Mujeeb Tharamani

  • Home
  • Mujeeb Tharamani

Mujeeb Tharamani Social political and Islamic writer

20/04/2022
15/03/2022

We Indian Muslims refused Englishmen's education to oppose them during Freedom fight..

Its our nation and our right to wear Hijab..

We will step down from your educational institutions rather removing Hijab from our head... Prophet (saw)'s education is better than any other teachings in the world..

Please remember whenever you try to suppress Islam it has a tendency to bounce back strongly..

Insha Allah... Almighty is with us..

Mujeeb


15/03/2022

25/01/2022

பெரியாரும் இஸ்லாமும்...

21/08/2021

இந்த முட்டாள்தனங்களை எல்லாம் தகர்த்தெறியவே நபிகள் நாயகம் தோன்றினார்கள்..

இவர்களின் இந்த செயலுக்கும் இஸ்லாம் என்ற புனித மார்க்கத்திற்கும் எள்ளவும் சம்பந்தமில்லை...

 #கோவளம்_தர்கா_சந்தனக்கூடு_எனப்படும்_கூத்தின்_காட்சிகள்_இவை... இந்த காலகட்டத்திலுமா சந்தனக் கூட்டுக்கெல்லாம் மக்கள் வரப்...
27/07/2021

#கோவளம்_தர்கா_சந்தனக்கூடு_எனப்படும்_கூத்தின்_காட்சிகள்_இவை...

இந்த காலகட்டத்திலுமா சந்தனக் கூட்டுக்கெல்லாம் மக்கள் வரப்போராங்க? என்ற எண்ணத்தோடு புறப்பட்டு சென்ற எனக்கு அதிர்ச்சிதான்..

இஸ்லாத்தின் பெயரால் ஒரு மாபெரும் வழிகேடு..

எதை ஒழிக்க மாமனிதர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் முயன்றார்களோ அதே வழிகேட்டை இறைவனுக்கு இணை கற்பிக்கும் காரியத்தை நபிகளார் பெயரைச் சொல்லி இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி அரங்கேற்றுவதுதான் அவலம்...

அதே பூஜை சாமான்கள்
அதே ஊதுபத்தி
அதே பூக்கள்
அதே சந்தனம்

அங்கு சிலை இங்கு சமாதி..

இவர்கள் செய்வதற்கும் அங்கு அடக்கப் பட்டிருக்கும் அண்ணார் தமீம் அன்சாரிக்கும் நிச்சயம் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் பெயரைச் சொல்லி கூத்து கும்மாளம் பணம் சம்பாதிக்க நடத்தப்படும் நாடகங்கள் இவை..

அல்லாஹ் என்ற வார்த்தைக்கு இந்த மக்கள் எப்போது தான் அர்த்தத்தை உணரப்போகிறார்கள் என்ற ஏக்கத்தோடு விடை பெற்றேன் அங்கிருந்து...

سُبْحٰنَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُوْنَ‌‏ 
அவர்கள் வர்ணிப்பதை விட்டும், கண்ணியத்தின் இறைவனான உம்முடைய இறைவன் தூயவன்.
(அல்குர்ஆன் : 37:180)

https://youtu.be/0EXP7v6CfQ0
11/07/2021

https://youtu.be/0EXP7v6CfQ0

DisclaimerThis Video is from educational purpose only. Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for "fair use" Pur...

https://youtu.be/jA1ODNj9bb4
09/06/2021

https://youtu.be/jA1ODNj9bb4

The common man perspective about the activity performing by Modi sarkar that too in pandemicDisclaimerThis Video is from educational purpose only. Copyright ...

20/05/2021

கல்வியை போதிக்க சொன்னால் கலவரத்தையும் பிரிவினையையும் தூண்டும் கருத்துக்களை திணிக்கும் அயோக்கியர்கள்..
திமுக ஆட்சி இவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்..

பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் ஷாஹித் அஃப்ரிடி தன் மகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகிவருகிறது..
20/05/2021

பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் ஷாஹித் அஃப்ரிடி தன் மகளுடன் இருக்கும் புகைப்படம் வைரலாகிவருகிறது..

இப்போவாவது கைத்தட்டலாமே...கல்நெஞ்சக்காரர்களா... நான் கொரோனாவை விரட்ட கைதட்ட சொன்னேன்.. யோகியை அல்ல😂😂😂
15/04/2021

இப்போவாவது கைத்தட்டலாமே...

கல்நெஞ்சக்காரர்களா... நான் கொரோனாவை விரட்ட கைதட்ட சொன்னேன்.. யோகியை அல்ல😂😂😂

உண்மையில் சூப்பர் கிங்க்ஸ் சூப்பர் தான்💓மொயீன் அலிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக...
05/04/2021

உண்மையில் சூப்பர் கிங்க்ஸ் சூப்பர் தான்💓

மொயீன் அலிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக...

02/04/2021

இதைத்தான் எதிர்பார்க்கின்றோம்...

24/03/2021

முபாஹலாவாம்..

இந்த தூயவர்கள் தான் நம்பினோம் பரப்பினோம்னு முபாஹலா செய்தவர்கள்

அதுல ஒருத்தர் ரியாத் மைதீன் பாவா வேர..

அது போகட்டும் யாராவது TNTJ vs NTF விவாதம்னு சொல்லிட போரீங்க..
வாய்ல அடிங்க வாய்ல அடிங்க..

இதுக்கும் TNTJ க்கும் கடுகளவும் சம்பந்தம் இல்ல.. ஆமா..

கபரஸ்தான்ல எதார்த்தமா பயான் பண்ணிட்டா கூட மாவட்டத்துகிட்ட அனுமதி கேட்டியானு கேட்டு கபர் குழியில கூட இயக்க வெறி பேசி நடவடிக்கை எடுத்த கூட்டம் இது..

இன்னைக்கு ஜமாத்துக்கு சம்பந்தம் இல்லாம வந்தாங்களாம் நம்புங்க நம்புங்க.. யார் கேட்டாலும் TNTJ கும் விவாதத்துக்கும் சம்பந்தம் இல்லைனு சொல்லிருங்க..

பீஜே பாவா.. நீங்க செய்த ஹிக்மத்துகள் கற்றுத்தந்த மோசடி வித்தைகளை உங்க மாணவர்கள் உங்களுக்கெதிராக எவ்ளோ அழகா வெளிப்படுத்துராங்க பாருங்க..

சந்தோஷப்படுங்க.. இவிங்க படிச்ச ஸ்கூல்ல நீங்க தானே ஹெட் மாஸ்டர்..

மைசூர் தர்பியாவிலேயே அல்லாஹ்வுக்கு பயந்தவன் எவனாவது இருந்து இருந்தா பீஜே கலீல் MS ரஹ்மதுல்லாவை கொத்தோடு தூக்கி எரிந்திருக்கனும்

இன்னைக்கு அவமானமா இருக்கா.. இன்னும் உங்க ஜமாஅத் தூயவர்களின் ஆட்டம் முடியல..

குழப்பவாதிகள்னு ஊரே சொன்னதை சுமந்தோம்... ஆனால் எங்கள் தலைவராக பொது செயலாளராக எங்களை வழி நடத்திய நீங்கள் இன்று யாருக்குடா மார்க்கம் சொல்ல தகுதி இருக்குனு விவாதமே பன்னுரத பாக்கும் போது நம்ம கடந்து வந்த பாதை எவ்ளோ செழிப்பானதுனு புரிய வெச்சிட்டீங்க..

மார்க்கம் சொல்ல தகுதி வேண்டாம்
இறைவனுக்கு கொஞ்சம் பயந்தா கூட போதும்..

நீங்கதா லைவ் போட்டு முபாஹலா படம் ஓட்ரவங்களாச்சே.. இறையச்சம்னா என்னனு தெரியவா போகுது..

போங்க குடும்பத்தோடு முபாஹலா டூர் போங்க....

Pj & TNTJ.. Rocks...

சென்னை தரமணி முத்துமாரியம்மன் கோயில் வாசலில் அமைந்துள்ள தரமணி-வேளச்சேரி இணைப்பு சாலையில் ஏற்பட்டுள்ள அவலம் இது..பல லட்சக...
15/03/2021

சென்னை தரமணி முத்துமாரியம்மன் கோயில் வாசலில் அமைந்துள்ள தரமணி-வேளச்சேரி இணைப்பு சாலையில் ஏற்பட்டுள்ள அவலம் இது..

பல லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சாலையில் மழைநீர் வடிகாலில் துளை ஏற்பட்டுள்ளது. அவசர கதியில் சீர் செய்யப்படாமல் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதால் பொது மக்கள் வடிகால் மீது எச்சரிக்கைக்காக கற்களை வைத்து எச்சரிக்கை செய்துள்ளனர்

ஒரு நொடிப் பொழுதில் உயிர் பலி ஏற்படும் அளவில் அபாயகரமான நிலையில் இந்த வடிகால் நட்டநடு சாலையில் அமைந்துள்ளது

உயிர்பலிகள் ஏற்படும் முன் துரிதமாக செயல்படுமா அரசு இயந்திரம்?

10/03/2021

கண்ணீரும் வேதனையுமே நிறைந்த ஆட்சி இது..

09/03/2021

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகல்

அதிமுக அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழக்கும்... எல்.கே. சுதீஷ்

ரெண்டு பேரும் ஓரமா போய் விளையாடுங்கய்யா😂😂😂

07/03/2021

சீட்டு தந்தா எவ்ளோ செலவு பண்ணுவ தம்பி?? நக்கலடித்த துரை முருகன்😂😂

அல்லாஹ் இவர்களுக்கு சிறந்தவற்றையும் அழகிய பொறுமையையும் தர பிரார்த்திப்போம்...
07/03/2021

அல்லாஹ் இவர்களுக்கு சிறந்தவற்றையும் அழகிய பொறுமையையும் தர பிரார்த்திப்போம்...

06/03/2021

20 தொகுதிகளிலும் நோட்டாவை தோற்கடிக்கும் நோக்கில் வலுவாக களமிறங்கும் பாஜகவை வாழ்த்தலாமே..😜😜😜

04/03/2021

சசிகலா விலகல்.. அடுத்து என்ன?
மாஸ்டர் பிளான்..

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்துள்ளார்

இது பேசும் பொருளாக மாறியிருக்கும் நிலையில் இதில் உள்ள சூட்சமம் பலரும் அறியாமல் இருப்பதே எதார்த்தம்

தற்போது உள்ள தேர்தல் களத்தில் நிச்சயம் சசிகலாவுக்கு அதிமுகவில் வாய்ப்பில்லை அதே நேரம் அமமுகவில் இணைந்து தேர்தலை சந்தித்தல் அதிமுகவின் தோல்விக்கு சசிகலாவே காரணம் எனும் காரணத்தால் சசியை அதிமுக தொண்டர்கள் முழுமையாக வெறுக்க வாய்ப்பாக அமைந்துவிடும்

இந்நிலையில் சசிகலாவின் விலகல் முடிவில் உள்ள சாமர்த்தியம் வியக்க வைக்கிறது

ஏனெனில் தற்போதுள்ள சூழலில் அதிமுக நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் படுதோல்வி அடைவது கிட்ட தட்ட உறுதியாகிவிட்டது. பாஜக வெறுப்பே அதிமுகவின் தோல்வி அறுவடைக்கு காரணமாக அமைந்துவிடும்

தேர்தல் தோல்விக்குப்பின் நிச்சயம் தற்போதுள்ள ஈபிஎஸ் ஓபிஎஸ் நாடக ஒற்றுமை பட்டவர்த்தனமாக வெளிவரும்

ஆளுமை மிக்கதலைவர்கள் இல்லாததே தேர்தல் தோல்விக்கான காரணம் என்பதை ஒவ்வொருவரும் உணரும் போது அன்றைக்கு சசிகலாவின் வேட்டை மீண்டும் ஆரம்பமாகும்

அதிமுக எனும் துளை விழுந்த படகை தூக்கி நிறுத்த சசிகலாவிடம் தஞ்சம் புகுவதே சரி என்பதை அதிமுக அமைச்ர்களும் தொண்டர்களும் உணருவார்கள் இதை கருத்தில் கொண்டே சசிகலாவின் விலகல் அறிவிப்பு வெளிவந்துள்ளது என்பதை சற்று ஆழமாக சிந்தித்தால் விடை கிடைக்கும்

மீண்டும் சசியின் அதிகாரத்தின் கீழ் அதிமுக வருவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன

ஆயினும் அப்போது அதிமுக மீட்க இயலாத மூழ்கும் கப்பலாக மாறியிருக்கும் என்பதே எதார்த்தம்...

முஜீப்.

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்குதுனு சொல்லுவாங்களே..  அது இதான் போல... 😂😂😂
02/03/2021

தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்குதுனு சொல்லுவாங்களே.. அது இதான் போல... 😂😂😂

02/03/2021

ஆண்மகனாக இருப்பவன் என்றைக்கும் பெண்ணிடம் வரதட்சணை கேட்டுப் பெறுபவனாக இருக்க மாட்டான்..

மாறாக பெண் வீட்டார் மனமுவந்து தருவதைக் கூட பெற்றுக் கொள்ள விரும்ப மாட்டான்..

நான் சொல்வது ஆண்மகன்களுக்கு விருப்பையும்..
மற்றவர்களுக்கு வெறுப்பையும் தரக் கூடும்..

நீங்க எப்படி....😜

02/03/2021

அருமையான செய்தி..
ஆழமான அர்த்தங்கள்..

அவர் இறந்து விட்டார் அடக்கம் செய்யணும் சொல்லிக் கொண்டே சென்றார்கள்...!!!*

மெல்ல எட்டிப் பார்த்தேன்
மூச்சு இல்லை – ஆனால்
இப்போதுதான் இறந்திருந்தார்
என்பதை மட்டும் நம்ப முடியவில்லை...!!

இருபது வருடங்கள்
முன்னாடி – அவர் மனைவி
இறந்த பிறகு – சாப்பிட்டாயா...!!
என்று யாரும் கேட்காத
நேரத்தில் – அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்கவில்லை...!!

பொண்டாட்டி போனதுமே
போய்த் தொலைய வேண்டியது தானே – என்று காதுபட மருமகள் பேசிய போது
அவர் இறந்திருந்தார் அப்போதும்
யாருமே கவனிக்கவில்லை...!!!

தாய்க்குப் பின் தாரம்
தாரத்துக்குப் பின்
வீட்டின் ஓரம்...!!!
என்று வாழ்ந்த போது – அவர்
இறந்திருந்தார்
யாருமே கவனிக்கவில்லை...!!!

காசு இங்கே
மரத்திலேயா காய்க்குது - என்று
மகன் அமிலவார்த்தையை
வீசிய போது..!!!
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்கவில்லை...!!!

என்னங்க...!!!
ரொம்ப தூரத்திலே இருக்குற
முதியோர் இல்லத்திலே விட்டு
தலை முழுகிட்டு வந்திடுங்க...!!!
என்று காதிலே விழுந்த போதும்
அவர் இறந்திருந்தார்
யாருமே கவனிக்க வில்லை...!!!

உனக்கென்னப்பா...!!!
பொண்டாட்டி தொல்லை இல்லை
என்று வாழ்த்துவது போல
கிண்டலடிக்கப் பட்ட போது
அவர் இறந்திருந்தார்...!!!
அப்போதும் யாருமே கவனிக்கவில்லை .

இப்போது தான்
இறந்தாராம் என்கிறார்கள்...!!!
எப்படி நான் நம்புவது...???
நீங்கள் செல்லும் வழியில்
இப்படி யாராவது
இறந்து கொண்டிருப்பார்கள்...
ஒரு வினாடியாவது நின்று
பேசி விட்டுச் செல்லுங்கள்...!!!

இல்லையேல்...!!!

உங்கள் அருகிலேயே
இறந்து கொண்டிருப்பார்கள்
புரிந்து கொள்ளுங்கள்...

வாழ்க்கை என்பது
வாழ்வது மட்டுமல்ல...!!!
வாழ வைப்பதும்தான்...!!!!

*பலர் இறந்து விடுகிறார்கள்*
*புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது...

EVM மோசடிக்கு எதிரான கருத்தியலை உறுவாக்க வேண்டிய கட்டாத்தில் இருக்கின்றோம்.. முயன்றால் நிச்சயம் மாற்றம் நிகழும்...
02/03/2021

EVM மோசடிக்கு எதிரான கருத்தியலை உறுவாக்க வேண்டிய கட்டாத்தில் இருக்கின்றோம்.. முயன்றால் நிச்சயம் மாற்றம் நிகழும்...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Mujeeb Tharamani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mujeeb Tharamani:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share