Times Tamil News

  • Home
  • Times Tamil News

Times Tamil News Times Tamil News brings you the latest and hottest news from Tamil Nadu to your fingertips within se

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் லண்டன் பிரிட்ஜ், தேம்ஸ் நதிக்கரையில் அமர்ந்து மெக்ஸிகன் பரீ...
19/07/2024

உலகிலேயே அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வந்துசெல்லும் லண்டன் பிரிட்ஜ், தேம்ஸ் நதிக்கரையில் அமர்ந்து மெக்ஸிகன் பரீட்டோவை சுவைத்தது ஜிலுஜிலு அனுபவம்.
என் உடல், என் ஆடை என்று இந்நாட்டுப் பெண்களின் அலட்சியத் தைரியம் ஆச்சர்யமூட்டுகிறது. உலகம் முழுக்க பெண்களுக்கு இந்த துணிவும் சுதந்திரமும் அவசியம்.
லண்டனில் மட்டும் 300 மொழிகள் பேசும் மக்கள் இருப்பதாகச் சொல்லி திகைக்க வைக்கிறார்கள். லண்டன் ஹான்ஸ்லோ நூலகத்தில் தமிழ் மொழிக்கும் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு.
ஆச்சர்யங்கள் தொடர்கின்றன.

விருதுநகரிலிருந்து லண்டனுக்கு…அய்யா பிழைப்புக்காக விருதுநகரைத் தாண்டியதே இல்லை. நான் தட்டுத்தடுமாறி சென்னைக்குக் குடியேற...
11/07/2024

விருதுநகரிலிருந்து லண்டனுக்கு…

அய்யா பிழைப்புக்காக விருதுநகரைத் தாண்டியதே இல்லை. நான் தட்டுத்தடுமாறி சென்னைக்குக் குடியேறியதும் என்னுடன் வந்துவிட்டார். மகனை தினமும் பள்ளிக்குக் கூட்டிச் செல்வதையும் அழைத்துவருவதையும் ஏதோ சாதனை புரிந்தது போன்று அய்யா நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்.

இப்போது லண்டனில் இருக்கிறான் மகன். பள்ளியில் படிக்கும் பேரனை அழைத்துவந்த நேரத்தில் தான், அய்யா ஏன் அத்தனை தூரம் பேசினார் என்பது புரிகிறது.
வாழ்க்கை என்பது முற்றுப்புள்ளி இல்லாத வட்டம்

ஆரோக்கியமே உண்மையான சொத்து. வந்தாச்சு யாக்கை இதழ்
03/07/2024

ஆரோக்கியமே உண்மையான சொத்து.
வந்தாச்சு யாக்கை இதழ்

பயாலஜிகல் மஹராஜுக்கு ஜே…மதம் என்ற பெயரைச் சொல்லி மனிதனை முட்டாள் ஆக்குவது ரொம்பவும் எளிது. அடுத்த ஜென்மத்தில் உனக்கு நன்...
02/07/2024

பயாலஜிகல் மஹராஜுக்கு ஜே…

மதம் என்ற பெயரைச் சொல்லி மனிதனை முட்டாள் ஆக்குவது ரொம்பவும் எளிது. அடுத்த ஜென்மத்தில் உனக்கு நன்மை கிடைக்கச் செய்கிறேன் என்று சொன்னால், மனைவியையும் மகளையும் சாமியாருக்கு சந்தோஷமாகக் கூட்டிக் கொடுப்பார்கள். அதை பெருமையாகவும் நினைப்பார்கள் என்பதை பொட்டில் அடித்தாற்போல் காட்டியிருக்கிறது, மஹராஜ் திரைப்படம்.
ஆங்கிலேயர் ஆட்சி காலம் அது. தன்னையே பகவான் கிருஷ்ணன் என்று சொல்கிறான் ஜேஜே எனும் மஹராஜ். அவன் பாதபூஜை என்ற பெயரில் பெண்களின் கற்பை சூறையாடுவதை நீதிமன்றத்தில் ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறான் ஹர்சன். ஆங்கிலேயர் காலம் என்பதால் அது சாத்தியமாகிவிட்டது. இன்றைய காலம் என்றால் மஹராஜிடம் பணம் வாங்கிக்கொண்டு அவரை ஏதேனும் ஒரு தேசத்துக்கு வழியனுப்பி வைத்திருப்பார்கள்.
உண்மை சம்பவத்தை படமாக எடுத்திருக்கிறார்கள். இந்த கதையை சினிமாவாக எடுத்த துணிச்சல் பாராட்டுக்குரியது. அதேநேரம், தடை போட்டுவிடக் கூடாது என்பதற்காக மதத்திற்கு அளவுக்கு மீறி ஜால்ரா போட்டிருக்கிறார்கள். அதாவது மதம் மிகவும் நல்லது, ஒரு சில அயோக்கியர்கள் தான் மதத்தின் பெயரில் சில்மிஷம் செய்கிறார்கள் என்பதை சொல்வதற்கு ரொம்பவே மெனக்கெட்டு படத்தை சொதப்பியிருக்கிறார்கள்.
அமீர்கானின் மகன் நாயகனாக அறிமுகம். புகுந்து விளையாடுவதற்கேற்ற அட்டகாசமான வேடம் என்றாலும் ரொம்பவே சொதப்புகிறார். ஜவ்வாக இழுக்கும் திரைக்கதை. நாடகத்தனமான காட்சி அமைப்பு என்றாலும் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம்.
ஏனென்றால், எச்சில் இலையில் உருள்வது புண்ணியமான செயல் என்று நீதிமன்றங்கள் இப்போதும் முட்டுக் கொடுக்கும் நிலையில், இது போன்ற படங்களே, ‘ஏன்’ என்ற கேள்வியை இளைஞர்களிடம் எழுப்பும்.
முழுமையான விமர்சனம் ஞானகுரு மகிழ்ச்சி இதழில்…

https://gyaanaguru.com/

பணத்தை விட முக்கியமானதுபணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம், அதிகாரம் இருந்தால் எதுவும் செய்ய முடியும் என்றெல்ல...
01/07/2024

பணத்தை விட முக்கியமானது
பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம், அதிகாரம் இருந்தால் எதுவும் செய்ய முடியும் என்றெல்லாம் நினைக்கலாம். ஆனால், உடல் ஆரோக்கியமாக இல்லை என்றால் அப்பல்லோவில் படுத்துக்கொண்டு இட்லி கூட சாப்பிட முடியாது. ஆகவே, மனிதரின் முதல் தேவை உடல் நலன்.
ஆரோக்கியம் அடைவதற்கு வழி காட்டுகிறது, ஞானகுரு யாக்கை.
இம்மாதம் ஞானகுரு யாக்கை இதழில் நிறைய நிறைய சுவாரஸ்யங்கள். காத்திருங்கள்.

https://gyaanaguru.com/

மந்திரச்சொல் நூல் வரிசைவார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும்...
23/06/2024

மந்திரச்சொல் நூல் வரிசை
வார்த்தைகள் ஆயுதம் போன்றவை. அவற்றை பயன்படுத்தும் வகையில் பலன் தருகின்றன. ஒரு வார்த்தை வலிமை தரும். ஒரு வார்த்தை மகிழ்ச்சி தரும். ஒரு வார்த்தை நம்பிக்கை தரும், ஒரு வார்த்தை அழ வைக்கும், ஒரு வார்த்தை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும்.
ஆகவே, வார்த்தைகளை வலிமையாகப் பயன்படுத்தும் வழிகளை ’மந்திரச்சொல்’ புத்தக வரிசையில் சொல்லிவருகிறேன். ஆறாவது புத்தகமான, ‘வாழ்வைப் புரட்டும் மந்திரங்கள்’ புதிய பதிப்பு விரைவில் வெளியாகிறது.
1. மந்திரச்சொல்
2. வெற்றி தரும் மந்திரம்
3. மகிழ்ச்சி தரும் மந்திரம்
4. பணம் தரும் மந்திரம்
5. நிம்மதி தரும் மந்திரம்
6. வாழ்வைப் புரட்டும் மந்திரங்கள்
7. தலையணை மந்திரம்
8. காதலை ஜெயிக்கவைக்கும் மந்திரங்கள்
முதல் நான்கு புத்தகங்கள் விகடன் பிரசுரத்திலும் அடுத்த நான்கு புத்தகங்கள் ஞானகுரு பதிப்பகத்திலும் கிடைக்கிறது.

யாருக்குத் தான் துன்பமும் துயரமும் இல்லை?‘சுகுணாவை பற்றி சில உண்மை சொல்கிறேன். அவர் தன் பாலின ஈர்ப்பாளர். அவருக்கு பெண்க...
17/06/2024

யாருக்குத் தான் துன்பமும் துயரமும் இல்லை?

‘சுகுணாவை பற்றி சில உண்மை சொல்கிறேன். அவர் தன் பாலின ஈர்ப்பாளர். அவருக்கு பெண்களைத் தான் ரொம்பவும் பிடிக்கும். இதை எப்படி உறுதியாகச் சொல்கிறேன் என்றால், என்னையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.
அவருக்கு என்னைப் போன்று நிறைய பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அவர் உங்களுக்கு உண்மையாக இருக்க மாட்டார். உங்களுக்கு குழந்தை பிறக்கவும் வாய்ப்பு இல்லை. நீங்கள் ரொம்பவும் நல்லவராக இருக்கிறீர்கள். அதனால் தான் உண்மையைச் சொல்கிறேன். அவரை விவாகரத்து செய்துவிட்டு ஒரு நல்ல பெண்ணை திருமணம் செய்துகொள்ளுங்கள்…’ – இப்படி ஒரு பெண்ணின் கணவருக்கு போன் வந்தால் அவருடைய வாழ்க்கை என்னாகும்..?

- கவுன்சிலிங் கதை
- மம்முட்டி எனும் தத்துவ ஞானி
- அமிர்தானந்த மயி உண்மை முகம்
- நடுத்தரவர்க்கம் என்பது மாயை
- பேய், பிசாசு மற்றும் கடவுள்
- அடம் பிடிக்கும் குழந்தைக்குத் தீர்வு
- பெண் விரும்பும் பெண்
- இன்னும் நிறைய சுவாரயஸ்களுடன்
- ஜூன் மாத ஞானகுரு மகிழ்ச்சி இதழ்
லிங்க் தொட்டுச் செல்லுங்கள். அட்டையைத் தொட்டதும் இதழ் விரியும்.
படியுங்கள், மகிழ்ச்சியைப் பரப்புங்கள்.



எனக்கு மட்டும் ஏன் அடுக்கடுக்காக சோதனைகள்..?நான் ஆசைப்படுவது மட்டும் ஏன் நடப்பதே இல்லை?என்னைத் தவிர எல்லோரும் மகிழ்ச்சிய...
13/06/2024

எனக்கு மட்டும் ஏன் அடுக்கடுக்காக சோதனைகள்..?
நான் ஆசைப்படுவது மட்டும் ஏன் நடப்பதே இல்லை?
என்னைத் தவிர எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்களே எப்படி?
கடவுள் என்னை மறந்துவிட்டாரா..?
என்றெல்லாம் மனதுக்குள் புலம்பிக்கொண்டு மகிழ்ச்சியை மறந்துவிட்டீர்களா..?
உங்களுக்காக வருகிறது.

ஜூன் ஞானகுரு மகிழ்ச்சி
காத்திருங்கள்.

https://gyaanaguru.com/

பிரபாகர் எனும் போதைஅதென்ன காரணமோ, மதுரையில் பிரபாகர் என்றாலே கலைநயமிக்க ஒரு விஸ்கி பாட்டில் ஞாபகத்துக்கு வரும். அவரை பார...
04/06/2024

பிரபாகர் எனும் போதை

அதென்ன காரணமோ, மதுரையில் பிரபாகர் என்றாலே கலைநயமிக்க ஒரு விஸ்கி பாட்டில் ஞாபகத்துக்கு வரும். அவரை பார்க்கும் முன்னரும் பார்த்த பிறகும் அந்த போதை இருக்கும்.

முத்துராமலிங்கத்தின் நண்பர் என்றாலும் பிரபாகருடன் கல்லூரி காலம் முதல் அவ்வப்போது தொடர்பு. பணி நிறைவு விழாவுக்கான இலக்கணம் சால்வையும் ஜால்ராவுமாக இல்லாமல் கொண்டாட்ட நிகழ்வாக ஏற்பாடு செய்திருந்தது வெகு சிறப்பு.

‘‘தன்னை ஒருவர் கலைஞனாக உணர்ந்தாலே போதும், கலைஞனாக சாதிக்க வேண்டிய அவசியமில்லை’ என்ற பிரபாகரின் ஏற்புரை அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஒரு வரியில் சொல்லிவிட்டது.

கொஞ்சம் சாரல், கொஞ்சம் போதை. நன்றி பிரபாகர்.

கோவீஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசுகிறார் இ...
30/05/2024

கோவீஷீல்டு, கோவாக்சின் போன்ற தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாகப் பேசுகிறார் இதய நோய் மருத்துவர்.

இம்மாதம் வெளியாகும் ஞானகுரு யாக்கை இதழில் இன்னும் நிறைய நிறைய மருத்துவ சுவாரஸ்யங்கள்

மதுரையில் இனிய ஆரம்பம்ஞானகுரு நிறுவனத்தின் புதிய கிளையாக மதுரையில் தடம் பதிக்கிறது, ஞானகுரு நாட்டியாலயா.மதுரை உயர் நீதிம...
25/05/2024

மதுரையில் இனிய ஆரம்பம்

ஞானகுரு நிறுவனத்தின் புதிய கிளையாக மதுரையில் தடம் பதிக்கிறது, ஞானகுரு நாட்டியாலயா.

மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரியும் மகள் நிலா பேரார்வத்துடன் தஞ்சை மற்றும் கலாஷேத்ரா பாணி நடனங்களின் புதிய வடிவத்தை சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் கற்றுத் தருகிறார். மாணவியர் சேர்க்கை நடைபெறுகிறது.

அன்பும் ஆதரவும் தாருங்கள்.

தினமும் ஒரே ஒரு முறை ஒளவையார் கூறியிருக்கும் இந்த 60 கட்டளைகளையும் படித்துப் பார்த்து, அதன்படி நடப்பதாக உறுதி எடுத்துக்க...
24/05/2024

தினமும் ஒரே ஒரு முறை ஒளவையார் கூறியிருக்கும் இந்த 60 கட்டளைகளையும் படித்துப் பார்த்து, அதன்படி நடப்பதாக உறுதி எடுத்துக்கொண்டால் போதும். வாழ்க்கையில் எந்த துன்பமும் வராது, அப்படியே வந்தாலும் அதனை சமாளிக்கும் தெம்பும் திடமும் மனிதருக்குக் கிடைத்துவிடும்.

#

தினமும் ஒரே ஒரு முறை ஒளவையார் கூறியிருக்கும் இந்த 60 கட்டளைகளையும் படித்துப் பார்த்து, அதன்படி நடப்பதாக உறுதி எ....

எந்தவொரு டானிக் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் மூலம் மட்டுமே போதிய அளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிட முடியாது. பெரு...
24/05/2024

எந்தவொரு டானிக் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் மூலம் மட்டுமே போதிய அளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிட முடியாது. பெரும்பாலான வைட்டமின்கள் ஏமாற்றம் தருவதாக இருக்கும் நிலையில், நெல்லி பானத்தில் நிச்சயமாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது.

, #

எந்தவொரு டானிக் மற்றும் வைட்டமின் மாத்திரைகள் மூலம் மட்டுமே போதிய அளவு நோய் எதிர்ப்பு சக்தியைப் பெற்றுவிட மு.....

மனிதர்கள் பசிக்கும்போதும், நோயின் போதும், பாலியல் தேவையின்போதும் மட்டுமே உடலை கண்டுகொள்கிறார்கள். இந்த மூன்றையும் கொடுத்...
24/05/2024

மனிதர்கள் பசிக்கும்போதும், நோயின் போதும், பாலியல் தேவையின்போதும் மட்டுமே உடலை கண்டுகொள்கிறார்கள். இந்த மூன்றையும் கொடுத்துவிட்டால் உடல் அமைதியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல பாண்டியா… உடலுக்குத் தேவை முதலில் மரியாதை.

#

ஆதர்ச தம்பதியர் போன்று வந்து சேர்ந்தனர் பாண்டியனும் – தர்ஷினியும். ஞானகுருவிடம்,. ‘’சாமி, இவர் ரொம்பவும் நல்லவ.....

மதுரையில் கலாஷேத்ரா ஸ்டைல் நடன வகுப்புகள்மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் நிலா, பரதநாட்டியம் மீது பேரார்...
24/05/2024

மதுரையில் கலாஷேத்ரா ஸ்டைல் நடன வகுப்புகள்
மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் நிலா, பரதநாட்டியம் மீது பேரார்வம் கொண்டவர். தஞ்சை ஸ்டைல் மற்றும் கலாஷேத்ரா ஸ்டைல் நடனத்தை முறைப்படி கற்றுத் தேர்ந்தவர். இந்த இரண்டு கலைகளையும் இணைத்து ஞானகுரு நாட்டியாலயா மூலம் மாணவியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்குகிறார். இதற்கு மாணவியர் சேர்க்கை ஆரம்பமாகிறது. ஆன்லைன் வகுப்புகளும் நடத்தப்படுகின்றன.



மதுரை உயர் நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றிவரும் நிலா, பரதநாட்டியம் மீது பேரார்வம் கொண்டவர். தஞ்சை ஸ்டைல் மற்....

வாங்கய்யா வாங்க… குறைகளைச் சொல்லுங்கபொதுநலச் சங்கத்தினரை வரவேற்று அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்துக் கேட்டார் மேயர் ச...
24/05/2024

வாங்கய்யா வாங்க… குறைகளைச் சொல்லுங்க

பொதுநலச் சங்கத்தினரை வரவேற்று அவர்களின் கோரிக்கைகளை காது கொடுத்துக் கேட்டார் மேயர் சைதை துரைசாமி. அவர்கள் கூறும் குறைகளை எந்தெந்த வகையில் எல்லாம் நிவர்த்தி செய்ய முடியும் என்று அவர்களிடமும் ஆலோசனை கேட்பார். அதோடு பொதுநலச் சங்கத்தினர் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கு ஒரு புதிய வழி ஒன்று கண்டுபிடித்தார் சைதை துரைசாமி.

#

கை நிறைய கோரிக்கைகளுடன் வரும் பொதுநல சங்கத்தினரை சமாளித்து அனுப்புவது மாநகராட்சி ஊழியர்களுக்கு ரொம்பவே சிரம....

பரதக் கலையில் ஓங்கி ஒலித்த தமிழ்க் குரல் பரதம் என்பது பரத முனிவருடனும் சமஸ்கிருதத்துடனும் தொடர்புடைய கலை என்று பலரும் கூ...
23/05/2024

பரதக் கலையில் ஓங்கி ஒலித்த தமிழ்க் குரல்
பரதம் என்பது பரத முனிவருடனும் சமஸ்கிருதத்துடனும் தொடர்புடைய கலை என்று பலரும் கூறிய நிலையில், பரத நாட்டியம் என்பது ஆதி கலையான சதிராட்டம் என்பதை பொதுவெளியில் நிரூபித்துக் காட்டியவர் தஞ்சை பால சரஸ்வதி.

#

பரதம் என்பது பரத முனிவருடனும் சமஸ்கிருதத்துடனும் தொடர்புடைய கலை என்று பலரும் கூறிய நிலையில், பரத நாட்டியம் என....

ஆரோக்கியமாக இருப்பவன் என்றேனும் ஒரு நாள் வெற்றியை தொட்டுவிட முடியும். ஆனால், ஆரோக்கியம் இல்லாதவனால் எப்போதும் வெற்றியை ந...
23/05/2024

ஆரோக்கியமாக இருப்பவன் என்றேனும் ஒரு நாள் வெற்றியை தொட்டுவிட முடியும். ஆனால், ஆரோக்கியம் இல்லாதவனால் எப்போதும் வெற்றியை நெருங்கவே முடியாது. அதனால், உன் லட்சியத்தை செதுக்குவது போன்று உடல் ஆரோக்கியத்திலும் கவனம் வை. கார் பழுதானால் மட்டுமே பராமரிப்பது போன்று உடலையும் நோய் வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று அசட்டையாக இராதே… அந்த நோய் பெரும் விபத்தாக அமைந்துவிடலாம்.



மிகவும் பெருமையோடு ராகவனை ஞானகுருவிடம் அறிமுகம் செய்துவைத்தனர். ’’ஒரு பெரிய நிறுவனத்தில் தலைவனாக இருக்கிறான....

மனம் எனும் மாயக்காரன்’’மூளை சொல்வதைக் கேட்பதா அல்லது இதயம் சொல்வதைக் கேட்பதா என்பது குழப்பாக இருக்கிறது என்று ஒரு கேள்வி...
23/05/2024

மனம் எனும் மாயக்காரன்

’’மூளை சொல்வதைக் கேட்பதா அல்லது இதயம் சொல்வதைக் கேட்பதா என்பது குழப்பாக இருக்கிறது என்று ஒரு கேள்வியை எழுப்பினான் மகேந்திரன்.
‘’புரியவில்லையே..?” ஞானகுரு குறும்பாகக் கேட்டார்.
‘’அதாவது எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் இதயம் ஒன்று சொல்கிறது, மூளை வேறு ஒன்றை சொல்கிறது. நான் எதை கேட்பது என்று புரியவே இல்லை…’’
‘’சரி, அதேபோன்று ஏதேனும் ஒரு முடிவு எடுக்கும்போது உன்னுடைய நுரையீரல் என்ன சொல்கிறது, உன் சிறுநீரகம் என்ன சொல்கிறது என்பதையும் கேட்டுப் பாரேன்…’’



’’மூளை சொல்வதைக் கேட்பதா அல்லது இதயம் சொல்வதைக் கேட்பதா என்பது குழப்பாக இருக்கிறது என்று ஒரு கேள்வியை எழுப்ப.....

மாமியார்கள் கொடுமைப்படுத்துகிறார்களே?ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தால், வேலையைக் கற்றுக்கொள்ளும் வரையிலும் ...
23/05/2024

மாமியார்கள் கொடுமைப்படுத்துகிறார்களே?

ஒரு நிறுவனத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தால், வேலையைக் கற்றுக்கொள்ளும் வரையிலும் அனைவரையும் அனுசரித்துத்தான் செல்லவேண்டும். அவ்வப்போது திட்டுவதை தாங்கிக்கொள்ள வேண்டும். யாரோ ஒருவர் திட்டுவதை தாங்கிக்கொள்ளும் பெண்களால், மாமியார் பேசுவதைக்கூட ஏற்க முடிவதில்லை. ஏனென்றால் அவரை வேறு ஒரு நபராக பார்க்கிறாள். அவள் பெற்ற பிள்ளையை தன்னுடையவனாக சொந்தம் கொண்டாடுபவள், மாமியாரை அந்த வட்டத்திற்கு வெளியே நிறுத்துகிறாள். எந்த நேரமும் தன் கணவனை தன்னிடம் இருந்து மாமியார் பிரித்துவிடுவான் என்று பயப்படுகிறாள்.
இதே பயம் மாமியாரிடமும் இருக்கிறது.



நந்தினி திருமணத்திற்கு ஆறு மாதங்கள் இருக்கும்போதே ஒரு பியூட்டி பார்லருக்குப் போய் தன்னுடைய தோல் மற்றும் கூந்...

ஏன் இப்படி செய்தார் சைதை துரைசாமி?பொதுநலச் சங்கத்தினர் நிறைய நேரம் எடுத்துக்கொள்வதை அலுவலர்கள் விரும்ப மாட்டார்கள்.  ஆனா...
23/05/2024

ஏன் இப்படி செய்தார் சைதை துரைசாமி?

பொதுநலச் சங்கத்தினர் நிறைய நேரம் எடுத்துக்கொள்வதை அலுவலர்கள் விரும்ப மாட்டார்கள். ஆனால், இந்த விஷயத்தில் மேயர் சைதை துரைசாமியின் அணுகுமுறை வித்தியாசமாக இருந்தது. ’பொதுநலச் சங்கத்தினர் புகார் மனுக்களுடன் வந்தால் நேரடியாக என்னிடம் அனுப்புங்கள்’ என்று கூறினார்.



நம் வீடு மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என்பதே பெரும்பாலான மக்களின் மனநிலையாக இருக்கிறது. அதனால் தான் குப்....

சுகப்பிரசவத்திற்கு வழி காட்டும் பிசியோதெரபிகர்ப்பிணியின் ஆரோக்கியம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகுந்த கவனத்திற்கும் கவனிப்...
22/05/2024

சுகப்பிரசவத்திற்கு வழி காட்டும் பிசியோதெரபி

கர்ப்பிணியின் ஆரோக்கியம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகுந்த கவனத்திற்கும் கவனிப்புக்கும் உரியதாகும். இந்த தருணத்தில் கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்குப் பிந்தைய காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதில் பிசியோதெரபி ஒரு முக்கிய இடம் பிடிக்கிறது.

#

வலி நீக்கும் மருத்துவமாக புகழ் அடைந்திருக்கும் பிசியோதெரபியினால் கர்ப்ப காலத்திலும் பிரசவத்திற்குப் பின்னர...

மனம் செய்யும் மாயம்ஏதேனும் ஒரு நோய் பற்றி படிக்கும்போது அல்லது ஏதேனும் நோய் குறித்து மருத்துவர்கள் விவரிப்பதை கேட்கும்போ...
22/05/2024

மனம் செய்யும் மாயம்

ஏதேனும் ஒரு நோய் பற்றி படிக்கும்போது அல்லது ஏதேனும் நோய் குறித்து மருத்துவர்கள் விவரிப்பதை கேட்கும்போது, தங்களுக்கும் அந்த நோய் இருப்பதாகத் தோன்றுவதே கற்பனை நோய்.




ஏதேனும் ஒரு நோய் பற்றி படிக்கும்போது அல்லது ஏதேனும் நோய் குறித்து மருத்துவர்கள் விவரிப்பதை கேட்கும்போது, தங்.....

நகம் கடிப்பதற்கு இது தான் காரணமா?பதட்டம், ஆர்வம், குழப்பம் ஏற்படும் சமயத்தில் நகம் கடிக்கும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளத...
22/05/2024

நகம் கடிப்பதற்கு இது தான் காரணமா?

பதட்டம், ஆர்வம், குழப்பம் ஏற்படும் சமயத்தில் நகம் கடிக்கும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. 30 முதல் 60 சதவீதம் குழந்தைகளுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருக்கிறது. இது மரபியல் ரீதியாகவும் ஏற்படக்கூடும். பெற்றோர்களுக்கிடையே நடக்கும் சண்டை, புதிய வகுப்பு சூழ்நிலை, தேர்வு பதற்றம் ஆகியவையும் இந்த பழக்கத்தை ஏற்படுத்தலாம்.



பதட்டம், ஆர்வம், குழப்பம் ஏற்படும் சமயத்தில் நகம் கடிக்கும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. 30 முதல் 60 சதவீதம் குழந.....

எச்சில் இலையில் சட்டம் போட்டவங்க உருள்வார்களா..?எச்சில் இலையில் உருளும் மூடநம்பிக்கை பழக்கத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொட...
22/05/2024

எச்சில் இலையில் சட்டம் போட்டவங்க உருள்வார்களா..?

எச்சில் இலையில் உருளும் மூடநம்பிக்கை பழக்கத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருப்பது தமிழகத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. இச்சடங்கை நடத்த உத்தரவிட்ட நீதிபதியோ அல்லது பார்ப்பனர்களோ எச்சில் இலையில் உருளுவார்களா? அப்படி யாரும் செய்ய மாட்டார்கள். ஆனால், தலித் மற்றும் ஓபிசி இந்துக்கள் மட்டும் எச்சில் இலையில் உருள நீதிமன்றமே அனுமதிப்பது சட்டத்துக்கும் மனித நேயத்துக்கும் எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பு பொங்கியிருக்கிறது.



எச்சில் இலையில் உருளும் மூடநம்பிக்கை பழக்கத்திற்கு நீதிமன்றம் அனுமதி கொடுத்திருப்பது தமிழகத்தில் பெரும் சர.....

மக்கள் குரலில் பேசும் ராகுல் புனே விபத்தையும் அந்த சிறுவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையும் மக்களை கொதிப்படைய வைத்திருக்கி...
22/05/2024

மக்கள் குரலில் பேசும் ராகுல்

புனே விபத்தையும் அந்த சிறுவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையும் மக்களை கொதிப்படைய வைத்திருக்கிறது. இந்த நிலையில் ராகுல் காந்தி, ‘பணக்கார வீட்டுப்பையன் குடித்துவிட்டு போர்ச் வண்டியை ஓட்டி இரு உயிர்களை கொல்கிறான். அவனை விபத்துகள் குறித்து கட்டுரை எழுத சொல்கிறார்கள். இதுதான் தண்டனையா?



மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் குடித்துவிட்டு கார் ஓட்டிய ரியல் எஸ்டேட் தொழிலதிபரின் மகன் குடித்துவிட்ட....

மாரியப்பனின் அசத்தல் ஜம்ப்11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் டி63 பைனலில் 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் ...
22/05/2024

மாரியப்பனின் அசத்தல் ஜம்ப்

11-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் டி63 பைனலில் 1.88 மீட்டருக்கு மேல் உயரம் தாண்டி மாரியப்பன் தங்கம் வென்று புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் இதே சாம்பியன்ஷிப் தொடரில் சரத்குமார் கடந்த 1.83 மீட்டர் உயரமே சிறந்த சாதனையாக இருந்தது.



முதன்முதலாக உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கம் வென்று சாதனை படைத்த...

சதிர் நடனம் பரதக்கலையாக மாறிய வரலாறுதமிழகத்தின் அடையாளமாக இன்று பரதநாட்டியக் கலை புகழ்பெற்று விளங்குகிறது என்றால், அதற்க...
22/05/2024

சதிர் நடனம் பரதக்கலையாக மாறிய வரலாறு

தமிழகத்தின் அடையாளமாக இன்று பரதநாட்டியக் கலை புகழ்பெற்று விளங்குகிறது என்றால், அதற்கு ருக்மணி தேவி அருண்டேலுக்கு கலையுலகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது. அவமானம் என்ற சாக்கடையில் இருந்தும் புதைந்து கிடந்த சாம்பலில் இருந்து பரதநாட்டியக் கலையை மீட்டெடுத்த கலைமகள் அவர்.



தமிழகத்தின் அடையாளமாக இன்று பரதநாட்டியக் கலை புகழ்பெற்று விளங்குகிறது என்றால், அதற்கு ருக்மணி தேவி அருண்டேலு...

நேரம் தவறாமைக்கு எடுத்துக்காட்டான அரசியல்வாதிபொதுவாக தலைவர்கள் ஆய்வுப் பணி செய்யவேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அலுவலர்களை...
22/05/2024

நேரம் தவறாமைக்கு எடுத்துக்காட்டான அரசியல்வாதி

பொதுவாக தலைவர்கள் ஆய்வுப் பணி செய்யவேண்டிய இடத்தைக் குறிப்பிட்டு அலுவலர்களையும் ஊழியர்களையும் வரச்சொல்வார்கள். அதிகாரிகள் அனைவரும் வந்துவிட்ட தகவல் அனுப்பிய பிறகும் தலைவர்கள் 2 அல்லது 3 மணி நேரம் கூட தாமதமாக வருவதே நடக்கும். இதிலும் சைதை துரைசாமி எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தார்.
அதிகாலை ஆய்வுக்கு நேரம் குறித்தால், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னரே ஆய்வு செய்ய வேண்டிய இடத்துக்கு சைதை துரைசாமி வந்துவிடுவார். நேரம் தவறாமையில் சைதை துரைசாமியை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை எனும் அளவுக்கு சுறுசுறுப்பாக இருந்தார். குறிப்பிட்ட நேரத்துக்கு வந்து கடகடவென ஆய்வுகள் மேற்கொண்டு, என்ன செய்யவேண்டும் என்று பொதுமக்களிடம் கலந்துரையாடி, அதிகாரிகளிடம் பேசி, காரியங்களை விறுவிறுவென முடித்துவிடுவார்.



அதிகாலை 6 மணிக்கு ஆய்வுக்கு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மேயர் சைதை துரைசாமி தகவல் அனுப்பியதும், தங்கள் வே.....

The Physical Benefits of BharatanatyamBharatanatyam is a dance form that involves intense physical activity, promoting d...
21/05/2024

The Physical Benefits of Bharatanatyam

Bharatanatyam is a dance form that involves intense physical activity, promoting discipline and perfect posture. This dance is often described as a form of artistic yoga that reveals spiritual beauty through physical movements. The dancer and the dance become one, transcending the boundaries of time and space.

# ,

Bharatanatyam is a classical dance form that intricately mirrors the movements found in nature. It encompasses the swaying of trees,

Address


Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Times Tamil News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Opening Hours
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share

TIMES தமிழ்

உண்மை செய்திகள் சுடச்சுட இங்கு கிடைக்கும்…