The Kdnl Journalist

  • Home
  • The Kdnl Journalist

The Kdnl Journalist செய்திகளில் சார்பின்மை, நேர்மை மற்றும் நடுநிலை.. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.

� Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

 #தென்காசி சேர்ந்த நிகர் ஷாஜி தலைமையில் இந்திய விஞ்ஞானிகள் அனுப்பும் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🛰️
01/09/2023

#தென்காசி சேர்ந்த நிகர் ஷாஜி தலைமையில் இந்திய விஞ்ஞானிகள் அனுப்பும் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🛰️

29/08/2023

Kutralam mainfalls live #குற்றாலம் #மெயினருவி #நிலவரம் FALLS IN COURTALLAM MAIN FALL...

 #புதிய_வழித்தடம்_ஆரம்பம்... தடம் எண் 403,  #மதுரை முதல்  #திருவனந்தபுரம் வரை ராஜபாளையம்,  வாசுதேவநல்லூர், புளியங்குடி, ...
29/08/2023

#புதிய_வழித்தடம்_ஆரம்பம்...
தடம் எண் 403, #மதுரை முதல்
#திருவனந்தபுரம் வரை ராஜபாளையம், வாசுதேவநல்லூர், புளியங்குடி, #கடையநல்லூர், தென்காசி ,செங்கோட்டை , குளத்துப்புழை வழியாக செல்லும் பேருந்து சேவை இன்று முதல் இனிதே ஆரம்பம்...

23/08/2023

கடையநல்லூர் ரகுமானியாபுரம் மற்றும் பேட்டை பகுதிகளில் வெறி நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராசித் சிறுவர்களின் சிகிச்சை பற்றியும் அவர்களின் குடும்ப நிலை பற்றியும் கூறிய தகவல்...

கடையநல்லூர் வாரச்சந்தைமுன்பு பைக்  விபத்து இருவர்படுகாயம் ஒருவருக்கு கால்முறிந்து படுகாயம் அடைந்த முதியவர்எந்த ஊரு என்று...
22/07/2023

கடையநல்லூர் வாரச்சந்தைமுன்பு
பைக் விபத்து

இருவர்படுகாயம்
ஒருவருக்கு கால்முறிந்து

படுகாயம் அடைந்த முதியவர்எந்த ஊரு என்று தெரியவில்லை

இன்னொருவர் கடையநல்லூர் மதினாநகர்பகுதியைச்சார்ந்தவர்
விபத்துக்கான காரணம் மிக வேகம் இருசக்கரம் ஓட்டும் நபர்கள்
வேகத்தை குறைப்பது சிறந்தது...

சங்கரன்கோவில் சங்கரநயினார் திருக்கோயிலில் ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் நடைபெற்றது!!!
21/07/2023

சங்கரன்கோவில் சங்கரநயினார் திருக்கோயிலில் ஆடித்தபசு திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் நடைபெற்றது!!!

15/07/2023
தென்காசி  ஈனாவிலக்கு அருகே வாகன விபத்து...கடையநல்லூர் மக்காநகர் 9வது தெருவை சேர்ந்தவர் படுகாயமடைந்ததால் தென்காசி அரசு மர...
14/12/2022

தென்காசி ஈனாவிலக்கு அருகே வாகன விபத்து...
கடையநல்லூர் மக்காநகர் 9வது தெருவை சேர்ந்தவர் படுகாயமடைந்ததால் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்...

13/12/2022

கடையநல்லூர் ரகுமானியாபுரம் ஐந்தாவது தெருவைச் சேர்ந்த ஆண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை - காவல்துறை விசாரணை..

08/12/2022

தென்காசி வந்த ஸ்டாலின் | செல்லத்துரை வேண்டும் என்று கத்திய கடையநல்லூர் திமுக ஒரு பிரிவினர் |Demands pour in as CM Stalin set to pay his maiden v...

07/12/2022

மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் அட்டவணை

08.11.2022

காலை 07.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை குற்றாலம் வழியாக தென்காசி செல்லும் வாகனங்கள் இராமாலயம்,காசிமேஜர்புரம்,இலஞ்சி,KK வலசை வழியாக செல்ல வேண்டும்.

காலை 07.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை கடையநல்லூர் செல்லும் வாகனங்கள் செங்கோட்டை, பண்பொழி,வடகரை, அச்சன்புதூர் வழியாக செல்ல வேண்டும்.

காலை 07.30 மணி முதல் முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை மதுரை சாலையில் செங்கோட்டை வரும் வாகனங்கள் கடையநல்லூர் பண்பொழி வழியாக செல்ல வேண்டும்.

காலை 11.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை இடைகால் விளக்கு வழியாக வருபவர்கள் வேலாயுதபுரம், சாம்பவர் வடகரை, சுரண்டை, பாவூர்சத்திரம்,ஆசாத் நகர்,மத்தளம்பாறை, பழைய குற்றாலம் செல்லலாம்.

காலை 11.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை மங்களாபுரம் வழியாக வருபவர்கள் அச்சன்பட்டி, வேலாயுதபுரம், சாம்பவர்வடகரை, சுரண்டை, பாவூர்சத்திரம்,ஆசாத் நகர்,மத்தளம் பாறை, பழைய குற்றாலம் செல்லலாம்.

காலை 11.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை சிங்கிலிபட்டி வழியாக வருபவர்கள் பாம்பு கோவில் சந்தை,வீரசிகாமணி, சுரண்டை, பாவூர்சத்திரம்,ஆசாத் நகர்,மத்தளம்பாறை பழைய குற்றாலம் செல்லலாம்.

காலை 11.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை வாசுதேவநல்லூர் வழியாக வருபவர்கள் நெற்கட்டும்செவல், தலைவன் கோட்டை, சங்கரன்கோவில், சுரண்டை, பாவூர்சத்திரம்,ஆசாத் நகர்,மத்தளம் பாறை, பழைய குற்றாலம் செல்லலாம்.

காலை 11.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை உள்ளார் வழியாக வருபவர்கள் இராயகிரி,KV நல்லூர், சங்கரன்கோவில், சுரண்டை,பாவூர்சத்திரம் சத்திரம்,ஆசாத் நகர், மத்தளம் பாறை, பழைய குற்றாலம் செல்லலாம்.

காலை 11.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை சிவகிரி PS வழியாக வருபவர்கள் தென்மலை,KV நல்லூர், சங்கரன்கோவில், சுரண்டை,பாவூர்சத்திரம் சத்திரம்,ஆசாத் நகர், மத்தளம் பாறை, பழைய குற்றாலம் செல்லலாம்.

காலை 11.30 மணி முதல் முதல்வர் வாகனம் கடந்து செல்லும் வரை சொக்கநாம் புதூர் வழியாக வருபவர்கள் தென்மலை,KV நல்லூர், சங்கரன்கோவில், சுரண்டை,பாவூர்சத்திரம் சத்திரம்,ஆசாத் நகர், மத்தளம் பாறை, பழைய குற்றாலம் செல்லலாம்.

25/11/2022

சாலைப் பணிக்காக பழைய சாலைய வெட்டி எடுத்துள்ளார்கள்..
வேகமாக செல்லாமல் மெதுவாக சென்றால் அனைவருக்கும் நல்லது..

13/11/2022

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் சி எம் எஸ் எஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வந்த தம்பதியர் மருத்துவமனையில் உள்ள செல்போனை திருடிக் கொண்டு செல்லும் காட்சி இவனைப் பற்றி யாருக்கேனும் அடையாளம் தெரிந்தால் மருத்துவமனைக்கு அல்லது காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்..

13/11/2022

#செல்போன்_திருட்டு
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் முத்துகிருஷ்ணாபுரம் சி எம் எஸ் எஸ் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க வந்த தம்பதியர் மருத்துவமனையில் உள்ள செல்போனை திருடிக் கொண்டு செல்லும் காட்சி இவனைப் பற்றி யாருக்க்கேனும் அடையாளம் தெரிந்தால் மருத்துவமனைக்கு அல்லது காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம்

 #கடையநல்லூரை_காணோமா???இந்த கதையை கேளுங்க : கடையநல்லூரின் அடையாளங்களில் முக்கியமான ஒன்று மணிக்கூண்டு..இங்கே நின்று பேசாத...
07/11/2022

#கடையநல்லூரை_காணோமா???

இந்த கதையை கேளுங்க :
கடையநல்லூரின் அடையாளங்களில் முக்கியமான ஒன்று மணிக்கூண்டு..
இங்கே நின்று பேசாத முதல்வர்கள் இல்லை.. எதிர்க்கட்சி தலைவர்கள் இல்லை.. நடக்காத ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் இல்லை...

அத்தகைய மணிக்கூண்டை சீரமைக்க பல்வேறு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தோம்.. செவி சாய்த்தபாடில்லை.. பழம்பெருமை கொண்ட பெரும் பணக்காரர்கள் வாழும் நகராட்சி இது.. வரிகளில் அதிகம் வசூல் செய்து அரசுக்கு அனுப்பி சாதனை புரிவதில் தமிழ்நாட்டில் இரண்டாம் இடம் கடையநல்லூர் நகராட்சி..

என்ன செய்யலாம் என்று முடிவெடுத்து ஆளுனர் அலுவலக Secretary ஐ தொடர்பு கொண்டோம்..

கணியினியில் அவர் விபரங்களை பதிவு செய்து ஊர் பெயர் கேட்டார் கடையநல்லூர் என்றோம்.. அங்கு தான் அதிர்ச்சி... ஆளுநர் அலுவலக பதிவேட்டில் கடையநல்லூர் பெயரே இல்லை... மாவட்டத்தை சொன்னோம்.. பதிவில்லை.. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி..
இப்போ திருநெல்வேலி மாவட்டத்தில் தேடுறாங்க.. நீண்ட நேரத்திற்கு பின் கடையநல்லூர் ஊர் கிடைத்தது..

மூன்று அமைச்சர்களை பெற்ற கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு இப்படி ஒரு அவலமா என்று நொந்துகொண்டு மேற்கொண்டு விபரங்கள் அளித்தோம்..

அவர்கள் இன்னும் சில தினங்களில் புதுப்பிப்பு பணிகள் நடக்கும் என்று உத்திரவாதம் அளித்தார்கள்..

இதற்கு பேருதவி புரிந்த அய்யா மாரிச்சாமி அவர்களுக்கும், கவனத்திற்கு கொண்டுவந்த நாம் தமிழர் கட்சி இளைஞர் பாசறை செய்யது சிபா அவர்களுக்கும் The Kdnl Journalist team சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்..

உங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்சினையா?அரசு சார்ந்த பணிகளில் நேர்மை மீறப்படுகிறதா ? தென்காசி மாவட்டத்தின் மிக சிறப்பான ஆட்...
04/11/2022

உங்கள் பகுதியில் ஏதேனும் பிரச்சினையா?
அரசு சார்ந்த பணிகளில் நேர்மை மீறப்படுகிறதா ?
தென்காசி மாவட்டத்தின் மிக சிறப்பான ஆட்சியர் அய்யா ஆகாஷ் (இந்திய ஆட்சிப்பணி) அவர்களை நேரடியாக தாராளமாக அனுகலாம்... எல்லாவற்றிற்கும் சிறப்பாக தீர்வு காண்கிறார்..
உங்கள் பக்கம் நேர்மை இருந்தால் நிச்சயம் உங்கள் குறைகள் 100% தீர்த்து வைக்கிறார்.. தென்காசி மாவட்டத்தின் மிகச்சிறந்த ஆட்சியர் என்னும் பெயர் மட்டுமல்ல.. இன்னும் இவர் பல நற்பெயர்களை எடுத்து தமிழ்நாடு முழுக்க வரும் காலங்களில் சிறந்து விளங்குவார் என்பதில் ஐயமில்லை...
வாழ்த்துக்கள் அய்யா...

02/11/2022

நினைவில் கொள்க :
நாளை (03-11-2022) கடையநல்லூரில் மின்தடை...

01/11/2022

கடையநல்லூரில் உங்கள் வார்டு நகர்மன்ற உறுப்பினர் (Mc) உங்கள் பகுதிக்கு செய்த பணிகளை வார்டு எண் மற்றும் உறுப்பினர் பெயர் குறிப்பிட்டு இடுகையில் பதிவு செய்யுங்கள்..

பணிகள் செய்யவில்லை என்றாலும் அதே செய்முறையில் பதிவிடுங்கள்..

அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்.படத்தில் காணும்  சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண்  தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் காவல் நிலை...
31/10/2022

அடையாளம் தெரியாத ஆண் பிரேதம்.

படத்தில் காணும் சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பண்பொழி சிவன் கோயில் அருகில் இறந்து கிடந்துள்ளார்..
மேற்படி நபரை பற்றிய தகவல் ஏதேனும் தெரிந்தால் அச்சன்புதூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும்.

பல உயிர்களை காவு வாங்கும் கடையநல்லூர் மங்களாபுரம் வளைவு.. புதிதாக வருவோருக்கு எச்சரிக்கை செய்ய பெரிய அளவில் எச்சரிக்கை ப...
31/10/2022

பல உயிர்களை காவு வாங்கும் கடையநல்லூர் மங்களாபுரம் வளைவு.. புதிதாக வருவோருக்கு எச்சரிக்கை செய்ய பெரிய அளவில் எச்சரிக்கை பலகைகள் வைக்க கடையநல்லூர் நகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை முன்வர வேண்டும்..

நேற்று ஆரியங்காவு - தென்மலை சாலையில் நடந்த விபத்தின் படங்கள்..
29/10/2022

நேற்று ஆரியங்காவு - தென்மலை சாலையில் நடந்த விபத்தின் படங்கள்..

24/10/2022

#விபத்துச்செய்தி
தீபாவளி வந்தாலே வாகனம் ஓட்டுவதில் மிக கவனம் தேவை.. அவசரகதியில் வாகனங்கள் இயக்குவதால் விபத்துகள் நடப்பது அதிகம்..
கடையநல்லூர் மங்களாபுரம் அருகே கோர விபத்து..
மதுரை to கொல்லம் சென்ற கேரள அரசு பேருந்தின் மீது இருசக்கர வாகனத்தில் சென்ற கடையநல்லூரை சேர்ந்த வாலிபர் ஐயப்பன் (16 வயது) மற்றும் உடனிருந்த பெண் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி..

வாலிபர் யார் என்று தெரிந்த நிலையில் இருவருக்கும் முகம் சிதைந்த நிலையில் பெண் யாரென்று தகவல் தெரியவில்லை..
காவல்துறை விசாரணை..

இருவரும் மிகவும் குறைந்த வயதை அடைந்தவர்கள் என்பதால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் வேதனை..

செய்தியாக்கம் : The Kdnl Journalist

12/10/2022

கடையநல்லூர் அருகே காவல்துறை அதிகாரிகள் மீது வாகனத்தை மோதவிட்டு கொலை முயற்சியா?

மதுரை to கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட காவல் உதவி ஆய்வாளர் சுந்தரய்யா மற்றும் காவலர் மருதுபாண்டி ஆகியோர் மீது இன்னோவா மோதி விபத்து..

இருவரும் படுகாயம் அடைந்து பாளையங்கோட்டை மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டுள்ளனர்..

இன்னோவா காரின் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு கொலை முயற்சியா? அல்லது விபத்தா? என்ற கோணத்தில் விசாரணை..

தீண்டாமை வழக்கு : குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை .. தென் மண்டல ஐஜி நடவடிக்கை. முதல் முறையாக இந்த சட்ட வாய்ப்பை பயன்படு...
18/09/2022

தீண்டாமை வழக்கு : குற்றவாளிகள் ஊருக்குள் நுழைய தடை .. தென் மண்டல ஐஜி நடவடிக்கை.

முதல் முறையாக இந்த சட்ட வாய்ப்பை பயன்படுத்துகிறது தமிழ்நாடு காவல்துறை

பட்டியலின மக்களுக்கு எதிராக குற்றங்களை புரியும் குற்றவாளிகளை சில காலங்களுக்கு அவ்விடத்தை விட்டு வெளியேற்ற கூடிய சட்ட பிரிவு (Externment provision) வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் உள்ளது. மேற்படி சமூக ஒடுக்குமுறையை தடுக்கவும், தொடர்ந்து பிரச்சனை ஏதும் ஏற்படாமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அச்சட்டப்பிரிவை இவ்வழக்கில் பயன்படுத்த உள்ளதாக தென்மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.

15/09/2022

கடையநல்லூர் கல்லாறு பகுதியில் மூன்று குட்டிகளுடன் புலி உலாவுவதாக செய்தி.. அங்கே குளிக்க செல்பவர்களிடம் புலி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.. காட்டை நாசமாக்கும் குடிகாரர்களும், டன் கணக்கில் உடைந்த மது பாட்டில்களும் அங்கே இருக்கும் என்று புலிக்கு நாம் முதலில் தகவல் தர வேண்டும்..

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள தனியார் லாட்ஜில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி..ஆண்,பெண்  இருவர் உ...
03/09/2022

தென்காசி மாவட்டம்
குற்றாலத்தில் உள்ள தனியார் லாட்ஜில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி..

ஆண்,பெண் இருவர் உயிரிழப்பு.

ஒருவர் திருநெல்வேலி
அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி..

குற்றாலம் காவல்துறையினர் இறந்தவர்கள் உடலை கைப்பற்றி விசாரணை செய்து வருகின்றனர்...

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when The Kdnl Journalist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share