19/03/2022
TNTJ நிர்வாகிகள் கைது பாரபட்சமான நடவடிக்கை, கண்டனத்துக்குரிய நடவடிக்கை.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் பொதுச்செயலாளர் முஹம்மது சித்திக் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்.
19.03.2022 சனிக்கிழமை.
தமிழகத்தில் ஹிஜாப் விசயத்தில் கர்நாடகா உயர்நீதிமன்ற அநீதி தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் போராட்டம் நடைபெற்று வருகிறது இறை கட்டளை விசயத்தில் கை வைத்த நீதிமன்றம் தீர்ப்பை குறித்து பேசும் பேச்சாளர்கள் உணர்ச்சி வச பட்டு வார்த்தைகளை மேடையில் பேசி விடுகிறார்கள்.
அந்த அடிப்படையில் பேசிய தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் தணிக்கை குழு உறுப்பினர் கோவை ரகமத்துல்லாஹ் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு, கைது செய்ய தனிபடை அமைப்பு,மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி மற்றும் நிர்வாகிகளை காவல்துறை கைது செய்து இருப்பது ஏற்று கொள்ள முடியாதது.
அவர்கள் பேசிய வார்த்தைகள் என்பதில் உடன் பாடு இல்லை அதற்கான கைது என்பது பாரபட்சமானது.
இதை விட இந்த நாட்டின் சட்டத்தை, முதல்வர்களை, நீதிபதிகளை, நீதிமன்றங்களை, மிக கேவலமாக பேசிய பாசிசவாதிகள் மீது இந்த கைது நடவடிக்கைகள் பாயுவது இல்லை.
முஸ்லிம்களை கறுவறுக்க வேண்டும் என்கிறார்கள், முஸ்லிம்கள் பெண்களை கற்பழிக்க வேண்டும் என்கிறார்கள், 80% பெரும்பான்மைக்கும் 20% சிறுபான்மைக்கும் நடக்கும் போர் என கூறுகிறார்கள் அவர்கள் எல்லாம் சுதந்திரமாக நாட்டில் சுற்றி திறிந்து கொண்டு உள்ளனர்.
இதே நீதிமன்றம் குறித்து மிக கேவலமாக பேசிய எச் ராஜாவை கைது செய்யவில்லை, மைக்கல் பட்டி மாணவி லாவண்யா விசயத்தில் மத கலவரங்களை தூண்ட நினைத்த பாஜக நிர்வாகிகள் மீது கைது நடவடிக்கைகள் இல்லை ஆனால் முஸ்லிம்கள் கைது நடவடிக்கைகள் என்பது பாரபட்சமான நடவடிக்கை ஆகும்.
ஹிஜாப் விசயத்தில் முஸ்லிம்கள் மிக கொந்தளிப்பான நிலையில் இருக்கும் போது ஜனநாயக போராட்டங்களுக்கு காவல்துறை நெருக்கடியை கொடுப்பதும் உடனடியாக இஸ்லாமிய அமைப்புகள் நிர்வாகிகள் கைது என்பதும் நிலைமையை மேலும் சிக்கல் ஆக்கும் என்பதை காவல்துறை புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழக அரசின் நடவடிக்கைகள் தொடர்ந்து பாரபட்சமானதாக அமைந்து வருகிறது இந்த விசயத்தில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
TNTJ நிர்வாகிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு
A.முஹம்மது சித்திக்
பொதுச் செயலாளர்
இந்திய தவ்ஹீத் ஜமாஅத்.