23/11/2022
வடகிழக்கில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு நீதி பெற்றுத்தர பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஐயா அவர்கள் முன்வந்துள்ளனர்.
வடக்கு கிழக்கிலுள்ள வெளிநாட்டு பட்டதாரி மாணவர்களுக்கு அரச நியமனங்கள் வழங்கப்பட்டு இடை நிறுத்தப்பட்டமை தொடர்பான சந்திப்பு கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரின் யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களிருந்து பட்டதாரிகள் சென்றனர்.
பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தணியுமான எம்.ஏ.சுமந்திரன் ஐயா அவர்களுடன் சட்டரீதியாக முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார்கள்.
இதன்போது குறிப்பாக வடகிழக்கிலுள்ள வெளிநாட்டு பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளமையை கருத்தில் கொண்டு ஐயா இலவசமாக நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து நீதி பெற்று தருவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்தர்.