செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman

  • Home
  • செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman

செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman செந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி

03/04/2024

#நாம்தமிழர்கட்சி சார்பில் தேனி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
மருத்துவர் மதன் ஜெயபால்
அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!

எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

03/04/2024

#நாம்தமிழர்கட்சி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
மருத்துவர் கயிலைராஜன்
அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!

எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

03/04/2024

#நாம்தமிழர்கட்சி சார்பில் பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
மருத்துவர் சுரேஷ்குமார்
அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!

எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

03/04/2024

#நாம்தமிழர்கட்சி சார்பில் சேலம் நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
மருத்துவர் க.மனோஜ்குமார்
அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!

எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

03/04/2024

#நாம்தமிழர்கட்சி சார்பில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
மருத்துவர் சீ. கௌசிக் பாண்டியன்
அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!

எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

03/04/2024

#நாம்தமிழர்கட்சி சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
மருத்துவர் இரா.ரமேஷ்பாபு
அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!

எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!

03/04/2024

#நாம்தமிழர்கட்சி சார்பில் ஆரணி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
மருத்துவர் பாக்கியலட்சுமி
அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!

எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

03/04/2024

#நாம்தமிழர்கட்சி சார்பில் மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
மருத்துவர் இரா.கார்த்திகேயன்
அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!

எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

03/04/2024

#நாம்தமிழர்கட்சி சார்பில் இராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
மருத்துவப் பேராசிரியர் சந்திர பிரபா ஜெயபால்
அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!

எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

03/04/2024

#நாம்தமிழர்கட்சி சார்பில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளராக களமிறங்கும்,
மருத்துவர் ரெ.கருப்பையா
அவர்களுக்கு #மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்!

எங்களுக்கு வாக்களியுங்கள்!
எதிர்கால தலைமுறைக்கு வாழ்வளியுங்கள்!!

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி

03/04/2024

அரசியல் என்ற எண்ணமே இல்லாதவன் மனிதனாகவே இருக்க முடியாது .

வாக்களியுங்கள்
#மைக் சின்னத்தில்.!🎙️

#சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
#நாம்தமிழர்கட்சி

29/03/2024

பாளையங்கோட்டை, திருநெல்வேலி வேட்பாளர் சத்யா ஆதரித்து சீமான் பரப்புரை

எதிர்வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான...
27/03/2024

எதிர்வரும் ஏப்ரல் 19 அன்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தலுக்கும், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருக்கும் பொதுச்சின்னமாக தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள #ஒலிவாங்கி (Mike - மைக்) சின்னத்தையும், நாடாளுமன்றத் தேர்தல் வரைவையும் இன்று (27-03-2024) சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் வெளியிட்டபோது,

27/03/2024
இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம்  வெல்லட்டும்!டெல்லியில் உயிரைப் பிசைந்தெடுக்க...
17/02/2024

இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் நாடு தழுவிய அறப்போராட்டம் வெல்லட்டும்!

டெல்லியில் உயிரைப் பிசைந்தெடுக்கும் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி, அமைதி வழியில் மீண்டும் போராடிவரும் விவசாயிகளின் ஈகமானது மிகுந்தப் போற்றுதலுக்குரியது. கொரோனா கொடுந்தொற்று காலத்தில்கூட ஒட்டுமொத்த நாட்டிற்கும் உணவளித்த விவசாயிகளை நடுச்சாலையில் போராடவிட்டது மட்டுமின்றி அவர்கள் மீது கண்ணீர் புகைகுண்டு வீசியும், காவல்துறையை ஏவியும் சிறிதும் இரக்கமின்றித் தாக்குதல் நடத்தியிருக்கும் மோடி அரசின் கொடுங்கோன்மைச் செயலானது வன்மையான கண்டனத்திற்குரியது.

விவசாயப் பெருங்குடி மக்களை வேளாண்மையைவிட்டே அகற்றும் வகையில் தனிப்பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி கடந்த 2020 ஆண்டு டெல்லியில் வேளாண் பெருமக்கள் ஒன்றுகூடி 13 மாதங்களுக்கும் மேலாக முன்னெடுத்த வரலாறு காணாத மாபெரும் புரட்சிப்போருக்கு அடிபணிந்தும், பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டும் வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற்றதுடன் அவர்களின் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக வாக்குறுதியளித்தது. ஆனால், மூன்று ஆண்டுகளாகியும் வேளாண் பெருங்குடிகள் முன்வைத்த குறைந்தபட்ச ஆதார விலை, விவசாயக்கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவது வெட்கக்கேடானதாகும்.

வேளாண்மையை முழுக்க முழுக்கத் தனியார்மயமாக்கி, நாட்டிலுள்ள விவசாயிகளை பெருமுதலாளிகளின் கூலிகளாக மாற்ற முயலும் மோடி அரசின் கொடுமைகளுக்கு எதிராக வேளாண்மையைப் பாதுகாக்கும் பொருட்டு விவசாயிகள் ஒன்றுதிரண்டு அறவழியில் போராடி வருகின்றனர். வேளாண் பெருங்குடி மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்குச் செவிமடுக்காமல் அலட்சியம் செய்வதுடன், போராடும் விவசாயிகள் மீது பாஜக அரசு அடக்குமுறையை ஏவுவது எதேச்சதிகாரபோக்கின் உச்சமாகும். இதனைக் கண்டித்து நாடு முழுவதுமுள்ள வேளாண் அமைப்புகள், சனநாயக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவளித்து அவர்களுக்குப் பின்னால் அணிதிரள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கு எதிரான கொடும்போக்கினைக் கைவிடுவதுடன், அவர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். மேலும், வேளாண் பெருங்குடி மக்கள் முன்னெடுக்கும் நாடு தழுவிய அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழு ஆதரவை அளிப்பதுடன், அவர்களின் நியாயமான கோரிக்கைகள் வெல்லும்வரை துணைநிற்கும் என்றும் உறுதியளிக்கிறேன்.

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழ...
15/02/2024

பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் ரூ.5000 உதவித்தொகை வழங்குவதுடன், அரசு வேலை வாய்ப்பில் அவர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்!






மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.

பார்வை மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு அரசுக்கு பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், தொடர்ச்சியாகப் போராட்டங்கள் முன்னெடுத்தும் கூட கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தியது போல, தற்போதைய திமுக அரசும் தொடர்ந்து ஏமாற்றி வருவதுடன் சென்னை கோடம்பாக்கத்தில் உரிமை கேட்டுப் போராடிய பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது சிறிதும் மனச்சான்று இன்றி காவல் துறையை ஏவி, தாக்குதல் நடத்தி திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையாகும்.

கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிலையில் இதுவரையில் அவர்களின் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை என்பது மாற்றுத்திறனாளி மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.

ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக..,

அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவது போன்று மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.

அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் ( பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு 1% உட்பட) மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி பதவி உயர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆராய்ச்சி படிப்புவரை கல்வி மற்றும் தேர்வு கட்டணத்திலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும்.

பெருமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும்.

இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் வீடு கட்டவும், சிறு தொழில் தொடங்கவும் அரசு சார்பில் மானியத்துடன் கூடிய வட்டியில்லாக் கடன் வழங்க வேண்டும்.

என்பது உள்ளிட்ட அனைத்து நியாயமான கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தந்து, அனைவரையும் போலவே பார்வை மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளும் தன்மானத்துடன், சமத்துவமாக, நல்வாழ்வு வாழ்வதை உறுதி செய்ய வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

புரட்சித் தமிழகம் கட்சி - பறையர் பேரவையின் தலைவர், என் பேரன்பிற்கும், பெரும் பாசத்திற்கும் உரிய அண்ணன் ஏர்போர்ட் த.மூர்த...
14/02/2024

புரட்சித் தமிழகம் கட்சி - பறையர் பேரவையின் தலைவர், என் பேரன்பிற்கும், பெரும் பாசத்திற்கும் உரிய அண்ணன் ஏர்போர்ட் த.மூர்த்தி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்பட்ட ஆதித்தமிழ்க்குடி மக்களின் உரிமை மீட்சிக்கும், உண்மையான எழுச்சிக்கும் அயராது பாடுபட்டுவரும் அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் நலமோடு வாழ்ந்து பொதுத்தொண்டு புரிந்திட எனது அன்பும், வாழ்த்துகளும்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வில் வென்று, தமிழ்ப்பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டின்...
14/02/2024

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வில் வென்று, தமிழ்ப்பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டின் முதல் உரிமையியல் நீதிபதியாக தேர்வாகியுள்ள அன்புமகள் ஸ்ரீபதி அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

நீண்ட நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு, கல்வி விழிப்புணர்வற்ற, எவ்வித அறிவியல் வசதியும் கிடைக்கப்பெறாமல் வறுமையும், ஏழ்மையுமே வாழ்வியல் சூழலாக கொண்ட மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் பிறந்த போதிலும், தமது அறிவாற்றலாலும், அயராத முயற்சியாலும் தேர்வில் வென்று, இளம்வயதிலேயே இத்தகைய உயர் பதவியினை அடைந்துள்ள மகள் ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடி சமுதாயத்திற்கே கிடைத்துள்ள பெருவெற்றியாகும்.

மக்களாட்சி தேசத்தின் இறுதி நம்பிக்கையாகவுள்ள நீதித்துறையில் அரிதிற் கிடைத்த அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழை-எளிய மக்கள் இழந்த உரிமைகளைப் பெற்றுத்தரவும், ஏற்ற பொறுப்பில் திறம்பட செயல்பட்டு சாதனை புரியவும் எனது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தமது அரசியல் ஆக்கிரமிப்புக்கு இடையூறாக உள்ள சனநாயக அமைப்புகள் மீது அதிகாரக் கொடு...
08/02/2024

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தமது அரசியல் ஆக்கிரமிப்புக்கு இடையூறாக உள்ள சனநாயக அமைப்புகள் மீது அதிகாரக் கொடுங்கரம் கொண்டு தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாகத் தொடர்கதையாகிவிட்டது.

அந்த வகையில், மக்களாட்சி பாதையில் அறிவாயுதம் ஏந்தி தமிழ் மொழி காக்கவும், தமிழ் மண்ணின் வளங்களைக் காக்கவும், வருங்கால தமிழிளம் தலைமுறை நலத்திற்காகவும் தொடர்ச்சியாக களத்தில் நின்று போராடும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அச்சுறுத்தும் நோக்கத்தில் மோடி அரசு தனது கைப்பாவை அமைப்பான தேசிய புலனாய்வு முகமை (NIA) மூலம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை என்ற பெயரில் நடத்தியுள்ள அரசியல் பழிவாங்கும்போக்கினை கண்டித்துள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் அவர்களுக்கும், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அண்ணன் வினோத் அவர்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர் ஏகலைவன் அவர்களுக்கும், மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் அவர்களுக்கும், நடிகை சமூகச் செயற்பாட்டாளர் கஸ்தூரி அவர்களுக்கும், ஊடகவியலாளர் தம்பி வளர்மெய்யறிவான் அவர்களுக்கும், தம்பி கிஷோர் கே சாமி அவர்களுக்கும் எனது அன்பினையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தமது அரசியல் ஆக்கிரமிப்புக்கும், அதிகாரப் பரவலுக்கும் இடையூறாக உள்ள சனநாயக அமைப்...
05/02/2024

இந்திய ஒன்றியத்தை ஆளும் பாசிச பாஜக அரசு தமது அரசியல் ஆக்கிரமிப்புக்கும், அதிகாரப் பரவலுக்கும் இடையூறாக உள்ள சனநாயக அமைப்புகள் மீது எதேச்சதிகார கொடுங்கரம் கொண்டு தாக்குதல் நடத்துவது அண்மைக்காலமாகத் தொடர் கதையாகிவிட்டது.

அந்த வகையில், மக்களாட்சி பாதையில் அறிவாயுதம் ஏந்தி தமிழ் மொழி காக்கவும், தமிழ் மண்ணின் வளங்களைக் காக்கவும், வருங்கால தமிழிளம் தலைமுறை நலத்திற்காகவும் தொடர்ச்சியாக களத்தில் நின்று போராடும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், அச்சுறுத்தும் நோக்கத்தில் இந்திய ஒன்றியத்தை ஆளும் மோடி அரசு தனது கைப்பாவையான தேசிய புலனாய்வு முகமை (NIA) மூலம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை என்ற பெயரில் நடத்தியுள்ள அரசியல் பழிவாங்கும் போக்கினைக் கண்டித்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் ஐயா பெ.மணியரசன் அவர்களுக்கும், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழகத் தலைவர் சகோதரர் நெல்லை முபாரக் அவர்களுக்கும், மனிதநேய சனநாயக கட்சித் தலைவர் சகோதரர் தமிமுன் அன்சாரி அவர்களுக்கும், மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் திருமுருகன் காந்தி அவர்களுக்கும், தமிழ்த்தேச தன்னுரிமை கட்சித் தலைவர் ஐயா அ.வியனரசு அவர்களுக்கும் எனது அன்பினையும், நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

ஈழத்தாயக விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணித் தலைவர்கள் கேப்டன் முரளி மற்றும் மேஜர் கிண்ணி ...
04/02/2024

ஈழத்தாயக விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணித் தலைவர்கள் கேப்டன் முரளி மற்றும் மேஜர் கிண்ணி ஆகியோரின் தாயார் பேரன்பிற்குரிய அம்மா கந்தசாமித்துரை வள்ளிநாயகி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெருந்துயருற்றேன்.

கிண்ணியம்மா என்று ஈழச்சொந்தங்கள் அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்ட அம்மாவின் இழப்பு தனிப்பட்ட முறையில் எனக்குப் பேரிழப்பாகும். என்னுயிர் அண்ணன் தமிழ்த்தேசியத் தலைவரைக் காண ஈழத்தாயகம் சென்றிருந்தபோது, அன்பு அண்ணன் கஸ்ரோ அவர்களது இல்லத்தில் வாஞ்சையோடு உணவு பரிமாறிய அன்னையின் பேரன்பு இன்னும் நினைவில் நிற்கிறது.

அம்மாவை இழந்து வாடும் உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், ஈழச்சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

இனத்தின் விடுதலைக்காக இரு மகன்களையும் ஈகம் செய்த அன்னை கிண்ணியம்மா அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

சிறப்பு முகாம் எனும் பெயரில் ஈழச்சொந்தங்களை அடைத்துவைத்துள்ள சித்திரவதைக் கூடங்களை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி நாம்...
03/02/2024

சிறப்பு முகாம் எனும் பெயரில் ஈழச்சொந்தங்களை அடைத்துவைத்துள்ள சித்திரவதைக் கூடங்களை உடனடியாக இழுத்து மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 03-02-2024 மாலை 03 மணியளவில் திருச்சியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.

மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்!

இடம்:

எம்.ஜி.ஆர். சிலை அருகில் சிறைச்சாலை முனை (ஜெயில் கார்னர்), திருச்சி

https://maps.app.goo.gl/dQMFRFm2af5eHuB47

உத்தரப்பிரதேசத்திலுள்ள கியான்வாபி மசூதியின் வளாகத்துக்குள் இந்துக்கள் வழிபாடு செய்யலாம் எனும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்...
01/02/2024

உத்தரப்பிரதேசத்திலுள்ள கியான்வாபி மசூதியின் வளாகத்துக்குள் இந்துக்கள் வழிபாடு செய்யலாம் எனும் வாரணாசி நீதிமன்றத்தின் உத்தரவானது அதிர்ச்சியளிக்கிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்ட அதே இடத்தில் ராமர் கோவிலைக் கட்டி பெரும் அநீதியை பல கோடிக்கணக்கான இசுலாமிய மக்களுக்கு பாஜக அரசு விளைவித்திருக்கும் தற்சமயத்தில், கியான்வாபி மசூதி விவகாரத்திலும் சிக்கலை உருவாக்குவது போல அமைந்திருக்கிறது வாரணாசி நீதிமன்றத்தின் தீர்ப்பு.

நாடு விடுதலைபெற்றபோது இருந்த வழிபாட்டுத்தலத்தின் மதத் தன்மையை மாற்ற எந்தவொரு வழக்கையும் தொடுக்க முடியாது என வழிப்பாட்டுத்தலங்கள் சட்டம் – 1991 ஆனது தெளிவுப்படுத்துவதால் கியான்வாபி மசூதி குறித்த வழக்குகளைத் தள்ளுபடி செய்வதே சட்டத்தின் வழியேயான சரியான முடிவாகும். அதனை விடுத்து, கியான்வாபி மசூதிக்குள் இந்துக்கள் எனப்படுவோர் வழிபாடு செய்ய அனுமதிப்பது சனநாயக விரோதம் மட்டுமல்ல; சட்ட விரோதமுமாகும். பாபர் மசூதி இடிப்பு தொடர்பான குற்ற வழக்கு, உரிமையியல் வழக்கென இரண்டிலும் நீதி நிலைநாட்டப்படாது, தவறான முன்னுதாரணத்தை பெருங்கறையாக வரலாறு பதிவுசெய்திருக்கும் நிலையில், தற்போது வந்திருக்கும் வாரணாசி நீதிமன்றத்தின் முடிவும் அவ்வகையினதேயாகும். ஒருவேளை, பாபர் மசூதி போல, கியான் வாபி மசூதியும் மதவாதிகளின் சதிச்செயலுக்கு இரையாகுமானால், இந்தியப்பெருநாடு பிளவுபட்டு பேரழிவைச் சந்திக்குமென எச்சரிக்கிறேன்.

- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி களப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக, 28-01-2024 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற  ...
31/01/2024

எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி களப்பணிகளை விரைவுபடுத்துவதற்காக, 28-01-2024 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற #தூத்துக்குடி மாவட்டக் கலந்தாய்வில் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்கள் முன்னிலையில் கிளைப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடியபோது,

பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதித்துள்ள மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனட...
31/01/2024

பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதோர் வழிபடத் தடை விதித்துள்ள மதுரை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்!





தமிழர் இறையோன், குறிஞ்சி நிலத் தலைவன், முப்பாட்டன் முருகனின் பழனி திருக்கோயிலுக்குள் சென்று வழிபட இந்து அல்லாத மக்களுக்கு அனுமதி மறுத்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை அளித்துள்ள தீர்ப்பு பெரும் அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது. மாற்று மதத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் தமக்கு விருப்பமான இறைவனை வழிபட அனைவருக்கும் உரிமை உண்டு எனும் நிலையில் உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது.

முருகனை இந்து கடவுள் என்று யார் தீர்மானித்தது? இந்து என்ற வார்த்தையே இல்லாத சங்க இலக்கியங்களிலேயே முருக வழிபாடு பற்றிய செய்தியுள்ளது. பிரித்தானியர்களால் இந்தியா என்ற ஒரு நாடு ஒருங்கிணைக்கப்பட்டு, இந்து என்று ஒரு மதம் உருவாக்கப்படுதற்கு முன்பே முருக வழிபாடு என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர் வாழ்வியலோடும், பண்பாட்டோடும் இரண்டற கலந்து இருந்து வருகிறது. எனவே,
முருகனை இந்து கடவுள் என்பதும், இந்துக்கள் மட்டுமே முருகனை வழிபட வேண்டும் என்பதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. உலகில் எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் தமிழர் முப்பாட்டன் முருக வழிபாடு என்பது சிறந்து விளங்குகிறது. இசுலாமியர் பெரும்பான்மையாக வாழும் மலேசியாவின் பத்து மலை முருகனை சீனர்கள் அதிகம் வழிபடுகின்றனர்? நம் இறைவனை அனைவரும் வழிபடுவது என்பது பெருமைதானே ஒழியே, இழிவல்ல!

தமிழர்களின் தனிப்பெரும் சமயமாம் சைவ சமயத்தில், இறைவன் சிவன் மீது பக்திகொண்டு வழிபட்ட பௌத்த மதத்தைச் சார்ந்த சாக்கிய நாயன்மாரையும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட அடியவர்களான 63 நாயன்மார்களில் ஒருவராக அங்கீகரித்து, ஒவ்வொரு சிவன் கோயிலுக்குள்ளும் அவரது சிலையை வைத்து வழிபடும் மண் தமிழர் மண். அப்படிப்பட்ட பரந்துபட்ட மனித மாண்பினை உடைய தமிழர் மெய்யியல் மரபினை சிதைப்பதென்பது எவ்வகையில் நீதியாகும்? தமக்கு விருப்பமான இறைவனை வழிபடுவது என்பது தனிமனித அடிப்படை உரிமையாகும். அதனை மறுப்பதென்பது பெருங்கொடுமையாகும்.

படிக்கப் போகும் பள்ளிக்கூடத்தில் சாதி, மதம் பார்ப்பது, கும்பிட போகும் கோயிலுக்குள் சாதி, மதம் பார்த்து ஒதுக்கி வைப்பதென்பது மனிதத் தன்மையற்ற கொடுஞ்செயலாகும். எல்லாவற்றிலும் சாதி, மதம் பார்க்கும் பெருந்தகைகள் குடிக்கப்போகும் மதுக்கடைகளில் மட்டும் சாதி-மதம் உள்ளிட்ட எவ்விதப் பாகுபாடும் பார்ப்பதில்லையே ஏன்?
மாற்று மதத்தினர் இந்துவாக மதம் மாறினால் ஏற்றுக்கொள்ள கூடியவர்கள், மாற்று மதத்தினர் தங்கள் இறைவனை வணங்க மட்டும் அனுமதி மறுப்பது எவ்வகையில் நியாயமாகும்?
நம்பிக்கை உடையவர்கள் மட்டும்தான் வழிபட அனுமதி என்றால் ஒருவர் நம்பிக்கை உடையவரா இல்லையா என்பதை எந்த அளவுகோல் மூலம் சட்டம் அளவிடப்போகிறது? உறுதிமொழி அளித்தால் உள்ளே அனுமதிக்கலாம் என்றால் உறுதிமொழியின் உண்மைத்தன்மையை யார் உறுதி செய்வது? மாற்று மதத்தைச் சேர்ந்தவர் அறநிலையத்துறை அதிகாரி என்றால் அவரை கோயிலுக்குள் அனுமதிப்பீர்களா? மாட்டீர்களா?
இத்தனை ஆண்டுகாலமாக மாற்று மதத்தினர் பழனி முருகனை வழிபட்டதால் இந்தச் சமூகத்தில் ஏற்பட்ட சாதி-மத கலவரம் என்ன? சட்டம்-ஒழுங்கு சிக்கல் என்ன? திடிரென்று இப்போது தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்விகளுக்கு எவரிடத்தில் பதில் உண்டு?

தமிழ்நாட்டில் நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோயில், சிக்கல் சிங்காரவேலன் கோயில் என்று அனைத்து மதத்தினரும், அனைத்து மத கோயில்களுக்கும் சென்று வழிபடக்கூடிய மரபணுவிலேயே மதநல்லிணக்கம் நிலைத்திருக்கும் தமிழ் மண்ணில், மனதிற்கு நெருக்கமான ஆண்டவனை வழிபட மனிதன் உருவாக்கியச் சட்டங்களால் தடை ஏற்படுத்துவது என்பது பிரிவினைக்கு வழிவகுத்து, மக்கள் மனங்களில் உள்ள மதப் பாகுபாடுகளை அதிகரிக்குமேயன்றி ஒருபோதும் குறைக்கப்போவதில்லை.
அதைத்தான் நீதிமன்றம் விரும்புகிறதா?மாண்பமை உயர்நீதிமன்றமே இதற்கு வழியேற்படுத்துவதுதான் வேதனையின் உச்சமாகும்.

மலர்கள் வெவ்வேறாக இருக்கலாம். அதன் மணங்கள் வெவ்வேறாக இருக்கலாம். அதன் நிறங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் அனைத்து மலர்களிலும் உள்ள தேனின் சுவை என்பது ஒன்றுதான் என்பதுபோல்தான் நாம் வணங்கும் இறைவனும்; அப்படி இறைவனை வெவ்வேறு வடிவங்களில், வெவ்வேறு பெயர்களில், வெவ்வேறு வழிகளில் வழிபட அனுமதிப்பதுதான் இந்து மதத்தின் பெருமை என்று கூறிவிட்டு, தற்போது இறைவனை இப்படி வழிபடுபவர்களுக்கு மட்டும்தான் வணங்க அனுமதி என்பது இத்தனை ஆண்டுகாலம் கூறிவந்த பெருமைக்கு இழுக்கினையே ஏற்படுத்தும்.

அருட்பெருஞ்சோதி! தனிபெருங்கருணை!வள்ளலார் நினைவைப் போற்றுவோம்!
30/01/2024

அருட்பெருஞ்சோதி! தனிபெருங்கருணை!
வள்ளலார் நினைவைப் போற்றுவோம்!

Address


Alerts

Be the first to know and let us send you an email when செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share