06/12/2021
தனது விடுதலைக்காக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ரியாஜ் பதியுதீன்.
அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக...!
சுமார் 07 மாத கால அநியாயத் தடுப்புக் காவலின் பின்னர், கடந்த மாதம் 15 ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டேன்.
முதற்கண் இறைவனுக்கு நன்றி செலுத்தியவனாக,
நான் கைதான நாள் முதல், எனது விடுதலைக்காக எத்தனையோ பேர் இறைவனிடம் மன்றாடியிருந்தனர். பிரார்த்தனைகள் புரிந்து, நோன்பு நோற்று எனக்காக இறைவனிடம் வேண்டியிருந்தனர். உங்கள் குடும்பத்தில் ஒருவனாக என்னை நினைத்து, எனது துன்பத்தில் பங்கெடுத்து, எனக்குப் பக்க பலமாக இருந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும், இத்தருணத்தில் நானும் எனது குடும்பத்தினரும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
அந்தவகையில், எனது விடுதலைக்காகப் பிரார்த்தித்த தாய்மார்கள், சகோதர சகோதரிகள், அன்பர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ரியாஜ் பதியுதீன்-