The Times Of Sri Lanka

  • Home
  • The Times Of Sri Lanka

The Times Of Sri Lanka Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Times Of Sri Lanka, Media/News Company, Colombo, .

இன்றைய வானிலை முன்னறிவிப்பு.-------------------------------------------நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரா...
12/01/2023

இன்றைய வானிலை முன்னறிவிப்பு.
-------------------------------------------

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

"காற்று"

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-35 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

"கடல் நிலை"
காங்கேசந்துறையிலிருந்து மன்னார் மற்றும் புத்தளம் ஊடாக கொழும்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் மிதமான அலையுடன் காணப்படும்.

-Admin-

ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன் ; வீதிகளில் குவியும் சடலங்கள்!--------------------------------------...
12/01/2023

ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்களை கொன்று குவித்த உக்ரைன் ; வீதிகளில் குவியும் சடலங்கள்!
-------------------------------------------

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்ய வீரர்கள் தொடர்பில் உக்ரைன் முக்கிய அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளது.

இருதரப்பும் நாளுக்கு நாள் தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில் தங்களுக்கு எதிரான போரில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதல் காரணமாக பாக்முட் நகரின் வீதிகளில் ரஷ்ய வீரர்களின் உடல்கள் குவிந்து கிடப்பதாகவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உக்ரைனின் உப்பு சுரங்க நகரம் எனக் கூறப்படும் சோலேடார் நகரில் இரு தரப்புக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த 10 மாத கால யுத்தத்தில் ஒரே நாளில் 710 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உக்ரைன் இராணுவம் கூறியுள்ளது.

இன்று 12 மணித்தியாலம் நீர் விநியோகம் தடை.--------------------------------பல பிரதேசங்களில் இன்று(12)12 மணித்தியால நீர் வெ...
12/01/2023

இன்று 12 மணித்தியாலம் நீர் விநியோகம் தடை.
--------------------------------

பல பிரதேசங்களில் இன்று(12)
12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இன்று(12) காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிரிய, ஹொரண, பண்டாரகம, வல்மில்ல, பாணந்துறை, கெசல்வத்தை, மொரட்டுவ, கிரிபேரிய, பிலியந்தலை, கஸ்பேவ, வதர, மடபட, கும்புக மற்றும் ரைகம ஆகிய பிரதேசங்களில் நீர் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசேட சலுகைகளுடன் விளம்பர தொடர்புகளுக்கு DM..

- Admin -

தவிர்க்க முடியாத காரணத்தால் கடவந்த காலங்களில் செய்திகளை வெளியிடுவது கடினமாக இருந்தது. எதிர்காலத்தில், அந்த தவறுகள் மாற்ற...
12/01/2023

தவிர்க்க முடியாத காரணத்தால் கடவந்த காலங்களில் செய்திகளை வெளியிடுவது கடினமாக இருந்தது. எதிர்காலத்தில், அந்த தவறுகள் மாற்று வழிகளில் நிவர்த்தி செய்யப்படும்..

Due to the inevitability of our media, posting news was difficult. In the future, those mistakes will be addressed through alternative means..

-Admin -

இலங்கைக்கு விதிக்கப்பட்டது தடை.------------------------------------------இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அட...
11/01/2023

இலங்கைக்கு விதிக்கப்பட்டது தடை.
------------------------------------------

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து நாளாந்தம் பெருந்தொகை பணத்தை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டு வந்தது.இதனால் பாரியளவில் பணவீக்கம் ஏற்பட்டு பொருட்களின் விலைகளும் அதிகரித்திருந்தன.

இந்த நிலையில் தொடர்ந்தும் பணம் அச்சிடுவதை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

“சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும் நாங்கள் தொடர்ந்து பணத்தை அச்சடித்து கடன் வாங்கி வருவதால்தான், எங்களால் கடனை அடைக்க முடியாமல், கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இப்போது நாம் கடனாளிகளுக்கு அந்தக் கடன்களை செலுத்தாத காரணத்தால் சர்வதேச நாணய நிதியம் மற்றும் பிற கடன் வழங்கும் நிறுவனங்கள் பணம் அச்சிடுவதை தடை செய்துள்ளனர். பணத்தை வடிவமைக்க அனுமதி இல்லை. அந்தச் சூழ்நிலையில்தான் நாட்டின் நிதியை நிர்வகிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

𝐀𝐃𝐌𝐈𝐍

தத்தெடுத்த மகனினால் கொல்லப்பட்ட தாய்..மாத்தறை கோவில் மாவத்தையில் சம்பவம்.-----------------------------------------(காலி ...
11/01/2023

தத்தெடுத்த மகனினால் கொல்லப்பட்ட தாய்..மாத்தறை கோவில் மாவத்தையில் சம்பவம்.

-----------------------------------------

(காலி நிருபர் )

குளியலறையில் தவறி விழுந்து தனது தாய் கொல்லப்பட்டதாக காட்ட முயன்ற மகன் ஒருவரை மாத்தறை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.

முதலில் தாயை தலையில் கட்டையால் தாக்கி கொல்ல முயன்று காயம் அடைந்தும் சாகாததால் கழுத்தை நெரித்து கொன்றதாக போலீசார் கூறுகின்றனர்.

பின்னர் அவரது சடலத்தை குளியலறைக்கு எடுத்துச் சென்று அங்கு வைத்து குளியலறையில் தவறி விழுந்து இறந்ததாகக் காட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மாத்தறை கோவில் மாவத்தையை சேர்ந்த பாத்திமா சரீனா என்ற பெண்ணே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவளுக்கு 59 வயது. அவரது 35 வயது மகன் முகமது தஸ்ரி கைஸ் என்பவரால் அவர் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த மகனை அந்த பெண் தத்தெடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. அவர் திருமணமாகி கொழும்பு தெமட்டகொடையை வசிப்பிடமாகக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த பெண் தனது சொத்துக்கள் அனைத்தையும் மகனுக்கு எழுதி வைத்துள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பெண்ணின் மரணத்தின் பின்னர் அனைத்து சொத்துக்களும் தனக்கு சொந்தமாகி விடும் என்பதால், சொத்துக்களை முன்கூட்டியே பெற்றுக்கொள்ளும் நோக்கில் தாயாரை கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனையின்றி தாயின் சடலத்தைப் பெறுவதற்கு இந்த நபர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆனால் தடயவியல் மருத்துவர்கள் அதைச் செய்யாமல் பிரேதப் பரிசோதனையின்போது கழுத்தை நெரித்து மரணம் நிகழ்ந்ததை உறுதி செய்தார்.அதன்படி சந்தேக நபரை கைது செய்த பொலிசார் விசாரணையில் அனைத்தும் தெரியவந்துள்ளது..

Leo Mr.Mohamed Farook Najeeth, was appointed Sri lanka Youth Ambassador Of "The independent State of Papua New-Guinea" 2...
03/01/2023

Leo Mr.Mohamed Farook Najeeth, was appointed Sri lanka Youth Ambassador Of "The independent State of Papua New-Guinea" 2023/01/01

Her posts in Sri Lanka include Active Citizens of British Council Sri lanka, Manager Of Hillf SSC-Sri Lanka (NGO ).


Her overseas posts include Vice President of AL-Arafath Youth Club, Member of NYSC Federation, Member of National Peace Council,
Volunteer of UN, Red Cross - Sri Lanka, Muslim Aid- Sri Lanka,
Sri lanka Unites , Zola-Help Sri Lanka,SRC-Sri lanka etc..

He was born in (Ampara )and studied at Ak-Minhaj Maha Vidyalaye (National School) ,
Al- Ashraq National School ,
represented the school in track and field events.
, Sports Man & Best Social Worker.

Higher studies are Diploma in English from American Corner Kandy, Human Resource Management From Open University Of Sri lanka, NDT in Civil Engineering, Diploma in Sinhale (R)
LLB(R) Etc...

May God shower his blessings on you today. All the best.

By:- Team The Times Of Sri Lanka

06/08/2022

#தொலைந்து போன கண் பார்வையைமீண்டும் கொடுத்த #அல்லாஹ்
குவைத்தில் பல வருடம் பணி புரிந்த அப்துல்சலாம் பாய்

#ஒருநாள் உணவருந்தும் போது தும்மல் ஏற்பட்டுருக்கிறது
தும்மல் முடிந்து கண்ணைதிறந்த போது கண் தெரிய வில்லையாம்
#மீண்டும் பார்வை எப்படி வந்தது
அவரே அந்த அதிசயத்தை சொல்கிறார்

#இன்று மயிலாடுதுறை ஹலிமா பள்ளியில் நாம் லுஹர் தொழுத பின் நாம் அவரை சந்தித்த வேலையில்!

#எந்த பள்ளிக்கு சென்றாலும் அதான்(பாங்கு )சொல்வதை விடுவதில்லை அதை பெரும் பாக்கியமாக கருதுகிறார்
இதை நம்மிடம் தெரிவித்தார்!

#இறைவனிடம்_கையேந்துவோம்_அவன்இல்லையென்று_சொல்லுவதில்லை

Love the nation and our game.We Sri Lankans 🇱🇰 ❤
17/06/2022

Love the nation and our game.

We Sri Lankans 🇱🇰 ❤

தோப்பூரில் சிறுமி கடத்தல் முயற்சி இன்னுமொரு சிங்கச் சிறுமியால் முறியடிப்பு.---------------------------------------------...
30/05/2022

தோப்பூரில் சிறுமி கடத்தல் முயற்சி இன்னுமொரு சிங்கச் சிறுமியால் முறியடிப்பு.
----------------------------------------------------------------------

தோப்பூர் சின்னப் பள்ளிவாயலுக்கு அருகில் உள்ள வீதியில் வைத்து ஆட்டோ காரில் வந்த சிலர் சிறுமி ஒருவரை கடத்த முற்பட்டபோது அம் முயற்சி படுதோல்வியில் முடிவடைந்துள்ளது.

இச்சம்பவம் இன்று (30) மாலை இடம்பெற்றுள்ளது.

இரண்டு சிறுமிகள் வீதியால் வந்து கொண்டிருந்தபோது ஆட்டோ காரில் வந்தவர்கள் சிறுமியொருவரின் கையைப்பிடித்து இழுத்து காரில் ஏற்றுவதற்கு முற்பட்டபோது மற்றைய சிறுமி தனது நண்பியை பிடித்து இழுத்து காப்பாற்றியுள்ளார்.காப்பாற்றப்பட்ட சிறுமியின் கையில் நகக் கீரல் ஒன்றும் காணப்படுகின்றது.உண்மையில் நண்பியைக் காப்பாற்றிய அந்த சிறுமியின் தைரியத்திற்கு பெரியதொரு சல்யூட்.

வீட்டில் இருக்கும் உங்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்பும்போது கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

தனது நண்பியை காப்பாற்றிய சிங்கப்பெண் சிறுமியே படத்தில் உள்ளவர்.

யூரியாவில் கலப்படம்.விவசாயிகளே விழிப்பாக  இருப்போம்.உர முகவர்கள்,உரக்கம்பனி,தரகர்களிடம் ஏமாறவேண்டாம்.இது ஒரு விழிப்புணர்...
27/04/2022

யூரியாவில் கலப்படம்.

விவசாயிகளே விழிப்பாக இருப்போம்.
உர முகவர்கள்,
உரக்கம்பனி,
தரகர்களிடம் ஏமாறவேண்டாம்.
இது ஒரு விழிப்புணர்வுப்பதிவு.

இன்று என்னுடைய நெல் வயலுக்கு 01வது மேற்கட்டு பசளையிடுதற்கு அக்கரைப்பற்றிலுள்ள பிரபல உரமுகவரின் கடைக்குச் சென்று
02 அந்தர் யூரியா பசளையை ரூபா 80,000/= கொடுத்து கொள்வனவு செய்து
வயலுக்கு ஏற்றிச்சென்றேன்.
நம்பிக்கையின் அடிப்படையில் பற்றுச்சீட்டு பெறவில்லை.

அங்கு சென்று யூரியா பசளை பேக்கினை பிரித்து படங்கில் கொட்டியபோது.
உண்மையான சிறிய மணி யூரியாவைகாணமுடியாமல்
சிறியமணியும், தூள்கலந்த கலவையுமாக காணக்கூடியதாக இருந்தது.
இதனால் பெரும் சந்தேகமடைந்தநான்
ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டேன்.ஆராய்ச்சி செய்வதற்கான எனது தகைமை.

01.விவசாய டிப்ளோமா 1980/81 குண்டசாலை.

02.37வருட சிரேஸ்டதர விவசாயப்
போதனாசிரியர்(,ஓய்வு நிலை.)
விவசாயத்திணைக்களம்.

03.நெற்பயிருக்கான விஷேடபாடவிதான உத்தியோகத்தர்(SMO).
16 வருடம் அனுபவம்.

04.நெற்பாடவிதான உத்தியோகத்தர் பயிற்சிRRDl பத்தலகொட01வருடம்.

05_30வருட தொடர்ச்சியான நெல்_ விதைநெற்செய்கை.

படம்01 _கொள்வனவு செய்த யூரியா.

படம்02 _01kgயூரியா மாதிரி எடுத்தது.

படம்03_சிறியகண் மாவுஅரிக்கும் தட்டினால் அரித்து வேறாக்கப்பட்டது.

படம்04_அரித்துவேறாக்கப்பட்ட தூள்வடிவ பொருளும்,சிறிய யூரியா மணியும் (வெவ்வேறாக).

படம்05_தூள்வடிவ பொருள் 210gr.

படம்06_யூரியா மணி 790gr.

01kg.யூரியாவில்அரித்துப்பெறப்பட்ட தூள்வடிவிலானபொருளை பொளதீகரீதியாகவும்.

சுவை/மணம், மூலமும்,
நீரில்கரையும்தன்மையிலும்,
எனது அனுபவரீதியாகவும்,
எனதறிவிற்கேற்ப,
ஒரு முடிவுக்கு வந்தேன்.

01_கொள்வனவுசெய்யப்பட்ட 50kgயூரியாவில்(01kg/210gr தூள் பொருள்)=10500gr=கிட்டத்தட்ட _10kg
தூள்வடிவிலான,வெண்ணிறமான அமோனியம் சல்பேற்(எங்கள் விவசாயிகளின் பெயர் வழக்கப் படி உப்புப்பயளை).கலக்கப்பட்டுள்ளது.

உண்மையான யூரியா உரத்தில்!!!!
உரமணிகளுடன்
வெண் தூள்வடிவிலானபொருள்100kg/01-02kgவரை பையூரேற் டிஎன்ற பொருள்காணப்படுவது வழக்கம்
இந்த பையூரேற்_யூரியா100kg/ 03-04kgவரைஇருந்தால் நெற்பயிருக்கு நச்சுத்தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

எனவே பிரித்தெடுக்கப்பட்ட பொருள் பையூரேற்றாக இருக்க முடியாது.

யூரியாவிலுள்ள பையூரேற்றை இலகுவாக அறிவதற்கு யூரியா உரம் பையினுள் வியர்வை சிந்திய மணிக்கட்டு வரையான மனிதனின் கையை புதைத்து எடுத்தால் சிறிய வெண் தூள்வடிவிலானபொருள் கையில் ஆங்காங்கே ஒட்டிக்கொண்டிருக்கும்.இது100kgயூரியாவுக்கு/01-02kgஅளவே காணப்படும்.

விவசாயிகளின் கவனத்திற்கு?
உரமாபியாக்களிடம் கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

உரம் கொள்வனவின்போது
நிறையிலும் தரத்திலும் மோசடிகள் நடைபெறுகின்றது
மேற்படி 50kgrயூரியாவில்/10kgrஅமோனியம்சல்பேற்றை கலந்து
ரூபா40,000/=
இந்தக்கலப்படம் உரமுகவரால் நிச்சயமாகசெய்திருக்கவாய்ப்பில்லை?

பிரபல உரக்கம்பனிகளே விவசாயிகளின் வயிற்றிலடிக்கிரார்கள்.
மேற்படி உரக் கம்பனிக்கு இப்பதிவை அனுப்ப இருக்கிரேன்.

சட்ட நடவடிக்கைக்கு பற்றுச்சீட்டுக்கேட்டால்????????????
பற்றுச்சீட்டு வழங்காவிடின் மிகுதிப்பணம்?????.????????????????????????.

-அகமதுலெப்ப முபாறக்-

19/04/2022



ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் பதற்றம்.

ஒருவர் உயிரிழப்பு.

போலீசார் நடத்திய துப்பாக்கி
சூடு காரணமாக
மேலும் 07 பேர் வைத்தியசாலையில் அனுமதி...

இப்படியான தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள எமது பக்கத்தை
Like & Share செய்யவும்.





24/02/2022

Russian soldiers landing by parachute in Ukraine.

உக்ரைனில் பாராசூட் மூலம் தரையிறங்கும் ரஷ்யாவின் இராணுவ வீரர்கள்....

Ukraine says Russia has launched a full-scale invasion as explosions are heard in cities around the country.
24/02/2022

Ukraine says Russia has launched a full-scale invasion as explosions are heard in cities around the country.

Sri Lanka Navy made arrangements to provide safe passenger transport service at Kurinchankerny bridge commencing from to...
26/11/2021

Sri Lanka Navy made arrangements to provide safe passenger transport service at Kurinchankerny bridge commencing from today. The residents in the area will be able to use this mode of transportation until the construction of the Kurinchankerny Bridge completed..




27/10/2021
22/10/2021

ஏறாவூர் வாவிக்கறை பூங்காவில்
இன்று ஏறாவூர் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிசாரால் படு மோசமாக தாக்கப்படும் சிறுவன்..




மின் பட்டியல் தயாரித்தலும்-தெளிவும்.______________________________________________மின் பட்டியல், பாவித்த அலகுகளை மாத்திர...
23/06/2021

மின் பட்டியல் தயாரித்தலும்-தெளிவும்.
______________________________________________

மின் பட்டியல், பாவித்த அலகுகளை மாத்திரமின்றி பாவித்த நாட்களையும் கவனத்தில் கொண்டே தயாரிக்கப்படுகின்றன்.

60 அலகுகள் வரையான பாவனை-
00-30 அலகுகள் @ 2.50 (30)*
31-60 அலகுகள் @ 4.85 (60)*
()*-நிலையான அறவீடு.

30 நாட்களில் மின்பட்டியல்-
00-30 அலகுகள் என்பது,
ஒரு நாளுக்கான சராசரிப் பாவனை (1) அலகையும்,
31-60 அலகுகள் என்பது,
ஒரு நாளுக்கான சராசரிப் பாவனை (2) அலகுகளையும் குறிக்கும்.

28 நாட்களில் மின்பட்டியல்-
00-28 (1 அலகு × 28 நாட்கள்)
29-56 (2 அலகு.× 28 நாட்கள்)

32 நாட்களில் மின்பட்டியல்-
00-32 (1 அலகு × 32 நாட்கள்)
33-64 (2 அலகு.× 32 நாட்கள்)

60 அலகுகளுக்கு மேற்பட்ட பாவனை-
00-60 அலகுகள் @ 7.85 (00)*
61-90 அலகுகள் @ 10.00 (90)*
91-120 அலகுகள் @ 27.75.(480)*
121-180 அலகுகள் @ 32.00 (480)*
180மேல் அலகுகள் @ 45.00 (540)*

30 நாட்களில் மின்பட்டியல்-
60-90 அலகுகள் என்பது,
ஒரு நாளுக்கான சராசரிப் பாவனை (3) அலகுகளையும்,
91-120 அலகுகள் என்பது,
ஒரு நாளுக்கான சராசரிப் பாவனை (4) அலகுகளையும்,
121-180 அலகுகள் என்பது,
ஒரு நாளுக்கான சராசரிப் பாவனை (6) அலகுகளையும் குறிக்கும்.

30 நாட்களுக்கான,140 பாவித்த அலகுகளுக்கு மின் பட்டியல் தயாரித்தல்-
(60×7.85) + (30×10.00) + (30×27.75) + (20×32.00) + 480 = 2723.50.

28 நாட்களுக்கான,140 பாவித்த அலகுகளுக்கு மின் பட்டியல் தயாரித்தல்-
(56×7.85) + (28×10.00) + (28×27.75) + (28×32.00) + 480 = 2872.60.

32 நாட்களுக்கான,140 பாவித்த அலகுகளுக்கு மின் பட்டியல் தயாரித்தல்-
(64×7.85) + (32×10.00) + (32×27.75) + (12×32.00) + 480 = 2574.40.
இவ்வாறே மின் பட்டியல் தயாரிக்கப் படுகின்றன...

ஈரான் இன்று வெளியிட்ட “காஸா” ட்ரோன்!சுமார் 2000 கிலோமீற்றர் தூரம் வரையில் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஆளில்லா விமானம் ஒ...
21/05/2021

ஈரான் இன்று வெளியிட்ட “காஸா” ட்ரோன்!

சுமார் 2000 கிலோமீற்றர் தூரம் வரையில் சென்று தாக்கும் வல்லமை கொண்ட ஆளில்லா விமானம் ஒன்றை ஈரான் இன்று அறிமுகம் செய்துள்ளது!

“காஸா” என பெயரிடப்பட்டுள்ள இந்த ஆளில்லா விமானம் ஒரே தடவையில் சுமார் 13 குண்டுகளை எடுத்து செல்லக்கூடியது, மேலும் 500Kg எடையில் உபகரணங்களையும் எடுத்து செல்லும் சக்திவாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது!

's IRGC unveiled today a new drone called " ," which is allegedly capable of carrying 13 bombs more than 2,000 km in combat missions, as well as carrying 500 kg of reconnaissance equipment.

21.05.2021

பல்கலைக்கழகங்களில் இம்முறை மேலதிகமாக 16 புதிய கற்கைநெறிகள் அறிமுகம்._____________________________________________அண்மையி...
21/05/2021

பல்கலைக்கழகங்களில் இம்முறை மேலதிகமாக 16 புதிய கற்கைநெறிகள் அறிமுகம்.
_____________________________________________

அண்மையில் வெளிவந்த 2020ம் ஆண்டு உயர்தரப் பரிட்சை எழுதிய மானவர்களுக்கான பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டல் நூல் இன்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் 2020 உயர்தரப் பரிட்சைக்கான உத்தேச அனுமதி 41,755 ஆக வெளியிடப்பட்டுள்ளது. அதாவது சென்ற வருடத்தை விட 7594 மாணவர்கள் மேலதிகமாக(சென்ற வருடம் 34161 மாணவர்கள்) உள்ளீர்க்கப்படவுள்ளனர்.

அத்தோடு ஏற்கனவே உள்ள 114 கற்கைநெறிகள் உள்ளடங்களாக இம்முறை மேலதிகமாக 16 கற்கைநெறிகள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் க.பொ.த உயர்தர ஒவ்வொரு பிரிவுகளிலும் புதிய கற்கைநெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அவற்றில் மிக முக்கியமாக உயர்தரக் கணிதப் பிரிவு மாணவர்களுக்கும், கணிதப்பிரிவில் தகவல் தொடர்பாடல் தொழினுட்பத்தை ஒரு பாடமாக கற்கும் மாணவர்களுக்கு விசேடமாக

>செயற்கை நுண்ணறிவு விஞ்ஞான கெளரவமானி [BSc Hons(Artificial Intelligence), Moratuwa]

>இலத்திரணியல் மற்றும் கணினி விஞ்ஞானம் விஞ்ஞான கெளரவமானி [Bsc Hons (Eltnc & Comptr Sci), Kelaniya]

மேலும் உயிரியல் விஞ்ஞானப் பிரிவு மாணவர்களுக்காக,

> Bsc Hons (Occupational Therapy)
> BSc Hons (Optometry)
> BSc Hons (Applied Chemistry)
> BSc Hons (Indigenous Medicinal Resources)
> BSc (AquaticBioresources)
> BSc Hons (Urb Bioresources)

மேலும் தொழினுட்பப் பிரிவு மாணவர்களுக்கென்று புதிதாக

> BHSc Hons(ICT)
> BHSc Hons (Biomedical Technology)
> BHSc Hons (Indigenous Pharmaceutical Technology) ஆகியனவும்

வணிகப்பிரிவு மாணவர்களுக்கு,

> BBM (Accounting Information System), Kelaniya

கலைப்பிரிவு மாணவர்களுக்கு,

> BA Hons (IT), Sri Jayawardenapura

அத்தோடு ஏனைய பிரிவுகள் மற்றும் பொதுவான சில கற்கைநெறிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

புதிய கற்கைநெறிகள் அனைத்தும் தொழில்நுட்ப தொழிற்சந்தையினை மையபப்டுத்தி புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே 2020 உயர்தர மாணவர்கள் உங்களுக்கு முன்னராக பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள், உரிய பிரிவு ஆசிரியர்களின் ஆலோசனையோடு உங்களுக்கு பொருத்தமானதும் சரியானதுமான கற்கைநெறிகளை தெரிவு செய்யுமாறு வேண்டிக் கொள்கின்றேன்.

வழிகாட்டல் நூலினை தரவிறக்கம் செய்ய
https://bit.ly/3hCxoMO

21/05/2021

Detroit, Michigan, USA. More than a quarter of a million people are cheering for Palestine and denouncing the occupation.

This is the largest pro-Palestinian rally in American history.

Times of Srilanka

லுணுகலயில் இருந்து கொழும்புக்கு சென்ற NCG தனியார் பஸ் இன்று காலை 6.55பசறை  13ம் கட்டை மெத்தக்கடை  பகுதியில் பள்ளதில் வீழ...
20/03/2021

லுணுகலயில் இருந்து கொழும்புக்கு சென்ற NCG தனியார் பஸ் இன்று காலை 6.55
பசறை 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் பள்ளதில் வீழ்ந்து கோர விபத்து..

விபத்தில் இதுவரை 13 பேர் பலி, 31 பேர் படுகாயம்..

The Times Of SriLanka

2021/03/20

10/03/2021

Dead humanity
Location Kurunegala Sri Lanka No one thought that the same situation might happen to us tomorrow !!!!

Everyone who passed by him would have to answer for his death
Look at the Last vehicle.

மரனித்து போன மனிதாபிமானம்
இடம் குருநாகல் நாளை எமக்கும் இதே நிலை வரக்கூடும் என்று ஒருவரேனும் சிந்திக்கவில்லையே!!!!

இவரின் மரனத்திற்கு இவரை தான்டி சென்ற அனைவரும் பதில்கூற வேண்டும் டிப்பார்
வாகனம் அடித்து செல்வத்தை பாருங்கள்.

මිය ගිය මනුෂ්‍යත්වය
ස්ථානය කුරුණෑගල හෙට අපටත් එවැනිම තත්වයක් ඇති වේ යැයි කිසිවෙකු සිතුවේ නැත !!!!

ඔහු පසුකර ගිය සෑම කෙනෙකුම ඔහුගේ මරණයට පිළිතුරු දිය යුතුය
අන්තිම වාහනය දෙස බලන්න.💔💔💔💔

The Times Of Srilanka.

PM Imran Khan inaugurated "Heritage Trail" at the historical site of Nandana Fort today.The trail will be a gateway to r...
28/02/2021

PM Imran Khan inaugurated "Heritage Trail" at the historical site of Nandana Fort today.

The trail will be a gateway to rich archeological sites of Nandana Fort & Temple, Shiva Temple of Katas Raj, Khewra Salt Mines, Malot Fort & Temples and Takht-e-Babri

..

22/02/2021

ඇත්තටම මේ වගෙ නිළදාරීන් පොලිස් සේවයට මොකට එනවද කියල කියන්නත් ලැජ්ජයි..!

වාහනයක් හදිසියේ හැප්පුනොත් අනතුරක් වලක්වාගැනීමට කටයුතු නොකිරීම කියල දඩකොලත් ලියන මේ නිලදාරීන් මහ පාරේ මනුස්සයෙකුට කොටනවා දැක දැකත් හැරිලයන්නේ..!

මොන තරන් නිවටයිද මේ මිනිස්සු..!

உண்மையில், இதுபோன்ற அதிகாரிகள் ஏன் காவல்துறையில் சேவைக்கு வருகிறார்கள் என்று சொல்ல வெட்கக்கேடானது ..!

ஒரு வாகனம் திடீரென மோதினால் விபத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததற்காக அபராதம் எழுதும் இந்த அதிகாரிகள் சாலையில் ஒருவர் தாக்கப்படுவதைக் கண்டதும் திரும்பிச் செல்கிறார்கள் ..!

என்ன ஒரு கோழை ..!

நடு வீதியில் ஒரு பெண்னை கத்தியால் தாக்கும் நபர்.!

In fact, it is a shame to say why such officers come to the service of the police ..!

These officers who write fines for not taking action to prevent an accident if a vehicle suddenly collides go back when they see someone being attacked on the road ..!

What a coward ..!

The Times Of Srilanka.

வவுனியாவில் காணப்பட்ட அரியவகை உயிரினம்! _____________________________________________வவுனியா ஓமந்தைக் காட்டு பகுதியில் வ...
02/11/2020

வவுனியாவில் காணப்பட்ட அரியவகை உயிரினம்!
_____________________________________________

வவுனியா ஓமந்தைக் காட்டு பகுதியில் விநோதமான அரணை ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கே மட்டும் உரித்தான Dasia halianus எனும் உயிரியல் பெயருள்ள இந்த தனித்துவம் மிக்க அரணை வன்னிக் காடுகளில் காணபட்டபோதிலும் மிக அரிய ஒரு இனமாகவே இருந்துவந்துள்ளது.

பெரும்பாலும் மரங்களிலேயே வாழும் இந்த அரணை ஒரு சில தினங்களுக்கு முன் வவுனியா ஓமந்தைக் காட்டில் படமாக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாடின் தனிஹ்துவமான ஒரு அரியவகை உயிரினமாக இது இருப்பதனால் 70ஆம் ஆண்டுகளில் வந்த இரண்டு ரூபா நாணயத்தாளில் இதன் படம் காணப்படுவதை அவதானிக்கலாம்.







30/10/2020



covid-19 உறுதி செய்யப்பட்டுள்ள ஒரு இளம் பெண்ணின் அறிவுரை...

இப்படியான தகவல்களை அறிந்துகொள்ள எமது பக்கத்தை Like &
அதிகமாக Share செய்யவும்.







கனேடாய பிரதமர் JUSTIN TRUDEAU France தேவாலய தாக்குதலை இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் அல்ல.._______________________________...
30/10/2020

கனேடாய பிரதமர் JUSTIN TRUDEAU
France தேவாலய தாக்குதலை இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் அல்ல..
________________________________________________

நேற்று France நாட்டின் Nice நகர் தேவலாயத்தில் நடை பெற்ற தாக்குதலில்
3 பேர் கொல்லப்பட்டனர் இத்தாக்குதலில் Tunis நாட்டை சேர்ந்த ஒருவர் தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டது இந்த தகவல் வெளிவந்ததும் Tunis அரசாங்கம் அந்த நபருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவித்திருந்தது, அது போல் French Council of the Muslim
Faith இந்த தாக்குதலை கண்டித்து இதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை என்று தெரிவித்துள்ளது,இவ் அறிக்கைகளை தொடர்ந்தும் French பிரதமர் Emmanuel Macron,Nice தாக்குதல் இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் French பிரதமர் Emmanuel Macronக்கு பதிலடி தரும் விதத்தில் Canada பிரதமர் Justin Trudeau அவர்களின் பேட்டி அமைந்துள்ளது Nice தேவாலய தாக்குதல் பயங்கரவாத தாக்குதலே தவிர இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதல் அல்ல அந்த தாக்குதலை நடத்தியவன் இஸ்லாத்தை பிரதிநிதித்துவம் படுத்துபவன் அல்ல
என்றும் Nice தேவாலய தாக்குதலை
வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.







“ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் சமூகத்திற்கு ஆபத்தானவை. இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்த...
29/10/2020

“ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் சமூகத்திற்கு ஆபத்தானவை. இந்த விளையாட்டுகளுக்கு அடிமையாகி பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்." - 132 ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டுமென கோரும் முதல்வர் ஜெகன் மோகனின் வாதத்தை ஏற்கிறீர்களா?

-BBC Tamil-

வரலாற்றில் ஒரு ஆப்பிரிக்க முஸ்லிமுக்கு வழங்கப்பட்டிருக்கும் நோபல் பரிசு!_______________________________________________h...
24/10/2020

வரலாற்றில் ஒரு ஆப்பிரிக்க முஸ்லிமுக்கு வழங்கப்பட்டிருக்கும் நோபல் பரிசு!
_______________________________________________

https://www.facebook.com/108458627460014/posts/190652635907279/

2019 அமைதிக்கான நோபல் பரிசு #எத்தியோப்பியா பிரதமரான #அபி_அஹமது_அலி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.!

இவரை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.
அதற்கு காரணம் ஊடக வன்முறை.

இவர் நோபல் பரிசை பெறுவதற்கு நூறு சதவீதம் தகுதியுடையவர்.

#எத்தியோப்பியா பெரும் ஆயுத போராட்ட வன்முறையில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த காலப்பகுதியில் 2018 ஏப்ரலில் இவர் ஆட்சியை பிடித்தார்.

ஆட்சிக்கு வந்தவுடன், அங்கு இருந்த அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்தார்.

அரசியல் கைதிகளை எந்த நிபந்தனையும் இன்றி விடுவித்தார்.

அதன் பின்னர் அங்கு போராடிய ஆயுத இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நாட்டில் #அமைதியை_நிலைநாட்டினார்.

அவர்களுக்கு அரசியல் அதிகார பதவிகளை வழங்கினார்.

#இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆட்சியதிகாரத்தில் பெண்கள் மூன்றில் ஒரு பங்கு அரசியல் அதிகாரத்துக்கு போராடி வரும் நிலையில் அதே காலகட்டத்தில் எத்தியோப்பிய நாட்டு ஆட்சியதிகாரத்தில் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி செய்தார்.

இந்தியா காஷ்மீர் போல எத்தியோப்பியாவுக்கும் #எரித்திரியா என்ற சிறிய நாட்டிற்கும் நீண்ட காலமாக இருந்துவந்த சிக்கலை முழு மூச்சாக முடிவுக்கு கொண்டு வந்தார். #எரித்ரியா வின் முழு சுதந்திரத்தை அங்கீகரித்தார்.

தனது அண்டை நாடான #சூடான் ல் நடைபெற்ற பிரச்சனையில் தலையிட்டு அங்கு அமைதி நிலவ பெரிதும் காரணமாக இருந்தார்.

#பிரேசில் நாட்டில் கார்ப்பரேட் நலன்களுக்காக காடுகள் தீவைத்து எரிக்கப்படுகிறது.? ஆனால் #எத்தியோப்பியா வில்? பிரதமரான இவர் சுற்றுச் சூழலை மேம்படுத்த, எத்தியோப்பிய பள்ளிக்கூட பிள்ளைகளை வைத்து "ஒரு மில்லியன்" மரக்கன்றுகளை நடச் செய்தார்.

#எத்தியோப்பியா விமான சேவையை உலக தரத்திற்கு உயர்த்தினார்.

இன்று விமான சேவையில் உலகிலேயே சிறந்தது எத்தியோப்பியாதான் என்பது உறுதியாகியுள்ளது. இதையெல்லாம் தான் "ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே" செய்து முடித்தார் என்பது #சிறப்பு

#வாழ்த்துகள்
#பாராட்டுக்கள் .

24/10/2020









ஏப்ரல் 21 தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அரச புலனாய்வுப் பணிப்பாளர் மைத்திரிபாலவிடம் கூறியதென்ன?_______________...
15/10/2020

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு அரச புலனாய்வுப் பணிப்பாளர் மைத்திரிபாலவிடம் கூறியதென்ன?
________________________________________________

https://www.facebook.com/108458627460014/posts/188017629504113/
October 15, 2020

தாம் வௌிநாடு செல்வதற்கு முன்னர் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என தகவல்கள் கிடைத்ததாக சுமத்தப்படும் குற்றச்சாட்டை வன்மையாகக் கண்டிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்றாவது நாளாக நேற்று (14) பிற்பகல் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சி வழங்கினார்.

மைத்திரிபால சிறிசேன வௌிநாடு செல்வதற்கு முன்னர் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 16 ஆம் திகதி வரை அரச புலனாய்வுப் பிரிவு பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன பல சந்தர்ப்பங்களில் தொலைபேசியூடாக அவருடன் தொடர்பு கொண்டுள்ளமை ஆய்வறிக்கை மூலம் தெரியவருவதாக இதன்போது குறுக்கு கேள்வியெழுப்பிய மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

அதில் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஏப்ரல் 04 ஆம் திகதி வௌிநாட்டு புலனாய்வுப் பிரிவில் இருந்து கிடைத்த தகவல்கள் தொடர்பில் அறிவிக்கவில்லையா என இதன்போது அவர் வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, அவ்வாறு நிலந்த ஜயவர்தன தமக்கு அறிவிக்கவில்லையென குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து புலனாய்வுத் தகவல்கள் தொடர்பிலும் ஜனாதிபதி என்ற வகையில் தமக்கு அறிவிக்குமாறு ஆலோசனை வழங்கியிருந்த போதிலும் அரச புலனாய்வு பணிப்பாளர் அந்த தகவல் தொடர்பில் தனக்கு அறிவிக்காமை பாரிய தவறு என முன்னாள் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூருக்கான விஜயத்தின் போது பெஜட் வீதி உத்தியோகபூர்வ இல்லத்தினூடாக அரச புலனாய்வு பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன முன்னாள் ஜனாதிபதியை தொலைபேசியூடாக தொடர்புகொண்டாரா என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இதன்போது மீண்டும் வினவியுள்ளார்.

அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, நிலந்த தன்னுடன் பேசியதாகவும் இலங்கையில் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளதாகவும் தனக்கு அறிவித்ததாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதிலளித்துள்ளார்.

எனினும், அந்த தொலைபேசி அழைப்பு குண்டுத்தாக்குதலுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்டது என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.

அவ்வாறென்றால் குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவரால் எவ்வாறு கூறமுடியும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதற்கு முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு பதிலளித்துள்ளார்.

எனக்கு காலை ​வேளையில் தொலைபேசி அழைப்பு கிடைத்ததாக ஞாபகமில்லை, ஏனென்றால், அவ்வேளையில் நான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தேன். மற்றைய விடயம் இலங்கை ​நேரத்திற்கும் சிங்கப்பூர் நேரத்திற்கும் இடையில் இரண்டரை மணித்தியால வித்தியாசம் உள்ளது

என்று குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் தொலைபேசி பகுப்பாய்வு அறிக்கையை சமர்ப்பித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல், அங்கு இலங்கை நேரமும் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், அந்த தகவல்களின் அடிப்படையில் புலனாய்வு பணிப்பாளர் தாக்குதலுக்கு முன்னரே தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி தமக்கு அது குறித்து ஞாபகமில்லையென கூறியுள்ளார்.

ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எந்தளவு தொழில்நுட்ப வளர்ச்சி காணப்பட்டாலும் அரச புலனாய்வுப் பிரிவு போன்ற பொறுப்புவாய்ந்த பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவரினால் ஏன் உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லையென இதன்போது நீதிபதிகள் குழாம் வினவியுள்ளது.

அதற்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, தான் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாகவும், தனது பிரத்தியேக பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு கூட நெருங்க முடியாமல் இருந்ததாகவும் பதிலளித்துள்ளார்.

தாக்குதலை தடுக்காமைக்கான பொறுப்பை முன்னாள் பொலிஸ் மா அதிபரை ஏற்றுக்கொள்ளக் கூறியதாகவும் அவர் விரும்பும் எந்தவொரு நாட்டிற்கும் தூதுவராக நியமிப்பதாகக் கூறியதாகவும் தெரிவிக்கப்படும் விடயம் பொய்யானது எனவும் மைத்திரிபால சிறிசேன ஆணைக்குழுவில் கூறியுள்ளார்.


தாக்குதலின் பின்னர் சிநேகபூர்வ நாடுகளின் புலனாய்வுப் பிரிவினர், இரண்டு மாதங்கள் நாட்டில் தங்கியிருந்து விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு நேரடியாக ஆலோசனை வழங்கியதாகவோ அல்லது அவர்களுடனான தொடர்பு குறித்தோ கண்டறியப்படவில்லையெனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலின் பொறுப்பை அனைவரும் ஒன்றிணைந்து ஏற்றுக்கொள்ள வேண்டுமென முன்னாள் பிரதமர் ஆணைக்குழுவில் தெரிவித்த கருத்து தொடர்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் முன்னாள் ஜனாதிபதியிடம் வினவியுள்ளார்.

தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு சந்தர்ப்பம் இருந்த ​போதும் அதனை தடுத்து நிறுத்துவதற்கு செயற்படாத அதிகாரிகள் அதன் பொறுப்பை ஏற்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் திகதி வணாத்தவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து பயங்கரவாத தடுப்பு தற்காலிக ஏற்பாடுகள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் இருவர் சம்பவம் இடம்பெற்று மூன்று மாதங்கள் செல்ல முன்னர் விடுவிக்கப்பட்டமை தொடர்பிலும் ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதியிடம் வினவியுள்ளது.

அவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் சந்தேகநபர்களை விடுதலை செய்யுமாறு சிபாரிசு செய்த நபர் அதன் பொறுப்பை ஏற்க வேண்டும் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அவரை விடுதலை செய்வதற்கான ஆவணங்களில் முன்னாள் ஜனாதிபதியே கையொப்பமிட்டுள்ளதாக ஆணைக்குழு இதன்போது சுட்டிக்காட்டியுள்ளது.


குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அமைச்சினால் கொண்டுவரப்படும் ஆவணங்களில் தாம் கையொப்பமிடுவதாக இதன்போது முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து ஆவணங்களையும் ஒவ்வொன்றாக பரிசீலிக்கும் இயலுமை இருக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலுக்கு முன்னர் இடம்பெற்ற சில சம்பவங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியின் பொறுப்பு தொடர்பில் ஆணைக்குழு வினவியபோது,

அவ்வாறெனில், நாட்டில் ஜனாதிபதி மாத்திரமே இருக்க வேண்டும், பொலிஸ் மா அதிபர், பிரதி பொலிஸ் மா அதிபர் போன்றோர் அவசியமில்லை. பாதுகாப்பு செயலாளர், பொலிஸ் மா அதிபர், இராணுவத் தளபதி, புலனாய்வுப் பிரிவு ஆகிய தரப்பினர் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் சரியாக நிறைவேற்ற வேண்டும்

என பதிலளித்துள்ளார்.




சபிக்கப்பட்ட பாம்பாகக் கருதப்படும் ஒரு பாறை.
15/10/2020

சபிக்கப்பட்ட பாம்பாகக் கருதப்படும் ஒரு பாறை.







 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚 𝙩𝙤 “𝙁𝙞𝙧𝙚 𝙗𝙧𝙚𝙖𝙠𝙨.Indian Coast Guard ships Samudra Pavak, Samudra Praheri & Shaunak with pollution response gears ...
12/10/2020


𝙐𝙥𝙙𝙖𝙩𝙚 𝙩𝙤 “𝙁𝙞𝙧𝙚 𝙗𝙧𝙚𝙖𝙠𝙨.

Indian Coast Guard ships Samudra Pavak, Samudra Praheri & Shaunak with pollution response gears & integral helicopter with 06 Tugs escorting MT New Diamond. Tug Boka Expedition towing the oil tanker presently 71 nm south off Kavaratti Island.

Ministry of Defence
Government of India


Ministry of Defence
Government of India.







2020 October 12

11/10/2020

 𝙐𝙥𝙙𝙖𝙩𝙚 𝙩𝙤 “𝙁𝙞𝙧𝙚 𝙗𝙧𝙚𝙖𝙠𝙨.Saving Life SAR Indian Coast Guard Ships Varad, Amogh, Amritkaur on EEZ Surveillance & CG Dornie...
28/09/2020


𝙐𝙥𝙙𝙖𝙩𝙚 𝙩𝙤 “𝙁𝙞𝙧𝙚 𝙗𝙧𝙚𝙖𝙠𝙨.

Saving Life SAR Indian Coast Guard Ships Varad, Amogh, Amritkaur on EEZ Surveillance & CG Dornier Aircraft reached scene of incident. ICG Assets commenced Fire Fighting on container Ship X-Press Godavari at Haldia.


Ministry of Defence
Government of India.







2020/September 28

𝑼𝒑𝒅𝒂𝒕𝒆 𝒐𝒏 𝑴𝑻 𝑵𝒆𝒘 𝑫𝒊𝒂𝒎𝒐𝒏𝒅 𝑶𝒊𝒍 𝑻𝒂𝒏𝒌𝒆𝒓 𝒂𝒔 𝒂𝒕 10 𝑺𝒆𝒑𝒕𝒆𝒎𝒃𝒆𝒓 2020.Overseas and Sri Lanka Navy expert teams enter the ship to i...
10/09/2020

𝑼𝒑𝒅𝒂𝒕𝒆 𝒐𝒏 𝑴𝑻 𝑵𝒆𝒘 𝑫𝒊𝒂𝒎𝒐𝒏𝒅 𝑶𝒊𝒍 𝑻𝒂𝒏𝒌𝒆𝒓 𝒂𝒔 𝒂𝒕 10 𝑺𝒆𝒑𝒕𝒆𝒎𝒃𝒆𝒓 2020.

Overseas and Sri Lanka Navy expert teams enter the ship to inspect the condition of the fire-controlled New Diamond.




2020 September 10

IRAN become the first country in the muslim world to stop the UAE from  its sea route for recognising israel.. !  2020 S...
10/09/2020

IRAN become the first country in the muslim world to stop the UAE from its sea route for recognising israel..

!



2020 September 10

𝘾𝙤𝙢𝙢𝙖𝙣𝙙𝙚𝙧 𝙤𝙛 𝙩𝙝𝙚 𝙉𝙖𝙫𝙮 𝙫𝙞𝙨𝙞𝙩𝙨 𝙄𝘾𝙂𝙎 𝘼𝙢𝙚𝙮𝙖Commander of the Navy, Vice Admiral Nishantha Ulugetenne met with the Commanding ...
10/09/2020

𝘾𝙤𝙢𝙢𝙖𝙣𝙙𝙚𝙧 𝙤𝙛 𝙩𝙝𝙚 𝙉𝙖𝙫𝙮 𝙫𝙞𝙨𝙞𝙩𝙨 𝙄𝘾𝙂𝙎 𝘼𝙢𝙚𝙮𝙖

Commander of the Navy, Vice Admiral Nishantha Ulugetenne met with the Commanding Officer of Indian Coast Guard Ship Ameya, Commandant (JG) AK Pandey in Trincomalee today (10th September 2020) and expressed his heartfelt gratitude for the all-out support rendered by the Indian Coast Guard in managing the disaster situation onboard MT New Diamond.

Address

Colombo

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Times Of Sri Lanka posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share