ஒலி FM- oli fm

  • Home
  • ஒலி FM- oli fm

ஒலி FM- oli fm Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ஒலி FM- oli fm, Media/News Company, .

14/11/2024

திகாமடுல்ல மாவட்டத்தில் சகல தொகுதியிலும் வரலாற்றில் முதல் தடவையாக SLMC படுதோல்வி.

தேசிய அரசியலில் ஊழல்களற்ற தூய்மையான மாற்றத்திற்க்கான பாதையே எமது வழி...
24/10/2024

தேசிய அரசியலில் ஊழல்களற்ற தூய்மையான
மாற்றத்திற்க்கான பாதையே எமது வழி...

கல்முனை மண்ணுக்கு முஸ்லிம் காங்கிரஸ் இழைத்துள்ள  துரோகம் வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்புச் செயலாகும்.பாராளுமன்ற பிரதிந...
16/10/2024

கல்முனை மண்ணுக்கு முஸ்லிம் காங்கிரஸ் இழைத்துள்ள துரோகம் வரலாற்றில் அழிக்க முடியாத கறுப்புச் செயலாகும்.

பாராளுமன்ற பிரதிநிதித்துவம், அரசியல் விவகாரங்கள் என்பவற்றைத் தாண்டி கல்முனை மக்களின் எதிர்பார்ப்புகளையும் அபிலாசைகளையும் குழிதோண்டிப் புதைத்துள்ள நாகரிகமற்ற அரசியல் பழிவாங்கல் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அரங்கேற்றப்பட்டிருக்கின்றமை மிக மோசமானது என புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற வேட்பாளரும், ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளருமாகிய லொயிட்ஸ் ஆதம்லெப்பை தெரிவித்தார்.

கல்முனை மாநகரம் இலங்கை வாழ் முஸ்லிம் பிரதேசங்களுக்கு முன்னோடி நகராகும். பல்வேறு அழுத்தங்கள் அப்பிரதேசத்தின் மீது பிரயோகிக்கப்பட்ட போதெல்லாம் ஹரீஸ் எம்பி தனித்து அவற்றை எதிர்த்து நின்றவர். அவருக்கு இவ்வாறான சதியை செய்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மீது பலத்த அதிருப்தியினையும், கண்டனங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அத்துடன் கல்முனை மாநகர மக்களின் அபிலாஷைகளை வென்றடுக்க நாமும் எமது வேட்பாளர் குழுவும் உறுதியுடன் செயற்படுவோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடைமுறை சாத்தியமற்ற அறிவிப்புக்களை விடுத்து மக்களை மீண்டும் ஏமாற்றும் ஹக்கீம் அதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் - SLM...
15/10/2024

நடைமுறை சாத்தியமற்ற அறிவிப்புக்களை விடுத்து மக்களை மீண்டும் ஏமாற்றும் ஹக்கீம் அதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் - SLMC கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.சி.ஏ.சத்தார்!

என்னால் எடுக்கக்கூடிய உச்சக்கட்ட முயற்சியை நான் எடுத்த நிலையிலும் ஏனைய வேட்பாளர்கள் விட்டுக்கொடுப்பு செய்யாத காரணத்தினாலும் இறுதி நேரத்தில் சகோதரர் ஹரிஸ் அவர்களின் பெயர் வேட்பாளர் பட்டியலில் உள்வாங்கப்படுவதில் தடங்கள் ஏற்பட்டது என்பது கவலைக்குரியது. அவ்வாறாக இருந்த போதிலும் கூட கட்சியின் தேசியப் பட்டியலில் அவர் பெயர் முதலாவதாக உள்வாங்கப்பட வேண்டும் என்ற பிரேரணையும் முன்வைக்கப்பட்டது. அதையும் நாங்கள் சாதகமாக பரிசீலித்திருக்கிறோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் தெரிவித்திருப்பது ஹரீஸ் அவர்களின் மக்கள் செல்வாக்குக்கு அஞ்சியே தவிர வேறு காரணங்கள் இல்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரமுகரும், கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினருமான ஏ.சி.ஏ.சத்தார் தெரிவித்தார்.

சமகால அரசியல் விடயங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

திகாமடுல்ல மாவட்டத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஷ் அவர்கள் உள்வாங்கப்பட வில்லை என்ற அறிவிப்பு வெளியானவுடன் கிழக்கு மாகாணத்தில் அவருக்கு எழுந்துள்ள அனுதாப அலையை கட்டுப்படுத்தவும், மாவட்டம் முழுவதிலுமுள்ள அவரின் பல்லாயிரக்கணக்கான ஆதரவாளர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளவும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு எதிராக எழுந்துள்ள அதிருப்தியை சரிப்படுத்தவும் பாமர மக்களை இன்னும் இன்னும் ஏமாற்றலாம் என நினைத்து இப்படியான அறிவிப்புக்களை வெளியிடுகிறார்

தேர்தல் சட்டத்தை மக்கள் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள். அதனடிப்படையில் தேசிய பட்டியலில் உள்ளடக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்பட்டியலானது வேட்புமனு இறுதித்தினத்தன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த பட்டியலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் அவர்கள் எங்கும் ஒப்பமிடவில்லை என்பதாக அறிகிறோம். இந்த நிலையில் ஹரீஸ் அவர்களை எப்படி தேசிய பட்டியலில் நீங்கள் உள்ளடக்க முடியும். இது தேர்தல் சட்டத்தில் இல்லாத ஒரு விடயம். தேர்தல்கள் ஆணைக்குழு எவ்வாறு வேட்புமனுவில் பெயர்களை மாற்ற அனுமதிக்காதோ அதுபோன்று இனி அந்த தேசிய பட்டியலில் கூட மாற்றத்தை செய்ய அனுமதிக்காது. இவ்வாறான நிலையில் மக்களுக்கு ஹரீஸ் அவர்களை எம்.பியாக்க போவதாக பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏமாற்றுகிறீர்கள்.

ஏற்கனவே ஒட்டமாவடிக்கும் தங்களின் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டால் அங்கும் தேசிய பட்டியல் தருவதாக வாக்குறுதி வழங்கி அதுபோன்று பல ஊர்களுக்கும் ஹக்கீம் அவர்களினால் தேசிய பட்டியல் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ள சூழ்நிலையில் கல்முனை தொகுதியில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலில் கட்சி செயலாளர் நிஸாம் காரியப்பரின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. அவருக்கு நிச்சயம் பாராளுமன்ற உறுப்புரிமை வழங்கப்படும் என்பதை அறிகிறோம். இப்போது முன்னாள் எம்.பி ஹரீஸுக்கும் மு.கா தேசிய பட்டியலில் எம்.பி வழங்க போவதாக கூறப்படுகிறது. மு.கா என்பது பரந்துபட்ட கட்சி கல்முனைக்கு இரண்டு தேசிய பட்டியல் என்ற விடயத்தை ஏனைய ஊர்கள் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது கட்சிபிரமுகர்கள் தான் ஏற்றுக்கொள்வார்களா? இதில் எங்காவது சாத்தியப்பாடுகளோ அல்லது லொஜிகோ இருக்கிறதா? இப்படியான கதையை சூழ்நிலைக்கு ஏற்ப மு.கா தலைவர் ஹக்கீம் அவிழ்த்து விடுவது எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை.

மு.கா தலைவர் ஹக்கீம் அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றும் ஒருவர் என்றவகையில் இவ்வாறான விடயங்கள் இஸ்லாத்தில் ஹராமாக்கப்பட்டவை என்பதை உணர்ந்து அல்லாஹ்வை அஞ்சி கொள்ள வேண்டும். பல்வேறு விடயங்களில் உலமாக்கள் முன்னிலையிலும், உலமாக்களிடமும் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு ஏமாற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இஸ்லாமியர்கள் உறுதியாக நம்பும் மறுமையை பயந்து இப்படியான வேலைகளிலிருந்து தவிர்ந்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்தார்.

தலைமைக்கு அதிக தலைவலியாகவும் அழுத்தமாகவும் போட்டியாகவும் இருந்த ஒருவர்தான் இந்த HMM Harees .அம்பாறை மாவட்டத்திலே இவருக்க...
12/10/2024

தலைமைக்கு அதிக தலைவலியாகவும் அழுத்தமாகவும் போட்டியாகவும் இருந்த ஒருவர்தான் இந்த HMM Harees .

அம்பாறை மாவட்டத்திலே இவருக்கென்று ஓயாத அலை எப்போதுமே இருந்து கொண்டே இருக்கிறது அம்பாறை மாவட்டத்திலே தலைவருக்கு அடுத்தபடியாக அதிக விருப்பு வாக்குகளை பெறுகின்ற ஒருவராக இதுவரைக்கும் திகழ்ந்து வந்தார் அதுமாத்திரமல்ல அவ்வப்போது தலைமைக்கும், உயர் பீடத்திற்கும் எதிராக முடிவுகளை எடுக்கக் கூடிய திராணி கொண்டவராகவும் தலைநிமிர்ந்து நின்றார்.

மறுபுறம் கிழக்கு இலங்கையில் மாத்திரமல்ல முழு நாட்டிலும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் Rauff Hakeem அவர்களுக்கு எதிரான எதிர்ப்பலைகள் கிளம்பி இருக்கின்ற இந்த காலகட்டத்தில், ஏன் இவ்வாறான ஒரு மாற்றத்தை ஏற்படுத்தினார் என்பது கேள்விக்குறியே?

இதற்குப் பின்னால் பலரும், பல மர்ம கதைகளும், பல காரணங்களும் ஒளிந்து கிடக்கிறது. தலைவரின் கதையைக் கேட்டு தலை குனிகின்றவர்களும், தனக்கு கூஜா தூக்குகின்றவர்களும், தன் வாலை பிடித்துக் கொண்டு தன் பின்னே வருகின்றவர்களின் கதைகளும் பேச்சுக்களும் அங்கே வலுப்பெற்று இருக்கிறது. அங்கே HMM. Harees சை வீழ்த்த வேண்டும் என்பதற்கு மேலாக, கல்முனை மண்ணை தலைகுனிய வைக்க வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டவர்கள் கட்சிக்கு வெளியிலும், உயர் பீடத்திலும் இருக்கிறார்கள் என்பது உண்மையே!

ஆனால் தலைவர் எடுத்த இத்தீர்மானம் பிழை இன்றே கூற வேண்டும். எதுவாயினும் தீர்ப்பை மக்களின் கையில் கொடுத்திருக்கலாம்!

ஆனால் இத்தீர்மானத்தில் தலைவருடைய #நரி #தந்திரம் தெளிவாகத் தெரிகிறது. இந்த ஆசை தலைவருக்கு இன்று நேற்று அல்ல பல நெடுங்காலமாக இருந்து வந்தது ஒன்று, அதனாலேயே இதற்குப் பிறகு எந்த பலமான கட்சியிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடாது என்று நினைத்து, நாட்டில் இருக்கிற அதிகமான கட்சிகளின் வேட்பு மனு நிறைவடைய போகின்ற தருணம் வரை தனது முடிவை இழுத்தடித்து hmm.harees க்கு ஆப்பு வைத்தார் என்பது உண்மை.

ஆனால் கிழக்கிலே இந்த கட்சி அழியும் என்பதும், புதிய தலைமைத்துவம் உருவாகும் என்பதும் திண்மம்!

Vellathamby Arafaath
kalmunai.

24/09/2024

நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தல் !

24/09/2024

இன்று(24) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்றத்தை கலைத்து , ஜனாதிபதியின் உத்தரவிற்கு அமைய அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

24/09/2024

Breaking- பாராளுமன்றத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார சற்றுமுன் கையொப்பமிட்டார்.

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்.

24/09/2024

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு நாளை உரை…

இன்று ஆற்றவிருந்த உரை பிற்போடப்பட்டது..

புதிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.නව අගමැතිනි ආචාර්ය හරිනි අමරස...
24/09/2024

புதிய பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

නව අගමැතිනි ආචාර්ය හරිනි අමරසූරිය ජනපති ඉදිරියේ දිවුරුම් දෙයි

The new Prime Minister Dr. Harini Amarasuriya takes oath before the President

22/09/2024

எந்த வேட்பாளரும் 50வீதத்திற்கும் மேலதிகமான வாக்குகளை பெறாததால் 2ம் ,3ம் விருப்பு வாக்குகள் எண்ணப்படவுள்ளது.

தேர்தல் ஆணைக்குழு

Hambantota District - Postal Vote ஹம்பாந்தோட்டை  மாவட்டம்  - அஞ்சல் மூல வாக்குகள்
21/09/2024

Hambantota District - Postal Vote
ஹம்பாந்தோட்டை மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

ஜனாதிபதித் தேர்தல் - 2024பொலன்னறுவை மாவட்டம் - தபால் மூல வாக்குகள்
21/09/2024

ஜனாதிபதித் தேர்தல் - 2024
பொலன்னறுவை மாவட்டம் - தபால் மூல வாக்குகள்

இரத்தினபுரி மாவட்டம்  - அஞ்சல் மூல வாக்குகள்
21/09/2024

இரத்தினபுரி மாவட்டம் - அஞ்சல் மூல வாக்குகள்

21/09/2024

இன்று இரவு 10 மணிமுதல் நாளை காலை 6 மணிவரை ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென அரசாங்கம் அறிவித்துள்ளது.

21/09/2024

எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமை விசேட விடுமுறை தினம்

பதுளையில் இன்று (16)  இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' பிரசார கூட்டம்.!
16/09/2024

பதுளையில் இன்று (16) இடம்பெற்ற 'ரணிலால் இயலும்' பிரசார கூட்டம்.!

11/09/2024

இயலும் ஸ்ரீ லங்கா கல்முனை சாய்ந்தமருதில் இருந்து நேரடியாக

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when ஒலி FM- oli fm posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share