736.00 ரூபாயாக உள்ளது.
Courtesy: Ippothu

29/05/2017

சென்னை ஐஐடி.யில் மாட்டிறைச்சி விருந்து; கொந்தளிக்கும் ஹெச்.ராஜா
-May 29, 2017
சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்துக்கு அனுமதியளித்த அளித்த டீனை இடைநீக்கம் செய்ய வேண்டும் பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்.

காளை, பசு, ஒட்டகம் போன்ற கால்நடைகளைச் சந்தைகளில் இறைச்சிக்காக வாங்கவோ, விற்கவோ கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஐஐடி.யில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று சேர்ந்த் மாட்டிறைச்சி விருந்து நடத்தினர். இதற்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விருந்துக்கு அனுமதியளித்த அளித்த டீனை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்றார். மேலும் அவர், மாடுகளைக் காப்பாற்றவே மத்திய அரசு மாட்டிறைச்சி தடையைக் கொண்டு வந்துள்ளதாகவும் தெரிவித்தார். பாரதிய ஜனதா கட்சியும் பாறையும் ஒன்று என்றும், பாஜகவுடன் மோதுவது பாறையுடன் மோதுவதற்கு சமம் என்றும் கூறியுள்ளார்.
Courtesy: Ippodhu

26/05/2017

’மதச்சார்பற்றவர்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளராக இருக்க வேண்டும்’
May 26, 2017


மதச்சார்பற்றவர்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளராக இருக்க வேண்டும் என மேற்கு வங்க மாநில முதல்வரும், திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

தற்போது ஜனாதிபதியாக இருக்கும் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதம் 25ஆம் தேதியோடு முடிவடைகிறது. இதனையொட்டி புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான பணியைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இத்தேர்தலில், மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படவுள்ளார்.

அதேபோன்று பிரதான எதிர்க்கட்சிகள் சார்பில் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக காங்கிரஸ் கட்சி, ஐக்கிய ஜனதா தளம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, திமுக, தேசியவாத காங்கிரஸ், திரினாமுல் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், பகுஜன் சமாஜ் உள்ளிட்ட 17 கட்சிகள், வெள்ளிக்கிழமை (இன்று) ஆலோசனை நடத்தின.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, நம்பகமான மற்றும் மதச்சார்பற்றவர்தான் குடியரசுத் தலைவர் வேட்பாளராக இருக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும் அவர், 17 கட்சிகளும் இணைந்து இது குறித்து ஆலோசனை நடத்தியதாகவும், ஆனால் யாரை நிறுத்துவது என்பது குறித்து முடிவெடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Courtesy: Ippothu

26/05/2017

உபி: சஹரன்பூர் செல்ல ராகுலுக்கு அனுமதி மறுப்பு
May 26, 2017

உத்தரப் பிரதேச மாநிலம், சஹரன்பூர் பகுதிக்குச் செல்ல காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : பாஜக முழுவதுமாக மோடியை ஆதரிக்கிறதா?

கடந்த செவ்வாய்க்கிழமையன்று (மே 23) , உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதி, சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷபிர்பூர் கிராமத்திற்குச் சென்றார். முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது. அப்போது நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஆஷிஸ் (24) என்பவர் கொல்லப்பட்டார். இதனையடுத்து வன்முறை மேலும் பரவியது. தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள 12 வீடுகளுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது.

இந்நிலையில் கவலரத்தால் பாதிக்கப்பட்ட சஹரன்பூர் பகுதியைக் காண காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்க உத்தரப் பிரதேச மாநில அரசு மறுத்து விட்டது. இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரிவினை மற்றும் திசைதிருப்புதல் இவற்றின் மூலம் மத்திய அரசு, தனது தோல்வியை மறைப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
Courtesy: Ippothu

25/05/2017

தொடரும் பாஜகவின் தலித் நாடகம்; ’அமித் ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும்’
-May 25, 2017


பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, மன்னிப்புக் கேட்க வேண்டும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் போர்க்கொடி தூக்கியுள்ளார்.

இதையும் படியுங்கள் : சங்கமித்ராவில் இரட்டை எழுத்தாளர்கள் சுபா

பாஜகவின் தேசியத் தலைவர் அமித் ஷா, தெலங்கானாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு, வருடந்தோறும் 20,000 கோடி ரூபாய் வழங்கி வருவதாகக் கூறியிருந்தார். இதற்கு அம்மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர், “தெலங்கானாவிற்கு வருடந்தோறும் 20,000 கோடி ரூபாய் வழங்கி வருவதாக அமித் ஷா கூறுகிறார். ஆனால் தெலங்கானாவிற்கு வெறும் 200 ரூபாய் கொடுத்ததற்கான ஆதாரம் மத்திய அரசிடம் உள்ளதா?. அமித்ஷா அப்பட்டமாக பொய் பேசுகிறார். அவர் தெலங்கானா மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார். மேலும் அவர், தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குச் சென்ற அமித் ஷா, வேறொரு இடத்தில் தயாரிக்கப்பட்ட உணவை மட்டுமே உட்கொண்டார் என்றும் சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையும் படியுங்கள் : “நட்பு வேறு, காதல் வேறு ” – ஆண்கள் இதை புரிந்துக் கொள்ளணும்

கடந்த சில தினங்களுக்கு முன்னர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவருமான எடியூரப்பா, தலித் ஒருவரின் வீட்டில், ஹோட்டல் சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Courtesy: Ippodhu

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when 'Chennai Metro' Daily Evening Newspaper posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share