Pudukkottai News

  • Home
  • Pudukkottai News

Pudukkottai News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Pudukkottai News, Media/News Company, .

29/03/2023

test live

திறமையுள்ள படைப்பாளிகளுக்கு ஓர் வாய்ப்பு. காரைக்குடி நியூஸ் சேனல் வழங்கும் குறும்பட போட்டி சீசன் 1 முதல் பரிசு ரூ. 10,00...
21/09/2022

திறமையுள்ள படைப்பாளிகளுக்கு ஓர் வாய்ப்பு.

காரைக்குடி நியூஸ் சேனல் வழங்கும் குறும்பட போட்டி சீசன் 1
முதல் பரிசு ரூ. 10,000/-
இரண்டாம் பரிசு ரூ.3,000/-
மூன்றாம் பரிசு ரூ. 2000/-

விதிமுறைகள்:
1.குறும்பட போட்டியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். வயது வரம்பு இல்லை.

2.ஒரு நபர் ஒரு குறும்படம் மட்டுமே அனுப்ப முடியும். ஏற்கனவே பிற போட்டிகளில் கலந்து கொண்டதாகவோ, பரிசுகள் பெற்றதாகவோ இருக்கலாம். ஆனால் அவற்றை குறிப்பிட வேண்டும்.(வாட்டர் மார்க், லோகோ இல்லாமல் வீடியோவை அனுப்ப வேண்டும்)

3.குறும்படம் வீடியோ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருக்கலாம்.
பொழுதுபோக்கு, காதல், சமூக சிந்தனை என்று எதைப் பற்றி வேண்டுமானாலும் கதையின் கரு இருக்கலாம்.

4.குறும்படங்கள் வந்து சேர்ந்ததும் தகுதியுள்ள குறும்படங்கள் மட்டும் காரைக்குடி நியூஸ் Facebook மற்றும் YouTubeல் வெளியிடப்படும்.குறும்படத்தின் ஒரு நிமிட வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படும். . அதிக லைக்ஸ் மற்றும் பார்வைகள் (Views) பெறும் குறும்படங்கள் பரிசுகளுக்கு தேர்வாகும். மூன்று தளங்களிலும் பெறும் மொத்த பார்வைகள் (total views) கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பேஸ்புக் மற்றும் யூடியூபில் இரு மடங்கு மதிப்பெண்களும் இன்ஸ்டாகிராமில் ஒரு மடங்கு மதிப்பெண்களும் அதன் பார்வையாளர்களை பொறுத்து கூட்டப்படும். ( Facebook viewers × 2 + Youtube viewers × 2 + Instagram viewers × 1 = Total viewers) இதில் தீர்ப்பு வழங்குவது பார்வையாளர்கள் மட்டும்தான்.

5.படைப்புகளை குழுவாகவோ, தனி நபராகவோ அனுப்பலாம். சொந்த படைப்பு என்ற உறுதி மொழியும், ஆதார் அட்டையின் நகலும் அனுப்ப வேண்டும். தமிழகத்தில் இருந்து யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.

6.படைப்புகள் வந்து சேர்ந்ததும் ஒன்றன்பின் ஒன்றாக காரைக்குடி நியூஸ் சேனலில் (Facebook, YouTube, Instagram) வெளியிடப்படும்.

7. எங்கள் விதிமுறைகளுக்கு ஏற்றதாக இருக்கும் படைப்புகள் மட்டுமே வெளியிடப்படும். சிவகங்கை மாவட்ட படைப்பாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

8.படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி நாள் 12:10:2022 முடிவுகள் வெளியாகும் நாள் 15:10:2022

9.பரிசுகளுக்கு தேர்வு பெறுவோருக்கு புதுயுகம் தொலைக்காட்சி மற்றும் காரைக்குடி நியூஸ் இணைந்து நடத்தும் தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்தில் (நாள்: 16:10:2022
இடம்: கவியரசு கண்ணதாசன் மணி மண்டபம், காரைக்குடி) கவிஞர் சினேகன் உள்ளிட்ட பிரபலங்கள் கரங்களால் பரிசுகள் வழங்கப்படும். (விருது தொகை மற்றும் நினைவு பரிசு)

10.செல்போன்/ வீடியோ கேமரா உள்ளிட்ட எதில் வேண்டுமானாலும் படங்கள் எடுக்கலாம். வீடியோ ஆடியோ தரமாக இருக்க வேண்டும்.

11.குறும்படங்கள் அனுப்ப வேண்டிய ஈமெயில் - [email protected]

WhatsApp / Telegram - 9790597137 (only message)
தொலைபேசியில் அழைத்தல் கூடாது. சந்தேகங்களை மெசேஜ் மூலமாக கேட்க வேண்டும்.
(தரமான வீடியோக்களை நல்ல ரெசல்யூசனில் அனுப்புவதற்கு டெலிகிராம் எண் 9790597137 பரிந்துரைக்கப்படுகிறது)

குறும்படம் போட்டி பற்றிய சந்தேகங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 7548829514
பார்வையாளர்களே இங்கு நடுவர்கள். எனவே அதிக பார்வையாளர்கள் பெற நீங்களும் முயற்சி செய்யலாம் (share short film to your friends) ஆல் தி பெஸ்ட்!

11/07/2022

புதுக்கோட்டையில் உலக மக்கள் தொகை நாளை முன்னிட்டு அமைச்சர் ரகுபதி விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டு, உலக மக்கள் தொகை விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்....

30/06/2022

புதுக்கோட்டையில் கலாச்சார முறைப்படி சகோதரி மகள் பூப்புனித நீராட்டு விழாவிற்கு, தாய்மாமன்கள் லாரியில் சீர் கொண்டு வந்த சம்பவம் பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

24/06/2022

புதுக்கோட்டையில் கவிஞர் கண்ணதாசன் இலக்கிய சாரல் அமைப்பு சார்பில் கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

23/06/2022

புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு சார்பில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

22/06/2022

புதுக்கோட்டை சமஸ்தான மன்னர் ராஜா ராஜகோபால தொண்டைமான் நூற்றாண்டு விழாவையொட்டி முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

22/06/2022

புதுக்கோட்டையில் பாஜக இளைஞர் நலன் மேம்பாட்டுப் பிரிவு சார்பில் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

19/06/2022
புதிய சிலிண்டர் இணைப்புக்கான காப்புத் தொகை இணைப்பு ஒன்றுக்கு ரூ.1450  இல் இருந்து ரூ.2,200 ஆக அதிகரிப்பு.
16/06/2022

புதிய சிலிண்டர் இணைப்புக்கான காப்புத் தொகை இணைப்பு ஒன்றுக்கு ரூ.1450 இல் இருந்து ரூ.2,200 ஆக அதிகரிப்பு.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
14/06/2022

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

07/06/2022

புதுக்கோட்டையில் வீட்டின் பூட்டை உடைத்து சுமார் 27 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 25 ஆயிரம் ரொக்கத்தை
மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்...

07/06/2022

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்று நாள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது...

05/06/2022

புதுக்கோட்டையில் ஓயாத அலைகள் அறக்கட்டளை சார்பில் விருது வழங்கும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

03/06/2022

புதுக்கோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அடைக்கலம் காத்தார் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் விழா விமர்சையாக நடைபெற்றது.

01/06/2022

புதுக்கோட்டை மாட்சிமை தாங்கிய மன்னர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் மெய்யநாதன் மாணவர்களுக்கு அறிவுரை.

31/05/2022

புதுக்கோட்டையில் "மை பில் மை ரைட்" என்பதை வலியுறுத்தி ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டையில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெ...
31/05/2022

புதுக்கோட்டையில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

புதுக்கோட்டையில் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்திய பல் மருத்துவ சங்கம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணிக்கு புதுக்கோட்டை மாவட்ட தலைவர் டாக்டர் சபியுல்லா தலைமை வகித்தார்.

புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை காவல் உதவி ஆய்வாளர் ராஜகோபால் தொடங்கி வைத்தார்.

பழைய பேருந்து நிலையம் அருகே தொடங்கிய விழிப்புணர்வு பேரணி புதிய பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது.

பேரணியில் புகையிலையை தவிர்ப்போம் உயிரை காப்போம், புகையிலை நம் உயிருக்கே கேடு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் இந்திய பல் மருத்துவ சங்கம் மற்றும் மருத்துவ பிரதிநிதிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

22/05/2022

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை வாழ் மக்களுக்கு உதவிடும் வகையில் மொய் விருந்து நடத்தி அசத்தி வரும் புதுக்கோட்டை டீக்கடைக்காரர்...

12/05/2022

புதுக்கோட்டை அருகே மருந்தாந்தலையில் கோலாகலமாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு...

12/05/2022

புதுக்கோட்டை மாவட்ட கட்டிடப் பொறியாளர்கள் சங்க புதிய பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா நடைபெற்றது...

புதுக்கோட்டை மாவட்ட கட்டிடப் பொறியாளர்கள் சங்க 2022-2023ம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்கள் பணி ஏற்பு விழா தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

புதிய தலைவராக கண்ணன், செயலாளராக சரவணன், பொருளாளராக ராஜு ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

சங்கத்தின் மாநில முன்னாள் தலைவர் ராஜேந்திரன், மாநில துணை தலைவர் விஜயபானு, மாநில செயலாளர் குழந்தைவேலு ஆகியோர் புதிய பொறுப்பாளர்களை பணியமர்த்தி சிறப்புரையாற்றினர்.

11/05/2022

புதுக்கோட்டை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 27வது கிளையை டிவிஎஸ் நகரில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்...

10/05/2022

புதுக்கோட்டையில்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ்,
சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கவிதா ராமு துவக்கி வைத்தார்.

06/05/2022

புதுக்கோட்டை மாவட்ட செவித்திறன் குறைவுடையோருக்கான நடுநிலைப்பள்ளியை சேர்ந்த 43 மாணவர்களுக்கு 2.59 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார்..

26/04/2022

புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரியின் சார்பாக இன்று போட்டி தேர்வு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது....

21/04/2022

புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் வரலாறு மற்றும் சுற்றுலா பயண மேலாண்மைத் துறையின் மன்ற சிறப்புக்கூட்டம் நடைபெற்றது...

அரசமலையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில்    பொதுமக்களுக்கு இலவச தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கும் விழா நடந்ததுபுதுக்...
17/04/2022

அரசமலையில் அதிமுக வடக்கு ஒன்றியம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச தர்பூசணி மற்றும் நீர் மோர் வழங்கும் விழா நடந்தது

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அரசமலையில் அதிமுக தெற்கு மாவட்டம் சார்பில் கோடை காலத்தில் பொது மக்கள் தாகம் தணிக்கும் வகையில் இலவசமாக தர்பூசணி பழம் மற்றும்
கோடைகால நீர் மோர் பந்தலை அதிமுக புதுக்கோட்டை தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் பிகே வைரமுத்து திறந்து வைத்து பொது மக்களுக்கு வழங்கினார்
இதில் சுமார் நாள்தோறும் அப்பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தல்
அமைக்கபட்டு வழங்கி வருகின்றனர்
நீர் மோர் பானகம் மற்றும் தர்பூசணி வழங்கப்படுவது அப்பகுதியில் உள்ள மக்களுக்கு மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதில் தண்ணீர்பந்தலை பொன்னமராவதி அதிமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அரசமலை முருகேசன் ஏற்பாடு செய்திருந்தார். இதில் நீர் மோர் பானகம் மற்றும் தர்பூசணி உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் விராச்சிலை, தொழிலதிபர் குமாரசாமி மற்றும் மாவட்ட கவுன்சிலர் குழிபிறை பாண்டியன்,மாவட்ட மாணவரணி செயலாளர் ஆலவயல் சரவணன்,
பொன்னமராவதி வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற ஒன்றிய செயலாளர் ஆர்.எம்.எஸ்.சேகர் உட்பட மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வேந்தர் தொலைக்காட்சி நடத்திய சித்திரைத் திருநாள் பட்டிமன்றத்தில் "சிறந்த சமூக ஆசிரியர்" விருது பெற்றார் மௌண்ட் ஆலிவ் மெட...
12/04/2022

வேந்தர் தொலைக்காட்சி நடத்திய சித்திரைத் திருநாள் பட்டிமன்றத்தில் "சிறந்த சமூக ஆசிரியர்" விருது பெற்றார் மௌண்ட் ஆலிவ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை வணிகவியல் ஆசிரியர் ஆ. மாணிக்கம்.

12/04/2022

நார்த்தாமலை தேர் திருவிழா

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா. பக்தர்களால் நிரம்பிய புனித ஸ்தலம்.
11/04/2022

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி திருவிழா. பக்தர்களால் நிரம்பிய புனித ஸ்தலம்.

11/04/2022

புதுக்கோட்டை டி.இ.எல்.சி சீயோன் ஜூபிலி ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு என்று சொல்லப்படும் பவனியில் சிறப்பாக நடைபெற்றது.

புதுக்கோட்டை TELC மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்மான்சிங்  ஏற்பாட்டில் மரக்கன்று நடும் நிக...
09/04/2022

புதுக்கோட்டை TELC மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ்மான்சிங் ஏற்பாட்டில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தாளாளர் ஜெயசிங், தலைமை ஆசிரியர் ஜோயல் கனகராஜ் தலைமை தாங்கி மரக்கன்றுகளை நட்டுவைத்து சிறப்புரையாற்றினார். மேலும் இந்நிகழ்வில் உடற்கல்வி இயக்குனர், ஆசிரியர்கள், மற்றும் மாணவ , மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

08/04/2022

புதுக்கோட்டை மாவட்ட அளவில் இரண்டு நாட்கள் நடைபெற்ற அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கான பூப்பந்தாட்ட போட்டியில் புதுக்கோட்டை TELC மேல்நிலைப்பள்ளி முதல் இடத்தை பெற்று வெற்றி கோப்பையை கைப்பற்றியது.

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Pudukkottai News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share