இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் மறைந்த சகோதரி, பாடகி பவதாரிணியின் ரெக்கார்டிங் நேர வீடியோவை பகிர்ந்துள்ளார். பவதாரிணி, தனது திரையுலக பயணத்தில் "பாரதி" படத்தில் பாடிய "மயில் போல பொண்ணு ஒன்று" பாடலுக்காக தேசிய விருது பெற்றவர். புற்றுநோயால் உயிரிழந்த அவர், திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தினார். பவதாரிணியின் நினைவாக, 'கோட்' படத்தின் "சின்ன சின்ன கண்கள்" பாடலை அவர் ஏஐ குரலில் உருவாக்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நடிகர் கமல்ஹாசனின் மூத்த சகோதரர் மற்றும் தமிழ் நடிகர் சாருஹாசன் (வயது 93) உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீபாவளிக்கு முந்தைய நாள் அவர் கீழே விழுந்ததால் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்துள்ளது. நடிகை சுஹாசினி தனது இன்ஸ்டாகிராமில் சாருஹாசனுடன் மருத்துவமனையில் இருக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார்.
சமீபத்தில் மெட்ரோ ரயில் ஒன்றில் பயணித்த வெளிநாட்டு பயணிகளும் "கடவுளே-அஜித்தே" என்று கோஷம் எழுப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'கங்குவா' திரைப்படத்தின் இரண்டாம் பாடலான 'YOLO' தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் பெரிய வரவேற்பைப் பெற்றது. 'YOLO' பாடலின் வெளியீடும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், இப்படம் நவம்பர் 14-ம் தேதி உலகம் முழுவதும் 3D முறையில் 38 மொழிகளில் வெளியாக உள்ளது.
நடிகர் அஜித் ஸ்பெயினில் நடைபெற்று வரும் 'குட் பேட் அக்லி' படத்தின் படப்பிடிப்புக்கிடையே, ஒரு கால்பந்து போட்டியை காண சென்றபோது எடுத்த செல்பி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் சேதுபதி, படத்தை பார்த்துவிட்டு "கல்வி ஒரு அடிப்படை உரிமை, அதனை அழகாக சொல்லியிருக்கிறது 'சார்' திரைப்படம்" என்று பாராட்டியுள்ளார். போஸ் வெங்கட் இயக்கத்தில், விமல் நடிக்கும் 'சார்' படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம்ஸ் வழங்குகிறது. படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், திரைப்படம் அக்டோபர் 18-ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய் சேதுபதியின் பாராட்டால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நடிகர் அஜித் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பயணம் ஒருவரை சிறந்த மனிதராக மாற்றும் என நடிகர் அஜித்குமார் கூறியுள்ளார். சமூகத்தை அறிந்து கொள்ள பயணத்தின் முக்கியத்துவம் பற்றி பேசிய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. மதம், இனத்தை தாண்டி மக்களை உணரும்போது மனிதத் தன்மை மேலோங்கும் என அவர் கூறியுள்ளார். அவரின் அனுபவத்தை பகிர்ந்த இந்த வீடியோ, அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.