03/06/2024
தேசிய சுற்றுச் சூழல் வாரத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின்; ஏற்பாட்டில் அக்கரைப்பற்று சின்னமுகத்துவாரம் பகுதியில் கடற்கரை பிரதேசத்தை துப்பரவு செய்யும் சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டது
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் பிரதேச செயலக சுற்றச்சூழல் அபிவிருத்தி உத்தியோகத்தர் யு.எல்.மக்மூதா மற்றும் எஸ்.ஜனனி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் மேற்கொள்ளப்பட்ட கடற்கரை பிரதேச தூய்மைப்படுத்தும் பணியில் அக்கரைப்பற்று 241 ஆம் காலாட்படைப்பிரிவின் அதிகாரிகள் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சமூக நலன் அமைப்பினர் பிரதேச செயலக அதிகாரிகள் ஆலையடிவேம்பு பிரதேச சபை ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது கடற்கரை பிரதேசத்தில் காணப்பட்ட பிளாஸ்டிக் போத்தல்கள் சிரட்டைகள் பொலித்தின் பைகள் குப்பைகள் என மீட்கப்பட்ட கழிவுப்பொருட்கள் அகற்றப்பட்டு பிரதேச சபை உழவியந்திரங்களின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டது.
கடற்கரை பிரதேசத்தினை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியமும் இங்கு அறிவுறுத்தப்பட்டது.