ilayangudi.in

  • Home
  • ilayangudi.in

ilayangudi.in Social Server's True Life

12/11/2023

இவர்கள் ஜாதி ஓட்டை நம்பி களத்தில் குதிக்கும் மர வெட்டி inp கும்பல். உங்களை குழப்ப பல வழிகளில் பல மாதிரி பதிவுகளை போட்டு நாடகம் ஆடுவார்கள். நம்பி விடாதீர்கள். உங்கள் முயற்சியில் தொடர்ந்து செல்லுங்கள். எண்ணையை 2002 ல இதே ஜாதி கூட்டம் ஒரு பக்கம் எதிர்ப்பது மாதிரியும், இன்னொரு பக்கம் ஆதரவு கொடுப்பது மாதிரி நம்பிக்கை தந்து கழுத்து அறுத்து விட்டார்கள், அந்த பலனை
தான் நம் ஜமாத் 20 வருடமாக அனுபவித்து வருகிறது. எனக்கு பிறகு கொடிமீரன் இக்பால் அவர்களை தலைவராகவும், காதர் மீரா ஆசிரியரை பொருளாளர் ஆகவும் ஏக மனதாக தேர்ந்து எடுத்து கணக்கு வழக்குகளை ஒப்படைக்கும் கடைசி நிமிடத்தில், குழப்பத்தை உண்டு பண்ணி காதர் மீராவுக்கு தலைவர் ஆசை காண்பித்து , மீண்டும் பொதுக் குழுவை கூட்ட சொல்லி குள்ள நரித் தனதைக் கொண்டு மினிட் book பறித்து வைத்துக் கொண்டு வெறும் கையுடன் வெளியில் சென்ற என்னை, எல்லா கணக்கு வழக்கு மட்டும் இன்றி சொத்து பத்திரங்களையும் எடுத்து சென்றதாக அவதூரு கூறி அவர்கள் ஒரு முட்டால் கூட்டத்தை சேர்த்துக் கொண்டார்கள்.4 நாட்கள் அவர்கள் அலுவலகத்தை கை பற்றி கணக்கு வழக்குகளை திருத்தி 21500 பணத்தை நான் எடுத்து சென்றதாக அவதூறு பரப்பினார்கள். எப்ப என் கையில் இருந்த மிநிட் book பரிதீர்களோ அன்றுடன் எனக்கும் அந்த பொருப்புக்கும் உள்ள சம்பந்தம் முடிந்து விட்டது. இனி எதற்கும் நான் பொறுப்பு ஏற்க முடியாது. சட்டப் படியும், தர்மப் படியும் யார் கையில் minit book மற்றும் அலுவலகம் 4 நாட்களாக இருந்தtho அவர்கள் தான் முழு கணக்கு வழக்குக்கும் பொறுப்பு என சொல்லி விட்டேன். விட்டார்களா? தொடர்ந்து எனக்கு தொல்லைகள் கொடுத்து கொண்டு தானே இருந்தார்கள். இன்று அவர்களுக்கு அந்த நிலை அதற்கும் மேலான நிலை வந்த வுடன் அவர்கள் பதிவுகளையும், நாடகத்தையும் பார்த்தீர்களா? இரண்டு வாரத்திற்கு முன்பு கூட ஏதோ எண்ணையை அடித்து தொறதியது மாதிரி அவதூறு பதிவுகளை போட்டார்கள். இவர்கள் எனக்கு எதிராக காவல் நிலையத்தில், wakf வாரியத்தில் ,நீதி மன்றதிலோ எந்த குற்றத்தையும் நிரூபிக்க முடியாமல் 5 வருடத்திற்கு பிறகு ரபீக் தாவூது மூலம் மன்னிப்பு கடிதம் கொடுத்து சமாதான கொடியை பறக்க விட்டார்கள் பல லட்சம் வழகுக்கு ஜமாத் பணத்தை விரையம் செய்த பிறகு. எனக்கும் தெரியும் அவர்கள் ஆடுவது நாடகம் என்று, இருப்பினும் ஜமாத் நலனையும் என் உடல் நிலையையும் கருத்தில் கொண்டு சமாதானமாக செல்ல ஒத்துக் கொண்டேன். அவர்கள் தாடி தொப்பி வைத்து ஒருவனை ஜும்மா மேடையில் ஏற்றி அவதூறு பரப்பியும் , உள்ளூர் மக்கள் அதை நம்பாமல் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்து வாக்கும் அளித்தார்கள். ஆனால் அதன்பிறகும் எனக்கும் எண்குடும்பதிர்க்கும் பல இடையூறுகளை அவர்கள் அவதுறாகவும், பள்ளிவாசல் , icub letter pad மூலம் தந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இது எல்லாம் செய்து விட்டு உங்கள் முன்பு ஜமாத் நல விரும்பிகள் மாதிரி நாடகம் ஆடி , பல பாலியல் வழக்குகளிலும், ஊழல்களில் ஈடு பட்டு நம் ஜமாதுக்கு வெளியில் மட்டும் இல்லாமல், மாற்று மத உள்ளூர் வெளியூர் காரர்கள் மத்தியில் ஜமாத் மற்றும் முஸ்லிம்களின் மதிப்பை பெரிது இழக்க செய்துள்ளார்கள். இழந்த பெயரை மீட்கபல காலங்கள் ஆகும் என்றாலும், எனது நண்பர் சிந்தான் பாருக் மகன் ஷாகுல் சொல்வது மாதிரி, உடனடியாக நடுநிலையான நிர்வாகம் அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம்.
இப்படிக்கு கோ. மை.கா

12/11/2023

இவர்கள் ஜாதி ஓட்டை நம்பி களத்தில் குதிக்கும் மர வெட்டி inp கும்பல். உங்களை குழப்ப பல வழிகளில் பல மாதிரி பதிவுகளை போட்டு நாடகம் ஆடுவார்கள். நம்பி விடாதீர்கள். உங்கள் முயற்சியில் தொடர்ந்து செல்லுங்கள். எண்ணையை 2002 ல இதே ஜாதி கூட்டம் ஒரு பக்கம் எதிர்ப்பது மாதிரியும், இன்னொரு பக்கம் ஆதரவு கொடுப்பது மாதிரி நம்பிக்கை தந்து கழுத்து அறுத்து விட்டார்கள், அந்த பலனை
தான் நம் ஜமாத் 20 வருடமாக அனுபவித்து வருகிறது.

29/10/2023
29/10/2023
அமைதியான தேசம் அமைதி இழந்து தவிப்பது பற்றி நடிகை கஜோல்
10/07/2023

அமைதியான தேசம் அமைதி இழந்து தவிப்பது பற்றி நடிகை கஜோல்

புதுசு புதுசா உருட்டுர@னுங்க
03/03/2023

புதுசு புதுசா உருட்டுர@னுங்க

03/03/2023
04/08/2022

ஒருகுடியானவன்
ஒரு "புதிய" ஊருக்கு சென்றான்.
அந்த ஊரின் அழகையும்,
வளத்தையும் கண்டு மயங்கினான். ஆகவே
அந்த ஊரில் தனக்கென்று கொஞ்சம் "நிலம்" வாங்க எண்ணி, ஊர்த்தலைவரிடம் சென்றான்.
அவர் அவனிடம் "ஆயிரம்" ரூபாயை💰💸 வாங்கிக் கொண்டு,
ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அவர்களுடன்
சில ஊர் மக்களும்👫 சென்றிருந்தனர்.

ஊர்த்தலைவர் அவனைப் பார்த்து, 'எங்கள் ஊர் வழக்கப்படி
"ஒரு நாள்" நிலம் தருகிறோம்'
என்றார்.
'அப்படியென்றால் என்ன ???'
என்று வினவினான்
குடியானவன்.
'அதுவா,
நீ இப்பொழுது புறப்பட்டு,
எவ்வளவு தூரம் நிலத்தை சுற்றி🚶 வருகிறாயோ
அந்த நிலமெல்லாம்
உனக்கு சொந்தமாகி விடும்.
ஆனால்
இருட்டுவதற்கு முன்
நீ புறப்பட்ட இடத்தை
வந்தடைய வேண்டும்.
சிறிது தாமதித்தாலும்
உனக்கு ஒன்றுமில்லை'
என்றார்...!!!

"அதிசயமான" இந்த முறை
அவன் "ஆசையை" தூண்டி விட்டது. சரியென்று
வேட்டியை
வரிந்துக் கட்டிக்கொண்டு
அவன் ஓட🏃 ஆரம்பித்தான்.
ஆகா !
ஒரு அழகிய மாந்தோப்பு🌲,
இது கிடைத்தால்
எவ்வளவு நலம் என்று
அதையும் சுற்றி ஓடினான்.

கொஞ்ச தூரத்தில்
ஓரு பூந்தோப்பு,🌳
அருகில் பளிங்கு போன்ற
நீர் ஓடும் ஆறு💦,
அதையும் சுற்றி வளைத்துக் கொண்டான்.
துரவு வயல்🏝🏖🏕 என கண்ணில்பட்ட "எதையும்" விடாமல் சுற்றினான்.
"ஆயிரம்" ரூபாய்க்கு "எவ்வளவு" இலாபம் ???
இந்த ஊர்க்காரர்கள் எத்தனை முட்டாள்கள் ???
என எண்ணியபடி ஓடினான்🏃.
இருட்ட ஆரம்பித்தது.

"நிபந்தனை" நினைவுக்கு வர
தான் கிளம்பின இடத்தை
நோக்கி விரைந்தான்🏃.
கால்கள் தடுமாறின.
"இதயதுடிப்பு💖" தாறுமாறாக
ஓட ஆரம்பித்தது.
வியர்த்து ஊற்றியது.
நா👅 வறண்டது.
கண்கள்👀 ஒளி மங்கின.
தள்ளாடினவனாக🚶
எப்படியோ இடத்தை வந்து சேர்ந்தான். ஊர்மக்கள் அவனை கரம் தட்டி👏 வரவேற்றனர்.
சில நொடிக்குள்
சாய்ந்து விழுந்தான்.
விழுந்தவன் எழுந்தரிக்கவே இல்லை. '"இனி ஆறடி நிலம்"' தான் தேவை
அவனை புதைக்க'⚰
என்றார்
ஊர்த்தலைவர்....???

அந்த குடியானவன்
தான் "ஆசைப்பட்ட"💟
"அனைத்தையும்" தனக்கு சொந்தமாக்கினான்.
ஆனால்
தன் உயிரையோ
இழந்து விட்டான்....???

நம்மில் அநேகரின் ஓட்டம்🚶🏃
"இப்படித்தான்"
இருக்கிறது.
எதிர்காலத்திற்காக
சேமிப்பு,
பிள்ளைகளுக்காக
ஓவர் டைம் சம்பாத்தியம்💸,
ஞாயிற்றுக் கிழமைக்கூட
😇, குடும்பத்தோடு👨‍👨‍👧‍👦
செலவழிக்க மனமில்லை....!!!
அவர்களது "ஒரே நோக்கம்"
சம்பாதிப்பது.
கை நிறைய சம்பாத்தியம் 💸💰
உள்ளது,
ஆனால்
உள்ளத்திலோ கவலை💘,
பிள்ளைகள்
மனம் போன போக்கில்
வளர்ந்ததால்
அவர்களைக் குறித்ததான "கவலை💔",
இதனால் என்ன பயன் ???
பிள்ளைகளோடும்👨‍👩‍👦‍👦,
குடும்பத்தோடும்
சந்தோஷமாக😁 இருக்க வேண்டிய காலங்களில் உழைத்து,
உழைத்து
"வீணாக்கின" நாட்கள் திரும்பவும் நினைத்தாலும் வருமா ???

*மனுஷன்👫*
*உலகம்🌎 முழுவதையும்* *ஆதாயப்படுத்திக்கொண்டாலும்👍,*
*தன் ஜீவனை💕 நஷ்டப்படுத்தினால்* *அவனுக்கு*
*"லாபம்" என்ன ???
*மனுஷன் தன்
* *ஜீவனுக்கு ஈடாக*
*என்னத்தைக்*
*கொடுப்பான் ???*

நம் "ஆத்துமா"💗
விலையேறப்பெற்றது...!!?
நம் சரீரத்திற்கென்று
எத்தனை "முயற்சிகள்"
எடுத்துக் காத்துக் கொள்கிறோமா
அதைப் போன்று
"ஆத்துமாவையும்❣"
காத்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்திற்கென்று👨‍👩‍👦‍👦 கொடுக்க வேண்டிய "நேரத்தை"
குடும்பத்திற்கும்
கொடுக்க வேண்டும்....!!!

வருட முழுவதும்
சம்பாதித்து விட்டு,
குடும்பத்தை
இழந்துப் போவோமானால்
"எத்தனை" பரிதாபம் ??? 😭😱

படித்ததில்
பிடித்தது..

14/07/2022

நல்ல சுவடுகளை விட்டுச் செல்வோம்..!
==========================

தினமும் அதிகாலைத் தொழுகைக்குப் பின்னர் அபூபக்கர் (ரலி) அவர்கள், பள்ளிவாசலை விட்டு வேகமாக வெளியேறி மதீனாவின் எல்லையில் இருக்கும் ஒரு குடிசை வீட்டுக்குச் செல்வதையும் சற்று நேரத்திற்குப் பின்னர் அங்கிருந்து வெளியேறுவதையும் உமர் (ரலி) கவனித்தார்.

அபூபக்கர் (ரலி) எனென்ன நல்ல காரியங்கள் செய்கிறார் என்பது பெரும்பாலும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியும். ஆயினும் இந்த விஷயம் மட்டும் தெரியவில்லை.

நாட்கள் நகர்ந்தன. கலீஃபா அபூபக்கர் (ரலி) அவர்களோ தொடர்ந்து அந்த குடிசை வீட்டுக்குச் சென்று கொண்டே இருந்தார். அங்கு சென்று அவர் என்ன செய்வார் என்பதும் உமர் (ரலி) அவர்களுக்குத் தெரியாமலே இருந்தது.

ஒருநாள்….
அபூபக்கர் (ரலி) வெளியே சென்ற பின்னர், அந்த குடிசைக்குச் சென்று என்ன நடக்கிறது என்பதை பார்த்தே தீரவேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் உமர் (ரலி).

குடிசைக்குள் நுழைந்தார்… வயதான பார்வையற்ற நடக்க இயலாத ஒரு மூதாட்டி இருப்பதைக் கண்டார்.

பின்னர் குடிசையைக் கவனித்தார். கண்ட காட்சி ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

கண் தெரியாத இந்த மூதாட்டி அபூபக்கர் (ரலி) அவர்களின் உறவினராக இருக்குமோ என்ற எண்ணத்தில் அவரிடம் உமர் (ரலி) கேட்டார்:

"தினமும் ஒருவர் இங்கே வருகிறாரே அவர் இங்கு வந்து என்ன செய்வார்?”

மூதாட்டி: "அருமை மகனே, அல்லாஹ்வின் மீது ஆணை! அவரைக் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. தினமும் காலையிலேயே இங்கு வருவார். வீட்டைத் துடைத்து சுத்தம் செய்வார்.
ஆட்டிலிருந்து பால் கறப்பார். எனக்கு உணவு சமைத்துத் தருவார். பின்னர் எதுவும் பேசாமல் திரும்பிவிடுவார்”.

அது கேட்ட உமர் (ரலி) குலுங்கிக் குலுங்கி அழுதவராக வீட்டைவிட்டு உடனே வெளியேறிவிட்டார்.

அபூபக்கர் (ரலி) மரணித்த பின்னர், அந்த மூதாட்டிக்கு பணிவிடை செய்யவேண்டும் என்றும் அபூபக்கர் (ரலி) மரணமடைந்த செய்தியை அந்த மூதாட்டிக்குத் தெரிவிக்க வேண்டாம் என்றும் உமர் (ரலி) தீர்மானித்தார்.

அந்த குடிசைக்குச் சென்றார். முதல் நாளே அந்த மூதாட்டி கேட்டார்:

"உமது நண்பர் மரணித்துவிட்டாரோ…?”

உமர் (ரலி) திடுக்கிட்டார். திகைப்புடன் கேட்டார்: "உங்களுக்கு எப்படி அது தெரிந்தது?”

மூதாட்டி: நீர் எனக்கு உண்ணத் தரும் பேரீத்தப் பழத்தை விதை நீக்காமல் தருகிறீர். உமது தோழர் விதை நீக்கித் தருவார்”.

நடுங்கத் துவங்கிவிட்டார் உமர் (ரலி).
நிற்க முடியாமல் தரையில் அமர்ந்தார். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோடியது.

அப்போதுதான் அந்தப் புகழ்பெற்ற வாசகத்தைக் கூறினார் உமர் (ரலி):

"உமக்குப் பின்னர் வரவிருக்கும் கலீஃபாக்களுக்குப் பெரும் சுமையை விட்டுவிட்டுச் சென்றுவிட்டீரே அபூபக்கரே…!”

இப்போது நாம்…

அபூபக்கர் (ரலி) அவர்களுக்காக அழுவதா…?

உமர் (ரலி) அவர்களுக்காக அழுவதா..?

அல்லது கொஞ்சம் கொஞ்சமாக நம்மை விட்டு அகன்று கொண்டிருக்கும் நல்ல பண்பாடுகளுக்காக அழுவதா…? தெரியவில்லை.

மரணிக்கு முன் நல்ல சுவடுகளை விட்டுச் செல்வோம். ஏனெனில் நாம் விட்டுச் செல்லும் சுவடுகள் அனைத்தும் பதிவு செய்யப்படுகின்றன.

"அவர்கள் விட்டுச் சென்ற சுவடுகளையும் நாம் பதிவு செய்து கொண்டிருக்கிறோம்” (36:12)

11/07/2022

மக்களால் விரும்பப்படாத ஆட்சிக்குப் பெயர் சர்வாதிகார ஆட்சி;
சர்வாதிகாரம் தற்காலிக வெற்றி தரும்; ஆனால் நிரந்தரமாக தோற்றுப் போகும்.

இலங்கை அதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கைக்கு வந்த இந்த நாள்,
பக்கத்து நாட்டிற்கு...?
பொறுமையுடன் காத்திருப்போம்!

08/07/2022

1990 ம் ஆண்டிற்கு முன்பு பிறந்தவர்கள் கட்டாயம் படிக்கவேண்டியவை சிரிப்போடு கண்ணீர் வரும்!!!

1990 ம் ஆண்டிற்கு முன்னர் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்த அருமை புரியும்.

♥1990க்கு முன்பு நம் வாழ்க்கை எப்படி இருந்தது…

♥காலை எழுந்ததும் பசும்பால் வாங்க அப்பா வரிசையில் நின்றிருந்தார்.

♥வாங்கி வந்த தண்ணீர் கலக்காத பாலில், அம்மா டீ போட்டு கொண்டு வந்தார். குடும்பத்துடன் அமர்ந்து டீ குடிப்பதை கூட அவரவர் முகத்தை பார்த்து ரசித்து குடித்தோம்.

♥ஆர்ப்பாட்டமே இல்லாமல் நாம் அனைவரும் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு கூட நடந்தே சென்றோம்…

♥ஆசிரியரின் மீது மரியாதையும் பயமும் இருந்ததே தவிர ஒரு நாளும் ஆசிரியரை தரக்குறைவாகவோ, இழிவாகவோ ஒரு மாணவனும் நினைத்ததில்லை…

♥பள்ளி முடித்து வீட்டுக்கு வந்ததுமே, பையை தூக்கி போட்டுவிட்டு தெருவில் கும்பலாக விளையாடினோம்…

♥விளையாட்டில் கூட ஆங்கிலம் கலக்காத தமிழ் நம் அனைவர் நாவிலும் வீரியமாக தொற்றியிருந்தது…

♥மாலை 4 மணிக்கு மேல் நம் அக்கா தங்கைகளுக்கு அம்மா அழகாக சடை போட்டுவிட்டார்…

♥உதிரியாக வாங்கிய பூக்களை (மல்லி மற்றும் பிச்சிப்பூ) வாழை நாறால் சிறுசிறுக கட்டி, அதை அக்கா தங்கைக்கு அம்மாவே தன் கையால் குத்தி அழகு பார்த்தார்…

♥மாலையில் நம் தாத்தாவும் அப்பாவும் ஒன்றாக அமர்ந்து தூர்தர்ஷனில் செய்திகள் பார்த்தார்கள்…

♥வெள்ளிக்கிழமையன்று, குறைந்தபட்சம் 10பேராவது ஒன்றாக அமர்ந்து இரவு ஒளியும் ஒலியும் பார்த்தோம்…

♥அம்மாக்களுக்கு அன்று சீரியல் என்றாலே என்னவென்று பொருள் தெரியாமல், வீட்டு வாசலில் அமர்ந்து நம் விளையாடுவதை வேடிக்கை பார்த்தனர்…

♥ஊர வைத்த அரிசியை ஆட்டுக்கல்லில் போட்டு அம்மா இட்லிக்கு மாவை அரைத்தார்…

♥அதிகபட்ச அப்பாக்களுக்கு சிகரெட் மற்றும் குடிப்பழக்கம் இல்லாமல் இருந்தது…

♥ஞாயிற்றுகிழமை மதியம், தூர்தர்ஷன் மாநில மொழி திரைப்படத்தில் தமிழ் படம் வராதா என ஏங்கி இருக்கிறோம்…

♥ஞாயிறு மாலை டிவியில் திரைப்படம் பார்ப்பதால் தெருவில் ஈ காக்கைகள் கூட பார்க்க முடியாத சூழ்நிலை இருந்தது…

♥ஞாயிறு பார்த்த படத்தை பற்றிய விவாதம் திங்களன்று பள்ளி நண்பர்களிடத்தில் தொடர்ந்துகொண்டே இருந்தது…

♥உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் அவர்களுக்காக வாங்கிய குளிர்பானத்தில் நமக்கும் கொஞ்சம் தருவார்கள் என காத்து கொண்டிருந்தோம்…

♥தீபாவளி ரம்ஜான் என பண்டிகை காலங்களில் புதுத்துணி எடுக்க குடும்பத்துன் ஒன்றாக சேர்ந்து போனோம்… அம்மா அப்பா வாங்கி கொடுத்த துணியை மட்டுமே அணிந்து அழகு பார்த்தோம்…

♥ஒரு தெருவிற்கு இரண்டு பேர் காதலிப்பதே அபூர்வமாக இருந்தது… அன்றைய காதலர்கள் காதலில் தோற்றால் தற்கொலை செய்துகொண்டனர்…

♥பண்டிகை காலம் வந்தால் வாழ்த்து அட்டை (க்ரிட்டிங் கார்டு) வாங்க கடைகளில் அலை மோதினோம்…

♥10வது மற்றும் 12வது ரிசல்ட் பார்க்க தினத்தந்தி வாசலில் தவம் கிடந்தோம்…

♥யாராவது போன் (சாதாரண cardless phone ) வைத்திருந்தால் அதை ஆச்சரியமாக வாங்கி தொட்டு பார்த்தோம்…

♥நம் அக்காவும் தங்கையும் குதிரை வால் சடை போட்டு வீதிகளில் வலம் வந்தனர்…

♥பணக்கார வீட்டு இளம் பெண்கள் BSA SLR சைக்கிள் வைத்திருந்தார்கள்…

♥10ல் குறைந்தபட்ச 8 வீட்டில் உள்ள குழந்தைகளிடம் உண்டியல் பழக்கம் இருந்தது…

♥போன கரண்ட் திரும்ப வந்ததும் கை தட்டி ஆரவாரப்படுத்தினோம்…

♥வருடத்திற்கு ஒருமுறை குடும்பத்துடன் சினிமாவுக்கு போவதே பெரிய விஷயமாக இருந்தது…

♥வீட்டில் யாருக்காவது திருமணம் நடந்தால், கிடைக்காத எதோ ஒரு அபூர்வ பொருள் கிடைத்தது போல் மிகுந்த மகிழ்ச்சிடன் காணப்பட்டோம்…

♥ஊருக்கே ஒருவரோ இருவரோதான் வெளிநாட்டில் வேலை பார்ப்பவராக இருந்தார்…

♥10ல் 8 கன்னிப் பெண்களின் தார்மீக ஆடை தாவணியாக இருந்தது…

♥10ல் 8 ஆண்களிடத்தில் கைலி கட்டும் பழக்கம் இருந்தது…

♥பள்ளி விடுமுறை காலத்தை வெளியூரில் உள்ள தாத்தா, மாமா, சித்தப்பா, பெரியப்பா வீட்டிற்கு சென்று விழா போல கொண்டாடினோம்…
♥கிணற்றில் குளிக்கும் பழக்கம் இருந்தது…
பலருக்கு நீச்சல் தெரிந்திருந்தது…
அடிக்கடி காய்ச்சல், தலைவலி வந்தது கிடையாது…

♥பலசரக்கு கடைகளுக்கு போகும்போது மஞ்சள் பைகளையே உபயோகித்தோம்…

♥தரையில்தான் அதிகபட்சம் உறங்கினோம்… பாயை தவிர வேறொன்றை கண்டதில்லை…

♥12 மணி நேரம் உழைத்தாலும் உடலில் வியர்வை நாற்றம் வந்தது கிடையாது…

♥இவை அனைத்தையும் விட அப்பா அம்மா சொல்படி கேட்டு அனைவரும் நடந்தோம்…

♥உலகிலுள்ள அத்துனை வசதிகளும் அருகிலேயே இருந்தால் கூட, இன்று இவற்றில் ஒன்று கூட சாத்தியமில்லை… பழைய பொக்கிஷங்கள் ஒன்று கூட கிடைக்கப் போவதில்லை… அன்றைய வாழ்நாள்தான் சொர்க்கம்…

08/03/2022

அஸ்ஸலாமு அலைக்கும்

18/02/2022
18/02/2022

*தராசிற்கு நியாயமெல்லாம் தெரியாது,எந்தப்பக்கம் கணமா இருக்கோ,அந்தப்பக்கம் சாய்ந்து விடுமுங்க,சில மனிதர்களும் அப்படித் தாங்க😭*

18/12/2021

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

மிக இக்கட்டான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த என் ஆருயிர் அக்கா நசிமா பானு அவர்களின் உயிர்நாடி கடினமான போராட்டத்தின் முடிவில் மரணத்தை தழுவி கொண்டார்😭💔

இறைவா எங்கள் தேவதையை பொருந்தி கொண்டு அந்த அழகிய செல்லத்தை இழந்து வாடும் எங்கள் அனைவருக்கும் அழகிய பொறுமையை தந்து அருள்புரிவாயாக.

*மவுத் அறிவிப்பு*

இடம்: சென்னை. நாள்:10-12-2021

வல்ல ரஹ்மான் அவரின் பிழை பொறுத்து உயர் சுவனம் அளிப்பானாக ! ஆமீன் !

மறுமை வெற்றிக்கு துஆ செய்வோம்.
எங்களுடன் மருத்துவமனையில் நின்று தொடக்கம் முதல் இறுதிவரை உதவி செய்த, துஆ செய்த அத்துணை உள்ளங்களுக்கும் நன்றி

10/12/2021

இன்னால் லில்லாஹி வஇன்ன இலைஹி ராஜிவூன்! 10/12/21

மர்ஹூம் #கோஸ் மைதீன்காதர் ( INP முன்னால் டிரஸ்டி மற்றும் இளையான்குடி பேரூராட்சி உப தலைவர் ) மகளும், மர்ஹூம் #நாடாயாசீன் மருமகளும், செய்யது இபுறாகிம், வெள்ளை சாகுல், ஆசீக், இஸ்மாயில் ஆகியோரின் சகோதரியும், கலிமுல்லா மனைவி நஷிமா பானு சற்றுமுன் சென்னையில் மெளத்து! அன்னாரின் ஜனாஸா திருவல்லிகேனியில் ஆதம் மார்க்கெட் அருகில் அப்பாவு தெரு வில் இருந்து காலை 10 மணிக்கு எடுத்து சென்னை ராயப்பேட்டை கபரஸ்தான் இல் நல்லடக்கம் செய்யப்படும்

*திருச்சி கருமண்டபத்தில் சிறப்பாக இயங்கி வரும் எங்களது இன்ஸ்டியூட்.**உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு 100% உறுதியளிக்கி...
24/08/2021

*திருச்சி கருமண்டபத்தில் சிறப்பாக இயங்கி வரும் எங்களது இன்ஸ்டியூட்.*

*உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு 100% உறுதியளிக்கிறோம்.*

*இந்த தகவலை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு ஷேர் செய்யுங்கள். நீங்கள் ஷேர் செய்வதன் மூலம் அவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.*

*உணவு தங்குமிடம் இலவசம்*

*SMART TECH SKILL AND PLACEMENT PVT LTD.*
No : 6-A, SM NIVAS (1ST FLOOR), JP NAGAR, P**L *PANNAI BUS STOP, KARUMANDAPAM, TRICHY - 620001* .
*PH NO : 0431-4012409 / 99405 31137 / 74017 56667.*
*www.smartplacement.in*
Email ID : *[email protected]*

*திருச்சி கருமண்டபத்தில்*
________________________
*1. செல்போன் பழுதுபார்த்தல் பயிற்சி( CELL PHONE COURSE)*
*பயிற்சி கட்டணம் : 6500/-*
*தினசரி -2 மணி நேரம்*
*1 மாதம்*

________________________
*2. லேப்டாப் பழுது பார்த்தல் பயிற்சி (LAPTOP SERVICE COURSE)*
*பயிற்சி கட்டணம் : 8600/-*
*தினசரி -2 மணி நேரம்*
*1 மாதம்*

______________________
*3. கம்ப்யூட்டர் பழுது பார்த்தல் பயிற்சி (COMPUTER SERVICE COURSE)*
*பயிற்சி கட்டணம் : 6000/-*
*தினசரி -2 மணி நேரம்*
*1 மாதம்*

________________________
*4. ஜெராக்ஸ் மிஷின் பழுதுபார்த்தல் பயிற்சி(XEROX MACHINE TRAINING)*
*பயிற்சி கட்டணம் : 25,000/-*
*தினசரி - 8 மணி நேரம்*
*1 மாதம்*
(வெளிநாடு அல்லது தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அமைத்து தரப்படும்)

*உணவு தங்குமிடம் இலவசம்*
________________________
*5. பிரிண்டர் பழுதுபார்த்தல் பயிற்சி* *(PRINTING SERVICES TRAINING*)
*பயிற்சி கட்டணம் : 10000/-*
*தினசரி - 3 மணி நேரம்*
*1 மாதம்*
(வெளிநாடு அல்லது தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அமைத்து தரப்படும்)

________________________
*6. A/C, (SPLIT, WINDOW A/C பழுதுபார்த்தல் / பொருத்துதல் பயிற்சி.*
*பயிற்சி கட்டணம் : 18,000/-*
*தினசரி - 8 மணி நேரம்*
*1 மாதம்*
(வெளிநாடு அல்லது தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அமைத்து தரப்படும்)

*உணவு தங்குமிடம் இலவசம்*
________________________
*7. LED / LCD TV பழுதுபார்த்தல் பயிற்சி.*
*பயிற்சி கட்டணம் : 8600/-*
*தினசரி -2 மணி நேரம்*
*1 மாதம்*

________________________
*8. சோலார் பவர் சிஸ்டம் பொருத்துதல் பழுதுபார்த்தல் பயிற்சி.*
*பயிற்சி கட்டணம் : 8000/-*
*தினசரி -8 மணி நேரம்*
*3 நாள்*
________________________
*9. CCTV பொருத்துதல் மற்றும் பழுது பார்த்தல் பயிற்சி.*
*பயிற்சி கட்டணம் : 7000/-*
*தினசரி -8 மணி நேரம்*
*4 நாட்கள்*
________________________
*10. பிரிட்ஜ் / வாஷிங் மெஷின் (FRIDGE WASHING MACHINE) பழுதுபார்த்தல் பயிற்சி.*
*பயிற்சி கட்டணம் : 18000/-*
*தினசரி - 3 மணி நேரம்*
*1 மாதம்*

*உணவு தங்குமிடம் இலவசம்*
________________________
*11. UPS & INVERTER பொருட்கள் பழுதுபார்த்தல் பயிற்சி.*
*பயிற்சி கட்டணம் : 8000/-*
*தினசரி - 8 மணி நேரம்*
*3 நாட்கள்*
________________________
*12. GST PRACTITIONER (விற்பனை / கொள்முதல் வரி கணக்கு பயிற்சி)*
*பயிற்சி கட்டணம் : 7500/-*
*தினசரி - 2 மணி நேரம்*
*15 நாட்கள்*
(தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அமைத்து தரப்படும்)

________________________
*13. TALLY ERP - 9 ( கணக்காளர்) பயிற்சி*
*பயிற்சி கட்டணம் : 30000/-*
*தினசரி - 8 மணி நேரம்*
*3 மாதம்*
*(தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அமைத்து தரப்படும்)*
*(தங்குமிடம் இலவசம்)*

_________________________
*14. TDS RETURN FILING பயிற்சி சுயதொழில் வேலை வாய்ப்பு பயிற்சிகள் சிறு தொழில் கற்றுக் கொள்ளுங்கள் பகுதி நேர முழு நேர வருமானம் உருவாக்கிக் கொள்ளுங்கள் அனைத்தும் செயல்முறை பயிற்சி வகுப்புகள்(PRACTICAL CLASS)*
*பயிற்சி கட்டணம் : 2000/-*
*தினசரி - 3 மணி நேரம்*
*5 நாட்கள்*
________________________
*15. HVAC TECHNICIAN பயிற்சி.*
*பயிற்சி கட்டணம் : 25000/-*
*தினசரி - 4 மணி நேரம்*
*3 மாதம்*
உணவு தங்குமிடம் இலவசம்

*(GOVT. OF INDIA CERTIFICATE ISSUED)*
_________________________
*வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஆலோசனை மற்றும் நேர்முகத் தேர்வுக்கான ஆலோசனை வழங்கப்படும்.*
_________________________

*ஆங்கிலம் மற்றும் ஹிந்தி பயிற்சி வகுப்புகள் சிறந்த முறையில் கற்று தரப்படும்.*
____________________________

Xerox machine technician/ service repair maintenance Training cm Gulf country placement and local placement

01/08/2021

இலையில் இருந்து கோடை நோக்கி (இரு சக்கர வாகனத்தில்) சென்ற இளைஞர்கள் இருவர் விபத்துக்குள்ளாகி ஒருவர் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று இன்னொருவர் கவலைக்கிடம் விவரம் விரைவில்

19/06/2021

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
எனது தகப்பனாரின் வளர்ப்பில் அரவணைப்பில் அறிவுரையி்படி வளர்ந்த இவரும் இவருடைய சகோதரர் ராஜா முகம்மது ஆகியோரும் இளம் வயதில் அடுத்து அடுத்து சிறு வயதில் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக் கொண்டதை நினைத்து மனம் வருந்தி துஆ செய்தவனாக, தங்களின் துஆ வேண்டியும்

இளையான்குடி வாவணன் அப்துல் ரஜாக் மகனும், கோஸ் முகைதீன் காதர் அவர்களின் அக்காவின் ( சைத்தூன்) மகணுமாகிய
#நைனா முகமது # அவர்கள்
நேற்று இரவு
வபாத் ஆகி விட்டார்கள் அன்னாரின் ஜனாசா
திருவல்லிக்கேணி முக்தாருநிஷாபேகம்தெரு ஆதம்மார்கெட். வீட்டிலிருந்து எடுத்து சென்று இன்று 12.30 pm இன்ஷா அல்லாஹ் ராயப்பேட்டை கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்படும்
ஆசிக் 9841143786

26/05/2021

இளையான்குடி மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் மர்ஹும் சௌகத் அலி அவர்களின் மகளும், இளையான்குடி டாகடர் ஜாகிர் உசேன் கல்லூரியின முன்னாள் முதல்வர் மர்ஹும் லியாகத் அலி அவர்களின் மனைவியும், இளையான்குடி மேல்நிலைப்பள்ளி முதுகலை விலங்கியல் ஆசிரியர் S.சாகுல்ஹமீது அவர்களின் சகோதிரியுமான S. ஷஜரத் அவர்கள் மதுரையில் மெளத்து (மரணம்) அன்னாரின் ஜனாசா மதுரையில் நல்லடக்கம் செய்யப்படும். அவர்களின் மறுமை வாழ்விற்கு பிரார்த்திக்குமாறு வேண்டுகிறோம்.

 #இளையான்குடியை சேர்ந்தகலீபாஅப்துல்அஸீம்அவர்களின்மறைவுஇஸ்லாமியசமூகத்திற்க்குமிகப்பெரியஇழப்பே!...கலீபா அப்துல் அஸீம் அவர்...
17/05/2021

#இளையான்குடியை சேர்ந்தகலீபாஅப்துல்அஸீம்அவர்களின்மறைவுஇஸ்லாமியசமூகத்திற்க்குமிகப்பெரியஇழப்பே!...

கலீபா அப்துல் அஸீம் அவர்கள் அன்றைய முத்துராமலிங்கம் மாவட்டம் இளையாண்குடியில் பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்கள். கலீபா அஸீம் அவர்கள் பள்ளிப்பருவம் முதலே படிப்பில் சிறந்து விளாங்கினார்கள். அதன் விளைவாக அந்த கிராமத்திலேயே நன்றாக படித்த இளைஞனா அறியப்பட்டார்கள். பள்ளி ஆசிரியர்கள் முதல் அவருக்கு பல்வேறு வழிகாட்டிகள் அவரின் படிப்பில் கவணம் செலுத்தினார்கள். அதன் விளைவாக தனது கல்லூரிப்படிப்பை முடித்த உடன் இந்திய கப்பல்படைக்கு தேர்வு எழுதினார்கள். இத்தேர்விலும் கலீபா அஸீம் அவர்கள் வெற்றி பெற்றார்கள். இந்திய கப்பல் படையிலும் தேர்வானார்கள். இந்திய கப்பல் படையில் காணப்பட்ட மதரீதியான பாகுபாடுகளின் விளைவாக இந்திய கடற்படையை விட்டு விலகினார்கள்.

கலீபா அப்துல் அஸீம் அவர்கள் சிறு வயது முதலே ஆங்கிலத்தின் மீது கொண்ட காதலால் ஆங்கில மொழியில் புலமை பெற்றவராக திகழ்ந்தார். இந்திய கடற்படையை விட்டு விலகிவுடன் பெரும் நிருவனங்களின் வெளிநாட்டு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்கள். இதிலும் தனது திறமையால் சிறந்து விளங்கினார்கள்.

கலீபா அஸீம் அவர்களின் தந்தை, தன் மகனுக்கு அவர்களின் உறவினரில் சீறும் சிறப்பும் வாய்க்கப்பெற்ற பெண்மணியை வாழ்க்கை துனையாக தேர்ந்தெடுத்தார்கள். கலீபா அஸீம் அவர்கள் தனது தந்தையின் விருப்பதிற்க்கு இணங்க அப்பெண்மணியை திருமணம் செய்தார்கள்.

கலீபா அஸீம் அவர்கள் இதுவரை 80க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பணியாற்றியுள்ளார்கள். கலீபா அஸீம் அவர்களின் அறிவு மட்டும் பொக்கிஷம் அல்ல அவர்களின் அனுபவமே எல்லா துறைச்சார்ந்த மாணவர்களுக்கு வழிகாட்ட போதுமான ஒன்றே. கலீபா அஸீம் அவர்கள் கப்பல்களில் நீண்ட நாட்கள் பயணம் செய்ய வேண்டிவரும். இது போண்ற ஒரு தருணத்தில் சிறந்த கேப்டன் ஒருவருடன் பயணிக்க வாய்ப்பு கிடைக்கிறது. கேப்டன், கலீபா அஸீம் அவர்களின் திறமையை கண்டு அவரின் அறிவை மெருகூட்டும் விதமாக பல்வேறுப்பட்ட துறை சார்ந்த புத்தகங்களை எவ்வாறு படிப்பது மற்றும் படித்தவற்றை எவ்வாறு நினைவில் வைத்துகொள்வது என, ஒரு புத்தகத்தினை படித்த பிறகு அந்த புத்தகம் சார்ந்து கலந்தாய்வு செய்து கற்றுக்கொடுத்திருக்கிறார்.

கலீபா அஸீம் அவர்கள் மேலைநாட்டிலே அதிகம் வளர்ந்தால் இந்தியா வரும் சமயங்களில் இந்திய மாணவர்களின் கல்வி கற்கும் முறை மற்றும் அவர்களின் மனோநிலை அறிந்துகொள்கிறார். அதன் விளைவாக தனது வெளிநாட்டு வேலைகளை உதரித்தள்ளிவிட்டு சென்னையில் ஹிரா ஆங்கில மொழி பயிற்றுவிக்கும் கல்வி நிலையத்தினை தொடங்கி தமிழ்வழிபயின்ற மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுத்தார்கள்.

கலீபா அஸீம் அவர்கள் எப்போதும் முகம்மது பிக்தள் அவர்களின் ஆங்கில மொழிப்பெயர்ப்பு குரானை வாசித்துக்கொண்டே இருப்பார்கள். பல்வேறு இஸ்லாமிய புத்தகங்களை பயின்றவர்கள்.
மேலும் கலீபா அஸீம் அவர்கள் சென்னை பல்கலைகழகம் நூலகம், கண்ணீமார நூலகம், பிரிடீஸ் நூலகம் மற்றும் உலகின் பல்வேறு நூலகங்களிலேயே தன் வாழ்நாளினை கழித்தவர்கள்.

கலீபா அஸீம் அவர்கள் அர்ரஹீக் அல்மக்தூம் என்ற முகம்மது நபிகளின் வாழ்க்கை வரலாற்றினை ஆங்கிலத்தில் எழுதியவர்கள். இன்னும் பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் எழுதியுள்ளார்கள். கலீபா அஸீம் அவர்களின் வாழ்க்கையே இளைய தலைமுறைக்கு மிகப்பெரிய படிப்பினையே.

ஆம் 1980 களில் மற்றவர்கள் பொண்ணையும், பொருளையும் சேர்த்த போது கலீபா அஸீம் அவர்கள் தான் சம்பாரித்த பணத்தில் பாதிக்கும் மேல் அறிவுக்கே செலவிட்டார்கள்.

யா அல்லாஹ்! கலீபா அஸீம் அவர்களின் பாவங்களை மண்ணித்து ஜென்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் சுவனத்தினை கொடுப்பானாக... ஆமீன்.

குறிப்பு: இந்த கட்டுரையை எழுதிய நான் ராவுத்தர் நைனா முகம்மது-வழக்கறிஞர், கலீபா அஸீம் அவர்களின் ஆஸ்தான மாணவர்களில் ஒருவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
தகவல் adv. நைனா

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்மர்ஹீம் கலிபா ஹமீது சுல்தான் அவர்கள் மகனும் கலிபா காலித் , ஜினைத் அன்சாரி( SDPI மத்த...
17/05/2021

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

மர்ஹீம் கலிபா ஹமீது சுல்தான் அவர்கள் மகனும் கலிபா காலித் , ஜினைத் அன்சாரி( SDPI மத்திய சென்னை மாவட்டத்தலைவர்) அவர்களின் தந்தையுமான அப்துல் அஸிம் அவர்கள் இன்று(17 -05 - 2021) மெளத்து.

அண்ணாரின் ஜனாஸா இளையான்குடி கலீபா தெருவிலிருந்து நாளை காலை 9 மணிக்கு ( 18-05-2021 செவ்வாய்க் கிழமை) எடுக்கப்படும்

எனது நண்பனின் தகப்பனார் என்பதை விட (சிறு வயது முதல் பேசிப் பழகி இருந்தாலும்) 2008 ககுப் பிறகு மூர் தெருவில் Hira English institute என நடத்திய காலம் தொடங்கி எனக்கு ஒரு நண்பனை போல் கடந்த 13 வருட காலமாக பல்வேறு website பண்ணுவதிலும் அவர்கள் book எழுதுவதிலும் நீண்ட நேரம் செலவு செய்து சிறு பிள்ளைகள் போல பேசிப் பழகிய மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய மூத்த நண்பர் இறந்து விட்டார் என்ற அதிர்ச்சி செய்தி அறிந்து மன வேதனை அடைந்து அல்லாஹ்விடம் அவருடைய பாவங்களை மன்னித்து மறுமை வெற்றிக்கு துஆ செய்தவனாகா...

மறக்க முடியவில்லையே!!! சிறு வயது முதல் பேசி பழகிய பெரிய வயது நண்பர், ஆசிரியர் , பெரியவர் ஆலோசகர் என எனக்கு பன்முகத்தன்மை...
22/03/2021

மறக்க முடியவில்லையே!!! சிறு வயது முதல் பேசி பழகிய பெரிய வயது நண்பர், ஆசிரியர் , பெரியவர் ஆலோசகர் என எனக்கு பன்முகத்தன்மை கொண்ட இனியவர் நல்லவர்

உங்கள் நண்பர் எங்கள் வீட்டிற்க்கு விருந்தாளியாக என் தகப்பனார் மூலம் வந்த நாள் முதல் அனேகமாக நான் 7 அல்லது 8 வாது படித்த நினைவு அன்று முதல் நான் இறுதியாக இளை வந்த நாள் வரை உங்களுடன் உரையாடிய நினைவை மறக்க முடியவில்லை sir. ஒவ்வொரு கால கட்டத்திலும் நீங்கள் பேசிய வார்த்தைகள் என் எண்ண ஓட்டத்தில் ஓடிக் கொண்டே உள்ளது இரண்டு தினங்களாக. சென்னை வரும் பொழுதெல்லாம் வருவதற்கு முன்பே தொலை பேசியில் கூறுவீர்கள். சென்னையில் இருக்கும் நேரங்களில் இளை செல்லும் கடைசி நேரம் வரை எங்கள் கடையில் உங்களுடன் பேசிய நினைவலைகள் மறக்க முடியவில்லையே இப்பொழுது சொல்லாமலே சென்று விட்டீர்களே. நீங்கள் முந்திக் கொண்டீர்கள். நாங்கள் பின்னால் வருகிறோம்
இன்ஷா அல்லாஹ் ஒன்றாக சொர்க்கத்தில் நீண்ட நெடுநாள் ஒன்றாக வாழ்வோம்.
+மண்டபத்தில் இருந்து இளை வந்து பள்ளி எதிரில் குடி அமர்ந்து கலீபா தெருவிற்கு குடி மாறி கலீபா நகரில் நிரந்தர குடி போய் தற்பொழுது மண்டபம் சென்று நீண்ட நேரம் ஓய்வு எடுக்க மன்னரை சென்று விட்டீர்களா?!,,,,"

இன்னா லில்லாஹி வஇன்னா
இலைஹி ராஜிவூன்!இறைவா!

இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!
இன்னும் இவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையைத் தந்திடுவாயாக!😔😔😔

இன்னாலில்லாஹி வ இன்னா  இலைஹி ராஜிவூன்மறைந்த எனது பேராசிரியர் லியாக்கத் அலி அவர்களின் ஜனாஸா இன்று 21.3.21 மதியம் இளையான்க...
21/03/2021

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
மறைந்த எனது பேராசிரியர் லியாக்கத் அலி அவர்களின் ஜனாஸா இன்று 21.3.21 மதியம் இளையான்குடி கொண்டுவந்து வைக்கப்பட்டு பின் நாளை திங்கள் கிழமை அதிகாலைஅவரது சொந்த ஊரான மண்டபம் கொண்டு செல்லப்பட்டு காலை 9.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னா லில்லாஹி வஇன்னா
இலைஹி ராஜிவூன்!இறைவா!

இவரை மன்னிப்பாயாக! இவருக்கு அருள் புரிவாயாக! இவரது தவறுகளை அலட்சியப்படுத்துவாயாக! இவர் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவரைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிருந்து சுத்தம் செய்வதைப் போல் இவரை குற்றத்திருந்து சுத்தம் செய்வாயாக! இங்கிருக்கும் வீட்டை விடச் சிறந்த வீட்டையும், இங்கிருக்கும் குடும்பத்தை விடச் சிறந்த குடும்பத்தையும், இங்கிருந்த வாழ்க்கைத் துணையை விட சிறந்த துணையையும் இவருக்கு வழங்குவாயாக! இவரை கப்ரின் வேதனையிருந்து காப்பாயாக!
இன்னும் இவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு அழகிய பொறுமையைத் தந்திடுவாயாக!😔😔😔

இன்னாலில்லாஹி வ இன்னா  இலைஹி ராஜிவூன்மறைந்த எனது மதிப்பிற்குரிய பேராசிரியர் லியாக்கத் அலி அவர்களின் ஜனாஸா இன்று 21.3.21 ...
21/03/2021

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
மறைந்த எனது மதிப்பிற்குரிய பேராசிரியர் லியாக்கத் அலி அவர்களின் ஜனாஸா இன்று 21.3.21 மதியம் இளையான்குடி கொண்டுவந்து வைக்கப்பட்டு பின் நாளை திங்கள் கிழமை அதிகாலைஅவரது சொந்த ஊரான மண்டபம் கொண்டு செல்லப்பட்டு காலை 9.00 மணிக்கு நல்லடக்கம் செய்யப்படும்.

20/03/2021

இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன் !

இளையான்குடி டாக்டர். சாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் டாக்டர். லியாக்கத் அலி அவர்கள் சற்றுமுன் மதுரையில் மௌத்து !

அன்னாரின் ஜனாஸா எடுக்கும் விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துவாச் செய்வோமாக ! 20.03.21

கொரானாவால் வாழ்வாதாரம் இழந்த சகோதரி தற்போது 1000 வடை விற்க்கிறார்  #எல்லா_புகமும்_இறைவனுக்கே *சகோதரி ஆயிஷாவுக்கு ( பெயர்...
24/12/2020

கொரானாவால் வாழ்வாதாரம் இழந்த சகோதரி தற்போது 1000 வடை விற்க்கிறார்

#எல்லா_புகமும்_இறைவனுக்கே

*சகோதரி ஆயிஷாவுக்கு ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) 1,50,000/- மதிப்பில் " #சகோதரர்கள்🤝 உதவியால் டிபன் சென்டர் வைத்து கொடுத்தோம்

*ஏப்ரல் 15 ல் தொழில் தொடங்கிய ஆயிஷாவுக்கு ஆரம்பத்தில் 30 வடை மற்றும் 2 லிட்டர் பால் மட்டுமே விற்பனையானது,*

*பிறகு படிப்படியாக,*
*வளர்ந்து தற்போது 500 சமோசா உட்பட 1000 வடைகளும், டீ, காபி, மற்றும் காலை டிபன், மதியம் வேரைட்டி ரைஸ் செய்து வளர்ந்து வருகிறார்.*

*நடந்தது என்ன ?*

*கொடைக்கானலில் வாமும் சகோதரி ஆயிஷாவுக்கு, 4 பெண் குழந்தைகள், கணவர் கொஞ்சம் உடல்நிலை சரி இல்லாதவர்,*
*பிள்ளைகளின் படிப்பு, கணவரின் மருத்துவம், குடும்ப வாழ்வாதாரம் போன்றவற்றிற்க்கு கொடைக்கானல் வரும் சுற்றுல்லா பயணிகளுக்கு வீட்டு உணவு சமைத்து கொடுத்து வாழ்ந்து வந்தார்,*

*ஒருமுறை எங்கள் SYPA TEAM கொடைக்கானல் சென்ற போது, மிக அருமையான உணவு தயாரித்து கொடுத்தார்,* *அப்போது அறிமுகமான சகோதரியின் ஒரு பெண் குழந்தைக்கு கல்வி கட்டணம் சகோதரர் உதவியால் ஏற்பாடு செய்தோம்*

*கொரானாவால் வாழ்வாதாரம் இழந்தார் சகோதரி*

*பொதுவாகவே, மலைவாழ் மக்கள் MARCH, APRIL, MAY மூன்று மாதங்களில் சம்பாதிப்பதை வைத்துதான் ஒரு வருடம் வாழ்வார்கள்.*

*இந்த ஆண்டும் டுரிஸ்ட்கள் உணவு ஆர்டர் வந்தது, ஆனால் கொரானாவால் கொடைக்கானலுக்கு சுற்றுல்லா பயணிகள் செல்ல அனுமதி தடை செய்யப்பட்டதால், இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது,*

*அப்போது சகோதரிக்கு 2 மாத உணவுக்கான ஏற்பாடு செய்தோம்.*

*இருப்பினும், நம்மால் ஒவ்வோரு மாதமும் கொடுக்க முடியாது என்பதனை யோசித்தோம்*

*டுரிஸ்களை மட்டுமே நம்பி இருக்கும் மழைவாழ் மக்களுக்கு உள்ளுரிலேயே நிரந்தர தொழில் ஏற்பாடு செய்ய முடிவெடுத்து சகோதரிக்கு ₹1,50,000/- மதிப்புள்ள " டிபன் சென்டர் " தொடங்க வழிகாட்டினோம்.*

*இறைவனின் கிருபையால் தற்போது அவர்கள் தேவையை அவர்களால் நிறைவேற்றிக் கொள்ள முடிகிறது*

*கொடைக்கானல் சுற்றுலா செல்பவர்கள் வீட்டு உணவுக்கு இவர்களை தொடர் கொள்ளலாம்*

*எல்லா புகமும் இறைவனுக்கே,*

*உதவி செய்த சகோதரர்களுக்கு இறைவன் அருள் புரியட்டும்*

*Alhamedulillah, 2017 முதல் இதுவரை 48 பேர் தொழில் தொடங்க ஏற்பாடு செய்து கொடுத்துள்ளோம்.*

*இது போன்று உங்கள் ஊரில் ஒருவரை தேர்வு செய்து தொழில் தொடங்க உதவுங்கள்.*

*எங்களின் ₹100 ஒரு குடும்பம் முன்னேற்றம் திட்டத்தை உங்கள் ஊரிலும் செயல்படுத்துங்கள்*

*அதாவது ஒருவருக்கு 1 லட்சம் தேவை என்றால் 1000 சேர் என்று கணக்கிடுவோம், ஓரு சேர் ₹100/-*

*சிலருக்கு மனசு இருக்கும் உதவ, ஆனால் வசதி இருக்காது, ஆனால் ₹100 ரூபாய் கொடுத்து உதவ முடியும் , என்பது தான் இந்த திட்டம்*

*இதனை CROWD FUNDING என்பார்கள்*

*தற்போது இதற்க்கான ஒரு சாப்ட்வேர் தயாரித்து வருகிறோம்.*

*எங்களுடன் இணைந்து செயல்பட விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளுங்கள்*

Mohamed Rabik
Founder / SYPA
9791475700 ( WhatsApp)

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்மெளத் அறிவிப்புவாஞ்சூர் பீர் அவர்களின்மகன் பசீர் அவர்கள் சிங்கப்பூரில்மவுத்து அன்னார...
14/12/2020

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்
மெளத் அறிவிப்பு
வாஞ்சூர் பீர் அவர்களின்மகன் பசீர் அவர்கள் சிங்கப்பூரில்மவுத்து
அன்னாரின் ஜனாஸா சிங்கப்பூரில் நாளை காலை நல்லடக்கம்
செய்யப்படும்
தகவல்: பசீர்அவர்களின் தம்பி இப்னு ஜமாலுதீன் பெசன்ட்நகர் சென்னை

என்னுடைய ஸ்டோரி க்கு தொடர்ந்து ஆதரவு தரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
08/11/2020

என்னுடைய ஸ்டோரி க்கு தொடர்ந்து ஆதரவு தரும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...இளையான்குடி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர்  ஹாஜி டி எம் சாகுல் ஹமீது வப...
02/11/2020

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...

இளையான்குடி மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியர் ஹாஜி டி எம் சாகுல் ஹமீது வபாத்தானார்கள்..

அன்னாரின் ஜனாசா இன்று மாலை 4.15 மணிக்கு இளையான்குடி சிக்கந்தர் தெருவிலிருந்து எடுத்து நல்லடக்கம் செய்யப்படும்.

18/10/2020

அவனைப் பற்றி உன்னிடம் கேட்பவர்கள் பலரும், அவனிடம் போய் நீ சொன்னதைச் சொல்பவர்கள் என்றறிக..!

எங்களது உறவு முறை பிச்சை மொகிதீன் அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். அவரது மறுமை வெற்றிக்கு துவாச் செய்வோமாக.
14/10/2020

எங்களது உறவு முறை பிச்சை மொகிதீன் அவர்கள் அல்லாஹ்வின் அழைப்பை ஏற்றுக் கொண்டார். அவரது மறுமை வெற்றிக்கு துவாச் செய்வோமாக.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ilayangudi.in posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

எனக்கு நல்ல அறிவுரை நான்கு சொல்ல முடியுமா?

1.முடிந்தவரை வெளிப்படையாக பேசாதீர்கள் (வாக்குவாதமும் பகையும் உண்டாகும்). 2.முடிந்தவரை யாரிடமும் உதவி கேட்காதீர்கள். (பிரதிபலனாக உங்களால் செய்ய முடியாததை செய்ய வேண்டி வரும்) 3. சிக்கனமாக இருங்கள்( நீங்கள் கடன் வாங்க வேண்டிய அவசியம் வராது). 4. வாரத்தில் ஒரு நாள் ஒரு நபருக்காவது (தகுதியுள்ள) தேடிப் போய் உணவு வாங்கி கொடுங்கள்.எக்காரணம் கொண்டும் பணமாக கொடுக்கக்கூடாது.உங்கள் வீட்டு குழந்தைகளின் கையால் உணவினை கொடுக்க செய்தால் சிறப்பு..