30/12/2020
“வெங்காய மனிதர்கள்” நூல் தற்போது, “டிஸ்கவரி புக் பேலஸ்”-ல் கிடைக்கிறது.
டிஸ்கவரி புக் பேலஸ்,
எண் 6, மஹாவீர் காம்பளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை - 600078.
தொடர்பு எண்கள் : +91 44 65157525 , Cell +91 9940446650
மின்னஞ்சல் முகவரி : [email protected]
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்)
“வெங்காய மனிதர்கள்” நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள், உலக வாழ்வு, நிலையாமை, உளவியல், மனிதம், கடவுள் நம்பிக்கை, பல்வேறு கோணங்களில் காதல், மூன்றாம் பாலினம், சாதி மத வேறுபாடு, ஆணவக் கொலை, ஊழல், தமிழ் தேசியம், மதுப் போதை என பல்வேறு தளங்களில் பயணித்து செல்கின்றன.
எழுத்தாளர்கள் பார்வையில் "வெங்காய மனிதர்கள்" நூல்...
பொதுவாக ஒரு நூலை வாசிக்கும் போது எனக்கு பிடித்த வரிகளை அடிக் கோடிட்டுக் கொள்வேன். பிடித்த இடங்களில் நான் கூடுதலாக எழுதி வைத்துக் கொள்வேன். வேறு நிறத்தில் அந்த இடத்தையெல்லாம் குறித்து வைத்துக் கொள்வேன். கடைசியில் பார்த்தால், இந்நூலை ஒவ்வொருப் பக்கத்திலும் நான் அப்படி செய்திருக்கிறேன் என்பதை தெரிந்துக் கொள்ள முடிந்தது.
இந்த நூலில் இருக்கின்ற புதிய புதிய சொல்லாடல்களைக் கண்டுப் பிரமித்துப் போனேன் தோழர்களே! இத்தனை மொழி ஆளுமையா! அவ்வளவு அற்புதமான வார்த்தைகள்! ஒவ்வொரு பக்கமும் ஆச்சரியம்!
ரொம்ப சின்ன சின்ன நுணுக்கங்கள் கூட கோ.அருண்பாண்டியன் கவனித்து எழுதியிருக்கிறார் என்பது நிச்சயமாக இந்த சமூகத்தின் மீதான அவரது அக்கறையைக் காட்டுகிறது. இந்த சமூகத்தில் உள்ள மனிதர்கள், அவர்களின் பாடுகள், அவர்களின் வலிகள், அவர்களின் வேதனைகள், கோ.அருண்பாண்டியனுக்குள் ஏற்படுத்துகின்ற கிளர்ச்சியை மிக அற்புதமாக 16 சிறுகதைகளாக, 16 பொக்கிஷங்களாக கொடுத்திருக்கிறார்.
- “கலைமாமணி” ஆண்டாள் பிரியதர்ஷினி
இந்தப் புத்தகத்தை எப்படி அடையாளப்படுத்த வேண்டுமென்று சொன்னால், இந்த புத்தகம் முழுக்க, முழுக்க சிறுகதைகளாக இருந்தாலும் கூட தத்துவங்களைத் தேடிய ஒரு ஊர்வலம் என்று சொல்லலாம். மெய்மையைத் தேடிய ஒரு பயணம் என்று கூட சொல்லலாம்.
வாழ்க்கை என்றால் என்ன? என்ற கேள்வி கோ.அருண்பாண்டியனுக்குள் சதாகாலமும் தொந்தரவு செய்துக் கொண்டிருக்கிறது. இந்த வாழ்க்கை ஏன் இவ்வளவு மோசமாக அமைந்திருக்கிறது? ஏன் வறுமை சூழ்ந்திருக்கிறது? ஏன் நோய்களும், பிணியும், கொடுமையும், சித்ரவதைகளும் இந்த நாட்டிலே மலிந்திருக்கின்றன என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டேயிருக்கிறார். அந்தக் கேள்விகளுக்கான விடைக்காணலை இவர் மிக அழகாக அந்த ஒவ்வொரு கதையிலும் பிரச்சனைகளை மட்டும் பார்க்காமல், பிரச்சனைகளை மட்டும் பேசாமல், அதற்கு தீர்வையும் கண்டிருக்கிறார்.
இவர் எழுத்தாளர் மட்டுமல்ல, சிறந்த சிந்தனையாளராக இருக்கிறார். தொடர்ந்து இவர் இலக்கிய துறையில் இயங்குவாரென்று சொன்னால், தமிழ் மொழியின் அற்புதமான பத்து எழுத்தாளர்களில் இவர் ஒரு எழுத்தாளராக விளங்குவார் என்பதில் எந்த ஐயமுமில்லை.
- "திறனாய்வு செம்மல்" திரு.எழிலரசு
எப்படி இந்த வயதில் இப்படிப்பட்ட எண்ணங்கள் கோ.அருண்பாண்டியனுக்கு தோன்றுகிறது என்று நான் பார்க்கும் போது தான் மிகவும் வியப்படைந்தேன். இன்றைய காலக்கட்டத்தில், சமூகத்திற்கு விழிப்புணர்வு தரக்கூடிய வகையில் அனைத்து செய்திகளையும் 16 வகைகளில், 16 சிந்தனைகளை நமக்கு வித்திட்டிருக்கின்றார். இதேப் போல் இவர் பல நூல்களைப் படைக்க வேண்டும். இந்த சமுதாயத்திற்கு வெளிச்சம் போட்டுக்காட்டி தத்தளிக்கும் நிலையிலிருக்கும் இந்த சமுதாயத்தை சிந்திக்க வைத்து அவர்களுக்கு ஒரு நல்ல வெளிச்சத்தைக் காட்ட வேண்டும்.
- "கலைமாமணி" வாசுகி கண்ணப்பன்
அனைத்து கதைகளும் சமூகத்திற்கு ஒரு நல்ல கருத்தினை எடுத்துரைப்பதாகவும், மிக எளிமையாகவும், தேர்ந்த மொழி நடையுடனும் படைக்கப்பட்டிருக்கின்றன. சிறுகதைக்கு இலக்கணமான விறுவிறுப்புக் குறையாமலே அனைத்து கதைகளும் செல்கின்றன.
இந்த நூல் நமக்குள் பல தேடல்களையும், கேள்விகளையும் உருவாக்குமென்பதில் ஐயமில்லை.
- முனைவர். முத்துமாலை
(பேராசிரியர், எத்திராஜ் மகளிர் கல்லூரி, சென்னை.)