Auto narrative publishing

  • Home
  • Auto narrative publishing

Auto narrative publishing publishing

அஜின் அன்பு சில நேரங்களில், சில மனிதர்களால், சில பொழுதுகளில் நீங்கள் "நாய்த் தே**யா* என்கிற வார்த்தை பிரயோகத்தை கேட்டிரு...
25/03/2023

அஜின் அன்பு
சில நேரங்களில், சில மனிதர்களால், சில பொழுதுகளில் நீங்கள் "நாய்த் தே**யா* என்கிற வார்த்தை பிரயோகத்தை கேட்டிருக்கக் கூடும். நாய் நம் கண்ணெதிரினில் பலரோடும் உடலுறவு கொள்வதை பல சமயங்களில் நாம் கண்டிருக்கக் கூடும். அவ்வாறு வாழ்க்கைமுறை கொண்டிருப்பது தகாதது, தரமில்லாதது, கீழானது எனும் எண்ணங்களினால் கோபத்தில் அந்த வார்த்தையை உணர்கிறான். ஆனால் உண்மையிலேயே ஒவ்வொரு மனிதனும் எப்படிப்பட்டவன். ஒரு ஆணாக என்னால் ஊர்ஜிதமாக கூற இயலும், உலகிலிருக்கும் அழகான அத்தனை பெண்களோடும் புணர, ஒவ்வொரு ஆணும் ஆயத்தமாகவே இருக்கிறான்.அந்தப்படியே ஒவ்வொரு பெண்ணும், உலகில் ஆண்கள் பலரோடும் அங்கம் பகிர்ந்திட விருப்பம் கொண்டே இருக்கிறாள்‌. நமக்கு கற்பிக்கப்பட்ட வாழும் வாழ்க்கை முறையால் வேடம் தரித்துக் கொண்டு, நாடகமாடிக்கொண்டு திரிகிறோம்‌. ஆனால், அகத்தளவில் யாவரும் இங்கே நாய் **** தான் என்பதில் எச்சந்தேகமும் இல்லை. வாய்ப்பிற்காகவும், சந்தர்ப்பத்திற்காகவும் காத்திருக்கும் நாய் ****.

காதலை புனிதமென்கிறோம். காமத்தை கொச்சையாக காண்கிறோம். காதலினால் இருவரும் இணைத்திருக்கிறோம் என்றுரைப்பதை, அகன்ற இதழ்களோடு சிரித்தபடி கேட்கும் நாம், காமத்தின் பொருட்டு இருவரும் இணைந்திருக்கிறோம், என்ற உண்மையை உலகறிய சொல்வதற்கு கூட யாருக்கும் இடமளிப்பதில்லை. உண்மையாகவே காமத்தை உள்ளே வைத்து சுற்றப்பட்ட, ப்ரௌன் சீட் பரிசுக் கவர்தான் காதல்.

மேற்கூறியவேகள் யாவும் இப்புத்தகத்தில் கூறப்பட்டவை அல்ல. அதை வாசித்த பின்பு என்னுள் விரிந்த எண்ணங்கள்.

இருவரும் இறுதி வரை இணைந்திருந்தால், பல துன்ப இடர் சந்தர்பங்களில் அழுது கொண்டும் ஒன்றாக பயணித்தால் அது உண்மையான காதலாகுமா? சகித்துக் கொண்டு வாழ்வதற்கு காதலென்று பெயர் சூட்டிக் கொள்வதா?

சைக்கோத்தனமாக பெண்ணுறுப்பன் மீது,பற்றவைத்த சிகரெட்டை எடுத்து, வேண்டுமென்றே சூடு வைப்பது காதலா? அதன் பின் அவள் துடிக்கையில், அவளோடு இணைந்து தானும் துடித்தழுவதை காதலென்று சொல்லாமல் தவிர்த்து விடலாகுமா?

சேர்ந்திருக்கும் வரை உண்மையான காதலில் திளைத்திருக்கிறோம் என்று கூறிக்கொண்டிருக்கும் ஒரு ஜோடி, உறவு முறிந்த பின்பு, முன்பிருந்த உறவு வெறும் இன்பேக்சுவேசன் என்று கூறி நகர்வது எப்படித் தகும்?

இப்புத்தகம் உண்மையான காதல், இதுதானென்று தீர்ப்பளிக்கப் போவதில்லை. இந்த வாழ்க்கை முறைதான் சிறப்பானது என்று உங்களுக்கு பரிந்துரைக்கப் போவதுமில்லை.மாறாக, உங்களை ஒரு உரையாடலுக்குள் கொண்டு வந்து அமர்த்தும். நீங்களும் கதைமாந்தராகி உரையாடுங்கள்.

********
Title: உண்மையான காதல்
Published by : Auto Narrative Publishing
நூலை வாங்க லிங்க் கமெண்டில் உள்ளது.
*********

எங்கு? எப்போது? யாரால்? வெளியிடப்பட்டிருக்கிறது பாருங்கள். தோழர் E. M. S அவர்களால். இந்நூலை மறுபதிப்பு செய்வதென்பது ஒரு ...
27/02/2023

எங்கு? எப்போது? யாரால்? வெளியிடப்பட்டிருக்கிறது பாருங்கள். தோழர் E. M. S அவர்களால். இந்நூலை மறுபதிப்பு செய்வதென்பது ஒரு சிறு குழுவுக்கான பெரும் ஊக்கம். சாரு நிவேதிதா மற்றும் அ. மார்க்ஸூக்கு எங்களின் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

நூலை வாங்க லிங்க் முதல் கமெண்டில்.

25/02/2023

வாசிப்பில்

உண்மையான காதலை வாங்க லிங்க் முதல் கமெண்டில்.
14/02/2023

உண்மையான காதலை வாங்க லிங்க் முதல் கமெண்டில்.

“ மாடர்ன் லைஃப் ஸ்டைல்ல,ரிலேஷன்ஷிப்ல புதுப்புது
எதிக்ஸ் கொண்டுவராங்க. அதுல ரொம்ப கொடுமையானது என்னன்னா, நான் எப்டி உங்கிட்ட இருக்கனோ, அதே மாதிரி நீயும் என்கிட்ட இருக்கணும்னு சொல்றதுதான். ஹிட்லரை எல்லாம் ஃபாஸிஸ்டுன்னு சொல்வாங்க. காண்டப்பரரி லைஃப்ல மோஸ்ட் ஆஃப் தி பீப்பில், எஸ்பெஷலி இன் லவ், இன்னும் ப்ரிஸைஸா சொல்லணும்னா, புனிதமான காதல்ல இருக்கோம்னு நம்பிட்டு இருக்குறவங்க தான் தி வொர்ஸ்ட் ஃபாஸிஸ்ட்.”

நூல் : உண்மையான காதல்
ஆசிரியர் : அராத்து
வெளியீடு : Auto narrative publishing

Rps :இன்றைய தேவையாக விளங்குகிறது இந்நூல்..எல்லோருக்கும் அவர்கள் எடுக்கும் முடிவுக்கு ஒரு உதாரணம் தேவைப்படுகிறது.. பார்த்...
24/01/2023

Rps :
இன்றைய தேவையாக விளங்குகிறது இந்நூல்..

எல்லோருக்கும் அவர்கள் எடுக்கும் முடிவுக்கு ஒரு உதாரணம் தேவைப்படுகிறது.. பார்த்தது படித்தது கேள்விப்பட்டது என...
அப்படி பல்வேறு மனிதர்களின் வாழ்வில் நடந்தைவையாக இங்கு உரையாடல் மூலம் இக்கதை நகர்கிறது.. நம்மை நகர்த்துகிறது என்றும் சொல்லலாம்....

ஒருபுறம் ஆண் பெண் உறவுச் சிக்கல் இவ்வாறு இருக்க இன்னொருபுறம் கணவன் மனைவி உறவில் ஏற்படும் பொய் வழக்குகள் நீதிமன்றம் பெண்களுக்கான பாதுகாப்பு சட்டங்களை தவறாக பயன்படுத்துதல் மூலம் கோர்ட் நேரத்தையும் இருவரின் வாழ்க்கையையும் வீணடிக்கும் வீணர்களும் தற்போது அதிகரித்து வருகிறது .. இதன்மூலம் பெண்களுக்கு இரட்டிப்பு லாபம்..

தன் இசை வுக்கு ஏற்றபடி ஆணை கட்டுப்படுத்தலாம்.. இல்லையென்றால் கோர்ட் மூலம் பணப் பலன் பெற்றுக்கொண்டு வேறொருவரை திருமணமும் செய்யலாம்....

இந்தச் சிக்கலில் உள்ள வரையும் இக்கதையில் உறுப்பினர் ஆக்கி இருக்கலாம் Araathu R அவர்கள்...

இருந்தபோதிலும் இக்குருநாவல் கண்முன் நடந்த குறும்படம் போல் இருந்தது...
அருமை...

நூலை வாங்க கமெண்டில் உள்ள லிங்கை பயன்படுத்தவும்.

#உண்மையானகாதல்

உண்மையான காதல் வேண்டுமா!!! கமெண்டில் உள்ள முதல் லிங்க்கை பயன்படுத்துங்கள்.
23/01/2023

உண்மையான காதல் வேண்டுமா!!! கமெண்டில் உள்ள முதல் லிங்க்கை பயன்படுத்துங்கள்.

ரேமண்ட் கார்வர் எழுதிய "What we talk about when we talk about love?" என்ற குறுநாவலின் மூலக்கதையை எடுத்துக்கொண்டு இன்றைய காலகட்டத்துக்கு ஏற்றார் போல் எழுதப்பட்ட குறுநாவல் இது.

மூன்று ஜோடிகள், ஒரு காதல் தோல்வி அடைந்த இளைஞர், கடைசியாக வந்து இணையும் ஒரு பெண். ஈசிஆரில் ஒரு கடற்கரை சொகுசு பங்களாவில் டிரிங்க்ஸ் பார்ட்டியோடு காதல், காமம், திருமணம், லிவ் இன், என்ற உரையாடல் நிகழ்வு.

ஆரம்பத்தில் உண்மையான காதல் என்றால் என்ன? காமம் என்றால் என்ன? என பேச்சுவார்த்தை பொதுவாக ஆரம்பித்து. பிறகு ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வாழ்கையை அதனோடு ஒப்பிட்டு விளக்கம் கூற முயல்வது தான் இப்புத்தகம்.

இதில் இரண்டு ஜோடிகள் லிவ் இன், அதில் ஒவ்வொருவருக்கும் ஏற்கனவே சில திருமணம் நடந்து இருக்கிறது, சில லிவ் இன் இருந்து இருக்கிறது,
ஒரு ஜோடி காதல் திருமணம் செய்தவர்கள்.

ஆசிரியர் இந்த கதையின் மூலம் கூறவதை மேற்கொண்ட கதாப்பாத்திரங்களின் வடிவமாக சமூகத்தில் தாம்பத்யம், திருமணம், காதல், உடலுறவு, போன்றவை என்னென்ன கண்ணோட்டத்தில் உள்ளதோ. அந்தந்தக் கண்ணோட்டத்தில் ஒரு ஒரு கதாபாத்திரங்களை பேச வைக்கிறார்.

தாம்பத்தியத்தில் சைக்கோத்தனம் இருந்தாலும் எத்தனை காதலர்களை கடந்தாலும் அது காதல் தான் என்று ஒரு பெண் கதாப்பாத்திரம்.

திருமணத்திற்கு முன்பு சில காதல்கள் இருந்தாலும் அதெல்லாம் உன்மையான காதல் இல்லை. தற்போது நாங்கள் வாழ்வது தான் உண்மையான காதல் என்று திருமணமான காதல் ஜோடி.

"ட்ரூ லவ்வுன்னுல்லாம் ஒண்ணுமே கெடையாது... அவ்ளோ ஏன் லவ்வுன்னே தனியா ஒண்ணு கெடையாது. செக்ஸ்னு சொல்ல கூச்சப்பட்டுகிட்டு, அதும்மேல லவ்வுன்னு முலாம் பூசிகிட்டு இருக்கோம். ஆனா செக்ஸுக்கு லவ் தேவை... அதும் ஏன்னா லவ் இருந்தா செக்ஸ் இன்னும் நல்லா இருக்கும். அவ்ளோதான் லவ்வுக்கு வேல்யூ. லவ் ஈஸ் எ செக்ஸ் என்ஹேன்ஸ்மெண்ட் டூல்" என்று ஆரம்பம் முதலே கதையின் மையத்தில் நின்று கதையை கொண்டு செல்லும் கதாபாத்திரம் அஸ்வத்.

ஏற்கனவே இரண்டு திருமணம் முடிந்து மூன்றாவது மனைவி வேறு நாட்டில் இருந்தும் இன்னோரு பார்ட்னருடன் லிவ் இன் இருக்கும் அஸ்வத்.
அது மூன்றாவது மனைவிக்கும் தெரிந்திருப்பதும் அந்த பார்ட்னரை அவரும் அங்கீகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

எதற்காக தன்னை தன் காதலி நிராகரித்தால் என்று புரியாமல் தெளிவு பிறக்க வந்த இளைஞன்.

கடைசியாக வந்து இணையும் பெண் உண்மையான காதல் என்றால் என்ன என்ற கேள்விக்கு "ஒன்லி ஃபக் வித் கேரிங்" என்று தனது கதையை சொல்லி முடிப்பதாக இருக்கும்.

இது வெளியில் பேசப்பட வேண்டிய
உண்மையான உளவியல். கலாச்சாரம் கற்பு என்று காமத்தையும் காதலையும் பொதுவில் வைத்து ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் எல்லோரையும் வரச் செய்வது தான் இந்த சமுதாயம் காலங்காலமாக செய்து வருவது.

"கழிவறை இருக்கை" கூறியதும் கிட்டத்தட்ட இதையே தான். ஆனால் இருவர் சொன்ன விதமும் வேறு. ஆனால் கருத்து ஒன்றாகவே இருப்பதாக என்னளவில் புரிந்து கொண்டேன்.
______________________
~ நூல்: உண்மையான காதல்
~ ஆசிரியர்: அராத்து Araathu R
~ பதிப்பகம்: ஆட்டோ நரேட்டிவ்
~ பக்கங்கள்: 96
~ விலை: 100₹
__________________

~Counts: 6/2023

#ரகுராவணன்

புத்தகக் கண்காட்சியின் இறுதி நாள். சாரு நிவேதிதாவையும் அராத்துவையும் சந்திக்க வாசகர்களே வாருங்கள்.
22/01/2023

புத்தகக் கண்காட்சியின் இறுதி நாள். சாரு நிவேதிதாவையும் அராத்துவையும் சந்திக்க வாசகர்களே வாருங்கள்.

22/01/2023

எழுதியது ஒருவர், மொழிபெயர்த்தது ஒருவர் இதில் லாபம் பார்க்க நமக்கு எந்த தார்மீகமும் கிடையாது. அதனால் தான் இந்நூல் செம்பதிப்பாக குறைந்த விலையில் கொடுக்கிறோம். இது வாசகர்களுக்கானது. இது தமிழ் அறிவுலகம் எடுத்துக் கொள்ள வேண்டியது.

புத்தகக் கண்காட்சியின் கடைசி இரண்டு நாட்கள். சாரு நிவேதிதா மற்றும் அராத்துவை சந்திக்க ஒரு வாய்ப்பு.
21/01/2023

புத்தகக் கண்காட்சியின் கடைசி இரண்டு நாட்கள். சாரு நிவேதிதா மற்றும் அராத்துவை சந்திக்க ஒரு வாய்ப்பு.

நூலை வாங்க F-19 & F-12
20/01/2023

நூலை வாங்க F-19 & F-12

20/01/2023

Got it 🔥
Available @ Auto narrative publishing 🥰

இனிய வாசகர்களே,          நமது எழுத்தாளர்களான சாரு நிவேதிதா மற்றும் அராத்துடன் புத்தகத்தில் கையெழுத்து வாங்க, ஃபோட்டோ எடு...
20/01/2023

இனிய வாசகர்களே,
நமது எழுத்தாளர்களான சாரு நிவேதிதா மற்றும் அராத்துடன் புத்தகத்தில் கையெழுத்து வாங்க, ஃபோட்டோ எடுக்க, செல்ஃபி எடுக்க மற்றும் உரையாட வாருங்கள் புத்தகத் திருவிழாவின் கடைசி மூன்று நாட்கள்.

Happy Birthday Oli Murugavel. Our Head of Designing. Your thoughts, designs and photographs are a depiction of our visio...
19/01/2023

Happy Birthday Oli Murugavel. Our Head of Designing. Your thoughts, designs and photographs are a depiction of our vision and hardwork. We are blessed to have you as our designer.

அராத்துவின் 'உண்மையான காதல்', 'நிறமேறும் வண்ணங்கள்' மற்றும் 'HoneyTrap' நூல்களை வாங்க கமெண்டில் உள்ள லிங்குகளை பயன்படுத்...
19/01/2023

அராத்துவின் 'உண்மையான காதல்', 'நிறமேறும் வண்ணங்கள்' மற்றும் 'HoneyTrap' நூல்களை வாங்க கமெண்டில் உள்ள லிங்குகளை பயன்படுத்துங்கள். இந்த போஸ்டை பகிருங்கள்.

சென்னை புத்தகக் காட்சி - 2023அராத்து நேர்காணல்நன்றி : காயத்ரி R ...

  அனைவரும் எதிர்பார்த்து வரும் இந்தியத் தத்துவ இயலில் நூல் தற்போது ஜீரோ டிகிரி(F19) மற்றும் பாரதி புத்தகாலயத்தில்(F12) க...
18/01/2023

அனைவரும் எதிர்பார்த்து வரும் இந்தியத் தத்துவ இயலில் நூல் தற்போது ஜீரோ டிகிரி(F19) மற்றும் பாரதி புத்தகாலயத்தில்(F12) கிடைக்கிறது. இனி புத்தகத் திருவிழாவின் நான்கு நாட்களும் புத்தகம் கிடைக்கும்.

18/01/2023

அராத்துவை சந்திக்க நம் புத்தகங்களில் கையெழுத்து வாங்க, செல்ஃபி எடுக்க மற்றும் உரையாட வாருங்கள் வாசகர்களே.
F19 - Zero Degree Publishing | Today 6pm

தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் 'இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்' நூலினை கரிச்சான் குஞ்சு மொழிபெயர்த்...
14/01/2023

தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் 'இந்திய தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்' நூலினை கரிச்சான் குஞ்சு மொழிபெயர்த்து, எண்பதுகளில் தமிழ் அறிவுலகில் ஒரு கலக்கு கலக்கியது. பின்பு சில வருடங்களாக இந்த நூல் அச்சிலில்லை. இப்போது ஆட்டோ நேரட்டிவ் இதனை அச்சில் கொண்டுவந்திருக்கிறது. அதனை அவரது மகள் விஜயா கரிச்சான் குஞ்சியிடம் பேராசிரியர். அ. மார்க்ஸ் வழங்கினார். இந்நூல் மொழிபெயர்ப்புக்கு முழுமுதற் காரணம் அ.மார்க்ஸூம் பொ. வேல்சாமியும் தான். தற்போதும் எங்களுக்கு உறுதுணையாக இருந்து இந்நூல் வர காரணமாக இருந்ததும் அ. மார்க்ஸ் தான். நன்றி மார்க்ஸ்.
நூலை வாங்க லிங்க கிண்டில்.

கரிச்சான் குஞ்சு மொழிபெயர்த்த தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் 'இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் நூலி...
10/01/2023

கரிச்சான் குஞ்சு மொழிபெயர்த்த தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவின் 'இந்தியத் தத்துவ இயலில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும் நூலினை புத்தக திருவிழாவில் கீழே குறிப்பிட்டுள்ள இடங்களில் வாங்கலாம். இந்த பதிவை வாசகர்கள் பகிரவும்.

நமது பதிப்பகத்தின் ஐந்து நூல்கள் புத்தக திருவிழாவிற்கு வைக்கப்பட்டாகிவிட்டது. நம் வாசகர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளு...
10/01/2023

நமது பதிப்பகத்தின் ஐந்து நூல்கள் புத்தக திருவிழாவிற்கு வைக்கப்பட்டாகிவிட்டது. நம் வாசகர்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த பதிவினை பகிருங்கள்.

திரளாக கலந்து கொள்ளுங்கள். கலந்து கொள்ளும் வரை இந்த பதிவை பகிருங்கள்.
03/01/2023

திரளாக கலந்து கொள்ளுங்கள். கலந்து கொள்ளும் வரை இந்த பதிவை பகிருங்கள்.

தொண்ணூறாம் ஆண்டு, தமிழ் இலக்கிய உலகில் ஒரு அதிர்வேட்டு வைக்கப்பட்டது, அது தான் இந்த கர்னாடக முரசு சிறுகதைத் தொகுப்பு. பு...
03/01/2023

தொண்ணூறாம் ஆண்டு, தமிழ் இலக்கிய உலகில் ஒரு அதிர்வேட்டு வைக்கப்பட்டது, அது தான் இந்த கர்னாடக முரசு சிறுகதைத் தொகுப்பு. புத்தகத்தை வாங்க கமெண்டில் இருக்கும் சுட்டியைப் பயன்படுத்துங்கள். இந்த பதிவை பகிருங்கள்.

கர்னாடக முரசும்… January 3, 2023January 3, 2023 by Charu Nivedita கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்ற...

சாரு நிவேதிதாவின் எழுத்துலகை புரிந்துகொள்ள ஒரு கையேடு. இதனை வாங்க கமெண்டில் இருக்கும் சுட்டியைப் பயன்படுத்துங்கள். இந்த ...
03/01/2023

சாரு நிவேதிதாவின் எழுத்துலகை புரிந்துகொள்ள ஒரு கையேடு. இதனை வாங்க கமெண்டில் இருக்கும் சுட்டியைப் பயன்படுத்துங்கள். இந்த பதிவை அனைவரும் பகிருங்கள்.

சாரு நிவேதிதாவால் பெருமாள் முருகன் ஆக முடியவில்லை, ஏன்? January 3, 2023January 3, 2023 by Charu Nivedita என் எழுத்து பற்றியும், என் எழுத்தை எத.....

குறுநாவல் எழுத சாருவை தூண்டிய குறுநாவல். புத்தகத்தை வாங்க லிங்க முதல் கமெண்டில். இந்த பதிவை பகிருங்கள்.
03/01/2023

குறுநாவல் எழுத சாருவை தூண்டிய குறுநாவல். புத்தகத்தை வாங்க லிங்க முதல் கமெண்டில். இந்த பதிவை பகிருங்கள்.

உண்மையான காதல் January 2, 2023January 2, 2023 by Charu Nivedita ஆட்டோநேரட்டிவ் பதிப்பகத்திலிருந்து வெளிவந்துள்ள நாவல். அராத்து எழுதியது. ரே....

சென்னை  இலக்கியத் திருவிழா - 08.01.2023 தேதியில் படைப்பு அரங்கில் நமது சாரு நிவேதிதா கலந்து கொள்கிறார். இலக்கிய வாசகர்கள...
03/01/2023

சென்னை இலக்கியத் திருவிழா - 08.01.2023 தேதியில் படைப்பு அரங்கில் நமது சாரு நிவேதிதா கலந்து கொள்கிறார். இலக்கிய வாசகர்கள் மற்றும் வாசகர் வட்ட நண்பர்கள் கலந்து கொள்ளுங்கள். விழாவில் சந்திப்போம்.

02/01/2023
31/12/2022

அராத்துவின் புதிய சிறுகதைத் தொகுதி "நிறமேறும் வண்ணங்கள்" அதிர்ச்சிகரமான 11 சிறுகதைகளின் தொகுப்பு. அதிர்ச்சிக்கு மட்டுமல்ல விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் சம்பவங்கள் உள்ள கதைகளும் உண்டு. அதே நேரம் வெளிநாட்டில் சென்று நம்மூர் நடைமுறைகளை குறித்தான தத்துவ விசாரணைகள் அடங்கிய ஒரு கதையும் உண்டு.

"சூம்பி" கதையை படிக்கும் போது சிரித்து சிரித்து கண்களில் தண்ணீர் வந்துவிட்டது. (எங்கூர் தண்ணிடா.. # #₹)

"கடவுள் - காவோ சான் ரோட்" கதை இந்த புத்தகத்தில் இருக்கும் என்று நினைத்துப்பார்க்கவில்லை. கடவுளானவர் எதுவும் தப்பில்லை என்று சொன்னாலும், மாட்டிக்காதவரை தான் தப்பில்லை என்று மனதுக்குள் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. உலகின் ஒரு மூலையில் சரியானதாக இருக்கும் ஒரு விஷயம் இன்னோரு மூலையில் தவறாகவும் இருக்கிறது. அப்படி பார்க்கும் போது கடவுளுக்கு வேண்டுமென்றால் எல்லாமே சரியாக இருக்கலாம். மனுஷனுக்கு வாய்ப்பில்லை. ( எல்லாம் ஓஷோ சொல்வது போல கண்டீஷனிங் கூட காரணமாக இருக்கலாம்). ஒவ்வொரு கதையைப் பற்றியும் இப்படி டிஸ்கஸ் செய்தால் அதுவே ஒரு பெருங்கதையாக மாறிப்போகும் வாய்ப்பும் உள்ளது.

இந்த புத்தகத்தை பற்றி இந்த நூலின் வெளியீட்டு விழாவில் கவிஞர் ராஜ சுந்தர ராஜனின் உரை மிக அருமையாக இருந்தது. அதே போல அவரின் முன்னுரையும் அருமை.

ஆட்டோ நேரேட்டிவ் பதிப்பகம்
விலை - ரூ 200 மட்டும்

புத்தகம் வாங்க லிங்க்கை கமெண்ட் பாக்ஸில் கிளிக் செய்யுங்கள்.

எங்களுக்கு வழிகாட்டியாகவும், செய்ய வேண்டிய அடுத்தடுத்த வேலைகளுக்கு உந்து சக்தியாகவும் எப்போதுமே உறுதுணையாகவும் இருக்கும்...
27/12/2022

எங்களுக்கு வழிகாட்டியாகவும், செய்ய வேண்டிய அடுத்தடுத்த வேலைகளுக்கு உந்து சக்தியாகவும் எப்போதுமே உறுதுணையாகவும் இருக்கும் சாரு நிவேதிதாவிடமிருந்து ஒரு பாராட்டு மற்றும் அறிமுகம். சாருவின் கட்டுரையைப் பகிர்ந்திடுங்கள். தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.

ஆட்டோநேரட்டிவ் பப்ளிஷிங்: சில செயல் திட்டங்கள் December 27, 2022December 27, 2022 by Charu Nivedita முன்பே எழுதியிருக்கிறேன், எனக்குப் பதிப்பக...

21/12/2022

தற்போதைய வாசிப்பில்..

விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வாழ்த்துகள்.
18/12/2022

விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வாழ்த்துகள்.

இத்தொகுப்பு முழுமையும் அங்கதம், பகடி, அலம்பல், சலம்பல், குசும்பு, கொத்தவரங்காய் என குரேசியாவை அர்ஜென்டினா அறையிருதியில் ...
14/12/2022

இத்தொகுப்பு முழுமையும் அங்கதம், பகடி, அலம்பல், சலம்பல், குசும்பு, கொத்தவரங்காய் என குரேசியாவை அர்ஜென்டினா அறையிருதியில் அடித்தாடியதைப் போல் சூறாவளியாய் கலக்கி இருக்கிறார் எழுத்தாளர் அராத்து.
- சுஜாதா

Address


Alerts

Be the first to know and let us send you an email when Auto narrative publishing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share