Thanjai News

Thanjai News Online Tamil News

திமுக கட்சியின் காப்பாளர்களுக்கு பெரியார், அண்ணா, கருணாநிதி பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, கடந்த 2008 ஆம் ஆண்ட...
10/09/2024

திமுக கட்சியின் காப்பாளர்களுக்கு பெரியார், அண்ணா, கருணாநிதி பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பாரதிதாசன் பெயரிலும், 2018 ஆம் ஆண்டு முதல் பேராசிரியர் அன்பழகன் பெயரிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, திமுக தனது 75 ஆவது ஆண்டு பவள விழாவை கொண்டாடும் வகையில் கட்சியை ஆறாவது முறையாக ஆட்சியில் அமர வைத்து இந்தியாவே போற்றி வரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை இந்த ஆண்டு முதல் வழங்குகிறது, இந்த ஆண்டுக்கான மு.க ஸ்டாலின் விருது தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும், முன்னாள் எம்பியுமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது, இதனால் கட்சி தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

திமுக கட்சியின் காப்பாளர்களுக்கு பெரியார், அண்ணா, கருணாநிதி பெயரில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது, கடந்த 2008 .....

தஞ்சாவூரில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் தஞ்சை சீனிவாசபுரத்தில் தொடங்கப்ப...
25/07/2024

தஞ்சாவூரில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் தஞ்சை சீனிவாசபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது, இந்த விளையாட்டு அரங்கினை பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் திறந்து வைத்தார், மேலும் ஆடுகளத்தினை மூத்த இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே, தொழிலதிபர் ஆசிப் அலி ஆகியோர் திறந்து வைத்தனர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக சுப்ரமணிய சர்மா, கருப்பையா, ஜெய் சதீஷ், முரளிதரன், பாஸ்கரன், வெங்கடேஷ், சரவணன், குலோத்துங்கன், மகேஸ்வரன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், விழாவிற்கான ஏற்பாடுகளை ரஜினி கணேசன், ஆடிட்டர் ரவிச்சந்திரன், அன்பழகன் உள்ளிட்டோர் செய்திருந்தனர், இறகுப் பந்து விளையாட விரும்புபவர்கள் கீழ்கண்ட கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது, 9443518987,7010810314

தஞ்சாவூரில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் தஞ்சை சீனிவாசபுரத்...

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நட...
27/06/2024

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டும்போது விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகளும், பொருளாதார இழப்புகளும் ஏற்படுகின்றன, மேலும் போக்குவரத்து காவல்துறை சார்பில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது, இதனையடுத்து ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தஞ்சை ஜோதி தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் காவல்துறையினருடன் இணைந்து அண்ணாசாலை பகுதியில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் கூப்பன் இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர், இதேபோல் தினமும் ஹெல்மெட் அணிந்து வரும் நபர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் என ஜோதி தன்னார்வ தொண்டு நிறுவன செயலாளர் பிரபு ராஜ்குமார் தெரிவித்தார்.

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என அரசு சார்பிலும், காவல்துறை சார்பிலும் பல்வேறு விழிப....

டெல்டாவில் சிறந்த பல்நோக்கு மருத்துவமனைக்கான AHPICON விருது, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வென்றது
16/06/2024

டெல்டாவில் சிறந்த பல்நோக்கு மருத்துவமனைக்கான AHPICON விருது, தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை வென்றது

டெல்டாவில் மிகப்பெரிய பல்நோக்கு மருத்துவமனையான தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை, அகில இந்திய மருத்துவமனைகளின.....

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள...
16/06/2024

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். இந்த குடியிருப்பில் கடந்த 12ந் தேதி அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் மூச்சுத் திணறியும் உடல் கருகியும் 49 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள், இதில் தஞ்சை மாவட்டம் பேராவூரணியை சேர்ந்த புனாப் ரிச்சர்ட் ராயும் ஒருவர் ஆவார், இந்நிலையில் தீ விபத்தில் பலியானோருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தஞ்சை ஜோதி அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் பெண்கள் கண்ணீர் விட்டு அழுது, இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டியும் அவர்களது புகைப்படத்துக்கு மலர் தூவியும் மெழுகுவர்த்தி ஏந்தியும் மௌன அஞ்சலி செலுத்தினர், இதில் அறக்கட்டளை செயலர் பிரபுராஜ்குமார், மேலாளர் ஞானசுந்தரி, தன்னார்வலர் ஆர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

குவைத்தில்  அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட....

தஞ்சையில் குழந்தை இயேசு தேவாலய ஆண்டு பெருவிழா, அலங்கார தேர் பவனி
02/02/2024

தஞ்சையில் குழந்தை இயேசு தேவாலய ஆண்டு பெருவிழா, அலங்கார தேர் பவனி

தஞ்சாவூரில் அற்புத குழந்தை இயேசு தேவாலயம் அமைந்துள்ளது,இந்த தேவாலயத்தின் ஆண்டு பெருவிழா கடந்த 25ம் தேதி கொடியே...

அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தஞ்சாவூரில் அதிமுக கட்சி சா...
17/01/2024

அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் மேயரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான சாவித்திரிகோபால், அமைப்பு செயலாளர் காந்தி, மாநகர செயலாளர் சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் தஞ்சை ரயிலடி பகுதியில் உள்ள எம்ஜிஆர் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகிய முழு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகத்துடன் பிறந்தநாள் விழாவினை கொண்டாடினர், முன்னதாக ஆத்துப்பாலம் பகுதியில் இருந்து காந்திஜி ரோடு வழியாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் பேரணியாக ரயிலடி பகுதிக்கு வந்து எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அதேபோல் தெற்குவீதியில் கவுன்சிலர் கோபால் தலைமையில் நிர்வாகிகள் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர், இவ்விழாவில் நிர்வாகிகள் திருஞானம், பஞ்சாபிகேசன், புண்ணியமூர்த்தி, மனோகரன், சதிஷ்குமார், கவுன்சிலர் காந்திமதி, வார்டு செயலாளர் சம்பத், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

அதிமுக நிறுவன தலைவரும் முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு தஞ்சாவூரில் அதிம....

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் குறைப் பிரசவ குழந்தைகளுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு
03/12/2023

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் குறைப் பிரசவ குழந்தைகளுக்கான ஒன்றுகூடல் நிகழ்வு

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளது ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற்றது, இதி.....

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அரசு விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 46 ஆவது பிறந்தநாள் வரும் 27ஆம் த...
22/11/2023

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அரசு விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 46 ஆவது பிறந்தநாள் வரும் 27ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சாவூர் மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசுப் பள்ளியில் திமுக மாநகர கட்சி சார்பில் 130 பள்ளி மாணவர்களுக்கு சுடச்சுட சிக்கன் பிரியாணி, முட்டை, சிக்கன் 65 ஆகியவை வழங்கப்பட்டது, அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு பள்ளி மாணவர்கள் கைதட்டி சைகை மொழியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர், இதில் திமுக எம்எல்ஏக்கள் சந்திரசேகரன், நீலமேகம் மற்றும் மேயர் இராமநாதன் துணைமேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்ட நிர்வாகிகள் இறைவன்,மேத்தா, உஷா புண்ணியமூர்த்தி,கனகவள்ளிபாலாஜி, கவுன்சிலர்கள் ரம்யாசரவணன், நீலகண்டன், லெனின் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மதிய உணவினை வழங்கினார்கள், இதில் கட்சி நிர்வாகிகள், இளைஞர் அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்

திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு அரசு விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் 46 ஆவது பிறந்தநாள் வரு.....

தஞ்சாவூரில் உயர் சிகிச்சை வழங்கும் மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை, சமீபத்தில் மோனோகுரோட்டோபாஸ் OPC விஷத்தை அருந்திய...
18/11/2023

தஞ்சாவூரில் உயர் சிகிச்சை வழங்கும் மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை, சமீபத்தில் மோனோகுரோட்டோபாஸ் OPC விஷத்தை அருந்தியதனால் இறப்பின் விளிம்பிற்கு சென்ற 31 வயதான இளம்வயது ஆண் நபரின் உயிரை தனது சிறப்பான சிகிச்சையின் மூலம் காப்பாற்றி உள்ளது, வேறொரு மருத்துவமனையில் மூன்று நாட்களாக சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பயனளிக்காத காரணத்தால் உயிருக்கு போராடி கொண்டிருந்த நிலையில் அந்நபர் மீனாட்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டு ஒரு மாத கால தீவிர சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சிசிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்த இந்நோயாளி இப்போது அவரது தினசரி பணி வாழ்க்கைக்கு திரும்பியிருக்கிறார், மீனாட்சி மருத்துவமனை விஷம் அருந்திய 1000க்கும் அதிகமான நபர்களுக்கு இதுவரை சிகிச்சை அளித்துள்ளது. 2023 ஜனவரி மாதத்திற்கு பிறகு 160 - க்கும் அதிகமான நபர்கள் விஷ முறிவிற்கான சிகிச்சையை இங்கு பெற்றிருக்கின்றனர். இதில் டாக்டர்கள் அரிமாணிக்கம், அருண், பிரவீன், செந்தில்குமார், சரவணவேல், இதயசந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

தஞ்சாவூரில் உயர் சிகிச்சை வழங்கும் மருத்துவமனையான மீனாட்சி மருத்துவமனை, சமீபத்தில் மோனோகுரோட்டோபாஸ் OPC விஷத்....

தீபாவளி பண்டிகையை முன்னிட்டுதஞ்சாவூர் மானம்புசாவடியில் உள்ள ஆதரவற்றோருக்கான இல்லத்தில் தங்கி இருக்கும் முதியவர்கள் மற்று...
12/11/2023

தீபாவளி பண்டிகையை முன்னிட்டுதஞ்சாவூர் மானம்புசாவடியில் உள்ள ஆதரவற்றோருக்கான இல்லத்தில் தங்கி இருக்கும் முதியவர்கள் மற்றும் ஆதரவற்றவர்களுடன் மாநகராட்சி மேயர் இராமநாதன் பட்டாசு வெடித்து, காலை சிற்றுண்டி பரிமாறி அவர்களுக்கு உணவு ஊட்டி ஒன்றாக உணவருந்தி தீபாவளியை கொண்டாடினார். பின்னர் அங்குள்ளவர்களின் குறைகளை கேட்டறிந்தார், முன்னதாக இந்த இல்லத்தில் தங்கி இருக்கும் 25 பேருக்கும் மேயர் இராமநாதன் புத்தாடைகள் வழங்கி. அவர்களுடன் சேர்ந்து மத்தாப்பு கொளுத்தி மகிழ்ச்சியுடன் தீபாவளியை கொண்டாடினார், மேலும் அவர்களுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டுமகனாக உங்களுக்கு நான் இருக்கிறேன் என ஆறுதல் வார்த்தை கூறினார், இதில் லயன்ஸ் கிளப் ராஜா, போட்டோ மதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், அதைப்போல் மருத்துவக் கல்லூரி சாலையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் எம்எல்ஏ டிகேஜி நீலமேகம், முதியவர்களுக்கு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கி அவர்களுடன் அமர்ந்து பேசி மகிழ்ந்தார், மேலும் முதியவர்கள் மத்தாப்புகளை கொளுத்தி சிறுவர்களைப் போல் மகிழ்ச்சி அடைந்தனர், இதில் பகுதி செயலாளர் நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், எம்எல்ஏ மற்றும் மேயரின் இந்த செயல் முதியவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது,

தீபாவளி பண்டிகையை முன்னிட்டுதஞ்சாவூர் மானம்புசாவடியில் உள்ள ஆதரவற்றோருக்கான இல்லத்தில் தங்கி இருக்கும் முத...

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இரண்டு சக்கர வாகன விபத்தில் சிக்கி ரத்த காயத்துடன் பள்ளி சீருடையில் 2...
06/11/2023

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இரண்டு சக்கர வாகன விபத்தில் சிக்கி ரத்த காயத்துடன் பள்ளி சீருடையில் 2 குழந்தைகளும், மேலும் 2 ஆண்களும் சாலையில் கிடந்தனர்,அப்போது சாலையில் இடது திசையில் காரில் வீட்டுக்கு சென்ற தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி பள்ளிகுழந்தைகளின் அழும் சத்தம் கேட்டு காரை திருப்பி வந்து காயத்துடன் வலியால் துடித்து கொண்டு இருந்த இரண்டு பள்ளி குழந்தைகள் மற்றும் அவரது தந்தையையும் மீட்டு அவர்களை தனது அரசாங்க காரில் ஏற்றி பயப்படாமல் போங்கள் எனக் கூறி தனது உதவியாளரையும் துணைக்கு மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தார்,மேலும் விபத்தில் சிக்கிய மற்றொருவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு பின்னர் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி மருத்துவமனைக்கு சென்று ஆறுதல் தெரிவித்து விட்டு வீட்டுக்கு சென்றார்....

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் இரண்டு சக்கர வாகன விபத்தில் சிக்கி ரத்த காயத்துடன் பள்ளி ச....

தஞ்சையை அடுத்த தளவாபாளையம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக புதிய பேருந்து வசதி வேண்டும் என்பது இருந்து வந்தது, இதன...
02/11/2023

தஞ்சையை அடுத்த தளவாபாளையம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக புதிய பேருந்து வசதி வேண்டும் என்பது இருந்து வந்தது, இதனையடுத்து இக்கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி புதிய பேருந்து சேவை வசதி தொடங்கப்பட்டது, தஞ்சையிலிருந்து சாரநாத் நகர், தைக்கால், தளவாபாளையம், மருங்கை, கத்திரிநத்தம், குளிச்சப்பட்டு ஆகிய ஊர்களுக்கு சென்று வர இந்த வழித்தடத்தில் பேருந்து வசதியினை எம்பி கல்யாணசுந்தரம் கொடியசைத்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி தொடங்கி வைத்தார்,இந்நிகழ்ச்சியில் அம்மாபேட்டை ஒன்றிய பெருந்தலைவர் கலைச்செல்வன், வடக்கு ஒன்றிய செயலாளர் அம்மாபேட்டை சுரேஷ், கும்பகோணம் கோட்ட போக்குவரத்து மேலாளர் பாலமுருகன், உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

தஞ்சையை அடுத்த தளவாபாளையம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக புதிய பேருந்து வசதி வேண்டும் என்பது இருந்து ....

தஞ்சாவூரில் விபத்தில் காயமடைபவர்களுக்கும் மற்றும் உடல்நல அவசரநிலைகளை எதிர்கொள்பவர்களுக்கும் சிகிச்சையளிக்க உயர் வசதிகள் ...
31/10/2023

தஞ்சாவூரில் விபத்தில் காயமடைபவர்களுக்கும் மற்றும் உடல்நல அவசரநிலைகளை எதிர்கொள்பவர்களுக்கும் சிகிச்சையளிக்க உயர் வசதிகள் கொண்ட அவசரநிலை ஊர்தி சேவை மற்றும் விரைவான பதில்வினை சிகிச்சைக்குழுவின் ஆதரவோடு இயங்கும் ஹெல்ப்லைன் சேவையை தஞ்சாவூர் மாநகராட்சியின் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி தொடங்கி வைத்தார், தஞ்சாவூரில் பல்வேறு துறைகளுடன் உயர்சிகிச்சை வழங்கும் மீனாட்சி மருத்துவமனை, மருத்துவ அவசரநிலைகளை எதிர்கொள்ளும் நேரத்தில் பாதிக்கப்பட்டவர்களை விரைவாக மருத்துவமனைக்கு அழைத்து வருவதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் தொடர்புகொள்ள ஒரு பிரத்யேக உதவி எண் சேவையை (7502506666) தொடங்கியிருக்கிறது. சாலைப் போக்குவரத்து விபத்தில் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் மாரடைப்பு மற்றும் ஸ்ட்ரோக் , பக்கவாதம் போன்ற உயிருக்கு ஆபத்தான அவசரநிலைகளை எதிர்கொள்பவர்களுக்கு இச்சேவை பெரும் உதவியாக இருக்கும்,...

தஞ்சாவூரில் விபத்தில் காயமடைபவர்களுக்கும் மற்றும் உடல்நல அவசரநிலைகளை எதிர்கொள்பவர்களுக்கும் சிகிச்சையளிக.....

தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரை பெற முயற்சி மேற்கொள்ளாமலும், ...
05/10/2023

தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரை பெற முயற்சி மேற்கொள்ளாமலும், குறுவை சாகுபடியினை காப்பீட்டு திட்டத்தில் சேர்க்காமலும், விவசாயிகளுக்கு துரோகம் இழைத்த திமுக அரசை கண்டித்தும், உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி உரிய நேரத்தில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா அரசை கண்டித்தும், குறுவை சாகுபடி மேற்கொண்ட சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் கருகிய நெற்பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 35 ஆயிரம் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர், பின்னர் திமுக அரசை கண்டித்தும், கர்நாடக அரசை கண்டித்தும் கட்சியினர் கோஷம் எழுப்பினர், பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் காமராஜ் கூறும்போது, கர்நாடக அரசிடம் உரிய காலங்களில் தண்ணீர் பெற்றுத்தர தவறியதால் சுமார் 3.5 லட்சம் ஏக்கர் கருகி போய்விட்டது, சம்பா சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது, ஆகவே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றிற்கு ரூ 35 ஆயிரம் இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும், மேலும் அனைத்துக் கட்சி கூட்டம் கூட்டாதது விவசாயிகளுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது என்று தெரிவித்தார், பின்னர் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறும்போது, அதிமுக அரசு டெல்டா விவசாயிகளை மனதில் வைத்துக் கொண்டு டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலாக அறிவித்தது மட்டுமல்ல, வறட்சி,புயல், வெள்ளம் வந்த போது ரூ 2,268 கோடி நிவாரணம் வழங்கியது என்று தெரிவித்தார், இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் சேகர், மாநகர செயலாளர் சரவணன், முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், அமைப்பு செயலாளர் காந்தி, கொள்கை பரப்பு துணை செயலாளர் திருஞானம், விவசாய பிரிவு துணை செயலாளர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

தஞ்சாவூரில் அதிமுக கட்சி சார்பில், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கு போதிய அளவு நீரை பெற முயற்சி மேற்கொ....

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மத்திய மாவட்டம் (தஞ்சாவூர், ஒரத்தநாடு) அதிமுக சார்பில் மாவட்ட செயலாளராக சேகர், மாநகர செ...
03/10/2023

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மத்திய மாவட்டம் (தஞ்சாவூர், ஒரத்தநாடு) அதிமுக சார்பில் மாவட்ட செயலாளராக சேகர், மாநகர செயலாளராக சரவணன் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளாக அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் இபிஎஸ் நியமித்தார்,இதனையடுத்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் தலைமையில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக புறப்பட்டு தஞ்சை ரயிலடி பகுதியில் உள்ள முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா உருவ சிலைகளுக்கு முன்னாள் அமைச்சர் காமராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், பின்னர் காமராஜ் பேசும்போது மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை, எனவே மக்கள் விரோத ஆட்சி நடைபெறுகிறது, தஞ்சை தரணி தண்ணீர் இல்லாமல் விவசாயம் காய்ந்து போய் உள்ளது, நமக்கு உரிய தண்ணீரை காவிரியில் இருந்து பெற்று தர தகுதி இல்லாத அரசாங்கம், முதலமைச்சர் இருந்து வருகிறார், கர்நாடகாவில் தண்ணீர் தர மறுக்கிறார்கள், உரிய காலத்தில் நமக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரை பெற்றுத் தராத அரசாங்கமாக திமுக இருக்கிறது, எனவே தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 5 டெல்டா மாவட்டங்களில் வருகின்ற 6 ந்தேதி மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்றும், சம்பா சாகுபடி செய்ய முடியுமா என்று விவசாயிகள் ஏக்கத்தில் உள்ளனர், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூபாய் 35 ஆயிரம் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திம், கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவித்தார், இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம், பால்வளத் தலைவர் காந்தி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் மத்திய மாவட்டம் (தஞ்சாவூர், ஒரத்தநாடு) அதிமுக சார்பில் மாவட்ட செயலாளராக சேகர....

தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் 31 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவரும், ப...
24/09/2023

தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் 31 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவரும், பல்கலைக் கழகத்தின் வேந்தருமான கி.வீரமணி கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார், இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், பின்னர் பேட்டியளித்த கி.வீரமணி கூறும்போது, சனாதானம் என்றால் என்ன என்று குழப்பிக் கொண்டு இருந்தார்கள், இப்போது அது என்ன என்பதை நீதிமன்றத்தில் சொல்வதற்கு எங்களுக்கு நல்வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நீட் ஜீரோ ஆகிவிட்டது என்று மத்திய அரசே ஒப்புக் கொண்டு விட்டது,அவர்களே ஜீரோவாக்கி விட்டார்கள்,நாங்கள் ஆக்கவில்லை, நீட் தேர்வு அதன் நோக்கத்தை எந்த வகையிலும் அதன் நோக்கத்தை நிறைவேற்றவில்லை என்று மத்திய அரசே ஒப்புக் கொண்டு விட்டதற்கான அடையாளம் இது,நீட் தேர்வு நடத்தியும் எந்த பயனும் இல்லை என்று தெரிந்து விட்ட பின்னரும் நீட் தேர்வு நடத்துவற்கான காரணம் கார்ப்பரேட்டுகள் கொள்ளை அடிப்பதற்காகவே என்று புரிந்து கொள்ள வேண்டும், இன்னும் ஆறு மாதத்தில் ஆட்சி மாறும், காட்சி மாறும், நீட் ஜீரோ ஆகும் என்றும் மகளிர் இட ஒதுக்கீடு கானல் நீர் போன்றது, அது வரும் ஆனால் வராது, என்று தெரிவித்தார்.

தஞ்சாவூர் வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் 31 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் த.....

தஞ்சாவூர் மதர்தெரசா பவுண்டேஷன் பல்வேறு சமூகப் பணிகளை வழங்கி வருகிறது, இந்நிலையில் புனித அன்னை தெரசாவின் 113 ஆவது பிறந்தந...
27/08/2023

தஞ்சாவூர் மதர்தெரசா பவுண்டேஷன் பல்வேறு சமூகப் பணிகளை வழங்கி வருகிறது, இந்நிலையில் புனித அன்னை தெரசாவின் 113 ஆவது பிறந்தநாள் விழா மாதாக்கோட்டை ரோடு அன்பு இல்லத்தில் நடைபெற்றது, இவ்விழாவில் ஏழை,எளிய மற்றும் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை தொடர கல்வி உதவித் தொகையாக சுமார் 6.50 லட்சம் நிதி வழங்கப்பட்டது, மேலும் தையல் இயந்திரம், வாக்கர் ஆகியவையும் வழங்கப்பட்டது, இவ்விழாவில் மனித நேய பண்பாளர் வழக்கறிஞர் எஸ்.எஸ். ராஜ்குமார், திரைப்பட நடிகர் கும்கி புகழ் ஜோமல்லூரி, மாநகராட்சி மேயர் ராமநாதன், தொழில் வர்த்தக சங்கத்தின் முன்னாள் தலைவர் பாலசுந்தரம், உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர், மதர்தெரசா பவுண்டேஷன் சேர்மன் சவரிமுத்து வரவேற்புரை ஆற்றினார், இவ்விழாவில் அறங்காவலர் கோவிந்தராஜ் நன்றி தெரிவித்தார், விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் முரளி கிருஷ்ணன் தலைமையில் திட்ட இயக்குனர் ரத்தீஷ்குமார், தளவாட மேலாளர் ஜெரோம், நிர்வாக மேலாளர் மெர்சி, மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, ரேணுகா மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கிறிஸ்டி, அமிர்தவர்ஷினி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர், இவ்விழாவில் ஏராளமான பொதுமக்கள்,பள்ளி கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்

தஞ்சாவூர் மதர்தெரசா பவுண்டேஷன் பல்வேறு சமூகப் பணிகளை வழங்கி வருகிறது, இந்நிலையில் புனித அன்னை தெரசாவின் 113 ஆவத....

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை சரபோஜி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார்,இவரது மனைவி வைஷ்ணவி, இவர்களின் மகன் நிவின் பங்கஜ்...
19/08/2023

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை சரபோஜி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார்,இவரது மனைவி வைஷ்ணவி, இவர்களின் மகன் நிவின் பங்கஜ் (7),வினோத்குமார் வெளிநாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார், மேலும் நிவின் பங்கஜ் அங்கு 3ம் வகுப்பு படித்து வருகிறார்,பள்ளி விடுமுறை நாளில் தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வினோத்குமார் தனது மனைவி மற்றும் மகனுடன் வந்துள்ளார், இந்நிலையில் சிறுவன் நிவின் பங்கஜ் கடந்த 8 மாதங்களாக ஐ.நாவால் அங்கீகாரம் பெற்ற 195 நாடுகளின் தேசிய கொடிகளை பார்த்து அவற்றின் மூலம் அவற்றின் நாடுகள் தலைநகரங்கள் மற்றும் அவற்றின் நாணயங்கள் போன்றவற்றை மிக குறைந்த நிமிடத்தில் சொல்வதற்கு பயிற்சி எடுத்துள்ளார்....

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை சரபோஜி நகர் பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார்,இவரது மனைவி வைஷ்ணவி, இவர்களின் மகன் நிவ.....

டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் பயன் பெறும் வகையில் கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் பித்தந...
09/08/2023

டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் பயன் பெறும் வகையில் கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மற்றும் கல்லீரல் பித்தநீர் சார்ந்த அறுவை சிகிச்சைகளை வழங்குவதற்காக தஞ்சாவூரில் மீனாட்சி மருத்துவமனையும் மற்றும் சென்னையில் உயர்சிகிச்சை அளிக்கும் கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையும் கூட்டு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன, அதன்படி கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையின் நிபுணர்கள், தஞ்சாவூரிலுள்ள மீனாட்சி மருத்துவமனைக்கு நேரில் வருகை தந்து வெளிநோயாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை வழங்குவார்கள், மேலும் நவீன, அறுவை சிகிச்சைக்கான வசதிகளை பயன்படுத்தி கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொள்வர், இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மீனாட்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் கிளெனீகில்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனை சார்பாக கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சைப் பிரிவின் இயக்குனர் டாக்டர் ஜாய் வர்கீஸ் அவர்களும் கையொப்பமிட்டனர்....

டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த நோயாளிகள் பயன் பெறும் வகையில் கல்லீரல் உறுப்புமாற்று அறுவை சிகிச்சை மற்றும் கல்...

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சுற்றுப்பாதை இரத்தக்குழாய் நீக்கம்’ என்ற புதுமையான மருத்துவ செயல்முறையை 78 வயதான நோயா...
29/07/2023

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சுற்றுப்பாதை இரத்தக்குழாய் நீக்கம்’ என்ற புதுமையான மருத்துவ செயல்முறையை 78 வயதான நோயாளிக்கு வெற்றிகரமாக செய்துள்ளது, உடைப்பதற்கு மிகவும் கடினமான, அதிக சுண்ணாம்பு காரை ஏறிய கரோனரி படிமங்கள் என்ற இருதய பிரச்சனைக்கு தீர்வுகாண, கதீட்டர் அடிப்படையிலான மேம்பட்ட இச்செயல் உத்தியை மருத்துவர்கள் மேற்கொண்டனர். காரைக்காலைச் சேர்ந்த முதியவரான குருநாதன் (78) என்பவருக்கு கரோனரி தமனி பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக அவரது இரத்தநாளங்களின் உடற்கூறியல் இருக்கவில்லை. எனவே தமனியில் ஸ்டென்ட் பொருத்துவதற்கு முன்பு ‘சுற்றுப்பாதை இரத்தக்குழாய் நீக்கம்’ (Orbital Atherectomy) கருவியைப் பயன்படுத்தி தமனிகளிலிருந்த சுண்ணாம்பு காரையை (கால்சியம்) மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக அகற்றியது.சுற்றுப்பாதை இரத்தக்குழாய் நீக்கம்’ என்பது, இச்செயல்முறையில் மிக நவீன செயல் உத்தியாகும்....

தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில் சுற்றுப்பாதை இரத்தக்குழாய் நீக்கம்’ என்ற புதுமையான மருத்துவ செயல்முறையை...

தஞ்சை மாவட்டம் கும்பகோணம்  அருகே விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.இந்தப் பள்ளியில் விளத்தூர் அரித்துவாரம...
21/07/2023

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.இந்தப் பள்ளியில் விளத்தூர் அரித்துவாரமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 250 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.இப்பள்ளியில் 1968 ஆம் ஆண்டு ஜோதி என்ற பெண்மணி பயின்றுள்ளார்,இந்த நிலையில் தனது தாயார் ஜோதியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மகன் பிரபுராஜ்குமார் 55 ஆண்டுகளுக்கு முன்பு தன் தாய் பயின்ற அரசு நடுநிலைப் பள்ளிக்கு ரூ 3 லட்சம் மதிப்பீட்டில் பள்ளிக்குத் தேவையான பேன்,குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம்,பாத்திரம்,பெட்ஷீட்,குடம் போன்ற பல்வேறு பொருட்களை பள்ளிக்கு கல்வி சீர்வரிசையாக வழங்கினார்,முன்னதாக பிரபு ராஜ்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர், பொதுமக்கள் அருகில் உள்ள கோவிலில் இருந்து தப்பாட்டம் முழங்க பூ,பழம் போன்றவை அடங்கிய சீர்வரிசை தட்டுகளுடன் பள்ளிக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்து வலங்கைமான் வட்டார கல்வி அலுவலர் சுகந்தியிடம் ஜோதி தன்னார்வ தொண்டு நிறுவன தலைவர் பிரபு ராஜ்குமார், கல்வி சீர் வரிசையை வழங்கினார்....

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே விளத்தூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.இந்தப் பள்ளியில் விளத்தூர் ...

ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, பொறியியல் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகள்,இறுதியாண்டு மாணவர்களுக்கு வளர்ந்து வரும் பணியிட...
13/07/2023

ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, பொறியியல் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகள்,இறுதியாண்டு மாணவர்களுக்கு வளர்ந்து வரும் பணியிட திறன்கள் குறித்து பயிற்றுவிப்பதற்காக பஜாஜ் பொறியியல் திறன் பயிற்சி (BEST) மையத்தை நிறுவுவதற்காக சாஸ்த்ரா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. பஜாஜ் ஆட்டோவின் VP-CSR, சுதாகர் அவர்கள் கூறுகையில் ”2026 ஆம் ஆண்டுக்குள் உற்பத்தித் துறையில் 33 லட்சம் திறமையான பணியாளர்கள் தேவை என்று வாகன திறன் மேம்பாட்டு கவுன்சில் (ASDC) தீர்மானித்துள்ளது. மெகாட்ரானிக்ஸ், சென்சார்கள் & கன்ட்ரோல், ரோபாட்டிக்ஸ் & ஆட்டோமேஷன் மற்றும் தொழில்துறை 4.0 மற்றும் மேம்பட்ட உற்பத்தி ஆகிய நான்கு வளர்ந்து வரும் பகுதிகளில் பயிற்சி வழங்கப்படும்....

ஆட்டோமொபைல் நிறுவனமான பஜாஜ் ஆட்டோ, பொறியியல் மற்றும் டிப்ளமோ பட்டதாரிகள்,இறுதியாண்டு மாணவர்களுக்கு வளர்ந்து ...

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்.டி போன்ற கூட்டுப் பட்டப்படிப்புகள், மாணவர்கள் மற்றும் ஆச...
24/06/2023

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்.டி போன்ற கூட்டுப் பட்டப்படிப்புகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பரிமாற்றம் ஆகியவற்றிற்காக நியூயார்க் மாநில பல்கலைக்கழகமான பிங்காம்டன் (Binghamton) பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் ஹார்வி ஸ்டென்ஜர் மற்றும் சாஸ்த்ராவின் துணைவேந்தர் டாக்டர் எஸ்.வைத்தியசுப்ரமணியம் ஆகியோர் கையெழுத்திட்டனர். பிங்காம்டன் பல்கலையில் நடைபெற்ற இவ்விழாவில் இன்ஜினியரிங் டீன் டாக்டர் கிருஷ்ணசாமி ஸ்ரீஹரி மற்றும் திட்டமிடல் துறைத்தலைவர் டாக்டர் மதுசூதன் கோவிந்தராஜூ ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிங்காம்டன் மூலம் 2+2 ஆண்டு இளங்கலை படிப்பும், சாஸ்த்ரா மற்றும் பிங்காம்டன் உடன் இணைந்த 3.5+1.5 இளங்கலை மற்றும் முதுகலை படிப்பு, ஆசிரியர்களுக்கான கல்வி விடுப்பு மற்றும் இணைந்த Ph.D....

தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்.டி போன்ற கூட்டுப் பட்டப்படிப்புகள், மாணவர்கள.....

தஞ்சாவூர் மீனாட்சிமருத்துவமனையில் ப்ரோபோஸ்கிஸ் லேட்டரலிஸ் (PL) என்ற ஒரு அரிதான craniofacial anomaly பிரச்சனையால் அவதியுற...
24/06/2023

தஞ்சாவூர் மீனாட்சிமருத்துவமனையில் ப்ரோபோஸ்கிஸ் லேட்டரலிஸ் (PL) என்ற ஒரு அரிதான craniofacial anomaly பிரச்சனையால் அவதியுற்ற ஒரு 10 வயது சிறுவனுக்கு அதை அகற்றுவதற்கான ஒரு சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறது. முதலமைச்சரின் விரிவான சுகாதார காப்பீடு திட்ட நிதியுதவியின் கீழ், இந்த அறுவைசிகிச்சை நடத்தப்பட்டிருக்கிறது.பிரதீப் என்ற இச்சிறுவனுக்கு அவனது பிறப்பிலிருந்தே வலது முன்னந்தலைப் பகுதியில் இருந்த வீக்கத்திலிருந்து சளி வெளியேற்ற பிரச்சனை இருந்து வந்தது. பல ஆண்டுகளாக இதனால் கடும் சிரமப்பட்ட இந்த இளம் நோயாளியை பரிசோதித்த இம்மருத்துவமனையின் மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை துறையின் தலைவரும், முதுநிலை நிபுணருமான டாக்டர் அருண்குமார் இந்த சிறுவனின் முகத்தின் வலது முன்புற பகுதியில் PL என அழைக்கப்படும் Proboscis Lateralis இருப்பதை கண்டறிந்தார்.100,000 நபர்களில், ஒரு நபருக்கும் குறைவாகவே இது நிகழ்வதாக அறியப்படுவதால் இதுவொரு மிக அரிதான பாதிப்பே....

தஞ்சாவூர் மீனாட்சிமருத்துவமனையில் ப்ரோபோஸ்கிஸ் லேட்டரலிஸ் (PL) என்ற ஒரு அரிதான craniofacial anomaly பிரச்சனையால் அவதியுற்ற ....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Thanjai News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thanjai News:

Shortcuts

  • Address
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share