04/12/2019
காவல் நிலையக் கொலை தொடர்பான நம் அறிக்கையும் ஒரு நல்ல தீர்ப்பும் - பேரா.அ.மார்க்ஸ் அவர்கள் பதிவு
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சென்ற மே 2015ல் நெல்லிகுப்பத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியும் நான்கு குழந்தைகளின் தந்தையுமான சுப்பிரமணியன் என்பவரை நெய்வேலி டவுன்ஷிப் காவல்நிலைய ஆய்வாளராக அப்போது இருந்த ராஜா என்பவர் ஒருவாரம் சட்டவிரோதமாகக் காவல்நிலையத்தில் வைத்துச் சித்திரவதை செய்தார், சாகும் தருவாயிலிருந்த சுபிரமணியனை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குக் கொண்டுவந்த ராஜா, சுப்பிரமணியனது மனைவியை மனைவியை வரவழைத்து அவர் பெயரில் சுப்பிரமணியை அங்கு அட்மிட் செய்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
நான், சுகுமாரன், கடலூர் பாபு, திண்டிவனம் முருகப்பன், வழக்குரைஞர்கள் விஜய்சங்கர் மற்றும் திருமேனி, எச்.ஆர்.எஃப் எனும் அமைப்பைச் சேர்ந்த மேத்யூ ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்து அது ஒரு அப்பட்டமான சித்திரவதைக் கொலை என அறிக்கை அளித்தோம். ஆதரவற்ற நிலையில் இருந்த சுப்பிரமணியனின் ஏழைக் குடும்பத்துக்கு உடன் 25 லட்ச ரூ இழப்பீடு தர வேண்டும் எனவும் கோரினோம். ஆய்வாளர் ராஜா பணிநீக்கம் செய்யப்பட்டு அவர் மீது கொலை வழக்கு தொடரவேண்டும் எனவும் அறிக்கை அளித்தோம்.
இழப்பீடு தொடர்பாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் சென்ற செப் 04, 2019ல் சென்னை உயர் நீதிமன்றம் ஒரு சிறந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. நீதியரசர்கள் மணிகுமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு பல்வேறு இந்திய அளவிலான தீர்ப்புகளை மேற்கோள்காட்டி மிக அற்புதமாக இந்த இழப்பீட்டுத்தொகையைக் கண்க்கிட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.
ப்ளம்பர் ஆன சுப்பிரமணியனின் தினசரிக் கூலி ரு 378. 50, டி.ஏ ரூ 151. 80. மொத்தம் தினசரி கூலி ரூ 530. 30.. மாதம் 26 நாட்கள் அவர் வேலை செய்தால் மாத வருமானம் ரூ 13,780// எதிர்கால வாய்ப்புகளின் மூலமான ஊதிய உயர்வு 40% என்று கொண்டால் ஆண்டுக்கு ரூ 66,182. ஆக மொத்தம் ஆண்டு வருமானம் என்கிற அடிப்படையில் கனக்கிடப்படும் ஆண்டு இழப்பீடு ரூ 2,31,638. அவர் உயிருடன் இருந்தால் அவருக்கான செலவுகள் ரூ 57910//. எனவே அதைக் கழித்து ஆண்டு இழப்பீடு ரூ 1,73,728. அடுத்த 16 ஆண்டுகளுக்கு ரூ 27, 79, 648//
26 வயது மனைவி, பத்து வயதுக்கும் குறைந்த நாலு குழந்தைகள் எல்லாவற்றையும் கணக்கிட்டு மொத்தம் ரூ 30,09,648 ஐயும் 6% வட்டியுடன் அளிக்க நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். நீதிபதிகளுக்கு நமது வாழ்த்துக்களும் நன்றிகளும். எச்.ஆர்.எஃப் எனும் ஒரு என்.ஜி.ஓ அமைப்பு இவ்வழக்கை நடத்தியது.
ஆய்வாளர் ராஜா மீதான வழக்கு நடந்து கொண்டுள்ளது. எனினும் அவர் இன்னும் பணியில் உள்ளார்.
சிறந்த்a முறையில் போஸ்ட்மார்டம் அறிக்கையை மிக்க நேர்மையுடன் ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்தது இங்கே குறிப்பிடத் தக்கது.
குற்றவாளிகளான காவலர்களைக் காப்பாற்றுவதைத் தமிழக அரசுஒரு கொள்கையாகவே வைத்துச் செயல்படுகிறது. இந்நிலை தொடரும.....