Yarlkathir

Yarlkathir Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Yarlkathir, News & Media Website, .

Agriculture land for sale
21/02/2024

Agriculture land for sale

10.5 பரப்பு தோட்ட காணி விற்பனைக்கு, தற்பொழுது வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது.

விலை பரப்பு : 9.5 இலட்சம்

இடம்: புத்தூர், நவக்கிரி

தொடர்பு : கஜன் 0766385626

#காணி #விற்பனை #யாழ்ப்பாணம் #நவக்கிரி #புத்தூர்

25/12/2023

I have only one Facebook account , somebody created fake account and ask money.

என்னுடைய முகநூல் கணக்கை போல் போலி முகநூல் கணக்கின் ஊடாக எல்லோரிடமும் பணம் கேட்டு message பண்ணி பணம் பரிக்க முயற்சி செய்க...
25/12/2023

என்னுடைய முகநூல் கணக்கை போல் போலி முகநூல் கணக்கின் ஊடாக எல்லோரிடமும் பணம் கேட்டு message பண்ணி பணம் பரிக்க முயற்சி செய்கின்றார். எல்லோரும் அவதானமாக இருக்கவும்.

எதிர்வரும் இருதினங்களில்(22 மற்றும் 23) மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ள அட்டவணை. #மின்வெட்டு
21/06/2022

எதிர்வரும் இருதினங்களில்(22 மற்றும் 23) மின்வெட்டு அமுலாக்கப்படவுள்ள அட்டவணை.

#மின்வெட்டு

01/06/2022
29/05/2022
மே 20 (வெள்ளிக்கிழமை) முதல் ஜீன் 06 (திங்கட்கிழமை) வரை க.பொ.த சாதாரண தரம் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளுக்கு விடுமுறை - கல...
16/05/2022

மே 20 (வெள்ளிக்கிழமை) முதல் ஜீன் 06 (திங்கட்கிழமை) வரை க.பொ.த சாதாரண தரம் பரீட்சை நடைபெறும் பாடசாலைகளுக்கு விடுமுறை - கல்வி அமைச்சு

விரிவான செய்திகளுக்கு : https://yarlkathir.com/school_holiday_edu_ministry/

விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும்...
09/05/2022

விநியோகத்திற்கு தேவையான எரிவாயு கையிருப்பில் இல்லை என்பதுடன், அத்தியாவசிய சேவைக்காக மாத்திரம் எரிவாயு விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

https://yarlkathir.com/litro_gas_supply_for_essantial/

NFlash நிறுவனத்தில் உடனடி வேலைவாய்ப்பு
20/02/2022

NFlash நிறுவனத்தில் உடனடி வேலைவாய்ப்பு

இப்பொழுது யாழ்ப்பாணத்தில் , தூய பசும் பால் ... பண்ணையில் இருந்து , உங்கள் இல்லங்களுக்கு இலவச நேரடி விநியோகம்.
22/08/2021

இப்பொழுது யாழ்ப்பாணத்தில் , தூய பசும் பால் ... பண்ணையில் இருந்து , உங்கள் இல்லங்களுக்கு இலவச நேரடி விநியோகம்.

25ம் திகதி காலை 4 மணி தொடக்கம் இரவு 11 வரை தடை நீக்கப்படும்.21ம் திகதி இரவு 11 மணி தொடக்கம் 25ம் திகதி காலை 4 மணி வரை, ம...
17/05/2021

25ம் திகதி காலை 4 மணி தொடக்கம் இரவு 11 வரை தடை நீக்கப்படும்.

21ம் திகதி இரவு 11 மணி தொடக்கம் 25ம் திகதி காலை 4 மணி வரை, மீண்டும் 25ம் திகதி இரவு 11 மணி தொடக்கம் 28ம் திகதி காலை 4 மணி வரை பயணத்தடை.

#பயணக்கட்டுபாடு

நாடு முழுவதும் புதுப்பிக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு அறிவிப்பினை இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா ....

12/05/2021

கர்ப்பிணித் தாய்மார் கொவிட் தொற்று பரவும் இக்காலத்தில் மிக அவதானமாக செயற்பட வேண்டியது ஏன் ?

கர்ப்பிணியான நீங்களும், கருவிலுள்ள உங்கள் சிசுவும் ஆரோக்கியமாக இருப்பது மிக அவசியம். இதற்காக கொவிட் தொற்று பரவும் இக்காலத்தில் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளை உறுதியாக கடைப்பிடிப்பதும் , உரிய சுகாதார ஆலோசனைகள் மற்றும் சேவைகளைப் பெற்றுக் கொள்வதும் அவசியமாகும்.

கர்ப்பிணித் தாய்க்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் சிக்கல்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால், அத்தியாவசிய காரணங்களை தவிர வேறு எச்சந்தர்ப்பத்திலும் எதற்காகவும் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள்.

சாய்சாலைக்கு(கிளினிக்) அல்லது வைத்தியசாலைக்கு செல்ல நேர்ந்தால் , கொவிட்19 நோயிலிருந்து தவிர்ப்பதற்காக கீழ்வரும் ஆலோசனைகளை உறுதியாக கடைப்பிடியுங்கள்.

1. காற்றோட்டமற்ற இடத்தில் தரித்திருப்பதை இயன்றளவு தவிர்த்தல்.

2. எப்பொழுதும் உரியவாறு முகக்கவசத்தை அணிதல்.

3. நபர்களுக்கிடையான தூரத்தை உரியவாறு பேணல்.

4. மரண உற்சவம் போன்ற சன நெரிசல் மிக்க இடங்களுக்கு செல்லாதிருத்தல்.

5. எப்போதும் சவர்க்காரம் இட்டு இரு கைகளையும் கழுவி சுத்தமாக வைத்திருத்தல்.

கொவிட் நோய்ப் பயத்தின் காரணமாக கர்ப்பிணித் தாய்மார் உரியவேளைகளில் கிளினிக்கிற்கு செல்வதிலும் மற்றும் சிகிச்சைகளைப் பெறுவதிலும் , தாமதமாவது காணக் கிடைக்கின்றது.
இத் தாமதத்தின் காரணமாக கர்ப்பிணித் தாயினதும் கருவிலுள்ள சிசுவினதும் ஆரோக்கியத்திற்கு இடையூறு ஏற்படலாம்.

கொவிட் ஆபத்து அதிகரிக்கும் காலத்தில் வழமையான சுகாதார சேவைகளை வழங்கப்படுவதற்கு இயலாத நிலைமை இருக்க முடியும். ஆதலால், உங்களுடைய சுகாதார வைத்திய அதிகாரி அவர்களை அல்லது குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரை தொடர்புகொண்டு, மேற்குறித்த சேவைகளை தற்போது பெறக்கூடிய வழிமுறைகள் தொடர்பில் இன்றே அறிந்து கொள்ளுங்கள்.

"கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய ஆபத்தான சமிக்கைகள் " தொடர்பில் நீங்கள் இப்போதே அறிந்திருக்கக் கூடும். மீண்டுமொருமுறை அவற்றை ஞாபகப்படுத்துவதென்றால், காய்ச்சல், குருதிப்பெருக்கு, கடுமையான தலையிடி, மூச்செடுப்பதில் கஷ்டம், பார்வைக் குறைவு , வலிப்பு, நெஞ்சில்/வயிற்றில் வேதனை, சிசுவின் துடிப்புக் குறைவு, உடல் வீக்கம், அத்துடன் வேறு ஏதாவது கடினமான அசௌகரிக நிலை ஆபத்து சமிக்கைகளாக அடையாளம் காணப்பட முடியும்.

இவ்வாறான ஆபத்தான சமிக்கை தோன்றினால் உடன் வைத்தியசாலைக்கு செல்வது கட்டாயமாகும். அது தொடர்பில் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள்.

கர்ப்பிணியான உங்களுடைய பாதுகாப்பு தொடர்பாக,கொவிட் நோய்த் தொற்றிலிருந்து உங்களை தவிப்பதற்குரிய உரிய சகல ஏற்பாடுகளும் வைத்தியசாலையில் செய்யப்பட்டுள்ளது. ஆதலால் அவசிய வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்ள ஒருபோதும் தயங்கவேண்டாம்.

உங்களுடைய குடும்ப அங்கத்தவர் ஒருவர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அல்லது கொவிட் நோயாளி என சந்தேகிக்கப்படும் நபரொருவர் உங்கள் வீட்டில் வசித்தால் அது தொடர்பாக உடனடியாக உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள். உங்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக முடிந்தவரை அவரிலிருந்து விலகி இருங்கள்.

தற்செயலாக, உங்களுக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கொரோணா நோய் அறிகுறி உள்ளதாக சந்தேகித்தால் உடனடியாக உங்கள குடும்ப நல சுகாதார உத்தியோகத்தருக்கு அறிவியுங்கள்.

அவசிய சிகிச்சைகளை உடனடியாகப்பெறுங்கள். வைத்தியசாலைக் கட்டமைப்பு உங்களுக்காக தயார் நிலையில்......

இச்சகல நிகழ்வுகளுக்கிடையே உங்களுக்கு ஏதாவது மன உளைச்சல் தோன்ற முடியும். அதை தவிர்ப்பதற்காக, மனதை எப்போதும் நிதானமாகவும் தெளிவாகவும் வைத்திருக்க முயற்சி செய்யுங்கள்.

தேவைப்படும் எந்தநேரத்திலும் உங்களுடைய குடும்ப நல சுகாதார உத்தியோகத்தரை அல்லது 1999 சுவசெரிய தொலைபேசி சேவையினூடாக வைத்தியரொருவரை தொடர்பு கொண்டு உங்களுடைய பிரச்சனை தொடர்பான காரணங்களை கலந்தாலோசிக்கவும் முடியும்.

இத்தகவல்களை இலங்கையிலுள்ள சகல தாய்மாரினதும் மற்றும் எதிர்கால சிறுவர் பரம்பரையினரினதும் நல்வாழ்விற்காக பகிருமாறு நாம் உங்கள் சகலரையும் வேண்டுகிறோம்.

27/10/2020

***ALWAYS THINK about you - SAVE your money***

ADVANCED HAND SANITIZER

60 ml = Rs 130/= (Our Price - 120/-)
100 ml =Rs 240/= (Our Price - 220/-)
200 ml= Rs 490/= (Our Price - 440/-)

* Effective against bacteria,fungi, virus, HCV

* Kills More Than 99.99% of Germs

* Leaves Hands Feeling Soft

***Always keep your hands clean to protect against corona virus

21/07/2020

கம்பஹாவில் மேலதிக வகுப்புகளை நடத்திய ஆசிரியருக்கு கொரோனா – மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

விரிவான செய்திகளுக்கு : https://yarlkathir.com/?p=37608

21/07/2020

கொச்சிக்கடை பகுதியில் வெடிபொருட்களுடன் ஒருவர் கைது!

நீர்கொழும்பு-கொச்சிக்கடை- தலுவகொடுவ பிரதேசத்தில் துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்த நபரொருவரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் நேற்று (20) கைது செய்திருந்தனர்.

நீல் அருண பிரனாந்து என்றழைக்கப்படும் தலுகொடுவ நீல் என்பவரையே இவ்வாறு கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட போது சந்தேக நபரிடம் ஒரு விமான துப்பாக்கி, 26 ரவைகள் மற்றும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்றையும் குறித்த அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி நபர் ஏதேனும் குற்றச் சம்பவங்களை மேற்கொண்டுள்ளாரா அல்லது மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

21/07/2020

காட்டு யானை தாக்கி பல்கலைக்கழக விரிவுரையாளர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக தொழில்நுட்பப் பிரிவு விரிவுரையாளரான காயத்திரி டில்ருக்சி (வயது-32) என்பவர் காட்டு யானை தாக்கி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இவர் கொழும்பு, களனிய பகுதியை சேர்ந்தவர் என தெரிய வருகின்றது.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Yarlkathir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share