22/09/2021
#ஐக்கிய_அமெரிக்கா பொருளாதார பலம் & ஆயுத பலமிக்க வல்லரசு நாடு. அறிவியல், கல்வி, சுகாதாரம், விளையாட்டு போன்றவற்றில் உலகின் முன்னணி நாடு. இது பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த விடயம்...
அமெரிக்காவின் மறுபக்கம்
குற்றங்களுக்கான தரப்படுத்தலில் கூட
அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது. கொலை,கொள்ளை,கற்பழிப்பு,பாலியல் துன்புறுத்தல்,சிறுவர் துஸ்பிரயோகம் (2019ம் ஆண்டு தரவின்படி 2-5 வயதிற்கு உற்பட்ட 158,900 குழந்தைகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக பதிவுகள் கூறுகின்றன) போன்ற இன்னோரன்ன...
...
அமெரிக்க வீடுகளில் சமைப்பது நின்றபின் அமெரிக்காவில் என்ன நடந்தது???
1980-ல் புகழ் பெற்ற அமெரிக்க பொருளாதார நிபுணர்கள்,
சமையலை தனியார் கம்பெனிகளுக்கு கொடுத்தாகிவிட்டது, வயதானவர்கள் குழந்தைகள் பராமரிப்பை அரசாங்கத்துக்கு கொடுத்துவிட்டால், குடும்ப அமைப்பு அழிந்துவிடும் என்று தீர்க்கதரிசனமாகக் கூறினார்கள்...
வீட்டில் சமைப்பதை நிறுத்தி விட்டு, கடைகளில் வாங்கித் தின்னும் பழக்கம் வந்தது. இதனால் அமெரிக்க குடும்ப அமைப்பு ஏறக்குறைய அழிந்துவிட்டது...
வீட்டில் சமைப்பது என்பது குடும்பத்தை இணைப்பது. சமையல் குடும்பக் கலாச்சாரத்தின் மையப்புள்ளி....
சமையல் அறையை மூடிவிட்டு, படுக்கை அறை மட்டும் போதும் என்று நினைத்த அமெரிக்க குடும்பங்களின் நிலை என்ன???
1971-ல் கணவனும்-மனைவியும் குழந்தைகளுடன் வாழ்ந்த அமெரிக்கக் குடும்பங்கள் 71 சதவிகிதம்...
2020ல் அது 20 சதவிகிதமாக நலிந்துவிட்டது...
அன்று குடும்பங்களாக இருந்த வீடுகள் இன்று தங்கும் விடுதிகளாகிவிட்டன...
அமெரிக்காவில் இப்போது பெண்கள் தனித்திருக்கும் வீடுகள் 15 சதவிகிதம்...
ஆண்கள் தனித்திருக்கும் வீடுகள் 12 சதவிகிதம்...
முதிய பெற்றோர் மட்டுமே இருக்கும் வீடுகள் 19 சதவிகிதம்...
6 சதவிகிதம் வீடுகள் குடும்பங்கள் கணவன் மனைவி சேர்ந்து தங்குமிடங்கள்...
இன்று பிறக்கும் மொத்த குழந்தைகளில் 41 சதவிகிதம் திருமணமாகாத பெண்களுக்கு பிறக்கின்றன...
அதில் பாதி, அதாவது 20% குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் சிறுமிகள் பெற்றவை...
50 சதவிகிதம் முதல் திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன.
67 சதவிகிதம் இரண்டாவது திருமணங்களும்,
74 சதவிகிதம் மூன்றாவது திருமணங்களும் விவாகரத்தாகின்றன...
வெறும் படுக்கை அறை மட்டும் குடும்பம் அல்ல, சமையல் அறை இல்லாது, படுக்கை அறை மட்டும் இருந்தால், குடும்ப வாழ்க்கை நிலை குலைந்துவிடும் என்பதற்கு அமெரிக்கா உதாரணம்...
குடும்பங்கள் அழிந்தால் மனநலமும் உடல் நலமும் சீரழியும்...
எனவே சமையல், சமையல் அறை என்பது குடும்ப நலனுக்கு மட்டும் ஆதாரம் அல்ல... உடல் நலம், மன நலம் பொருளாதார நலனுக்கும் அவசியம்...
இன்று நம்மிடையே குடும்பத்துடன் கடைகளில் சாப்பிடுவதும்...Swiggy, Zomato, uber eats போன்ற ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடுவதும், மெத்தப் படித்த, நடுத்தர மக்களிடம் நாகரீகமாகிக் கொண்டிருக்கிறது...
இது ஒரு பேராபத்து...
அமெரிக்காவின் அனுபவம் நமக்கு பாடமாக அமையட்டும்...