A.M. Hafeesul haq

  • Home
  • A.M. Hafeesul haq

A.M. Hafeesul haq Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A.M. Hafeesul haq, Magazine, .

15/01/2024

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு பூர்வீக வரலாறு இல்லை அவர்கள் வந்தான் வரத்தார்கள் என்று கடந்த கால...

 #இஸ்ரேலிய பயங்கரவாதிகளால்  ஷஹீதாக்கப்பட்ட பலஸ்தீனிய குழந்தைகளின் எண்ணிக்கை . -----------------------‐------------------...
10/11/2023

#இஸ்ரேலிய பயங்கரவாதிகளால் ஷஹீதாக்கப்பட்ட பலஸ்தீனிய குழந்தைகளின் எண்ணிக்கை .
-----------------------‐-------------------------------------------------
(ஒக்டோபர் 07 தொடக்கம் நவம்பர் 08 வரை )

* காஸாவில் இதுவரைக்கும் ஷஹீதாக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மொத்தமாக = 4324

*கட்டிட இடிபாட்டில்னுள் சிக்கி மீட்கப்படாத குழந்தைகள் =1350

* கைகுழந்தைகள் =133

*மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் = 482

* 4 வயது தொடக்கம் 5 வயது வரையிலான குழந்தைகள் =344

* 6 வயது தொடக்கம் 12 வயது வரையிலான குழந்தைகள் =1042

* 13 வயது தொடக்கம் 17 வயது வரையிலான குழந்தைகள் =664

தகவல்
காஸா சுகாதார மையம்

23/10/2023
காஸா
23/10/2023

காஸா

Palestine 🇵🇸
23/10/2023

Palestine 🇵🇸

அல்ஜசீரா ஊடகத்தை பயங்கரவாதிகளாக காட்டும் ஐரோப்பிய நாடுகள். * உலகின் இரண்டாவது பெரும்பான்மையைக் கொண்ட முஸ்லிம் சமூகம் எதி...
23/10/2023

அல்ஜசீரா ஊடகத்தை பயங்கரவாதிகளாக காட்டும் ஐரோப்பிய நாடுகள்.

* உலகின் இரண்டாவது பெரும்பான்மையைக் கொண்ட முஸ்லிம் சமூகம் எதிர்வுகொள்ளும் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவரும் அரபு ஊடகம்.

* காஸா பிரச்சினை சம்பந்தமாக ஆதாரபூர்வமான களதகவல்களை வெளியிட்டமைக்கு இஸ்ரேல் தடை விதித்துள்ளது.

இது எமது சமூகத்தின் ஊடகம் ஆதரிப்போம்.

09/10/2023
காஸா அப்டேட் 😭😭😭👉இஸ்ரேலிய வான்தாக்குதலால் இதுவரைக்கும் 436 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 👀 அப்பாவி  குழந்தைகள் 91 பெண்கள்  61...
09/10/2023

காஸா அப்டேட் 😭😭😭

👉இஸ்ரேலிய வான்தாக்குதலால் இதுவரைக்கும் 436 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

👀 அப்பாவி குழந்தைகள் 91
பெண்கள் 61

👉இதுவரைக்கும் காயமடைந்தவர்கள் 2271

👀 குழந்தைகள் 244
பெண்கள் 151 உட்பட ஏனையவர்கள் 2271 பேர்.

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்  #இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை ====================================பாகிஸ்தானின் ம...
05/08/2023

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் #இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறை
====================================

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்ற குற்றத்திற்காக பாகிஸ்தான் விசாரணை நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளது

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் , பாகிஸ்தானின் முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் கடந்த 2018 முதல் 2022 வரை பாக்கிஸ்தானின் பிரதமர் பதவியில் இருந்த காலப் பகுதியில் தனது பிரதம மந்திரியை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, வெளிநாடுகளுக்குச் சென்றபோது கிடைத்த பரிசுப் பொருட்களையும், 140 மில்லியன் பாக்கிஸ்தான் ரூபாய் ($635,000) மதிப்புக்கும் அதிகமாக அரசு உடைமைகளை விற்பனை செய்ததாக குற்றம்சாட்டப்பட் நிலையில்

தனக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வரும் போது காரில் வைத்து இம்ரான்கான் கான் கைது செய்யப்பட்டதாக இம்றான் கானின் வழக்கறிஞர் தகவல் வெளியீட்டுள்ளார்.

தமிழில்
As-sheikh Hafeesul haq (Fathih institute for Higher Education)

That is a real fact of  Situation in srilanka
05/08/2023

That is a real fact of Situation in srilanka

இந்தியாவின் மணிப்பூர் உரிமைப் போராட்டத்தை அடுத்து வெடிக்கும் ஹரியானா வண்முறை. =====================================பா.ஜ....
04/08/2023

இந்தியாவின் மணிப்பூர் உரிமைப் போராட்டத்தை அடுத்து வெடிக்கும் ஹரியானா வண்முறை.
=====================================

பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் ஏற்கெனவே பழங்குடியல்லாத மற்றும் பழங்குடி சமூகத்துக்கிடையே மூன்று மாதங்களாக வன்முறை நடந்துகொண்டிருக்கும் நிலையில் தற்போது பா.ஜ.க ஆளும் இன்னொரு மாநிலமான ஹரியானாவில் மேவாத் மாவட்டத்தில் உள்ள நூஹ் பகுதியில் கடந்த திங்கட்கிழமை கலவரம் வெடித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பா.ஜ.க மாவட்டத் தலைவர் கார்கி கக்கார் என்பவரால் தொடங்கிவைக்கப்பட்ட #விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் பேரணியில் திடீரென இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் இதுவரைக்கும் ஆறு பேர் கொல்லப்பட்துடன் பலர் காயமடைந்துள்ளனர். மேலும் ஏராளமான கடைகள், வாகனங்கள், மசூதிக்கும் தீவைக்கப்பட்டுள்ளதுடன்
இதுவரைக்கும் 176பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது நிலமை கட்டுக்குள் உள்ளதாகவும் மேவாத் பகுதியில் துணை ராணுவம் மற்றும் ஐ.ஆர்.பி.யின் நிரந்திர பட்டாலியனும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் ஹரியானா துணை முதலமைச்சர் துஷ்யந்த் சௌதாலா தெரிவித்துள்ளார்.

தகவல்
A.M.Hafeesul haq

காசா விவசாயிகளினால்  #அத்தீன்பழம் அறுவடை செய்யும் காட்சிகள்.
04/08/2023

காசா விவசாயிகளினால் #அத்தீன்பழம் அறுவடை செய்யும் காட்சிகள்.

It's wonderful moment  With loved ones.
01/08/2023

It's wonderful moment With loved ones.

No one is coming to save you. This life is 100% your responsibility.
27/07/2023

No one is coming to save you.
This life is 100% your responsibility.

https://youtu.be/sNaS3fyrktkஆஷுரா நோன்பின் சிறப்பம்சங்கள். அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் (பாதிஹி )
27/07/2023

https://youtu.be/sNaS3fyrktk

ஆஷுரா நோன்பின் சிறப்பம்சங்கள்.

அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் (பாதிஹி )

இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு.
22/07/2023

இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு பூர்வீக வரலாறு இல்லை அவர்கள் வந்தான் வரத்தார்கள் என்று கடந்த கால...

"My personal Journey...From Pessimism to Optimism' it was never Easy..!Learning how to think positively instead of negat...
22/07/2023

"My personal Journey...From Pessimism to Optimism' it was never Easy..!

Learning how to think positively instead of negatively can be hard, becoming someone who sees the best in everything can lead to new experiences and a healthier existence.

Few tips might be helpful 🙂

BE GRATEFUL

Learning to be grateful for all you have in life is fundamental to becoming a positive thinker.

ELIMINATE DRAMA

Eliminating drama from your life starts from ditching the people who start drama about everything and everyone under the sun.

SURROUND YOURSELF WITH SUPPORTIVE PEOPLE

Your friends are either there for you or not. Choose the people you let into your life wisely.

TAKE RESPONSIBILITY

You also have to take responsibility for the things that sometimes go wrong in your life and make the decision that YOU can change it for the better.

BE KIND

Being kind to others will generate positive feelings for you and the person you are being kind to.

SET “ME” TIME

Sometimes we need time to just slow down and become absorbed within our own thoughts. This can be through meditation, yoga, music, going for a walk, fishing, etc…

HAVE FUN

An obvious way to eliminate negative thinking is to have fun. Having fun leads to laughter, excitement, and enjoyment.

LEARN TO FORGIVE

It takes a strong person to give forgiveness for something. What’s done is done and in the past and that’s where it deserves to remain.

THINKING THE GLASS IS HALF FULL (NOT HALF EMPTY)

Whatever happens in life treat it as being for the better and not for the worse. If you are having a bad day, flip your thought process to what has happened that day
was good.

STOP OVER THINKING

As long as you are doing something to improve yourself for the better don’t spend energy worrying about what is to come.

FINALLY... "Life is to Live, Love, Laugh, Listen & Learn Forever

யூத தேசம் உருவான வரலாறு
12/07/2023

யூத தேசம் உருவான வரலாறு

இன்று யூதர்கள் பலஸ்தீனின் பூர்வீக குடிகள் நாங்கள்தான் எங்களுடைய வரலாறு 400 வருடங்கள் பழமை வாய்ந்து என்று சொல்ல.....

11/07/2023

சுப்ஹானல்லாஹ்!

அல்லாஹ்வின் வல்லமையை பறைசாட்டும் அத்தாட்சிகள்.

இஸ்ரேலின்  தலை நகர் தெல்லபீபில் நெதன்யாகுவின் அரசுக்கு எதிராக தொடர்ந்தும் மக்கள் போராட்டம்.
11/07/2023

இஸ்ரேலின் தலை நகர் தெல்லபீபில் நெதன்யாகுவின் அரசுக்கு எதிராக தொடர்ந்தும் மக்கள் போராட்டம்.

இது ஒடுக்கப்பட்ட  ஒரு சமுகத்தின் குரல்.
06/07/2023

இது ஒடுக்கப்பட்ட ஒரு சமுகத்தின் குரல்.

மாஷா அல்லாஹ் ❤அமெரிக்காவில் முதலாவது ஹிஜாப் அணிந்த நீதிபதி =====================================அமெரிக்காவின் நியூ ஜெர்ச...
31/03/2023

மாஷா அல்லாஹ் ❤

அமெரிக்காவில் முதலாவது ஹிஜாப் அணிந்த நீதிபதி
=====================================

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தின் உச்ச நீதிமன்றத்தின் முதலாவது ஹிஜாப் அணிந்த நீதிபதியாக அமெரிக்க வழக்கறிஞர் நதியா காஃப் நியமிக்கப்பட்டுள்ளார்.

News DetailsHH the Amir Sheikh Tamim bin Hamad Al Thani issued yesterday the Amiri Decision No. (12) of 2023 establishin...
21/02/2023

News Details

HH the Amir Sheikh Tamim bin Hamad Al Thani issued yesterday the Amiri Decision No. (12) of 2023 establishing and organizing International Media Office.

HH the Amir also issued the Amiri decision No. (13) of 2023 establishing the organizing committee for the 21st Asian Games - Doha 2030.

The decisions are effective starting from their date of issue, and are to be published in the official gazette.

مع  يازن و محمود
19/01/2023

مع يازن و محمود

தொடர் -15நவீன மருத்துவத்தின் தந்தை    #அலி இப்னு சீனா.  (Father of the modern medicine )--------------------------------...
20/12/2022

தொடர் -15

நவீன மருத்துவத்தின் தந்தை #அலி இப்னு சீனா. (Father of the modern medicine )
---------------------------------------------------------------------------
Article by :-
As sheikh Hafeesul haq
(Fathih institute of Higher Education)

மத்திய காலத்தில் மருத்துவக் கலை வளர்ச்சி உச்சத்தை தொடுவதற்கு காரணமாக அமைந்தவர் அலி இப்னு சீனா . அவிசென்னா என்று ஐரோப்பியரால் அழைக்கப்படும் இவர் கி.பி.980 ம் ஆண்டு மத்திய ஆசியாவில் உள்ள பல்கு என்ற மாகாணத்தில் அப்ஸானா என்ற சிறிய கிராமத்தில் பிறந்தார். தற்போது இம்மாகாணம் சோவியத் ரஷ்யாவில் உள்ளது. அபூ அலீ அல் சீீனா என்பதே இவரின் முழுப்பெயர்.

இளமையிலேயே அறிவுத்திறன் மிக்கவராக விளங்கிய இவர் தனது 10வது வயதில் திருக் குருஆன் முழுவதையும் மனனம் செய்தார். இஸ்லாமிய சட்டக்கலையையும் அரபு இலக்கியத்தையும், இந்திய தூய கணிதத்தையும் இளமையிலே கற்று தேர்ந்தார். அக்காலத்தில் சிறந்த தத்துவ ஞானிகளுல் ஒருவராக விளங்கிய அபூ அப்துல்லாஹ் அல் நதீலி என்பவரிடம் கிரேக்க மெய்யியல்
அளவையியல் , வானியல் போன்றவற்றை கற்றார். இஸ்மாயீல் ஸாகித் என்பவரிடம் ஆத்மீக ஞானத்தையும் இப்னு அல் கும்ர் ஈஸா இப்னு யஹ்பா ஆகியோரிடம் மருத்துவக் கலையையும் கற்றார்.

தனது 17வது வயதில் திறன்வாய்ந்த வைத்தியராக நாடெங்கும் புகழ் பெற்றிருந்தார். ஒரு சமயம் புகாராவை ஆட்சி செய்த அரசர் இரண்டாம் நூஹ் இப்னு மன்ஸூர் (976-997) திடீரென நோயுற்றார். அரச மருத்துவர்கள் நம்பிக்கை இழந்து எவ்வளவோ முயன்றும் மன்னரை குணப்படுத்த முடியாமல் போனபோது. இறுதியில் இளவயதாக இருந்த இப்னு ஸீனா அழைக்கப்பட்டார். மன்னரின் நோயை அவதானித்து தகுந்த மருந்தை கொடுத்தார். எல்லோரும் ஆச்சரிப்படும் வகையில் குணப்படுத்தினார். இதன் காரணமாக அவரின் புகழ் அரசவையிலும் அயல்நாடுகளிலும் பரவ ஆரம்பித்தது. மன்னரின் சொந்த நூலகத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்கு விசேட அனுமதியும் அவருக்கு வழங்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அரிய பல கையெழுத்து பிரதிகளைக் கொண்டிருந்த இந்நூலகம் துருக்கிய வீரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.

இவருடைய தந்தை அப்துல்லாஹ் புஹாராவில் சாமானிய அரசர்களின் அரசாங்கத்திலேயே வரி சேகரிப்பாளராக கடமையாற்றினார். இவர் மரணமடைந்த பின்னர் இப்னு சீனா மஃமூனிய மன்னர்களின் ஆட்சியின் கீழிருந்த கவாரிஸ்ம் எனும் பிரதேசத்திலுள்ள கோர்கான்ஜ் நகருக்குச் சென்றார். அங்கு அல் பிரூனி, அபூ ஸஹ்ல் மஸீஹி போன்ற அறிஞ்ஞர்களின் தொடர்புகள் அவருக்கு கிடைத்தது. இதே சமயத்தில் மஹ்மூத் கஸ்னவி (998-1030) களில் தமது வெற்றிகளை நாடெங்கும் பரப்பிக் கொண்டிருந்தார். அந்த சமயம் அறிஞர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், போன்றவர்கள்மீது அக்கறை கொண்டிருந்த மஹ்மூத் கஸ்னவீ கோர் கான்ஜ் நகரத்தில் வாழ்ந்த அல் பிரூனி அபுல் கைர், அபு ஸஹ்ல் மஸீஹி, இப்னு சீனா, அபூ நஸ்ர் அர்ராக் போன்ற அறிஞ்ஞர்களை கேள்வியுற்று அவர்களை அரசவைக்கு அனுப்புமாறு கவாரிஸப் பிரதேச ஆட்சியாளர்களுக்கு கடிதம் ஒன்றையும் எழுதிருந்தார். அங்கு போக விரும்பாத இப்னு சீனா மற்று அபூ ஸஹ்ல் மஸீஹி ஆகிய இருவரும் கோர்க்கான்ஜ் நகரைவிட்டு குர்கான் எனும் நகருக்கு சென்றார்கள். அங்கு காபூஸ் இப்னு வஸ்ம்கிர் என்பவர் ஆட்சி செய்து கொண்டிருந்தார். இங்கு சில காலம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் நூல்கள் எழுதுவதிலும் மாணவர்களுக்கு மருத்துவம் கற்றுக் கொடுப்பதிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

குர்ஆன் நகரில் இவர் வாழ்ந்து கொண்டிருந்த போதுதான் காபூசின் மருமகன் என்னவென்று தெரியாத புதுவித நோயினால் பாதிப்புற்றிருந்தார் அரசவை மருத்துவர்கள் எவ்வளவோ முயன்றும் அவருடைய நோயை அவர்களால் குணப்படுத்த முடியவில்லை. இறுதியில் இப்னு சீனாவை அழைத்தனர். நோயாளியை நன்கு பரிசோதித்த அவர் நோயாளியின் நாடித்துடிப்பை அவதானித்துக் கொண்டே குர்கான் நகரத் தெருக்களின் பெயர்களைக் கூறுமாறு அங்கிருந்த ஒருவரைக் கேட்டுக் கொண்டார்.

ஒரு குறிப்பிட்ட தெருவின் பெயர் கூறப்பட்ட போது அத்தெருவைச் சேர்ந்த வீடுகளின் பெயர்களையும் ஒரு குறிப்பிட்ட வீட்டின் விபரம் சொல்லப்பட்டபோது அவ்வீட்டில் உள்ளோர் பெயர்களையும் சொல்லுமாறு கேட்டார். ஒரு குறிப்பிட்ட பெண்ணின் பெயர் சொல்லப்பட்டபோது உண்டான நோயாளியின் உணர்சி பிரதிபலிப்பையும் நாடி துடிப்பில் ஏற்பட்ட மாற்றத்தையும் அவதானித்த இப்னு சீனா அப்பெண்ணை உடனே அழைத்துவரும்படி கூறினார்.
அப்பெண் அரண்மனை வந்ததும் காதலே நோய்க்கு காரணம் என்றும் இவர்கள் இருவரையும் இணைத்து வைப்பதே இதற்கான சிகிச்சை என்றும் கூறினார். அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்ததன் மூலம் அந்த இளைஞ்சரின் பிணியைக் குணப்படுத்தினார்.

குர்கான் அமீர் பதவியிலிருந்து நீக்கப்பட்டு கொல்லப்பட்டதன் பிற்பாடு இப்னு சீனா அந்நகரை விட்டு ராய் என்னும் ஊருக்குச் சென்றார். அங்கே இளவரசி ஸையிதா ஸீரின் என்பவரின் ஆலோசகராக பதவியேற்றார். சுமார் மூன்று வருடங்கள் அங்கே பணியாற்றிய பின்னர் ஹம்தான் நகருக்குச் சென்று அங்கு இடம்பெற்ற அரசியற் புனட்சியை அடுத்து இஸ்பஹான் நகருக்குச் சென்றார். அங்கே இஸ்பஹான் இளவரசர் அலாஉத் தெளலா இவரைப் ஆதரித்ததோடு இவரை முதலமைச்சராகவும் ஆக்கி கெளரவித்தார்.இங்கே இவருக்கு இரண்டாம் அரிஸ்டோடில், இரண்டாம் கல்லன் ,ஹுஜ் ஜதுல் ஹக் ( உண்மையை நிருபிப்போர்) ஷெய்குல் ரயீஸ் ( பெரும் தலைவர்) முதலான பட்டங்களை அறிஞர்கள் சூட்டி பெருமைப் படுத்தினர்.

இப்னு சீனா தமது 21ம் வயதில் நூல்களை எழுத ஆரம்பித்தார். இவர் எழுதிய நூல்களின் எண்ணிக்கை 980 நூல்கள் என்று புரோக்கல்மேன் (Brockel mann) என்பவர் குறிப்பிடுகின்றார்.இவற்றுள் 68 நூல்கள் சமயம் ,பெளதீக வதீதம் ( Mstaphysics) பற்றியவை. 8நூல்கள் வானியல், மெய்யியல், பெளதீகவியல் பற்றியவை. நான்கு கவிதை நூல்கள் 17நூல்கள் மருத்துவம் பற்றியவை. இவர் தமது நூல்களை அரபு மொழியில் எழுதினார்.இரண்டு நூல்கள் மட்டும்தான் தாய் மொழியான பாரசீக மொழியில் எழுதியுள்ளார். இவர் இஸ்பஹானில் வசித்தபோது எழுதிய 'அல் மஜ்முஆ ' எனும் பல்களைக் களஞ்சியம் அவரின் அறிவின் ஆழத்தை காட்டத்தக்கதாய் அமைந்துள்ளது.

இவர் எழுதிய மருத்துவ நூல்களுள் கானூன் பித் திப் (மருத்துவ விதிகள்) எனும் நூல் ஐரோப்பியரிடம் மிகுந்த புகழ்பெற்ற ஒரு நூலாகும். இந்நூலை இவர் கஸ்பியன் கடலுக்கு அருகில் உள்ள ஜோர் ஜியா எனும் நகரில் வாழ்ந்த போது எழுதினார். மருத்துவ விதிகளையும் சுல்லன் ,அர் ராசி ஆகியோரின் மருத்துவக் கோட்பாடுகளையும் விளக்கும் இந்நூல் ஐந்து பாகங்களைக் கொண்டது.

முதற்பாகம்உடலமைப்பியல்,நோய்கள் ,நோய்காரணிகள்.(Aetiology) குழந்தை நலம், வயோதிபர் நலம்,(Geriatics) பருவகால நோய் சிகிச்சை முறைகள் போன்றவை பற்றி விளக்குகிறது. இரண்டாவது பாகத்தில் மருந்தியல் விபரிக்கப்பட்டுள்ளது. இப்பாகம் 760 வகையான மருந்துகளைப் பற்றி விரிவான விபரங்களைக் கொண்டுள்ளது. மூன்றாவது பாகம் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரை ஏற்படக்கூடிய நோய்கள் பற்றியும் அவற்றிற்கு அளிக்கப்படவேண்டிய சிகிச்சை முறைகள் பற்றியும் வகபரிக்கின்றது. நான்காவது பாகம் பல வகைப்பட்ட காச்சல்கள் ,குஷ்டம்,எலும்பு முறிவுகள், மூட்டுக்களின் இடப்பெயர்சிகள்,புண்கள், உணவு நஞ்சாகுதல், விசர் நாய்கடிகள், போன்ற பொதுவான நோய்கள் பற்றியும் சத்திர சிகிச்சை, அழகுபடுத்தும் கலை போன்றவை பற்றியும் விளக்குகிறது. ஐந்தாவது பாகம் மருந்துகள் தயாரித்தல் அவற்றின் அளவைகள் பற்றியும் விபரிக்கின்றது.

பழமைவாய்ந்த இப்பெரும் நூலில் உடலின் உட்புறத்தே அமைந்துள்ள கானில் சுரப்பிகள் சுரக்கத் தூண்டும், உட்சுரப்பிகள் ( Hormones) அளவைச் சுரக்காமல் அதிகமாகவும் குறைவாகவும் புரப்பதனால் பலவகையான நோய்கள் உண்டா என்ற உண்மையும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நுரையீரல் இறைச்சி செங்கண்மாரி , தோல் நோய்கள், ஆண்-பெண் பாலுறவுகளில் ஏற்படும் நோய்கள் நரம்பு நோய்கள் போன்ற அண்மைக்கால மருத்துவ மேதைகளின் தீவிர கவனத்தைப் பெற்றுள்ள நோய்களைப் பற்றியும் நோய்கள் பரவும் விதம் நோய் நிதானம் காணும் முறைகள் போன்ற விடையங்களைப் பற்றியும் இது விளக்குகின்றது.

இந்நூல் 12ஆம் நூற்றாண்டில் கிரிமோனை நகரைச் சேர்ந்த ஜிரார்ட்(Gerard) என்னும் இத்தாலியரால் இலத்தின் மொழியில் மொழிபேர்க்கப்பட்டதோடு 1-2 ஆம் நூற்றாண்டு முதல் 17ம் நூற்றாண்டு வரை மருத்துவ விரிவுரைகளின் அடிப்படை என்ற வகையில் சென்ட் லூயிஸ், மொன்ட் பெல்லியர் போன்ற ஐரோப்பிய நகரங்களில் இருந்த பல்கலைக்கழகங்களில் மருத்துவப்பாடமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது இலத்தீன் மொழி, கிபுறு மொழி போன்றவற்றிலும் வெளிவந்தன. 16நூற்றாண்டில் இந்நூல் 20க்கும் அதிகமான பதிப்புகள் வெளிவந்தது. அதிலும் குறிப்பாக ஜேர்மன் மொழியிலும் , 1593 முதல் முதலாக அரபு பதிப்பு ரோம் நகரிலும், 1874 இல் கெய்ரோ நகரிலும் அச்சிட்டு வெளியீடப்பட்டது. 17ம் நூண்டாண்டின் இறுதிவரை இந்நூல் அச்சிட்டு மேலைத்தேய மருத்துவர்களாலும் மக்களாலும் விரும்பி வாசிக்கப்பட்டது.

மாக்ஸ் மேரூப் என்பவர் ''உலகில் வேறு எந்த மருத்துவ நூலும் இதைப்போல் அளவுக்கு அதிகமாக மக்களால் வாசிக்கப்படவில்லை'' என்றும் அதேபோல் Dr வில்லியம் ஒஸ்லர் (Dr.William Osler) என்பவர் இந்நூலைப்பற்றி கூறுகையில் மருத்துவ உலகின் வேதமாக நெடுங்காலம் போற்றப்பட்ட நூல் இதனைத் தவிர வேறில்லை'' என்று கூறுகிறார். அதேபோல் பிரிவைட் ஒர்ட்டன் என்பவர் கூறுகின்றார் ' உண்மையில் இது மருத்துவர்களின் வேதமாகவே இருந்தது எனக் கூறுகின்றார்.

இவர் ஹம்தான் நகரில் வாழ்ந்த போது எழுதிய நூலே கிதாபுஸ்ஷிபா (சிகிச்சை நூல்) இதை 1022 இல் தினந்தோறூம் ஐம்பது பக்கங்கள்வீதம் எழுதி முடித்தார். இந்நூல் மருத்துவ நூல் மாத்திரமல்லாது உளவியல் நூலாகவும் இருந்து வருகின்றது. இது 18பாகங்களைக் கொண்ட ஒரு கலைக் களஞ்சியம் என்று கெறப்படுகின்றது.

இவர் எழுதிய மற்றுமொரு நூல்தான் அர் ஜுஸா பித்திப்பி (மருத்துவக் கவிதை ) என்பது. கானுன் பித்திப்பியிலுள்ள கருத்துக்களின் சுருக்கம் கவிதை உருவில் தரப்பட்டுள்ளது. அதேபோல் அதவியதுல் காலிபா என்பதும் மற்றுமொரு நூலாகும். உள்ளது நோய்களுக்கான மருந்துகளும் சிகிச்சை முறைகளும் இந்த நூலில் விளக்கப்பட்டுள்ளன. உள-மருந்தியல் (Psycho-Pharms cology) பற்றி அக்கால மருத்துவ உலகில் எழுதப்பட்ட முதல் நூல் இதுவாகும். இவர் எழுதிய கவானின் (சட்டங்கள்) ஹுதுத் அல் திப்பி ( மருத்துவத்தின் வரைவிலக்கணங்கள் ) போன்ற சிறு நூல்களும் இங்கு குறிப்பிடத்தக்கவை. இவை தவிர வயிற்றுவலி உடலுக்கும் உள்ளத்திற்கும் உள்ள தொடர்பு , கனவு களின் பொருள், நாடித்துடிப்பு என்பதுபற்றியும் சிறு நூல்கள் எழுதியுள்ளார்.

இப்னு சீனாவின் நூல்கள் பல நூற்றாண்டுகள்வரை அறிஞ்ஞர்களிடம் ஆதிக்கம் செலுத்திவந்தது. மேலைத்திய நாட்டுப் பல்கலைக்கழகம் மட்டுமன்றி இஸ்பஹான்,தில்லி, பக்தாத் கெய்ரோ, மொரோக்கோ. போன்ற கீழைத்தேச நாடுகளிலும் நிறுவப்பட்டிருந்த கல்லூரிகளிலும் இவை பாட நூல்களாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இவர் பாரசீக முஸ்லிமாக இருந்தும் சில கவிதைகளையும் இரண்டு நூல்களையும் தவிர ஏனை நூல்களை அரபு மொழியிலேயே எழுதினார். இறத்குக்காரணம் அக்கால உலகில் (மேலைத்தியம் உட்பட) அரபு மொழி அறிவியல் மொழியாக இருந்தது. இவருடைய அழகாகன கையெழுத்துப் பிரதிகள் பல பிரித்தானியா நூதனசாலைகளில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வேறு சில கையெழுத்துப் பிரதிகள் ஐரோப்பிய நூல்நிலையங்களில் கானப்படுகின்றது.

தொற்றுநோய் கொள்கையை முதன் முதலில் மருத்துவ உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமை இப்னு சீனாவையே சாரும். நீராலும் மண்ணுக்கு சில நோய்கள் பரவுகின்றன என்ற உண்மையையும் கண்டுபிடித்தார். இதுபற்றி கானூன் பித்திப் என்ற நூலில்கூட விபரித்துள்ளார். முதன்முதலில் ஐந்தாவது மண்டை நரம்பில் ஏற்படும் வலி பற்றி (Trigeminal Neruarlgia) விபரித்த பெருமையும் இவரையே சாரும். முகத்தசையில் ஏற்படும் சோர்வாதத்தை (Facial Paralysis) மைய நரம்பு மண்டலத்தோடு சம்பந்தப்பட்டது (Central) சுற்யன் நரம்பு மண்டலத்தோடு சம்பந்தப்பட்டது (Peripheral) என்று இருவகைப்படுத்தி விளக்கினார்.
மூளைச்சரும வளர்ச்சி (Meningitis) பற்றியும் அதன்பல்வோறு வகைப்படுத்தப்பட்ட நோய் நிதானம் பற்றியும் சிறந்த விளக்கத்தை எழுதினார். அதேபோல் புடைச்சாய்வு நோய் (Pleurisy)பற்றியும் பில்காசியேசிசு (Bil harziasis) எனும் நோயை நிதானம் கானும் வகை பற்றியும் விபரித்தார். மலோரியா நோய்பற்றியும் சரியான தரவுகளையும் தனது நூலில் எழுதிருந்தார்.

இவர் வைத்தியராக மட்டுமின்றி அறுவை சிகிச்சை வைத்திய நிபுணராகவும் புகழ் பெற்றிருந்தார். மூச்சுக் குழற் றெடுவையைப் பிளந்து குழாய் செலுத்தி சிகிச்சை செய்யும்முறை (Trecheotomy) இவரே முதன் முதலில் கண்டுபிடித்தார்.மிருகங்களின் தோல்களாலும் வெள்ளியாலும் செய்யப்பட்ட புகுத்தியை (Syringe) பயன்படுத்தி மருந்துக்களை உடம்பில் புகுத்தி ஏற்றிய முதல் மருததுவரும் இவரே. சிறுநீர்ப் பையில் அறுவை வைத்தியம் செய்ததோடு பிரசவ வேளையில் அறுவை வைத்தியம் செய்வதும் அறிந்திருந்தார். கடின பிரசவத்தின்போது யோனி மடலில்னூடாக கையை நுழைத்து நிலை பிறழ்ந்திருக்கும் குழந்தையை ஒழுங்கான நிலைக்குத் திருப்பிவிடும் (Internal Version) முறையையையும் சாவனத்தால் குழந்தையை வெளியே எடுக்கும் (Forceps delivery) முறையையும், வைற்றையையும் கருப்பையையும் பிளந்து குழந்தையை எடுக்கும் ( Cresarian section) முறையையையும் இவர் அறிந்திருந்தார். பிற உயிரினங்களில் இருந்து நரமபு, தோல் தசை போன்ற உறுப்புக்களை பெயர்த்தெடுத்து மனித உடலில் ஒட்டவைக்கும் (Transplantation )அறுவை சிகிச்சை முறையையும் கையாண்டுள்ளார். தனது கானூன் பிதிப்பி எனும் நூலில் உறுப்புக்களை வெட்டி அகற்றுதல் (Amputaion) நாளத்தை வெட்டி குருதியை வெளியேறுறுதல் (Venesection) நாளத்தில் ஊசியால் துளையிட்டு குருதியை வெளியேற்றுதல் (Venepuncture) பெருங்குடலை கழுவுதல் (E***a) போன்ற சிகிச்சை முறைகளைப்பற்றியும் எழுதியுள்ளார். அறுவை சிகிச்சையின்போது கொடுக்கப்படும் உணர்சி நீக்கிகளைப் (Anaesthetics) பற்றியும் விபரித்துள்ளார்.

இப்னு சீனா கண்ணியல் துறையிலும் போதிய பரிச்சயம் பெற்றிருந்தார். கண்ணின் அமைப்பு, தொழிற்பாடு, நோய்கள் சிகிச்சை முறை போன்ற விடையங்களில் கூறியுள்ளார். கண்ணிலிருந்து ஒளி பிறக்கிறது அதன்காரணமாகவே பறப்பொருட்களைப் பார்க்க முடிகிறது என்றும் அக்கால மருத்துவ மேதைகள் நம்பிவந்தனர். இக் கருத்தை முற்றாக மறுத்த இப்னு சீனா வெளியிலிருந்து ஒளி கண்ணுக்குள் ஊடுருவிச் செல்வதனாலையே புறப் பொருட்களை பார்க முடிகிறது என்ற கருத்தை வெளியிட்டார். அதேபோல் ஒளியின் தாக்கத்தால் கண்மணி சுருங்குதல், கண்ணின் அசைவுக்கு காரணம் ஆறு தசை நார்கள் ,பார்வை நரம்புகள் முதலியவை பற்றி தெளிவாக விளக்கியுள்ளார்.

மேலும் இவர் ஹோமியோபதி வைத்திய முறையில் கொடுக்கப்படும்நோய்குறிகளோடு தொடர்புள்ள ஒற்றுமை மருந்துகளைப்பற்றியும் சிறிதளவு விளங்கியுள்ளார். பாம்பின் விஷத்தில் மருந்து தயாரிக்க முடியும் என்பதை முதன்முதலில் கண்டுபிடித்த பெருமை இவரையே சாரும். மனநோய் மருத்துவத் துறையிலும் பரிச்சயம் பெற்றிருந்தார். பல புதிய முறைகளைக் கையாண்டு எண்ணற்ற மன நோயாளர்களைக் குணப்படுத்தினார். இவர் கையாண்ட முறைகள் தற்கால மனநோய் வைத்தியத்திலும் கையாளப்படுகின்றது.

இவ்வாறு மத்திய கால மருத்துவக் கலைக்கு அரும்பணி ஆற்றிய இப்னுஸீனாவை தற்கால மருத்துவத்தின் தந்தை (Father of modern medicine) என்று ஐரோப்பியர் அழைக்கின்றனர்.

இவரைப்பற்றி பேராசிரியர் ஜோர்ஜ் சார்ட்டன் என்பவர் தமது விஞ்ஞான வரலாற்றுக்கோர் அறிமுகம் என்ற நூலில் கூறுகையில் ''இவர் மிகுந்த புகழ்பெற்ற விஞ்ஞானி இவர் எல்லா இனத்திற்கும் எல்லா நாட்டிற்கும் எல்லா காலத்திற்குமுரிய ஒரு பெரும் மருத்தூவர்''

ரொம் லண்டோ (Rom Landow) என்பவர் தமது ''இஸ்லாமும் அரேபியர்களும் '' (Islam and Arabs) நூலில் இப்னுஸீனா வரலாற்றிலே ஆயிரம் ஆண்டுகளாகப் பெரும் தத்துவஞானிகளுள் ஒருவராகவும் மருத்துவமேதைகளுள் ஒருவராகவும் வாழ்ந்தவர் என்று கூறுகிறார்.

இத்தகைய பெருமைக்குரிய ஒருவராக வாழந்த இப்னு சீனா கி.பி 1097 ரமழான் மாதம் தொழுதுகொண்டிருந்தபோது மரணித்தார். இவருடைய கல்லறை சோவியத் ரஷ்யாவிலுள்ள ஹமதான் எனும் நகரில் இருக்கின்றது. 1919 இல் இக்கல்லறை புனித சமாதியாகவும் அங்கிருந்த கட்டிடம் கல்வி நிலையமாகவும் திகழ்ந்தது. கிரேக்க மருத்துவமேதையான ஹிப்போ கிரேதிஸோடும் ஒப்பிடத்தக்கவகையில் மருத்துவத்துறையில் பல நூற்றாண்டுகளாக செல்வாக்குப் பெற்றிருந்த இம்மருத்துவ மேதையை பெருமைப்படுத்தும் பொருட்டு இக்கல்லறையில் உயர்ந்த கோபுரம் ஒன்றும் நூலகம் ஒன்றையும் இணைத்து 1954 இல் திருந்தி அமைக்கப்பட்டது.

1951 இல் இப்னு சீனா பிறந்து ஓராயிரம் ஆண்டு பூர்த்தி விழா ரஷ்யா உள்ளிட்ட பலநாடுகளில் கொண்டாடப்பட்டது. இக்கொண்டாட்டத்தின்போது பாரசீகம் என்று பண்டைய பெயரைக்
கொண்ட ஈரானில் இப்னு சீனாவை ஞாபகமூட்டுவதற்காக முத்திரைகளும், நாணையங்களும் வெளியீடப்பட்டது. இவருடைய திருவுரப்படம் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ மண்டபத்தில் இன்றுகூட தொங்கிய நிலையில் உள்ளது.

http://hafeesu.blogspot.com/2022/10/blog-post_17.html

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். =====================================சுபஹ் தொழுகையை தொழுதுவிட்டு முகநூலை திறந்ததும்...
05/12/2022

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
=====================================
சுபஹ் தொழுகையை தொழுதுவிட்டு முகநூலை திறந்ததும் #எனது ஆசான் அஷ்ஷெய்க் பாரி (நளீமி) அவர்களுடைய புகைப்படம் வந்து தட்டியது ஆவலுடன் ஏதும் சாதனை செய்துள்ளாரா என்று பார்த்ததும்தான் தாமதம் அது அவருடைய மரணச்செய்தி என்று. மனம் ஒரு கணம் திசை மாறிவிட்டது இது உண்மைதானா என்று. (Former Lecturer of Jamiah Naleemiah. Visiting Lecture Of Fathih institute for Higher Education. & Senior Lecturer of University of Peradeniya .Ash. Sheikh M.S. Abdul Barie (Naleemi) passed away.INNA LILLAHI WA INNA ILAIHI RAJIOON.)

(History of ceylon muslims) இலங்கை முஸ்லிம் வரலாறு என்ற பாடத்தின் பெயர் பெற்ற ஒரு வரலாற்று நதி இன்றுடன் வத்திவிட்டது.அவருடைய இளப்பு இலங்கை #முஸ்லிம் சமூகத்தில் பாரிய இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

பாத்திஹ் கல்வி வரலாற்றில்
எமது வாழ்வில் முதன் முதலாக இலங்கை முஸ்லிம்களின் வரலாறு என்ற பாடத்தை எனக்கு #அறிமுகம் செய்தவர், (History of Ceylon muslims), பேராசிரியர் லோனா தேவராஜ் என்ற அறிவு மேதையை எனக்கு அறிமுகம் செய்தவர்,
வரலாற்று அனுகுமுறைகளை முதன் முதல் கற்றுக்கொடுத்தவர். History of ceylon muslims என்ற தலைப்பில் எனது YouTube பக்கத்தில் தொடர் கானொளி செய்வதற்கும் இவரே முதலாவது ஊந்துதல். இன்றுகூட A/L மாணவர்களுக்கு இஸ்லாம் பாடம் படிப்பிக்கும் போது இலங்கை முஸ்லிம்கள் வரலாறு பகுதியை தொடும்போது இவரை ஞாபகம் கூறிவிட்டுதான் பாடத்தையும் ஆரம்பிப்பேன்.... கண்ணுக்கள் வந்துபோன ஒரு சிறந்த ஆசான்.

என்னைப்போல் இன்னும் பல இஸ்லாமிய #கல்வியலாளர்களை உருவாக்கிய ஒரு #சிற்பி.
اللهم اغفر له وارحمه .....
யா அல்லாஹ் அவருடைய மறுமை வாழ்வை சிறப்புறச் செய்வாயாக. ஜன்னதுல் பிர்தெளஸ் எனும் உயர்ந்த சொர்க்கத்தை அன்னவருக்கு வாளங்கி விடுவாயாக..

அஷ்ஷெய்க் ஹபீஸுல் ஹக் (பாதிஹி )

O/L RESULTS ANALYSIS 2021 (2022) ULTIMATE STUDENTS ACADAEMY                   VARIPATHANCHENAI.இதற்கு பாடுபட்ட அனைவருக்க...
29/11/2022

O/L RESULTS ANALYSIS 2021 (2022)
ULTIMATE STUDENTS ACADAEMY VARIPATHANCHENAI.

இதற்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளும் வாழ்துக்களும். .
جزاك الله خيرا.

ஐந்து வருடத்தில் உயர்தரம் மற்றும் இஸ்லாமியத் துறையைக் கற்கும் அரியதோர் சந்தர்ப்பம்திஹாரியில் அமைந்துள்ள உயர்கல்விக்கான ப...
28/11/2022

ஐந்து வருடத்தில் உயர்தரம் மற்றும் இஸ்லாமியத் துறையைக் கற்கும் அரியதோர் சந்தர்ப்பம்

திஹாரியில் அமைந்துள்ள உயர்கல்விக்கான பாதிஹ் நிறுவனத்திற்கு 2022 ஆம் ஆண்டுக்கான புதிய மாணவர்கள் உள்வாங்கப்படவுள்ளனர்.

க.பொ.த. (சா/த) பரீட்சைக்கு தோற்றிய ஆண் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஐந்து வருடங்களைக் கொண்ட கற்கைநெறியின் முதலிரு வருடங்களில் உயர்தரப்பரீட்சைக்கும் (கலை மற்றும் வர்த்தக பிரிவுகள்) மொழிக்கற்கைகளுக்கும் மாணவர்கள் தயார்படுத்தப்படுகின்றனர். தொடர்ந்து இஸ்லாமியக் கற்கைகள் பீடத்தில் மூன்றுவருடங்கள் இஸ்லாமியத் துறையைக் கற்கின்றனர்.

அத்தோடு தகவல் தொழிநுட்பம், அரச மற்றும் அரச சார்பற்ற கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பைத் தொடர்வதற்கான வழிகாட்டல்களும் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

✳️ பாதுகாப்பான, ஆன்மீக சூழல்

✳️ உணவு, தங்குமிட வசதிகள்

✳️ நவீன மயப்படுத்தப்பட்ட வகுப்பறைகள் (Multi Media Class Rooms)

✳️ விஷேட தகவல் தொழிநுட்ப கூடம்

✳️ தலைநகருக்கு அருகே அமைந்திருப்பதால் விரும்பிய, பொருத்தமான துறைகளில் வெளிவாரிக் கற்கைகளை இலகுவாக தொடர்வதற்கான வாய்ப்புகள்

✳️ கொழும்பு - கண்டி பிரதான வீதிக்கு நெருக்கமாக அமைந்திருப்பதால் நாட்டின் எப்பாகத்திலிருந்தும் இலகுவாக போக்குவரத்தை மேற்கொள்ளும் வசதிகள்

பதிவு செய்ய விரும்புவோர் பெயர், முகவரி மற்றும் சாதாரண தரப் பெறுபேற்றை பின்வரும் *076 000 8969* என்ற இலக்கத்திற்கு வாட்ஸாப் செய்யுங்கள்.

மேலதிக தகவல்களுக்கு தொடர்பு கொள்ளுங்கள் : 0760008969/0756804690

Address


Alerts

Be the first to know and let us send you an email when A.M. Hafeesul haq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to A.M. Hafeesul haq:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share