கோடிபக்கம்.kodi pakkam

  • Home
  • கோடிபக்கம்.kodi pakkam

கோடிபக்கம்.kodi pakkam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கோடிபக்கம்.kodi pakkam, Media/News Company, .

இன்றைய தினம் மலையோரம் செய்திகள் பிரதான செய்தி பிரிவின் ஆசிரியரும் ஊடகவியலாளருமான   பா.பாலேந்திரன்  நுவரெலிய மாவட்ட நீதிம...
09/08/2023

இன்றைய தினம் மலையோரம் செய்திகள் பிரதான செய்தி பிரிவின் ஆசிரியரும் ஊடகவியலாளருமான பா.பாலேந்திரன் நுவரெலிய மாவட்ட நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சமாதான நீதவானாக(JUSTICE OF THE PEACE ) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். கோடிபக்கம் பிரிவின் சார்பாக வாழ்த்துகள்

அனுமதியின்றி தலவாக்கலை - கிரேட்வெஸ்டர்ன் மலை உச்சியில் முகாமிட இடமளிக்க வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட...
04/08/2023

அனுமதியின்றி தலவாக்கலை - கிரேட்வெஸ்டர்ன் மலை உச்சியில் முகாமிட இடமளிக்க வேண்டாம் என நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபட, வன பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இனங்காணப்படாத பெண்ணின் சடலம் ஒன்று கல்கந்தை மலை உச்சி சரிவு பகுதியில் காணப்பட்டமை தொடர்பில் லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸாருக்கு 1 ஆம் திகதி மாலை தகவல் கிடைத்துள்ளது . இதனையடுத்து குறித்த சடலம் இராணுவத்தின் உதவியுடன் 2ஆம் திகதி மாலை மீட்க்கப்பட்டுள்ளதையடுத்து நுவரெலியா மாவட்ட செயலாளர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்புமாறு நுவரெலியா பதில் நீதவான் ஜே. அம்பகஹவத்த லிந்துல பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் அத்துடன் இந்த சம்பவத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட பெண் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது

குறித்த பெண், ஒருவர் அல்லது சில தரப்பினருடன் மலை உச்சியை அடைந்துள்ளதாகவும், சில காரணங்களால் அவர் உயிர் இழந்ததையடுத்து அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கிரேட்வெஸ்டர்ன் மலை உச்சியில் இருந்து இந்த பெண்ணின் சடலத்தை எடுத்துவரச் சென்ற இராணுவ வீரர் ஒருவரும் திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது

04/08/2023

ஹட்டனில் அற்புதமானதும் சக்தி மிக்கதுமான மாடசாமி ஆலயம்

02/08/2023

கிறேட்வெஸ்டன் மோகன்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சியில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டு உள்ள இனந்தெரியாத பெண்ணின் சடலம் இராணுவத்தின் உதவியுடன் (02) மாலை மீட்க்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் இச்சட்டததை மீட்கும் பணிக்கு மலை உச்சிக்கு சென்ற இராணுவ வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக வழியிலேயே உயிரிழந்துள்ளார்.

மேலும் சடலமாக மீட்க்கப்பட்ட பெண் மற்றும் இராணுவ வீரரின் சடலம் பிரேத பரிசோதணைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அத்துடன் இனம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று கல்கந்தை மலை உச்சி சரிவு பகுதியில் காணப்பட்டமை தொடர்பில் லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிஸாருக்கு 1 ஆம் திகதி மாலை தகவல் கிடைத்துள்ளது.

கிடைத்த தகவலுக்கு அமைய சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கண்டுபிடித்ததாக லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிசிர தெரிவித்தார்.

மேலும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா நீதிமன்றத்திற்கும் அறிவிக்கப்பட்டிருந்தது அதேநேரத்தில் சம்பவ இடத்திற்கு மரண விசாரணை செய்வதற்கான நேரம் போதாத நிலையில் நீதிபதி (02.08.2023) முற்பகல் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார்.

இவருடன் பொலிசார்,இராணுவத்தினர் என பலர் சென்றிருந்தனர் பின் சடலம் மீட்க்கப்பட்டு சம்பவ இடத்தில் நீதிபதி விசாரணையின் பின் சடலம் சட்ட பிரேத பரிசோதணைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல பணிக்கப்பட்டது.

அத்துடன் மலை உச்சி பகுதிக்கு நடந்து சென்ற வேளையில் இராணுவ வீரர் ஒருவருக்கு ஏற்பட்ட மாரடைப்பில் அவர் வழியில் உயிரிழந்த இராணுவ வீரரின் உடலத்தையும்,இராணுத்தால் மீட்கப்பட்ட பெண்ணின் சடலத்தையும் அரும்பாடுபட்டு சுமந்து கொண்டு மலையடிவாரத்தில் வந்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட பெண் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுத்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிபதி பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.

01/08/2023
01/08/2023

கிறேட்வெஸ்டன் மோகன்

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிறேட் வெஸ்டன் கல்கந்தை தோட்டத்தின் ஊடாக செல்லும் வனப்பகுதியில் இனந்தெரியாத பெண் ஒருவரின் சடலம் ஒன்று (01.08.2023) இன்று மாலை கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

கல்கந்தை மலை உச்சியில் பெண் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக லிந்துலை மற்றும் தலவாக்கலை பொலிசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்ற நிலையில் மலை உச்சிக்கு சென்ற பொலிசார் அங்கு

பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

அத்துடன் பல்கலைகழக மாணவர்கள் ஆராய்ச்சிக்காக அடிக்கடி கிறேட் வெஸ்டன் கல்கந்தை மலை உச்சிக்கு வருகை தருவார்கள்.இவ்வாறு வருகை தந்து ஆராய்ச்சி செய்யும் ஒரு குறித்த பகுதியில் இந்த சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்திருக்கும் லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா நீதி மன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு நீதவான் வருகை தந்து மரண விசாரணை செய்த பின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதணைக்கு கொண்டு செல்லப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில்   அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலி...
01/08/2023

தலவாக்கலை கிரேட் வெஸ்டர்ன் மலை உச்சியில் அடையாளம் தெரியாத பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரசு  பேருந்து வட்டவளையில் 30அடி பள்ளத்தில் விழுந்து விபத்து.20 பேர் பலத்த காய...
01/08/2023

கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த அரசு பேருந்து வட்டவளையில் 30அடி பள்ளத்தில் விழுந்து விபத்து.20 பேர் பலத்த காயங்களுடன் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் உலக சாதனை படைத்த தந்தையும், மகளும்மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் சிறுமி ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.மஸ்கெ...
01/08/2023

இலங்கையில் உலக சாதனை படைத்த தந்தையும், மகளும்

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்தில் சிறுமி ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்டத்திலிருந்து மஸ்கெலியா பொலிஸ் நிலையம் வரை இரண்டு கிலோ மீற்றர் தூரத்தினை நடந்து குறித்த சிறுமி சாதனை படைத்துள்ளார்.

இந்த நிகழ்வு இன்று (31.07.2023) இடம்பெற்றுள்ளது.

மஸ்கெலியா சென் ஜோசப் ஆரம்ப பிரிவு பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் விக்னேஸ்வரன் சஸ்மிதா என்ற சிறுமியே 18 நிமிடங்களில் இரண்டு கிலோ மீற்றர் தூரத்தினை நடந்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

மஸ்கெலியா பிரதான வீதியில் பிரவுண்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு அருகாமையில் இந்த போட்டியினை மஸ்கெலிய மாவட்ட வைத்திய அதிகாரி ஆரம்பித்து வைத்துள்ளார்.

குறித்த சிறுமியின் தந்தை யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வரை நடை பயணமாக வந்து சாதனை படைத்துள்ளார்.

ஆகையால் தானும் ஒரு சாதனையை படைக்க வேண்டும் என்ற நோக்கில் தனது முதலாவது நடை பயண சாதனையை சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்து கொண்டதுடன், மலையகத்திலுள்ள ஏனைய சிறுவர்களும் இது போன்ற முயற்சியில் ஈடுபட்டு தங்களது திறமைகளை வெளிக்கொணர வேண்டுமென குறித்த சிறுமி தெரிவித்துள்ளார்.

பிரவுன்லோ தோட்டத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த சாதனை நடை பயணத்தில் கலந்துகொண்ட சிறுமிக்கு பதக்கங்கள் மற்றும் கேடயங்கள் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டதுடன் சோழன் உலக சாதனை சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக சோழன் இலங்கை கிழைத்தலைவர் யூட் நிமலன் பிரதேச பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னால் பிரதேச சபை உறுப்பினர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

01/08/2023

ஒக்டேன் 92 ரக பெற்றோல் 20ரூபா அதிகரிக்கப்பட்டு புதிய விலை 348 ரூபாவாகவும்

ஒக்டேன் 95ரக பெற்றோல் 10ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 375 ரூபாவாகவும்

லங்கா ஒயிட் டீசல் 2 ரூபாய் குறைக்கப்பட்டு 306 ரூபாவாகவும்

சுப்பர் டீசல் 12ரூபா அதிகரிக்கப்பட்டு 258 ரூபாவாகவும்

மண்ணெண்ணெய் லீற்றர் 10 ரூபாவால் குறைக்கப்பட்டு 226 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

31/07/2023

நெஞ்சை உருக வைக்கும் காணொளி..

தலவாக்கலை லிந்துலை பெரிய ராணிவத்தை தோட்டத்தில் தீக்கரைக்கு உள்ளாகிய வீடுகளினதும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் தற்போதைய நிலையும்...

போடைஸ் இளைஞர் கழகத்தின் வேண்டுகோளுக்கு இனங்க கெயார் லங்கா நிறுவனத்தின் அனுசரனையில் 250,000.00 ரூபாய் பெறுமதியான விளையாட்...
28/07/2023

போடைஸ் இளைஞர் கழகத்தின் வேண்டுகோளுக்கு இனங்க கெயார் லங்கா நிறுவனத்தின் அனுசரனையில் 250,000.00 ரூபாய் பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் போடைஸ் பாடசாலைக்கு இன்றைய தினம் பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பங்குப்பற்றுதளோடு வழங்கி வைக்கப்பட்டது.

மலையகத்தில் முதன்முறையாக குறுந்திரைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக '2023 விஷ்வ சக்தி மலையக குறுந்திரைப்பட போட்டி, எத...
27/07/2023

மலையகத்தில் முதன்முறையாக குறுந்திரைப்பட கலைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக

'2023 விஷ்வ சக்தி மலையக குறுந்திரைப்பட போட்டி,

எதிர்வரும் 29 ஆம் திகதி ஹட்டன் கிருஷ்ண பவன் மண்டபத்தில் 2 மணியலவில் இடம் பெற இருக்கின்றது எனவே அனைவரையும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றனர்.

தொடர்புகளுக்கு
வீராசாமி சரத்குமார்
நீலமேகம் பிரசாந்

ஹட்டனில் நேரடியாக பூசாரி முன் தோன்றிய மாடசாமி காணொளி:
26/07/2023

ஹட்டனில் நேரடியாக பூசாரி முன் தோன்றிய மாடசாமி
காணொளி:

பெரண்டினா நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான அறிவுச்சுடர் என்ற தொனிட்பொருளில் ம/மா/நு/ கிறேட்வெஸ்டன் தமிழ் ...
26/07/2023

பெரண்டினா நிறுவனத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான அறிவுச்சுடர் என்ற தொனிட்பொருளில்
ம/மா/நு/ கிறேட்வெஸ்டன் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும்
ம/ மா/நு .கலகந்தவத்த தமிழ் வித்தியாலயம்
ஆகிய பாடசாலை மாணவர்களுக்கான அத்தியாவசிய கொப்பிகள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது இந்நிகழ்வில் பெரண்டினா நிறுவனத்தின் உத்தியோகத்தகளான ....
எஸ்.சிவகாந் . சிவசந்திரன். சத்திஸ். ஆகியோரும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் .
மாணவர்களும் கலந்து கொண்டனர்.

25/07/2023

தலவாக்கலை லிந்துலை இராணிவத்தை தோட்டத்தில் ஏற்பட்ட தீப்பரவலில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிப்பு

17/07/2023

ஹட்டன் தொப்பி தோட்டம் சுடலை மாடன் ஆலய கும்பாபிஷேகம்.

நிகழ்வுகள் தொகுத்து வழங்கியவர் அறிவிப்பாளர் பரமா

17/07/2023

மக்களுக்கு உயிர் பயத்தை காட்டும் டன்சினன் பாலம்

17/07/2023

கொட்டகலை நகர ஸ்ரீ முத்துவிநாயகர் ஆலய மஹா கும்பாபிஷேகம்.
முழுமையான வீடீயோவை காண லிங்கை கிளிக் செய்யுங்கள் https://youtu.be/UPOCX-ru-xA

10/07/2023

நுவரெலியா நோக்கி சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 8பேர் படுங்காயம்.

புத்தளத்திலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற கம்பளை நுவரெலியா பிரதான வீதியின் ஹெல்பொட பகுதியில் விபத்துக்குள்ளாகியதோடு பேருந்தில் பயணித்த 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த பேருந்தில் 20 பேர் பயணித்துள்ள நிலையில் படுகாயமடைந்த 8 பேரில் 4 பேர் படுகாயங்களுடன் கொத்மலை ஆதார வைத்தியசாலையிலு. 4 பேர் புஸல்லாவ வகுகப்பிட்டி வைத்தியசாலைகளில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்ட்டுள்ளனர்.மேலும் மேலதிக விசாரணைகளை புஸல்லாவ பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

10/07/2023

பொலனறுவை - மனம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் வரை இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் உயிராபத்துக்கள் ஏற்பட்டிருக்குமோ என்ற அச்சத்தில் சுழியோடிகள் தற்போது பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

09/07/2023

மடக்கும்புர பகுதியில் பாரிய பஸ் விபத்து 25பேர் படுகாயம்.

வட்டக்கொடை தோட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களை ஏற்றி வந்த பேருந்து மடக்கும்புர பகுதியில் பள்ளத்தில் விழுந்ததில் 25 பேர் படுகாயடைந்துள்ளனர்.

குறித்த பேருந்து வட்டக்கொடை மேற்பிரிவு,கீழ்ப்பிரிவு தோட்டங்களில் வேலை செய்த தோட்ட தொழிலாளர்களை வீட்டிற்கு அழைத்து சென்ற போது மடக்கும்புர துல்கேதெனிய பகுதியில் பள்ளத்தில் குடை சாய்ந்ததில் 25 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

படுகாயமடைந்த 25 தொழிலாளர்களில் 21 பேர் கொத்மலை ஆதார வைத்தியசாலையிலும் நால்வர் மல்தெனிய வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிசார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

04/07/2023

மலையகம் போற்ற வேண்டிய தலவாக்கலை லிந்துலை பார்வதி பாட்டி

இத்தனை வயதாகியும் தன் உழைப்பை மட்டுமே நம்பி வாழும் இப்பாட்டியை வாழ்த்தலாமே!

பாட்டியின் முழுமையான வீடியோவை காண கீழுள்ள லிங்கை அழுத்துங்கள்.
https://youtu.be/LCSkLTJdeec

30/06/2023

வட்டகொடை அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம்

30/06/2023

வட்டகொடை யொக்ஸ்போர்ட் பிரிவு முத்துமாரியம்பாள் ஆலய கும்பாபிஷேக எண்ணெய்காப்பு நிகழ்வு..

29/06/2023

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

இந்த பக்கத்தின் ஊடாக அனைத்து சமூக,கலை,கலாச்சார,ஆன்மீகம் நிகழ்வுகள் பதிவேற்றப்படும்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when கோடிபக்கம்.kodi pakkam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share