UnmayinKural

UnmayinKural Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UnmayinKural, News & Media Website, .

17/04/2024

நான் சினிமாவில் புகழின் உச்சியில் இருந்தப் போது..அமெரிக்காவில் இருந்து,நான் பிறந்த லண்டன் மாநகருக்கு சென்றேன்..நான் இளமையில் பசியுடன்,கிழிந்த சட்டையுடன்.. நடந்து சென்ற அந்த இலண்டன் வீதி தெருக்களில் தான் இப்போது.. என்னை காண இலட்சக் கணக்கில்மக்கள் திரண்டனர்..

ஆனால் நான் பிச்சைகாரனாய் இருந்த போது என்னை நேசித்த என் காதலியை தேடினேன்..
அவள் இல்லை..அன்று வறுமை எங்களை பிரித்தது..இன்று திரையில் என்னை இலட்சக்கணக்கில் கண்கள் காண்கின்றன..

நான் தேடுவதெல்லாம் வீதிகளில் ஏழையாய் நடந்து சென்ற போது என்னை ஐன்னல் வழியாக பார்த்து சிரித்த அந்த கண்களை தான்...பணம் நமக்கு எல்லாவற்றையும் கொடுக்கலாம், ஆனால் வறுமை நம்மிடம் இருந்து பறித்தசிலவற்றை பணத்தால் திருப்பி தரமுடியாது... இப்போதும் வறுமை தான் வென்றது...!!

- #சார்லி சாப்லின்..

மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!!
30/01/2024

மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு!!

மின் கட்டணம் செலுத்துவதற்கு இலங்கை மின்சார சபையினால் புதிய முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சார சபை ....

அனைவருக்கும்  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
15/01/2024

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

07/01/2024

“நான் உங்களுக்காக இறக்கவும் செய்வேன்!” - மைபி-கிளார்க் எம்.பி., நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பழங்குடியின மொழியில் ஒலித்த முழக்கம்!


| | | | | | | | |

கனடாவில் மாணவர் விசா திட்டத்தில் புதிய மாற்றம்!! இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா?
01/11/2023

கனடாவில் மாணவர் விசா திட்டத்தில் புதிய மாற்றம்!! இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா?

இலங்கை மற்றும் இந்திய மாணவர்கள் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கல்வி கற்க பலர் விண்ணப்பிக்கி....

குறிப்பு ::யார் மனதையும் புண்படுத்தஅல்ல...... 🙋😭முதுகில் குத்தப்பட்ட  முதல் கத்தியை பிடுங்கி பார்த்தேன்.. 🤔'நட்பு'என்ற ப...
03/10/2023

குறிப்பு ::யார் மனதையும் புண்படுத்த
அல்ல...... 🙋
😭முதுகில் குத்தப்பட்ட முதல் கத்தியை
பிடுங்கி பார்த்தேன்.. 🤔
'நட்பு'என்ற பெயரில் நாடகமாடியவர்களின் பெயர் எழுதி இருந்தது.

😴இரண்டாம் கத்தியை பிடுங்கி பார்த்தேன்... 🤔
ஆபத்திலும் அவசரத்திலும்
யாருக்கெல்லாம் உதவினேனோ
அவர்களின் பெயர்
அழகாய் எழுதி இருந்தது.

🥺மூன்றாம் கத்தியை
பிடுங்கி பார்த்தேன்... 🤔
யாரையெல்லாம் உண்மையானவர்கள், நேர்மையானவர்கள் உற்ற உறவாய் மனதின் உயரத்திற்கு உயர்த்தி அழகு பார்த்தேனோ
அவர்களின் முகத்திரை கிழிந்து
அப்படியே தொங்கியது.

😏நேர்மை, உண்மை, என்று இங்கு ஏதும் இல்லை நேர்மையானவர், உண்மையானவர் என்று இங்கு எவரும் இல்லை என்று அறைந்தாற்போல் ஒவ்வொரு விடயமும் நமக்கு உணர்த்துகின்றது.

இனி நம்பிக்கை என்பது இராது, முன்னின்று சிலரை பார்த்தால் நகைப்பு தான் வரும்.
ஊருக்குத்தான் நியாயம், நமக்கில்லை போலும்.
விழித்துக் கொண்டது என் கண்கள்..
இனியும் ஏமாற மாட்டேன் என்று...
படித்ததில் பிடித்தது மட்டுமல்ல...
உண்மையும் கூட.... 👍

🎈மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.!🎈* காலையில்  முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.🎈* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குர...
19/09/2023

🎈மனஅழுத்தம் இன்றி வாழ வழி முறைகள்.!

🎈* காலையில் முன்னதாகவே எழுந்துவிடுங்கள்.

🎈* எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

🎈* ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள்.

🎈* காத்திருப்பது சிரமம் என்று கருதாதீர்கள். ஒரு புத்தகத்தை கையில் வைத்திருப்பது காத்திருத்தலை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தைக் குறைக்கும்.

🎈* வேலைகளைத் தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும்.செய்யவேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள்.

🎈* முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதைத் தவிருங்கள்.

🎈* வேலை செய்யாதவைகளைக் கட்டி அழாதீர்கள். சரி செய்ய முயலுங்கள் காலணிஆனாலும் கடிகாரம் ஆனாலும். இல்லையேல் அவை தேவையற்ற மன அழுத்தத்தைத் தரக்கூடும்.

🎈* சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப் படுங்கள். பத்து நிமிடத்தில் செல்லமுடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.

🎈* காஃபி , டீ அதிகம் குடிப்பதைத் தவிருங்கள். புகை மது எல்லாம் வேண்டாம்.

🎈* சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதை- இதைச் செய்வேன் என்பது போன்றவை.

🎈* இறுக்கம் தளருங்கள். சில வேலைகள் தடைபடுவதாலோ, தாமதப்படுவதாலோ உலகம் முடிந்து விடப் போவதில்லை.

🎈* தவறாய்ப் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக்கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக்குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள்.

🎈* செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயேதெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

🎈* சற்று நேரம் கைபேசிகளையும், தொலைபேசிகளையும் அணைத்துவிடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்தத்தொந்தரவும இன்றி.

🎈* செய்வதற்கு இயலாத பணிகளோ, நேரமில்லாமையால் நாம் செய்யமுடியாது என்று நினைக்கும் பணிகளோ இருந்தால் , ‘மன்னிக்கவும்.. என்னால ்செய்ய இயலாது’ என்று சொல்லப்பழகுங்கள்.

🎈* உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக்கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக்கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவு அவசியம்.

🎈* எளிமையாக வாழுங்கள்.

🎈* உற்சாகமான நண்பர்களுடன் பழகுங்கள் அதிக நேரம்.

🎈* நன்றாகத் தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்துத் தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும்.

🎈* வீட்டில் பொருட்களை அதனதன் இடத்தில் ஒழுங்காக அடுக்கி வையுங்கள். அவசரமாய் தேடுகையில் அகப்படாத பொருள் மன அழுத்தத்தை த்தரும்.

* ஆழமாக , நிதானமாக மூச்சை உள்ளே இழுத்து மெதுவாக வெளியே விடுங்கள்.

🎈* எழுதப் பழகுங்கள். கவலைகளை, எரிச்சல்களை, தோல்விகளை குறைக்க எழுத்து வடிகாலாகும்.

🎈* குழப்பம், கவலைகளை உள்ளுக்குள் புதைக்காமல் நம்பிக்கைக்குரிய நண்பர்களிடம் பகிருங்கள்.

🎈* தினமும் உங்கள் மனதை மகிழச்செய்யும் செயல்கள் எதையேனும் ஒன்றைச் செய்யுங்கள். அதில் பொருளாதாரப் பயன் ஏதும் இல்லாவிட்டாலும் கூட.

🎈* பிறருக்காக எதையேனும செய்யப் பழகுங்கள். செய்யும் அனைத்து செயல்களையும் ஆத்மார்த்தமான அன்போடு செய்யுங்கள்.

🎈* என்னை யாரும் புரிந்து கொள்ளவில்லையே எனும் முனகல்களைத் தவிர்த்து பிறரைப் புரிந்து கொள்ள முயலுங்கள்.

🎈* உங்கள் உடை, நடை பாவனைகளினல் தன்னம்பிக்கை மிளிரட்டும். உடைகளை நன்றாக அணிவதே தன்னம்பிக்கையை அதிகரிக்கும் என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

🎈* நிறைய வேலைகளை ஒரே நாளில் முடிக்க நினைக்காதீர்கள்.ஒவ்வொரு வேலைக்கும் இடையே சரியான இடைவெளி விடுங்கள்.

🎈* வார இறுதிகள், விடுமுறை நாட்களை மிகச் சிறப்பாகச் செலவிடுங்கள். வெளியே செல்வது, கடற்கரைக்குச் செல்வது என மனதைப் புத்துணர்ச்சியாக்குங்கள்.

🎈* இன்றைய பணிகளை செவ்வனே செய்தால் நாளைய பணிகள் செவ்வனே நடைபெறும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

🎈* பிடிக்காத வேலை இருந்தால் அதை முதலிலேயே முடித்து விடுங்கள். அப்போது தான் தொடர்ந்து செய்யும் பிடித்தமான வேலைகள் மனதை இலகுவாக்கும்.

🎈*மன்னிக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், அடுத்தவர்களைக் காயப் படுத்தாமல் வாழப் பழகுங்கள்.

🎈இவற்றில் சிலவற்றைப் பின்பற்றினாலே மன அழுத்தமற்ற வாழ்க்கை நமக்குவசப்படும்.

அரசாங்கத்தின் " #அஸ்வெசும" நலன்புரி திட்டத்தின் கீழ் பண கொடுப்பனவுகள் பெற்றுக் கொள்ள தகுதியுடையவர்களின் பெயர் பட்டியலில்...
22/07/2023

அரசாங்கத்தின் " #அஸ்வெசும" நலன்புரி திட்டத்தின் கீழ் பண கொடுப்பனவுகள் பெற்றுக் கொள்ள தகுதியுடையவர்களின் பெயர் பட்டியலில் உங்கள் பெயர் அல்லது உங்கள் உறவினர் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்..

https://iwms.wbb.gov.lk/household/list

இணையதளத்திற்கு சென்று உங்கள் மாகாணம் மற்றும் மாவட்டம் மற்றும் பிரதேச செயலக பிரிவு மற்றும் கிராம நிலதாரி பிரிவினை தெரிவு செய்து View registry என்பதை கொடுப்பதன் மூலம் விபரங்களை பார்வையிட முடியும்.

'அஸ்வெசும' நலன்புரித் திட்டத்தின் கீழ், 40% குறைந்த வருமானம் பெறும் மக்களை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நிதியுதவி வழங்கப்படவுள்ளது.

●மிகவும் ஏழ்மையானவர்கள்.
●ஏழ்மையானவர்கள்.
●பாதிக்கப்படக்கூடியவர்கள்.
●நிலையற்ற வருமானமுடையவர்கள்.

இதில் மிகவும் ஏழ்மையான பிரிவில் உள்ளடங்கியுள்ள குடும்பங்களுக்கு மாதாந்தம் 15,000 ரூபாவை அரசாங்கம் வழங்கவுள்ளது.

குறிப்பாக:-

அரச நலன்புரி திட்டத்தின் கீழ் பண கொடுப்பனவுகள் பெற்றுக் கொள்ள தகுதி இருந்தும் பெயர் உள்ளடங்கப்படாது இருந்தால் அது தொடர்பில் முறையீடு செய்யலாம் அல்லது ஜூலை மாதத்திற்குப் பின்னர் இரண்டாம் கட்டமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

அச்சு அசல் செய்தி வாசிப்பாளரை போன்று அசல் பெண் போலவே இருக்கும் முதல்    ஆங்கரை இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஒடிஸா சேனல்....
11/07/2023

அச்சு அசல் செய்தி வாசிப்பாளரை போன்று அசல் பெண் போலவே இருக்கும் முதல் ஆங்கரை இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஒடிஸா சேனல்.!

புவனேஸ்வரம் ஒடிஸாவின் தனியார் டிவி சேனல் ஒன்று முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்துள்ள சம்பவம்..

செயற்கை செய்தி வாசிப்பாளரின் உடல்மொழி தொடங்கி உதடு அசைவுகள், குரல் வரை அனைத்துமே ஏற்கெனவே இருக்கும் செய்தி வாசிப்பாளர்களை ஆராய்ந்து அதை வைத்துத் தானாக உருவகப்படுத்தப்படுகிறது.

செய்திகளை டைப் செய்து கொடுத்தால் போதும் செய்தி வாசிக்கும் வீடியோ கிடைத்துவிடும். ஆங்கில மற்றும் சீன மொழிகளில் இது செய்திகளை வாசிக்கும். செயற்கை நுண்ணறிவு கொண்டது. செய்தி வாசிப்பாளருக்கும் நிஜ செய்தி வாசிப்பாளருக்கும் எந்த வித்தியாசமும் தெரியாதவாறு உள்ளது.

இப்படியாக உலகில் ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது ஒடிஸாவில் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை ஒடிஸா டிவி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன் பெயர் லிசா எனவும் பெயர் வைத்துள்ளது. இந்த செய்தி வாசிப்பாளரால் பல மொழிகளில் பேசும் திறன் உண்டு. ஆங்கிலம் மற்றும் ஒடியா மொழிகளில் செய்திகளை வாசித்து வருகிறார் லிசா.

இதுகுறித்து அந்த தொலைகாட்சி நிறுவனத்தின் தலைவர் லிடிஷா மங்கத் பாண்டா கூறுகையில் ஒடியா மொழியில் லிசாவுக்கு பயிற்சி அளித்தது மிகப் பெரிய கடினமான பணியாகும். எப்படியோ அதில் நாங்கள் சாதித்து விட்டோம். எனினும் அதில் இன்னும் நாங்கள் சில பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அவர் மற்றவர்களுடன் பேசும் அளவுக்கு அடுத்த லெவலுக்கு செல்ல பயிற்சி கொடுப்போம் என நம்புகிறோம் என்றார்.

ஒடிஸாவில் முதல் டிஜிட்டல் மீடியா ஒடிஸா டெலிவிஷன்தான் இது 1997 ஆம் ஆண்டு புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் தொடங்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாநிலத்தின் முக்கிய நகரங்களில் மெல்ல விஸ்தரிக்கப்பட்டது கடந்த 2006 ஆம் தேதி கேபிளிலிருந்து சாட்டிலைட் சானலாக மாறியது. இந்த நிறுவனம் 25 ஆண்டுகளாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது...

ஒரு வேலை பணத்தை வைத்துதான் மனிதனின் உயிரும் மதிக்கப்படுகிறது போலும். டைட்டன் நீர்மூழ்கி 'வெடித்து' 5 பேர் பலி. உலகம் ஆழ்...
23/06/2023

ஒரு வேலை பணத்தை வைத்துதான் மனிதனின் உயிரும் மதிக்கப்படுகிறது போலும்.

டைட்டன் நீர்மூழ்கி 'வெடித்து' 5 பேர் பலி. உலகம் ஆழ்ந்த அனுதாபங்கள். அதுதான் முதல் படம்.

கடந்த வாரம் இத்தாலி செல்ல படகில் சென்ற 500 பேர் பலி. இதில் சிறுவர்களும் உள்ளடங்குவர். இது இரண்டாம் புகைப்படம்.

பல இலட்சம் டொலர்கள் செலுத்தி டைட்டானிக் சிதைவுகளை பார்வையிட சென்ற உலகின் முன்னணி பணக்காரர்கள் மூவர், சுற்றுலா வழிகாட்டி, மாலுமி உட்பட 05 வர் உயிரிழந்துவிட்னர் என்ற தகவல்கள்தான் இப்பொழுது ட்ரெண்டிங். எங்கு திரும்பினாலும் அந்த செய்திகள்தான்.

ஆனால் கடந்த வாரம் சிரியாவில் இருந்து குடியேறிய 750 மேற்பட்ட மக்கள் இத்தாலி செல்ல முயற்சித்த போது கிரீஸ் கடல்பகுதியில் படகு கடலில் கவிழ்ந்ததில் 500 மேற்பட்டவர்கள் உயிரிழந்தவுயிட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு கூறியுள்ளது. இதில் சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள் என சகல வயதெல்லையையும் கொண்டவர்கள் இருந்துள்ளனர்.

ஆச்சரியம் என்னவன்றால் டைட்டானிக் பார்க்கசென்றவர்கள் சுற்றுலா சென்றவர்கள், அவர்களின் சொத்தும் பணமும் அவர்கள் பற்றி ஒரு வேலை உலகையே பேச வைக்கிறது போலும்.

ஆனால் சிரியாவின் அகதிகள் 500 பேர் நாடு தேடி வாழச்சென்றவர்கள். அவர்களின் நிலை குறித்து அவ்வளவும் பேசுவாதாயில்லை யாரும்.

ஒரு வேலை பணத்தை வைத்துதான் மனிதனின் உயிரும் மதிக்கப்படுகிறது போலும்.
©️

  சில உளவியல் உண்மைகள்!1. அதிகம் சிரிப்பவர்கள்.. தனிமையில் வாடுபவர்கள்..2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்....
29/03/2023



சில உளவியல் உண்மைகள்!

1. அதிகம் சிரிப்பவர்கள்.. தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள்... மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள்..!!! மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள்!!!! அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள்... அன்புக்காக ஏங்குபவர்கள்...!!!!

பேச்சு - உளவியல் ஆலோசனைகள்...!
8. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்..

9. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்..!!

10. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள் ..

11. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்துப் பேசவும்.

12. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். .

13. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும்...
அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்....

14. நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்..

15. நம்பிக்கையோடு கூடிய புன்னகை , நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்..

16.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும். .

17. உங்கள் பேச்சை விளக்குவதற்கு , உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.. ...
தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...!

18. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள்.
யாரும் சொன்னாலும் ரசித்தாலும்...தான்.... நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்..

19. எந்த மொழி சரளமாக பேச முடியவில்லை என்றாலும் கவலை கொள்ளாதீர்கள். ... உங்களை நக்கல் செய்பவரிடம் துணிச்சலாய் எதிர்த்துத் சொல்லுங்கள்... இங்கு பலருக்கு அவரவர் தாய் மொழியையே சரியாகப் பேசத் தெரியாதென்று..

20. உங்களால் எது முடியாது... உங்களுக்கு எது தெரியவில்லை என்று யாரேனும் சொன்னாலும்.., அதை விரைவில் கற்றுக் கொண்டு முடித்துக் காட்ட வெறித் தனமாய் முயற்சி செய்யுங்கள்..

21.என் வாழ்க்கை சோகம் நிறைந்தது என்று நினைக்காதீர்கள்... எல்லாம் நிறைவாய் இருக்கும் வாழ்க்கை இங்கு யாருக்குமே அமைவதில்லை... என்பதே உண்மை....

22.உங்களுக்கு எதுவும் தெரியாது.... எதிரில் நிற்பவருக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்... இந்த எண்ணம் இருந்தால் நீங்கள் சொல்ல வந்ததை சரியாக தடுமாற்றம் இன்றி சொல்லி முடிக்க முடியாது..

23.கேள்வி கேட்பதற்கும் உங்களை முன் நிறுத்துவதற்கும் மொழி புலமை அவசியம் என்று நினைக்காதீர்கள்.... உலகில் சரியாக சிந்திக்க வைத்த கேள்விகளை கேட்ட நிறையப் பேர் மொழிப்புலமை இல்லாமல் தங்களுக்கு தெரிந்த வார்த்தைகளைக் கொண்டு தங்கள் கேள்விகளை சரியாக புரியவைத்தவர்கள்....

24. அழும் போது தனியாக அழுங்கள்... நீங்கள் அழைத்தாலும் சேர்ந்து அழ இங்கு யாரும் வரப்போவதில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்...!!!
கண்ணீரில் துக்கத்தை கரைத்து தூர எறிந்து விட்டு முன் செல்லுங்கள்...

25.உங்கள் அன்பு எந்த இடத்தில் நிராகரிப்பட்டாலும் இழப்பு உங்களுக்கில்லை,. நிராகரித்த்வருக்கே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! ! சொன்னா நம்புங்க..1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடற பொண்ணுங்க.2) சரக்க மோந்துப...
25/02/2023

இவங்கலாம் இன்னமும் இருக்காய்ங்கயா! ! சொன்னா நம்புங்க..

1) துப்பட்டாவின் நோக்கம் அறிந்துப் போடற பொண்ணுங்க.

2) சரக்க மோந்துப் பார்த்தாலே மயக்கம் போடற பசங்க.

3) கை முறுக்கு சுடத் தெரிந்தப் பாட்டிங்க..

4) எவ்ளோ பெரிய சிக்கு கோலத்தையும் அசால்ட்டா போடற அம்மாக்கள்.

5)அப்பா ஏதாவது கேட்டா நின்று பொறுமையா பதில் சொல்ற பிள்ளைங்க.

6) ஒரே ஒரு மொபைல் ,ஒரே ஒரு சிம்கார்ட் , ஒரே ஒரு காதல் இருக்கிற பொண்ணுங்க ,பசங்க.

7) மல்லிகைப் பூவையும் கண்ணாடி வளையலையும் நேசிக்கும் பெண்கள்.

8) பொண்ணுங்க கிட்ட பேச கூச்சப் படற பசங்க. முறைப் பையன பார்த்தா வெட்கப்படறபொண்ணுங்க.

9) மதிய உணவை ஒன்றாக அமர்ந்துச் சாப்பிடும் குடும்பங்கள்.

10)சொந்த மண்ணையும் மொழியையும் மறக்காத மனிதர்கள் என!!

16/07/2022

பெற்றோல் மெட்ரிக் டொன் 35,000 உடைய கப்பலொன்று நாளை மறுதினம் இலங்கை வருகிறதாம்

✓ ஒரு மெட்ரிக் டொன் பெற்றோலில் 1388லீற்றர். அண்ணளவாக 1000 லீற்றர் என எடுத்துக் கொள்வோம்.அப்போது இலங்கைக்கு வரும் மொத்த பெற்றோல் 35000 × 1000 = 35,000,000 லீற்றர்

✓ இலங்கையில் உள்ள Ceypetco எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அண்ணளவாக 850 மட்டும் இருக்கும்.ஒரு எரிபொருள் நிலையத்திற்கு கிடைக்கும் பெற்றோல் லீற்றர்= 35,000,000/850 = 41,176லீற்றர்.
அண்ணளவாக 40,000 லீற்றர்.

✓ ஒரு பெரிய எரிபொருள் பவுஸர் ஒன்றிற்கு 13,200 லீற்றர் நிரப்ப முடியும்.ஆகவே ஒரு எரிபொருள் நிலையத்திற்கு 40,000/13,200 = 3.03
அண்ணளவாக 3 பவுஸர் அளவு ஒரு எரிபொருள் நிலையத்திற்கு கிடைக்கும்.

✓அப்போது ஒரு பவுஸரால்
5லீற்றர்படி 600 மோட்டார் சைக்கிள்கள் - 3000 லீற்றர்
10லீற்றர்படி 500 முச்சக்கர வண்டிகள் - 5000 லீற்றர்
20 லீற்றர்படி 250 கார்/வேன்கள் - 5000லீற்றர்

ஆகவே ஒரு எரிபொருள் நிலையத்தால் அதை போன்று மூன்று முறைகள் எரிபொருள் நிரப்ப முடியும்.

இவ்வளவு நாள் இருந்த எரிபொருள் வரிசைகளில் இவ்வளவு நீண்ட வரிசை இருந்ததா??
இந்த எரிபொருள் இலங்கைக்கு வந்தும் நாட்டில் எரிபொருள் வரிசை தொடரும் என்றால் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்..
திருடர்கள் இன்னும் சமூகத்தில் இருக்கிறார்கள்.
நீங்களும் அந்த திருடர்களில் ஒருவரா? என இதயத்தை தட்டி கேளுங்கள்.

இந்த #எரிபொருள் இலங்கைக்கு வந்து பகிரப்பட்டால் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு இலங்கையில் எரிபொருள் வரிசை இருக்கவே இருக்காது.

#சிஸ்டம்_சேன்ஜ் என்பது அரசியலில் மாத்திரமல்ல. நீங்களும் வஞ்சகமின்றி நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். அன்று தான் இந்நாட்டு மக்களாக ஒற்றுமையுடன் மனிதாபிமானத்தின் போராட்டத்தை வெற்றி கொள்ள முடியும்.

இயல்பாகவே சிஸ்டம் சேன்ஞ்’ம் நடைபெறும்.
❤️❤️❤️❤️

(மூலம்- சிங்கள மொழி மூல முகப்பக்கம் ஒன்றில் இருந்து..
தமிழ் மொழி மூலம் - Faseem Ibnu Rasool)dssbnndv

ஓ மனிதனே இதைப் படித்து நீ திருந்திக் கொள் இக்கதையில் ஓர் உண்மை இருக்கிறதுஆபிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அர...
27/06/2022

ஓ மனிதனே இதைப் படித்து நீ திருந்திக் கொள் இக்கதையில் ஓர் உண்மை இருக்கிறது

ஆபிரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் ஓர் அரசர் இருந்தார், அவரிடம் பத்து காட்டு நாய்கள் இருந்தன.

தவறு செய்த தனது ஊழியர்களை அந்த காட்டுநாய்களுக்கு இரையாக்குவார்.

ஒருநாள் வேலைக்காரர்களில் ஒருவர் தவறான ஒரு கருத்தை சொன்னார், அரசருக்கு கோபம் வந்துவிட்டது.

இவனை_நாய்களுக்கு தூக்கி எறியுங்கள்.”

என்று கட்டளையிட்டார்.

வேலைக்காரன் கெஞ்சினான்,

நான் உங்களுக்கு பத்து
வருடங்களாக சேவை செய்தேன்,
நீங்கள் இப்படி ஒரு தண்டனையை
எனக்குத் தரலாமா?
தயவுசெய்து என்னை அந்த
நாய்களுக்கு தூக்கி எறிவதற்கு
முன் பத்து நாட்கள் அவகாசம்
ஒன்று தாருங்கள்! ”

ராஜா ஒப்புக்கொண்டார்.

அந்த பத்து நாட்களில், வேலைக்காரன் நாய்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவலரிடம் சென்று, அடுத்த பத்து நாட்களுக்கும் தான் அந்த நாய்களுக்கு சேவை செய்ய விரும்புவதாகக் கூறினான்.

காவலர் குழப்பமடைந்தார், ஆனாலும் ஒப்புக்கொண்டார்.

அந்த வேலைக்காரன் அந்த நாய்களுக்கு உணவளித்தான், அவற்றைச் சுத்தம் செய்தான், குளிப்பாட்டவும் தொடங்கினான்.

அவற்றிற்கு அனைத்து விதமான வசதிகளையும் வழங்கி அன்பு காட்டினான்.

பத்து நாட்கள் முடிந்தது.

வேலைக்காரனைத் தண்டிப்பதற்காக நாய்களிடம் தூக்கி எறியும்படி அரசர் உத்தரவிட்டார்.

அவன் தூக்கி எறியப்பட்டபோது, ​​அவை ஓடிவந்து அவனின் கால்களை நக்கத் தொடங்கின.

இதைக் கண்டு அனைவரும் வியந்தனர்!

இதைப் பார்த்து திகைத்த அரசன்,

"என் நாய்களுக்கு என்ன நேர்ந்தது?"

என்றான்.

வேலைக்காரன் பதிலளித்தான்,

"நான் பத்து நாட்களுக்கு
மட்டுமே இந்த நாய்களுக்கு
சேவை செய்தேன், அவை என்
சேவையை மறக்கவில்லை.
நான் உங்களுக்கு பத்து
வருடங்கள் சேவை செய்தும்
என் முதல் தவறைக்கூட
மன்னிக்காமல் நான் உங்களுக்கு
செய்த அனைத்தையும் மறந்து
என்னை தண்டிக்க
உத்தரவிட்டீர்கள்!"

அரசர் தனது தவறை உணர்ந்து வேலைக்காரனை விடுவிக்க உத்தரவிட்டார்.

நம்மிலும் எத்தனையோபேர் இப்படி இருக்கிறோம்.

ஒருவர் செய்த ஒரு தவறுக்காக, அவர் எமக்கு செய்த உதவிகளை எல்லாம் மறந்து அவரை வாழ்நாளெல்லாம் ஒதுக்கி வாழும் எத்தனையோபேர் எம்மிலும் இல்லாமல் இல்லை.

இருக்கிறார்கள்.

தவறு செய்வது மனித சுபாவம்.

இதை உணர்ந்து தவறுகளை மன்னிக்கப் பழகுவதும் மனித சுபாவம்•••

மன்னிப்போம்•••மறப்போம்•••!

இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர்.!!இது 1996 ஆம் ஆண...
08/06/2022

இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் அறிவித்துள்ளனர்.!!

இது 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற 72 மணி நேர தொடர்மின்வெட்டை ஒத்ததாக இருக்குமென தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கம் இன்று இரவு அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டு மின்சார சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தியுள்ளது.

ஆனால் இதனை தொழிற்சங்கம் ஏற்குமா என்பது தெரியவில்லை.

இந்த நேரத்தில் இப்படி செய்கிறீர்களே என்று தொழிற்சங்கத்தையும், வர்த்தமானி அடிச்சு என்னத்தை பண்ணபோறீங்க என்று அரசாங்கத்தையும் கேட்கும் நிலைமை இப்போது இல்லை.

போன்கள் , அத்தியாவசிய உபகரணங்களை சார்ஜ் செய்து கொள்ளுங்கள்.. மின்சாரத்தினால் செய்யப்படும் அத்தியாவசிய வேலைகளை செய்துகொள்ளுங்கள்.

அரசுக்கும் தொழிற்சங்கத்திற்குமிடையிலான
முரண்பாட்டில் எப்போதும் போலவே பாதிக்கப்படுவது சாதாரண மக்களே...

07/06/2022

இலங்கை முழுவதும் மோசமான நிலைமை ஏற்பட்டுள்ளமையினால் மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஒவ்வொரு பகுதிகளிலும் பொலிஸார் ஒலிபெருக்கி ஊடாக பொது மக்களை எச்சரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
அதற்கமைய வீடுகளில் இருக்கும் மக்கள் கதவு, ஜன்னல்களை பூட்டிவிட்டு வீட்டிற்குள் அவதானமாக இருக்கமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
அத்துடன் வாகனங்கள் தொடர்பிலும் அவதானமாக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம். உதவி கேட்டு, மின்சார தடை தொடர்பில், அல்லது அதிகாரிகள் என கூறி வீடுகளுக்கு வரும் நபர்கள் தொடர்பில் அவதானமாக இருங்கள்.

நகைகள் அல்லது பெறுமதியான பொருட்களுடன் வெளியே நடமாடுவதனை தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் வீடுகளின் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ளுங்கள்.
கையடக்க தொலைபேசியின் EMI இலக்கத்தை பதிவு செய்து வைத்துக் கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருந்து வந்த நபர்கள் அவதானமாக இருங்கள்.
உங்களுக்கு பெறுமதியான பரிசு வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாக கூறி வரும் நபர்களை வீட்டிற்குள் அனுமதிக்க வேண்டாம்.
பேருந்துகளில் புதிய நபர்கள் பழக்கம் ஏற்படுத்த முயற்சித்தால் அதனை தவிர்த்துக் கொள்ளுங்கள். பேருந்தில் பைகள் வழங்கினால் பெற்றுக் கொள்வதனை தவிர்த்து அவதானமாக இருங்கள்.
நீங்கள் ஏமாற்றப்படலாம். ஏமாற்றுக்காரர்களினால் குறி வைக்கப்படலாம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்காக 2 மணிநேரம் வரிசையில் காத்து நின்ற கிரிக்கெட் ஜாம்பவான்  #சங்கா...ஏன்...
03/06/2022

சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்காக 2 மணிநேரம் வரிசையில் காத்து நின்ற கிரிக்கெட் ஜாம்பவான் #சங்கா...

ஏன் வரிசையில் இருக்கிறீர்கள் உள்ளே வாருங்கள் என 10 அதிகாரிகளுக்கு மேல் வந்து கூறிய போதிலும்

பிரச்சினை இல்லை இன்னும் கொஞ்சம் தூரம் தானே என அவர்களிடம் பதிலளித்தார் குமார சங்கக்கார.

#பிரபலமாக இருந்தாலும் தன்னடக்கத்தை கொண்ட இந்த மனிதரை நாம் மதிக்கிறோம்... ❤️❤️

நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், ஏனென்றால்.... 1. டிரெட்மில்லை ( TreadMill ) கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார்...
22/05/2022

நீங்கள் எதை வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், ஏனென்றால்....

1. டிரெட்மில்லை ( TreadMill ) கண்டுபிடித்தவர் 54 வயதில் இறந்தார்.

2. ஜிம்னாஸ்டிக்ஸ் கண்டுபிடிப்பாளர் 57 வயதில் இறந்தார்.

3. உலக உடற்கட்டமைப்பு சாம்பியன் 41 வயதில் இறந்தார்.

4. உலகின் சிறந்த கால்பந்து வீரர் மரடோனா தனது 60 வயதில் காலமானார்.

ஆனால்...

5. KFC கண்டுபிடிப்பாளர் 94 வயதில் தான் இறந்தார்.

6. Nutella பிராண்ட் கண்டுபிடிப்பாளர் 88 வயதில் தான் இறந்தார்.

7.சிகரெட் தயாரிப்பாளர் வின்ஸ்டன் 102 வயதில் தான் இறந்தார்.

8. அபின் கண்டுபிடிப்பாளர் 116 வயதில் பூகம்பத்தில் இறந்தார்.

9. ஹென்னெஸியின் உலகப் புகழ்பெற்ற *பிராந்தி பிராண்டை கண்டுபிடித்தவர் 98 வயதில் இறந்தார்.

10. MDH மசாலா கொண்ட மனிதர் 97 ஆண்டுகள் வாழ்ந்ததால் அதிக மசாலாப் பொருள்களையும் உண்ணுங்கள்.

பிறகு உடற்பயிற்சி ஆயுளை நீட்டிக்கும் என்ற முடிவுக்கு இந்த மருத்துவர்கள் எப்படி வந்தனர்?

முயல் எப்பொழுதும் மேலேயும் கீழேயும் குதிக்கிறது, ஆனால் 2 வருடங்கள்* மட்டுமே உயிர் பிழைக்கிறது.

ஆனால் உடற்பயிற்சி செய்யாத ஆமை 400 வருடங்கள் உயிர் பிழைக்கிறது.

எனவே,

கொஞ்சம் ஓய்வெடுங்கள்...

அமைதியாக இருங்கள்...

குளிர்ச்சியாக இருங்கள்...

பிடித்த உணவை நன்றாக சாப்பிடுங்கள்...

நிறையாக தண்ணீர் குடிக்கவும்...

பிடித்த பாடல்களை எப்போதும் கேளுங்கள்...

முடிந்த வரை பிறருக்கு உதவுங்கள்...

உங்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கவும்...

20/05/2022

9 புதிய அமைச்சர்கள் இன்று பதவிப்பிமாணம்

1. நிமல் சிறிபால டி சில்வா - துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு

2. சுசில் பிரேமஜயந்த - கல்வி அமைச்சர்

3. கெஹெலிய ரம்புக்வெல்ல- சுகாதார அமைச்சர்.

4. விஜேதாச ராஜபக்ஸ - நீதி, சிறைச்சாலைகள் , அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு

5. ஹரீன் பெர்ணான்டோ - சுற்றுலா மற்றும் காணி அமைச்சு

6. ரமேஷ் பத்திரண- கைத்தொழில் அமைச்சு

7. மனுஷ நாணயக்கார - தொழிலாளர் மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு

8. நலீன் பெர்ணான்டோ - வர்த்தகம் , உணவுப்பாதுகாப்பு அமைச்சு

9. டிரான் அலஸ் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

19/05/2022
இலங்கை முழுவதும் பிறப்பிக்கப்பட்டது ஊரடங்கு! கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து நாடுமுழுவதும் மறு அறிவித்தல...
09/05/2022

இலங்கை முழுவதும் பிறப்பிக்கப்பட்டது ஊரடங்கு!

கொழும்பில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து நாடுமுழுவதும் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

முன்னதாக கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்திய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை உடனடியாக நடைமுறைப்படும் வகையில் காவல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

08/05/2022

06/05/2022

இலங்கையில் அவசரகாலச் சட்டம் பிரகடனம்!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அரச தலைவரின் அதிகாரத்திற்கு அமைய அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தலைவரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டின் நலனைப் பாதுகாக்கவும் அத்தியாவசிய சேவைகளைப் பேணவும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரச தலைவரின் ஊடகப் பிரிவால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் அமுலில் உள்ள காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள்,பேரணிகள் நடத்துவது தடைசெய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

அரச ஊழியர்களின் சம்பள குறைப்பு தொடர்பில் விசேட அறிவிப்பு!இன்று ஹர்த்தாலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு மே மாதத்துக்கான வே...
06/05/2022

அரச ஊழியர்களின் சம்பள குறைப்பு தொடர்பில் விசேட அறிவிப்பு!

இன்று ஹர்த்தாலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு மே மாதத்துக்கான வேதனம் வழங்கப்பட மாட்டாது என வெளியாகும் செய்தி பொய்யானது என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று நிர்வாக முடக்கலில் ஈடுபடும் அரச ஊழியர்களுக்கு மே மாதத்துக்கான வேதனம் வழங்கப்படமாட்டாது என சமூகவலைத்தளங்களில் ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடிதத் தலைப்பில் செய்தியொன்று பகிரப்பட்டு வருகின்றது.

எனினும், குறித்த அறிவிப்பு பொய்யானது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு விளக்கமொன்றை வழங்கியுள்ளத

நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் - அரசாங்கத்திற்கு மீண்டும் 4 நாட்கள் கால அவகாசம்அரச தலைவர் கோட்டாபய ராயபக்ச மற்றும் அரசாங்கத...
05/05/2022

நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் - அரசாங்கத்திற்கு மீண்டும் 4 நாட்கள் கால அவகாசம்

அரச தலைவர் கோட்டாபய ராயபக்ச மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி வெள்ளிக்கிழமை (6) நாடளாவிய ரீதியில் ஹர்த்தால் முன்னெடுக்கப்படவுள்ளது.

சகல பகுதிகளிலும் கடைகளை மூடி ஹர்த்தாலுக்கு ஆதரவளிக்குமாறு அனைவரிடமும் ஒன்றிணைந்த தொழிற்சங்க சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாளையதினம் ஹர்த்தாலின் பின்னர் அரசாங்கத்திற்கு 4 நாட்கள் கால அவகாசம் வழங்குவதாகவும் , அதன் பின்னரும் பதவி விலகவில்லை எனில் 11 ஆம் திகதி முதல் தொடர் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

"மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டும்"நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளதால், மின்வெட்...
04/05/2022

"மின்வெட்டு நேரத்தை அதிகரிக்க வேண்டும்"

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின் பிறப்பாக்கி செயலிழந்துள்ளதால், மின்வெட்டு மணித்தியாலங்கள் நீடிக்கப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 270 மெகாவோட் மின் பிறப்பாக்கி தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை, நேற்று (03) அறிவித்தது.

தற்போது 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாகவும், மின்பிறப்பாக்கி செயலிழந்துள்ள காரணத்தால் 5 மணித்தியாலங்களாக மின்வெட்டை நீடிக்க வேண்டும் எனவும் மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

03/05/2022

யாழ்ப்பாணத்தில் பியர் போத்தலை உடைத்து குத்திக் கொலை!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் அமைந்துள்ள மது விற்பனை நிலையமொன்றில் இச்சம்பவம் இரவு இடம்பெற்றது.

சம்பவத்தில் குணசேகரம் குணசோதி வயது 25 இடம் (யாழ் நாச்சிமார் கோவிலடி திக்கம்) பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவருக்கும் அங்கு இருந்தவர்களுக்கும் இடையில் வாய்த்தக்கம் கைகலப்பாக மாறியதில் போத்தலை உடைத்து சொருகியுள்ளார்.

யாழில் தீ விபத்து - மாணவி பலி!!யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீ...
03/05/2022

யாழில் தீ விபத்து - மாணவி பலி!!

யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு, பிரான்பற்று பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை ஏற்பட்ட தீப்பரவலில் மாணவி ஒருவர் உயிரிழந்தார்.

சம்பவத்தில் 17வயதான சிறுமி ஒருவரே உயிரிழந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தீப்பரவல் ஏற்பட்ட போது குறித்த பகுதியிலுள்ள மக்களால் சிறுமி மீட்கப்பட்டு சங்கானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இளவாலை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 #இலங்கையில் இருந்து  #தமிழகத்திற்கு  செல்ல முயன்ற 13 பேர் படகுக்காக காத்திருந்த போது கைது செய்த இலங்கை கடற்படை.!!இலங்கை...
30/04/2022

#இலங்கையில் இருந்து #தமிழகத்திற்கு செல்ல முயன்ற 13 பேர் படகுக்காக காத்திருந்த போது கைது செய்த இலங்கை கடற்படை.!!

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து தமிழகத்திற்கு செல்ல முயன்ற 13 இலங்கை தமிழர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

தற்போது இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் உணவுப் பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இதன் காரணமாக இங்கையில் வசிக்கும் தமிழர்கள் கடல் வழியாக தமிழகத்தில் தஞ்சமடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்றிரவு #திருகோணமலையில் வசித்த 3 குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தங்களது சொத்துக்களை விற்று அதில் கிடைத்த பணத்தை வைத்து #ராமேஸ்வரத்தின் தனுஷ்கோடிக்கு வருவதற்காக காங்கேசன் துறை கடற்கரையில் படகுக்கு காத்திருந்த போது அவர்களை கைது செய்து காங்கேசன்துறை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது...

தீ பெட்டியின் விலை அதிகரிக்கப்படவில்லை அதிக விலைக்கு விற்க்கும் கடைகளை கண்டறிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலீஸ் நிலையத்...
28/04/2022

தீ பெட்டியின் விலை அதிகரிக்கப்படவில்லை அதிக விலைக்கு விற்க்கும் கடைகளை கண்டறிந்தால் உடனடியாக அருகில் உள்ள பொலீஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்த முடியும்.

அத்துடன் அவ்வாறு விலை அதிகரிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த நீங்கள் நேரடியாக நிறுவனத்துடன் கதைக்க அவர்களது தொடர்பு இலக்கம் 0814472555 அழைக்கவும்...

Address


Alerts

Be the first to know and let us send you an email when UnmayinKural posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share