Elegant TV

Elegant TV Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Elegant TV, TV Network, .
(1)

ஓட்டமாவடி என்.எம்.எம் மர்சூக் அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்வாழைச்சேனை -05,  அறபா வீதியை பிறப்பிடமாகவும், ...
20/05/2024

ஓட்டமாவடி என்.எம்.எம் மர்சூக்
அகில இலங்கை சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

வாழைச்சேனை -05, அறபா வீதியை பிறப்பிடமாகவும், ஓட்டமாவடி -02, எம்.பீ.சீ.எஸ் குறுக்கு வீதி என்ற முகவரியை வதிவிடமாகவும் கொண்ட நூறு முகம்மது, மஸாகிறா ஆகிய தம்பதிகளின் புதல்வரான நூறு முகம்மது முகம்மது மர்சூக் (தீவு முழுவதற்குமான) அகில இலங்கை சமாதான நீதவானாக 2024.05.20ஆம் திகதி வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கெளரவ எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

இவர் தனது ஆரம்பக்கல்வியினை மட்/மம/பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலயத்திலும், உயர்தர கல்வியினை மட்/மம/வாழைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயத்திலும் (தேசிய பாடசாலை) கலைப் பிரிவில் கல்வி கற்றார்.

மேலும் வந்தாறுமூலை தொழில்நுட்ப பயிற்சி அதிகாரசபையில் (VTA) MCTR, Automobile (NVQ-4) பாடநெறியினையும், அம்பாரை ஹாடி தொழில்நுட்ப கல்லூரியில் Diploma in Automobile (NVQ-5) டிப்ளோமா பாடநெறியினையும் தொடர்ந்தார். சம்மாந்துறை மத்திய கல்லூரியில் வலயக்கல்வி அலுவலகம் நடாத்திய Auto CAD 2D & 3D, Diploma in Auto CAD & MEP பாடநெறியினையும், கிழக்கு பல்கலைக்கழகத்தில் (EUSL) Journalism பாடநெறியினையும், தாய்லாந்து Asian Institute of Technology (AIT) பல்கலைக்கழகத்தில் Vehicular Emission Testing Management (VETM) கற்கைநெறியினையும் தொடர்ந்து கற்றார்.

பின்பு கந்தகாடு புனர்வாழ்வு பயிற்சி நிலையத்தில் (KRTC) புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்காக NAITA, GIZ இணைந்து நடாத்திய மோட்டார் சைக்கிள் , OBM பாடநெறிக்கான (Instructor) போதானாசிரியராகவும் பணியாற்றியது மட்டுமல்லாது உயர்தர பிரிவில் கல்வி கற்கும் பொறியியல் தொழில்நுட்ப மாணவர்களுக்கான (E-Tech) ஆசிரியராகவும் பாடசாலைகளில் பகுதி நேர கற்பித்தலிலும் ஈடுபட்டார்.

கடந்த காலங்களில் தன்னை ஒரு சமூக செயற்பாட்டாளராகவும், சமூக ஆர்வலராகவும் சமூகப்பணியினை முன்னெடுக்கும் அமைப்புக்களான மாணவர்கள் நலன்புரி அமைப்பின் (WSO) -தலைவர், கல்குடா YMMA -தலைவர், AL-Noor Charity Foundation -இணைப்பாளர், AL-ISMA நிறுவனத்தின் -உறுப்பினர், தமிழ் முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் (TMNA) -பிரதி செயலாளர் நாயகம், சுதந்திர ஊடக கண்காணிப்பு மையத்தின் (IMW) -மாவட்டப் பணிப்பாளர், மனித உரிமைகள் அமைப்பின் (HRO) -உறுப்பினர், AACI-Sri Lanka Chapter -தவிசாளர், றோயல் கெம்பஸின் -பணிப்பாளராகவும் பதவிவகித்ததோடு, நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்களின் ஊடாகவும் கடந்த காலங்களில் சமூகத்திற்கான பணியை முன்னெடுத்தவருமாவார்.

தற்போது பிறைந்துரைச்சேனை அஸ்ஹரியன்ஸ் பழைய மாணவர்கள் சங்கத்தின் (Azharians' P.P.A) செயலாளராக செயற்பட்டு வருவதுடன் கிழக்கு இளைஞர்கள் அமைப்பின்(EYO) பணிப்பாளராகவும்,
Elegant Media Network (EMN) -ஸ்தாபகர், முகாமைத்துவப் பணிப்பாளராகவும் (CEO/MD) இருந்து பொதுப் பணியினையினையும் மேற்கொண்டு வருகின்றார்.

ஐக்கிய குடியரசு முன்னணி(URF) மத்திய குழு உறுப்பினராகவும், Youth Republic செயற்குழு உறுப்பினராகவும் மற்றும் கிழக்கு மாகாணத்திற்கான (இளைஞர் பிரிவு) இணைப்பாளராகவும் செயற்படுகிறார்.

கொழும்பு நாரஹேன்பிட்ட தலைமை அலுவலகமான மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் - வாகன புகைப் பரீட்ச்சித்தல் நம்பிக்கை நிதியத்தில் தொழில்நுட்பவியலாளராக - Inspection Officer ஆக தற்போது கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ඔඩ්ඩමාවාඩි එන්.එම්.එම් මර්සූක් වන මා මුළු දිවයිනටම සාම විනිසුරුවරයෙකු ලෙස දිවුරුම් දීම.

වාලච්චේනයි-05, අරෆා පාර, ඔඩ්ඩමාවඩි-02, MPCS හරස් පාරේ පදිංචිව සිටින නූරු මුහම්මදු මහතා සහ මසහිරා මහත්මියගේ පුත්‍රයා වන නූරු මුහම්මදු මුහම්මදු මර්සූක්. 2024.05.20 වන දින, ඔහු (මුළු දිවයිනටම)සාම විනිසුරුවරයෙකු ලෙස වාලච්චේනයි දිසා මහේස්ත්‍රාත් අධිකරණ විනිසුරු ගරු එම්.අයි.එම්.රිස්වි මහතා ඉදිරියේ දිවුරුම් දෙන ලදී.

ඔහු තම මූලික අධ්‍යාපනය මඩ /මම/ බරයින්තුරච්වේනයි අශ්හර් මහා විද්‍යාලය සහ උසස් අධ්‍යාපනය මඩ/මම/වාලච්චේනයි අන්- නුර් මහා විද්‍යාලය ( ජාතික පාසල ) කලා අංශයෙන් අධ්‍යාපනය ලබා ඇත.

මොහු ජාතික වෘත්තීය පුහුණු කිරිමේ ආයතනයේ වන්දාර්මුලයි හි MCTR, Automobile (NVQ-4) පාඨමාලාව සහ අම්පාර හාඩි තාක්ෂණ විද්‍යාලයේ Diploma in Automobile (NVQ-5) ඩිප්ලෝමා පාඨමාලාවද , සමන්තුරේ මධ්‍ය විද්‍යාලයේ ප්‍රාදේශීය අධ්‍යාපන කාර්යාලය මගින් Auto CAD 2D & 3D, Diploma in Auto CAD & MEP පාඨමාලා ද, නැගෙනහිර විශ්වවිද්‍යාලයේ (EUSL) Journalism පාඨමාලාව ද, Asian Institute of Technology (AIT) හි තායිලන්ත විශ්වවිද්‍යාලයෙන් Vehicular Emission Testing Management (VETM) පාඨමාලාව ද හදාරා ඇත.

පසුව ඔහු කන්දකාඩු පුනරුත්ථාපන පුහුණු මධ්‍යස්ථානයේ (KRTC) පුනරුත්ථාපනය වූ පුද්ගලයින් සඳහා NAITA සහ GIZ එක්ව පවත්වන ලද Motor Cycle සහ OBM පාඨමාලාවේ උපදේශකයෙකු ලෙස සේවය කළ අතර උසස් ඉංජිනේරු තාක්ෂණ සිසුන් (E-Tech) සඳහා ගුරුවරයෙකු ලෙසද, පාසල්වල අර්ධකාලීන ඉගැන්වීම් කටයුතු සිදුකරේ.

අතීතයේ දී, ඔහු සුබසාධන ශිෂ්‍ය සංවිධානයේ (WSO) - සභාපති ලෙස ද, Kalkudah YMMA - සභාපති ලෙස ද, AL-Noor Charity Foundation - Coordinator, AL-ISMA සංවිධානයෙ හි සාමාජික ලෙස ද, දෙමළ මුස්ලිම් ජාතික සන්ධාන, සංවිධානවල සමාජ සේවකයෙකු සහ සමාජ ක්‍රියාකාරිකයෙකු ලෙස ද (TMNA) හි නියෝජ්‍ය ලේකම්, ස්වාධීන මාධ්‍ය නිරීක්ෂණ (IMW) හි දිස්ත්‍රික් අධ්‍යක්ෂ, මානව හිමිකම් සංවිධානය (HRO) හි සාමාජික, AACIහි ශ්‍රී ලංකා පරිච්ඡේදය හි සභාපති , රොයල් විශ්වවිද්‍යාලයෙහි අධ්‍යක්ෂ යන තනතුරු දරන ලදී.

වර්තමානයේ දි Azharians' P.P.A සහ නැගෙනහිර තරුණ සංවිධානයේ (EYO) ලේකම් ලෙස ද කටයුතු කරන අතර
Elegant Media Network (EMN) හි නිර්මාතෘ, කළමනාකාර අධ්‍යක්ෂ (CEO/MD) කටයුතු කෙරේ.

ඔහු එක්සත් ජනරජ පෙරමුණේ (URF) මධ්‍යම කාරක සභිකයෙක්, තරුණ ජනරජයේ විධායක කමිටු සාමාජිකයෙක් සහ නැඟෙනහිර පළාතේ (යෞවන අංශය) සම්බන්ධිකාරකවරයෙකු ලෙසත් කටයුතු කරේ.

ඔහු දැනට මෝටර් රථ ප්‍රවාහන දෙපාර්තමේන්තුවේ වාහන වායු විමෝචන භාරකාර අරමුදලේ කාර්මික හා පරික්ෂක නිලධාරියෙකු ලෙස කටයුතු කෙරේ.

**Oddamavadi NMM Marzook Sworn in as Justice of the Peace for Whole Island**

Nooru Mohamed Mohamed Marzook, son of Nooru Mohamed and Masahira, born in Valaichenai-05, Arafa Road, and residing at Oddamavadi-02, MPCS Cross Road, was sworn in as a Justice of the Peace for the whole island on May 20, 2024, in the presence of Hon. MIM Rizvi, Judge of the Valaichenai District Magistrate Court.

He received his primary education at BT/BC/Brainthuraichenai Azhar Maha Vidyalaya and completed his higher education in the Arts stream at BT/BC/Valaichenai AN-Noor Maha Vidyalaya (National School).

Furthermore, he pursued an MCTR, Automobile (NVQ-4) course at the VTA in Vantharumoolai, and a Diploma in Automobile (NVQ-5) at Hardy College of Technology in Ampara. He also completed an Auto CAD 2D & 3D, Diploma in Auto CAD & MEP course conducted by the regional education office at Sammanthurai Central College, a Journalism course at Eastern University (EUSL), and a Vehicular Emission Testing Management (VETM) course at the Asian Institute of Technology (AIT) University in Thailand.

Later, he worked as an instructor for a Motor Cycle and OBM course conducted jointly by NAITA and GIZ at the Kanthakadu Rehabilitation Training Center (KRTC), and as a teacher for Engineering Technology students (E-Tech) in the higher category, as well as engaging in part-time teaching in schools.

In the past, he has been a social worker and social activist in organizations such as President of the Welfare Students' Organization (WSO), President of Kalkudah YMMA, Coordinator of AL-Noor Charity Foundation, Member of AL-ISMA Association, Deputy General Secretary of the Tamil Muslim National Alliance (TMNA), District Director of Independent Media Watch (IMW), Member of Human Rights Organization (HRO), Chairman of AACI-Sri Lanka Chapter, Director of Royal Campus, and a media person in various organizations.

He is currently the Secretary of Azharians' P.P.A., Director of the Eastern Youth Organization (EYO), Founder and Managing Director (CEO/MD) of Elegant Media Network (EMN), and continues his public service.

He is also a member of the Central Committee of the United Republic Front (URF), a member of the Youth Republic Executive Committee, and Coordinator for the Eastern Province (Youth Wing).

It is noteworthy that he is currently working as a technician and Inspection Officer at the Department of Motor Traffic - Vehicular Emission Test Trust Fund, Head Office, Narahenpita, Colombo.

السلام عيكم ورحمت الله وبركاته_عيد مبارك_🤍*تقبل الله منا ومنكم صالح العمل*✨🤍ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் மு...
10/04/2024

السلام عيكم ورحمت الله وبركاته

_عيد مبارك_🤍
*تقبل الله منا ومنكم صالح العمل*✨🤍
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் முகநூல் உறவுகள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

EID MUBARAK 🌙

மர்சூக் என் முஹம்மட்
முகாமைத்துவப் பணிப்பாளர்
எலிகன்ட் மீடியா நெட்வேர்க்

ஐக்கிய குடியரசு முன்னணியின் செயற்குழு உறுப்பினராக ஓட்டமாவடி மர்சூக் என் முஹம்மட்  நியமனம் ஐக்கிய குடியரசு முன்னணியின் இள...
10/02/2024

ஐக்கிய குடியரசு முன்னணியின் செயற்குழு உறுப்பினராக ஓட்டமாவடி மர்சூக் என் முஹம்மட் நியமனம்

ஐக்கிய குடியரசு முன்னணியின் இளைஞர் பிரிவான Youth Republic குடியரசின் செயற்குழுவிற்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (10) நாரஹேன்பிட்டியிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கெளரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்பி கலந்து குறித்த நியமனங்களை வழங்கி வைத்தார்.

இதன் போது கிழக்கு மாகாண இளைஞரணி ஒருங்கிணைப்பாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் ஓட்டமாவடியைச்சேர்ந்த மர்சூக் என் முஹம்மட் நியமனக்கடிதத்தினை உத்தியோகபூர்வமாக கட்சி தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ஐக்கிய குடியரசு முன்னணியின் பொதுச் செயலாளர், இளைஞர் பிரிவின் தலைவர் தீக்ஷன கம்மன்பில உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

பிறைந்துரைச்சேனை அஸ்ஹரியன்ஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுதந்திர தின பிரம்மாண்ட வரலாற்று நிகழ்வுதேசத்தின் 76வது சுதந்திர தி...
06/02/2024

பிறைந்துரைச்சேனை அஸ்ஹரியன்ஸின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சுதந்திர தின பிரம்மாண்ட வரலாற்று நிகழ்வு

தேசத்தின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 04ம் திகதி பிறைந்துறைச்சேனை அஸ்ஹரியன் பழைய மாணவர்கள் சங்கம் ஏற்பாடு செய்த வரலாற்றில் பேசுபெருளாக இடம்பிடித்த விளையாட்டு நிகழ்வு பெருந்திரளான மக்கள் பங்கேற்பு, ஆதரவுடன் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்கள், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிறைந்துரைச்சேனை முத்துக்கள் கெளரவிப்பு, மருதமுனை கமாலின் பாடல், கபடி, கயிறுலுத்தல் போட்டி மற்றும் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்று மக்கள் மனதில் நீங்காத நிகழ்வாக அமைந்திருந்தது.

நிகழ்வின் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண தொழில் திணைக்கள பிரதி ஆணையாளர் ஏ.தாஹிர் (SLAS) கலந்து சிறப்பித்ததுடன், மைதானத்திற்கான பெயர் பலைகையினையும் உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து, சாதுலியா மற்றும் அஸ்ஹர் மாணவர்களும் கெளரவிக்கப்பட்டதுடன், வெற்றியீட்டிய அணிக்கான கிண்ணமும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், இந்நிகழ்வில் பிறைந்துரைச்சேனை மண்ணில் வைத்தே பிறைந்துரைச்சேனை சாதனையாளர்கள் பிரதம அதிதியினால் நினைவுச்சின்னம் வழங்கி கெளரவப்படுத்தப்பட்டமை முக்கிய அம்சமாகும்.

பிறைந்துரைச்சேனை மண்ணில் சுதந்திர தின நிகழ்வு மற்றும் கெளரவிப்பு நிகழ்வும்Azharians' Past pupils' Association யினால் இன்...
03/02/2024

பிறைந்துரைச்சேனை மண்ணில் சுதந்திர தின நிகழ்வு மற்றும் கெளரவிப்பு நிகழ்வும்

Azharians' Past pupils' Association யினால் இன்று(4) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 76 வது சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வும் கெளரவிப்பு விழா-2024

பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்யாலய விளையாட்டு மைதானத்திற்கு பி.ப 2.00 மணிக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

நிர்வாகம்
-APPA-

ஓட்டமாவடியில் நடைபெற்ற ஜப்பானிய கராத்தே நிபுணர் ஹன்ஷி கெனிச்சி புஃகாமிசு அவர்களின் சர்வதேச கராத்தே பயிற்சிநெறிகடந்தவாரம்...
15/01/2024

ஓட்டமாவடியில் நடைபெற்ற ஜப்பானிய கராத்தே நிபுணர் ஹன்ஷி கெனிச்சி புஃகாமிசு அவர்களின் சர்வதேச கராத்தே பயிற்சிநெறி

கடந்தவாரம் SKMS கராத்தே கழகத்தின் முதல்வர் சிஹான் MS.வஹாப்தீன் மற்றும் USKU -EP கராத்தே சங்கத்தின் கறுப்புபட்டி மாணவர்கள் குழாமினால் ஏற்ப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்விற்கு ஜப்பான் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த கராத்தே நிபுணர் ஹன்ஷி கெனிச்சி புஃகாமிசு அவர்கள் மாணவர்களுக்கு பயிற்சிநெறியை வழங்கியதோடு சர்வதேச சான்றிதழ்களையும் மாணவர்களுக்கு வழங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் ஓட்டமாவடி,வாழைச்சேனை, செம்மண்னோடை,மட்டக்களப்பு,நிந்தவூர் மற்றும் பொத்துவில் பிரதேசங்களிலிருந்து மிகவும் ஆர்வத்துடன் மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னால் கிழக்கு மாகாண ஆளுனரான கலாநிதி MLM.ஹிஸ்புல்லாஹ்வும் சிறப்பு அதிதிகளாக கல்குடா தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் உயர்பீட உறுப்பினருமான ஹபீப் றிபான், அல்கிம்மா நிறுவனப் பணிப்பாளர் அஷ்ஷெஹ் MS.ஹாறூன் (ஸஹ்வி) ,USKU கராத்தே சங்கத்தின் பிரதம போதனாசிரியர் ZA.ரவூப், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் MM.ஹனீபா, அக்கீல் அவசர சேவை பிரிவின் தலைவர் MAC நியாஸ் ஹாஜி, VSKA கராத்தே சங்கத்தின் போதனாசிரியர் விஜயகுமார், JKMO சங்கத்தின் சிரேஷ்ட ஆசிரியர் சில்வா மற்றும் JKF கராத்தே சங்கத்தின் கிழக்குமாகாண போதனாசிரியர் புஷ்பராஜா ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வின் இறுதி அம்சமாக தேசிய, மாகாண கராத்தே போட்டிகளில் வெற்றீயீட்டிய வீரர்களை கௌரவப்படுத்தியதோடு அதிதிகள் மற்றும் SKMS கறுப்புப் பட்டி ஆசிரியர்களுக்கான நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

பல தசாப்தங்களாக சோட்டோக்கன் கராத்தே விளையாட்டு ஓட்டமாவடி பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற ஒன்றாக திகழ்வதோடு அதனை கௌரவிக்கும் நிகழ்வாக ஜப்பானிய கராத்தே நிபுணரை அழைத்து வந்து இந்நிகழ்வினை SKMS. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திறன்பட நிறைவு செய்திருந்தனர்.

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்ඔබ සැමට සුභ අලුත් අවුරුද්දක් වේවාHappy New Year to you all -2024Marz...
31/12/2023

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
ඔබ සැමට සුභ අලුත් අවුරුද්දක් වේවා
Happy New Year to you all -2024

Marzook N Mohamed
MD of Elegant Media Network

Admin

Shotokan karate national championship 2023 போட்டியில்ஓட்டமாவடி USKU கராத்தே மாணவர்கள் சாதனை................................
28/12/2023

Shotokan karate national championship 2023 போட்டியில்
ஓட்டமாவடி USKU கராத்தே மாணவர்கள் சாதனை................................................................................

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் 2023.12.26 இல் இடம்பெற்ற சோட்டோகக்கன் கராத்தே தேசிய போட்டியில் எமது ஊரை சேர்த்த 4 மாணவர்கள் கிழக்கு மாகாண UNIVERSAL SHOTKAN KARATE UNION சார்பாக பங்குபற்றி 1 தங்கப்பதக்கம் 2 வெண்கலப் பதக்கங்களை பெற்று கொண்டார்கள். பலத்த போட்டிக்கு மத்தியில் இவ்வாரான பதக்கங்கள் பெற்று கொண்டமை குறிப்பிடதக்கது.

இந்த மாணவர்கள் திறமையை வெளிப்படுத்த சிறந்த பயிற்சிகளை வழங்கியவர் சிஹான் MS.வஹாப்தீன் அவர்கள் என்பதும் மற்றும் அனைத்து வித வழிகாட்டல் மற்றும் உறுதுணையாக இருந்த universal shotkan karate union தலைவர் Shihan ZA.RAUF அவர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு
மேலும் முக்கியமாக கடந்த காலத்தில் இந்த தேசிய போட்டிக்கு தெரிவாவதற்காக நடத்தப்பட்ட கிழக்கு மாகாண SHOTOKAN கராத்தே போட்டியை மிகவும் திறன் பட நடத்தி முடித்து அதிலிருந்து மாணவர்கள் தேசிய போட்டிக்கு பங்குபெற மிகவும் உறுதுணையாக இருந்த கிழக்கு மாகாண சோட்டோக்கன் கராத்தே சம்மேளன தலைவரும், RKO கராத்தே சங்க தலைவருமான சிஹான் கேந்திரமூர்த்தி அவர்களுக்கும் எங்கள் USKU கழகம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றனர்.

தகவல்-
சென்செய் N.சதாம் BA(Hons)
செயலாளர்
USKU - கிழக்கு மாகாணம்

ZEE தமிழ் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் வெற்றிப்பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா நாடு திரும்பியுள்ளார்...
28/12/2023

ZEE தமிழ் சரிகமப பாடல் போட்டியின் இறுதிப்போட்டியில் வெற்றிப்பெற்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கில்மிஷா நாடு திரும்பியுள்ளார். அவருக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

தொலைதூர சேவை பேரூந்துகள் அனைத்தும் வாழைச்சேனை நகரூடாக பயணம் வாழைச்சேனையிலிருந்து தூர இடங்களுக்கு பிரயாணம் மேற்கொள்ளும் ப...
06/12/2023

தொலைதூர சேவை பேரூந்துகள் அனைத்தும் வாழைச்சேனை நகரூடாக பயணம்

வாழைச்சேனையிலிருந்து தூர இடங்களுக்கு பிரயாணம் மேற்கொள்ளும் பொது மக்களின் நன்மைகருதி மட்டக்களப்பிலிருந்து தொலைதூர சேவையில் ஈடுபடும் அனைத்து பேரூந்துகளும் வாழைச்சேனை நகரூடாக பிரயாணத்தை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையின் அடிப்படையில் அதற்கான உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய குடியரசு முன்னணியின் கிழக்கு மாகாண இளைஞர் பிரிவு இணைப்பாளர் என்.எம்.எம்.மர்சூக் அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் கெளரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க (எம்பி) கடந்த 04.11.2023ம் திகதி வாழைச்சேனை வர்த்தக சங்க நிர்வாகிகள், பிரதிநிதிகள் குழுவுடன் சிநேகபூர்வ கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், இப்பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.

இதன் போது, மட்டக்களப்பு, கல்முனையிலிருந்து கொழும்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், கண்டி நோக்கிச்செல்லும் தொலைதூர சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் வாழைச்சேனை நகருக்குச் சென்று அங்கிருந்து பிரயாணங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

தற்போது வரை தொலைதூர சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் அனைத்தும் வாழைச்சேனை பொலிஸ் நிலையச்சந்தியினால் ஓட்டமாவடியூடாகச்செல்வதால் வாழைச்சேனையிலிருந்து தொலைதூரம் செல்லும் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

அத்துடன், பொலிஸ் நிலையச்சந்தியிலிருந்து மீன்பிடித்துறைமுகம் வரையான பிரதான வீதியில் வலையக்கல்வி அலுவலகம், தொலைத்தொடர்பு நிலையம், வங்கிகள், ஆதார வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, இலங்கை போக்குவரத்து சபை, பிரதேச செயலகம், மதஸ்தலங்கள், பலநோக்கு கூட்டுறவு நிலையம், ஐஸ் உற்பத்தித் தொழிற்சாலை, பிரதான தபால் நிலையம், ஆலயங்கள், பிரதேச சபை, தனியார் வைத்தியசாலை, பொது விளையாட்டு மைதானம், 400ற்கு மேற்பட்ட வர்தக நிலையங்கள், பிரதான சந்தைத்தொகுதி, வர்த்தக சங்கம் என்பவற்றை இப்பிரதேசம் கொண்டுள்ளது.

அத்துடன், தூர இடங்களுக்கு கடமைகளுக்குச் செல்லும் ஊழியர்களும் அலுவலக, வைத்தியத் தேவைகளுக்காகச் செல்லும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களும் தினமும் சுமார் 1.5KM தூரம் கால் நடையாக அல்லது வேறுவழிகளில் குறித்த வாழைச்சேனை பொலிஸ் நிலையச்சந்தி வரை சென்று பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டிய அசெளகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

மிகவும் இலகுவாக மேற்கொள்ளும் பிரயாணத்தினை கடினமாக்கி மனித வலு வீண்விரயமாக்குகின்றமை முக்கிய பிரச்சினையாகவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டதுடன், விரைவாக இதற்கான தீர்வுகளைப்பெற நடவடிக்கைகளை எடுப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவினால் வாக்குறுதி வழங்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக கெளரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க (எம்.பி) வினால் போக்குவரத்து இராஜாங்க அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், ஐக்கிய குடியரசு முன்னணியின் கிழக்கு மாகாண இளைஞர் பிரிவு இணைப்பாளர் என்.எம்.எம்.மர்சூக் இன்று (6) நேரில் சென்று இராஜாங்க அமைச்சில் அமைச்சரின் செயலாளர் திரு.பண்டார அவர்களிடம் மேற்படி கோரிக்கை தொடர்பிலான மகஜர் கையளிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன் பயனாக விரைவில் வாழைச்சேனை நகரூடாக அனைத்து தொலைதூர பேரூந்துகளும் இடம்பெறுமென்பதையும் வாழைச்சேனை நகரத்திலிருந்து இலகுவாக தூரப்பிரயாணங்களை மேற்கொள்ள முடியுமென்பதையும் செயலாளர் உறுதிப்படுத்தியிருந்தமை மகிழ்ச்சியளிக்கிறது.

அத்துடன், இதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்ட ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் முன்னாள் அமைச்சர் கெளரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க (எம்பி) அவர்களுக்கும் இராஜாங்க அமைச்சில் அமைச்சரின் செயலாளர் திரு.பண்டார ஆகியோருக்கும் இப்பிரதேச மக்கள் சார்பாக ஐக்கிய குடியரசு முன்னணியின் கிழக்கு மாகாண இளைஞர் பிரிவு இணைப்பாளர் என்.எம்.எம்.மர்சூக் நன்றி தெரிவிக்கின்றார்.

வலயத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த பிறைந்துரைச்சேனை அஸ்ஹர்  மகா வித்தியாலய மாணவி பாத்திமா சஜாஇம்முறை வெளியிடப்பட்ட த...
17/11/2023

வலயத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்த பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலய மாணவி பாத்திமா சஜா

இம்முறை வெளியிடப்பட்ட தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலய மாணவி பாத்திமா சஜா 188 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு சம்பிக்க ரணவக்க (எம்பி) விஜயம்  கிழக்கு மாகாண இணைப்பாளர் என்.எம்.எம்.மர...
09/11/2023

கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு சம்பிக்க ரணவக்க (எம்பி) விஜயம்

கிழக்கு மாகாண இணைப்பாளர் என்.எம்.எம்.மர்சூக் அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்குக்கு விஜயம் மேற்கொண்ட ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க கிழக்கின் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறிடங்களைப் பார்வையிட்டதுடன், பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களையும் மேற்கொண்டிருந்தார்.

அதன் தொடரில் கடந்த சனிக்கிழமை (2023.11.04) மாலை 7 மணியளவில் ஏறாவூர் கிழக்குப் புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்திற்கு (EASCCA HOSPICE) கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

மட்டக்களப்பு பொது வைத்தியசாலையின் கீழியங்கும் அனைத்து பிரதேச மக்களுக்கும் சிறந்த சேவைகளை வழங்கி வரும் குறித்த பராமரிப்பு நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர், வைத்தியர்கள், ஊழியர்கள் மற்றும் உள்நோயாளிகளுடன் சிநேகபூர்வ உரையாடலிலும் ஈடுபட்டார்.

வாழைச்சேனை கடதாசி ஆலையைப் பார்வையிட்ட சம்பிக்க ரணவக்க எம்பி  ஐக்கிய குடியரசு முன்னணியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம...
08/11/2023

வாழைச்சேனை கடதாசி ஆலையைப் பார்வையிட்ட சம்பிக்க ரணவக்க எம்பி

ஐக்கிய குடியரசு முன்னணியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.எம்.மர்சூக் அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கெளரவ.பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்பி மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறிடங்களைப் பார்வையிட்டதுடன், பல்வேறு தரப்பினருடனும் சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்.

இதன் தொடரில் கடந்த 2023.11.04ம் திகதி வாழைச்சேனைக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் அமைச்சரும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ. பாட்டலி சம்பிக்க ரணவக்க மக்கள் சந்திப்புக்களில் கலந்து கொண்டதுடன், பிரதேச பாடசாலை மற்றும் வாழைச்சேனை கடதாசி ஆலைக்கும் சென்று பார்வையிட்டார்.

இதன் போது அங்கு நடைபெறும் உற்பத்தி தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டார்.

வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திற்கு சம்பிக்க ரணவக்க (எம்பி) விஜயம்  ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறு...
07/11/2023

வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திற்கு சம்பிக்க ரணவக்க (எம்பி) விஜயம்

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கெளரவ. பாட்டலி சம்பிக்க ரணவக்க ​​அவர்கள் கடந்த சனிக்கிழமை (04.11.2023) வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

ஐக்கிய குடியரசு முன்னணியின் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.எம்.மர்சூக் அவர்களின் அழைப்பின் பேரில் கிழக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் கெளரவ. பாட்டலி சம்பிக்க ரணவக்க மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை மீன்பிடித் துறைமுகத்தை அண்மித்த பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலான கலந்துரையாடலும் இடம்பெற்றது.

தடாகம் மற்றும் கடலின் நுழைவாயில்களில் உள்ள பாறைகளால் மீன்பிடிப் படகுகளுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், அப்பிரச்சினைக்கு தீர்வாக அடையாள மின்குமிழ் அமைப்பு ஏற்படுத்துவது குறித்து கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், மீனவ சமூகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகள் பற்றி சம்பிக்க ரணவக்கவின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

அப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காண கடற்றொழில் அமைச்சருடன் கலந்துரையாடவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இக்கலந்துரையாடலில் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம், இலங்கை கடற்படை, இலங்கை மீன்பிடித்துறைமுக கூட்டுத்தாபனம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சம்பிக்க ரணவக்க எம்பி பிறைந்துரைச்சேனை அஸ்ஹருக்கு விஜயம் ஐக்கிய குடியரசு முன்னணியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் என்...
07/11/2023

சம்பிக்க ரணவக்க எம்பி பிறைந்துரைச்சேனை அஸ்ஹருக்கு விஜயம்

ஐக்கிய குடியரசு முன்னணியின் கிழக்கு மாகாண இளைஞர் அமைப்பாளர் என்.எம்.எம்.மர்சூக் அவர்களின் அழைப்பின் பேரின் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு விஜயம் செய்துள்ள
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (2023.11.03) பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலயத்திற்கும் விஜயம் மேற்கொண்டார்.

இதன் போது, அதிபரின் தலைமையில் பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பழைய மாணவர் சங்கம், ஆசிரியர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் சிநேகபூர்வமாக சந்திப்பும் உரையாடலும் இடம்பெற்றது.

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ.பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் பங்குபற்றிய மக்கள்  சந்தி...
03/11/2023

ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கெளரவ.பாட்டலி சம்பிக்க ரணவக்க அவர்கள் பங்குபற்றிய மக்கள் சந்திப்பு ஒன்று நேற்று (03) மட்டக்களப்பு மாவட்டத்தின் ஓட்டமாவடி பிரதேசத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஐக்கிய குடியரசு முன்னணியின் இளைஞர் விவகார செயலாளர் தீக்ஷன கம்மன்பில கலந்துகொண்டதுடன், கிழக்கு மாகாண ஐக்கிய குடியரசு முன்னணியின் இளைஞர் பிரிவின் அமைப்பாளர் திரு.N.M.M மர்சூக் இந்த சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.

இக்கூட்டத்தில் மீன்பிடி மற்றும் வர்த்தக துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரதேசத்தை சேர்ந்த தமிழ் முஸ்லிம் குழுவொன்றும் பிரதேசத்தில் உள்ள பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவும் கலந்துகொண்டனர். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.

பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலயபழைய மாணவர் சங்க புதிய நிர்வாகத்தெரிவு  கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கல்விக்கோட்...
29/10/2023

பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலய
பழைய மாணவர் சங்க புதிய நிர்வாகத்தெரிவு

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி கல்விக்கோட்டத்திற்குட்பட்ட பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்திற்கான (Azharians' Past pupils' Association 2023/2024) புதிய நிர்வாகத்தெரிவு கடந்த 2023.10.28ம் திகதி பாடசாலை அதிபர் L.T.M.சாதிக்கீன் தலைமையில் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில், பின்வருவோர் புதிய நிருவாகிகளாகத்தெரிவு செய்யப்பட்டனர்.

1. தலைவர்-
L.T.M.சாதிக்கீன் (அதிபர்)
2. உப தலைவர் -
A.M.M.அஜ்மீர்
3. செயலாளர் -
N.M.M.மர்சூக் (DMT)
4. உப செயலாளர் -
T.K.அனீம்
5. பொருளாளர் -
K.L.சாஜஹான்
6. காப்பாளர்-
M.M.A சதாத் GS
7. கணக்குப்பரிசோதகர் -
S.M.றபீக்

ஆகியோரும்
8. A.M.நிஸாம்
9. M.L.கலீல்
10. A.U.M. நளீம் மெளலவி (அதிபர்)
11. V.T.மர்சூக்
12. M.B.A.பாயிஸ்
13. M.M.M.தெளபீக்
14.A.M.நியாஸ்
15. J.நஜிமுதீன் மெளலவி
16. Y.B.M.ஜெஸீர்
17. A.M.அனீஸ்
18. S.I.ஹஸன்
19. M.M.M.ஹுஸைன் ஆகியோரும் நிர்வாக உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு ...............................................................விவசாயம் மற்றும் பெருந்தோட்ட...
23/10/2023

புதிய அமைச்சர்கள் பதவியேற்பு ...............................................................

விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் - மகிந்த அமரவீர

சுற்றாடல் அமைச்சர் - கெஹலிய ரம்புக்வெல்ல

கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன மேலதிகமாக சுகாதார அமைச்சர்

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய - மேலதிகமாக தோட்டத்தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர்

ஆகியோர் இன்று (23) ஜனாதிபதி செயலகத்தில் பதவியேற்றனர்.
(PMD)

மீராவோடை அல் ஹிதாயா மாணவன் AF.அப்னான் தொழிநுட்பத்தில் ஆயிரம் புள்ளிகள் பெற்று  வரலாற்றுச்சாதனைஓட்டமாவடி கல்விக்கோட்டத்தி...
01/10/2023

மீராவோடை அல் ஹிதாயா மாணவன் AF.அப்னான்
தொழிநுட்பத்தில் ஆயிரம் புள்ளிகள் பெற்று வரலாற்றுச்சாதனை

ஓட்டமாவடி கல்விக்கோட்டத்திற்குட்பட்ட மீராவோடை அல் ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தரம் 09ல் கல்வி கற்கும் மாணவன் AF.அப்னான் 1000 க்கு 1000 புள்ளிகள் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளார்.

நேற்று 30.09.2023ம் சனிக்கிழமை கொழும்பு Stam Campusல் நடைபெற்ற Coding & Robotics போட்டியில் பங்குபற்றி முதலாமிடத்தைத் தக்கவைத்துக்கொண்டு Stam Campus ற்கும் தெரிவாகியுள்ளார்.

250 மாணவர்கள் பங்குபற்றிய இப்போட்டியில் முதலிடத்தைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Robotic & Coding கற்கையில் பிரசித்தி பெற்ற ஆசிரியர் மூலம் வழிகாட்டப்பட்டு இவ்வாறான முயற்சியின் மூலம் தாமும் தம் ஊரும் தொழிநுட்ப ரீதியில் முன்னேற வேண்டுமென்று இரவு பகலாக அயராதுழைத்து இவ்வடைவினைப் பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிக்கான சர்வதேச விருது எதிர்வரும் 10.10.2023ம் திகதி Stem Campusல் நடைபெறவுள்ளது.

சாதனை மாணவனுக்கு பாடசாலை சமூகம் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்கின்றது.

Happy Children's Day - 2023
01/10/2023

Happy Children's Day - 2023

கிழக்கு மாகாணத்தில் வரலாற்றுச் சாதனை A.K.Nashan Ahamed (First Place, Gold Medal) Member of Elegant TV Student at Bt/Meer...
10/09/2023

கிழக்கு மாகாணத்தில் வரலாற்றுச் சாதனை
A.K.Nashan Ahamed (First Place, Gold Medal)
Member of Elegant TV
Student at Bt/Meeravodai AL-Hidaya M.V ...................................................................................
Congratulations ✌

கிழக்கு மாகாண கல்வித்திணைக்களம் வருடாந்த நடாத்தும் மாகாண பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுபோட்டி (9,10) தென் கிழக்கு பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இதில் ஓரங்கமான கராத்தே போட்டியில் 20 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் எமது எலிகன்ட் ஊடக வலையமைப்பின் உறுப்பினருமான A.K.நஸ்ஹான் அஹமட் அவர்கள் முதலிடம் பெற்று தங்கம் வென்று தேசியம் தெரிவாகி வரலாற்றுச்சாதனை படைத்துள்ளார்.

இச்சாதனையை எமதூருக்கும், கல்வி கற்கும் பாடசாலையான மீராவோடை அல்-ஹிதாயா ம.வி ற்கும் பெருமையை தேடித்தந்தமைக்கும் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.
இரவு, பகல் பாராத அயராத பயிற்சியும், கடின உழைப்புமே அவரது இவ்வெற்றிக்கு வழிவகுத்துள்ளது.

இவருக்கான பயிற்சிகளை IMA கராத்தே அமைப்பின் தலைமைப்பயிற்றுவிப்பாளர் முஹம்மது இக்பால்,பயிற்றுவிப்பாளர் ஷரொத் ஹுசைன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் OBA க்கு வெற்றிக்கு பெரும் பங்காற்றியவர்கள் என்பதனையும் நினைவுப்படுத்திக்கொள்வதுடன் மீண்டும்மெருமுறை மனம் நிறைந்த வாழ்த்துக்களை தானும், எமது நிருவாகமும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

மர்சூக் என் முஹம்மட்
தலைவர்
எலிகன்ட் ஊடக வலையமைப்பு

திடீர் சுகையீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எலிக(G)ன்ட் ஊடக வலையமைப்பின் தலைவர் மர்சூக் என் முஹம்மட்   இன்று...
06/07/2023

திடீர் சுகையீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் எலிக(G)ன்ட் ஊடக வலையமைப்பின் தலைவர் மர்சூக் என் முஹம்மட் இன்று (6) அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விரைவாக சுகம் பெற்று மீண்டுவர உங்கள் பிராத்தனைகளை அவருக்காக சேர்த்துக்கொள்ளுமாறு அன்பாக வேண்டிக்கொள்கின்றோம்.
Admin

முகநூல் உறவுகள் அனைவருக்கும் என் இனிய தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.  🌙மர்சூக் என் முஹம்மட்தலைவர்எலிக(G)ன்ட் ஊடக வல...
29/06/2023

முகநூல் உறவுகள் அனைவருக்கும் என் இனிய தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
🌙

மர்சூக் என் முஹம்மட்
தலைவர்
எலிக(G)ன்ட் ஊடக வலையமைப்பு

எங்களுடைய கற்பித்தல் தரத்தினை மற்றும் videos Quality  இனை பரிசீலித்ததன் பின்னர் Online வகுப்புக்களில்  நீங்கள் இணைந்து க...
25/06/2023

எங்களுடைய கற்பித்தல் தரத்தினை மற்றும் videos Quality இனை பரிசீலித்ததன் பின்னர் Online வகுப்புக்களில் நீங்கள் இணைந்து கொள்ள முடியும்.

ஏனென்றால் அதிகமான மாணவர்களுக்கு Online வகுப்புக்கள் / Zoom Class என்று சொன்னாலே பயம்.....

ஆனால் எங்களுடைய விரிவுரையாளர்கள் மாணவர்களுக்கு Artificial Intellingence ,Digital Video Graphics , Colourful images, Latest Digital Tutes போன்ற பல டிஜிட்டல் நுட்பங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு Photographic ஞாபக சக்தி (Memory Power ) இனை பயிற்றுவிப்பதன் ஊடாக

மாணவர்களை திறமையான மற்றும் இலகுவில் வேலை வாய்ப்பினை பெற்றுக்கொள்ளக்கூடிய Intellingent Students ஆக ஆளுமை உள்ளவர்களாக மாற்றுவதற்கு ஏற்ற வகையில் விருத்தி செய்வதே எமது முதன்மை நோக்கமாகும்.

தொழில் சந்தைக்கு ஏற்றவாறு தயார்படுத்தப்படுவீர்கள். (Class Room விரிவுரைகள் ஒரு திரைப்படத்தை பார்ப்பது போன்ற சுவாரஷ்யமான உணர்வை ஏற்படுத்தும்.)

வெகு விரைவில் Orientation Programme நடை பெறவுள்ளது

Be Ready students ,

Dont wait for the GCE O/L Result....

Share with your friends.. https://chat.whatsapp.com/D3skc5y4MaLLAHmO7N58JW

*பர்தா விவகாரம்: பரீட்சை மண்டப அதிகாரிகள்**மாணவிகளை முறையாக தெளிவுபடுத்த வேண்டும்*மாணவிகளின் மனநிலையை உளவியல் ரீதியாக பு...
04/06/2023

*பர்தா விவகாரம்: பரீட்சை மண்டப அதிகாரிகள்*
*மாணவிகளை முறையாக தெளிவுபடுத்த வேண்டும்*

மாணவிகளின் மனநிலையை உளவியல் ரீதியாக புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார் இம்ரான்

க.பொத. சா/த பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தா தொடர்பிலான விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க தயாராக இருக்கிறார்கள். எனினும், பரீட்சை மண்டப அதிகாரிகள் மாணவிகளின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களை முறையாக தெளிவுபடுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவிகளுக்கு பரீட்சை மண்டபத்தில் பர்தா அணிய மறுப்பு தெரிவிக்கப்படுகின்றமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூபிடம் மாணவிகள் பலரும் முறைப்பாடுகள் கையளித்துள்ள நிலையிலேயே அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஆள் அடையாளத்தை உறுதிபடுத்துவதற்கும் பரீட்சை முறைகேடுகளை தவிர்ப்பதற்கும் பரீட்சை மண்டபத்திற்குள் பர்தா அணிய தடைவிதிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பரீட்சை முறைகேடுகளுக்கு பர்தா ஆடை காரணம் என்று கூறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது

ஆளடையாளத்தை உறுதிப் படுத்தும் முறை குறித்து முன் கூட்டியே தேவையான விளக்கங்களை பரீட்சை திணைக்களம் பாடசாலைகளுக்கு வழங்கி இருந்தால் தேவையற்ற பிரச்சினைகளை குறைக்க முடியும்.

திடீரென தாம் வழக்கமாக அணிந்துவரும் பர்தா ஆடையை நீக்கிக்கொள்ளுமாறு பணிக்கும்போது மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில், அவர்களால் பரீட்சையை திருப்தியாக எழுதமுடியாமையால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

எனவே, மாணவிகளுக்கு உரிய முறையில் பரீட்சை மண்டபத்தில் தெளிவுபடுத்துவதன் ஊடாக அவர்களின் மனஉளைச்சலை தவிர்க்க முடியும்.

சில பரீட்சை மண்டப மேற்பார்வையாளர் களும், பரீட்சை தொடர்பான அதிகாரிகளும் முஸ்லிம் விரோதப் போக்கில் செயல்படுவதான குற்றச்சாட்டுக்களும் எம்மிடம் முன் வைக்கப் படுகின்றன.

இதுவே தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்குகின்றன.

பர்தாவுக்கான தடையை அனுமதிக்க முடியாது. பரீட்சை மண்டபத்தில் ஏற்படும் இந்த பிரச்சினை தொடர்பில் மாற்றுத் தீர்வொன்றுக்கு செல்லவேண்டியிருக்கிறது. எனவே, இது குறித்து முஸ்லிம் புத்திஜீவிகளுடன் அடுத்தவாரம் சந்திப்பொன்றை முன்னெடுக்கவிருக்கிறோம். அதன்பின்னர் இதுவிடயமாக பாராளுமன்றம் ஊடாக சிறந்த தீர்வொன்றை பெற்று மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் மேலும் தெரிவித்தார்…

 #இலங்கையின் முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு புனித மக்கா நோக்கி பயணம்...2023 ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்று...
04/06/2023

#இலங்கையின் முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு புனித மக்கா நோக்கி பயணம்...

2023 ஆம் ஆண்டுக்கான புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக முல்தஸம் மற்றும் மர்யம் ஆகிய இரண்டு ஹஜ் முவர்கள் ஊடாக 64 பேர் கொண்ட முதலாவது ஹஜ் யாத்திரிகர்கள் குழு 2023.06.04ம் திகதி காலை 10.05க்கு புனித மக்கா நோக்கி பயணமாகினர்.

இவர்களை வழியனுப்பும் நிகழ்வு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இலங்கை ஹஜ் குழு மற்றும் இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் 2023.06.04ம் திகதி காலை 07.30 மணியளவில் கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு. சோமரத்ன விதானபதிரன, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் கௌரவ காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, வீசா பகுதிக்கான பொறுப்பதிகாரி திரு. சாலிஹ் அப்துல்லாஹ் அல்ஃபராஜி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் பைசல் ஆப்தீன், இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் இப்றாகிம் அன்சார், இலங்கை விமானப் போக்குவரத்து அதிகார சபையின் உப பணிப்பாளர் கலாநிதி அஜித் மென்டிஸ், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள உதவிப்பணிப்பாளர் அலா அஹமட், ஹஜ் குழு உறுப்பினர்களான இபாஸ் நப்கான், ஹனீபா இஸ்ஹாக், இலங்கை ஹஜ் பயண முகவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரக அதிகாரிகள், விமான நிலைய உயர் அதிகாரிகள் மற்றும் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வருடம் புனித ஹஜ் கடமைக்காக இலங்கையிலிருந்து 3500 யாத்திரிகர்கள் புனித மக்காவுக்கு செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Elegant TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

காவோலை

வெகுவிரைவில்