NanbanTv

NanbanTv

05/10/2023

Leo Trailer முதல் முறையாக 🔥Trailer Launch காரைக்குடி நடராஜா திரையரங்கை தெறிக்கவிட்ட ரசிகர்கள்

உழைப்பால் உயர்ந்த நமது சிவகங்கை சீமையின் மைந்தன் சுப்ரீம் ஸ்டார் நாட்டாமை  #சரத்குமார் வாழ்கைபயணம் :🦋 டெல்லியில் 1954 ஜு...
15/09/2023

உழைப்பால் உயர்ந்த நமது சிவகங்கை சீமையின் மைந்தன் சுப்ரீம் ஸ்டார் நாட்டாமை #சரத்குமார் வாழ்கைபயணம் :

🦋 டெல்லியில் 1954 ஜுலை 14 ல இராமநாதன் - புஷ்ப லீலா தம்பதிக்கு இரண்டாவதாக பிறந்தவர்தான் சரத்குமார் இவர் உடன் பிறந்தவர்கள் அண்ணன் சுதர்சன் மற்றும் மல்லிகா என்ற ஒரு தங்கை இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள தளக்காவூர் கிராமம் தந்தை டெல்லி ஆல் இந்தியா ரேடியோ வில் பணி புரிந்தார் அங்குதான் பிறந்தார் சரத்

🦋ஆரம்ப பள்ளியை டெல்லியில் பயின்ற சரத் கல்லூரி படிப்பை சென்னை புதுக்கட்டுரை இல் பயின்றார் B.sc கணிதம் படித்துள்ளார்
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி போன்ற மொழிகளில் பேச தெரிந்த இவர் ரஷ்யன் மொழியையும் கற்று தெரிந்துள்ளார் என்பது சிறப்பு கல்லூரி படிப்பை முடித்த இவர் திரைத்துறைக்கு வரும் முன்பே
சில காலம் தினகரன் பத்திரிகையில் பணியாற்றியுள்ளார்.

🦋வீடு வீடாக சென்று பேப்பர் போடும்வேலையை செய்த அவர் பிறகு அந்த பத்திரிகையில் நிருபராகவும் இருந்திருக்கிறார்.

🦋சிலருக்கு என்னதான் மேக்கப் போட்டலும் ,வயதானது காட்டிக்கொடுத்து விடும். ஆனால் இவர் உடலை பேணுவதால் அவ்வாறு தெரிவதில்லை இவர் தனது இளமை காலத்தில் உடல் கட்டமைபிற்காக மிஸ்டர் மெட்ராஸ் யுனிவர்சிட்டி என்று பட்டம் பெற்றுள்ளார்

🦋கலையுலகில் கால்பதித்து அதை தனக்கென ஒரு இடத்தை உறுதிப்படுத்தி கொள்வது ஒன்றும் அவ்வளவு எளிதல்ல. பலசமயம் தோல்வி ஏதோ சிலசமயம் அபூர்வமாக கிடைக்கும் வாய்ப்பை கெட்டியாக பிடித்துகொண்டு முன்னேறியோர் பலர் .

🦋சரத்குமார் கதையும் அப்படிதான் . வழக்கமாக கலைத்துறைக்கு வருவோர் வறுமையோடுதான் வருவர் அடுத்த வேளை சாப்பாட்டிற்கு இல்லாத நிலைதான் இருக்கும். ஆனால் இவர் தான் நடித்த முதல்தமிழ் படத்தை( தெலுங்கில் அவர் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தார் ) தானே தயாரிக்கும் அளவு வசதியோடுதான் இருந்தார்.

🦋1988இல் வெளியான கண்சிமிட்டும் நேரம் என்ற கார்த்திக் நடித்த படத்தை தயாரித்து அதில் ஒரு சிறு வேடத்தையும் செய்வதன் மூலம் திரைக்கு வருகிறார்.

🦋அதன் பின்னர் ஒரு ஆறு வருடங்கள் சில பிரபலமான படங்கள் நடித்தபோதும் பல பிரபலமாகாத படங்களிலும் நடித்து கொண்டு இருந்தார்

🦋புலன் விசாரனை, மௌனம் சம்மதம், புரியாதபுதிர், கேப்டன் பிரபாகர் போன்றவை அப்படிப்பட்ட பிரபல படங்கள் .

🦋அதே நேரத்தில் ஜகதலபிரதாபன், புதுபாடகன், மிஸ்டர் காத்திக் சந்தனகாற்று, வேலை கிடைச்சாச்சு, இளவரசன், கேங் லீடர் போன்ற குறைந்த வெளிச்சமே உள்ள படங்களிலும் நடித்தார். மேலும் வில்லன் கதாபாத்திரம்தான்.

🦋இந்நிலையில் 1992இல் வெளிவந்த சூரியன் இவருக்கு மிகச்சிறந்த கவன ஈர்ப்பை கொடுத்தது. கிரைம் படமான அதில் இவர் மிடுக்கான காவல் அதிகாரியாக நடித்திருப்பார்.

🦋திரைக்கதை, ஒளிப்பதிவு என்று எல்லாவற்றிலும் சராசரிக்கு மேல் இருந்ததால் படம் நல்ல வெற்றியை பெற்றது .நாயகனாக அவர் பரிமளித்த முதல் படம் .ஒரளவு முன்னணிக்கு வந்தார். பிறகும் இரண்டு வருடங்களில் நடித்த படங்கள் இன்று பலரின் நினைவில் இருக்காது.

🦋எல்லைச்சாமி, நட்சத்திரநாயகன், சாமுண்டி, வேடன், முன்னறிவிப்பு , பேண்ட் மாஸ்டர் போன்றவை அதுபோன்ற படங்கள்.

🦋இவருக்கு ஆர்.பி சௌத்திரியும் , கே.எஸ் ரவிக்குமாரும் பெரிதும் உதவினார் புரியாத புதிரில் ஏற்பட்ட உறவு பலகாலம் நீடித்தது. அதில் ஒன்றுதான் நாட்டாமை.

🦋கம்பீரமான வேடம். கதையென்னவோ வழக்கமான பஞ்சாயத்து கதைதான் என்றாலும் கூட சொல்லப்பட்ட எளிமையான விதம் எடுபட்டதால் அது இவருக்கு வெகுவாக உதவியது எனலாம்.

🦋இந்த சமயத்தில் ஓரளவு லோ ப்ரோபைல் படங்களை தவிர்த்தார் எனலாம்
ரகசிய போலீஸ், சூரிய வம்சம், ஜானகிராமன், நட்புக்காக போன்ற படங்கள் ஜனரஞ்சகமாகவும் அமைந்தது.
நடிப்பு என்று பார்த்தால் பெரிய சிரமபட்டார் என்று சொல்ல முடியாது ஒரு மிடுக்கான கதாபாத்திரதிற்கு பொருத்தமானவர் என்பதை தவிர அதிக அளவு முயற்சிக்கவில்லை

🦋இருப்பினும் நாட்டாமை , சூரியன் போன்ற படங்கள் திரைக்கதை தெளிவாக அமைந்ததால் பெரியவெற்றியை பெற்றது
தெலுங்கு படங்களிலும் சீரிய இடைவெளியில் நடித்து வந்தார்.

🦋மலையாளத்தில் பழசி ராஜா என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக செய்து இருப்பார்
மாயி ,சமுத்திரம், தென்காசி பட்டினம், அரசு, திவான், ஏய், சமஸ்தானம் போன்ற படங்கள் பலவேறு காரணங்களால் கவன ஈர்ப்பை பெற்ற படங்கள் .

🦋குறிப்பாக மாயி படத்தில் இவரது கதாபாத்திரம் மிகச்சிறப்பானதாக அமைந்தது. தென்காசி பட்டினம் , சமஸ்தானம் போன்ற படங்கள் நட்பையும், சமுத்திரம் சகோதர பாசத்தையும் வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்து ரசிப்பு தன்மையைகூட்டியது .

🦋இரண்டாயிரத்து பத்துக்கு பிறகு வந்த, படங்களில் சென்னையில் ஒருநாள், கோச்சடையான், முனி போன்ற படங்கள் சொல்ல தகுந்தவை

🦋காஞ்சனாவில் இவர் ஒரு மாறுபட்ட கதாபாத்திரமாக திருநங்கையாக நடித்திருப்பார். சிறிது நேரமே வந்து செல்லும் கதாபாத்திரம் ஆனாலும் கூட மனதில் நிற்கும் வண்ணம் அமைத்திருக்கும்

🦋பனிரெண்டு படங்கள் தயாரித்தும், ஒருபடம் இயக்கியும் ( தலைமகன் ) ஒருபடம் கதை எழுதியும்(சண்ட மாருதம்) உள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை உட்பட ஐந்து படங்களில் பாடியுள்ளார்

🦋தற்சமயம் வெளியான போர்த்தொழில், பரம்பொருள் இரண்டிலும் காவல் அதிகாரியாக வந்தாலும் இரண்டிலும் ஒன்றுக்கொன்று மாறுபட்ட கதாபாத்திரமாக வந்து சிறந்த கவனத்தை பெற்றுள்ளார் என்றும் கூறலாம்

🦋வாரிசு படத்தில் விஜயின் தந்தையாக தோன்றினார். பொன்னியின் செல்வன் முதல் மற்றும் இரண்டாம் படங்களில் பெரிய பழவேட்டையார் என்ற முக்கிய கதாபாத்திரம் ஏற்று இருப்பார் தற்போது வரையில் 150 திரைப்படம் நடித்துள்ளார் தற்போது 20 படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்

🦋இவரது மனைவி ராதிகா மகள் வரலட்சுமி ஆகிய இருவரும் பிரபல நடிகைகள்
ராடன் டிவி நிறுவனத்தின் தயாரிப்பான சன் தொலைக்காட்சியின் கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் அப்போது ஏற்பட்ட நட்பினால் ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்

🦋நடிகர் சங்க தலைவராக மூன்றுமுறை செயலாளராக 2 முறை இருந்துள்ளார் இவர் செயலாளராக இருந்த சமயத்தில் நடிகர் சங்க கடனைக்க அன்றைக்கு தலைவராக இருந்த கேப்டன் அவர்களுடன் இணைந்து அடைத்தனர்
நடிகர்களுக்கு நிறைய திட்டங்கள் இவர்கள் பொறுப்பில் இருக்கும் போது செய்தனர் தற்போது பொய் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு நடிகர் சங்கம் இன்று இருக்கும் நிலை அனைவரும் அறிந்ததே

🦋பாராளுமன்றத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும், சட்டமன்றத்திற்கு தென்காசி தொகுதியில் இருந்து ஒரு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார் பின்னர் சமத்துவ மக்கள் கட்சி என்ற கட்சியை நடத்தி வருகிறார் பல்வேறு மக்கள் பிரச்சினைகளை தீர்க்க மிகப்பெரிய போராட்டம் நடத்தியுள்ளார் வெற்றியும் பெற்றுள்ளார் அதிலும் குறிப்பாக

🦋கூடங்குளம் அணுஉலை ஆதரவாக போராடிய ஒரே அரசியல் தலைவர் ஏன் என்றால் அந்த நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூடங்குளம் தேவையில்லை என்று போராடினார் சரத்குமார் அவர்களின் கட்சி மட்டுமே கூடங்குளம் தமிழ்நாட்டுக்கு தேவை மின்சாரம் தேவை என்று போராடியது இன்று வெற்றியும் பெற்றுள்ளது இப்போது தமிழ்நாடு மின்குறைபாடு இல்லாத மாநிலமாக இருப்பதற்கு கூடங்குளம் முக்கிய காரணம்

🦋ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு முதன் முதலில் உண்ணாவிரதம் மிகப்பெரிய அளவில் மதுரையில் நடத்தினார்

🦋அத்தி கடவு அவினாசி திட்டத்திற்காக வாகன பேரணி நடத்தினார்
இப்படி பல மக்கள் பிரச்சினைகளை கையில் எடுத்து போராடியுள்ளார்

🦋தற்போது கூட இன்றைய இளைஞர் சமுதாயம் அழிந்து வருவதற்கு முக்கிய காரணம் மது மற்றும் போதை பொருட்களை தவிர்க்க வலியுறுத்தி போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் போராட்டங்களை பேரணிகளையும் நடத்தி வருகிறார் இதிலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்


🦋இவர் செய்யும் நன்மைகளை எந்த நாளிலும் அதிக அளவில் மக்களிடம் கொண்டு செல்வதில்லை நல்ல தலைவர்கள் உருவாவதற்கு ஊடகம் முக்கிய காரணம் ஆனால் இவர் போன்ற மக்கள் சிந்தனை உள்ள தலைவர்கள் செய்திகளை இந்த ஊடகங்கள் தவறிவிட்டன ஆனாலும் தனது பயணத்தை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்

🦋அரசியலிலும் கலைத்துறை போலவே ஏற்ற இறங்கங்களை சந்தித்துள்ள இவர் இன்னும் சுறு சுறுப்புடன் உள்ளார்
தொடரட்டும் அவரது கலைப்பயணம்
Sarath Kumar

காரைக்குடி கொப்புடைய அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமாக கலந்து கொண்ட பக்தர்கள்போட்டோ உதவி  : HARISH H...
04/09/2023

காரைக்குடி கொப்புடைய அம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமாக கலந்து கொண்ட பக்தர்கள்

போட்டோ உதவி : HARISH HD MEDIA

12/06/2023
பாட்டு இல்ல, பைட் இல்ல.. ஆனாலும் தரமான படம் – போர் தொழில் முழு விமர்சனம் இதோசரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகிய...
09/06/2023

பாட்டு இல்ல, பைட் இல்ல.. ஆனாலும் தரமான படம் – போர் தொழில் முழு விமர்சனம் இதோ

சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள போர் தொழில் திரைப்படம் எப்படி இருக்கு என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் அறிமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ள திரைப்படம் போர் தொழில்.

படத்தின் கதைக்களம் :

திருச்சி புறநகர் பகுதியில் இளம் பெண்கள் தொடர்ந்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் இது குறித்த வழக்கு சிபிசிஐடி போலீஸ் வசம் செல்ல போலீஸ் அதிகாரி சரத்குமார் தலைமையில் இந்த வழக்கு விசாரணைகள் நடைபெறுகிறது.

சரத்குமார் தலைமையிலான டீமில் வந்து சேர்கிறார் கத்துக்குட்டி போலீஸான அசோக் செல்வன். இவர்கள் இருவரும் இணைந்து இந்த குற்றவாளிகளை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? அடுத்து என்ன நடந்தது என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தைப் பற்றிய அலசல் :

படம் ஆரம்பித்த ஐந்து நிமிடத்தில் கதைக்குள் சென்று படம் விறுவிறுப்பாக நகர தொடங்கியது.

அனுபவ அறிவு உள்ள சரத்குமார் படிப்பறிவு உள்ள அசோக் செல்வன் இருவரும் இணைந்து இந்த வழக்கை விசாரிக்கும் விதம் படத்தின் மீதான விறுவிறுப்பை இன்னும் அதிகமாக இருக்கிறது.

முதல் பாதியிலேயே குற்றவாளிகள் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டாலும் இரண்டாம் அதில் எதிர்பார்க்காத ட்விஸ்ட்டுகள் நம்மை சீட்டின் நுனியில் கட்டி போடுகிறது.

பாட்டு, ஃபைட் என எதுவும் இல்லாமல் வெறும் கதை களத்தை மட்டுமே நம்பி அதையும் சிறப்பாக செய்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் ராஜா.

மொத்தத்தில் க்ரைம் த்ரில்லர் பட ரசிகர்களுக்கு போர் தொழில் பக்கா ட்ரீட்டாக இருக்கும்.

02/05/2023

அமைச்சரவையில் இருந்து பி.டி.ஆர். நீக்கமா? முதலமைச்சர் பரபரப்பு வீடியோ #

23/04/2023

சரத் அண்ணன் நல்ல மனிதர் நடிகர் லாரன்ஸ் பெருமிதம்

When Thalapathee 🔥 at Kashmir ❄️
02/04/2023

When Thalapathee 🔥 at Kashmir ❄️

31/03/2023
31/03/2023

🔴 LIVE : தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் - 2023 - 2024 | TN Budget Session - 2023 - 2024

22/03/2023

காரைக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பால்குடத்திருவிழா

22/03/2023

காரைக்குடி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் பால்குடத்திருவிழா

  &   🔥
13/01/2023

& 🔥

வாரிசு திரைப்படத்தில்  #சரத்குமார்   Sarath Kumar
04/01/2023

வாரிசு திரைப்படத்தில் #சரத்குமார்
Sarath Kumar

"மாமனிதர் நேரு" புத்தக வெளியீட்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு
25/12/2022

"மாமனிதர் நேரு" புத்தக வெளியீட்டு விழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

...

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடியில்...
24/12/2022

தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காரைக்குடியில்...

...

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியதுஅவரின் அடிப்படை விலை...
23/12/2022

இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விலைக்கு வாங்கியது
அவரின் அடிப்படை விலை ரூ.2 கோடி

Ben Stokes is sold for a whopping Rs. 16.25 crore to Chennai!

21/12/2022

அரசு பள்ளி மாணவியின் அட்டகாசமான குரலில்....

Charming Malavika Menon 😍💫💙
20/12/2022

Charming Malavika Menon 😍💫💙

1 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காசேதான் கடவுளடா’ பாடல்!
18/12/2022

1 மணி நேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‘காசேதான் கடவுளடா’ பாடல்!

பூரண மதுவிலக்கு அமல் படுத்த கோரி சமக தலைவர் உண்ணாவிரதம்      Sarath Kumar M. K. Stalin
13/12/2022

பூரண மதுவிலக்கு அமல் படுத்த கோரி சமக தலைவர் உண்ணாவிரதம்

Sarath Kumar M. K. Stalin

news r | | | ...

  | நாளை மறுநாள் (டிச.14) அமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்!
12/12/2022

| நாளை மறுநாள் (டிச.14) அமைச்சராக பொறுப்பேற்கிறார் உதயநிதி ஸ்டாலின்!

ஜிகர்தண்டா-2 படத்தின் டீசர் வெளியானது!" Jigarthanda DoubleX "Here's A Kind of... Teaserhttp://youtu.be/0pZ3HBp_C74
11/12/2022

ஜிகர்தண்டா-2 படத்தின் டீசர் வெளியானது!

" Jigarthanda DoubleX "

Here's A Kind of... Teaser

http://youtu.be/0pZ3HBp_C74

Breaking News:காரைக்குடி அருகே சிலிண்டர் தூக்கிசென்றவருக்கு நேர்ந்த கதி!மேற்கூறையிலிருந்து விழுந்த கண்ணாடி வெட்டியதில் ச...
09/12/2022

Breaking News:

காரைக்குடி அருகே சிலிண்டர் தூக்கிசென்றவருக்கு நேர்ந்த கதி!

மேற்கூறையிலிருந்து விழுந்த கண்ணாடி வெட்டியதில் சமையல் எரிவாயு சிலிண்டர்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பர்மா காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் கொண்டு சென்ற பழனி (48) என்பவர் இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம்

இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க சம்பவ

குறித்து காரைக்குடி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,

  | சிவகங்கை  மாவட்டத்தில் நாளை(டிச.09) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை   |   |   |   |
08/12/2022

| சிவகங்கை மாவட்டத்தில் நாளை(டிச.09) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

| | | |

திடீர் உடல்நலக்குறைவு.. நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்
08/12/2022

திடீர் உடல்நலக்குறைவு.. நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார்

NanbanTV  Youtube -ல் தொடர் நேரலைஇன்று மாலை 4.00 மணி முதல்...
06/12/2022

NanbanTV Youtube -ல் தொடர் நேரலை
இன்று மாலை 4.00 மணி முதல்...

26/11/2022

தலைவரைப்பற்றி தப்ப பேசினால் கொண்டேபுடுவேன் சரத்குமார்

25/11/2022

காரைக்குடி பெண்ணுக்கு நேர்ந்த அவலம்

புன்னகை அரசி  😍😍❤....
19/11/2022

புன்னகை அரசி
😍😍❤....

18/11/2022


தேர்வு குழுவில் அனைவரும் நீக்கம்: பிசிசிஐ அதிரடி

https://youtu.be/bgnF8T5R_0w

16/11/2022

மீண்டும் வருகிறது "மருதநாயகம்"... கமல் இல்லை... ஹீரோ யார் தெரியுமா?

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when NanbanTv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share