11/03/2024
மகளீர் தினம் சிறப்பு கவிதை
அடிவயிற்றில் வலி சுமந்து
அவமான சின்னங்களை
சிப்பியாக்கி
அவதூறுகளை
சகிதுதுக்கொண்டு
அடி எடுத்துவரும்
சாதனை வேர்கள்-நீங்கள்
தெய்வங்கள்
உயிருக்கு உயிர் கொடுத்து-எம்மை
உலகம் பார்க்க வைத்த தவப்புதல்விகள்
அந்த மென்மை உள்ளங்கள் இன்று
வீர வேங்கைகளாக சாதனை
புயலாக உலக அரங்கில்
வெற்றி நடை போடுகின்ற
உங்களை நான் வாழ்த்த வரவில்லை
தெய்வங்களாக போற்ற வந்துள்ளேன்
ஒருசில விலை மாது கலால்
உங்கள் பெயருக்கு கலங்கம்
உணர்வுகள் உணர்ச்சிகள் என்று
பாலியல் அடிமைகளாக வாழ வழி இன்றி
வறுமையின் கோபத்தால்
கற்ப்பை விற்றாவது தன்னை அழித்து
கரை சேர்த்து நீங்கள் எமக்காய்
கரைந்து போகும் கண்ணீர் கதைகள் பல
இங்கு யாருக்கும் தெரியாது
ஓடும் இரத்தத்தில்
வடிந்ததோடும் கண்ணீரில்
உங்கள் முகம் தான் தெரிகிறது
காரணம் இரத்தத்தை பாலாக்கி
உணவு அளித்த்த மேதை உள்ளங்கள் -உங்கள்
தியாகங்கள் மகத்தான வரலாறு
ஒவ்வொரு ஆண்களுக்கும்
உங்கள் அன்பு இன்றி அனுகூட
அசையாத மந்திர வித்தையை
தொடை நடுவில் கட்டிப்போட்ட
வரலாற்று அம்சங்கள் மறைபொருள்
படைப்பில் அதிசய பிறவிகள்
வீரனும் வீழ்ந்து கிடப்பான்
அந்த அவையின் அடக்கத்தில்
சொர்கம் அதுவென்று
பணத்திற்காக படுக்கை விரிக்கும்
ஒருசில விலை மாதர்களால்
உங்கள் நற்பெயருக்கு கலங்கம்
காதல் என்கிற போர்வையில்
வசப்பட்டு கருவை இரைந்து
மாதங்கள் சுமந்து
தகப்பன் பெயர் தெரியாதா
பல குழந்தைகளின்
காவல் தெய்வங்கள் உங்களை
தூற்றுவார் தூற்றட்டும்
போற்றுவார் போற்றட்டும்
தொடர்க உங்கள் பயணம்
இரணியன்