FRS MEDIA

FRS MEDIA FRS MEDIA

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் - டிரம்ப் முன்னிலைஅமெரிக்க ஜானாதிபதி தேர்தல் இலங்கை நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கி...
06/11/2024

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் - டிரம்ப் முன்னிலை

அமெரிக்க ஜானாதிபதி தேர்தல் இலங்கை நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து குடியரசு கட்சி தலைவர் டொனால்ட் டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார்.

அவர் இண்டியானா, கென்டக்கி, மேற்கு வெர்ஜினியா, டென்னெஸ்சீ, தெற்கு கரோலினா, மிஸ்சிஸ்சிப்பி, புளோரிடா, ஒக்லஹோமா போன்ற மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப் முன்னிலைப் பெற்றுள்ளார்.

வெர்மொன்ட், மசாஸ்சூட், கனெக்டிக்கட் போன்ற மாகாணங்களில் கமலா ஹாரிஸ் முன்னிலை பெற்றுள்ளார்.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் டொனால்ட் டிரம்ப் 95இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 35 இடங்களை பெற்று பின்தங்குகிறார்.

தண்ணீர் என நினைத்து அசிட் ஐ அருந்திய குழந்தை உயிரிழப்பு...!கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, பியசேனபுர பகுதியில் ...
02/11/2024

தண்ணீர் என நினைத்து அசிட் ஐ அருந்திய குழந்தை உயிரிழப்பு...!

கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெல்தோட்டை, பியசேனபுர பகுதியில் 2 வருடங்கள் மற்றும் 6 மாதங்களேயான குழந்தையொன்று தண்ணீர் என நினைத்து அமிலம் (அசிட் திராவகம்) குடித்ததில் உயிரிழந்துள்ளது.

தெல்தோட்டை நகரிலுள்ள தங்க வியாபார நிலையமொன்றுக்கு தனது குழந்தையுடன் தந்தையொருவர், சென்றுள்ளார். அங்கு பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த அசிட்டையே குழந்தை அருந்தியதாக தெரியவந்ததையடுத்து குழந்தை தெல்தோட்டை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. எனினும், குழந்தை உயிரிழந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

🔴 ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!கடலோர ரயில் மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவ...
30/10/2024

🔴 ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!

கடலோர ரயில் மார்க்கத்தில் ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

பயாகலவில் ரயில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்வாறு ரயில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

1.3 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள  "சினமன் லைஃப்" சொகுசு ஹோட்டல் வளாகம் நேற்று (...
16/10/2024

1.3 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள "சினமன் லைஃப்" சொகுசு ஹோட்டல் வளாகம் நேற்று (15) திறந்து வைக்கப்பட்டது.

சீரற்ற வானிலையால் நோய்கள் பரவும் அபாயம்...!      நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு, காய்ச்சல், எலிக்காய்...
14/10/2024

சீரற்ற வானிலையால் நோய்கள் பரவும் அபாயம்...!


நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு, காய்ச்சல், எலிக்காய்ச்சல் போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

இதன்காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் முறையான சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிப்பது அத்தியாவசியமானது என சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

வெள்ளம் காரணமாக சில பாடசாலைகளுக்கு விடுமுறை...!     நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளை (14) சில பாடசாலைகளு...
13/10/2024

வெள்ளம் காரணமாக சில பாடசாலைகளுக்கு விடுமுறை...!


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நாளை (14) சில பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், களனி மகா வித்தியாலயம், நீர்கொழும்பு றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், பியகம ஆரம்ப பாடசாலை மற்றும் யபரலுவ ஆனந்த கனிஷ்ட வித்தியாலயம் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

பல பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை...!பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர...
13/10/2024

பல பிரதேசங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை...!

பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 09 மாவட்டங்களின் 47 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பு இன்று மாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔴 விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால...
09/10/2024

🔴 விடுதலை புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து நேற்று (08) மாலை அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்றது.

கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப் பணியானது கொழும்பில் இருந்து வருகை தந்த பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் எந்தவித பொருட்களும் கிடைக்காத நிலையில் இன்றும் குறித்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறக்குமதி உருளைக்கிழங்கு, பெரிய வெங்காய வரி அதிகரிப்பு..!     உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்கு...
06/10/2024

இறக்குமதி உருளைக்கிழங்கு, பெரிய வெங்காய வரி அதிகரிப்பு..!



உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரியை நிதி அமைச்சு அதிகரித்துள்ளது.

அதன்படி உருளைக்கிழங்கு மீதான தீர்வை வரியை கிலோ ஒன்றுக்கு 10 ரூபாவும், பெரிய வெங்காயத்திற்கான வரியை கிலோவுக்கு 20 ரூபாவாலும் அதிகரிக்கப்படுகிறது.

அடுத்த ஆண்டு முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி...!      அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய...
05/10/2024

அடுத்த ஆண்டு முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி...!


அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கான நிதியை ஏலவே மத்திய வங்கி ஒதுக்கியுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான பரிந்துரைகளையும் மத்திய வங்கி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார.

🔴 *தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு* தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்வோர்களின் எண்ணிக்கை 1...
05/10/2024

🔴 *தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்வோர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு*

தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்வோர்களின் எண்ணிக்கை 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை 2023 செப்டெம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024 செப்டெம்பர் மாதத்தில் தொழிலுக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 2024 செப்டெம்பர் மாதத்தில் 28,344 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ள நிலையில், கடந்த 2023 செப்டெம்பர் மாதத்தில் 25,716 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக கூறப்படுகின்றது.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 17,649 தொழிலாளர்கள் தொழில்சார் வேலைகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதுடன் அரை திறன் பயிற்சி வேலைகளுக்குச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 3,704 என கூறப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில், அதிக எண்ணிக்கையிலானவர்கள் சவூதி அரேபியாவிற்கு வேலைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன் இவர்களின் எண்ணிக்கை 38,133 ஆகும்.

இதேவேளை, 5,870 பேர் தென் கொரியாவிற்கும், 5,677 பேர் குவைட் நோக்கியும், 3995 பேர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பணி நிமித்தமாக சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த காலப் பகுதியில், 6,391 இலங்கையர்கள் இஸ்ரேலுக்கு வேலைக்காக சென்றுள்ளதுடன 6,295 இலங்கையர்கள் ஜப்பானுக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

IMF இன் உயர்மட்டக் குழு இன்று இலங்கைக்கு விஜயம்....!     சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்க...
02/10/2024

IMF இன் உயர்மட்டக் குழு இன்று இலங்கைக்கு விஜயம்....!


சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

அதன்படி, நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4ஆம் திகதி வரை நாட்டில் தங்கவுள்ளனர்.

அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

🔴 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது - கல்வி அமைச்சு2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ம...
30/09/2024

🔴 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது - கல்வி அமைச்சு

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் சமூக ஊடகங்களில் கசிந்தது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன் பரீட்சையை மீள நடத்துவது குறித்து தீர்மானிப்பதற்குக் கல்வி அமைச்சினால் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.

இக்குழு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்தாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

பரீட்சை மீள நடத்துவதனால் ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படும் எனவும் இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, கசிந்ததாகக் கருதப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.

இந்நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் ரைஸ், கொத்து ரொட்டியின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சா...
29/09/2024

நாடளாவிய ரீதியில் ரைஸ், கொத்து ரொட்டியின் விலை இன்று (29) நள்ளிரவு முதல் 40 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

🔴 மீள்திருத்த பெறுபேறு விண்ணப்பம் பற்றிய மாணவர்களுக்கான அறிவிப்பு..! சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் ச...
29/09/2024

🔴 மீள்திருத்த பெறுபேறு விண்ணப்பம் பற்றிய மாணவர்களுக்கான அறிவிப்பு..!

சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்கள் ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 15ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இணையவழி ஊடாக உத்தியோகபூர்வமாக நேற்று நள்ளிரவு வௌியாகி இருந்தது.

இம்முறை நாடளாவிய ரீதியில் 452,979 விண்ணப்பதாரர்கள் பங்குபற்றியதோடு, சாதாரணதரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 நிலையங்களில் நடைபெற்றது.

387,648 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65,331 தனியார் விண்ணப்பதாரர்களும் இதில் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வௌியாகியுள்ள பெறுபேறுகள் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெற விரும்பினால் 1911 அல்லது 011 2 785 922, 0112 786 616, 011 2 784 208 அல்லது 011 2 784 537 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்குமாறும் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.

28/09/2024
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.லெபனான் ஹிஸ்புல்லா இயக்க  தலைவர்ஹஸன் நஸ்ருல்லாஹ் அவர்கள்,இஸ்ரேலின் தாக்குதலில் ஷஹீத...
28/09/2024

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

லெபனான் ஹிஸ்புல்லா இயக்க தலைவர்
ஹஸன் நஸ்ருல்லாஹ் அவர்கள்,
இஸ்ரேலின் தாக்குதலில் ஷஹீதானதாக தகவல் வெளியாகியுள்ளது

🔴 முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்...! முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்.மரணிக்கும் போது அவருக்கு வயது 74...
28/09/2024

🔴 முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்...!

முன்னாள் அமைச்சர் குமார வெல்கம காலமானார்.

மரணிக்கும் போது அவருக்கு வயது 74 ஆகும்.

தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.

(1950.04.05 – 2024.09.28)

Address


Alerts

Be the first to know and let us send you an email when FRS MEDIA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share