Politicslk Tamil

  • Home
  • Politicslk Tamil

Politicslk Tamil குடிமக்கள் கல்விக்கான தளம் https://linktr.ee/politicslk

வாக்காளர் கல்விக்கான தவல்களை வழங்கும் ஊடகமாக காணப்படுகிறது.

நாம் அடைய நினைப்பதை இங்கே பார்வையிடலாம் .

- அதிகமான குடிமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்
- அதிகமான குடிமக்கள் பங்கேற்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்
- ஜனநாயக மதிப்புகள் மற்றும் கொள்கைகளை வலுப்படுத்த விரும்புகிறோம்
- நாங்கள் அரசியல் கலாச்சாரத்திற்கு சவால் விட விரும்புகிறோம்
- தகவலறிந்த முடிவெடுப்பதை

இயக்க விரும்புகிறோம்

இதன் மூலம் விழிப்புணர்வு மற்றும் உரையாடல்களை உருவாக்குகிறோம்; எளிதில் புரிந்துகொள்ளக்ககூடியவாறு, அரசியல் தொடர்புடைய அனைத்து விடயங்களையும் தருகிறோம்.

செப்டம்பர் 2020 இல் நாங்கள் தொடங்கப்பட்டதிலிருந்து, நாங்கள் 20K + சமூகத்தை சேகரித்துள்ளோம். இப்போது நாங்கள் செய்வதை பல மொழிகள், சேனல்கள் மற்றும் வடிவங்களில் விரிவுபடுத்த நம்புகிறோம்.

நீங்கள் இப்போது எங்கள் அங்கத்துவத்தி subscribe செய்து எங்கள் குழுவில் இணைவதன் மூலம் எங்கள் பதிவுகளில் நீங்கள் ஒரு பகுதியாக இருக்கலாம். உங்களுக்காக பிரத்யேகமான சில அற்புதமான சேவைகளை வழங்க தயாராக உள்ளோம் .

👉என்னதான் இதுபோன்ற பொறிமுறைகள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு நல்ல உத்தியாக தென்பட்டாலும் நிர்வாக கட்டமைப்பின் பார்வை...
04/01/2024

👉என்னதான் இதுபோன்ற பொறிமுறைகள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கு நல்ல உத்தியாக தென்பட்டாலும் நிர்வாக கட்டமைப்பின் பார்வையிலிருந்து நோக்குகையில் இந்த நடவடிக்கை பொருளாதார ரீதியாக சரியான முடிவாகவும் இருக்க வேண்டும். ஏற்கனவே தொடுக்கப்பட்ட கேள்விக்கணைகளுக்கு இன்னமும் சரியான மறுமொழி வழங்காது இருக்கும் இவ்வேளையில் இந்த மாதிரியான முடிவுகளுக்கான காரணத்தை நியாயமாக நிறுவவேண்டியதன் அவசியம் எழுந்துள்ளது.

🔴இந்த வகையில் பொறுப்புக்கூறும் சாத்தியப்பாடு அதிகம் அத்துடன் நாம் ஒப்புக்கொண்ட கொள்கைகள் மீதான ஒழுங்கை பேணமுடியும்.

🔴 அரசின் வருவாயை பெருக்கும் போட்டியில், RASED (Revenue Administration System for the Excise Department) முக்கிய அங்கமாக ...
03/01/2024

🔴 அரசின் வருவாயை பெருக்கும் போட்டியில், RASED (Revenue Administration System for the Excise Department) முக்கிய அங்கமாக இருக்கும்.

🔴ஏப்ரல் 2022 இல் COPA விசாரணையில் குறிப்பிட்டுள்ளபடி, பாதுகாப்பான ஸ்டிக்கர் மேலாண்மை அமைப்பு 2021 ஆம் ஆண்டில் ஒரு காலாண்டில் துறையின் வருவாயை 17% அதிகரிக்க உதவியது. மேலும் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் பரந்த நோக்கம் கொண்ட அமைப்புக்கு மதுவரி திணைக்களத்தில் வருவாய் சேகரிப்பின் வினைத்திறன் அதிக வாய்ப்புள்ளது.🤞 எனவே 2024 ஆம் ஆண்டில் RASED வந்ததும் நேரடி வரிகளை திறமையாக வசூலிக்க உதவும் என்று நம்புகிறோம், இது பொதுமக்களின் மீதான மறைமுக வரிகளின் சுமையைக் குறைக்க அரசாங்கத்தை அனுமதிக்கும்.

💪 'யுக்திய' (நடவடிக்கை நீதி) என்பது நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்காக பொது ...
03/01/2024

💪 'யுக்திய' (நடவடிக்கை நீதி) என்பது நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடுவதற்காக பொது பாதுகாப்பு அமைச்சர் திரன் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையிலான பொலிஸ் நடவடிக்கையாகும். சிலர் முன்னெடுப்பைக்கொண்டாடினாலும், பல காரணங்களுக்காக இந்த செயற்பாட்டின் மீது சந்தேகமும் உள்ளது.

⚖️ சட்ட அமுலாக்கத்தில் நிலைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) இந்த நடவடிக்கை குறித்து கவலை தெரிவித்துள்ளது. BASL இன் தலைவர், அண்மையில் பதில் பொலிஸ் மா அதிபரின் நியமனத்துடன் இந்த கைதுகள் எவ்வாறு ஒத்துப்போகின்றன என்பதை சுட்டிக்காட்டினார். இந்த தகவல் ஏற்கனவே அதிகாரிகளிடம் இருந்தால் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பினார்.

🧐 இந்தச் சூழலில், சிலர் 'யுக்திய' திட்டத்தை ஒரு வெற்றி அல்லது நாடகம் என்று முத்திரை குத்தப்படுவதற்கு இடையே ஒரு நல்ல பாதையில் செல்லும் ஒரு நடவடிக்கையாகக் கருதலாம், இந்த நடவடிக்கை போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்தில் நீதியின் மீதான அதன் உண்மையான தாக்கம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

ஆனால், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

🎊 'போனஸ்' அதாவது நன்றாக பணியாற்றும் ஒருவருக்கு வெகுமதி அளிக்கும் விதமாக அவரது சம்பளத்துக்கும் மேலதிகமாக வழங்கப்படும் ஒரு...
02/01/2024

🎊 'போனஸ்' அதாவது நன்றாக பணியாற்றும் ஒருவருக்கு வெகுமதி அளிக்கும் விதமாக அவரது சம்பளத்துக்கும் மேலதிகமாக வழங்கப்படும் ஒரு தொகை என்று பொருள்.

அந்த வரைவிலக்கணத்தின்படி பார்த்தால், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் நிர்வாகத்தினர் தமது நிறுவனங்களை ஒரு சரியான பாதையில் வழிநடத்துவதற்கு உந்துதலாக இந்த சுற்றறிக்கை இருக்கும். 🧐

இது குறித்து உங்களது கருத்துக்கள் என்ன? 🤔

🩺🥼 குறிப்பாக இலங்கையின் கிராமப்புறங்கள் மற்றும் பொது வைத்தியசாலைகள் தற்போது மருத்துவர்களின் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள...
01/01/2024

🩺🥼 குறிப்பாக இலங்கையின் கிராமப்புறங்கள் மற்றும் பொது வைத்தியசாலைகள் தற்போது மருத்துவர்களின் பற்றாக்குறையை எதிர்நோக்கியுள்ளன.

✈️ சிறந்த பணியிட நிலைமைகள், அதிக சம்பளம் மற்றும் அதிக தொழில் வாய்ப்புகளை தேடி பல மருத்துவர்கள் இடம்பெயர்வதால், பொது மக்களோடு சேர்ந்து இலங்கை சுகாதார அமைப்பும் சிரமத்துக்கு முகம் கொடுக்கவேண்டியுள்ளது.

‼️ சுகாதாரப் பணிகளில் உள்ள வெற்றிடங்கள் மற்றும் நிபுணத்துவ இழப்பைத் தடுக்கும் வகையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும், மருத்துவப் பணியாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.

💵⏩ ‘அஸ்வெசும’ நலத்திட்டத்திற்காக இதுவரை ஏறத்தாழ ரூ. 52 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.6 பரிமாணங்களில் 22 குறிகாட்டிகள் மூல...
01/01/2024

💵⏩ ‘அஸ்வெசும’ நலத்திட்டத்திற்காக இதுவரை ஏறத்தாழ ரூ. 52 பில்லியன் செலவிடப்பட்டுள்ளது.

6 பரிமாணங்களில் 22 குறிகாட்டிகள் மூலம் குடும்பங்களை ஆய்வு செய்த நீண்ட கணக்கெடுப்பு செயன்முறையைத் தொடர்ந்து 4⃣ பயனாளிகள் பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் கல்வி, சுகாதாரம் மற்றும் வீட்டுவசதி ஆகியவை அடங்கும், ஆனால் அவற்றுக்குள் மட்டுப்படுத்தப்படவில்லை. 🏫🏥🏠

இந்த 4 வகைகளும் பல்வகை-இழப்பு புள்ளி (Multi-Deprivation Score - MDS) அடிப்படையில் வரையறுக்கப்பட்டுள்ளன. இது அடிப்படையில் இலங்கையின் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தால் (DCS) அரசாங்கத்தின் முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, நலன்புரி பயனாளிகளை இலக்காகக் கொண்ட ஒரு வழிமுறையாகும்.

🤔 இரண்டு உத்திகளின் கதையா? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வரி மாற்றமானது மனமாற்றமா அல்லது வேறுனும் அரசியல் நடவடிக்...
31/12/2023

🤔 இரண்டு உத்திகளின் கதையா? முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வரி மாற்றமானது மனமாற்றமா அல்லது வேறுனும் அரசியல் நடவடிக்கையா?

💬 IMF வாரியத்தின் சமீபத்திய ஒப்புதல் மற்றும் 2வது தவணை நிதி வெளியீடு இலங்கைக்கு எவ்வாறு உதவுகிறது? இன்று நாம் இருக்கும் ...
30/12/2023

💬 IMF வாரியத்தின் சமீபத்திய ஒப்புதல் மற்றும் 2வது தவணை நிதி வெளியீடு இலங்கைக்கு எவ்வாறு உதவுகிறது? இன்று நாம் இருக்கும் நிலைக்கு நம்மை கொண்டு வந்த அதே பொருளாதார கட்டமைப்பிற்கு நாம் தொடர்ந்து சென்றால் என்ன நடக்கும்?

Marianne David தொகுத்து வழங்கிய The Morning நேர்காணலில் Frontier Research இன் Chayu எடுக்கும் 2 கேள்விகள் இவை.

🔗முழு நேர்காணலுக்கான கருத்துகளில் இணைப்பு.

🧑‍⚖️⚖️கடந்த 2011 ஆம் ஆண்டு காவலில் இருந்த சந்தேக நபரின் அடிப்படை உரிமைகளை மீறியதாக 4 மீது உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது...
29/12/2023

🧑‍⚖️⚖️கடந்த 2011 ஆம் ஆண்டு காவலில் இருந்த சந்தேக நபரின் அடிப்படை உரிமைகளை மீறியதாக 4 மீது உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது. மேலும் என்ன தெரியுமா? அவர்களில் எமது தற்போதைய பொலிஸ் மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனும் ஒருவர் ஆவார்.

இந்த பின்னணியில், சட்டத்தரணிகள் கூட்டமைப்பு, சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் அரசியல் கட்சிகள் உட்பட பல்வேறு பங்குதாரர்கள் கவலைகளை எழுப்பியதுடன், ஜனாதிபதியை தனது அதிகாரத்தை இந்த விடயத்தில் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.
தென்னகோனை பதவியில் இருந்து நீக்குவதை நாம் எவ்வளவு காலம் தாமதப்படுத்துகிறோமோ, அந்தளவுக்கு, என்று சட்டத்தரணிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

🤔 ஜனாதிபதி அவர்களே, இவ்விஷயத்தில் உங்கள் மௌனம், பொது அதிகாரிகள் வைத்திருக்கும் மக்களின் நம்பிக்கையை கேலிக்கூத்தாக்குவதாக இருக்காதா? எனவே உங்கள் நிலைப்பாட்டை நீங்கள் தெளிவுபடுத்த வேண்டிய நேரம் இதுவல்லவா?

⏳இலங்கையில் தற்போது விவாகரத்து நடவடிக்கைகள் முடிவடைவதற்கு எடுக்கும் கால அளவைக் கருத்தில் கொண்டு, இது சரியான திசையில் ஒரு...
28/12/2023

⏳இலங்கையில் தற்போது விவாகரத்து நடவடிக்கைகள் முடிவடைவதற்கு எடுக்கும் கால அளவைக் கருத்தில் கொண்டு, இது சரியான திசையில் ஒரு படியாகும்.

➡️வரவிருக்கும் மாதத்தில், பாராளுமன்றம் 3 வரைவு மசோதாக்களைப் பெற உள்ளது; திருமண காரணங்கள் சட்டம், வெளிநாட்டு விவாகரத்து தீர்ப்புகளை அங்கீகரிக்கும் சட்டம் மற்றும் சிவில் நடைமுறை சட்டத்தில் ஒரு திருத்தம். இந்தச் சட்டத் துண்டுகள் விவாகரத்து நடவடிக்கைகளுக்கு தற்போதுள்ள காலாவதியான தடைகளை உடைத்து, தேவையான சில சீர்திருத்தங்களைக் கொண்டுவரும்.

வரைவு சட்டத்தில் முன்மொழியப்பட்ட முக்கிய சீர்திருத்தங்களைப் படிக்க ஸ்வைப் செய்யவும். 👉

⏪ 2023ன் கேலிச்சித்திரங்கள் குறித்து ஒரு மறுபார்வை!2023ம் ஆண்டில் பல சிறப்பான தரமான சம்பவங்கள் நடந்தேறின. அவற்றின்மீது க...
28/12/2023

⏪ 2023ன் கேலிச்சித்திரங்கள் குறித்து ஒரு மறுபார்வை!

2023ம் ஆண்டில் பல சிறப்பான தரமான சம்பவங்கள் நடந்தேறின. அவற்றின்மீது கேலிச்சித்திர கலைஞர்கள் தமது கைவரிசையை காட்டியிருந்தனர். சிரிப்புக்கு பஞ்சமில்லை. அவையெல்லாம் உங்களுக்காக!

நகைச்சுவையாக நாட்டு நடப்புகளை பதிவு செய்த அவர்களுக்கு எம் பாராட்டுக்கள். வரும் ஆண்டும் இதுபோன்ற பல சிறப்பான தரமான செய்கைகளுடன் சந்திப்போம்! 🎉🤪

😣 புவனேகபாகு மன்னரின் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'ராஜ்யசபா மண்டபம்' (அரச சபை மண்டபம்)  2020 வரை ...
27/12/2023

😣 புவனேகபாகு மன்னரின் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 'ராஜ்யசபா மண்டபம்' (அரச சபை மண்டபம்) 2020 வரை இருந்தது. இறுதியாக, இதற்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தியுள்ளோம். 👏

🧑‍⚖️ குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண நகரின் முதல் பிரஜை என்ற வகையில் மிகவும் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டுள்ளதாக உயர் நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பை அறிவிக்கும் போதே சுட்டிக்காட்டியுள்ளார்.

🔺அந்தஸ்து இல்லாமல் யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை இந்த தீர்ப்பு வலுவான நினைவூட்டலாக செயல்படுகிறது. மேலும், பொறுப்புக்கூறல் தேவை, அரசாங்கப் பதவிகளில் இருப்பவர்கள் எல்லோரையும் போலவே அதே தரத்தில் நடத்தப்படுவதை உறுதி செய்வதும் இதன் காரணமாக செய்யப்பட்டது.

🔺இந்த தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடத்தை இடித்ததற்காக விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் இழப்பீடு, இது போன்ற செயல்களின் விளைவுகள் பற்றிய தெளிவான செய்தியை அனுப்புகிறது 🎬

😲 தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டளவில், இலங்கையில் 64.4% செல்வம் 10% மக்களிடம் இருந்தது. "அதிகமான செல்வ ஏற்றத்தாழ்வுகள்" உள்...
25/12/2023

😲 தரவுகளின்படி, 2022 ஆம் ஆண்டளவில், இலங்கையில் 64.4% செல்வம் 10% மக்களிடம் இருந்தது. "அதிகமான செல்வ ஏற்றத்தாழ்வுகள்" உள்ளதாகக் கருதப்படும் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியப் பிராந்திய நாடுகளில் இலங்கையும் இருப்பதில் ஆச்சரியமில்லை.

📑 ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டத்தினால் (UNDP) அண்மையில் வெளியிடப்பட்ட பிராந்தியத்தின் மனித அபிவிருத்தி இது தெரியவந்துள்ளது.

🌐உலகமயமாக்கல், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், ஊழல், வரிக் கொள்கைகள், நிர்வாகம் மற்றும் பயனுள்ள சமூகப் பாதுகாப்பு ஆகியவை உயர் செல்வச் சமத்துவமின்மைக்கான சில அடிப்படைக் காரணங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

🙄 நாடாளுமன்றத்தில் எந்நேரமும் ஏதோ நடப்பதை நாம் பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, இது பொதுப் பேச்சிலும், சில சமயங்களில் மிகவ...
24/12/2023

🙄 நாடாளுமன்றத்தில் எந்நேரமும் ஏதோ நடப்பதை நாம் பார்க்கிறோம். துரதிர்ஷ்டவசமாக, இது பொதுப் பேச்சிலும், சில சமயங்களில் மிகவும் கல்வியறிவு பெற்றவர்களிடையே கூட பரவுவதைக் காண்கிறோம்.

🟡அரசியல் மற்றும் ஆளுகை உரையாடல்களில் ஈடுபடும்போதும், பங்கேற்கும்போதும் இவற்றை நாம் கவனத்தில் கொள்வது முக்கியம் ஆகும்.

தொடர்ந்து 6 காலாண்டுகளுக்குப் பிறகு... GDP அடிப்படையில் நாம் எங்கே நிற்கிறோம்? 🧐உண்மையில், இதைப் பற்றி உங்கள் எண்ணங்கள் ...
24/12/2023

தொடர்ந்து 6 காலாண்டுகளுக்குப் பிறகு... GDP அடிப்படையில் நாம் எங்கே நிற்கிறோம்? 🧐

உண்மையில், இதைப் பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன? 6 காலாண்டுகளுக்கு முன்புடன் (2021 Q4 இல்) ஒப்பிடும்போது, இப்போது பொருளாதாரத்தில் மாற்றத்தை உணர்கிறீர்களா? அல்லது மோசமாகிவிட்டதா? அல்லது இன்னும் அப்படியே இருக்கிறதா?

👉 இலங்கையின் பொருளாதாரம் பற்றிய IMF இன் கணிப்பு 3% சரிவென கூறப்பட்டது நினைவிருக்கிறதா? அது இப்போது 3.6% ஆக திருத்தப்பட்ட...
23/12/2023

👉 இலங்கையின் பொருளாதாரம் பற்றிய IMF இன் கணிப்பு 3% சரிவென கூறப்பட்டது நினைவிருக்கிறதா? அது இப்போது 3.6% ஆக திருத்தப்பட்டுள்ளது.

🤞இந்த கீழ்நோக்கிய கணிப்பு திருத்தத்திற்கான காரணம்? கடன் மற்றும் நிதிக் கட்டுப்பாடுகளை வழங்க வங்கிகளுக்கு வரையறுக்கப்பட்ட தகவு ஆகும்.

👉இருப்பினும் நல்ல செய்தி என்னவென்றால், அடுத்த ஆண்டு முதல் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 2024 இல் 1.8% வளர்ச்சி மற்றும் அடுத்த 4-5 ஆண்டுகளில் சராசரியாக 3.0% வளர்ச்சியைப் பேணும். இதற்கு "இறக்குமதி கட்டுப்பாடுகளின் தளர்வு" காரணமாகும்.

இதைத் திருத்துவதற்கு நாம் தவறான எதையும் செய்ய மாட்டோம் என்று நம்புவோம்! 😅

💰 கடந்த சில வாரங்களாக நாட்டின் கவனம் வரவு செலவுத் திட்ட விவாதங்களின் மீது இருந்தது.அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட வருவ...
22/12/2023

💰 கடந்த சில வாரங்களாக நாட்டின் கவனம் வரவு செலவுத் திட்ட விவாதங்களின் மீது இருந்தது.

அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட வருவாய்கள் முக்கியமானவை என்றாலும், பொதுமக்களின் அக்கறை பெரும்பாலும் செலவினப் பக்கத்திலே உள்ளது, ஏனெனில் பொதுமக்கள் சார்ந்து இருக்கும் அரசாங்கம் வழங்கும் சேவைகள் அல்லது உற்பத்திகளுக்கு இதன்மூலமே நிதி பெறப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் சில முக்கியமான துறைகளுக்கு அரசாங்கம் எவ்வளவு செலவழிக்க திட்டமிட்டுள்ளது.

🔎 Pandora "File" பெட்டி மீண்டும் திறக்கப்பட்டு மற்றொரு பெயர் வரையப்பட்டுள்ளது. இம்முறை பாராளுமன்ற உறுப்பினரான  திரான் அல...
22/12/2023

🔎 Pandora "File" பெட்டி மீண்டும் திறக்கப்பட்டு மற்றொரு பெயர் வரையப்பட்டுள்ளது. இம்முறை பாராளுமன்ற உறுப்பினரான திரான் அலஸின்.

🔴 சர்வதேச புலனாய்வுப் பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (ICIJ) நடத்திய விசாரணையில், பிரித்தானிய விர்ஜின் தீவுகளில் இணைக்கப்பட்ட இரண்டு சொத்துத் துறை தொடர்பான நிறுவனங்கள் அமைச்சருக்குச் சொந்தமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் Brompton Properties Ltd மற்றும் Banham Ventures Ltd ஆகும்

🔴இந்த நிறுவனங்கள் 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் இரண்டு சொத்துக்களை வாங்கி வைத்துள்ளன, அவற்றில் ஒன்று 2006 ஆம் ஆண்டில் சுமார் USD 960,000 க்கு வாங்கப்பட்டுள்ளது (அப்போது சுமார் ரூ. 99,727,680) இவை இங்கிலாந்தில் உள்ள மற்ற வணிக நடவடிக்கைகளுக்கு கூடுதலாக உள்ளன மற்றும் Gateway Agency Services (UK) Ltd போன்ற அவரது குடும்பம் கல்வி நோக்கங்களைத் தவிர "Real Estate " தொடர்பான வணிக நடவடிக்கைகளையும் குறிப்பிட்டுள்ளது.

💬 பதில்களை கேட்டு எம்.பி.யிடம் கேள்வி எழுப்பிய போது, Papers இல் தனது பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற கேள்வியுடன் பதில் அளித்துள்ளார். இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களுக்கான நிதி ஆதாரங்கள் இருந்த போதிலும், டிரன் அலஸ் அமைச்சராக பதவியேற்ற போது எப்போதாவது இவ்வாறான கொடுக்கல் வாங்கல்களை வெளிப்படுத்தியுள்ளாரா என்பது கேள்விக்குறியே?

🤨எல்லாவற்றுக்கும் மேலாக, வெளிப்படைத் தன்மையுடன் இருப்பது ஒரு பொது ஊழியரின் முக்கியமான பண்பு, மேலும் இந்த விவகாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கு எம்.பி.யால் பதிலளிக்க முடியாவிட்டால், அது எல்லாவற்றின் நெறிமுறைகள், ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புக்கூறல் பற்றிய கூடுதல் கேள்விகளுக்கு நம்மை இட்டுச் செல்லும்!

✅ ஒரு புதிய கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, ஆம் இது IMFன் இரண்டாவது தவணைக்கு மேலதிகமான ஒன்றாகும்!↪️ ஆசிய அபிவிருத்...
21/12/2023

✅ ஒரு புதிய கடனுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது, ஆம் இது IMFன் இரண்டாவது தவணைக்கு மேலதிகமான ஒன்றாகும்!
↪️ ஆசிய அபிவிருத்தி வங்கியே (ADB) இலங்கைக்கான இந்த 200 மில்லியன் அமெரிக்க டொலர் “சலுகைக் கடனை” அங்கீகரித்துள்ளது.
↪️ இது "ஐந்தாண்டு கால அவகாசம் உட்பட 25 ஆண்டுகள் திருப்பிச் செலுத்தும் காலத்துடன் 2% வட்டி விகிதத்தில்" வழங்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

🤝இந்தக் கடன் பல சிறிய அளவிலான கடன்களுக்குப் பிறகு மற்றும் வெளிநாட்டுக் கடன் உள்ளிட்ட கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி முடிவை இலங்கை எட்டியிருக்கும் முக்கியமான தருணத்தில் வருகிறது.

💰புதிய ADB நிதித் திட்டம், தற்போது நடைபெற்று வரும் IMF திட்டத்தை நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி?IMFன் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் 4வது நோக்கத்தின் கீழ் கவனம் செலுத்தும் "நாட்டின் வங்கித் துறையின் ஸ்திரத்தன்மை மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்த" முழு கடன் நிதியும் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வளர்ச்சிக் கடன் திட்டத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன.
1⃣ "2023 இல் செயல்படுத்தப்பட்ட நிலைப்படுத்தல் மற்றும் நெருக்கடி மேலாண்மை நடவடிக்கைகளுக்கு" குறுகிய கால உதவியில் கவனம் செலுத்துகிறது.

2⃣ நாட்டின் நிதித் துறை தொடர்பான நீண்டகால சீர்திருத்தங்களைத் திட்டமிடுவதற்குப் பயன்படுத்தப்படும், மேலும் அதன் செயற்படுத்தல் 2024 இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ADB கடன் திட்ட பரமானங்களின் விளைவாக நாட்டின் நிதித்துறையில் ஏற்படவுள்ள முன்னேற்றத்தைக் காண ஆவலுடன் காத்திருங்கள்! 🤞

🗃️ ஏற்றுமதி மற்றும் இறக்குமதியிலிருந்து சுற்றுலா வருமானம் வரை, 2023 அக்டோபர் மாதத்திற்கான இலங்கையின் வெளிநாட்டுத் துறையி...
21/12/2023

🗃️ ஏற்றுமதி மற்றும் இறக்குமதியிலிருந்து சுற்றுலா வருமானம் வரை, 2023 அக்டோபர் மாதத்திற்கான இலங்கையின் வெளிநாட்டுத் துறையின் செயல்திறனை ஆராய்வதில் எங்களுடன் சேருங்கள்.

💰💊💉 பொது நிதி; உங்களுடையது மற்றும் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ரூ. 349 மில்லியன், கடந்த ஆண்டு மருந்துகள் மற்றும் ம...
20/12/2023

💰💊💉 பொது நிதி; உங்களுடையது மற்றும் நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், ரூ. 349 மில்லியன், கடந்த ஆண்டு மருந்துகள் மற்றும் மருத்துவப் பொருட்கள் தரக் குறைபாடு காரணமாக திரும்பப் பெறப்பட்டதால் வீணடிக்கப்பட்டுள்ளது.

😳 அதிர்ச்சியூட்டும் வகையில் இதே காரணத்திற்காக ரூ. 32 மில்லியன் மதிப்புள்ள மருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டன. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் (NMRA) கீழ் இயங்கும் தேசிய மருந்து தர உறுதி ஆய்வகம் போதுமான வசதிகள் இல்லாததால், மருத்துவமனைகளை அடைவதற்கு முன்பே மருந்துகளின் தரத்தை உறுதி செய்யத் தவறியது, இதன் விளைவாக நோயாளிகள் தரமற்ற மருந்துகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

❗️இத்தகைய பாரிய விரயம், பொது நிதியை பொறுப்புடன் கையாள வேண்டிய அவசரத் தேவையையும் அதைவிட முக்கியமாக மருந்து போன்ற பொதுப் பொருட்களைப் பொறுப்புடன் கையாள்வதையும் எடுத்துக்காட்டுகிறது. பொது நிதியை மிகவும் பொறுப்புடன் நிர்வகிப்பது முக்கியம் அல்லவா, குறிப்பாக பொருளாதார நெருக்கடியில் இருக்கும் ஒரு நாட்டிற்கு?

🎅 "IMFகுழு விஜயம்”! செப்டம்பர் 2023ல் குறிப்பிட்டு கூறியவற்றை திருப்திகரமான அளவில் பூர்த்தி செய்த நிலையில், IMF வாரியம் ...
20/12/2023

🎅 "IMFகுழு விஜயம்”! செப்டம்பர் 2023ல் குறிப்பிட்டு கூறியவற்றை திருப்திகரமான அளவில் பூர்த்தி செய்த நிலையில், IMF வாரியம் முதல் மதிப்பாய்வை முடித்துள்ளது. இது இப்போது இலங்கைக்கான 2வது தவணை அதாவது 337 மில்லியன் அமெரிக்க டொலர் தொகையான IMF திட்டத்தின் தவணை கிடைக்கும் என்பது இதன் பொருள்.

🤝📄 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் ஊழியர் மட்ட உடன்பாடு எட்டப்பட்ட போதிலும், பிரதான கடன் கொடுனர்களுடன் இலங்கையின் கலந்துரையாடல்கள் குறித்த தற்போதைய நிலவர அறிவிப்பு பிந்தியதால்இந்த இறுதி அனுமதி தாமதமானது.
"இலங்கையின் கடனை நிலைபேற்றுத்தன்மையை நோக்கிய பாதையில் செலுத்துவதை" இலக்காகக் கொண்டு அரசாங்கம் முன்வைத்த திட்டங்களுக்கு சீனாவும் பாரிஸ் கிளப்பும் கொள்கையளவில் இணங்கியதால் இந்த நிபந்தனையும் ஒக்டோபர் முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் நிறைவேற்றப்பட்டது.

👍 வரி வருவாய் இலக்கைத் தவிர, திட்டத்தின் இலக்குகளுக்கு ஏற்பஒட்டுமொத்த பொருளாதாரத்தின் திருப்திகரமான அளவிலான செயல்திறனை IMF கருத்து மேலும் வலியுறுத்துகிறது. பட்ஜெட் 2024 மூலம் இத்தகைய கவலைகளை நிவர்த்தி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டு, நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு அதே செயல்முறையைப் பின்பற்றுவதும் பராமரிப்பதும் முக்கியம்.

🤞இது வரவிருக்கும் மதிப்பாய்வுகளை நிறைவு செய்வதற்கும், ஒட்டுமொத்தமாக சிறந்த மற்றும் நிலையான பொருளாதார நிலைமையுடன் ஆண்டு முழுவதும் christmas கொண்டாடுவதற்கும் இது உதவும்.

💻  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையை முன்னுதாரணமாக கொண்டு உலகெங்கும...
17/12/2023

💻 அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையை முன்னுதாரணமாக கொண்டு உலகெங்கும் உள்ள ஏனைய நாடுகள் நீதித்துறையின் நடத்தை விதிகளை எப்படி பேணுகின்றன என்பதை பார்த்தோம்.

இதோ ஓர் சுருக்கப்பார்வை. 👉

⚠️ குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை ஞாபகம் இருக்கிறதா? சட்டமா அதிபர...
17/12/2023

⚠️ குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பிரதானி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகரவை ஞாபகம் இருக்கிறதா? சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் சமர்ப்பித்ததற்கமைய அவரது உயிருக்கு ஆபத்து இருக்கலாம்!

அவரது உயிருக்கு ஆபத்து வருவது இது ஒன்றும் முதல் முறையல்ல. ஏற்கனவே 2022 இல் இதுபோன்ற அறிக்கைகள் பதிவாகியுள்ளன.

👉 உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகள் மற்றும் சில நாடுகளின் உளவுத்துறையினருடன் இவரது பதவியின் காரணமாக நேரடி தொடர்புகளை மேற்றக்கொள்ள வேண்டியதன் காரணமாக இது நேர்ந்துள்ளது. இதுபோல வேறு சில விசாரணைகளை முன்னெடுத்தும்/ அங்கம் வகித்தும் உள்ளார்.

தொடரும் நிலையை கருத்திற்கொண்டு பொலிஸ்மா அதிபர் உரிய நடவடிக்கைகளை உடன் நடைமுறைப்படுத்துவார் என நம்புவோம்.

🟥 “என்னதான் 10% மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்தாலும் வெறுமனே 1% இனால் மாத்திரமே முழுமைய...
16/12/2023

🟥 “என்னதான் 10% மின் பாவனையாளர்களுக்கு சிவப்பு அறிவித்தல்கள் விடுக்கப்பட்டிருந்தாலும் வெறுமனே 1% இனால் மாத்திரமே முழுமையாக செலுத்த முடியும்” என்கிறது இலங்கை மின்சார சபை. இலங்கை மின்சார சபையினால் ஒருவருக்கு red notice விடுக்கப்பட்டால் அதில் குறிப்பிடப்பட்ட கால எல்லைக்குள் பணத்தை திருப்பி செலுத்தாவிடின் அவரது மின் இணைப்பு துண்டிக்கப்படும்.

மின்சார சபையை பொறுத்தவரை அவர்களது சொந்த நிதிப்பற்றாக்குறையால் தற்சமயம் தமது நிதித்தேவைகளை பூர்த்தி செய்ய திறைசேரியில் தங்கி இருக்கமுடியாமல் உள்ளனர். ஆகவே வேறு வழியின்றி தாமதமாக கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் மீது இப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டி இருக்கிறது.

மறுபுறம், பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மின் கட்டணங்களில் மாற்றங்களால் எந்த மாதத்தில் எதற்கான கட்டணத்தை கட்டுவது? எதனை விடுவது? நாளாந்த செலவை சரிக்கட்டுவது என்று மக்கள் அல்லாடுகின்றனர்.

இந்த சூழ்நிலையில் நாம் ஒன்றும் செய்யமுடியாது இருந்தாலும் இலங்கை மின்சார சபை இன்னும் சில வழிகளை கையாளலாம். உதாரணமாக அவர்களது உள்ளக செலவு சரிப்படுத்தலை மேற்கொள்ளலாம் அல்லவா?

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

⭐️ சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை இலங்கை வழிநடத்தும் ஒரு முக்கியமான வழி இங்கே உள்ளது - இவை அனைத்தும் மே 2023 இல் உ...
15/12/2023

⭐️ சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளை இலங்கை வழிநடத்தும் ஒரு முக்கியமான வழி இங்கே உள்ளது - இவை அனைத்தும் மே 2023 இல் உருவாக்கப்பட்ட உத்தியோகபூர்வ கடன் குழு (OCC) மூலம் சாத்தியமானது. இதுவரை என்ன முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்.

↪️ மேலும், நீங்கள் கேட்கும் OCC என்றால் என்ன? கேள்விக்கு கடைசி பக்கத்தில் ஒரு விரைவான சுருக்கத்துடன் நாங்கள் உங்களுக்கு பதிலளித்துள்ளோம் !

🟡 பொலிஸ் மா அதிபரை மீண்டும் நியமிப்பது தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இழுபறியாக மாறியதன் மூலம்,...
15/12/2023

🟡 பொலிஸ் மா அதிபரை மீண்டும் நியமிப்பது தொடர்பில் அரசியலமைப்பு சபைக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இழுபறியாக மாறியதன் மூலம், அரசியலமைப்பு சபை தொடர்பில் அண்மைக்காலமாக பரபரப்பாக பேசப்பட்டது.

எனவே அரசியலமைப்பு சபை என்றால் என்ன என்பதை என்ன என்பது பற்றி கொஞ்சம் விளக்க நினைத்தோம்.இதைப் பற்றி தெரிந்து கொள்வோம் இல்லையா?

எமது புதிய பதில் பொலிஸ்மா அதிபரை👮‍♂️ அப்பதவிக்கு பொருத்தமற்றவர் என சிவில் சமூகத்தின் சில அங்கங்கள் குறிப்பிட காரணம் என்ன...
14/12/2023

எமது புதிய பதில் பொலிஸ்மா அதிபரை👮‍♂️ அப்பதவிக்கு பொருத்தமற்றவர் என சிவில் சமூகத்தின் சில அங்கங்கள் குறிப்பிட காரணம் என்ன?

இதோ 2 முக்கிய காரணங்கள். உங்களது கருத்துக்கள் என்ன?

🧐 பணவீக்கம் பற்றி பேசி கொஞ்ச காலம் ஆகிறது, இல்லையா? கடந்த 12 மாதங்களில் நாம் எங்கு நிற்கிறோம், எப்படி இருந்தோம் மற்றும் ...
14/12/2023

🧐 பணவீக்கம் பற்றி பேசி கொஞ்ச காலம் ஆகிறது, இல்லையா? கடந்த 12 மாதங்களில் நாம் எங்கு நிற்கிறோம், எப்படி இருந்தோம் மற்றும் சில அசைவுகள் ஆகியவற்றை விரைவாகப் பார்ப்போம்.

👉 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் நிலையில், முக்கிய பங்குத...
13/12/2023

👉 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு முடிவு செய்யப்படும் நிலையில், முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான IMF இடமிருந்து நமக்கான பச்சைக்கொடி காட்டப்பட்டதாகத் தெரிகிறது.

இது அவர்களின் பட்ஜெட் முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்து, அவை நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (EFF) ஆதரிக்கும் பொருளாதார சீர்ப்படுத்தல் திட்ட இலக்குகளுக்கு ஏற்ப பரந்த அளவில் இருப்பதை உறுதிப்படுத்தியது. The sunday morning businessன் கேள்விகளுக்குப் பதிலளித்த இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் மூத்த தூதரகத் தலைவர் பீட்டர் ப்ரூயர் இந்த உறுதிப்படுத்தலை வழங்கினார்.

இது ஒரு முக்கியமான சாதனையாகும், ஏனெனில் இது வரவிருக்கும் IMF பணியாளர் மதிப்பாய்வுகளில் சிறந்த செயல்திறன் நிலைகளை அடைவதற்கு உதவுவதுடன், இரு தரப்பினருக்கும் இடையே எந்தவிதமான முரண்பாடுகளும் இல்லாமல் பட்ஜெட் திட்டங்களை செயல்படுத்தவும் இது உதவும்.

கல்முனையில், 13 வயது சிறுவனின்  துயர மரணம் ஒரு ஆணித்தரமான உண்மையை எதிரொலிக்கிறது: குழந்தைகள், சட்ட சிக்கல்கள் அல்லது வேற...
13/12/2023

கல்முனையில், 13 வயது சிறுவனின் துயர மரணம் ஒரு ஆணித்தரமான உண்மையை எதிரொலிக்கிறது: குழந்தைகள், சட்ட சிக்கல்கள் அல்லது வேறு ஏதேனும் சிரமங்களில் சிக்கியிருந்தாலும், எங்கள் அமைப்பிலிருந்து அசைக்க முடியாத ஆதரவையும் பாதுகாப்பையும் பெற வேண்டும். திருட்டு குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அந்த சிறுவன் சிறார் காப்பகத்தில் வைக்கப்பட்டார், அங்கு மேற்பார்வையாளரால் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறப்படுகிறது, இது அவரது மரணத்திற்கு வழிவகுத்துள்ளது .💔

பொருளாதார சிக்கல்களால் பாதிக்கப்பட்ட அவர், 9 ஆம் வகுப்பில் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டார், இது குழந்தை பாதுகாப்பு மற்றும் கல்வியில் உள்ள முறையான குறைபாடுகளை எடுத்துக்காட்டுகிறது. அவரது மரணம் சீர்திருத்தத்தின் இன்றியமையாத தேவையை நினைவூட்டுகிறது, ஏனெனில் அவரை வளர்த்து மறுவாழ்வு செய்ய வேண்டிய அமைப்பு துரதிர்ஷ்டவசமாக தோல்வியுற்றுள்ளது

இது அவருடைய கதை மட்டுமல்ல; போலீஸ் காவலில் இருக்கும் போது, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் கொடூரமான தாக்குதலுக்கு ஆளாகியும், காவலில் வைக்கப்பட்ட மரணங்களைச் சந்தித்த பிறகும் பதில் இல்லாத எண்ணற்ற குடும்பங்களின் அழுகை இது. இது முதல் கதையல்ல, ஆனால் கடைசி கதை எப்போது?

இந்த விஷயத்தில் அதிக செயல்திறன் மிக்க நடவடிக்கைகளை எடுக்க நமது பொதுப் பிரதிநிதிகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் மற்றும் இந்த முடிவில்லாத சுழற்சியை மாற்ற உடனடி மற்றும் விரைவான சீர்திருத்தங்களுக்கு வாதிட வேண்டும், குறிப்பாக குழந்தைகள் சம்பந்தப்பட்ட இடங்களில்.

🧐 வரவு செலவுத் திட்டத்தின்படி நமது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வளவு ஒதுக்குகிறோம் தெரியுமா? இந்த ஒதுக்கீட்டில் நடப்புச் ...
12/12/2023

🧐 வரவு செலவுத் திட்டத்தின்படி நமது முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வளவு ஒதுக்குகிறோம் தெரியுமா? இந்த ஒதுக்கீட்டில் நடப்புச் செலவுகள் (வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கான) மற்றும் தொடர்ச்சியான செலவுகள் (ஓய்வுப் பலன்கள் போன்றவை) உள்ளன.

ஒரு முன்னாள் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்பட்ட செலவினத்தைப் பார்க்கும்போது (குறிப்பாக சிலருக்கு எதிராக சமீபத்தில் நீதிமன்ற வழக்குகள் உள்ளன!), எங்களுக்கு இன்னும் கேள்விகள் உள்ளன. அரசாங்க செலவினங்களில் மிகவும் பொறுப்பான ஒதுக்கீடு இதுதானா? உங்கள் எண்ணங்களை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள் comments / DMs.

💭 இன்று நாம் வரிகளைப் பற்றி பேசுகிறோம். ஜனவரி-செப்டம்பர் 2022 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​2023 ஜனவரி-செப்டம்பர் மாதங...
11/12/2023

💭 இன்று நாம் வரிகளைப் பற்றி பேசுகிறோம். ஜனவரி-செப்டம்பர் 2022 காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ​​2023 ஜனவரி-செப்டம்பர் மாதங்களில் ஒவ்வொரு வகை வரிகளும் எவ்வளவு வசூலிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்ப்போம்.

💰 மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு ரூ. 500 கோடி அளவுக்கு மோசடி...
10/12/2023

💰 மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் விசாரணை ஆணைக்குழு ரூ. 500 கோடி அளவுக்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்தது.

மர்மமான கடந்த காலத்தைக் கொண்ட டொயோட்டா ஜீப், சட்டவிரோத இறக்குமதிகள் மற்றும் தவறான ஆவணங்கள் ஒரு ஏமாற்று சதி வலையை காட்டிக்கொடுத்துள்ளன. இந்த மோசடியை வடிவமைத்தவர் யார்? மேலும் இது குறித்த கூடுதல் தகவலகளுக்காகக்காக காத்திருக்கிறோம்.

Address


Alerts

Be the first to know and let us send you an email when Politicslk Tamil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Politicslk Tamil:

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share