Itc Switzerland

  • Home
  • Itc Switzerland

Itc Switzerland Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Itc Switzerland, Film/Television studio, .

22/05/2020
மலரும் நினைவுகள். https://youtu.be/7Q55nVGOofo
20/05/2020

மலரும் நினைவுகள். https://youtu.be/7Q55nVGOofo

Watch Vasantha Kala Nadigalile from the hit tamil movie Moondru Mudichu starring Rajnikanth, Kamal Haasan, Sridevi, Y. Vijaya, N. Viswanath, M.R. Rajamani & ...

இலங்கையின் அழகை அருமையாக பதிவு செய்திருக்கின்றார்கள்.  இலங்கை கலைஞர்களின் அற்புதமான பாடல். தரமான படைப்பு. https://m.yout...
19/05/2020

இலங்கையின் அழகை அருமையாக பதிவு செய்திருக்கின்றார்கள். இலங்கை கலைஞர்களின் அற்புதமான பாடல். தரமான படைப்பு. https://m.youtube.com/watch?feature=youtu.be&v=9i2lGpwerNs

இலங்கையின் மலைநாட்டு அழகையும் வாழ்வையும் வர்ணிக்கும் பாடலாக அமையப்பெற்றிருக்கும் "இயற்கைத்தாயே" பாடல் இதோ . ஏ....

இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பு தமிழ் திரைப்படம். https://youtu.be/dkwdXk5S6Ac
18/05/2020

இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பு தமிழ் திரைப்படம். https://youtu.be/dkwdXk5S6Ac

i will continue to upload rare clippings in my sessions. எல்.ஆர். ஈசுவரியின் காந்தக்குரலில் மெல்லிசை மன்னரின் இசை வார்ப்பில் ஒரு அருமையான பாடல்....அ...

இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் வெளி வந்த தமிழ்த் திரைப்படம். தீ  . https://youtu.be/B4w7RLjfPGg
17/05/2020

இந்திய இலங்கை கூட்டுத் தயாரிப்பில் வெளி வந்த தமிழ்த் திரைப்படம். தீ . https://youtu.be/B4w7RLjfPGg

Subscribe Us : EverGreenTamil - GoldenCinema

16/05/2020

புது வரவு
————
Itc Switzerland
உலக தமிழ் சினிமா

16/05/2020

சினிமா புதிய கலைஞர்கள் வரவேற்கப்படுகின்றீர்கள்.
சினிமாவிற்க்கான தளமிது...

இந்த சினிமாகலைகளில் நீங்கள் எந்த கலைகளைச் சேர்ந்தவர்.உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்து கொள்ளுங்கள். 24 crafts of Cinema-...
16/05/2020

இந்த சினிமாகலைகளில் நீங்கள் எந்த கலைகளைச் சேர்ந்தவர்.உங்கள் பதிவுகளை எங்களுடன் பகிர்து கொள்ளுங்கள். 24 crafts of Cinema
--------------------------------
சினிமாவின் 24 கலைகள்

1. Direction Department: ( இயக்குனர் துறை)

இயக்குனர் துறையே “Captain of the ship” என அழைக்கப்படுகிறது.
ஒரு திரைப்படம் உருவாகி முடியும் வரை இயங்குவது இந்த பிரிவே. திரைப்படம் உருவாக தேவையானவற்றை மற்ற துறைகளைச் சார்ந்தவர்களிடமிருந்து அவர்களின் பங்கீட்டையும் உழைப்பையும் பெற்று திரைப்படத்தை உருவாக்குபவர்கள் இவர்களே. இதன் தலைமைப் பொறுப்பு இயக்குனரிடமே உள்ளது.

02. Cinematography ( ஒளிப்பதிவு):

சினிமா காட்சி ஊடகமாகும். கதையை அழகுமிகு காட்சிகளாக பதிவு செய்து கொடுப்பவர்கள் இத்துறையினர். கதை இருக்கோ இல்லையோ கேமரா இல்லாமல் திரைப்படத்தை உருவாக்க முடியாது.

03. Stunt Direction ( சண்டை பயிற்சி):

கதைக்கு ஏற்ப சண்டைக்காட்சிகள், சாகச காட்சிகளை உருவாக்கி தரும் துறையினர். ஒரு அதிரடி ஆக்‌ஷன் திரைப்படத்தில் இத்துறையின் பங்கு மிக முக்கியமானது. படத்தின் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைவது அந்த படத்துக்கு வழு சேர்க்கலாம்.

04. Dance Choreography ( நடன அமைப்பு)

இசையைப் போலவே நடனமும் முக்கியமாகும். பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களுக்கு நடனமும் அவசியம். ரசிகர்களின் பெரிய விருப்பம் இசையும் நடனமுமே.

05. Art Direction ( கலை அமைப்பு)

திரைப்படத்தின் காட்சிகளை உருவாக்க அமைக்கப் படும் கலை வேலைபாடுகளைச் செய்வது இத்துறை. கதை நிகழும் காலத்துக்கு ஏற்ப கட்டிடங்கள், வீட்டின் உட்புறம், வெளிப்புறம் என அனைத்தையும் அமைத்துக் கொடுப்பதும் பொருட்களால் அலங்கரிப்பத்தும் இத்துறையினரே.

06. Music ( இசை)

ஒரு திரைப்படத்தின் உயிர்நாடி என கருதப்படுவது இசை. கதையின் தன்மைக்கேற்ப, போக்குக்கேற்ப இசையமைப்பாளரால் இசை கோர்க்கப் படுகிறது. பாடல்களை உருவாக்குவதும், சிறப்பு சப்தங்களையும் தீர்மானிப்பதும் இத்துறையே.

07. Editing ( படத்தொகுப்பு)

திரைப்படம் காட்சிகளாக முழுமைப்பெறும் இடம் எடிட்டிங் மேசைதான். போஸ்ட் புரடக்‌ஷனில் முக்கியப் பணி இதுதான. ஒளிப்பதிவு செய்யப்பட்ட கதைக் காட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு கோர்வையான திரைப்படமாக இங்கே தான் ஆகிறது. மேலும் இங்கு color grading, VFX works போன்றவைகளும் உள்ளடங்கும்.

08. Cast ( நடிகர் தேர்வு)

திரையில் தெரியும் பிம்பங்கள் கதை மாந்தர்கள். கதையை உணர்வு பூர்வமாக நடித்து உருவாக்க Casting Director எனப்படுபவர் கதாப்பாத்திரங்களுக்கு தேவையான நடிக நடிகைகளை தேர்ந்தெடுத்து கொடுக்கிறார்.

09. Dubbing Artists ( பின்னணி குரல்)

திரைப்படத்தின் அத்தனை கதாபாத்திரங்களும் தங்கள் சொந்தக் குரலில் பேசுவது இல்லை. அதனால் சில பாத்திரங்களுக்கு பின்னணி குரல் கொடுப்பார்கள். குரல் கலைஞர்கள் திரைப்படத்துக்கு பலம் சேர்ப்பவர்கள்.

10. Photography (stills) ( புகைப்படங்கள்)

திரைப்படத்தின் விளம்பரத்துக்கும் வியாபாரத்துக்கும் முக்கியமாக பயன்படும் ஒரு ஊடகம் இது. படத்தின் போஸ்டர்கள், விளம்பர போர்டுகள் என பல வழிகளில் பயன்படும்.

11.Script ( கதை, திரைக்கதை, வசனம்)

ஒரு திரைப்படத்தின் ஆதாரம் ஸ்கிரிப்ட் தான். ச்கிரிப்டின் தேவைக்கு ஏற்பவே எல்லா துறையினரும் வேலை செய்கிறார்கள். ஒரு திரைப்படத்திற்கான ஸ்கிரிப்ட் சரியாக எழுதப்படும் போது மற்ற அனைவரின் உழைப்பும் அதோடு சேர்ந்து சிறந்த படம் கிடைக்கிறது.

12.Production Executive ( தயாரிப்பு நிர்வாகம்)

திரைப்படத்திற்கான முதலீட்டை தயாரிப்பாளர் இந்த துறையின் மூலம் செய்கிறார். படத்தின் வரவு செலவுகளை தீர்மானிக்கும் துறை. திரைப்படத்தின் வியாபாரத்தை கவனிப்பதும் இத்துறையே.

13.Makeup and Hair ( ஒப்பனை மற்றும் சிகையலங்காரம்)

கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அவர்கள் தத்ரூபமாக அழகாக, சிறப்பு ஒப்பனைககளாக காட்சியளிக்க உதவுபவர்கள் ஒப்பனை கலைஞர்கள்.

14.Costume Designing ( உடையலங்காரம்)

ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் பொருந்தும் படியும், கதைக்கு தேவையானபடியும் ஆடை அணிகலன்களை வடிவமைப்பவர்கள் இவர்கள்.

15.Publicity Designing ( விளம்பர வடிவமைப்பு)

திரைப்படம் மக்களை கவர்ந்து அவர்களிடம் சென்றடைய உதவுபவர்கள். திரைப்படத்தை பார்க்கத் தூண்டும் வகையில் விளம்பர யுத்திகளை பயன்படுத்துவது.

16. Audiography ( ஒலியமைப்பு)

திரைப்படத்திற்கான ஒலி பதிவு செய்யப் பட்டு இணைக்கப் படுவது. வசன டப்பிங், பின்னணி இசை மற்றும் சிறப்பு சத்தங்கள் என அனைத்தையும் காட்சிகளில் இணைக்கும் துறை.

17. Lightmen ( ஒளியமைப்பு)

அதிக எண்ணிக்கை வேலையாட்கள் கொண்ட துறை. வெளிப்புற ஒளிப்பதிவுக்கு தேவையான மின் விளக்குகள் மற்றும் பொருட்களை கொண்டு
ஒளியமைப்பு செய்து கொடுக்கும் துறை.

18. Set Workers ( படப்பிடிப்புத் தளப் பணியாளர்கள்)

கலை இயக்குனரின் கட்டுப்பாட்டில் இயங்கும் துறை. கதைக்கு தேவையான செட் மற்றும் பொருட்களை உருவாக்கி, ஏற்பாடு செய்து கொடுப்பவர்கள்.

19. Production Assistants ( தயாரிப்பு உதவியாளர்கள்)

திரைப்பட உருவாக்கத்தின் அனைத்து வேலைகளிலும் உதவியாக இருப்பவர்கள். படப்பிடிப்பு தளங்களில் அத்தனை ஏற்பாடுகளையும் செய்பவர்கள் இவர்களே.

20. vehicle Drivers ( வாகன ஓட்டுனர்கள்)

திரைபடம் உருவாக்க நிலையில் போக்குவரத்து மற்றும் பல பணிகளுக்கான வாகனங்கள் அனைத்தையும் இயக்குபவர்கள்.
ஜெனரேட்டர்களின் இயக்கமும் இவர்கள் கட்டுபாட்டில் தான் இருக்கும்.

21. Junior Artists Agents ( துணை நடிகர்களின் ஏஜண்ட்)

ஒருங்கிணைப்பாளர்கள் என அழைப்படும் இவர்கள் கதைக்கு தேவையான சிரிய கதாபாத்திரங்களை தேடித் தருபவர்கள். கூட்டமான காட்சிகளின் போதும் நடிகர்களை மக்கள் கூட்டதை ஏற்பாடு செய்பவர்கள்..

22. Outdoor Unit Technicians ( வெளிப்புற படப்பிடிப்பு தொழில் நுட்ப கலைஞர்கள்)

வெளிபுற படபிடிப்புக்கு தேவையானவற்றை ஏற்பாடு செய்து தரும் தொழிநுட்ப கலைஞர்கள்.

23. Production helper ( தயாரிப்பு உதவியாளர்கள்)

படப்பிடிப்பு தளத்தை தூய்மையாக வைத்திருக்கும் பணி இவர்களுடையது. மேலும் அனைத்து துறையினருக்கும் தேவையான உதவிகளைச் செய்பவர்கள்.

24 . Junior Artists ( துணை நடிகர்கள்)

திரைப்படத்தில் முக்கிய கதாப்பாதிரங்கள் போக துணைக் கதாப்பாத்திரங்களில் நடிக்க ஏராளமானவர்கள் அவசியப்படும். சின்னச் சின்ன வேடங்களை ஏற்று நடிப்பவர்கள்.

16/05/2020

உலகத் தமிழ் சினிமா
சுவிட்சர்லாந்து
——————-
இது ஒரு தமிழ் சினிமா தயாரிப்பு நிறுவனம் Itc Switzerland

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Itc Switzerland posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share