04/11/2020
அன்புப் பொது மக்களுக்கு காத்தான்குடி நகர முதல்வர், பிரதேச செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, இராணுவக்கட்டளைத் தளபதி, பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி, ஜம்இய்யத்துல் உலமா, பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம், வர்த்தக சங்கம், சுகாதார பரிசோதகர்கள் ,இணைந்து விடுக்கும் முக்கிய அறிவித்தல்.
********************
காத்தான்குடி சுகாதாரப் பிரிவில் Covid-19 தொற்றாளர் ஒருவர் அடையாளப்படுத்தப் பட்டுள்ளதைத் தொடர்ந்து 04.11.2020ம் திகதி இன்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்ற முக்கிய கலந்துரையாடலில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
1. 167B கிராம சேவகர் பிரிவில் Covid-19 தொற்றாளர் ஒருவர் அடையாளப்படுத்தப் பட்டுள்ளதாலும் அவருடன் நேரடி தொடர்புடைய பலர்(First contact) ஊரின் பல பகுதிகளிலும் அடையாளப் படுத்தப்பட்டுகொண்டு வருவதாலும் பொதுமக்கள் அதி அத்தியவசிய தேவை தவிர்ந்த வேறு எக்காரணத்தைக் கொண்டும் வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் எப்பொழுதும் சமூக இடைவெளியைப் பேணி முகக்கவசம் அணிந்து கைகளை அடிக்கடி கழுவுவதுடன் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தொடர்பில் அதிக அக்கறை எடுக்குமாறும் வேண்டிக்கொள்ப்படுகின்றனர்.
2. பாமசி தவிர்ந்த உணவகங்கள் உட்பட சகல வர்த்தக நிலையங்களும் மறு அறிவித்தல் வரை இரவு 9 மணியுடன் மூடி , வீதிகளில் அதன் பின்னரான நடமாட்டத்தை முற்றாக குறைத்தல் வேண்டும்.
3. கடற்கரை , ஆற்றங்கரை , விளையாட்டு மைதானங்கள் , சிறுவர் பூங்காக்கள் என எந்தவொரு இடத்திலும் பொதுமக்கள் சேர்வது மறு அறிவித்தல் வரை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
4. காத்தான்குடி நகர எல்லைக்குள் யாசகம் கேட்பதும் வழங்குவதும் மறு அறிவித்தல் வரை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளது.
5. ஏற்கனவே அறிவித்தது போன்று சகல உணவகங்களிலும் Take away மாத்திரம் அனுமதிக்கப்படுவதுடன் சிகை அலங்கார நிலையங்களை திறப்பதும் மறு அறிவித்தல் வரை முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளது.
எனவே மேற்படி அறிவுறுத்தல்கள் தொடர்பில் பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடனும் சமூகப் பொறுப்புடனும் நடந்து தங்களையும் தங்கள் ஊரையும் பாதுகாக்க பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
நன்றி
இவ்வண்ணம்
காத்தான்குடி நகருக்கான Covid -19 தடுப்பு செயலணி சார்பாக
SHM.அஸ்பர் JP UM
நகர முதல்வர், நகரசபை, காத்தான்குடி.