Star TV

Star TV Its media Network

24/04/2020

அனைவருக்கும் இனிய ரமழான் வாழ்த்துக்கள்

15/04/2020

https://youtu.be/CXCOvXLUIs4
14/04/2020

https://youtu.be/CXCOvXLUIs4

Corona விலிருந்து எங்களை பாதுகாத்திடு யா றஹ்மானே| Bayan

https://youtu.be/O9DpIdGch5I
14/04/2020

https://youtu.be/O9DpIdGch5I

மனைவிக்கு I Love You சொன்னால் தவறா ?| Basith Moulavi Bayan

Star TVhttps://chat.whatsapp.com/FVgCD1gW4dr2heL05QRxg7எமது Group ல் நீங்கள் இனைவதன் மூலம் எமது youtube தளத்தில் உள்ள vi...
13/04/2020

Star TV
https://chat.whatsapp.com/FVgCD1gW4dr2heL05QRxg7

எமது Group ல் நீங்கள் இனைவதன் மூலம் எமது youtube தளத்தில் உள்ள video க்கள் Group ல் update பன்னப்படும் அதனை நீ்ங்கள் பார்த்து ரசிக்கவும் அதனை download செய்து
Whattsapp status ஆகவும் பதிவு செய்ய முடியும்

Pleas share message

WhatsApp Group Invite

https://youtu.be/StczwjjNiqgசீனர்கள் கொரோனா வைரஸை(covid 19) உருவாக்கும் காட்சி அம்பலமானது
13/04/2020

https://youtu.be/StczwjjNiqg

சீனர்கள் கொரோனா வைரஸை(covid 19) உருவாக்கும் காட்சி அம்பலமானது

News released By m.nowfal

06/04/2020

Allahu allah

https://b.sharechat.com/wSVrTkil54?referrer=copiedLink
23/03/2020

https://b.sharechat.com/wSVrTkil54?referrer=copiedLink

Download and Share FREE WhatsApp Status Videos, Instagram Stories, Funny Short Videos, Talk To Strangers, Latest Events and Trends in 14 Indian languages. ShareChat: Join India’s Own Social Media App With More Than 100 Million Users. 🔥Trending Topics on ShareChat:🔥 🙏🏻 Wishes & Quotes ....

04/02/2020
13/01/2020

Rajini murugan movie comedy
| share more

11/01/2020

நபி (ஸல்) அவர்கள் பூனை பற்றி கூறிய விடயமும் விஞ்ஞாணிகளின் வியப்பும்

https://m.facebook.com/story.php?story_fbid=149471213136065&id=113327043417149
10/01/2020

https://m.facebook.com/story.php?story_fbid=149471213136065&id=113327043417149

தமிழ் மொழியில் வெளியான அல்குர்ஆனின் முதல் மொழிபெயர்ப்பு

[ "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" எனும் வார்த்தைக்கு "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்" எனும் அழகிய மொழிபெயர்ப்பைத் தந்தவர்.]

தினமும் நாம் ஓதகின்ற திருமறைக் குர்ஆனை முதன் முதலில் தமிழில் மொழி பெயர்த்த பேரறிஞர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களைப் பற்றி எத்தனை பேருக்கு தெரியும்?

உங்கள் பொன்னான நேரத்தில் கொஞ்சத்தை ஒதுக்கி வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்

திருமறைக் குர்ஆன் அருளப்பட்டு 13 நூற்றாண்டுகளாக தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கு குர்ஆனின் தமிழாக்கம் கிடைக்கப் பெற‌வில்லை என்பது ஆச்சரியமாக இருக்கின்றதா?

ஆம் அன்றைய கால கட்டத்தில் திருக்குர்ஆனை பிரிதொரு பாஷைக்கு மொழியாக்கம் செய்வதே பாவம் எனும் கொள்கையில் தமிழக உலமாக்கள் இருந்தார்கள்.

அந்த அறியாமையை உடைத்து அல்லாஹ்வின் வேதத்தை தமிழ் பேசும் பொதுமக்களிடம் தூய தமிழில் கொண்டு வந்தவர் தான் அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.

26. 11. 1876ம் ஆண்டு பிறந்த அறிஞர் அவர்கள் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள வேலூர் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அறபிக் கல்லூரியில் சேர்ந்து முதல் அணியில் மெளலவி பட்டம் பெற்றவராவார்.

1906ம் ஆண்டு மெளலவி பட்டம் பெற்றவுடன் சுயமாகத் தொழில் செய்ய ஆரம்பித்தார்கள்.

அந்தத் தொழிலின் மூலம் கிடைத்த வருமானத்தில் "இஸ்லாமிய நூல் பிரசுரச் சங்கம்" எனும் பெயரில் ஒரு அச்சகத்தை நிறுவினார்கள்.

அந்த அச்சகத்தின் மூலம் பல இஸ்லாமிய நூற்களை வெளியிட்டார்கள்.

1926ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் திகதி ஜும்ஆத் தொழுகைக்குப் பின்னர் திருக்குர்ஆனை தமிழாக்கம் செய்யும் உயர்ந்த பணியைத் துவக்கினார்கள்.

மூன்றாண்டு காலம் இடைவிடாத உழைப்பின் பின்னர் திருக்குர்ஆன் முதல் பாகத்தின் மொழி பெயர்ப்பு அரபி மூலத்துடனும் விரிவுரையுடனும் 19.02. 1929ம் ஆண்டு வெளி வந்தது.

தான் மொழி பெயர்த்த குர்ஆனை எடுத்துக் கொண்டு அல்லாமா அப்துல் ஹமீது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் எல்லா அரபி மத்ரஸாக்களும் பிரயாணம் செய்தார்கள்.

தனது மொழி பெயர்ப்பில் பிழை இருந்தால் சொல்லுங்கள் என ஒவ்வொரு மத்ரஸாவையும் நிர்ப்பந்தித்தார்கள். திருக்குர்ஆன் மொழி பெயர்ப்பு வரலாற்றில், இப்படி ஒரு பரந்த முயற்சி நடந்ததாக நான் அறியவில்லை.

"காபிர்களின் பாஷையான தமிழுக்கு வேதத்தை மொழி மாற்றம் செய்யக் கூடாது" எனும் மெளட்டீகத்தில் வாழ்ந்த அன்றைய உலமாக்கள், அல்லாமா அவர்களின் தியாகத்தையும், தூர நோக்கையும் கண்டு வியந்து போனார்கள் என்றே சொல்லலாம்.

ஆனாலும் ஆலிம்களின் சதியும் பொறாமையும் அல்லாமாவைத் தொடரவே செய்தன‌.

அதன் பயனாக அல்லாமா அவர்களின் மொழியாக்கத்தின் முதல் பாகம் வெளியிடப்பட்ட பிறகு, சமுதாயம் கவலைப்பட்டு கண்ணீர் வடிக்கும் வகையில் "இஸ்லாமிய நூல் பிரசுரச் சங்கம்" எனும் அவர்களின் அச்சகம் செயலிழந்து போனது. அறிஞர் அவர்களுக்கு அன்றைய அறிவிலிகள் "வஹ்ஹாபி" எனும் பட்டப் பெயரைச் சூட்டி அவர்களைத் தூற்ற ஆரம்பித்தார்கள்.

(இஸ்லாமிய கருத்துப் புரட்சி செய்யும் நன்மக்கள் இவ்வாறு தூற்றப்படுவது வழக்கமானது)

தாம் மேற்கொண்ட அறப்பணியை நிறைவுக்குக் கொண்டு வருவதில் அல்லாமா அவர்கள் எண்னற்ற சோதனைகளைச் சந்தித்தார்கள்.

1938ம் ஆண்டு வரை தமிழக உலமாக்கள் தக்க காரணமின்றி அல்லாமாவின் தர்ஜமாப் பணியை எதிர்த்து வந்தார்கள்.

இந்தக் கால கட்டத்தில் தமிழகத்திற்கு விஜயம் செய்த மார்க்க அறிஞர் ஷைகு அப்துல் காதிர் ஹழரத் என்பவர், பாகவி அவர்களை ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்று நிஜாம் மன்னரின் மாமனாராகிய நவாப் நஸீர் யார் ஜங் பஹாத்தூருக்கு அறிமுகப்படுத்தினார்.

நவாப் ஸாஹிபின் பரிந்துரையால் மொழி பெயர்ப்பு மீண்டும் வெளி வரத் துவங்கியது. தனது மொழி பெயர்ப்புப் பணிக்கு பணம் தேவைப்பட்ட பொழுது அல்லாமா அப்துல் ஹமீது ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இலங்கைக்கு வந்து தன்னந்தனியாக வசூல் செய்ய ஆரம்பித்தார்கள்.

அந்நாட்களில் கொழும்பு மாநகரில் வணிகப் பிரமுகராகவும் வழக்கறிஞருமாகத் திகழ்ந்த என்.எம்.எம் ஹனீபா அவர்கள் இதற்கான முழுத் தொகையையும் கொடுத்திட முன் வந்தார்கள்.

(அல்லாஹ் அன்னாரின் கப்ரை விசாலமாக்குவானாக!)

அதன் பயனாக பாகவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் தமிழாக்கம் முப்பது ஜுஸ்உகளும் "தர்ஜமதுல் குர்ஆன் பி அல்தஃபில் பயான்" எனும் பெயரில் முழுமையாக வெளி வர ஆரம்பித்தது.

தர்ஜமாவுக்கு எதிராக ஆரம்பத்தில் போர் கொடி தூக்கியவர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தார்கள்.

பின்னர் மொத்த சமுதாயமும் மொழி பெயர்ப்பை ஒப்புக் கொள்ள ஆரம்பித்தது.

கடுமையாக எதிர்த்த உலமாக்கள் அல்லாமாவின் மொழி பெயர்ப்பை விலை கொடுத்து வாங்கி வாசிக்க ஆரம்பித்தார்கள்.

தனது 17ம் வயதில் அல்லாஹ்வின் வேதத்தை தமிழாக்கம் செய்ய வேண்டுமென ஆசைப்பட்ட அல்லாமா அப்துல் ஹமீது பாகவி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஆசை அன்னார் 70 வயதை அடைந்து விட்ட பொழுதே முழுமையாக நிறைவேறியது.

சுப்ஹானல்லாஹ்! அன்னாரின் இடை விடாத முயற்சியும், தஃவாக் களத்தில் சோதனைகளைக் கண்டு அசராத தைரியமும் எம்மை மெய் சிலிர்க்க வைக்கின்றது.

அல்லாமா அவர்கள் அல்லாஹ்வின் வேதத்திற்காக அனைவரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொண்டு அவரே மொழி பெயர்த்த தர்ஜமாவுக்கு அவரே வசூல் செய்து அவரே பிரிண்ட் பண்ணி அவரே விற்ற அந்த முயற்சியும் புரட்சியுமானது மொழியாக்கத்துறையில் ஒரு சாதனையாகவே பார்க்கப்பட வேண்டியதாகும்.

இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு விடயமும் இருக்கின்றது. அதாவது இன்று "பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்" எனும் வார்த்தைக்கு "அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப் பெயரால் ஆரம்பிக்கிறேன்" என அதிகமானோர் அர்த்தம் செய்வதை நாமனைவரும் நன்கறிவோம்.

உலமாக்கள் உட்பட யாரும் இதில் விதி விலக்கில்லை. ஆனால் இந்த அழகிய மொழி பெயர்ப்பை முதன் முதலில் செய்தவர் அல்லாமா அப்துல் ஹமீது பாகவீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தான் என்பது பலருக்கும் தெரியாத உண்மையாகும்.

தனது வாழ்நாளை அல்லாஹ்வின் வேதத்தை மொழியாக்கம் செய்வதிலும், தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட ஐம்பது லட்சம் மக்களுக்கு அந்த மொழி பெயர்ப்பைக் கொண்டு போய்ச் சேர்ப்பிப்பதிலும் தனது வாழ்நாளை முழுமையாக அர்ப்பணித்த அந்தப் பேரறிஞரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக!

அன்னாரின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து சமுதாயக் காவலர்களுக்கு படிப்பினையைத் தந்தருள்வானாக!

அல்ஹம்துலில்லாஹ்!

-மௌலவி ஸஹ்ரான் (மாஸ்ஊதி)

பின்குறிப்பு: அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மகனார்தான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் முன்னால் மாநிலத் தலைவர் சிராஜுல் மில்லத், AKM.அப்துஸ் ஸமத் அவர்கள்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்பட...
06/01/2020

ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய தூதுவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்

ஐரோப்பிய ஒன்றியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை இன்று சந்தித்து பேச்சு நடத்தினர்.
ஊழல் மோசடியற்ற அரச நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்தும் ஜனாதிபதியின் நடவடிக்கைகளை அவர்கள் பாராட்டினர் என தெரிவிக்கப்படுகிறது.

04/01/2020

நன்மையை ஏவு !
தீமையை தடு ! | Share more

03/01/2020

கல்வி ஞானம் அதிகரிக்க துஆ

| Share more

03/01/2020

பதுளை ஹப்புதளை பகுதியில் உலங்கு வானூர்தி (ஹெலிகாப்டர்) ஒன்று விபத்துக்குள்ளானதில் இலங்கை விமானப்படையை சேர்ந்த நால்வர் உயிரிலப்பு .

அதிகம் பகிரவும்

SERENDIB Network Group linkhttps://chat.whatsapp.com/HokO37s1ZRDEMaZucRrf8Y
03/01/2020

SERENDIB Network Group link

https://chat.whatsapp.com/HokO37s1ZRDEMaZucRrf8Y

WhatsApp Messenger: More than 1 billion people in over 180 countries use WhatsApp to stay in touch with friends and family, anytime and anywhere. WhatsApp is free and offers simple, secure, reliable messaging and calling, available on phones all over the world.

 ×
01/01/2020

×

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் புத்தான்டு வாழ்த்து செய்தி_______________________________________மலர்ந்துள்ள ...
01/01/2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனவின் புத்தான்டு வாழ்த்து செய்தி

_______________________________________

மலர்ந்துள்ள இப்புத்தாண்டு எனதன்பிற்குரிய இலங்கை மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றும், அவர்களின் வாழ்வில் சௌபாக்கியத்தை ஏற்படுத்தும் ஆண்டாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கின்றேன்.

இந்த 2020 புத்தாண்டு பிறப்புடன் தீர்க்கமானதொரு காலப்பகுதி ஆரம்பமாகியுள்ளது. அதனோடு இணைந்த அனைத்து சவால்களையும் தனிநபர்கள் என்ற வகையிலும் ஒரு தேசமாகவும் வெற்றிகொள்ள வேண்டியது அவசியமாகும்.

பொருளாதார அபிவிருத்தியைப் போன்றே அரசியல் ரீதியிலும் இவ்வருடம் மிக முக்கியத்துவமுடையதாகும். தேசிய ஐக்கியம், சமாதானம், நல்லிணக்கம் ஆகியவற்றை பாதுகாத்தவாறு இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். நாட்டில் உண்மையான சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்குமான சரியான பாதை அதுவாகும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும், வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் நேரத்தை முகாமைத்துவம் செய்து பொது நலனிற்கான கடமைகளை முறையாக நிறைவேற்றப் பழகிக் கொள்வதன் மூலமே எமது குறிக்கோள்களை நாம் வெற்றிகொள்ள முடியும். அத்தோடு எதிர்காலத்தில் எமக்கு முகங்கொடுக்க நேரிடக்கூடிய இயற்கை அனர்த்தங்களையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் சுற்றாடலின் மீது மிகுந்த உணர்வுபூர்வமாக செயற்பட வேண்டியதன் அவசியத்தை தற்போது காலநிலை காரணிகள் எமக்கு உணர்த்தி வருகின்றன.

மக்களுக்கு சுபீட்சமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும் நாளை பிறக்கவுள்ள எதிர்கால தலைமுறையினருக்கு சிறந்த நாட்டை உருவாக்குவதற்குமான தமது கடமைகளை நிறைவேற்ற அனைவருக்கும் பலமும் தைரியமும் கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கும் அதேவேளை, பிறந்துள்ள இப்புத்தாண்டு அனைத்து விதமான நல்ல எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் நிறைவேறும் வெற்றிகரமான ஆண்டாக அமைய வேண்டுமென வாழ்த்துகின்றேன்.

அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் புத்தான்டு வாழ்த்து செய்தி________________________________________பொருளாதாரம், அர...
01/01/2020

அதிமேதகு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் புத்தான்டு வாழ்த்து செய்தி
________________________________________

பொருளாதாரம், அரசியல்,சமூக கலாசாரம் மற்றும் தொழிநுட்பம் ஆகிய அனைத்து துறைகளிலும் புதியதோர் யுகம் நமது தாய் நாட்டில் மலர வேண்டும் என சகல இலங்கையர்களும் எதிர்பார்த்திருக்கின்ற ஒரு தருணத்திலேயே ,இந்த புத்தாண்டு பிறந்திருக்கின்றது. அந்தவகையில்
மலர்ந்துள்ள, இப்புத்தாண்டை புதிய அரசாங்கம், 'சுபீட்சத்தின் ஆண்டாக' ஆக்கும் திடவுறுதிப்பாடு
மற்றும் அர்ப்பணிப்புடனேயே வரவேற்கின்றது.
எமக்கே உரித்தான தொலைநோக்கினை கொண்டவொரு தேசமாக கடந்த காலத்தில் நாம் அடைந்த வெற்றிகள் ஏராளமானவை. அத்தகைய எமது தனித்துவ அடையாளங்களையும் திறன்களையும் நவீன தொழிநுட்பத்துடன் ஒன்றிணைத்து வெளிப்படுத்துவதனூடாக சுபீட்சத்தை அடையும் அபிலாஷையுடனேயே ஒரு அரசாங்கம் என்ற வகையில் நாம் இப்புத்தாண்டில் தடம் பதிக்கின்றோம். அத்தோடு தேசிய உணர்வுகளுக்கு முன்னுரிமையளிக்கும் பலமானதொரு பொருளாதாரம் நாட்டுக்கு தேவையாகும். அதுவே சுயாதீனத்தை நோக்கிய எமது பயணத்தை மேலும் உறுதிப்படுத்தும்.
அதேபோன்று ஒழுக்கப் பண்பாடான சமூகத்தினால் பலப்படுத்தப்படும் பாதுகாப்பானதொரு தேசமே மக்களின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என்பதையும் நான் அறிவேன். அத்தகையதொரு சமூகத்திலேயே தற்கால மற்றும் எதிர்கால தலைமுறையினரின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும்.
வளர்ந்தவர்கள் என்ற வகையில் நாமும், பிறந்துள்ள இப்புத்தாண்டில் அந்த இலக்கினை நோக்கிப் பயணிப்பதற்கு உறுதியுடன் கைகோர்த்துக் கொள்வோம்.
நாட்டை நேசிக்கும் மக்களின் ஐக்கியத்திற்கு கிடைத்த வெற்றியே ,இந்த புதிய அரசாங்கமாகும்.
மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிரான எந்தவொரு சக்திக்கும் ,இந்த நாட்டில் நாம், இடமளிக்கப்போவதில்லை. அனைத்து மக்களும் ஒற்றுமையாகவும் மகிழ்ச்சியாகவும் வாழக்கூடிய சிறந்த சூழலை நாட்டில் உருவாக்குவதே அதன் நோக்கமாகும். புத்தாண்டு பிறப்புடன் மக்களின் மனங்களில் ஏற்பட்டுள்ள புத்துணர்ச்சியானது ,புதியதோர்
தேசத்தைக் கட்டியெழுப்பும் 'சுபீட்சத்தின் நோக்கு' செயற்திட்டத்தை ,இலகுபடுத்தும் என்பது எனது உறுதியான நம்பிக்கையும் பிரார்த்தனையுமாகும்.
மலர்ந்துள்ள ,இந்த புத்தாண்டு அனைத்து ,இலங்கையர்களுக்கும் எனதன்பிற்குரிய பிள்ளைகளுக்கும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்யும் ஆண்டாக அமைய எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகள்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Star TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share