Suvaasam நியூஸ்

  • Home
  • Suvaasam நியூஸ்

Suvaasam நியூஸ் Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Suvaasam நியூஸ், Social Media Agency, Main Street, .

இனி கொழும்பு கோபுரம்கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரிலிருந்து 'தாமரை' என்ற சொல்லை நீக்கி, அதன் பெயரை 'கொழும்பு கோபுரம்' எ...
23/04/2023

இனி கொழும்பு கோபுரம்

கொழும்பு தாமரை கோபுரத்தின் பெயரிலிருந்து 'தாமரை' என்ற சொல்லை நீக்கி, அதன் பெயரை 'கொழும்பு கோபுரம்' என மாற்றுவதற்கான பிரேரணை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயரமான கோபுரத்திற்கு தாமரை கோபுரம் என்ற பெயர் ஏற்புடையதல்ல என்ற கருத்தும் இந்த பெயரை மாற்றக் காரணமாக இருந்ததாக பிரேரணையில் கூறப்படுகிறது.

15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை! அம்பாறை – பண்டாரதுவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் 15 வயது ...
22/04/2023

15 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

அம்பாறை – பண்டாரதுவ, மாயாதுன்ன பிரதேசத்தில் நேற்று (21) பிற்பகல் 15 வயது சிறுவன் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் தனது வீட்டில் 12 போர் ரக துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் போது பலத்த காயமடைந்த சிறுவன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
Tm

கல்குடா சுழியோடிகளுக்கு நீச்சல் திறன்  பயிற்சி(எச்.எம்.எம்.பர்ஸான்)கல்குடா சுழியோடிகளுக்கான நீச்சல் திறன் பயிற்சி புதன்க...
06/04/2023

கல்குடா சுழியோடிகளுக்கு நீச்சல் திறன் பயிற்சி

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்குடா சுழியோடிகளுக்கான நீச்சல் திறன் பயிற்சி புதன்கிழமை (5) பாசிக்குடா மெரீனா ஹோட்டலின் நீர் தடாகத்திலும் காயங்கேணி கடல் பரப்பிலும் இடம்பெற்றது.

மட்டக்களப்பு சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட இவ் நீச்சல் பயிற்சி பல்கலைக்கழகத்தின் பிரதி பணிப்பாளர் கே.பாலச்சந்திரன் மேற்பார்வையில் இடம்பெற்றது.

திறன் பயிற்சியின் மதிப்பீடுகளை பல்கலைக்கழக விரிவுரையாளர் எஸ். மணிவண்ணன் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை மெகா 91 விளையாட்டுக்கழகத்தின் இப்தார் நிகழ்வு(செய்னுதீன் மீராசாகிப்) பிறைந்துரைச்சேனை மெகா ...
06/04/2023

வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை மெகா 91 விளையாட்டுக்கழகத்தின் இப்தார் நிகழ்வு

(செய்னுதீன் மீராசாகிப்)

பிறைந்துரைச்சேனை மெகா 91 விளையாட்டுக்கழகத்தின் இப்தார் நிகழ்வு
06.04.2023 ம்திகதி இன்று வியாழக்கிழமை பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலய பிரதான மண்டபத்தில் தலைவர் கழகத்தின் AUM.நளீம்(ஸலாமி) தலைமையில் இடம்பெற்றது.

கழகத்தினுடைய வெளிநாட்டில் வாழும் சிரேஷ்ட உறுப்பினர்களின் நிதிப்பங்களிப்புடன் நடைபெற்ற இவ் இப்தார் நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள்,கல்வி அதிகாரிகள் பள்ளிவாயல்களின் தலைவர்கள் நிருவாக உறுப்பினர்கள் , உலமாக்கள்,ஆசிரியர்கள்,ஊர் பிரமுவகர்கள்,கழகத்தினுடைய நிருவாக உறுப்பினர்கள்,விளையாட்டு வீரர்கள்,ஏனைய கழகத்தினுடைய தலைவர்கள், பொதுநல அமைப்பிக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இப்தார் நிகழ்வுகளை சிறப்பாக செய்ததில் எமது கழகத்தினுடைய பொருளாளர் CVM.கியாஸ் அவர்களினதும் ஏனைய நிருவாக உறுப்பினர்களினதும் பங்களிப்பு மகத்தானமை குறிப்பிடத்தக்கது.

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டமாவடி - மீராவோடை இளைஞன் பைரூசுக்கு உதவுங்கள்! ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக...
06/04/2023

இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டமாவடி - மீராவோடை இளைஞன் பைரூசுக்கு உதவுங்கள்!

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடையைச் சேர்ந்த முகமட் பைரூஸ் எனும் சகோதரர் தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு மிகக்கஷ்டமான நிலையை அவரது குடும்பம் எதிர்கொண்டுள்ளதுடன், இப்பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கமுடியாமலும் மேலதிக சிகிச்சைகளுக்காக என்னசெய்வதென்றரியாமலும் தவித்து வருகின்றனர்.

ஆகவே, இன்று இச்சகோதரனுக்கானது நாளை நமக்காகாமல் இருப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

எனவே, வாரி வழங்கும் இப்புனித மாதத்தில் இருக்கும் நாம் முடியுமானவரை இச்சகோதரனுக்கு உதவி எல்லாம் வல்ல ஏக இறைவனின் திருப்பொருத்தத்தைப்பெற்றுக்கொள்வோமாக!

வங்கி கணக்கு விபரம்!
ACHCHI MOHAMED. MOHAMED FAIROOS
AC NO. 340 200 10 0020627
PEOPLE BANK
ODDAMAVADI BRANCH

தொலைபேசி இலக்கம்!
0756039559 (மைத்துனர்)

குறிப்பு:உதவிபுரிய முடியாத நிலையில் உள்ள உறவுகள் இப்பதிவினை பகிர்ந்து அக்குடும்பத்திற்கு உதவிகள் சென்றடைய உதவிபுரிவோமாக!இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள ஓட்டமாவடி - மீராவோடை இளைஞன் பைரூசுக்கு உதவுங்கள்!

ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மீராவோடையைச் சேர்ந்த முகமட் பைரூஸ் எனும் சகோதரர் தனது இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார்.

அவரது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு மிகக்கஷ்டமான நிலையை அவரது குடும்பம் எதிர்கொண்டுள்ளதுடன், இப்பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்கமுடியாமலும் மேலதிக சிகிச்சைகளுக்காக என்னசெய்வதென்றரியாமலும் தவித்து வருகின்றனர்.

ஆகவே, இன்று இச்சகோதரனுக்கானது நாளை நமக்காகாமல் இருப்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை!

எனவே, வாரி வழங்கும் இப்புனித மாதத்தில் இருக்கும் நாம் முடியுமானவரை இச்சகோதரனுக்கு உதவி எல்லாம் வல்ல ஏக இறைவனின் திருப்பொருத்தத்தைப்பெற்றுக்கொள்வோமாக!

வங்கி கணக்கு விபரம்!
ACHCHI MOHAMED. MOHAMED FAIROOS
AC NO. 340 200 10 0020627
PEOPLE BANK
ODDAMAVADI BRANCH

தொலைபேசி இலக்கம்!
0756039559 (மைத்துனர்)

குறிப்பு:உதவிபுரிய முடியாத நிலையில் உள்ள உறவுகள் இப்பதிவினை பகிர்ந்து அக்குடும்பத்திற்கு உதவிகள் சென்றடைய உதவிபுரிவோமாக!

13/03/2023

வாழைச்சேனை சீனி ஆலிமின் மகள் சனூனின் மனைவி வபாத்

‘‘ஸவுதி எயா லைன்ஸ்’’ உதயமானது ஸவுதியின் புதிய விமான சேவைபட்டத்து இளவரசர் அல்-அமீர் முஹம்மத் பின் ஸல்மான் ஆலு ஸுதியின் பண...
13/03/2023

‘‘ஸவுதி எயா லைன்ஸ்’’ உதயமானது ஸவுதியின் புதிய விமான சேவை

பட்டத்து இளவரசர் அல்-அமீர் முஹம்மத் பின் ஸல்மான் ஆலு ஸுதியின் பணிப்புரையின் பேரில் ஸவுதியின் புதிய விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. உள்ளக வான்வளிப்போக்குவரத்தை நவீனப்படுத்தல், விஸ்தரிக்கும் வகையில் இது செயற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான பொது முதலீட்டு நிதியம் ஒன்றினை ஆரம்பிக்குமாறு இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோலில் மாத்திரம் தங்கியிருக்காத அதிக வருமான வழிகளைக் கொண்ட, அதிக வேலை வாய்ப்புக்களைக் கொண்ட, உலகின் வள்ளரசுகளுக்கு நிகரான நன்கு மேம்பட்ட ஒரு நாடாக ஸவுதியை மாற்றுதல் எனும் 2030 தொலை நோக்குத் திட்டத்தைக் கொண்டு செயற்படும் இளவரசர் முஹம்மத் பின் ஸல்மானின் அடுத்த பாரிய நகர்வாக இது நோக்கப்படுகின்றது. இது உள் நாட்டின் விமான சேவை நிறுவனங்களுக்கிடையில் போட்டித் தன்மையை உருவாக்கும் மேலும் மேம்பட்ட சேவையை பயணாளிகளுக்கு உறுதிப்படுத்தும் என இளவரசர் குறிப்பிட்டுள்ளார்.

தலை நகர் றியாதை தலைமையகமாகக்கொண்டு இயங்கும் இப்புதிய விமான சேவை நிறுவனத்தின் தலைவராக இத்துறையில் 40வருட கால அனுபவம் கொண்ட தோனி டக்லஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக 35பில்லியம் டொலரில் உலகின் மிகவும் தூரப்பிரதேசங்களுக்கு செல்வதற்காக பயன்படுத்தப்படும் புதிய போயிங் ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்படவுள்ளன.

2030 ஆண்டளவில் உலகின் நூறு நாடுகளுக்கு சேவையினை வழங்குவதை இந்நிறுவனம் இலக்காக் கொண்டுள்ளது. ஸவுதியின் வருமானத்தில் 75 பில்லியன் ரியால்களை இது வழங்கும் எனவும் இரண்டு இலட்சம் நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புக்கள் இதனால் உருவாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆபிரிக்கா ஆசியா ஐரோப்பா எனும் மூன்று பிரதான கண்டங்களின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாகக் கருதப்படும் ஸவுதி அரேபியாவின் விரைவான முன்னேற்றத்தின் ஒரு மையிற்கல்லாகப் பார்க்கப்படுகின்றது. இத்திட்டதின் மூலம் ரியாத் உலகின் பயணிகள் சங்கமிக்கும் பிரதான இடமாக திகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாலை நகர் அர்-ரஹ்மானியா குர்ஆன் கலாசாலையின் பரிசளிப்பு விழாதியாவட்டவான் கிராம சேவகர் பிரிவுக்குற்படட்ட பாலை நகர் கிராமத்...
12/03/2023

பாலை நகர் அர்-ரஹ்மானியா குர்ஆன் கலாசாலையின் பரிசளிப்பு விழா

தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவுக்குற்படட்ட பாலை நகர் கிராமத்தில் செயற்பட்டு வரும் அர்-ரஹ்மானியா குர்ஆன் கலாசாலையின் பரிசளிப்பு விழா கலாசாலை அதிபர் RM.அர்ஷாத் (நஹ்ஜி) மற்றும் உபைதுல்லாஹ் (பாதிபி) ஆகியோரின் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வின் அதிதியாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் வட்டார பிரதேச சபை உறுப்பினரும் ஆசிரியருமான AG அஸீஸுல் றஹீம் அவர்கள் கலந்து கொண்டதுடன், பாலை நகர் ரஹ்மானியா ஜும்மா பள்ளிவாசல் நிருவாகிகள், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஊர் நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.

பரிசளிப்பு விழா நிகழ்வில் கலாசாலை மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், பல்வேறு போட்டி நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி வெற்றியீட்டிய மாணவர்கள், மற்றும் பரீட்சைகளில் சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

பொய் சொல்லி பணம் வசூலிப்பு!ஓட்டமாவடி - மீராவோடை பள்ளிவாசல்களில் அறிவிப்புகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பி...
12/03/2023

பொய் சொல்லி பணம் வசூலிப்பு!

ஓட்டமாவடி - மீராவோடை பள்ளிவாசல்களில் அறிவிப்பு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சிலர் பொய்யான காரணங்களை கூறி பண வசூலிப்பில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பள்ளிவாசல்களில் பொதுமக்களுக்கு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான நடவடிக்கைகள் மீராவோடை, செம்மண்ணோடை, பதுரியாநகர், மாஞ்சோலை உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்று வருகின்றன.

இவ்வாறு வீடு வீடாக வரும் நபர்கள் தாம் பிரதேச பள்ளிவாசல்களின் அனுமதியோடு வருவதாக பொய் கூறி பண வசூலிப்பில் ஈடுபடுகின்றனர்.

இவர்களின் பொய்யான கதைகளை நம்பி யாரும் பணத்தை வழங்க வேண்டாம் என்றும் பள்ளிவாசல்களில் பொதுமக்களுக்கு மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளன.

ஊருக்குள் வரும் யானைகளை கட்டுப்படுத்த  வெடில்கள் வழங்கி வைப்பு!(எச்.எம்.எம்.பர்ஸான்)கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச...
11/03/2023

ஊருக்குள் வரும் யானைகளை கட்டுப்படுத்த வெடில்கள் வழங்கி வைப்பு!

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராமங்களில் அண்மைக்காலமாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.

யானை தாக்கி பல உயிர்கள் இழந்துள்ளதுடன், யானைகள் தொடர்ந்தும் பயிர் நிலங்களை துவம்சம் செய்வது வருகின்றன.

யானைகளின் தொல்லையால் குறித்த பகுதி மக்கள் தொடர்ந்தும் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இதனை பொதுமக்கள் பிரதேச செயலாளர் எஸ்.எச்.எம்.முஸம்மிலின் கவனத்திற்கு கொண்டு வந்தபோது, பிரதேச செயலாளர் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று யானை வெடில்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

அந்தவகையில், வியாழக்கிழமை (9) யானைகள் அதிகமாக நடாமாடும் இடங்களில் உள்ள நபர்களிடம் யானை வெடிகள் கையளிக்கப்பட்டன.

210 சீ தியாவட்டவான் கிராம சேவை பிரிவின் கிராம உத்தியோகத்தர் எம்.எம். அன்வர் சதாத், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.எம். அரபாத் மற்றும் தொண்டர் அணியின் செயற்பாட்டாளர் ஹலீம் ஆகியோரின் பங்கு பற்றுதளுடன் குறித்த நபர்களுக்கு யானை வெடில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு(பாறுக் ஷிஹான்)சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக...
11/03/2023

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு

(பாறுக் ஷிஹான்)

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கிழக்கு இளைஞர்கள் அமைப்பு மற்றும் மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்கம் ஆகியன காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த பெண்களுக்கான சுகாதார விழிப்புணர்வு செயலமர்வு சனிக்கிழமை(11) காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கிழக்கு இளைஞர்கள் அமைப்பின் தலைவர் முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தானீஷ் ரஹ்மத்துல்லாஹ்வின் ஒருங்கிணைப்பில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்லிமா வஸீர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் வளவாளர்களாக பிராந்திய தாய் செய் நல வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எச் றிஸ்வின் மற்றும் பிராந்திய தொற்று நோயியல் வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சி.எம் பசால் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் அதிதிகளாக மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்க தலைவர்எம்.ரி.எம் நெளஷாத் பொது சுகாதார தாதிய அதிகாரி திருமதி ராஜேந்திரகுமார் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் பைசால் முஸ்தபா மாளிகா மீன் மொத்த வியாபார மற்றும் நலன்புரி சங்க செயலாளர் ஏ.எல். பெளசர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய உத்தியோகத்தர்கள், மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து சிறப்பித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மகளிர்  தின நிகழ்வு(எம்.எஸ்.எம்.ஸாகிர்)ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் ஏற்பாடு...
11/03/2023

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மகளிர் தின நிகழ்வு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச பெண்கள் தின நிகழ்வு "கிழக்கு மற்றும் மேற்கில் பெண்களின் உரிமைகளும், மதிப்புகளும்" எனும் தொனிப்பொருளில் நாளை (12) ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3:30 க்கு கொழும்பு -07, இல 24, ஹோர்டன் பிளேஸில் உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் மண்டபத்தில் இடம்பெற உள்ளது

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவி டாக்டர் தீபிகா உடகம, கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் பரீனா றுசைக், சட்டத்தரணி சிவஸ்திகா அருலிங்கம் ஆகியோர் கலந்து கொள்வர்.

ஈரான் இஸ்லாமிய குடியரசிலிருந்து வருகை தந்திருக்கும் கலாநிதி ஸஹேரேஹ் மிப்ராஜி நிகழ்வில் விசேட பேச்சாளராகக் கலந்து கொள்கிறார்.

நிகழ்வுகளை ஸடடே எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் பிரதம ஆசிரியை ஹனா இப்ராஹிம் நெறிப்படுத்துவார்.

மீடியா போரத்தின் உயர்பீட உறுப்பினர்கள், கல்விமான்கள், இலக்கியவாதிகள் எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல் (பாறுக் ஷிஹான்)வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக...
11/03/2023

வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல்

(பாறுக் ஷிஹான்)

வியாபார நிலையங்களின் பாதுகாப்பு சம்பந்தமாக விசேட கலந்துரையாடல் கல்முனை தலைமையக பொலிஸாரின் ஏற்பாட்டில் சனிக்கிழமை(11) முற்பகல் இடம்பெற்றது.

இருதயநாதர் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலானது கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது அம்பாரை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டு கல்முனை மாநகர வர்த்தகர்கள் தற்போது முகம் கொடுத்துள்ள பிரச்சினைகள் தொடர்பில் விழிப்பூட்டல் கலந்துரையாடலை மேற்கொண்டார்.மேலும் இக்கலந்துரையாடலில் எதிர்காலத்தில் வர்த்தக நிலையங்களில் எடுக்கப்படவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

அத்துடன் பொதுச்சந்தை வர்த்தகர்கள் நகை கடை உரிமையாளர்கள் கைத் தொலைபேசி கடை உரிமையாளர்கள் பல்பொருள் கடை அங்காடி வியாபாரிகள் உள்ளிட்ட ஏனைய வர்த்தகர்களும் இக்கலந்துரையாடலில் பங்கு பற்றி தத்தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதுடன் தமது நலனில் அக்கறை எடுத்து செயற்படவுள்ள கல்முனை தலைமையக பொலிஸாருக்கு நன்றிகளையும் தெரிவித்து கொண்டனர்.

மேலும் வர்த்தகர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதற்கு 0718591161 அல்லது 0672229226 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறியத்தருமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.

மேற்படி கலந்துரையாடலில் கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ. எச். டி .எம். எல். புத்திக கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் கல்முனை பொலிஸ் நிலையத்தின் பிரதம பொலிஸ் பரிசோதகரும் சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரியுமான ஏ.எல்.ஏ.வாஹிட் கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்னாயக்க கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி என பலரும் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கல்முனை அமானா வங்கி தனியார் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி...
11/03/2023

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கல்முனை அமானா வங்கி தனியார் பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதி விபத்து - பழக்கடைக்கு சேதம்

(எஸ்.அஷ்ரப்கான்)

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கல்முனை அமானா வங்கி தனியார் பேருந்து நிலையத்தில் இன்று (11) இடம்பெற்ற விபத்தின் போது தனியார் பேருந்தினால் பழக்கடை ஒன்றும், அதற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியன சேதமாகியுள்ளது.

இவ்விபத்து இன்று (11) காலை 10.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாளாந்த சம்பளம் பெற்று திண்மக்கழிவகற்றும் தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும்: தவிசாளர் சுபைர் ஜனாதிபதிக்கு கடிதம...
11/03/2023

நாளாந்த சம்பளம் பெற்று திண்மக்கழிவகற்றும் தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும்: தவிசாளர் சுபைர் ஜனாதிபதிக்கு கடிதம்.

(அஷ்ரப் கான், ஏ.எல்.றியாஸ்)

உள்ளூராட்சி மன்றங்களில் நீண்டகாலமாக நாளாந்த சம்பளம் பெற்று திண்மக்கழிவகற்றும் பணியில் ஈடுபட்டுவரும் சுகாதார தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி ஏறாவூர் நகர சபையின் தவிசாளர் எம்.எஸ்.சுபைர் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்துள்ளார்.

அந்தக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது...

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் திண்மக்கழிவகற்றும் பணியில் ஈடுபடும் சுகாதார தொழிலாளர்கள் சுமார் 9 வருட காலமாக நாளாந்த சம்பளத்தினைப் பெற்றுக்கொண்டே தங்களது பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த தொழிலில் ஈடுபட்டுவரும் சுகாதார தொழிலாளர்கள் ஒரு மாதத்தில் குறிப்பிட்ட நாட்கள் மாத்திரம் பணியாற்றி வருவதுடன் மாதாந்தம் 15000 ரூபா சம்பளத்தினையே பெற்று வருகின்றனர்.

நாட்டிலே ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் வாழ்க்கைச் செலவும் அதிகரித்துக் காணப்படும், இக்காலகட்டத்தில் சிறியதொரு தொகையினை சம்பளமாகப் பெற்றுக்கொள்ளும் குறித்த ஊழியர்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்நோக்கி வருவதனை அவதானிக்க முடிகிறது.

குறிப்பாக, வாழ்க்கைச் செலவு அதிகரித்துக் காணப்படும் இக்காலகட்டத்தில் மிகக்குறைந்த வருமானத்தினைக் கொண்டுள்ள குறித்த சுகாதார தொழிலாளர்களில் பெரும்பாலானோர் தங்களது தொழிலினை விட்டு விலகிச் செல்கின்றனர். எதிர்காலத்தில் ஏனையவர்களும் விலகிக்கொள்ளும் நிலைமைகளும் ஏற்பட்டுள்ளது.

இதனால் கிழக்கு மாகாணத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்வரும் காலங்களில் திண்மக்கழிவுகளை அகற்றுவதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். இவ்வாறானதொரு பெரும் சவாலினை தற்போது ஏறாவூர் நகர சபையும் எதிர்கொண்டுள்ளது. இதனால் சுற்றுப்புறச்சூழல் மற்றும் சுகாதார ரீதியாக பல்வேறு பிச்சினைகளையும் எதிர்நோக்க வேண்டியேற்பட்டும்.

எஎனவே குறைந்த வருமானத்தினைப் பெற்று நீண்டகாலமாக கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் பணியாற்றி வரும் சுகாதார தொழிலாளர்களுக்கு நிரந்தர நியமனத்தினை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

அப்போதுதான் திண்மக்கழிவகற்றும் வேலைத்திட்டத்தினை எதிர்காலத்தில் தொடர்ந்தும் முன்னெடுக்க முடியும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கராத்தே போட்டியில் சாதனை படைத்த ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு(எஸ்.எம்.எம்.முர்ஷித்)தேசியமட்ட கராத்தே திறந்...
11/03/2023

கராத்தே போட்டியில் சாதனை படைத்த ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்கள் கௌரவிப்பு

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)

தேசியமட்ட கராத்தே திறந்த போட்டியில் சாதனை படைத்த ஓட்டமாவடி தேசிய பாடசாலை மாணவர்களை கௌரவித்தலும் கராத்தே சீருடை அறிமுகமும் (10.03.2023) வெள்ளிக்கிழமை பாடசாலை வளாகத்தில் இடம் பெற்றது.

ஏ.எஸ்.டி.டோஜோ கராத்தே டு சோடோகான் அமைப்பினால் நாடளாவிய ரீதியில் உள்ள கராத்தே பயிற்சி மாணவர்களுக்கிடையில் குமிதே போட்டி (இருவர்களுக்கிடையிலானது) நடாத்திய போட்டியில் காத்தா போட்டி (தனிநபர்களுக்கானது) என்பன புத்தளம் - வெண்னப்பபுவ அல்பெட் பீரிஸ் விளையாட்டு அரங்கில் இடம் பெற்றது.

இதில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் இருந்து தரம் 06 தொடக்கம் தரம் 12 வரையிலான மாணவர்கள் 16 பேர் கலந்து கொண்டு 27 பதக்கம்களை வென்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதில் தங்கம் 09, வெள்ளி 10, வெண்கலம் 08 ஆகிய பதக்கம்களை வென்றுள்ள மாணவர்களை இன்று பாடசாலை நிருவாகம் பதக்கம் அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தது.

கல்லூரி முதல்வர் எம்.ஏ.ஹலீம் இஸ்ஹாக் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் கராத்தே பயிற்றுவிப்பாளர் ஏ.ஆர்.நவாஸ், ஓட்டமாவடி தேசிய பாடசாலை கராத்தே குழுவினர் ஆசிரியர் குழாம் என பலரும் கலந்து கொண்டு பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களை கௌரவித்தனர்.

இலங்கையில் அக்குறணை வெள்ளத்தில் மூழ்குவதைத்தவிர்ப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அதிக கரிசனை(எம்.எஸ்.எம்.ஸாகிர்...
11/03/2023

இலங்கையில் அக்குறணை வெள்ளத்தில் மூழ்குவதைத்
தவிர்ப்பதில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அதிக கரிசனை

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

இலங்கையில், மத்திய மலைநாட்டில், அக்குறணை நகரையும், அதனை அண்டிய பிரதேசங்களையும் ஊடறுத்துச் செல்லும் பிங்கா ஓய, மழை காலத்தில் பெருக்கெடுப்பது போன்ற இன்னோரன்ன காரணங்களால் வெள்ளத்தில் மூழ்குவதைத் தடுப்பதற்கு முன்னெடுக்கப்படவுள்ள செயற்றிட்ட யோசனைகள் தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், சென்ற வாரம் பிரதேச செயலாளர் ஏ.எச்.எம்.
இந்திகா குமாரி அபேசிங்ஹவுடன் கலந்துரையாடினார்.

பிரஸ்தாப யோசனைகளை உள்ளடக்கிய திட்ட வரைவு நிறைவடைந்தவுடனேயே அடுத்த கட்ட நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டது.

கண்டி மாவட்டத்தில், ஹாரிஸ்பத்து தேர்தல் தொகுதியில் பெரும்பாலும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் மலைப் பாங்கான எழில் மிகு பிரதேசமாக அக்குறணை காணப்படுகிறது. கண்டி - யாழ்ப்பாணம் A-9 பிரதான வீதியின் இரு மருங்கிலும் இவ்வூர் அமைந்துள்ளது.

கண்டி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், அப்துல் ஹலீம் ஆகியோர் அதிக மழை வீழ்ச்சியின் போது நீண்ட காலமாக அடிக்கடி சம்பவிக்கும் இந்தப் பிரச்சினைக்கு உரிய தீர்வைக் காண்பதில் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

முன்னர், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் நகர அபிவிருத்தி அமைச்சராகப் பதவி வகித்தபோது, கண்டி பிராந்திய அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் காணி மீள் சீரமைப்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக பாரிய கனரக இயந்திரங்களைப் பயன்படுத்தி, மண், மணல் மற்றும் கழிவுகள் மண்டியிருந்த பிங்க ஓயவில் அகழ்வுப் பணிகளை மேற்கொண்டு நீர் தங்கு தடையின்றி வழிந்தோடுவதற்கான ஏற்பாடுகள் உட்பட பல்வேறு பயனுள்ள முயற்சிகளை முன்னெடுத்திருந்ததோடு, பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் உயரதிகாரிகளோடு பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றிருந்தன.

அங்கு, உரிய அனுமதி பெற்றிராத சட்டத்துக்குப் புறம்பான நிர்மாணங்களும் பாரிய பிரச்சினைகளைத் தோற்றுவித்துள்ளன.

இன்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் புகையிரத கழிவறையினுள் வைத்துவிட்டு சென்ற பச்சிளம் குழந்தை!
10/03/2023

இன்று இரவு கொழும்பில்
இருந்து மட்டக்களப்பு நோக்கி
பயணிக்கும் புகையிரத கழிவறையினுள்
வைத்துவிட்டு சென்ற பச்சிளம் குழந்தை!

மரீனா இல்யாஸ் ஷாபி எழுதிய "என் சிறகில் சிக்கிய வானம்" நூல் வெளியீடு (எம்.எஸ்.எம்.ஸாகிர்)மரீனா இல்யாஸ் ஷாபி எழுதிய "என் ச...
10/03/2023

மரீனா இல்யாஸ் ஷாபி எழுதிய "என் சிறகில் சிக்கிய வானம்" நூல் வெளியீடு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

மரீனா இல்யாஸ் ஷாபி எழுதிய "என் சிறகில் சிக்கிய வானம்" (பயணக்கட்டுரைகளின் தொகுதி) எனும் நூலின் வெளியீட்டு விழா நாளை (11) சனிக்கிழமை காலை மு.ப.8.30 முதல் சாய்ந்தமருது கமு/மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் இடம்பெறும்.

(SRI LANKA PEN CLUB) ஆற்றலுள்ள பெண்களின் அமைப்பின் ஏற்பாட்டில், அமைப்பின் தலைவி சம்மாந்துறை மஷூறா தலைமையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், ஒலி - ஒளி பரப்பு சிரேஷ்ட ஊடகவியலாளர் பா ஹாஷிம் பா அலவி அஷ்ஷெய்க் இர்பான் மௌலானா முதன்மை அதிதியாகக் கலந்து சிறப்பிக்கிறார்.

ஓய்வுநிலை பல்கலைக் கழகப் பதிவாளர் கவிஞர் மன்சூர் ஏ காதிர் மற்றும்
பேஜஸ் அறிவு மையத்தின் பணிப்பாளரும் ஆய்வாளருமான சிராஜ் மஷூர் ஆகியோர் நூல் மீதான உரைகளை நிகழ்த்துகின்றனர்.

இந்நிகழ்வில், எம்.எச்.எப். நுஸைபா, எஸ்.பாத்திமா சுஜிதா ஆகியோர் கிராஅத் மொழிவதோடு, சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் அதிபரும் அமைப்பின் கணக்காய்வாளருமான றிப்கா அன்ஸார் வரவேற்புரையும் அமைப்பின் உபதலைவி ஷாமென் நிஸாம்டீன் அறிமுகவுரையையும் நிகழ்த்துவதோடு, ஆசிரியை முப்லிஹா பிர்தௌஸ் மற்றும் ஒலுவில் கவிஞர் அஸீஸ் எம் பாயிஸ் ஆகியோர் பாடல் பாடுகின்றனர்.

நாவலாசிரியர், தீரன் ஆர்.எம்.நௌஷாத், ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட நூலகர் கலாநிதி மஸ்ரூபா முகம்மட், ஆஸ்ட்ரேலியா வானொலியின் வளர்பிறை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் முஹம்மது முஹ்ஸீன், கவிஞர், பாடலாசிரியர் தேசமான்ய பஹ்மி ஹலீம்தீன், அம்பாறை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பிரதம பொறியியலாளர் இஸ்மாயீல் தம்பிலெப்பை,
அம்பாறை மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ எல்.தௌபீக் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் எஸ்.யூ.கமர்ஜான் பீவி, திருகோணமலை ஸாஹிறா கல்லூரி பிரதியதிபர் மர்ளியா சக்காப், கல்முனை கலாசார அதிகார சபையின் செயலாளர், ஆசிரியர் கவிஞர் விஜிலி மூஸா, காத்தான்குடி மட்/மம/ ஹைறாத் வித்தியாலய அதிபர் அஜீறா கலீல்தீன், சம்மாந்துறை ஜமாலியா வித்தியாலய அதிபர் மஹீஸா பானு ஜெஸூர், சாய்ந்தமருது லத்தீபா காரியப்பர் ஆகியோர் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து
கொள்கின்றனர்.

இன்னும் பல பிரமுகர்களும் ஆர்வலர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ள இந்நிகழ்வை மின்னல் வெளியீட்டகத்தின் பணிப்பாளரும் நாவலாசிரியருமான அஸீஸ்.எம்.பாயிஸ் தொகுத்து வழங்குகிறார்.

உடல் வலுவூட்டல் பயிற்சி நிலைய திறப்பு(அபு அலா)உடல் வலுவூட்டல் பயிற்சி நிலைய திறப்பு விழாவு மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான உ...
10/03/2023

உடல் வலுவூட்டல் பயிற்சி நிலைய திறப்பு

(அபு அலா)

உடல் வலுவூட்டல் பயிற்சி நிலைய திறப்பு விழாவு மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான உடல் வலுவூட்டல் பயிற்சி அங்குரார்ப்பண நிகழ்வும் கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்கள வரோதயநகர் அரச வளாகத்தில் நேற்று மாலை (09) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் நூ.மு.நௌபீஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க பிரதம அதிதியாவும், கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (நிர்வாகம்) ஏ.மன்சூர், கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜி.திசாநாயக்க, பேரவைச் செயலக செயலாளர் எம்.எம்.நஸீர் மற்றும் திணைக்கள தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மரண வீட்டுக்கு உணவு எடுத்துச் சென்றவர் விபத்தில் பலி; வாழைச்சேனையில் சம்பவம் (எச்.எம்.எம்.பர்ஸான்)வாகன விபத்தில் நபரொருவ...
10/03/2023

மரண வீட்டுக்கு உணவு எடுத்துச் சென்றவர் விபத்தில் பலி; வாழைச்சேனையில் சம்பவம்

(எச்.எம்.எம்.பர்ஸான்)

வாகன விபத்தில் நபரொருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கு முன்பாக வைத்து இவ் விபத்து இன்று (10) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்த குடும்ப உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்கு உணவு எடுத்துச் சென்ற நபர் ஒருவரே விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற போது படி ரக வாகனம் மோதியதிலே அந்நபர் மரணமடைந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

இவ்வாறு மரணமடைந்தவர் வாழைச்சேனை விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய முருகன் எனும் தங்க நகை ஒட்டும் வியாபாரியாவார்.

விபத்தில் மரணமடைந்தவரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், படிரக சாரதியை பொலிஸார் கைது செய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒலுவில் அல் - ஹம்றா மகா வித்தியாலய "ஹம்றாவின் கௌரவம் - 2023" பெருவிழா(எஸ்.அஷ்ரப்கான்)ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியால யத்...
09/03/2023

ஒலுவில் அல் - ஹம்றா மகா வித்தியாலய "ஹம்றாவின் கௌரவம் - 2023" பெருவிழா

(எஸ்.அஷ்ரப்கான்)

ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியால யத்திலிருந்து
2016 - 2021 வரை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான கௌரவம் வழங்கும் ஹம்றாவின் கௌரவம் - 2023 நிகழ்வுகள் அதிபர் அஷ்-ஷேக் யூ.கே. அப்துர் ரஹீம் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் பிரதம அதிதியாக கொழும்பு லக்கி பெக் உரிமையாளர் அல்-ஹாஜ் ஏ.எல்.சஹீட் கலந்து கொண்டார்.
இவர் தனது நிதியில் இருந்து புனருத்தாரனம் செய்யப்பட்ட பாடசாலையின் அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தை பாடசாலை சமூகத்திடம் கையளித்தார்.

இங்கு மாணவர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் நினைவுச் சின்னம் பரிசில்கள் வழங்கி கெளரவிக்க ப்பட்டனர்.

பிரதிக்கல்வி பணிப்பாளர்களான ஏ.ஜி.பஸ்மில், எம்.எம்.
சித்தி பாத்திமா, உதவிக் கல்வி பணிப்பாளர் ஏ.எம். நெளபர்டீன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.எச்.எம்.றஸ்மி உட்பட அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

பல்துறையைச் சேர்ந்த 150 தமிழ், முஸ்லிம் பெண் ஆளுமைகள் கௌரவிப்பு! (அபு அலா) சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஹலோ எப்.எம். நிற...
09/03/2023

பல்துறையைச் சேர்ந்த 150 தமிழ், முஸ்லிம் பெண் ஆளுமைகள் கௌரவிப்பு!

(அபு அலா)

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஹலோ எப்.எம். நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் தின நிகழ்வு நேற்று மாலை (08) திருமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி எப்.எம்.சரீக் தலைமையில் இடம்பெற்ற இந்த மகளிர் தின நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட தமிழ், முஸ்லிம் பெண் ஆளுமைகள் பாராட்டி கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் ஆரியபதி கலபதி பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் (திருமதி) ஜே.ஜே.முரளிதரன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யு.ஜீ.திசாநயக்க ஆகியோர் விஷேட அதிதிகளாகவும், சிறப்பு அதிதிகளாக திருகோணமலை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலாளர் பி.தனேஸ்வரன், சர்தாபுர விஷேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி எம்.ஆர்.குணசேகர ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ஹலோ எப்.எம். நிறுவனத்தினால் வருடா வருடம் நடாத்தப்பட்டு வருகின்ற சர்வதேச மகளிர் தினத்தில் பல்துறையைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம், சிங்கள பெண் ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டு வருகின்றமையும், இம்முறை திருகோணமலை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட பல்துறையைச் சேர்ந்த 150 தமிழ், முஸ்லிம் பெண் ஆளுமைகள் கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இதன்போது மகளிர்களினால் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றதும் விஷேட அம்சமாகும்.

மீராவோடை அல் ஹிதாயா பாடசாலை கரப்பந்து அணி வலய மட்டத்திற்கு தெரிவுகோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்ட மட்ட விளையாட்டுப் ப...
09/03/2023

மீராவோடை அல் ஹிதாயா பாடசாலை கரப்பந்து அணி வலய மட்டத்திற்கு தெரிவு

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்ட மட்ட விளையாட்டுப் போட்டியின் தொடரில் மீராவோடை தேசிய பாடசாலையின் கரப்பந்து அணியினர் 16 வயது பிரிவில் 2வது இடத்தினை பெற்று
வலய மட்டத்திற்கு
தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

விளையாடிய மாணவர்கள், பயிற்றுவித்த விளையாட்டு ஆசிரியர் மற்றும் விளையாட்டுப்பயிற்றுவிப்பாளர்கள் ஆகியோருக்கு பாடசாலை அதிபர் கே.எல்.எம்.சபாஹிர் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

துறைகள்  அனைத்திலும் பெண்களின் வகிபாகம்  விரிவடைந்துள்ளது : தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ்...
09/03/2023

துறைகள் அனைத்திலும்
பெண்களின் வகிபாகம் விரிவடைந்துள்ளது : தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவிப்பு

(எஸ்.அஷ்ரப்கான்)

சமூக வளர்ச்சியின் நோக்கில் மகத்தான பங்களிப்பை செய்துள்ள புத்தாக்கம், தொழில்நுட்பம் மற்றும் ஊடகங்களால் வழிநடத்தப்படும் உலக மயமாக்கலுக்கு முன் அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்கு விரிவடைந்து வருகிறது என தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார்.

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு (08)ம் திகதி கலை, கலாச்சார பீடத்தின் கேட்போர் மண்டபத்தில் நடைபெற்றது.

பால்நிலை சமத்துவத்துக்கும், சமநிலைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி எம்.எம்.மஸ்றுபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் உரையாற்றுகையில்,

பெண்களை பலப்படுத்துவதன் மூலம் பௌதிக மற்றும் மானிட அபிவிருத்தியின் இலக்குகளை அடைந்து கொள்வதற்கு அர்ப்பணிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன்.

எமது சமூகத்தில் பெரும்பான்மையானவர்கள் பெண்களாக இருந்தாலும் பொருளாதார மற்றும் அரசியல் துறைகளில் பெண்களின் முழுமையான பங்கேற்பு ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகிறது, உண்மை, நீதி மற்றும் சமத்துவம் ஆகிய நற்பண்புகளின் அடிப்படையில் பெண்களை மதிக்க வேண்டும்.

பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை நிலை நிறுத்துவதற்கு ஒற்றுமையாகச் செயற்படுவது முக்கியமாகும்,

அனைத்து துறைகளிலும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களை கருதிக் கொண்டு நமது நாட்டில் பாலின அடிப்படையிலான பாகுபாடு மற்றும் பெண்களின் உரிமை மீறல்கள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்தி சமத்துவத்தை உறுதிப்படுத்தவும் அதைப் பற்றிய ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

எங்களது பல்கலைக்கழகத்தில் கிட்டத்தட்ட 70 வீதமானவர்கள் பெண்களாகவும், 28 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் பல்கலைக்கழகத்தில் பெண் ஊழியராகவும்
கடைமையாற்றுகிறார்கள்

நமது சமுதாயத்தில் பெண்களை எடுத்துக்கொண்டால், முதலாவது பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி உருவாக்கிய பெருமை இலங்கை நாட்டுப் பெண்களுக்கு உரித்தாகும்.

நாட்டின் சனத்தொகையில் 52 வீதமானவர்கள் பெண்களாக உள்ளனர். நாட்டுடைய வருமானத்தை அதிகரித்துத்தருகின்ற 6 மில்லியன் டொலர் வெளிநாட்டு அந்நிய செலாவணியை பெண்கள் ஒரு வருடத்துக்கு உழைப்பவர்களாக இருக்கிறார்கள்.

இதுவரை 20 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் தேயிலை, இறப்பர் தொழிற்சாலை களிலும் 25 சதவீதத்திற்கு மேற்பட்டவர்கள் அந்நிய செலாவணியை ஈட்டுத்தருகிறார்கள்.

மேலும் 44 வீதத்திற்கு மேற்பட்ட பெண்கள் ஆடைதொழிற்சாலையில் வருமானத்தை ஈட்டுபவர்களாக இருந்தார்கள், தற்போது அவர்களுடைய நிலைமை மிகவும் பரிதாபமாக இருந்து கொண்டிருக்கிறது.

Local Government Participation women's Local Government Organizations. ( Eastern Province) எனும் தலைப்பில் நான் அண்மையில் ஆராய்ச்சி செய்தேன்.

அரசியலையெடுத்துக் கொண்டால் 5% பெண்களுடைய பங்குபற்றுதல் இருக்கிறது. அந்த ஆய்வில் 10% பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள்.

446 உள்ளூராட்சி மன்றங்களில் ஊழியர்கள், கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக 15 பேர்தான் பெண்கள் இருக்கிறார்கள், இப்போது 25 வீதம் பெண்களுக்கு பங்கீடு பாராளுமன்றத்திலே கொடுக்கப்பட்டும்,

உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களுக்கு எந்தவிதமான பதவிகளும் கொடுக்கப்படுவதில்லை அந்த அளவுக்கு பரிதாபமாக இருக்கிறது பெண்களுடைய நிலைமை என்றார்.

இந்நிகழ்வில் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், துறைத் தலைவர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக உயரதிகாரிகள், பிரதேச பெண் உத்தியோகத்தர்கள், மாணவிகள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மகளிர் சங்கத்தின் உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.

மீராவோடை அல் ஹிதாயா மாணவன் தங்கம், வெண்கலப் பதக்கங்கள் பெற்று சாதனை! 10th open karate I.S.K.D.J.CUP-2023Organized by-int...
08/03/2023

மீராவோடை அல் ஹிதாயா மாணவன் தங்கம், வெண்கலப் பதக்கங்கள் பெற்று சாதனை!

10th open karate I.S.K.D.J.CUP-2023
Organized by-international shotokan karate do Japan school

இலங்கையின் 10வது சர்வதேச சொடோகன் கராத்தே போட்டியில் மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் தரம் 8ல் கல்வி பயிலும் A.Afnan Ahamed பங்கு பற்றி காட்டா-வெண்கலப் பதக்கத்தையும்
குமித்தே -தங்கப் பதக்கத்தையும் பெற்றுள்ளார்.

மேலும் இந்தியா,நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் பங்குபற்றி போட்டிகளில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இவ்வாறு சாதனையினை நிலைநாட்டியுள்ள மாணவனுக்கு பாடசாலை சமூகம் சார்பாக அதிபர் கே.எல்.எம்.சபாஹிர் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

பிறைந்துரைச்சேனையில் மகளிர் தினத்தில் வீடுகள் கையளிப்பு(எச்.எம்.எம்.பர்ஸான்)கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சமுர்த்தி, சமூ...
08/03/2023

பிறைந்துரைச்சேனையில் மகளிர் தினத்தில் வீடுகள் கையளிப்பு

(எச்.எம்.எம்.பர்ஸான்)

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை சமுர்த்தி, சமூக அபிவிருத்தி பிரிவினால் வீடுகள் கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (8) இடம்பெற்றது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிறைந்துரைச்சேனை 206 சீ சமுர்த்தி மாதிரிக் கிராமத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அதிதிகளாக வாழைச்சேனை மத்தி உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சீ.ரமீஸா, மாவட்ட செயலக சமூக அபிவிருத்தி முகாமையாளர் புவிதரன், சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர் எம்.எல்.ஏ.மஜீத், திட்ட முகாமையாளர் ஏ.எல்.எம்.சரீப், சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.எஸ்.சாதிக்கீன், கிராம உத்தியோகத்தர் ஏ.எல்.ஜௌபர், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் அரூசியா பேகம், சீ.ஆர்.பி.ஓ. சபூஸ் பேகம், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப் கான் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின்போது, லொத்தர் சீட்டிழுப்பில் வெற்றிபெற்ற இரண்டு பயனாளிகளுக்கு வீடுகள் பூர்த்தி செய்து கையளிக்கப்பட்டதுடன், மேலும் இரண்டு வெற்றியாளர்களுக்கு காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

அத்துடன், சமூக அபிவிருத்தி பிரிவினால் சேகரிக்கப்பட்ட பாடசாலை உபகரணங்களும் உதவி பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

பழைய மாணவர்கள் ஒன்று கூடலும் புதிய நிர்வாகத் தெரிவும்(எஸ்.அஷ்ரப்கான்)மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின்  பழைய (ஆண்) மாண...
08/03/2023

பழைய மாணவர்கள் ஒன்று கூடலும் புதிய நிர்வாகத் தெரிவும்

(எஸ்.அஷ்ரப்கான்)

மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தின் பழைய (ஆண்) மாணவர்களுக்கான வருடாந்த சினேகபூர்வ ஒன்று கூடல் நிகழ்வும், கலந்துரையாடல் நிகழ்வு எதிர்வரும் 2023.03.12 ஆம் திகதி பிற்பகல் 4.30 மணிக்கு மல்ஹருஸம்ஸ் பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இங்கு எதிர்கால அபிவிருத்தியும், திட்டமிடலும், புதிய நிர்வாகத் தெரிவும் மற்றும் பல விடயங்கள் ஆராயப்பட உள்ளது.

இந்நிகழ்வுக்கு மல்ஹருஸம்ஸ் பாடசாலையின் பழைய (ஆண்) மாணவர்கள் அனைவரும் உரிய தினத்தில் ஒன்று திரண்டு நிகழ்வை சிறப்பித்து புதிய நிர்வாகத்திலும் இணைந்து எதிர்காலத்தில் பாடசாலையின் அபிவிருத்தியிலும், வளர்ச்சியிலும், முழுமையான ஒத்துழைப்பையும் தொடர்ச்சியான பாடசாலையின் உறவையும் பேணிக் கொள்ள இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டி ருக்கின்றது.

Address

Main Street

32045

Website

Alerts

Be the first to know and let us send you an email when Suvaasam நியூஸ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share