The Nellai Post

  • Home
  • The Nellai Post

The Nellai Post Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Nellai Post, Media/News Company, Tirunelveli, .

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கீரை, புதினா, மல்லி இலை போன்றவைகளில்  விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்ப...
03/11/2022

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கீரை, புதினா, மல்லி இலை போன்றவைகளில் விளைச்சல் பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக புதினா விளைச்சல் மற்றும் வரத்து குறைந்துள்ளது. இதனால் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கிலோ 35 ரூபாய்க்கு விற்பனையான புதினா இலை இன்று 55 ரூபாயாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து மழை பெய்தால் மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

கால் சென்டர்களில் மோசடி கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் இளைஞர்களை வெளிநாடுகளில் கட்டாய பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்...
03/11/2022

கால் சென்டர்களில் மோசடி கிரிப்டோ கரன்சி மோசடி போன்றவற்றில் இளைஞர்களை வெளிநாடுகளில் கட்டாய பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். எனவே வெளிநாடு பணிக்கு செல்பவர்கள் முழு விபரங்களையும் தெரிந்து கொண்டு பணிக்குச் செல்ல வேண்டும். உதவி தேவைப்பட்டால் அதற்கான தொடர்பு எண்கள் 9600023645, 8760248625, 044-28515288 தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு- கருமேனி ஆறு- நம்பியாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் ...
03/11/2022

திருநெல்வேலி மாவட்டத்தில் தாமிரபரணி ஆறு- கருமேனி ஆறு- நம்பியாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் தற்போது விரைவுப்படுத்தப்பட்டுள்ளது. இதை மேலும் திருப்திப்படுத்துவதற்காக, சென்னை ஆவின் முன்னாள் இணையக்குனரக இருந்த தங்கப்பாண்டியன் என்பவர் இத்திட்டத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் குளிர்ந்த தட்பவெப்ப நி...
30/10/2022

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் இன்று அதிகாலை முதல் நெல்லை மாவட்டம் முழுவதும் குளிர்ந்த தட்பவெப்ப நிலை நிலவுகிறது. கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கருமேகம் திரண்டு காணப்படுகிறது. தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசுகிறது. மழைக்கான சூழல் உருவாகி வருகிறது. வெப்பம் வெகுவாக குறைந்துவிட்டது.

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு மனித சங்...
29/10/2022

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது இதனை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார் டாக்டர் அழகேசன் முன்னிலை வகித்தார். இதில் மூளை நரம்பியல் பிரிவு டாக்டர்கள் மற்றும் நர்சிகள், பயிற்சி மாணவிகள், பயிற்சி டாக்டர்கள் பங்கேற்று மனித சங்கிலியாக நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

திருநெல்வேலி நண்பர்கள் நகைச்சுவை மன்றம் சார்பில் வாதம் தோறும் சிறப்பு சிரிப்பு தின விழா கொண்டாடுகின்றனர். நகைச்சுவை பேச்...
28/10/2022

திருநெல்வேலி நண்பர்கள் நகைச்சுவை மன்றம் சார்பில் வாதம் தோறும் சிறப்பு சிரிப்பு தின விழா கொண்டாடுகின்றனர். நகைச்சுவை பேச்சாளர்களை அழைத்து இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. தொடர்ச்சியாக நடத்தப்படும் இந்த விழாவின் 245 வது மாத சிறப்பு சிரிப்பு நிகழ்ச்சி நாளை சனிக்கிழமை மாலை ஆறு முப்பது மணிக்கு பாளையங்கோட்டை ஆக்ஸ்போர்ட் பள்ளியில் நடைபெறுகிறது பொதுமக்கள் பங்கேற்கலாம்

தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது .நீதிமன்ற உத்தரவுபடி தற்போது புதிய தேர்வு தேதி அறிவிக்கப...
28/10/2022

தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் தட்டச்சு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது .நீதிமன்ற உத்தரவுபடி தற்போது புதிய தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வருகிற 12 மற்றும் 13ஆம் தேதி தேர்வுகள் நடைபெறுகின்றன. நெல்லை மாவட்டம் மானூர் வட்டாரம் சங்கர் நகர் சங்கர் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் தேர்வு நடக்கிறது. இதற்கான ஹால் டிக்கெட் வருகிற ஒன்றாம் தேதி முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்ட காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற திங்கட்கிழமை 31ம் தேதி நடக்கிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் ...
28/10/2022

நெல்லை மாவட்ட காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற திங்கட்கிழமை 31ம் தேதி நடக்கிறது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும். இந்தக்கூட்டத்தில் காஸ் வினியோக நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். எனவே காஸ் சிலிண்டர் உபயோகிப்போர் பங்கேற்று குறைகள் இருந்தால் தெரிவித்து பயனடையலாம் என கலெக்டர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான கலை பண்பாட்டு திருவிழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி இன்று பாளையங்கோட்டை சா...
28/10/2022

9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவிலான கலை பண்பாட்டு திருவிழா இரண்டாம் நாள் நிகழ்ச்சி இன்று பாளையங்கோட்டை சாரல் தக்கர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பங்கேற்று திறமைகளை வெளிப்படுத்தினர். களிமண் மூலம் மாணவிகள் தயாரித்த கலைப் பொருட்கள் வியக்க வைத்தன. முதலிடம் பிடிப்பவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் ...
28/10/2022

திருநெல்வேலி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட கலெக்டர் விஷ்ணு தலைமையில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது இதில் பேசிய கலெக்டர் நெல்லை மாவட்டத்தில் வருடாந்திர மழை அளவு 814.80 மிமீ. தற்போது வரை 416.4 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது இது சராசரி அளவைவிட 15.87 மில்லி மீட்டர் குறைவு ஆகும் என்றார் கூட்டத்தில் பல்வேறு துறை அதிகாரிகள் மாவட்ட அளவில் விவசாயிகள் பங்கேற்றனர்.

திருநெல்வேலி மாவட்ட மின்வாரிய துறை சார்பில் பருவ மலையின் போது மின் விபத்து ஏற்படுவதில் இருந்து தற்போது எப்படி என்பது குற...
26/10/2022

திருநெல்வேலி மாவட்ட மின்வாரிய துறை சார்பில் பருவ மலையின் போது மின் விபத்து ஏற்படுவதில் இருந்து தற்போது எப்படி என்பது குறித்து முக்கிய அறிவுரைகளை வெளியிட்டுள்ளனர்.

✓மழை காலங்களில் மின்மாற்றி மின் பெட்டிகள் அருகே செல்லக் கூடாது.
✓இடி மின்னலின் போது மரம், மின்கம்பிகள் அருகே நிற்கக்கூடாது.
✓மின்கம்பி அறுந்து விழுந்தால் அதைத் தொட முயற்சிக்கக் கூடாது. என்பது ஒழிப்பு ஆலோசனைகளை தெரிவித்துள்ளனர்.

நாங்குநேரி வானுமாமலை பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு தினமும் பெருமாள் சிறப்பு அலங்க...
26/10/2022

நாங்குநேரி வானுமாமலை பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு தினமும் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. நேற்று மாலை கிரகணம் நடைபெற்றதால் பெருமாள் எழுந்தருள காலதாமதம் ஏற்பட்டது. கிரகணம் முடிந்த பின்னர். சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பெருமாள் மற்றும் மாமுனிகள் வீதி உலா நடந்தது.

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் மாதம் தோறும் 2 மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை...
26/10/2022

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு துறை சார்பில் மாதம் தோறும் 2 மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது. நாளை மறுதினம் 28ஆம் தேதி காலை 10:30 மணிக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. எனவே வேலை நாடும் இளைஞர்கள் இந்தச் சிறப்பு முகாமில் பங்கேற்று பயனடையலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் 3 அடுக்கு பைக் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு 1500 க்கும் மேற்பட்ட பைக்குகளை நிறுத்த இட வசதி ...
24/10/2022

திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் 3 அடுக்கு பைக் ஸ்டாண்ட் உள்ளது. இங்கு 1500 க்கும் மேற்பட்ட பைக்குகளை நிறுத்த இட வசதி உள்ளது. இதுபோல் மேலும் புதிதாக இரண்டு பைக் ஸ்டாண்டு கட்டப்பட்டு வருகின்றன தீபாவளி பண்டிகைக்கு ஏராளமான பஸ்ஸில் வெளியூர் சென்றுள்ளதால் அவர்களது பைக்குகளால் ஸ்டாண்ட் இன்று முழுமையாக நிரம்பிவிட்டது.

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் பாளையங்கோட்டை மார்கெட் பகுதியில் தீபாவளி முன்னிட்டு  கடந்த சில தினங்களாக இ...
24/10/2022

தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் பாளையங்கோட்டை மார்கெட் பகுதியில் தீபாவளி முன்னிட்டு கடந்த சில தினங்களாக இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். இவரது பணியை பாராட்டி, மாநில எஸ்டிபிஐ தலைவர் நெல்லை முபாரக் ஆலோசனைப்படி பாளை பகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் அரசடி மீரான், அரசன் சேக், பாரத்கனி ஆகியோர் இன நேரில் சந்சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.

 #திருநெல்வேலி_மாநகராட்சி  #மேலப்பாளையம்_மண்டலம் மற்றும்  #ஸ்ரீசக்தி_மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்!!...
23/10/2022

#திருநெல்வேலி_மாநகராட்சி #மேலப்பாளையம்_மண்டலம் மற்றும் #ஸ்ரீசக்தி_மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம்!!!
வாவர்பள்ளிவாசலில் வைத்து நடைபெற்றது...
#மத்தியமாவட்டகழகசெயலாளர்_பாளைசட்டமன்ற_உறுப்பினர்_மு_அப்துல்வகாப் MLA முகாமினை துவக்கி வைத்தார்கள்...
ஆட்டோ சங்க உறுப்பினர்களுக்கு முதலுதவி பெட்டி (first aid kit) வழங்கினார்கள்...
அருகில் துணைமேயர் Raju KR மேலப்பாளையம் பகுதிகழக செயலாளர் Dbai Shahul Hameed மற்றும் மண்டல சேர்மன் Iklam Fazila மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் Sadhik Ali ஆமீனாபீவி,Ramzan Hamthan ,Buhari Kab சபி அமீர் பாத்து,Juliet, @ வட்டசெயலாளர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் Saali Moulana மற்றும் கழக நிர்வாகிகள் அனைவர்களும் கலந்து கொண்டனர்..

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12ஆம் தேதி  கொடியேற...
23/10/2022

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, இரவு அம்பாள் வீதி உலா நடைபெற்றது. நேற்று காட்சி கொடுக்கும் வைபவம் நடந்தது. இதைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4 மணிக்கு ஆயிரம் கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது...
22/10/2022

பாளையங்கோட்டை திரிபுராந்தீஸ்வரர் சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சியான காட்சி கொடுக்கும் வைபவம் நேற்று நடந்தது. இதைத் தொடர்ந்து நேற்று நள்ளிரவு திரிபுராந்தீஸ்வரர்- அன்னை கோமதி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்தாம் நாள...
22/10/2022

ஐப்பசி திருக்கல்யாண திருவிழா திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்தாம் நாளான இன்று அதிகாலை ஒரு மணிக்கு அன்னை காந்திமதி அம்பாள் கம்பா நதி மண்டபத்திற்கு எழுந்து அருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. காந்திமதி அம்பாள் தவக்கோளத்தில் கையில் கமண்டலத்துடன் நெற்றியில் விபூதியுடன் அம்பாள் காட்சி மண்டபத்திற்கு சென்றடைந்தார்.

தீபாவளியை ஒட்டி திருப்பதி செல்ல விரும்பும் நெல்லை மாவட்ட மக்களே, வருகிற தீபாவளி அன்றும் அதற்கு மறுநாளும்  திருப்பதியில் ...
21/10/2022

தீபாவளியை ஒட்டி திருப்பதி செல்ல விரும்பும் நெல்லை மாவட்ட மக்களே, வருகிற தீபாவளி அன்றும் அதற்கு மறுநாளும் திருப்பதியில் பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோல் 25ஆம் தேதி சூரிய கிரகணம் காரணமாக காலை 8 மணி முதல் இரவு 7:30 மணி வரை கோயில் நடை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . எனவே இந்த நேரங்களை கணக்கில் கொண்டு பயணத்தை திட்டமிடுவது நல்லது.

சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று விபத்து இல்லா தீபாவளி கொண்டாட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ந...
21/10/2022

சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று விபத்து இல்லா தீபாவளி கொண்டாட்டம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது தலைமை ஆசிரியை இவாஞ்சலின் பியூலா தலைமை வகித்தார். சேரன்மகாதேவி நிலைய தீயணைப்பு அலுவலர் வரதராஜன், சிறப்பு அலுவலர்ஈஸ்வரன் ஆகியோர் விபத்து இல்லாமல் பட்டாசு வெடிப்பது குறித்து விளக்கம் அளித்தனர். ஆசிரியர்கள் கணேசன் அகஸ்டின் பொன்ராஜ் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

21/10/2022
அரிசி மூடைகளுக்கு சமீபத்தில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. மேலும் எண்ணெய் விலையும் உயர்ந்து விட்டது இதனால் திருநெல்வேலியி...
21/10/2022

அரிசி மூடைகளுக்கு சமீபத்தில் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது. மேலும் எண்ணெய் விலையும் உயர்ந்து விட்டது இதனால் திருநெல்வேலியில் தீபாவளி பலகாரங்கள் விலை சற்று உயர்ந்துள்ளது. குறிப்பாக முறுக்கு, அதிரசம், தேன்குழல், அச்சு முறுக்கு போன்றவைகளின் விலை அதிகபட்சம் ஒரு ரூபாய் முதல் இரண்டு ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக இதை தயாரித்து விற்கும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்2 முடித்து தொடர்ந்து பயிலாமல் இருக்கும்  40க்கும் மேற்பட்ட  அரசு பள்ளி மாணவர்கள் இன்று பெற்றோரு...
20/10/2022

கடந்த கல்வி ஆண்டில் பிளஸ்2 முடித்து தொடர்ந்து பயிலாமல் இருக்கும் 40க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்கள் இன்று பெற்றோருடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உயர் கல்வி, தொழில் பயிற்சி வேலை வாய்ப்பு குறித்த சிறப்பு ஆலோசனை முகாம் நடைபெற்றது. முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தொடங்கி வைத்து பேசினார். இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயர் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டது .

திருநெல்வேலி மாவட்டம்  பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 20.10.2022        ...
20/10/2022

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மகாராஜ நகர் உழவர் சந்தை காய்கறிகள் மற்றும் பழங்கள் விலை பட்டியல் 20.10.2022 (வியாழக்கிழமை)
1.தக்காளி-40,நாடு-35 2.கத்தரி-வெள்ளை-20,16,கீரிபச்சைகத்தரிக்காய்-15,வைலட்கீரிகத்தரிக்காய்-15
3.வெண்டை-20
4.புடலை-18,16
5.சுரை-12,10
6.பீர்க்கு-30
7.பூசணி-16
8.தடியங்காய்-12 9.அவரை-32 10.கொத்தவரை-18
11.பாகல்-சிறியது-40,பெரியது-30
12.பச்சைமிளகாய்-24 13.முருங்கை-55
14.பெரியவெங்காயம்-28,27,(புதியது-25,24)
15.சின்னவெங்காயம்-நாடு-76,பழைய- உள்ளி70,65,
(ஜண்டா-உள்ளி-88) 16.காராமணி-22
17.கோவக்காய்-30
18.தேங்காய்-30
19.வாழைக்காய்-35
20.வாழைப்பூ(1)-15,12,10
21.வாழைத்தண்டு(1)-10
22.வாழைஇலை(5)-15,12
23.கீரைகள்(கட்டு)-12,10
24.கறிவேப்பிலை-40
25.புதினா-35,நாடு-30
26.மல்லி இலை-35,நாடு-25
27.வெள்ளரி-நாடு-12, சாம்பார்வெள்ளரி-12,சாலட்-26,குக்கும்பர்-65
28.இஞ்சி-66,புதியது-இஞ்சி-40
29.மாங்காய்-நாடு-60,55,பெங்களூரா-65 30.நார்த்தங்காய்-25 31.ரிங்பீன்ஸ்-68,55
32.முள்ளங்கி-நாடு-14,ஊட்டி-16 33.சீனி கிழங்கு-34 34.உருளைக்கிழங்கு-35
35.கேரட்-ஊட்டி-55,சிறிய-கேரட்-30
36.சௌசௌ-14 37.முட்டைகோஸ்-28 38.பீட்ரூட்-30
39.காலிபிளவர்-52
40.குடமிளகாய்-60
41.பஜ்ஜிமிளகாய்-55 42.பூண்டு-நாடு-50,40,30,வடபூண்டு-112
43.கருணைக்கிழங்கு-புதியது-30,(பழையது-40) 44.சேம்பகிழங்கு-36 45.சேனைக்கிழங்கு-32

பழங்கள்
1.வாழைப்பழம்
-செவ்வாழை-75,ஏலக்கி-70,மட்டி-60,நேந்திரன்-60,கற்பூரவள்ளி-50,கோழிகூடு-50,நாடு-60,பச்சை-45
2.எலுமிச்சை-30
3.ஆப்பிள்-120,100
4.சாத்துக்குடி-60
5.மாதுளை-160,130,120
6.கொய்யா-60,50
7.சப்போட்டா-40
8.பப்பாளி-30
9.நெல்லிக்காய்-30,25
10.திராட்சை-80 11.அன்னாசிபழம்-60,50 12.சீதாபழம்-70,60,50

நிர்வாக அலுவலர் , மகாராஜ நகர் உழவர் சந்தை , பாளையங்கோட்டை.

ஸ்கவுட் ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமையில் இன்று சாரல் டக்கர் பள்ளியில் சிறப்பு ஒரு நாள் பயிற்சி ...
19/10/2022

ஸ்கவுட் ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமையில் இன்று சாரல் டக்கர் பள்ளியில் சிறப்பு ஒரு நாள் பயிற்சி பட்டறை நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி தலைமை தாங்கி பயிற்சி பட்டறையை தொடங்கி வைத்தார். இதில் ஸ்கவுட் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து ஸ்கவுட் துறை வல்லுநர்கள் பயிற்சி அளித்தனர்.

தீபாவளி பண்டிகைக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து சிறப்பு ரயில்களிலும் நெல்லைக்கு வருவதற்கு முன்பதிவு முடிந்து காத்திர...
17/10/2022

தீபாவளி பண்டிகைக்காக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அனைத்து சிறப்பு ரயில்களிலும் நெல்லைக்கு வருவதற்கு முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் அதிக அளவில் உள்ளன. எனவே தீபாவளி பண்டிகைக்காக சென்னை, பெங்களூர், மும்பையில் இருந்து கூடுதல் சிறப்பு ரயில்களை அறிவிக்க வேண்டும் ரயில்வே மண்டல ஆலோசனை குழு உறுப்பினர்கள் தென்னக ரயில்வேக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

பாளையங்கோட்டை பெரியார் சிலை அருகே இன்று மாலை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி ப...
11/10/2022

பாளையங்கோட்டை பெரியார் சிலை அருகே இன்று மாலை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் அந்தந்த கட்சி மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரளானோர் தங்கள் கொடிகளுடன் பங்கேற்றனர் நீண்ட வரிசையில் அவர்கள் நின்றதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

வருடம் தோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கல்லூர்...
11/10/2022

வருடம் தோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில் கல்லூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அஷ்ரப் அலி மற்றும் டாக்டர் சங்கீதா ஆகியோர் தலைமை தாங்கி சுய பரிசோதனை முறை குறித்து விளக்கம் அளித்தனர் .ஏராளமான பெண்கள் பங்கேற்றனர்.

Address

Tirunelveli

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Nellai Post posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Nellai Post:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share