Saudi Arabia Tamil Social Media

  • Home
  • Saudi Arabia Tamil Social Media

Saudi Arabia Tamil Social Media Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Saudi Arabia Tamil Social Media, Media/News Company, .
(1)

*எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அதற்கு முழுவ...
05/09/2024

*எட்டு வருடங்களாக தாயகம் செல்ல முடியாத கண்ணனை தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அதற்கு முழுவதுமாய் உதவிய ஒற்றை தமிழர்*

▪️கடலூர் மாவட்டம் நெய்வேலியை சேர்ந்த கண்ணன் கடந்து 8 ஆண்டுகளுக்கு முன்னால் சவுதி அரேபியா ரியாத் வந்துள்ளார் , ரியாத்தில் பல்வேறு பணிகளை செய்தவர் இறுதியாக ஓட்டுனர் பணியை செய்திருக்கிறார் , அதன் காரணமாக பெரும் தொகையை சாலை விதிமுறை மீறல் தண்டத் தொகையாக பெற்று தாயகம் செல்ல முடியாமல் எட்டு ஆண்டுகளாக தவித்துள்ளார்..

▪️இந்த நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு சர்க்கரை நோய்க்கு சுயமாக மருந்து எடுத்த நிலையில் இடது காலும் கையும் செயலிழந்து ஒரு நாள் முழுவதும் அறையில் யாரும் பார்க்காத நிலையில் கிடந்து , சிலரின் உதவியால் அடுத்த நாள் மருத்துவமனை சென்று சிகிச்சை பெற முற்பட்ட நிலையில் அவருடைய ஆவணம் அனைத்தும் காலாவதி ஆகிய நிலையில் உரிமையாளரிடமிருந்து ஓடி வந்தவர் என்ற வழக்கு பின்னணியும் இருந்ததால் மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சையோடு வெளியேற்றப்பட்ட நிலையில் பொதுமக்கள் கூடும் பூங்காவில் கேட்பாரற்று கிடந்திருக்கிறார்..

▪️இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் முன்னாள் நிர்வாகி மகன் அப்துல் ரஹ்மான் மூலமாக மாநில தலைமை நிலைய செயலாளர் மாயவரம் அமீன் அவர்களை தொடர்பு கொள்ள அவர் ரியாத் மண்டல தலைவர் மீமிசல் நூர் முகமது அவர்களிடம் தகவலை தெரிவிக்க மண்டல சமூக நலத்துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாட்சா அவர்களையும் துணைச் செயலாளர் காட்டுவா அஜ்மீ ஆகியோரை இந்த சிரமம் மிக்க பணியில் முடுக்கி விட அனைவரும் இரவு பகல் பார்க்காமல் கடந்த ஒரு வார காலமாக இவருக்கு எக்ஸிட் அடிக்க சாலை விதிமுறைகளை மீறிய தண்டத் தொகையை அடைக்க பல்வேறு வழிகளில் மிகுந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் முயற்சித்து நேற்று இரவு சவுதி அரேபியாவில் இருந்து செல்ல எக்ஸிட் என்னும் ஆவணத்தை பெற்றனர்.

▪️ அதனைத் தொடர்ந்து நேற்று 4-9-2024 புதன்கிழமை இலங்கை விமான மூலம் பத்தா கிளை நிர்வாகி காரைக்குடி அம்ஸத் இப்ராஹிம் அவர்கள் பயண துணையுடன் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்..

▪️இந்த ஒப்பற்ற பணிக்கு ரியாதில் வாழும் ஒரு தமிழர் முழு உதவியும் செய்தார் என்பது மிகுந்த போற்றுதலுக்கும் நன்றிக்கும் உரிய மனித மீட்பு செயலாகும்..

▪️மேலும் நான் பல ஆண்டு கழித்து செல்வதால் எனது மகளுக்கு மொபைல் வாங்கி கொடுக்க வேண்டும் எனவே அதையும் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டார் , அதையும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

▪️மேலும் பாதிக்கப்பட்ட கண்ணனை மீட்க பலரும் பல்வேறு வகையில் உதவ முன் வந்தார்கள் என்பது மிகுந்த பாராட்டுதலுக்கும் நன்றிக்கும் உரியது

▪️கண்ணன் தங்கி இருந்த இடங்களில் அவருக்கு உணவு உள்ளிட்ட இயற்கை தேவைகளை நிறைவேற்ற உதவிய RT தமிழ் உணவக ரஷாக் அஷ்ரஃப் உள்ளிட்ட நண்பர்களும் ஊழியர்களும் பத்தா கிளை பாஷா, இலங்கை லெப்பை, ஹசன் சுளை கிளை செயலாளர் நீடூர் சாதிக் மேலும் மருத்துவர் ரீதியாக உதவிய மரு. அப்துல் ஜலீல் விமான டிக்கெட் வகையில் உதவிய பக்தா கிளை செயலாளர். ரமீஷ் , ஆடிட்டர் சாஜித், அம்ஜத் உள்ளிட்ட அனைத்து மக்களும் உறுதுணையாக இருந்தார்கள் என்றால் அது மிகை இல்லை. இதற்கு உதவிய அனைவருக்கும் இதய அடி ஆழத்திலிருந்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் ..

▪️ *கடல் கடந்து கண்ணீரும் கம்பளையுமாய் குடும்பத்தை தொடர்பு கொள்ள முடியாமல் பொது பூங்காவில் படுத்து நோயோடு அவதிப்பட்ட கண்ணனை மிகுந்த சிரமத்தோடு பலரின் தியாக ஒத்துழைப்போடு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் அமைப்பிற்கு குடும்பத்தினரும் நண்பர்களும் அவர் மீது கரிசனை காட்டிய மக்களும் மிகுந்த பாராட்டுக்களையும் , நன்றிகளையும் கண்ணீர் மல்க நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்...*

▪️இதுபோன்ற கடல் கடந்த மனிதம் காக்கும் செயல் பாராட்டுக்கும் போற்றுதலுக்கும் உரியது ,
பிறர் நலன் பேணுவது தான் இஸ்லாம் என்பதை தனது செயல்பாட்டின் மூலம் உணர்த்தியதும் , தமிழர் என்ற இனமுண்டு தனியே அவருக்கு குணமுண்டு என்ற சொல்லை மெய்ப்பிக்கும் இது போன்ற மனிதநேய சேவைகளை தொடர வாருங்கள் கரங்களை கோர்த்து அறங்களை காப்போம்...

என்றென்றும் மனிதநேய சேவையில்..

*இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)*
*சமூக நலத்துறை*
*மத்திய மண்டலம்*
*ரியாத் - சவுதி அரேபியா*

ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - மருத்துவ சேவை அணி நடத்திய22வது மாபெரும் இரத்ததான முகாம்!!!  ஏக இறைவனின் திருப...
24/08/2024

ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் - மருத்துவ சேவை அணி நடத்திய
22வது மாபெரும் இரத்ததான முகாம்!!!

ஏக இறைவனின் திருப்பெயரால்...

🩸 78வது இந்திய சுதந்திர தினத்தை*
முன்னிட்டு
ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) - மருத்துவ சேவை அணி மற்றும் கிங் சவூத் இரத்த வங்கி இணைந்து நடத்திய 22வது மாபெரும் இரத்ததான முகாம் 23/08/2024 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை சுமைசி இரத்த வங்கியில் சிறப்பாக நடைபெற்றது.

🩸இரத்ததான முகாமிற்கான அறிவிப்பு செய்தவுடன் அயராத உழைப்பாலும் , தொடர் அழைப்பு பணியாலும் இறைவனின் கிருபையாலும் ரியாத்தின் அனைத்து பகுதிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள்* கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர் . மேலும் நேரமின்மை காரணமாக , இன்னும் பல சகோதரர்கள் இரத்ததானம் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.

🩸குறுதி வழங்கிய அனைவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ் மற்றும் பழங்களுடன் பரிசு பை வழங்கப்பட்டது.

🩸முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும் , காலை & மதிய உணவு ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், வாகன ரீதியாக உதவி செய்த சகோதரர்களுக்கும் , ஊடக ரீதியாக உதவிய சகோதரர்களுக்கும் , மருத்துவ ஊழியர்களுக்கும் , இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் , சுமைசி மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் , தண்ணீர் , தேநீர் , குளிர்பானம் மற்றும் பழங்கள் போன்றவைகளை ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், இந்த முகாம் சிறக்க எல்லா வகையிலும் உதவிய அனைத்து சகோதரர்களுக்கும் , காலை உணவு வழங்கிய முரூஜ் கேரளா ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்திற்கும் , மதிய உணவு வழங்கிய தம்பிஸ் உணவகத்திற்கும், மண்டல & கிளை நிர்வாகிகளுக்கும் , செயற்குழு & பொதுகுழு உறுப்பினர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த நிகழ்வில் NRTIA சவுதி அரேபியா ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் சந்தோஷ் அவர்களும் ரியாத் இந்திய தூதரக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழுவில் அங்கம் வகிக்கும் நெல்லை ஏர்வாடி முகைதீன் சலீம் அவர்களும், வெளிநாட்டு தமிழர்கள் நலச்சங்கம் நிர்வாகிகளும் யுனிவர்சல் தமிழர்கள் நலச்சங்க நிர்வாகிகளும் கலந்துகொண்டு இரத்த தானம் வழங்கி சிறப்பித்தனர்..

🩸 ரியாத் மத்திய மண்டல மருத்துவ சேவை அணி சார்பாக நடைபெற்ற இந்த முகாமிற்கு அனுமதி உள்ளிட்ட உழைப்புகளை மேற்கொண்ட சமூக நலத்துறை நிர்வாகிகளுக்கும் பம்பரம் போல் செயலாற்றிய மருத்துவ சேவை அணி பொறுப்பாளர்கள் மற்றும் மண்டல நிர்வாகிகள் , உறுப்பினர்கள் அனைவரும் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்..

🩸உங்கள் அனைவரது உழைப்பையும் பங்களிப்பையும் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் அங்கீகரித்து நன்மைகளை வழங்கி அருள் புரிவானாக!!!

என்றும் சமுதாய பணியில் கடல் கடந்து;;;

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ( IWF )
மத்திய மண்டலம்
ரியாத் - சவூதி அரேபியா

_தொகுப்பு:_திருச்சி மீடியா ரஹ்மத்துல்லாஹ்

சவூதி அரேபிய நிறுவன தினத்தைமுன்னிட்டுவெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் ( NRTIA ) மற்றும்  இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃப...
19/02/2024

சவூதி அரேபிய நிறுவன தினத்தை

முன்னிட்டு

வெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் ( NRTIA ) மற்றும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்( இந்தியர் நல்வாழ்வு பேரவை )இணைந்து நடத்தும்

மாபெரும் இலவச மருத்துவ முகாம்
(இதய நோய் பரிசோதனை முகாம்)

இடம்: அல் ரையான் மருத்துவமனை
ஹூராபி ரோடு பத்தாஹ், ரியாத்

நாள்: 23.02.2024
நேரம்: காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை

#முதலில் #வரும்500 #நபர்களுக்கு

எவ்வித கட்டணமும் இல்லாமல் புலம் பெயர்ந்து வாழும் மக்களின் உடல் நலனில் அக்கறை கொண்டு நடத்தப்படும் இந்த முகாமில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்.

என்றும் மக்களின் நலன்காக்கும் சேவையில்..

வெளிநாட்டு வாழ் தமிழ் இந்தியர்கள் நலச்சங்கம்
மற்றும்
இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் இந்தியர் நல்வாழ்வு பேரவை

மேலதிக விபரங்களுக்கு எங்களை அழைக்கவும்

+966 552485960
+966 549874362
+966 507781283
+966 501893178
+966 507051283
+966 502414784
+966 508059934

https://www.facebook.com/100069944657515/posts/510355184639299/?mibextid=Nif5oz
20/04/2023

https://www.facebook.com/100069944657515/posts/510355184639299/?mibextid=Nif5oz

ஈத் பெருநாள் 1444 அறிவிப்பு

சவூதி அரேபியாவில் இன்று(20-04-2023) ஷவ்வால் பிறை காணப்பட்ட அதிகாரப்பூர்வ தகவலின் அடிப்படையில், *நாளை (21-04-2023) ஈத் பெருநாள்.* அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ் நம்முடைய நல்லமல்களை ஏற்றுக் கொள்வானாக!!!!

தக்கப்பல்லாஹு மின்னா வ மின்கும்.

*ஏக இறைவனின் திருப்பெயரால்*...*ரியாத் மத்திய மண்டல**இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்* *நடத்தும்**மாபெரும்**சமூக நல்லிணக்க**இஃ...
07/04/2023

*ஏக இறைவனின் திருப்பெயரால்*...

*ரியாத் மத்திய மண்டல*

*இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்*

*நடத்தும்*

*மாபெரும்*
*சமூக நல்லிணக்க*

*இஃப்தார் (எனும்)*

*நோன்பு துறப்பு நிகழ்ச்சி*

*நாள்: ஏப்ரல் 07 வெள்ளிக்கிழமை*

*மாலை 5 மணி முதல்*

*இடம்: https://maps.app.goo.gl/d4Qv5jkoqxTuzEKP7*

*சுலை இஸ்திராஹா*..

இந்நிகழ்விற்கு அனைவரும் தவறமால் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

*குறிப்பு :பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது*

*அழைப்பின் மகிழ்வில்*....

*இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்*
*மத்திய மண்டலம்*, *ரியாத், சவூதி அரேபியா*

Embassy invites applications for the post of 2 clerks.
16/03/2023

Embassy invites applications for the post of 2 clerks.

சவூதி சிறையில் இருக்கும் இந்தியரின் விடுதலைக்கு கப்பத் தொகை இரண்டு கோடி வசூல் செய்து விடுதலைக்கு உதவிய சவூதி குடிமகன்.ht...
16/03/2023

சவூதி சிறையில் இருக்கும் இந்தியரின் விடுதலைக்கு கப்பத் தொகை இரண்டு கோடி வசூல் செய்து விடுதலைக்கு உதவிய சவூதி குடிமகன்.

https://www.siasat.com/saudi-man-helps-pay-rs-2-cr-to-free-indian-driver-from-jail-2547144/

While coming out from prison after 3 years, Avadesh Sagar, on Tuesday thanked Allah and all those who worked to secure his release.

மனநலம் பாதிக்கப்பட்ட திருவாரூர் கரிகாலன்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மீட்ட ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்...
16/03/2023

மனநலம் பாதிக்கப்பட்ட திருவாரூர் கரிகாலன்(பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) மீட்ட ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் மற்றும் ரியாத் KMCC

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கரிகாலன் என்பவர் சவூதி அரேபியா ரியாத்தில் கடந்த சில நாட்களாகவே மன நிலை பாதிக்கப்பட்டு சாலை ஒரத்தில் கிடப்பதாக இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மண்டல சமூக நலத்துறைக்கு தகவல் வந்தது. உடனடியாக களத்தில் இறங்கியமண்டல சமூக நல துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாட்சா அவர்களும் KMCC மெஹபூப் அவர்களும் கரிகாலன் இருக்கும் இடத்திற்கு விரைந்து சென்று மிகுந்த போராட்டத்திற்கு பிறகு கரி காலனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் மருத்துவமனையிலிருந்து மாயமாகிவிட்டார்

அவருடைய சகோதரர் மற்றும் ரியாத் மண்டல நிர்வாகிகள் அவரை மருந்துவமனை அருகில் உள்ள இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக தேடி வந்தனர்.

இந்நிலையில், அவர் தீரா காவல் நிலையத்தில் இருப்பதாக தகவலறிந்து
உடனடியாக அவரை காவல் நிலையத்திலிருந்து மீட்டு ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டார் .
இறைவன் அருளால் இந்தியா தூதரக உதவியுடன் KMCC சமூக சேவகர் மெஹபூப் அவர்கள் பயண துணையாக செல்ல ஏர் இந்தியா விமானம் மூலமாக இன்று அதிகாலை தாயகம் அனுப்பி வைக்கப்பட்டார்.

*கோழிக்கோடு விமான நிலையத்தில் KMCC சமூக சேவகர் மெஹபூப் அவர்கள் கரி காலனை அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தார்.
எல்லாம் புகழும் இறைவனுக்கே.

இப்பணிக்கு ரியாத் மண்டல நிர்வாகிகள் ஷாகீர் பைக், ஆசிக் இக்பால் மற்றும் அம்ஸத் இப்ராஹிம் ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

கடல் கடந்து மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தவித்த கரி காலனை மீட்டு சமூக நல்லிணக்கம் காத்த KMCC மற்றும் இந்தியன் வெல்பர் ஃபோரத்தின் பணி மிகுந்த போற்றுதலுக்குரியது என்று சொன்னால் மிகை இல்லை.

என்றென்றும் மனிதநேயப் பணியில்:::

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்(IWF)
சமூக நலத்துறை
மத்திய மண்டலம்
ரியாத் - சவூதி அரேபியா

*ரியாத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட சகோதரரை காணவில்லை**நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்தியன்* என்பவர் சவூதி அரேபியா ரியாத்த...
07/03/2023

*ரியாத்தில் மன நிலை பாதிக்கப்பட்ட சகோதரரை காணவில்லை*

*நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஆதித்தியன்* என்பவர் சவூதி அரேபியா ரியாத்தில் கடந்த சில நாட்களாகவே *மன நிலை பாதிக்கப்பட்டு* சாலை ஒரத்தில் கிடப்பதாக
*இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ரியாத் மண்டல சமூக நலத்துறைக்கு* தகவல் வந்தது. *உடனடியாக களத்தில் இறங்கிய* *மண்டல சமூக நல துறை செயலாளர் கொடிப்பள்ளம் சாதிக் பாட்சா* அவர்கள் ஆதித்தியன் இருக்கும் இடத்திற்கு *விரைந்து சென்று மிகுந்த போராட்டத்திற்கு பிறகு ஆதித்தியனை மீட்டு மருத்துவ மனையில் சேர்த்தார்* *இப்பணியில் உதவியாக KMCC மெஹபூப் இருந்தார். *மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் தற்போது மருத்துவ மனையிலிருந்து மாயமாகிவிட்டார்*

*அவரை கண்டால் கீழே உள்ள எண்களில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

0549874362,0501893178,0509706226*

03/03/2023

Ambassador received Hon'ble MLA TN Assembly, Shri Dr. MH. Jawahirullah today. Ambassador briefed him about the activities of the Community Welfare Wing of the Embassy and assured all help to all the Indian community residing in the Kingdom of Saudi Arabia.

23/02/2023

*அவசரமாக இரத்தம் தேவை*
வெளியிடும் நாள் 23-02-2023

🩸 *2 யூனிட் இரத்தம் தேவை* ( O* மற்றும் *B* மற்றும் *AB* நெகட்டிவ்* வகை) இரத்தம் தேவைப்படுகிறது )

மருத்துவமனை பெயர்: * *King Fahad மருத்துவமனை** ( மதீனா)
Al Jamiah , Al Madinah
Khalid bin Waleed Street
நேரம் :காலை 10 முதல் மாலை 6 மணி வரை

பெயர்: * கமால் பாட்ஷா *

அவசரமாக அறுவை சிகிச்சைக்காக

ரத்தம் கொடுக்க முன் வரும் சகோதரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்

தொடர்புக்கு,
0500621513

BLOOD GROUP : *B -ve or O -ve or AB- *(2 units)*
For * SURGERY*
CONTACT NAME: *Kamal Batcha *
HOSPITAL NAME: *King Fahad Hospital* Al Jamiah , Khalid Bin Waleed Street , Al Madinah
CONTACT #: *0500621513*
Post Date : 23.02.2023


தகவல்:

*IWF மருத்துவ அணி*
மதீனா , சவுதி அரேபியா

*மாபெரும் இரத்ததான முகாம்!!!*  ஏக இறைவனின் திருப்பெயரால்...🩸 *74வது இந்திய குடியரசு தினம்* மற்றும் *சவூதி அரேபியா நிறுவன...
11/02/2023

*மாபெரும் இரத்ததான முகாம்!!!*

ஏக இறைவனின் திருப்பெயரால்...

🩸 *74வது இந்திய குடியரசு தினம்* மற்றும் *சவூதி அரேபியா நிறுவன தினத்தை* முன்னிட்டு
*ரியாத் மத்திய மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) - கர்ணாத்தா கிளை* மற்றும் *கிங் சவுத் மெடிக்கல் சிட்டி* இணைந்து நடத்திய மாபெரும் இரத்ததான முகாம் 10/02/2023 வெள்ளிக்கிழமை அன்று காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை கர்ணாத்தா பகுதியில் நடமாடும் இரத்த வங்கி வாகனத்தில் சிறப்பாக நடைபெற்றது.

🩸முகாமை கிளை நிர்வாகிகள் & மண்டல நிர்வாகிகள் இணைந்து துவங்கி வைத்தனர்.

🩸இரத்ததான முகாமிற்கான அறிவிப்பு செய்தவுடன் அயராத உழைப்பாலும் , தொடர் அழைப்பு பணியாலும் இறைவனின் கிருபையாலும் *120க்கும் மேற்பட்ட குருதிக் கொடையாளர்கள்* கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர் . மேலும் நேரமின்மை காரணமாக , இன்னும் பல சகோதரர்கள் இரத்ததானம் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.

🩸கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் பரிசு பையுடன் வழங்கப்பட்டது.

🩸முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக *களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும் , காலை & மதிய உணவு ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், வாகன ரீதியாக உதவி செய்த சகோதரர்களுக்கும் , ஊடக ரீதியாக உதவிய சகோதரர்களுக்கும் , மருத்துவ ஊழியர்களுக்கும் , இரத்தவங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கும் , கிங் சவுத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை நிர்வாகிகளுக்கும் , தண்ணீர் , தேநீர் , குளிர்பானம் மற்றும் பழங்கள் போன்றவைகளை ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும் , பொருளாதார பங்களிப்பு வழங்கிய சகோதரர்களுக்கும் , விளம்பர பதாகைகள், உணவு உள்ளிட்டவைகளுக்கு பொருளாதார உதவியளித்த தம்பீஸ் உணவகம், SAT கார்கோ, வெல்கம் உணவகம் நிறுவனங்களுக்கும் மண்டல & கிளை நிர்வாகிகளுக்கும் , செயற்குழு & பொதுகுழு உறுப்பினர்களுக்கும்* நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

🩸உங்கள் அனைவரது உழைப்பையும் , பங்களிப்பையும் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் அங்கீகரித்து நன்மைகளை வழங்கி அருள் புரிவானாக!!!

https://www.facebook.com/100071650561126/posts/222555416809476/?mibextid=Nif5oz

என்றும் சமுதாய பணியில் கடல் கடந்து;;;

*இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் ( IWF )*
*மத்திய மண்டலம்*
*ரியாத் - சவூதி அரேபியா*

*ப்ளீஸ் இந்தியா (PLEACE INDIA) மற்றும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (𝐈𝐖𝐅)* இணைந்து நடத்தும்*ஹூரூப் (தலைமறைவு புகார் குறித...
07/12/2022

*ப்ளீஸ் இந்தியா (PLEACE INDIA) மற்றும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (𝐈𝐖𝐅)*

இணைந்து நடத்தும்

*ஹூரூப் (தலைமறைவு புகார் குறித்த) விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகள் வழங்கும் முகாம்*

📍இடம்: கிளாசிக் ஆடிட்டோரியம், பத்தா, ரியாத்.
🗓நாள்: 09/12/2022, வெள்ளிக்கிழமை.
⏰நேரம்: மாலை 6:00 முதல் 8:00 மணி வரை.

*ஹுரூபினால் சிக்கி தவிக்கும் விளிம்பு நிலை தொழிலாளர்களுக்கு ஓர் நற்செய்தி!*

மேண்மை பொருந்திய சவூதி அரேபியா அரசு ஹுரூப் சட்ட சிக்கலில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள் தண்டனை காலத்தை குறைத்து கொண்டு, தாயகம் செல்லும் வகையில், 2 மாத பிணை கால அவகாசம் வழங்கியிருக்கிறது இந்த சலுகையை அனைத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கும் கொண்டு சென்று தெளிவுபடுத்த இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

🅾️ பயணம் செல்வதற்குத் தடை இருக்கிறதா?

🅾️ உங்களுக்கு இங்கு ஹூரூப் இருக்கிறதா?

🅾️ நீங்கள் சிறையில் இருக்கிறீர்களா, அதற்கான உதவி தேவைப்படுகிறதா?

🅾️ ஒரு நிறுவனத்திலிருந்து மற்றொரு நிறுவனத்திற்கு வேலை மாற்றம் தொடர்பான பிரச்சினையா?

🅾️ நீங்கள் பணி செய்யும் நிறுவனத்தில் சம்பளம் நிலுவையில் இருக்கிறதா?

🅾️ நிறுவனத்தில் பணி முடித்ததும் சேவையின் வெகுமதி முடிவில் கிடைப்பதில் சிரமமா?

🅾️ இதர அனைத்து சட்டப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்குவதற்கு சவுதி அரேபியா வழக்கறிஞர்கள் மற்றும் முறையான வழிகாட்டியினர் கொண்டு அதற்கான ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் வழங்கப்படுகிறது.

பாதிக்கப்பட்டவரும் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு உதவுபவர்களும் வாருங்கள்!

நல்லதொரு தீர்வை பெற்றுக் கொள்ளுங்கள்!

அறிய வாய்ப்பை, உரிய நேரத்தில் பெற்று பயன் பெறுங்கள்!

அனைவரையும் அழைப்பது

*ப்ளீஸ் இந்தியா (PLEACE INDIA) மற்றும் இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (𝐈𝐖𝐅)* ரியாத் மண்டலம் சவூதி அரேபியா

 #ரியாத்_மத்திய_மண்டல_இந்தியன்ஸ்_வெல்ஃபேர்_ஃபோரம் (𝐈𝐖𝐅) பத்தாஹ் கிளை சார்பில் மிக சிறப்பாக நடந்தேறிய  #மாபெரும்_இரத்ததான...
18/09/2022

#ரியாத்_மத்திய_மண்டல_இந்தியன்ஸ்_வெல்ஃபேர்_ஃபோரம் (𝐈𝐖𝐅) பத்தாஹ் கிளை சார்பில் மிக சிறப்பாக நடந்தேறிய #மாபெரும்_இரத்ததான_முகாம்!!

ைவனின்_திருப்பெயரால்...

#𝟗𝟐வது #சவூதி_அரேபியா தேசிய தினத்தை முன்னிட்டு ரியாத் மத்திய மண்டல #இந்தியன்ஸ்_வெல்ஃபேர்_ஃபோரம் (𝐈𝐖𝐅) - பத்தாஹ் கிளை மற்றும் #கிங்_ஃபஹத்_மெடிக்கல்_சிட்டி (𝐊𝐅𝐌𝐂) இணைந்து நடத்திய இரத்ததான முகாம் 𝟏𝟔/𝟎𝟗/𝟐𝟎𝟐𝟐 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 𝟗:𝟎𝟎 மணி முதல் மாலை 𝟒:𝟎𝟎 மணி வரை பத்தாஹ்வில் நடமாடும் இரத்த வங்கி வாகனத்தில் சிறப்பாக நடைபெற்றது.

முகாமை கிளை நிர்வாகிகள் & மண்டல நிர்வாகிகள் இணைந்து துவங்கி வைத்தனர்.

இரத்ததான முகாமிற்கான அறிவிப்பு செய்தவுடன் அயராத உழைப்பாலும், தொடர் அழைப்பு பணியாலும் இறைவனின் கிருபையாலும் 𝟗𝟐வது தேசிய தினத்தை முன்னிட்டு ுருதிக்_கொடையாளர்கள் கலந்து கொண்டு தங்களுடைய இரத்தத்தை தானமாக வழங்கினர்.

மேலும் நேரமின்மை காரணமாக, இன்னும் பல சகோதரர்கள் இரத்ததானம் செய்ய முடியாமல் வருத்தத்துடன் திரும்பி சென்றனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் பரிசு பையுடன் வழங்கப்பட்டது.

முகாம் வெற்றிகரமாக நடைபெற்றதற்காக களப்பணியாற்றிய சகோதரர்களுக்கும், காலை & மதிய உணவு ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், வாகன ரீதியாக உதவி செய்த சகோதரர்களுக்கும், ஊடக ரீதியாக உதவிய சகோதரர்களுக்கும், மருத்துவ ஊழியர்களுக்கும், இரத்த வங்கி ஒருங்கிணைப்பாளர்களுக்கும், கிங் பஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனை நிர்வாகிகளுக்கும், தண்ணீர், தேநீர், குளிர்பானம் மற்றும் பழங்கள் போன்றவைகளை ஏற்பாடு செய்து தந்த சகோதரர்களுக்கும், பொருளாதார பங்களிப்பு வழங்கிய சகோதரர்களுக்கும், நிறுவனங்களுக்கும் மண்டல & கிளை நிர்வாகிகளுக்கும், செயற்குழு & பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் குறிப்பாக முகாம் வெற்றி பெற இந்த நிகழ்ச்சி குறித்த செய்திகளை மக்களிடம் கொண்டு சென்ற ஊடக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

உங்கள் அனைவரது உழைப்பையும் பங்களிப்பையும் எல்லாம் வல்ல அந்த ஏக இறைவன் அங்கீகரித்து நன்மைகளை வழங்கி அருள் புரிவானாக!!!

இறுதியாக பத்தாஹ் கிளை தலைவர் கொடிப்பள்ளம் சாதிக் பாஷா அவர்கள் அனைவருக்கும் நன்றியுரையாற்ற முகாம் இனிதே நிறைவடைந்தது.

என்றும் சமுதாய பணியில் கடல் கடந்து:

இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் (𝐈𝐖𝐅)
மத்திய மண்டலம், ரியாத் - சவூதி அரேபியா.

மாபெரும் இரத்ததான முகாம் சவூதி அரேபிய தேசிய தினத்தை  முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்வரும் செம்ப்டமர் 16 ஆம் தேதி தலை...
14/09/2022

மாபெரும் இரத்ததான முகாம்

சவூதி அரேபிய தேசிய தினத்தை முன்னிட்டு மாபெரும் இரத்ததான முகாம்

வரும் செம்ப்டமர் 16 ஆம் தேதி தலைநகர் ரியாதில் நடைபெற இருக்கின்ற இரத்ததான முகாம்

*"MEGA Blood Donation Camp " என்ற ஒரு நிகழ்வை *இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்* ரியாத்தில் நடத்த இருக்கிறது*.

உயிர் காக்கும் இரத்ததான முகாமிற்கு மொழி இனம் என பராமல் தங்கள் இரத்தத்தை தனமாக வழங்கி உன்னதமான உயிர் காக்க உதவிடுவீர்- இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம்

 #ஒரு_மாத_காலமாக_உடல்_உறுப்புக்கள்_செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்த  #சகோதரரை_மீட்டு தாயகம் அனுப்பி வ...
11/09/2022

#ஒரு_மாத_காலமாக_உடல்_உறுப்புக்கள்_செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் அவதிப்பட்டு வந்த #சகோதரரை_மீட்டு தாயகம் அனுப்பி வைத்த ரியாத் மண்டல #இந்தியன்ஸ்_வெல்ஃபர்_ஃபோரம் (𝐈𝐖𝐅)

ைவனின்_திருப்பெயரால்...

#விழுப்புரம்_மாவட்டம் திருவெண்ணைநல்லூரை சேர்ந்த #அப்துல்_ரஜாக் எனும் சகோதரர் ரியாத்தில் வீட்டு டிரைவர் ஆக பணி புரிந்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்னால் அவருக்கு திடீரென்று ஒரு கை ஒரு கால் செயலிழந்து மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.

அவரை மீட்டு தாயகம் அனுப்புமாறு அவருடைய குடும்பத்தினர் ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் #ரியாத்_மண்டல_தலைவர் ுர்_முஹம்மது அவர்களை தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதற்கு இணங்க ரியாத் மண்டல சமூகநலத்துறை செயலாளர் #கொடிப்பள்ளம்_சாதிக்_பாஷா அவர்களை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட #சகோதரர்_அப்துல்_ரஜாக் அவர்களை உடனடியாக மீட்டு தாயகம் அனுப்புவதற்கு அனைத்து வேலைகளும் மேற்கொள்ளுமாறு கேட்டுகொண்டார்.

அதனை தொடர்ந்து கொடிப்பள்ளம் சாதிக் பாஷா அவர்கள் மண்டல இணைச் செயலாளர் #திருக்கோவிலூர்_ஷாக்கீர்_பேக் அவர்களும் உடனடியாக அப்துல் ரஜாக் அவர்களுடைய ஸ்பான்சரை தொடர்பு கொண்டு பேசி மருத்துவமனையில் நேரடியாக பலமுறை சந்தித்து அனைத்து விஷயங்களையும் விரைவாக முடித்து,
கடந்த 𝟏𝟎/𝟎𝟗/𝟐𝟎𝟐𝟐 சனிக்கிழமை அன்று #கணேசன் என்பவரோடு தாயகம் அனுப்பி வைத்தனர் சென்னை விமான நிலையத்தில் தயார் நிலையில் இருந்த #செங்கல்பட்டு_வடக்கு_மாவட்ட_தலைவர் ாகிர்_உசேன் உள்ளிட்ட சகோதரர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட அப்துல் ரஜாக் அவர்களை விமான நிலையத்திலிருந்து #தமிழ்நாடு_முஸ்லிம்_முன்னேற்றக்_கழகத்தின்_அவசர_ஊர்தியில் ஏற்றி அப்துல் ரஜாக் அவர்களுடைய சொந்த ஊரான திருவெண்ணைநல்லூரில் இருக்கும் அவர்களுடைய வீடு வரை கொண்டு போய் சேர்த்தனர்.

ஒரு மாத கால பல இன்னல்களுக்கு பிறகு நல்ல முறையில் வீடு கொண்டு வந்து சேர்த்த ரியாத் மண்டல இந்தியன்ஸ் வெல்ஃபேர் ஃபோரம் நிர்வாகிகளுக்கும், தாயகம் செல்வதற்கு #இரண்டு_நபர்களுக்கும் சேர்த்து முதல் வகுப்பு #விமான_பயண_சீட்டை எடுத்து கொடுத்து #மனிதம்_காத்த #அப்துல்_ரசாக் அவர்களின் #முதலாளி அவர்களுக்கும், பயணத் துணையை ஏற்பாடு செய்து கொடுத்த #இந்திய_தூதரக_ஒருங்கிணைப்பாளர்கள் #சகோதரர்_இம்தியாஸ் மற்றும் #ஜமால்_சேட் அவர்களுக்கும் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஜாகிர் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும் பொருளாதார வகையில் உதவி செய்த #சகோதரர்_சீனிவாசன் அவர்களுக்கும்
#அப்துல்_ரஜாக்கின்_குடும்பத்தினர் உணர்ச்சி பொங்க #நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இந்தப் பணியை சிறப்பாக மேற்கொண்ட 𝐈𝐖𝐅 சமூகநலத்துறை செயலாளர் கொடிபள்ளம் சாதிக் பாட்சா, இணைச் செயலாளர் திருக்கோவிலூர் ஷாக்கிர் பேக், கோவை மன்சூர், மற்றும் ஆர்எஸ் மங்கலம் சைபுல்லா ஆகியோருக்கு ரியாத் மண்டலம் நிர்வாகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

தகவல்:

ிரிவு
மத்திய மண்டலம், ரியாத், சவூதி அரேபியா.

07/08/2022

🇸🇦 சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து உணவுகளும் ஹலால் என்பதை சவுதி உணவு மற்றும் மருந்து ஆணையம் (SFDA) உறுதி செய்துள்ளது.

தகவல் : saudigazette

https://m.facebook.com/story.php?story_fbid=378670227773726&id=100068922561280

ரமலான் பிறை தென்பட்டது   சவுதி அரேபியாவில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (01-04-22) ரமலான் பிறை தென்பட்டது, ஆகையால் நாளை (02-...
01/04/2022

ரமலான் பிறை தென்பட்டது சவுதி அரேபியாவில் இன்று வெள்ளிக்கிழமை மாலை (01-04-22) ரமலான் பிறை தென்பட்டது, ஆகையால் நாளை (02-04-22) சனிக்கிழமை ரமலான் முதல் நாள் ஆரம்பமாகின்றது.

தமிழால் இணைவோம்....சவுதி அரேபியா நிறுவப்பட்ட தினத்தையும் மற்றும் உலகமகளிர் தினத்தையும் முன்னிட்டு சவுதி அரேபியா NRTIA ரி...
14/03/2022

தமிழால் இணைவோம்....
சவுதி அரேபியா நிறுவப்பட்ட தினத்தையும் மற்றும் உலகமகளிர் தினத்தையும் முன்னிட்டு
சவுதி அரேபியா NRTIA ரியாத்மத்தியமண்டலம் மற்றும் King Fahad medical city இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததானமுகாம்...
இடம்..ஒமர் பின் அல்கத்தாப் (பார்க் அருகில்)..அல்கபீப் தெரு..பத்தா.குராபிக்ரோடு.
நேரம் காலை 9 மணிமுதல் ..மாலை 4 மணிவரை.
தமிழால் இணைந்து உதிரம் கொடுத்து உயிரை காப்போம்.. மனிதநேயத்தை வளர்ப்போம் ...(குறிப்பு)..
முகாமில் கலந்து கொள்பவர்கள்.
கொரனா தடுப்பூசி இரண்டு தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்...
தவக்கல்னா அப்ளிகேசன் வைத்திருக்க வேண்டும்.
சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும்.
முக கவசம் அணிந்திருக்க வேண்டும்..
(அனைவருக்கும் காலை மற்றும் மதியஉணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது) அழைப்பில் மகிழ்வது.
சவுதியா NRTIA..ரியாத் மண்டலம்.

 #கடையநல்லூர் நபர் சொந்த ஊர் திரும்ப ஏற்ப்பாடு!இந்தியன் சோசியல் ஃபோரம்-ஜித்தா:தென்காசி மாவட்டத்தை சார்ந்த ஜலாலுதீன் அவர்...
10/03/2022

#கடையநல்லூர் நபர் சொந்த ஊர் திரும்ப ஏற்ப்பாடு!

இந்தியன் சோசியல் ஃபோரம்-ஜித்தா:

தென்காசி மாவட்டத்தை சார்ந்த ஜலாலுதீன் அவர்கள் ஜித்தா-அல் ஹம்ரா பகுதியில் ஒரு வீட்டில் ஹாரிஸ் பணியாளராக வேலை பார்த்து வருகிறார்.

தாயகத்திலிந்து வந்து ஆறு வருடம் ஆகிய நிலையில்,கடந்த நான்கு வருடமாக இக்காமா புதுப்பிக்காமல் இருந்த சூழலில் இவருடைய முதலாளி நான்கு மாதத்திற்கு முன்பு மரணமடைந்த காரணத்தினால் தாயகத்திற்கு செல்வதற்கான சூழல் மேலும் சிரமமாக மாறியது, இதற்கு மத்தியில் உடல் நிலை சரியில்லாமலும் அவதிப்பட்டு கொண்டிருந்த ஜலாலுதீன் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாது இருந்த சூழ்நிலையில் அவர் வேலை செய்யும் வீட்டின் அருகில் உள்ள நபர்களால் இச்செய்தி சமூகவலைதளத்தில் பரவலாக்கப்பட்டது,

இதனை கண்ட இந்தியன் சோசியல் ஃபோரம் ஜித்தா நிர்வாகிகள் உடனடியாக அவரை தொடர்புகொண்டு பிரச்சனையை உறுதி செய்து,09-03-2022 அன்று அவர் இருக்கும் இடத்திற்கு இந்தியன் சோசியல் ஃபோரத்தின் நிர்வாகிகள் நேரடியாக சென்று ஆறுதல் கூறி,நாட்டிற்கு செல்வதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியன் சோசியல் ஃபோரம் மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில் இந்திய துணைதூதரகத்தை தொடர்பு கொண்டு விரைவாக தாயகம் செல்வதற்கான பணிகளை இந்தியன் சோசியல் ஃபோரம் மேற்கொண்டிருக்கின்றது.

இவண்:-
இந்தியன் சோசியல் ஃபோரம்
தமிழ்நாடு மாநில கமிட்டி
ஜித்தா

#கடையநல்லூர் #கடையநல்லூர்_செய்திகள்

08/03/2022

மார்ச் 27 முதல் சர்வதேச வி்மான சேவை

04/03/2022
உள்துறை அமைச்சகம் அறிவிப்பு இந்தியாவிலிருந்து  சவூதி அரேபியா நாட்டிற்குள்   வருகின்ற  பயணிகள்   தங்களின் கோவிட் 19  PCR ...
03/02/2022

உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

இந்தியாவிலிருந்து
சவூதி அரேபியா நாட்டிற்குள் வருகின்ற பயணிகள் தங்களின் கோவிட் 19 PCR பரிசேதனையின் முடிவை 48 நேரத்திற்கு முன்பாக சமர்ப்பிக்கப்பட வேண்டும் என உள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது .

இந்த நடைமுறை 09-02-2022 அன்று முதல் அமலுக்கு வருகின்றது

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Saudi Arabia Tamil Social Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share