கொல்லர்-கருமார்-blacksmith

  • Home
  • கொல்லர்-கருமார்-blacksmith

கொல்லர்-கருமார்-blacksmith Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from கொல்லர்-கருமார்-blacksmith, News & Media Website, .

ஓதுவாரெல்லாம் உழுவார் தலைக்கடையில் உழுவாரெல்லாம்  #கருமார் புறக்கடையில் காராளர் பெருமையெல்லாம்  #கண்ணாளர்  #கைத்தொழிலே “...
22/04/2024

ஓதுவாரெல்லாம் உழுவார் தலைக்கடையில் உழுவாரெல்லாம் #கருமார் புறக்கடையில் காராளர் பெருமையெல்லாம் #கண்ணாளர் #கைத்தொழிலே “………..

(கம்பர் இயற்றிய ஏர் எழுபது என்னும் நூலிலிருந்து) … கம்பர் ஏரெழுபது எனும் நூலை இயற்றியுள்ளார்.. இதில் 10 பாடலுக்கு 1 பாடலில் கண்ணாளரை(கம்மாளர்) பற்றி பாடியுள்ளார்.

விளக்கம் ::-
வேதம் ஓதுபவரெல்லாம் அறுவடை முடிந்த பின் உழவர் வீட்டு வாசலில் தான்யத்தை பெற காத்திருப்பார்கள்..

அதே உழவர் தனக்கு வேண்டிய கருவிகளுக்காக கருமாரின்(கொல்லர்) புறக்கடையில் காத்திருப்பார்கள்.

அதே போன்று கம்மாளர் கைத்தொழிலே நாடாளும் அரசனுக்கும் பெருமையை அளிக்கிறது...

#கொல்லர் #பெருங்கொல்லர் #கருமார்

#கம்மாளர்மீடியா
#ஐந்தொழில்கம்மாளர்பேரவை

சமூகத்தில் கொல்லர்க்களுக்கிருந்த மதிப்பு: ஆயுதம் செய்தல் கொல்லனின் கடமை என்றாலும் ஈர்ந்தூர் கிழான் என்னும் மன்னன் தனக்கு...
21/04/2024

சமூகத்தில் கொல்லர்க்களுக்கிருந்த மதிப்பு:

ஆயுதம் செய்தல் கொல்லனின் கடமை என்றாலும் ஈர்ந்தூர் கிழான் என்னும் மன்னன் தனக்கு வேண்டிய கருவிகளைச் செய்து தருமாறு தானே நேரடியாகச் சென்று (புறம். 180. 10-13) வேண்டி நிற்கும் அளவிற்குக் கொல்லனுக்கு அக்கால சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் இருந்துள்ளது.

“ஆந்தன் விரக்குங் காலை தானெம்
உண்ணா மருங்குல் காட்டித் தன்னூர்க்
கருங்கைக் கொல்லனை யிரக்கும்
திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே” (புறம். 180. 10-13)

என மன்னனே நேரடியாகச் சென்று முறையிட்டுள்ளதனால் சமூகத்தில் அவனுக்திருந்த மதிப்பை உணர முடிகிறது.

போர்க்களத்தில் எதிரி படையினர் முதலில் குறிவைப்பது ஆயுதம் செப்பனிடம் கம்மாளர் படையவே,,, (ஆயுதம் இல்லை எனில் போர் வீரர்களுக்கு பலமில்லை).

#கம்மாளர்மீடியா
#ஐத்தொழில்கம்மாளர்பேரவை

 #இரும்பை கண்டுபிடித்தவர் யார் என கேட்டால் விடையாக Henry Bessmer, Engaland - 1856 என்று தானே சொல்வோம் இதுவரை...இனி அப்பட...
17/04/2024

#இரும்பை கண்டுபிடித்தவர் யார் என கேட்டால் விடையாக Henry Bessmer, Engaland - 1856 என்று தானே சொல்வோம் இதுவரை...

இனி அப்படி சொல்வோமா???
ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கிடைத்துள்ள முதுமக்கள் தாழி, எலும்பு கூடுகள், இரும்பு மற்றும் பித்தளை பொருட்கள், கலைப்பொருட்கள், ஆயுதங்கள், தங்க ஆபரணங்கள் போன்றவை கிறித்து பிறப்பிற்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை.

அதில் ஒரு பொருளின் அகவை கி.மு.905, மற்றொரு பொருளின் அகவை கி.மு.791 என்றும் தெரியவந்துள்ளது. அதாவது கி.மு 10 – ஆம் நூற்றாண்டு மற்றும் கி.மு.8 – ஆம் நூற்றாண்டு என்கிறது (CARBON -14. TEST) ஆய்வறிக்கை.

கி.மு. 8 - ஆம் நூற்றாண்டுகளுக்கு முன்பே தமிழன் நாகரீகத்தோடு வாழ்ந்திருகின்றான். உலோக பொருட்களையெல்லாம் கையாண்டு இருக்கின்றான். அதிலும் குறிப்பாக ‘இரும்பு’ அவன் வாழ்வியலோடு ஒன்றர கலந்திருக்கிறது என்பதெல்லாம் நமக்கு வியப்பான செய்திகள்.

‘இரும்பு வடித்தன்ன கருங்கைக் கொல்லன்(கம்மாளர் சமூகம்)

‘இரும்பு வடித்தன்ன மடியா மென்தோல் கருங்கை வினைஞர் காதலம் சிறாஅர்.’ - என

பழந்தமிழர்களுக்கும் இரும்புக்குமான உறவை எட்டுத் தொகையும் பத்துப்பாட்டும் பறைச்சாற்றுகிறது.

‘அதியமான் நெடுமான் அஞ்சி’
அவரது தலைநகர் - தகடூர்.

இரும்பை வெட்டியெடுத்து அதை தகடாக்கும் தொழில் செய்யும் ஊர் என்பதால் அதற்கு தகடூர் என்று பெயர். இரும்பு வணிகத்தில் கொடிகட்டிப் பறந்த அதியமான், கடல் கடந்து பல்வேறு தேசங்களில் தனது இரும்பு வணிகத்தை நிலை நாட்டினார். அதிலொன்று துருக்கி நாடு. உருக்கி என்பது தான் துருக்கி என்று விளங்கியிருக்க கூடும். அந்த துருக்கியில் இன்றும் அதியமான் பெயரில் நகரம் இருக்கிறது.

ஆனால், பதினெட்டாம் நூற்றாண்டின் பாதியில் வந்த அந்த வெள்ளக்காரன்தான் இரும்பை கண்டுப்பிடித்தான் என்று திரித்து எழுதப்படுகிறது வரலாறு. ஆதிச்சநல்லூர் வரலாறு மட்டுமல்ல ; ஆதிதமிழர்களின் வரலாறுகளிலும் இந்த திரிபுவாத கும்பலில் கைங்கர்யம் நிறைய உண்டெனும் புரிதல் ப்ரியனுக்கு உண்டு.

தாழி பானை ஓடுகளில் காணப்படும் எழுத்துக் கீறல்களெல்லாம் விட்டுத்தள்ளுங்கள், இந்த தாளிப்பனைகள் பெற்றெடுத்த ஓலைச்சுவடிகளில் உழுத எழுத்தாணி ஒன்றுபோதுமே, தமிழர் இருப்பின் வரலாற்றுக்கு சாட்சியாக, இரும்பின் வரலாற்றுக்கு சாட்சியாக.
ரிக் வேதத்தின் உண்மையான பெயரே உருக்கு வேதம் என்பது தான். அதாவது உலோகங்களை உருக்கும் தொழில் நுட்ப ரகசியம் தான்.

ஆதிச்சநல்லூர் என்கிற
ஆதி ‘எச்ச’ நல்லூர் மட்டுமல்ல;
அதையும் தாண்டி, நமது கவனத்தை திருவள்ளூர் மாவட்டம் வடமதுரை மீதும் வைத்தாக வேண்டியது வரலாற்றின் தேவையாகும்.

பலநூற்றாண்டுகள் பழமை வாய்ந்த
பழைய கற்காலக் கல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது அங்குதான்...

#கருங்கைகொல்லர்கள்
#கருமார்
#கொல்லர்
#கம்மாளர்

18/12/2023
09/11/2023

கொல்லர் -திரு. முனுசாமி ஆச்சாரி. சேலம்-நைனாம்பட்டி...

29/10/2021

கொல்லர்-கருமார்

29/10/2021

செங்கோட்டை-தோசைக்கல்

24/10/2021

அரிவாள் போன்ற இரும்பு சார்ந்த கருவிகள் தயாரிப்புகளுக்கு ..அரசு கட்டுபாடுகளை தளர்த்த கோரி ...கொல்லர்(கருமார்) தொழிலாளிகள் அரசுக்கு கோரிக்கை...

இடம்..தென்காசி-வாவாநகரம்

16/06/2021

கொல்லர்-கருமார்-கருங்கைகானவன்-கருங்கைவினைஞர்-blacksmith

blacksmith-kerala

14/06/2021

கொல்லர்-கருமார்-கருங்கைகானவன்-கருங்கைவினைஞர்-blacksmith...

blacksmith-kerala

02/06/2021

கொல்லர்-கருமார்-கருங்கைகானவன்-கருங்கைவினைஞர்-blacksmith

31/05/2021

திண்டுக்கல் பூட்டு.விஸ்வபிரம்மஸ்ரீ.பரட்டை ஆச்சாரியாரின் படைப்பு....

கொல்லர்-கருமார்-கருங்கைகானவன்-கருங்கைவினைஞர்-blacksmith

31/05/2021

கொல்லர்-கருமார்-கருங்கைகானவன்-கருங்கைவினைஞர்-blacksmith

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் மஹாரதம் தேர்வடசங்கிலி தயாரிப்பு காணொளி காட்சி

தேவஸ்தான #மிராசு_ஆச்சாரியார் (மனு) கார்திகேயன் ஆச்சாரி தலைமையிலான நடைபெறும் பணி

தமிழக அரசுக்கு. முக்கிய கோரிக்கை : அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை :::--------------------------------------கொரானா காலகட்...
22/05/2021

தமிழக அரசுக்கு.

முக்கிய கோரிக்கை :

அதிகாரிகள் மீது நடவடிக்கை தேவை :::
--------------------------------------
கொரானா காலகட்டத்தில் வேலையில்லாமல் தினக்கூலிக்கு செல்பவர்களும் மற்றும் சுயத்தொழில்.செய்பவர்களும் இன்று இக்கட்டான காலகட்டத்தில் மிகவும் வறுமை கோட்டுக்கு கீழ் இருக்கிறார்கள் !..உணவுக்கே வழி இல்லாமல் இருக்கிறார்கள்
இந்த சூழ்நிலையில் .
(மிக மனவேதனை உள்ள ஒரு நிகழ்வு
நடந்துள்ளது.)...

"கொல்லப்பட்டறை தொழிலாளி கடைக்கு ஊரடங்கியல் அபராதம்"

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆர் எஸ் மாத்தூர் மெயின் ரோட்டில் .
கத்தி. கடப்பாரை.மண்வெட்டி.கோடாரி போன்ற ஆயுதம் அடித்து. கொல்லர் பட்டறை வைத்துப் பிழைக்கும் கூலித்தொழிலாளி வீராசாமி மற்றும் அவரது மகன்.இருவரும் தங்களது பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தனர் அப்போது அதிகாரிகள்.அந்தப் பக்கம் ரோந்து பணியில் ஈடுபட்டுஇருந்தனர். கொரானா.ஊரடங்கு காரணமாக ஓர் அரங்கில் காரணமாக ஏதாவது கடைகள் திறந்த உள்ளதா என கண்காணித்து வந்த நிலையில் அப்போது கொல்லர்பட்டறை தொழிலாளி வேலை .செய்த தொழிலாளியிடம் எச்சரிக்கை செய்து .அந்த கொல்லர் பட்டறை வெல்டிங் பட்டறை என்று ரசீது போட்டுள்ளனர் அபராதமாக ரூபாய்400க்கு ரூபாய் 500பெற்றுக்கொண்டு ₹100 ரூபாய் கொடுக்காமல் சென்ற அதிகாரிகள் இப்படி செய்தது சரியா ??? என கேட்கும் சமூக ஆர்வலர்கள் அதேபோல் கொரானா
ஊர்டங்கி காலை 6.00 மணி முதல்
10 மணி வரை மட்டுமே .ஆனால் இவர்கள் பட்டறை மூடினால் அன்றாடம் கஞ்சி காய்ச்சி குடிக்கவும் தொழிலாளி அவர்களை அடித்து உருவாக்கும் ஆயுதம் அவர்கள் வயிற்றில் அடித்தது போல் தனது பட்டறை முன் அமர்ந்து புலம்புகிறார்.பட்டறையில் அவர் வேலை செய்வது ஊரடங்கு எதிரானது உண்மை. ஆனால். வயிற்றுப் பிழைப்புக்கு என்ன செய்வது. புத்தியில்லாதவன். புரிதலுக்காக கேட்கிறேன் ???

இச்செய்தி மிக வருத்தமாக இருக்கிறது .துறைரீதியாக
அந்த அதிகாரி மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேட்டுக்கொள்கிறேன்

கட்டுமான துறைகள் செயல்படலாம் என்ற நிலையில் கட்டுமானத்திற்கு தேவையான கருவிகளும் செய்யப்படுகின்றன .

இப்படிக்கு
தினக்கூலி வேலை செய்யும் தொழிலாளர்கள்
மீஞ்சூர் E.சுரேஷ் As

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when கொல்லர்-கருமார்-blacksmith posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share