Tamil Hidayah Media

  • Home
  • Tamil Hidayah Media

Tamil Hidayah Media best islamic bayans
(1)

துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்கள்Dr.  Amjadh Razik Madaniதுல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்கள் அல்லாஹ்வினால் எமக்களிக்கப்ப...
06/06/2024

துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்கள்

Dr. Amjadh Razik Madani

துல்ஹஜ் மாதத்தின் முதல் 10 நாட்கள் அல்லாஹ்வினால் எமக்களிக்கப்பட்ட ஓர் அறிய சந்தர்ப்பமாகும். அதன் சிறப்பம்சங்களை பின்வரும் வரிகளில் சுருக்கிக் கூறலாம்.

1- அல்லாஹ் இப்பத்து நாட்களை கண்ணியப்படுத்தி அதன் மீது சத்தியம் செய்கிறான். "விடியற் காலையின் மீது சத்தியமாக, பத்து இரவுகளின் மீது சத்தியமாக". (89: 1-2).
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்துமே இவ்வசனத்தில் நாடப்படுகின்றன என இப்னு அப்பாஸ் (ரலி), இமாம் முஜாஹித் (ரஹ்) போன்றோர் உறுதிப்படுத்துகின்றனர்.

2- அல்லாஹ் கூறுகிறான்: "(ஹாஜிகள்) தங்களுக்குரிய பலன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் எனும்) பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்)". (22:28).
இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் "குறிப்பிட்ட நாட்கள்" என்பன துல்ஹஜ்ஜின் முதல் பத்துமே என இப்னு அப்பாஸ் (ரலி) குறிப்பிடுகின்றார்கள்.

3- "ஸாலிஹான அமல்கள் செய்யப்படும் நாட்களில்; அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நாட்கள் (துல்ஹஜ்ஜின்) இந்த (முதல்) பத்து நாட்களைத் தவிர வேறெந்த நாட்களாகவும் இருக்காது" என நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் இப்னு அப்பாஸ் (ரலி) வாயிலாக அபூ தாவூத், திர்மிதீ போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் தரமான அறிவிப்பாளர்கள் தொடருடன் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

4- அதேபோன்று நபி (ஸல்) அவர்கள் நவின்றதாக இப்னு உமர் (ரலி) அறிவிக்கும்ஓர் ஸஹீஹான ஹதீஸில்:
"அமல்கள் செய்யப்படும் நாட்களில்; அல்லாஹ்விடம் மிக கண்ணியம் பொருந்தியதும், அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நாட்களாகவும் (துல்ஹஜ்ஜின்) இந்த (முதல்) பத்து நாட்களைத் தவிர வேறெந்த நாட்களும் இல்லை. ஆகையினால்! இந்த நாட்களில் நீங்கள் (லா இலாஹ இல்லல்லாஹ் என்ற) தஹ்லீலையும், (அல்லாஹு அக்பர் என்ற) தக்பீரையும், (அல்ஹம்துலில்லாஹ் என்ற) தஹ்மீதையும் அதிகமாகக் கூறி (அல்லாஹ்வை) திக்ரு செய்துகொள்ளுங்கள்". (முஸ்னத் அஹ்மத்).

5- ஹஜ் எனும் மாபெரும் கடமை இந்நாட்களில் மாத்திரமே செய்யமுடியுமா இருப்பதனால்; இஸ்லாத்தில் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பர்ளான, வாஜிபான, உபரியான அனைத்து நல்லமல்களையும் இந்நாட்களைத் தவிர வேறெந்த நாட்களிலும் (ஒட்டுமொத்தமாக) நிறைவேற்ற முடியாது.

இந்நாட்களில் எம்மால் செய்யமுடியுமான இலகுவான நல்லமல்களில் சில

1- தொழுகை:
தொழுகையின் சட்டதிட்டங்களை உரியமுறையில் பேணி பரிபூரணமாக நிறைவேற்றுதல். உபரியான தொழுகைகளில்; மற்றைய நாட்களை விட கூடிய கவனம் செலுத்துதல்.

2- நோன்பு:
உபரியான நோன்புகளை நோற்றல். குறிப்பாக துல்ஹஜ்ஜின் பிறை 9 இல் அரபா நோன்பினை நோற்றல்.

3- ஸதகா:
முடியுமான அளவு தானதர்மங்களில் ஈடுபடல்.

4- திக்ரு:
அல்லாஹ்வினை அதிகமதிகம் துதித்தல், திக்ரு செய்தல். குறிப்பாக; "லா இலாஹ இல்லல்லாஹ்" என்ற தஹ்லீல், "அல்லாஹு அக்பர்" என்ற தக்பீர், "அல்ஹம்துலில்லாஹ்" என்ற தஹ்மீத். மேலும் "சுபஹானல்லாஹ்" எனும் தஸ்பீஹ்.

5- உழ்ஹிய்யா:
துல்ஹஜ் 10 ஆம் நாள் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிந்ததன் பின்னர் "உழ்ஹிய்யா" எனும் குர்பானி கொடுக்கும் வணக்கத்தினை நிறைவேற்றல். இவ்வணக்கத்தினை ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை முடிந்த நேரம் தொடக்கம் துல்ஹஜ் 13 ஆம் நாள் மஃரிப் வரை நிறைவேற்ற முடியும்.

*- மேலும்; உறவுகளைப் பேணல், பெற்றோருக்கு பணிவிடை செய்தல், நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் போன்ற ஸாலிஹான அமல்களாக; அல்-குர்ஆனிலும் ஸஹீஹான ஹதீஸ்களிலும் எமக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அனைத்து அமல்களிலும் எமது சக்திக்கேற்ப அதிக கவனம் செலுத்துதல்.

வல்ல அல்லாஹ் எம்மனைவரின் நற்கருமங்களையும் கருணைகூர்ந்து ஏற்றுக்கொள்வானாக!

 #குடும்பத்திற்கு_ஒரு_ஆடு குர்பானி கொடுத்தால் போதுமானதா?عن أبي أيوب الأنصاري:] كانَ الرَّجلُ في عَهدِ النَّبيِّ ﷺ يُضحِّ...
04/06/2024

#குடும்பத்திற்கு_ஒரு_ஆடு குர்பானி கொடுத்தால் போதுமானதா?

عن أبي أيوب الأنصاري:] كانَ الرَّجلُ في عَهدِ النَّبيِّ ﷺ يُضحِّي بالشّاةِ عنهُ وعن أهلِ بيتِهِ .
صحيح ابن ماجه ٢٥٦٣

அபூ அய்யூப் அல்அன்சாரி ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் :
நபி( ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு மனிதர் தன் சார்பாகவும் தன் குடும்பத்தின் சார்பாகவும் ஒரு ஆட்டை குர்பானி கொடுப்பவராக இருந்தார்

ஷஹீஹ் இப்னு மாஜா :2563

ஒரு குடும்பத்தில் அதன் பொறுப்புதாரி தன் குடும்பத்தின் சார்பில் கொடுத்தால் போதுமானது என்பதை மேலுள்ள ஹதீஸ் சுட்டிக் காட்டுகிறது

ஒரே குடும்பத்தில் கடமையான ஒவ்வொருவரும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை இதை பல இமாம்களும் தீர்ப்பாக வழங்கியுள்ளனர்

قَالَ الْحَافِظُ اِبْنُ الْقَيِّمِ فِي "زَادِ الْمَعَادِ" : وَكَانَ مِنْ هَدْيِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ الشَّاةَ تُجْزِئُ عَنْ الرَّجُلِ وَعَنْ أَهْلِ بَيْتِهِ وَلَوْ كَثُرَ عَدَدُهُمْ
இமாம் இப்னுல் கைய்யூம் ரஹ் அவர்கள் கூறினார்கள் :ஒரு மனிதர் தனது சார்பிலும் தன் குடும்பத்தின் சார்பிலும் ஒரு ஆட்டை கொடுத்தால் கூடுமாகிவிடும் குடும்பத்தில் உள்ளவர்கள் அதிகமான நபர்களாக இருந்தாலும் சரியே இது நபி ஸல் அவர்கள் காட்டி தந்த வழிமுறையாகும்
நூல் : (ஸாதுல் மஆத்)

وقَالَ الشَّوْكَانِيُّ فِي "نيْلِ الأوطار" : وَالْحَقُّ أَنَّ الشَّاةَ الْوَاحِدَةَ تُجْزِئُ عَنْ أَهْلِ الْبَيْتِ , وَإِنْ كَانُوا مِائَةَ نَفْسٍ أَوْ أَكْثَرَ كَمَا قَضَتْ بِذَلِكَ السُّنَّةُ " انتهى
இமாம் ஷவ்கானி ரஹ் அவர்கள் கூறினார்கள் : ஒரு ஆடு ஒரு குடும்பத்தின் சார்பில் கொடுப்பதற்கு தகுதியானதாகும் அவர்கள் நூறு பேர் அல்லது அதைவிட அதிகமானோர் இருந்தாலும் சரியே இதுவே ஸுன்னாவில் தீர்ப்பளிக்கப்பட்ட வழிமுறையாகும்.
நூல் : (நைலுல் அவ்தார்)

وسئلت اللجنة الدائمة : هذه العائلة تتكون من اثنين وعشرين فرداً ، والدخل واحد ، والمصروف واحد ، وفي عيد الأضحى المبارك يضحون بضحية واحدة ، فلا أدري هل هي تجزئ أم أنه يلزمهم ضحيتان ؟
فأجابت
" إذا كانت العائلة كثيرة ، وهي في بيت واحد ، فيجزئ عنهم أضحية واحدة ، وإن ضحوا بأكثر من واحدة فهو أفضل " انتهى .

فتاوى اللجنة الدائمة" (11/408)

(அரபுலக மேல்மட்ட அறிஞர் குழுவின் ஃபத்வா கமிட்டியாகிய) *லஜ்னதுத்தாயிமா வில்* கேட்கப்பட்ட கேள்வியாகிறது :
இரண்டு முதல் 20 பேர் வரை உள்ள குடும்பங்கள் ஒரே வாசல் உள்ள ஒரே செலவினத்தின் கீழ் உள்ள குடும்பமாக இருந்தால் அவர்கள் பெருநாளன்று ஒரு ஆடு கொடுக்க வேண்டுமா? அல்லது இரண்டு ஆடு கொடுக்க வேண்டுமா? என தெரியவில்லை இதற்கான பதில் என்ன?

பதில்: பல பேர் சேர்ந்து ஒரே குடும்பமாக வசித்து வருபவர்கள் அவர்களுக்கு ஒரே ஆடு கொடுத்தால் போதுமானது அதைவிட அதிகமாக கொடுத்தால் சிறந்ததாகும்

*ஃபத்வா லஜ்னதுத்தாயிமா* (11:408)

JAQH முன்னாள் பேச்ச்சாளர் சகோதர்ர்- கோவை S அய்யூப் அவர்கள் சற்று முன் மரணித்து விட்டார்.இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜி...
02/06/2024

JAQH முன்னாள் பேச்ச்சாளர் சகோதர்ர்- கோவை S அய்யூப் அவர்கள் சற்று முன் மரணித்து விட்டார்.

இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன்

ஹஜ்ஜின் வகைகளும் அதனை நிறைவேற்ற வேண்டிய முறைகளும்
25/05/2024

ஹஜ்ஜின் வகைகளும் அதனை நிறைவேற்ற வேண்டிய முறைகளும்

பகிருங்கள் யாரேனும் ஒருவர் பயன்பெறலாம்கீழே உள்ள Google form ஐ நிரப்பி  அனுப்புங்கள்.https://forms.gle/DSr4rjHR6Vz8dfzs9ஏ...
21/05/2024

பகிருங்கள் யாரேனும் ஒருவர் பயன்பெறலாம்

கீழே உள்ள Google form ஐ நிரப்பி அனுப்புங்கள்.

https://forms.gle/DSr4rjHR6Vz8dfzs9

ஏற்பாடு
*மஸ்ஜிதுர் ரஹ்மான்*
அக்குரணை 06

077 949 2277
077 855 8666
077 148 0555

20/05/2024

ஒரே பயணத்தில் பல உம்றாக்கள் செய்யலாமா?
×××××××××××××××××××
எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபி

கேள்வி :-
ஹஜ்ஜுக்காக அல்லது உம்றா செய்யச் சென்றவர் அதிக நன்மை செய்யும் ஆசையில் ஆயிஷா பள்ளிக்குச் சென்று இஹ்றாம் அணிந்து மீண்டும் மீண்டும் உம்றாச் செய்கின்றனர். இது கூடுமா?

பதில்:-
இது நபி (ஸல்) அவர்கள் காட்டித்தராத உரு நடைமுறையாகும். முதலில் ஆயிஷா பள்ளி என்ற விவகாரம் ஏன் வந்தது என்பதை நாம் அறிய வேண்டும்.

ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;
“நான் ஹஜ்ஜுக்குச் சென்ற போது எனக்கு மாதத் தீட்டு ஏற்பட்டது. இதையறிந்த நபி(ஸல்) அவர்கள் தவாப் தவிர்ந்த ஹாஜிகள் செய்பவற்றைச் செய்யச் சொன்னார்கள். நான் சுத்தமான போது ஹஜ் முடிந்த பின்னர் எனது சகோதரர் அப்துர் ரஹ்மானோடு தன்யீம் எனும் (ஹறம் எல்லையைத் தாண்டிய) இடத்திற்கு அனுப்பி, அங்கிருந்து இஹ்றாம் அணிந்து உம்றாவைச் செய்யுமாறு பணித்தார்கள். “இது அந்த உம்றாவுக்குப் பகரமாகும்!” என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.” (புகாரி)

மாதத் தீட்டு ஏற்பட்ட பெண்கள் ஏற்கனவே செய்யாமல் விட்ட உம்றாவுக்குப் பகரமாகச் செய்யும் உம்றாவுக்காகத்தான் ஆயிஷா பள்ளி எனுமிடத்தில் இஹ்றாம் கட்டி உம்றாச் செய்ய வேண்டும் என இந்தச் செய்தி கூறுகின்றது. இத்தகைய பெண்கள் ஹறம் எல்லையைத் தாண்டி எங்கு வேண்டுமானாலும் இஹ்றாம் செய்யலாம். இந்த ஹதீஸைப் பார்க்கும் எவரும் பின்வரும் அம்சங்களை விளங்கிக்கொள்ளலாம்.

(1) இது மாதத் தீட்டு ஏற்பட்ட பெண்களுக்கான சட்டம்.

(2) அதுவும் ஆரம்பத்தில் மாதத் தீட்டு ஏற்பட்ட பெண்களுக்கான சட்டம். தவாபுல் இபாழாவுக்குப் பின்னர் மாதத் தீட்டு ஏற்பட்டால் அவர்கள் தவாபுல் விதாவுக்காக் காத்திருக்க வேண்டியதில்லை; நாடு செல்லலாம்.

(3) ஹஜ்ஜின் ஒரு பகுதியான உம்றாவை முடிக்க முடியாமல் போனதற்கான பரிகாரம். (உம்றாவை முடித்தவர்களுக்கு உரியதல்ல.)

(4) திரும்பத் திரும்பச் செய்வதற்காகச் சொல்லப்பட்டதல்ல.

இந்த அடிப்படையில் ஆயிஷாப் பள்ளிக்குச் சென்று மீண்டும் மீண்டும் இஹ்றாம் அணிந்து பல உம்றாக்கள் செய்வது சுன்னாவில் இல்லாததொரு அம்சமாகும்.. ஆயிஷா(ரழி) அவர்களுடன் துணைக்குச் சென்ற அவரது சகோதரர் அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்கள் இஹ்றாம் அணியவும் இல்லை; இத்தகைய உம்றாவைச் செய்யவுமில்லை. திரும்பத் திரும்ப இந்த இடத்தில் இஹ்றாம் அணிந்து உம்றாச் செய்யலாம் என்றிருந்தால் அப்துர் ரஹ்மான்(ரழி) அவர்கள் செய்திருப்பார்கள் அல்லவா? ஸஹாபாக்களில் எவரும் இப்படிச் செய்யவில்லை. நன்மை செய்வதில் நம்மை விட ஆர்வமுள்ள ஸஹாபாக்களே செய்யாத அமல், எப்படி இஸ்லாமாக இருக்க முடியும்!? இந்த அடிப்படையில் சிலர் ஊதை பித்தாகப் பார்க்கின்றனர்.எனவே இதைத் தவிர்ப்பதே சரியானதாகும்.

அடுத்து, இவ்வாறு மீண்டும் மீண்டும் உம்றாச் செய்வோர் ஹறத்தில் பயங்கரமான சன நெருக்கடியை உண்டுபண்ணுவதன் மூலம் மக்கா நிர்வாகத்திற்கும், ஏனைய ஹாஜிகளுக்கும் தொல்லை கொடுக்கின்றனர். ஹஜ்ஜுடைய நாள் நெருங்க நெருங்க மக்காவில் மக்கள் வெள்ளம் பெருக ஆரம்பித்து விடும். ஹஜ்ஜுக்காக வருவோர் தமது கடமையான உம்றாவைச் செய்தேயாக வேண்டும். எட்டாம் நாளுக்கு முன்னர் அனைவரும் உம்றாவைக் கட்டாயமாக முடித்தாக வேண்டும். இதற்காக மக்கள் சிரமப்பட்டுக்கொண்டிருக்கும் போது அவர்களுக்கு மேலும் சிரமத்தை அளிக்கும் விதத்தில் மீண்டும் மீண்டும் மார்க்கத்தில் இல்லாத உம்றாவைச் செய்துகொண்டிருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை எண்ணிப் பாருங்கள்! இந்தக் கோணத்தீல் சிந்தித்தாலும், அவசியம் இந்த வழிமுறை தவிர்க்கப்பட்டேயாக வேண்டும்.
எனினும் ஸபா மர்வாவுக்கு இடையில் தொங்கோட்டம் ஓடுவது பற்றிய குர்ஆன் வசனத்தில் யார் மேலதிகமாக செய்கிறாரோ அவர் விஷயத்தில் அல்லாஹுத்தஆலா நன்றியுடையவனாக இருப்பான் என்கிற கருத்து சொல்லப்படுகிற காரணத்தினால் மேலதிகமாக உம்ரா செய்யலாம் என்கிற கருத்தை கூறக்கூடிய உலமாக்களும் உள்ளனர். இந்த அடிப்படையில் ஒரே பயணத்தில் மேலதிகமாக உம்ரா செய்ய வேண்டும் என்று ஒருவர் கருதினால் ஹரம் எல்லைக்கு வெளியே சென்று இஹ்ராம் அணிவதை தவிர்த்து, ஏதேனும் ஒரு மீக்காத் எல்லையை தாண்டி அவர் சென்று மீண்டும் மக்காவுக்குள் நுழைவதாக இருந்தால் உதாரணமாக தாயிப் , மதினா போன்ற இடங்களுக்கு சென்று மீக்காத் எல்லையைக் கடந்து மக்காவுக்குள் வருவதாக இருந்தால் அவர் இஹ்ராம் அணிந்து மற்றும் ஒரு உம்ரா செய்வதை குறை கூறுவதற்கான சரியான முகாந்திரம் எதுவும் இல்லை எனவே, இந்த அடிப்படையில் மேலதிகமாக உம்ரா செய்ய நினைப்பவர்கள் செய்து கொள்ளலாம் அங்கு சென்றவர்கள் மீண்டும் மீண்டும் உம்ரா செய்வதை விட அதிகம் தவாப் செய்வதே சிறந்ததாகும்.
வல்லாஹு அஃலம்

அதிபர் நியமனமும், புதிய மாணவர் அனுமதியும் ********************************************அல்ஹம்துலில்லாஹ் மர்கஸ் தாருல் ஈமா...
20/05/2024

அதிபர் நியமனமும், புதிய மாணவர் அனுமதியும்
********************************************

அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் தாருல் ஈமான் கலாபீடத்தின் புதிய அதிபராக அஷ்-ஷேய்க் JM.SIYAB (ஸலபி) BA அவர்கள் உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்கள்.

19.05.2024 ஞாயிற்றுக்கிழமை அல்லாஹ்வின் அருளால் மர்கஸ் தாருல் ஈமான் கலாபீடம் புதுப்பொழிவுடன் ஆரம்பிக்கப்பட்டு புதிய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டதுடன்
அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வும் இடம்பெற்றது.

19/05/2024

பெண்கள் மஹ்ரமான ஆண் துணை இல்லாமல் ஹஜ் உம்றா செய்யலாமா ?
××××××××××××××××××××××××××××
எஸ்.எச்.எம் இஸ்மாயில் (ஸலபி)

கேள்வி :-
பெண்கள் மஹ்றமான ஆண் துணையின்றி ஹஜ்-உம்றாச் செய்யலாமா?

பதில்:-
இது விரிவாக விளக்கப்பட வேண்டிய அம்சமாகும். ஹஜ் செய்ய வேண்டுமென்ற ஆர்வம் அனைவரிடமும் இருக்கின்றது. இது வரவேற்கத் தக்கதுதான். எனினும், ஹஜ்ஜை முறையாகச் செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அதிகமானவர்களிடம் இல்லையென்பது வருந்தத் தக்க விடயமாகும்.

ஹஜ் யார் மீது கடமையென்பது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது;

“..மனிதர்களில் அதற்குச் சென்று வரச் சக்தி பெற்றவர்கள் மீது அல்லாஹ்வுக்காக அவ்வீட்டை ஹஜ் செய்வது கடமையாகும்..” (3:97)

எனவே, ஹஜ்ஜுக் கடமையைச் செய்யும் சக்தியுள்ளவர் மீதுதான் ஹஜ் கடமையாகும். பயணத்திற்கு மஹ்றமான ஆண் துணை இல்லாத பெண்ணுக்கு ஹஜ் கடமையில்லை. அப்படி அவர் தன் மீதுள்ள கடமையை நிறைவு செய்ய வேண்டுமென்றால் மஹ்றமான ஓர் ஆண் துணையை அழைத்துச் செல்ல வேண்டும். அதற்கும் முடியாவிட்டால் தனது ஹஜ்ஜைத் தனது நெருங்கிய உறவுடைய ஒரு ஆண் மூலம் நிறைவேற்ற அங்கீகாரமுள்ளது.

ஒரு பெண் தனியாகவோ, நம்பிக்கையான மஹ்றமல்லாத ஆண் துணையுடன், நல்லொழுக்கமுள்ள பல பெண்களுடன் கூட்டுச் சேர்ந்தோ ஹஜ் செய்யலாம் என்பதற்குக் கூறப்படும் ஆதாரங்கள் குறித்தும் அது பற்றிய உண்மை விளக்கம் என்ன என்பது குறித்தும் சுருக்கமாக நோக்குவோம்.

இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்;

“எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!” என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர் “அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் “நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!” என கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இப்னு உமர்(ரழி) அவர்களின் பின்வரும் அறிவிப்பை அவதானியுங்கள்!

“எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்.” (புகாரி, முஸ்லிம்)

மஹ்ரமின்றி ஒரு நாள் கூட பயணிக்கக் கூடாது என்ற தடையைக் கொண்டுள்ள பல ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றன.

பெண்ணின் பிரயாணத்தில் மஹ்ரம் துணை இருப்பது ஜிஹாதுக்குச் செல்வதை விட முதன்மையானது என்பதனை முன்னர் நாம் பார்த்த இப்னு அப்பாஸ்(ரழி) அறிவிக்கும் ஹதீஸ் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. நபியவர்களின் அந்த முடிவுக்கு மேலாக முடிவெடுப்பதற்கு எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டே ஒரு பெண்ணோ, அல்லது பல பெண்களோ (திருமணம் முடிக்க தடை செய்யப்பட்ட) மஹ்ரமான ஆண்கள் துணையின்றித் தனிமையில் ஹஜ் பயணமோ, அல்லது வேறு பயணமோ செல்லக் கூடாது எனக் கூறப்படுகின்றது.

இதற்குத் தவறான வியாக்கியானம் செய்யும் சில அறிஞர்கள் “நம்பகமான பெண்கள் பலருடன் சேர்ந்து ஒரு பெண் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்!” என வாதிடுகின்றனர். ஒரு பெண் தனிமையில் பள்ளிக்குச் சென்று தொழுகையை நிறைவேற்றுவது போன்று ஹஜ் செய்யச் செல்லலாமா? முடியாதா? என்ற வாதப் பிரதிவாதங்கள் மார்க்க அறிஞர்கள் வட்டத்தில் காணப்பட்டாலும் “மஹ்ரம்” என்ற ஆண் துணையுடன் ஹஜ் செய்வதையே நபி(ஸல்) அவர்கள் கட்டாயப்படுத்தி இருப்பதைப் பார்க்கின்றோம். ஒரு பெண் மஹ்ரம் இன்றி ஹஜ் செய்ய முடியாது என்பதே நாம் சரியான கருத்தாகக் கொள்ளத் தக்கதாகும்.

16/05/2024

ஹஜ்-உம்ரா பெண்களுக்கான சட்டங்கள்
×××××××××××××××××××××
எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலஃபி


ஒவ்வொரு வருடமும் ஹஜ் கடமை நிறைவேற்றப்படுவது இஸ்லாமிய உம்மாவின் மீது விதியாக்கப்பட்ட கடமையாகும். உம்மத்தின் அங்கத்தவனான வசதி படைத்த ஒரு முஸ்லிம், ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ்ஜை நிறைவேற்றக் கடமைப்பட்டுள்ளான்.

இஸ்லாத்தின் அர்கான்கான்களில் ஒன்றான ‘ஹஜ்’ கிரிகை பெண்களுக்கான ‘ஜிஹாத்’ என்ற அந்தஸ்துப் பெற்றதொரு கடமையாக இருக்கின்றது.

ஒரு முறை ஆயிஷா(ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் ‘அல்லாஹ்வின் தூதரே! பெண்களுக்கும் ஜிஹாத் உண்டா?’ எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள், ‘ஆம்! போராட்டமற்ற ஜிஹாத் அவர்களுக்குண்டு. அதுதான் ஹஜ்ஜும், உம்ராவும்’ என்றார்கள். (அஹ்மத் இப்னுமாஜா)

புகாரி கிரந்தத்தில் பின்வரும் அறிவிப்பொன்றுள்ளது.

ஆயிஷா(ரலி) அவர்கள் நபியவர்களிடம், ‘அல்லாஹ்வின் தூதரே! அமல்களில் சிறந்ததாக நாம் ஜிஹாதைக் காண்கிறோம். நாமும் ஜிஹாத் செய்ய வேண்டாமா?’ எனக் கேட்ட போது, நபியவர்கள் ‘ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜே சிறந்தது’ என விடையளித்தார்கள். (புகாரி)

இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக இருப்பினும், பெண்களுக்கான ஜிஹாதுக்கான பிரதியீடாக நபியவர்கள் ஹஜ் உம்றாவைச் சுட்டிக் காட்டியிருப்பது பெண்கள் ஹஜ் உம்றா செய்வதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகின்றது.

ஆண்கள் ஹஜ் செய்வது கடமை. அதனை நிறைவேற்றினால் அவர்களுக்கு அக்கடமை நீங்குவதோடு, அதற்கான கூலியும் கிடைக்கும். ஆனால், பெண்கள் ஹஜ்ஜை நிறைவேற்றினால் இரண்டு கடமைகள் நீங்குவதோடு, இரண்டு கடமைகளின் கூலிகளும் கிடைக்கும் என நபியவர்கள் கூறியிருப்பதால் பெண்கள் ஹஜ் செய்வதில் அதிக நாட்டம் கொள்வது சாலச் சிறந்தது.

இந்த வகையில், பெண்களோடு மட்டும் தொடர்புபட்ட சில சட்டதிட்டங்களை விளக்கலாம் என நினைக்கிறோம்.

(1) மஹ்ரம்:
,××××××××××

ஹஜ் கடமை நிறைவேறுவதற்கு ஆண்களுக்கும், பெண்களுக்குமான பொதுவான சில ஷர்த்துக்கள்-நிபந்தனைகள் காணப்படுகின்றன. முஸ்லிமாயிருத்தல், புத்தி சுவாதீனம், அடிமையற்ற நிலை, பருவ வயது, பொருளாதார சக்தி என்பனவே அவை.

இவற்றோடு பெண்களுக்குப் பிரத்தியேகமாக, மஹ்ரமான-திருமணம் செய்துகொள்ளத் தடுக்கப்பட்ட ஆண்களின் பிரயாணத் துணை நிபந்தனையாக விதிக்கப்பட்டுள்ளது.

(கணவன், தந்தை, மகன், சகோதரன், பால் குடிச் சகோதரன், தாயின் கணவன், கணவனின் மகன் என்பவரே பயணத்தில் கூட்டிச் செல்ல அனுமதிக்கப்பட்ட துணைகளாவர்.)

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் அறிவிப்பைப் பாருங்கள்!

‘எந்தவொரு ஆணும் மஹ்ரமில்லாமல் இருக்கும் பெண்களோடு தனிமையில் இருக்க வேண்டாம்! எந்தவொரு பெண்ணும் மஹ்ரமில்லாமல் பிரயாணிக்க வேண்டாம்!’ என நபியவர்கள் கூறிய போது, ஒரு மனிதர்,

‘அல்லாஹ்வின் தூதரே! எனது மனைவி ஹஜ்ஜுக்காகச் சென்று விட்டார். நான் சில யுத்தங்களுக்காகப் பெயர் கொடுத்துள்ளேன். (நான் என்ன செய்வது?) எனக் கேட்டார். அதற்கு, நபி(ஸல்) அவர்கள் ‘நீரும் உமது மனைவியோடு சென்று ஹஜ்ஜை நிறைவேற்றுவீராக!’ என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)

இப்னு உமர்(ரலி) அவர்களின் பின்வரும் அறிவிப்பை அவதானியுங்கள்!

‘எந்தவொரு பெண்ணும் தன்னுடன் மஹ்ரம் துணையில்லாமல் மூன்று நாட்களுக்குப் பயணிக்க வேண்டாம்.’ (புகாரி, முஸ்லிம்)

‘மஹ்ரமின்றி ஒரு நாள் கூட பயணிக்கக் கூடாது’ என்ற தடையைக் கொண்டுள்ள பல ஹதீஸ்கள் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் காணப்படுகின்றன.

ஒரு பெண்ணின் ஹஜ் பிரயாணத்திற்குத் துணையாகச் செல்பவர் பின்வரும் தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும்: புத்தி சுவாதீனம்-சீரிய சிந்தனை, பருவ வயது, இஸ்லாம்.

பொருளாதார ரீதியான வசதிகள் கிடைக்கப் பெற்ற ஒரு பெண் மஹ்ரமில்லாவிட்டால் எவ்வாறு ஹஜ் செய்வது?

என்ற கேள்வி எழலாம்.

இந்தக் கேள்விக்கு இன்றைய ஹஜ் முகவர்கள் வித்தியாசமான விளக்கங்கள் கொடுத்து, பெண்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர். ஒரு இபாதத் நிறைவேறுவதற்கு அதன் ஒழுங்கு விதிகள் சரியாகப் பின்பற்றப்பட வேண்டும். நிபந்தனைகள்-ஷர்த்துக்கள் முழுமையடைய வேண்டும். இல்லாவிடில் அந்த இபாதத் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அது ஒரு புறமிருக்க, நபியவர்களின் தடையை மீறிய குற்றத்திற்கு ஆளாக நேரிடும் என்பதையும் கவனத்திற்கொள்ள வேண்டும். குளிக்கப் போய்ச் சேறு பூசிக் கொண்ட கதையாய் எமது இபாதத் அமைந்து விடக் கூடாது.

அப்படியாயின், மஹ்ரம் துணையற்ற பெண்களது ஹஜ்ஜின் நிலைப்பாடு என்ன?

இஸ்லாம் அதற்கும் வழிகாட்டியே உள்ளது. குறிப்பிட்ட அந்தப் பெண்கள் தமக்காகப் பிரதிநிதிகளை நியமித்து அவர்களினூடாக ஹஜ் செய்துகொள்ளலாம்.

‘பெண்ணின் பிரயாணத்தில் மஹ்ரம் துணை இருப்பது ஜிஹாதுக்குச் செல்வதை விட முதன்மையானது’ என்பதனை முன்னர் நாம் பார்த்த இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஹதீஸ் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. நபியவர்களின் அந்த முடிவுக்கு மேலாக முடிவெடுப்பதற்கு எமக்கு எந்த அதிகாரமும் கிடையாது.

(2) கணவனின் அனுமதி:
×××××××××××××××××××

ஆயுளில் ஒரு ஹஜ்ஜே கடமையானது. அதற்கு மேலதிகமாகச் செய்வது நஃபிலானது-விரும்பத்தக்கது. இவ்வாறு நஃபிலான ஹஜ் செய்ய விரும்புகின்ற ஒரு பெண் தனது கணவனின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டும். ஹக்குஸ் ஸவ்ஜ்-கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஒரு மனைவிக்கு வாஜிபாகும். எனவே, நஃபிலானதை விட வாஜிபான செயலே முற்படுத்தப்படல் வேண்டும் என இப்னுல் முன்திர் போன்ற இமாம்கள் விளக்கமளிக்கின்றனர்.

(3) ஆண்களுக்குப் பிரதிநிதியாகச் சென்று பெண்கள் ஹஜ் நிறைவேற்றல்:
×××××××××××××××××××××

ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள், ‘மஜ்மூஉ பதாவா’ என்ற தனது நூலில், ஒரு பெண் இன்னொரு பெண்ணுக்காகப் பிரதிநிதி என்ற வகையில் ஹஜ் செய்ய முடியும் எனக் குறிப்பிடுகின்றார். இவ்வாறு பிரதிநிதியாக நியமிக்கப்படுபவர் மகளாகவோ, ஏனைய பெண்களாகவோ இருக்க முடியும் என்கிறார். அத்தோடு ‘ஒரு ஆணுக்காகவும் பெண் ஹஜ் செய்ய முடியும்’ என நான்கு இமாம்கள், மற்றும் பெரும்பாலான அறிஞர்களும் கருதுகின்றனர்.

இமாம்களின் இக்கருத்துக்கு வலுவூட்ட பீன் வரும் ஹதீஸ் ஆதாரமாக முன்வைக்கப்படுகிறது.

‘ஹத்அமிய்யா என்ற பெண்ணின் கேள்விக்கு விடையளிக்கும் போது அவளது தந்தைக்காக ஹஜ் செய்ய நபியவர்கள் அனுமதியளித்தார்கள்.’

(புகாரி, நஸஈ)

(4) இஹ்ராம் கட்டத் தயாராகும் போது பெருந்தொடக்கு ஏற்படல்:
××××××××××××÷××÷××

ஹஜ்ஜுக்காகப் பயணித்துக்கொண்டிருக்கும் ஒரு பெண், வழியில் ஹைழ்-மாதவிடாய், நிபாஸ்-பேறு காலத் தீட்டு போன்ற உபாதைக்குள்ளானால் ஏனைய சுத்தமான பெண்களைப் போன்று இவள் இஹ்ராம் கட்டிக்கொள்ளலாம். இஹ்ராம் ஆடை உடுத்துவதற்குச் ‘சுத்தம்’ ஒரு நிபந்தனையாகக் கொள்ளப்படவில்லை.

இமாம் இப்னு குதாமா அவர்கள்: ‘இஹ்ராம் அணியும் போது ஆண்களைப் போலவே பெண்களும் குளித்துக்கொள்ள வேண்டும். ஹைழ், நிபாஸ் போன்ற உபாதைக்குள்ளான பெண்களுக்கும் விதிக்கப்பட்ட கடமையே ஹஜ்ஜாகும்.’

இது பற்றி ஜாபிர்(ரலி) அவர்களது பின்வரும் அறிவிப்பு விளக்குகிறது.

‘…நாங்கள் துல்ஹுலையாவை (மதீனா வழியாக பயணிப்பவர்கள் இஹ்ராம் செய்ய வேண்டிய இடம்)அடைந்த போது அஸ்மா பின்த் அமீஸ், முஹம்மத் இப்னு அபீபக்ர் அவர்களைப் பெற்றெடுத்தார்கள். உடனே, தான் என்ன செய்வது எனக் கேட்டு நபியவர்களிடம் தூதனுப்பினார்கள். அதற்கு நபியவர்கள், ‘குளித்துக் கொள்வீராக! ஆடையை மாற்றிக் கொண்டு, இஹ்ராம் அணிந்துகொள்வீராக!’ எனக் கூறினார்கள்.

(புகாரி, முஸ்லிம் 2334)

இது சம்பந்தமாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி இவ்வாறு கூறுகிறது:

‘பிரசவத் தீட்டு மற்றும் மாதவிடாய் உபாதைக்குள்ளான பெண்கள் கஃபாவைத் தவாப் செய்வதை மட்டும் விடுத்து ஏனைய அனைத்து கிரியைகளையும் இஹ்ராம் கட்டிக் கொண்டு நிறைவேற்றுவார்கள்.’

(அபூதாவூத், முஃனி 3/293-294, முஸ்லிம் 2307)

இங்கு ஹைழ்-நிபாஸ் உபாதைக்கு உள்ளானோரைக் குளிக்கச் சொல்லியிருப்பது சாதாரண சுத்தத்தையும், கெட்ட வாடைகளற்ற நிலையையும், நஜீஸின் தன்மையைக் குறைத்துக் கொள்ளவும் தான் என விளங்கிக் கொள்ளலாம்.

எனவே, இவ்விரு உபாதைக்குள்ளான பெண்களின் இஹ்ராமுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை. இஹ்ராம் நிலையிலேயே அவர்கள் தொடர்ந்திருப்பார்கள். இஹ்ராம் கட்டியவர்களுக்குத் தடை விதிக்கப்பட்ட எச்செயலிலும் ஈடுபடக் கூடாது. தொடக்கிலிருந்து சுத்தமாகிக் குளிக்கும் வரை அவர்கள் கஃபாவைத் தவாப் செய்யக் கூடாது.

ஒரு வேளை அரஃபா தினம் வரை அவர்களால் சுத்தமாக முடியவில்லை என்றிருக்குமானால், உம்ராவுக்காக அவர்கள் இஹ்ராம் கட்டியிருந்தால், அதிலிருந்து விடுபட்டு ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக்கொள்வார்கள். பின்னர் உம்ராவைச் செய்துகொள்ளல் வேண்டும். இதனால் இவர்கள் ‘காரின்’ என்ற நிலையை அடைவார்கள்.

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் இக்கருத்தை ஆதரித்துள்ளார்கள்:

இது பற்றிப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது:

ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது:

‘நாங்கள் (ஹஜ்ஜுக்காக) நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். அப்போது நாங்கள் ஹஜ்ஜை மட்டுமே நிறைவேற்றும் எண்ணத்துடன் சென்றோம். நாங்கள் ‘சரிஃப்’ எனுமிடத்தில் அல்லது அதற்கு அருகில் இருந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. நபி (ஸல்) அவர்கள் நானிருந்த இடத்திற்கு வந்தார்கள். அழுது கொண்டிருந்த என்னிடம், ‘உனக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டதா?’ என்று கேட்டார்கள். நான் ‘ஆம்!’ என்றேன். அதற்கு அவர்கள், ‘இந்த மாதவிடாய் பெண்கள் மீது அல்லாஹ் விதியாக்கிய (இயற்கையான) ஒன்றாகும். எனவே, நீ குளிக்கும் வரை இறையில்லத்தைச் சுற்றித் (தவாஃப்) வருவதைத் தவிர, ஹாஜிகள் செய்கின்ற மற்றெல்லாக் கிரியைகளையும் செய்துகொள்!’ என்றார்கள். மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியர் சார்பாக மாட்டைக் குர்பானி கொடுத்தார்கள்.’

(5) இஹ்ராம் அணியும் போது செய்ய முடியுமானவை:
×××××××××××××

ஆண்கள் போன்றே பெண்களும் குளித்துச் சுத்தமாக இருந்து கொள்ள வேண்டும். களைய வேண்டிய முடிகளைக் களைந்துக் கொள்ளல், நகம் வெட்டுதல், கெட்ட வாடைகளை நீக்குதல் போன்ற விடயங்களைச் செய்து கொள்ளலாம்.

இஹ்ராம் கட்டிய நிலையில் செய்யக் கூடாதவைகளைச் செய்யாதிருக்க முற்கூட்டியே அவற்றைச் செய்து கொள்ளல் வேண்டும். இத் தேவைகள் இல்லாவிட்டால் அதனை இஹ்ராமுக்கான ஏற்பாட்டுக் காரியமாக நிறைவேற்றத் தேவையில்லை. இஹ்ராமுக்கான செயற்பாடுகளில் அவை உள்ளடங்க மாட்டாது. வாசம் வெளிப்படாத வகையில் மணம் பூசிக்கொள்வதும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

‘நாம் நபி(ஸல்) அவர்களோடு ஹஜ்ஜுக்காகச் சென்ற போது எமது நெற்றியில் கஸ்தூரியைப் பூசியிருந்தோம். எமக்கு முகம், வியர்த்து வடிந்த போது அதனை நபியவர்கள் கண்டார்கள். எனினும் அதனைத் தடுக்கவில்லை’. (ஆயிஷா(ரலி), அபூதாவூத்)

(6) முகம் மறைக்கக் கூடாது:
××××××××××××××

இஹ்ராம் கட்டியதும் பெண்கள் முகம் மறைக்கக் கூடாது. வழமையாக முகத்தை மறைத்து ஆடை அணியும் வழக்கமுள்ளவர்களாக இருந்தாலும் முகத்தை நிகாபால் மூடாமல் திறக்க வேண்டும்.

‘பெண்கள் (ஹஜ்ஜின் போது) முகத்தை மறைத்துக்கொள்ள வேண்டாம்!’ (புகாரி)

கைகள், கால்கள், முகம் ஆகிய உறுப்புக்களோடு ஒட்டிய நிலையில் Gloves, ,Burka (Face Cover) என்பன அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. எனினும், சாதாரண ஆடைகள் மூலம் அவை அன்னிய ஆண்களின் பார்வைக்குப் படாதவாறு ஆடை அணிவதில் குற்றமில்லை என்பது இமாம்களின் கருத்தாகும்.

(7) விரும்பிய ஆடையை அணிந்துகொள்ளல்:
××××××××××××××

இஹ்ராமின் போது கவர்ச்சியற்ற தாம் விரும்பிய ஆடைகளை அணிந்துகொள்ளப் பெண்களுக்கு அனுமதியுண்டு. குறிப்பாகப் பெண்களுக்குரிய ஆடைகளாக அவை இருக்க வேண்டும். ஆண்களின் ஆடைகளுக்கு ஒப்பானவையாக இருக்கக் கூடாது. உடல் உறுப்புக்களின் அமைப்புக்கள் விளங்குமாறு இறுக்கமானதாய் அமையக் கூடாது. உடலுறுப்புக்களை மறைக்காத மெல்லியதாய் இருக்கக் கூடாது. கைகள், கால்கள் தெளிவாக வெளிப்படும் தன்மை கொண்ட கட்டை ஆடைகளாக இருக்கக் கூடாது. பொதுவாகப் பெண்களின் ஆடைகள் விசாலமானதாகவும், தடித்ததாகவும், தாராளமானதாகவும் அமைந்திருக்க வேண்டும்.

பெண்களுக்கென்று தனியானதொரு நிற ஆடை அணிய வேண்டும் என்று எந்த விதியும் இஸ்லாத்தில் கூறப்படவில்லை. ஒவ்வொருவரும் தமக்கு விருப்பமான நிற ஆடைகளை அணிந்துகொள்ளலாம்.

(8) தனக்குள் மட்டும் தல்பியா சொல்தல்:
××××××××××××××××××

ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்து நீய்யத்து வைத்துக் கொண்டவர்கள் ‘தல்பியா’ சொல்வது கடமையாக்கப்பட்டுள்ளது. எனினும், தனது சத்தம் தனக்கு மட்டும் கேட்குமாறு தல்பியாவை மொழிவது சுன்னத்தாகும். .

(9) தவாப் செய்யும் போது:
,,×××××××××××××××

தவாப் செய்யும் போது பெண்கள் தம்மை முழுமையாக மறைத்துக்கொள்ள வேண்டும்; சத்தத்தைத் தாழ்த்திக்கொள்ள வேண்டும்; பார்வையைத் தாழ்த்திக்கொள்வதோடு, ஆண்களோடு முட்டி மோதும் நிலையைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

கஃபாவில் ஆண்கள்-பெண்கள் வேறுபாடின்றிக் கலந்துகொள்ளும் நிலை காணப்படுவதால், இவ்விடயத்தில் பெண்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டும்.

ஹஜருல் அஸ்வத், ருக்னுல் யமானீ போன்ற இடங்களில் ஆண்களோடு முட்டி, மோதி நெருக்கடிக்கப்பட்டு அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்ற கடமை கிடையாது. தவாபுக்காகவும் நெருக்கடிக்குள் செல்ல வேண்டிய தேவையில்லை. தவாபின் ஓடுபாதையில் ஓரங்களில் ஒடுவது நல்லது. ‘ஹஜருல் அஸ்வத்’ கல்லை முத்தமிடுவது ஒரு ஸுன்னா. ஆனால், ஆண்களோடு பெண்கள் நெருக்கடிக்கப்படுவது ஹராம். எனவே, ஸுன்னாவை விட ஹராம் பெரியது என்பதைக் கவனத்திற்கொள்ளல் வேண்டும். இமாம் நவவி(ரஹ்), இப்னு குதாமா போன்ற இமாம்கள் இக்கருத்தையே முன்வைக்கின்றனர்.

(10) தவாப் செய்யும் முறை:
,×××××××××××××××

பெண்கள் க’அபாவைத் ‘தவாப்’ செய்யும் போதும், ஸஃபா-மர்வாவுக்கிடையில் ‘ஸஈ’ செய்யும் போதும் நடந்தே செல்ல வேண்டும். ஆண்கள் ஓடும் இடங்களில் இவர்கள் ஓடத் தேவையில்லை.

(11) மாதவிடாய் பெண் செய்யக் கூடியவை:
××××××××××××××××××

மாதவிடாய்க்குட்பட்ட இஹ்ராம் அணிந்த பெண்கள் சுத்தமாகும் வரை எவற்றைச் செய்யலாம்? எவற்றைச் செய்யக் கூடாது? என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்ட அனைத்துக் கிரியைகளையும் செய்யலாம். (இஹ்ராம், அரஃபாவில் தரித்தல், முஸ்தலிஃபாவில் தரித்தல், கல்லெறிதல்)

ஆனால், கஃஅபாவைத் ‘தவாப்’ செய்வது கூடாது.

இங்கு இன்னொரு விடயத்தைக் கவனத்திற்கொள்ள வேண்டும். அதாவது, தவாப் செய்த பின் ஸஈயின் போது மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், அவள் தொடர்ந்து ஸஈ செய்யலாம். தவாப் முடிவதற்கு முன்னர் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் ஸஈ செய்ய முடியாது. ஏனெனில், தவாபுக்குப் பின்னரே ஸஈ செய்ய வேண்டும் என்பது கவனிக்கத்தக்கது.

கஃஅபாவைத் தவாப் செய்வதற்குப் போன்று ‘ஸஈ’ செய்வதற்குச் சுத்தம் நிபந்தனையாகக் கொள்ளப்படவில்லை.

(12) தலைமுடி கத்தரித்தல்:
××××××××××××××××

ஹஜ்ஜையும், உம்ராவையும் நிறைவேற்றி விட்ட பெண்கள் ஆண்களைப் போன்று தலைமுடியை மழிக்க வேண்டிய கடமை கிடையாது. ஆண்கள் தமது தலைமுடியை முழுமையாக மழிக்க, பெண்கள் தமது கொண்டையின் கூந்தலில் சிறு பகுதியைக் கத்தரித்தால் போதுமானது.

‘பெண்கள் தலைமுடியை மழிப்பதை நபியவர்கள் தடை செய்துள்ளார்கள்.’

இது பற்றி இப்னு அப்பாஸ்(ரலி) பின்வருமாறு அறிவிக்கிறார்கள்:

‘பெண்களுக்கு முடி மழிப்பது கடமையில்லை. அவர்கள் கத்தரித்தால் மட்டும் போதுமானது’ என நபியவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத்)

அலி(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்;

‘பெண்கள் தலையை முழுமையாக மழிப்பதை நபியவர்கள் தடை செய்தார்கள்’. (திர்மிதி)

(13) தவாபுல் இபாழாவுக்குப் பின்னர் மாதவிடாய் ஏற்பட்டால்:
×××××××××××××××÷××

‘தவாபுல் இபாழா’ என்பது ஹஜ்ஜுக்காக நிறைவேற்றப்படும் கடமையாகும். இதன் பின்னர் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால், அவள் ‘தவாபுல் வதா’ (பிரியாவிடை தவாப்) நிறைவேற்ற வேண்டிய தேவை இல்லை.

இது பற்றி அயிஷா(ரலி) இனால் அறிவிக்கப்பட்டுள்ள பல செய்தி விளக்குகிறது. (புகாரி, முஸ்லிம், அஹ்மத்)

(14) மஸ்ஜிதுன் நபவியைத் தரிசித்தல்:
××××××××××××××××

ஹஜ்ஜுக்குச் சென்ற பெண்கள் கடமை முடிந்த பிறகு விரும்பினால் மதீனாவில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று தொழலாம். எனினும், கபுறுகளைத் தரிசிப்பதற்கென்றே பயணிப்பதற்கு அனுமதி கிடையாது. நபியவர்கள் கபுறடிக்குச் சென்று ‘பரகத்’ தேட நினைக்கக் கூடாது. அவ்வாறு எண்ணுவது முழு ஹஜ்ஜையும் பாழாக்கி விடும். மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று அதன்பின் நபியவர்களதோ, ஏனைய நல்லடியார்களினதோ கபுறுகளை ஸியாரத் செய்வதற்கும், அதன் மூலம் மரணத்தை நினைவு கூர்ந்து அவர்களுக்காக துஆச் செய்வதற்கும் அனுமதியுண்டு.

இது வரை விளக்கிய விடயங்களைக் கவனத்திற்கொண்டு எமது ஹஜ்ஜை நிறைவேற்றி அன்று பிறந்த பாலகனைப் போன்று வீடு திரும்ப எம் அனைவருக்கும் அல்லாஹ் அருள் பாலிப்பானாக!

16/05/2024

)

பயண அறிவிப்பு
×××××××××××
எஸ்..எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)

கேள்வி:- ஹஜ்-உம்றாச் செய்யும் ஒருவர் தனது பயணம் குறித்துப் பிறருக்கு அறிவிக்கலாமா?

பதில்:-
“அல்லாஹ்வுக்காக ஹஜ்ஜையும், உம்றாவையும் நிறைவு செய்யுங்கள்.” (2:196)

மேற்படி வசனத்தில் ஹஜ்ஜையும், உம்றாவையும் அல்லாஹ்வுக்காகச் செய்யுமாறு அல்லாஹ் ஏவுகிறான். ஹஜ்-உம்றாச் செய்வோர் பேருக்காகவோ, புகழுக்காகவோ அல்லது எல்லோரும் செய்கின்றார்கள் என்பதற்காகவோ செய்யக் கூடாது. அல்லாஹ்வுக்காக அவனது திருப்பொருத்தத்தைப் பெறும் நோக்கில் செய்ய வேண்டும். ஹஜ்-உம்றாச் செய்வோரது எண்ணம் தூய்மையானதாக இருக்க வேண்டும்.

இதே வேளை, ஹஜ் செய்பவர் தான் ஹஜ் செய்யப் போகும் செய்தியைப் பிறருக்குத் தெரிவிப்பதை இஸ்லாம் இஹ்லாஸைப் பாதிக்கும் அம்சமாகப் பார்க்கவில்லை. நபி(ஸல்) அவர்கள் தான் ஹஜ் செய்யப் போவதைப் பகிரங்கமாக அறிவித்துள்ளார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம்)

இவ்வாறே உமர்(ரழி), துமாமா(ரழி) போன்ற ஸஹாபாக்கள் தமது உம்றாவைப் பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கூறியுள்ளார்கள். எனவே, தான் ஹஜ்ஜுக்குச் செல்லப் போவதை ஒரு ஹாஜி தன்னைச் சார்ந்தவர்களுக்குத் தெரிவிப்பதில் எந்தக் குற்றமுமில்லை. ஆனால் அவ்வறிவிப்பு – பிரபல்யம், புகழ் முகஸ்துதி என்பவற்றை நோக்காகக் கொள்ளாதிருக்க வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் மார்க்கத்தைக் கற்க வேண்டுமா..!சிறந்த கலாசாலை
15/05/2024

உங்கள் பிள்ளைகள் அல்குர்ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் மார்க்கத்தைக் கற்க வேண்டுமா..!
சிறந்த கலாசாலை

09/05/2024

வெள்ளிக்கிழமை தினத்தில் நபி(ﷺ) அவர்களின் மீது அதிகம் ஸலவாத் சொல்லுங்கள்..

‎*اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ".*
அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும்மஜீத் அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும்மஜீத்.

06/05/2024

நாளைய தினம் க. பொ. த. சா. தரப் பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எம் மனமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.
உங்கள் அனைவருக்கும் வல்லவன் அல்லாஹ்வின் உதவி கிட்டட்டுமாக..!

02/05/2024
தொழிலாளர்களின் உரிமைகளைப்                 பேணுவோம்.____________________________________________يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰ...
01/05/2024

தொழிலாளர்களின் உரிமைகளைப்
பேணுவோம்.
____________________________________________

يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏

நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!
(அல்குர்ஆன் : 62:9)

فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ‏
(ஜுமுஆ) தொழுகை முடிவு பெற்றால், (பள்ளியிலிருந்து புறப்பட்டுப்) பூமியில் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக்கொள்ளுங்கள். நீங்கள் வெற்றி அடைவதற்காக அதிகமதிகம் அல்லாஹ்வை நினைவுகூருங்கள்.
(அல்குர்ஆன் : 62:10)

1) உழைப்பின் சிறப்பு:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'ஒருவர் தம் கையால் உழைத்து உண்பதை விடச் சிறந்த உணவை ஒருபோதும் உண்ண முடியாது. தாவூத் நபி அவர்கள் தங்களின் கையால் உழைத்து உண்பவர்களாகவே இருந்தனர்.'
என மிக்தாம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2072.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துச் சென்று விறகுக் கட்டு ஒன்றை (கட்டி) எடுத்து வந்து விற்(று சம்பாதிக்)க, அதன் காரணத்தால் அல்லாஹ், அவரின் முகத்தை (இழிவிலிருந்து) காப்பாற்று வதானது, அவர் மக்களிடம் சென்று யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். (ஏனெனில், அவ்விதம் அவர்களிடம் கேட்கும்போது) அவருக்குக் கிடைக்கவும் செய்யலாம்; கிடைக்காமலும் போகலாம்.
என ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2373.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் கயிற்றை எடுத்துக்கொண்டு காலைப் பொழுதில் மலைக்குச் சென்று (மலையேறி) விறகு வெட்டி விற்று, தாமும் சாப்பிட்டுப் பிறருக்கும் தருமம் செய்வது மக்களிடத்தில் யாசிப்பதைவிடச் சிறந்ததாகும்.'
அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1480.

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

'அல்லாஹ் அனுப்பிய எந்த நபியும் ஆடு மேய்க்காமல் இருந்ததில்லை!' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்; அப்போது நபித்தோழர்கள், 'நீங்களுமா?' என்று கேட்டார்கள். 'ஆம்! மக்காவாசிகளின் சில கீராத் கூலிக்காக ஆடு மேய்ப்பவனாக நான் இருந்தேன்!' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் புகாரி : 2262.

நபித்தோழர்கள் பலர் உழைத்து உண்பவர்களாக இருந்தனர். இதனால் அவர்களிடம் (வியர்வை) வாடை வீசும். இதன் காரணமாகவே ‘நீங்கள் குளிக்கக் கூடாதா?’ என்றுஅவர்களிடம் கூறப்பட்டது. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
புகாரி: 2071

2) தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் சிறப்பு:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

'தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!'
என அபூ மூஸா அல் அஷ்அரீ (ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 2260.

ஒரு பெண் வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையைப் பெறுவாள். அதைச் சம்பாதித்த காரணத்தால் தர்மத்தின் நன்மை அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும் அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும். இவர்களில் யாரும் யாருடைய நன்மையையும் குறைத்துவிட முடியாது’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புகாரி: 1425.

3) தொழிலாளர்களின் ஊதியத்தை நேரத்துக்கு வழங்குவோம்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
'மூவருக்கெதிராக கியாமத் நாளில் நான் வழக்குரைப்பேன்! என் பெயரால் சத்தியம் செய்து மோசடி செய்தவன்; சுதந்திரமானவனை (அடிமையாக) விற்று அந்தக் கிரயத்தைச் சாப்பிட்டவன்; கூலிக்கு ஒருவரை அமர்த்தி, அவரிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருந்தவன் (ஆகிய இவர்கள்தான் அந்த மூவர்)!' என்று அல்லாஹ் கூறினான்.'
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.

ஸஹீஹ் புகாரி : 2270.

இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்கள்.
'நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி, எடுத்தார்கள்; இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுத்தவருக்கு அதற்கான கூலியைக் கொடுத்தார்கள்!'

ஸஹீஹ் புகாரி : 2278.

அனஸ்(ரலி) அறிவித்தார்கள்.
'நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக் கொள்வார்கள்; எவருடைய கூலியிலும் நபி (ஸல்), அவர்கள் அநீதி இழைக்க மாட்டார்கள்!'
ஸஹீஹ் புகாரி : 2280.

4) உழைப்பாளிகளின் கண்ணியம் காப்போம்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'
உங்களில் ஒருவரிடம் அவரின் பணியாள் அவரின் உணவைக்கொண்டு வந்தால், அவர் அப்பணியாளைத் தம்முடன் (அமர வைத்துக்கொள்ளட்டும். அவ்வாறு) அமர வைத்துக்கொள்ளவில்லையென்றாலும் அவருக்கு 'ஒரு பிடி அல்லது இருபிடிகள்' அல்லது 'ஒரு கவளம் அல்லது இரண்டு கவளங்கள்' உணவு கொடுக்கட்டும். ஏனெனில், அவர் (அதை சமைத்தபோது) அதன் வெப்பத்தையும் அதன் சிரமத்தையும் சகித்துக் கொண்டார்.
என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்கள்.

ஸஹீஹ் புகாரி : 5460.

(நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி)
உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும்,. அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாயிருங்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதனால்தான் நான் அணிவது போல் என் அடிமைக்கும் உடை அளித்தேன்” என அபூதர் கூறினார்கள்” என மஃரூர் கூறினார்.
புகாரி: 30.

அனஸ்(ரலி) அறிவிக்கிறார்.

நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். (மனம் வேதனைப்படும்படி) என்னை ‘ச்சீ” என்றோ, ‘(இதை) ஏன் செய்தாய்” என்றோ, ‘நீ (இப்படிச்) செய்திருக்கக் கூடாதா?’ என்றோ அவர்கள் சொன்னதில்லை.
புகாரி: 6038.

5) உழைக்காமல் யாசகம் கேட்பதை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

” (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவுகூட சதை இல்லாதவனாக மறுமை நாளில் வருவான் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’.
புகாரி: 1474,

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதாவது. நபி (ஸல்) அவர்கள் மிம்பர் மீதேறி, தர்மம், சுயமரியாதை, யாசகம் ஆகியவற்றைப் பற்றி உபதேசம் செய்துவிட்டு, 'உயர்ந்த கை தாழ்ந்த கையை விடச் சிறந்ததாகும்; உயர்ந்த கை என்பது தர்மம் செய்யக்கூடியதும்; தாழ்ந்த கை என்பது யாசிக்கக் கூடியது' என்றும் கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி : 1429.
அத்தியாயம் : 24

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உயர்ந்த (கொடுக்கும்) கை தாழ்ந்த (வாங்கும்) கையை விடச் சிறந்தது. நீர் நெருங்கிய உறவினர்களிலிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! தேவைபோக எஞ்சியதைக் கொடுப்பதே சிறந்த தர்மமாகும். யார் (பிறரிடம் கையேந்தாமல்) சுயமரியாதையுடன் இருக்கிறானோ அவனை அல்லாஹ்வும் அவ்வாறே ஆக்குகிறான். யார் அல்லாஹ்விடம் தன்னைப் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்க வேண்டுமென வேண்டினானோ அவனை அல்லாஹ் பிறரிடம் தேவையற்றவனாக ஆக்கிவிடுவான்.'
ஹகீம் இப்னு ஹிஸாம் (ரலி) அறிவித்தார்.
அபூஹுரைரா(ரலி) இவ்வாறே அறிவித்தார்.

ஸஹீஹ் புகாரி : 1427 1428.

நட்புடன்:
அல் ஹாபில் இன்திகாப் உமரீ
அட்டுலுகம
மீள்பதிவு
01/05/2024

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamil Hidayah Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share