Voice Of Mannar

  • Home
  • Voice Of Mannar

Voice Of Mannar Media

20/02/2023
உயர்தரம் எழுதி முடித்து அண்மையில் பெறுபேற்றை பெற்றவர்கள் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கான திட்டமிடல்களை இப்போதே தொடங்குங...
04/09/2022

உயர்தரம் எழுதி முடித்து அண்மையில் பெறுபேற்றை பெற்றவர்கள் வாழ்க்கையின் அடுத்தகட்டத்திற்கான திட்டமிடல்களை இப்போதே தொடங்குங்கள். மாவட்ட ரீதியில் சிறந்த பெறுபேற்றினை பெறும் பட்சத்தில் அரச பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்கலாம், மூன்று பாடத்திலும் சித்தியடைந்தவர்கள் திறந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது வெளிவாரி பட்டப்படிப்பை தெரிவு செய்யலாம்.

https://ou.ac.lk/

https://www.ugc.ac.lk/index.php?option=com_content&view=article&id=1200&Itemid=131&lang=en

தனியாரில் படிக்கும் அளவுக்கு பொருளாதார வசதி உள்ளவர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அங்கீகாரம் பெற்ற தனியார் கல்லூரியின் பட்டப்படிப்பை தெரிவு செய்வது சற்றே பாதுகாப்பானதாக இருக்கும். மேலும் புலமைப்பரிசில்கள் மூலம் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு முயற்சித்து பார்க்கலாம்.

https://www.ugc.ac.lk/index.php?option=com_content&view=article&id=101&Itemid=37&lang=en

மேற்கூறிய அனைத்தையும் தவிர எனக்கு தெரிந்த ஏனைய உயர்கல்வி வாய்ப்புகளை பட்டியலிடுகிறேன்.

- General Sir John Kotelawala Defence University (KDU) - Cadet,Non Cadet என இரு பிரிவுகள் உள்ளதாய் கேள்வி பட்டிருக்கிறேன்,
- Sri Lanka Law College,
- Ocean university of Sri Lanka,
- National Institute of Social Development - BSW degree, diploma courses,
- SLIATE,
- College of Education (கல்வியியற் கல்லூரி),
- NTS (தாதியர் பயிற்சி கல்லூரி),
- UNIVOTEC,
- University College,
- School of Agriculture,
- Paramedical Sciences (MLT,ECG technician etc),
- Diploma in Pharmacy,
- Diploma in Library and Information Management, Higher Diploma, Masters,
- Institute of of Agro tech and rural sciences,
- Sri Lanka Media Training Institute,
- Sri Lanka Foundation Institue,
- Technical Colleges,
- VTA,
- Korean Tech,
- Ceylon German Technical Training Institute,
- Banking துறையை தெரிவு செய்தல், AAT, CIMA போன்ற தகைமைகள்.

மேலும் நீங்கள் நினைவில் வைக்க வேண்டிய சில விடயங்கள் உண்டு. பெரும்பாலான நாடுகளை சேர்ந்த உங்களது சமவயதுக்காரர்கள் இப்போதே கல்லூரி இரண்டாமாண்டில் இருப்பார்கள், ஆக உலகத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில் நாம் சற்று பின் நிற்கிறோம். எனவே நீங்கள் தெரிவு செய்யும் துறைக்கு மேலதிகமாக தகவல் தொழில்நுட்ப அறிவை (IT Skills), ஆங்கிலமொழி புலமையை, முகாமைத்துவ திறமையை (Management Skills), மென்திறன்களை (Soft skills), ஆய்வுத்திறன்களை (Research skills) வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் தாண்டி அதிசிறந்த பெறுபேறுகளை பெற்றவர்கள் இனிவரும் காலங்களில் எந்த துறையில் வளர்ச்சி இருக்கிறதோ, எந்த துறையில் பட்டம் பெறுபவர்களை விட வேலை வாய்ப்பு அதிகமாக இருக்குமோ அந்த துறைகளை தெரிவு செய்வதே பொருத்தமானதாக இருக்கும். ஒரு வேளை அந்த துறைகளுக்குள் நுழைய முடியவில்லை எனில் உங்களுக்கு கிடைக்கின்ற துறைக்குள் நீங்கள் முன்னேற மேற்கூறிய திறன்களை வளர்த்து கொள்வதும் புத்திசாலித்தனமான கடின உழைப்பும் தேவைப்படும்.

கடைசியாக “கேம்பஸ் போனா போதும் அதுக்கப்றம் வாழ்க்கை நல்லா இருக்கும்” போன்ற போலிகளுக்கு ஏமாறாமல் சரியான திட்டமிடலுடன் முயற்சிகளை முன்னெடுத்து வாழ்க்கையின் அடுத்த கட்ட பயணத்திற்கு தயாராகுங்கள். வெற்றிக்கான வழிமுறைகளில் ஒன்று “முன்கூட்டிய தயார் படுத்தலே”

எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Mannar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share