NEWZ BEATS

NEWZ BEATS This page is a place of information on less known and interesting facts, latest updates on trending news.

30/12/2022

கடலுக்குள்ளிருந்து வந்த வேற்றுக்கிரக உயிரினம்? Photos of 'Aliens' Emerging from the Sea Sparks Panic

29/12/2022

ஆன்மாக்கள் தூங்கும் போது நம்மை அமுக்குமா? What is Sleep Paralysis? Bad Dreams

28/12/2022

எம்.ஜி.ஆருக்கும், MR ராதாவுக்கும் வந்த சண்டை : Radha Ravi Interview About MGR & MR Radha Fight

27/12/2022

மிரளவைக்கும் வைக்கும் மெஸ்ஸியின் சொத்துக்கள் : Lionel Messi Luxury Life Style

26/12/2022

USB Charger மூலம் செல் போன் தகவல்களை திருடும் கும்பல் : Juice Jacking Attack

24/12/2022

கலவரமான விஜயின் வாரிசு Audio Launch : Thalapathy Vijay Fans in Varisu Audio Launch

Vijay

29/06/2022

ரசிகருக்கு போன் பண்ணி வாழ்த்திய அஜித் : Ajith Showered his Birthday Wishes to his fan

Ajith Verians

https://youtu.be/v5c6udgX8joதலை சுற்றவைக்கும் நயன்தாராவின் சொத்துக்கள் : Nayanthara & Vignesh Shivan Jaw-droppingly Asse...
29/06/2022

https://youtu.be/v5c6udgX8jo
தலை சுற்றவைக்கும் நயன்தாராவின் சொத்துக்கள் : Nayanthara & Vignesh Shivan Jaw-droppingly Assets

11/06/2022

With love ,
Kamal Haasan








11/06/2022

# விக்கி நயன் திருமண விருந்து - நல்லகவுண்டம்பாளையம், கோயம்புத்தூர் 😇❤️

10/06/2022

''இருசக்கர வாகனத்தை நிறுத்துவதற்கு பணம் கேட்ட ஊழியரை அடித்து, அத்து மீறிய காவலர்கள்: வைரல் வீடியோ''

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில், நன்னிலம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணிபுரியும் காவலர் ஒருவர், தினமும் கும்பகோணம் பேருந்து நிலையத்தில் உள்ள இரு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில், வாகனத்தை நிறுத்தி வந்துள்ளார் .

ஆனால், இதுவரை ஒருநாளும் அதற்கு பணம் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அங்கு பணிபுரியும் ஊழியர் அன்பழகன் என்பவர் , தன்னை முதலாளி கண்டிப்பதாகவும் வாகனம் நிறுத்துவதற்கு தாங்கள் பணம் தர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த காவலர் அருகில் உள்ள மேற்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் சுந்தரம் என்ற காவலரை அழைத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அத்துமீறி அந்த ஊழியரை தாக்கி உள்ளார் .

இந்த காட்சி அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

10/06/2022

புதுமண தம்பதிகளாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி..!!

நேற்று திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதியான நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்பதற்காக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்க ஏற்கனவே முன்பதிவு செய்திருந்த நயன்தாரா தம்பதி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றிருந்தனர்.

           புதுமண தம்பதிகளான  நயன்தாரா விக்னேஷ் சிவன் அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்...
10/06/2022


புதுமண தம்பதிகளான நயன்தாரா விக்னேஷ் சிவன் அவர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர்.

  |   |'‘முதற்கட்டமாக 5,000 பேருக்கு பணி நிரந்தரம்’'மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015-ம் ஆண்டி...
07/06/2022

| |

'‘முதற்கட்டமாக 5,000 பேருக்கு பணி நிரந்தரம்’'

மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015-ம் ஆண்டில் இருந்து 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அருகே 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

இதனைத் தொடர்ந்து செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

இதன்படி செவிலியர்கள் சங்கத்தின் 8 பேர் கொண்ட குழுவினர் இன்று மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

“இந்தப் பேச்சுவார்த்தையில், இந்த நிதியாண்டில் முதற்கட்டமாக 5,000 பேரை பணி நிரந்தரம் செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார்” என்று சங்கத்தின் செயலாளர் அம்பேத்கர் கணபதி தெரிவித்தார்.

  |   |  '' தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | வானிலை ஆய்வு மையம் ''தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்காலி...
07/06/2022

| |

'' தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு | வானிலை ஆய்வு மையம் ''

தமிழ்நாடு , புதுவை மற்றும் காரைக்காலில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் இன்று ஈரோடு, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் ,ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி,மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு சில இடங்களில் லேசான முதல் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது .

 நீட் முதுகலை மதிப்பெண் விபர பட்டியல், நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்முதுகலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மதிப...
07/06/2022



நீட் முதுகலை மதிப்பெண் விபர பட்டியல், நாளை முதல் பதிவிறக்கம் செய்யலாம்

முதுகலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மதிப்பெண் விபர பட்டியலை (Score Card) நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் அடிப்படையில், முதுகலை படிப்புகளுக்கான கலந்தாய்வில் மாணவர்கள் கலந்து கொள்வார்கள்.
முன்னதாக, 2022 முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் கடந்த 2ம் தேதி வெளியிடப்பட்டன. இதில், குறைந்தபட்ச மதிப்பெண் (Cut-Off ), தேர்வர்கள் பெற்ற மதிப்பெண் (Marks), தகுதி பட்டியல் (Rank List) ஆகியவை வெளியிடப்பட்டன.

''நயன்தாரா திருமணத்தில் பங்கேற்போருக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?''நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் வரும் 9-ம்...
07/06/2022

''நயன்தாரா திருமணத்தில் பங்கேற்போருக்கு என்னென்ன கட்டுப்பாடுகள் தெரியுமா?''

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் வரும் 9-ம் தேதி மகாபலிபுரத்தில் நடைபெறுகிறது. சுமார் 200 முக்கிய பிரபலங்களுக்கு நட்சத்திர ஜோடிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.இந்த நிலையில் நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு திருமண விழா உரிமையை விற்பனை செய்துள்ளனர். இதனால் அந்த நிறுவனம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது.

குறிப்பாக திருமணத்திற்கு வருபவர்கள் புகைப்படம் எடுக்கக்கூடாது, தொலைபேசிகளை அரங்கத்திற்குள் எடுத்து வரக்கூடாது என கூறியுள்ளனர். திருமண விழா உரிமையைப் பெற்றிருப்பதால் எந்த ஒரு புகைப்படமோ அல்லது திருமண காட்சிகளோ வெளியாகிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றனர்.

'டாணாக்காரன்' படத்திற்கு விருது!தாகூர் சர்வதேச திரைப்பட விழா, இந்தியாவில் மேற்கு வங்கத்தில் உள்ள போல்பூரில் மாதந்தோறும் ...
07/06/2022

'டாணாக்காரன்' படத்திற்கு விருது!

தாகூர் சர்வதேச திரைப்பட விழா, இந்தியாவில் மேற்கு வங்கத்தில் உள்ள போல்பூரில் மாதந்தோறும் நடைபெறும். இந்த விழாவில் நேரடியாக படம் திரையிடப்படுவது, இசை நிகழ்ச்சி, விருது வழங்கும் விழா உள்ளிட்டவை நடைபெறும். அந்த வகையில் சிறந்த கதை சொல்லல் பிரிவில் 'டாணாக்காரன்'படத்திற்கு விருது கிடைத்துள்ளது. இதனை 'டாணாக்காரன்' படத்தின் இயக்குநர் தமிழ் தனது சமூக வலைத்தளத்தில் அதிகாரப்பூர்வமாக பகிர்ந்து தாகூர் சர்வதேச திரைப்பட விழாவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

     மாணவர்களுக்கான பாடப்புத்தகம் தயார்!- தமிழ்நாடு பாடநூல் கல்வியில் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தகவல்.    தமி...
07/06/2022


மாணவர்களுக்கான பாடப்புத்தகம் தயார்!
- தமிழ்நாடு பாடநூல் கல்வியில் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தகவல்.

தமிழ்நாட்டில் வரும் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால், மாணவர்களுக்கான 5.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளது என தமிழ்நாடு பாடநூல் கல்வியில் பணிகள் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி தகவல் தெரிவித்துள்ளார் .

'விக்ரம்' படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு TVS Apache RTR 160 பைக்கை அன்பளிப்பாக வழங்கினார் கமல்ஹாசன்! ...
07/06/2022

'விக்ரம்' படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் 13 பேருக்கு TVS Apache RTR 160 பைக்கை அன்பளிப்பாக வழங்கினார் கமல்ஹாசன்!

| | |

TNSchools           மீண்டும் தனியார் பள்ளி நோக்கி பெற்றோர் ..?தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்...
07/06/2022

TNSchools

மீண்டும் தனியார் பள்ளி நோக்கி பெற்றோர் ..?

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் கடந்த 2018ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.முக்கியமாக 2019-20 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. இது சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இங்குப் பயிலும் குழந்தைகளுக்குச் சீருடை, காலணி உள்ளிட்டவை அரசு சார்பில் வழங்கப்பட்டது.

ஆனால் , தற்போது நடப்பு கல்வியாண்டு முதல் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.இதனால் அரசுப் பள்ளிகளில் சேர்க்கலாம் என்று நினைத்திருந்த பெற்றோர் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலை உருவாகியுள்ளது. கொரோனா பரவலுக்கு பின் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளியை நோக்கி ஏராளமானோர் படையெடுத்த நிலையில், அரசின் இந்த செயல்பாடு மீண்டும் பெற்றோரை தனியார் பள்ளியை நோக்கி செல்ல தூண்டும் வகையில் இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது. இதனால் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கலாம் என்று யோசித்திருந்த பல பெற்றோர் மத்தியில், அரசின் இந்த நடவடிக்கை ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் கேமின் - விளையாட்டு விபரீதம் !!Free Fire ID, Password-ஐ சக நண்பர்கள் திருடிக் கொண்டதால் வாட்ஸ் அப் 'பில்  ஸ்டேட்...
07/06/2022

ஆன்லைன் கேமின் - விளையாட்டு விபரீதம் !!

Free Fire ID, Password-ஐ சக நண்பர்கள் திருடிக் கொண்டதால் வாட்ஸ் அப் 'பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கரூரைச் சேர்ந்த சஞ்சய் எனும் 23 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டார் .

***de

புதுச்சேரி தேசிய மாணவர் படை இயக்குனரகத்தின் சார்பில், கடற்படை பிரிவு மாணவர்களின் கடல் சாகச பயணத்தை புதுச்சேரி  துணைநிலை ...
07/06/2022

புதுச்சேரி தேசிய மாணவர் படை இயக்குனரகத்தின் சார்பில், கடற்படை பிரிவு மாணவர்களின் கடல் சாகச பயணத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் தேங்காய் திட்டு மீன்பிடி துறைமுகத்தில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்தியாவுக்கு தலிபான் அரசு அறிவுரை...!!"மதவெறியை ஊக்குவித்து முஸ்லிம் மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்" என இந்தியாவுக...
07/06/2022

இந்தியாவுக்கு தலிபான் அரசு அறிவுரை...!!

"மதவெறியை ஊக்குவித்து முஸ்லிம் மக்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம்" என இந்தியாவுக்கு ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு அறிவுரை கூறியுள்ளது.

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மா,அந்நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் அதனைத் தொடர்ந்து தொழிலதிபரும் பாஜக பிரமுகருமான நவீன் ஜிண்டால் ட்விட்டரில் சர்ச்சைகுரிய ட்வீட்டையும் பதிவிட்டுள்ளார். இதனைக் கண்டித்து கான்பூரில் போராட்டம் நடந்து வன்முறையானது. இது தொடர்பாக 40க்கும் மேற்பட்டோர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். இன்னும் கான்பூரில் பதற்றமான சூழலே நிலவுகிறது.

இந்த சர்ச்சையை ஒட்டி ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான் அரசின் செய்தித் தொடர்பாளர் ஜபிபுல்லா முஜாகீத் தனது ட்விட்டர் பக்கத்தில், "முகமது நபியை அவமதிக்குப்படி இந்தியாவின் ஆளுங்கட்சி பிரமுகர் பேசியுள்ளதற்கு இஸ்லாமிக் எமிரேட் ஆஃப் ஆப்கானிஸ்தான் கடும் கண்டத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. இதுபோன்ற மத வெறியர்களை ஊக்குவிக்கக் கூடாது என்று நாங்கள் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறோம். இஸ்லாம் புனித மதத்தை அவமதித்து முஸ்லிம்களின் உணர்வுகளைத் தூண்ட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when NEWZ BEATS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share